Archive for the ‘மாலிக்காஃபூர்’ Category

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 109-ம் ஆண்டு ஆராதனை விழா நெரூரில் நடந்தது!

மே 2, 2023

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 109ம் ஆண்டு ஆராதனை விழா நெரூரில் நடந்தது!

109-ம் ஆண்டு ஆராதனை விழா நெரூரில் நடந்தது: நெரூர் சதாசிவ பிரமேந்திராள் 109-ம் ஆண்டு ஆராதனை விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 30-04-2023 தசமி அன்று ஆராதனை முடிவு பெற்றது. கொரோனா காலத்திற்குப் பிறகு கூட்டம் குறைந்து விட்டது. 30-ந் தேதி ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, விருத்தி, குரு உஞ்சவ் விருத்தி, அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேசுவர பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர். 109-ம் ஆண்டு ஆராதனை விழா – இதனையொட்டி தினமும் உஞ்ச விருத்தி, கிராம பிரதட்சினம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன[1]. இதனைத்தொடர்ந்து நேற்று ஆராதனை விழாவையொட்டி சதாசிவ பிரமேந்திரநாள் சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவமும், லட்சார்ச்சனை, தெய்வீக பேரூரைகள், திவ்யநாம சங்கீர்த்தனை, பஜனை ஆகியவைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்[2].

கூட்டம் குறைந்து வருவது வருத்தமாக இருக்கிறது: கொரோனா காரணங்களால் 2020-2023 ஆண்டுகளில் கூட்டம் குறைவானது. முன்னர், “உருளல்” இல்லை என்ற போதே ஆயிரக்கணக்கான கூட்டம், நூற்றளவில் குறைந்து விட்டது. இப்பொழுது, தவறாமல் வரவேண்டும் என்ற வேண்டுதல், உறுதி இருப்பவர்கள், வருகிறவர்கள் மட்டும் விடாமல் வந்து செல்கின்றனர். கரூர் ராமகிருஷ்ணன் 03.02.2022 அன்று காலமானப் பிறகு, அவரது நண்பர்கள் வருவதும் குறைந்து விட்டது. நண்பர்களிடையே ஏதோ ஒன்று போய் விட்டது அல்லது குறைந்து விட்டது போன்ற உணர்ச்சி / எண்ணமும் தோன்றுகிறது. குறிப்பிட்ட நண்பர்கள் வருவர், இரவு முழுவதும் தத்துவம், ஆன்மீகம் போன்ற விசயங்கள் பேசிக் கொண்டிருப்பர். மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் இருக்கும் பொழுது, அவரவர் அனுபவங்கள் பரிமாறிக் கொள்ளப் படும். முன்பெல்லாம், 100-200 பேர் அவரது வள்ளலார் சபையில் வந்து தங்குவர். கூட்டம் அந்த அளவுக்கு இருக்கும். அதாவது, மற்ற இடங்களில் தங்க இடமில்லை என்ற நிலையில், இங்கு வந்து தங்குவர்.

விருப்பங்கள் தேவைகள் மாறுகின்றன: இப்பொழுது அந்த கூட்டத்தைக் காணமுடியவில்லை. எல்லா நாளிதழ்களும் சிறப்பு பிரதியைக் கொண்டு வரும். அதற்கு கரூர் சுற்றியுள்ள வியாபாரிகள் விளம்பரம் கொடுப்பர். கரூர்-நெரூர் பேரூந்துகள் சென்று கொண்டே இருக்கும். இப்பொழுது, எல்லாமே குறைந்து விட்டது. ஆனால், அரைத்த மாவை அரைத்து, எல்லாம் தெரிந்தது போல, யூ-டியூப்புகள் மட்டும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இப்பொழுதெல்லாம் இணைதளத் திருட்டு சர்வசகஜமாகி விட்டது. ஒருவர் கஷ்டப் பட்டு, எல்லா விவரங்களையும் சேகரித்து, இணைதளத்தில் பதிவு செய்தால், சில நிமிடங்களில் அதை “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து தமது போல போட்டுக் கொள்வர். பணம், வசதி, முதலியவை உள்ளவர்கள், எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாகவும் போட்டு விடுவர். ஆனால், பக்தியுடன் அங்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வருடம் 2023ல் அக்ராஹார கால்வாயில் காவிரி நீர் ஓடிக் கொண்டிருந்தது. வழக்கமான நிகழ்ச்சிகளுடம் நடந்து கொண்டிருந்தன.

அக்ரஹார மடத்தின் வாசல்

கோலங்களுடன் தயாராகும் ஆராதனை விழா…

வழக்கம் போல திருவுருவப் படம் எடுத்துச் செல்லப் படுகிறது…..

ஆராதனை – இசை மூலம் சமர்ப்பணம்……

இம்முறை ஒரு பெண்மணி தவில் வாசித்தார்…

மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா தொடங்கியது. ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர். மானாமதுரை சிவகங்கை மாவட்டம் மானசசஞ்சரே எனபாடி இறைவன் அம்பிகையை எந்த நேரமும் வழிபாடு செய்து ஆண்-பெண் தோற்றத்துடன் கூடிய மகான் சதசிவ பிரம்மேந்திராள். இவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரிலும், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் உள்ளது. இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திராள் இசைஆராதனை விழா மானாமதுரையில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது[3]. இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தனர்[4]. கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் நினைவை போற்றும் வகையில் இந்த விழா நடைபெற்றது. முதல் நாள் விழா மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மகாலில் காலை முதல் வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, பூஜைகள், புல்லாங்குழல், பாட்டு நடந்தது. வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். மாலையில் இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

© வேதபிரகாஷ்

01-05-2023


[1] தினத்தந்தி, நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை, தினத்தந்தி மே 1, 1:14 am

[2] https://www.dailythanthi.com/News/State/nerur-sadasiva-pramendra-aradhana-954600

[3] மாலை மலர், சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா , By மாலை மலர், 29 ஏப்ரல் 2023 1:19 PM.

[4]  https://www.maalaimalar.com/news/district/sivagangai-news-satasiva-brahmendra-aradhana-started-602777?infinitescroll=1

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்-ராகவேந்திரர் போன்றோர் சைவ-வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [2]

ஜூலை 5, 2020

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்ராகவேந்திரர் போன்றோர் சைவவைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [2]

Sri Vijayendra Brindavan, Kumbokonam-closer view

விஜியேந்திர தீர்த்தர் காலம்: விட்டலாச்சாரியார் என்ற பெயர் இருந்து, விஷ்ணு தீர்த்தர் என்று மாறி, விஜயீந்திரர் என்றாகியது. இள வயதிலேயே கற்க வேண்டிய நூல்களை எல்லாம் சிறப்பாக கற்றுணர்ந்தார். அத்திறமையினால் 64-கலைகளையும் கற்று சிறந்து விளங்கினார் என்று விவரிக்கப் படுகிறது[1]. 1530-ஆம் ஆண்டு வாக்கில் விஷ்ணு தீர்த்தருக்கு ‘ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர்’ என்கிற தீட்சா நாமம் வழங்கி, தான் அமர்ந்த பீடத்தில் கோலாகலமாக அமர்த்தினார் சுரேந்திரர். கும்பகோணத்தில் இருந்த இவரை, தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன் (1532-1560) ஆதரித்தான். அப்பைய்ய தீக்ஷதரின் (1520-1593) நெருங்கிய நண்பர். வியாசராய மடத்துடன் தொடர்புடைய விபூதேந்திர மடத்தலைவராகவும் இருந்தார்[2]. ‘ஸ்ரீராகவேந்திர மடம்’ என்று தற்போது அறியபடும் இந்த மத்வ மடத்தின் / மத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை இருந்தவர் ஸ்ரீவிஜயீந்திரர்.  1614-ல் உயிர் நீத்த போது, காவிரிக் கரை ஓரம் பிருந்தாவனத்தில் உறங்கினார். ஸ்ரீராகவேந்திரர் தனது காலத்தில் இங்கு அமர்ந்துதான் கல்வி கற்றார். துவைதத்தின் முக்கியத்துவம் மேலே எடுத்துக் காட்டப் பட்டது.

Sri Vijayendra Brindsvan, Kumbokonam

கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் மடம்: கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் ஜூலை 7ம் தேதி 2010 அன்று  தொடங்குகியது[3]. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகளின் மடம் படித்துறைச் சந்திற்கு அடுத்தபடியாகஅமைந்துள்ளது[4]. மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட வேதாந்த மதமான த்வைத மத குருமார்களில் ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுணர்ந்தவருமான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள் (c.1514-1595), கோவில் நகரம் பாஸ்கர சேத்திரம் எனப்படும் காவேரி நதிக்கரை ஓரத்தில் பிருந்தாவனம் கொண்டுள்ளார்[5]. மடத்தின் நடுவில் விஜேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. மந்த்ராலயம் என்னுமிடத்தில் ராகவேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் காணப்படுகிறது போலவே, இங்கும் இதே வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மடத்தில் மத்வாச்சாரியார், லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு வரிசையாக தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. மிருத்திகா பிருந்தாவன மடம் என்று சொல்லப்படுகின்ற இந்த மடத்தில் ராகவேந்திர சுவாமிகள் தங்கி, குருவிடம் வேதாப்யாசம் பெற்ற இடமாகும். அவர் அருள்பாலித்துவரும் ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா (புண்ணிய மண்) பிருந்தாவனத்தின் கும்பாபிஷேம் சூன் 12, 2015 அன்று நடைபெற்றது.

Sri Vijayendra Brindavan, Kumbokonam-entrance

விஜயீந்திர தீர்த்தர் அத்வைதத்தை நிலநிறுத்தியது: விஜயீந்திர தீர்த்தர் அப்பைய்ய தீக்ஷதர்[6] (1520–1593), எம்மெ / பெம்மான் பசவ[7], லிங்க ராஜேந்திரர் போன்றோரிடம், இறையியல்-தத்துவ தர்க்க-வாதங்களில் வென்றதால் புகழ் பெற்றார். இவையெல்லாம் “சித்தாந்த கண்டனம்,” போன்ற வகையில் சர்ச்சைகளுடன் இருந்ததால், பல நூல்கள் அழிக்கப் பட்டன இல்லை ஐரோப்பியர் எடுத்துச் சென்று ஆராய்ச்சி என்று “சைவ-வைணவ” பிரிப்பிற்கு உபயோகப் படுத்துவர். விஜயீந்திர தீர்த்தரின் 104 நூல்களில் 60 தான் இப்பொழுது உள்ளன. அதாவது 40ற்கும் மேற்பட்ட நூல்கள் காணவில்லை என்படுவது அதுதான் காரணம்[8]. அந்த ஓலைச்சுவடிகள் நஞ்சன்கூடு, மந்திராலயம் மற்றும் கும்பகோண மடங்களில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. மந்திராலயம் ராகவேந்திர சுவாமிகளின் (c.1595-1671) குருவாக திகழ்கிறார். வியாழன் தோறும் ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயத்தில் இருந்து இங்கு வந்து தனது பரமகுருவான விஜயீந்திர சுவாமிகளிடம் ஆசி வாங்கிச் செல்வதாக ஐதீகம்[9]. அதனால், வியாழன்று இங்கு பக்தர்கள் இரண்டு சுவாமிகளையும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதால் அதிகமாக வந்து செல்கின்றனர். இவ்வாறு சிறப்புகள் பெற்ற விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகளின் ஆராதன மகோத்சவ விழா பூர்வாராதனையுடன் தொடங்குகியது. நாளை 8ம் தேதி ஏகாதசியும், மிக முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் தேதி மத்ய ஆராதன வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

Sri Vijayendra Brindavan, Kumbokonam-Pada
400 ஆண்டுகள் கடந்ததால் ஆராதனைகள் விஷேசமாக நடப்பது (2010): ஜூலை பத்தாம் தேதி உத்தர ஆராதனை நடந்தது. இதை முன்னிட்டு பத்தாம் தேதி காலை ஏழு மணியளவில் விஜயீந்திர சுவாமிகளின் திருவுருவ சிலை பட்டணபிரவேசமாக வீதியுலா நடந்தது. அன்று மாலை ஆறு மணிக்கு மடத்தில் உள்ள கஷ்யப்பத் தீர்த்தகுளத்தில் தெப்ப உற்சவமும் நடந்தது. ஆராதனை விழாவில் பங்கேற்பதற்காக மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பீடாதிபதி ஆயிரத்து எட்டு சுயதீந்திர தீர்த்தசுவாமிகள் கும்பகோணத்துக்கு வருகை தந்து தினமும் காலை லஷ்மிநாராயணர், விஜயீந்திரர் மூலபிருந்தாவனம், ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம், மூலராமர்பூஜை ஆகியவைகளை சுவாமிகள் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகினார். ஆராதனை விழாவை முன்னிட்டு தினமும் அதிகாலை விசுவரூப தரிசனம், நிர்மால்ய தரிசனம், காலை அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள், வேதகோஷங்கள் முழுங்க தாஸரூப் பக்திப்பாடல்கள் பாடப்பெற்று அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

Vijiyendra thirth with Nayaka and Saivas

ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது (2010): தினமும் காலை, இரவு பிரபல வித்வான்களின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், புரந்தரதாசர் கீர்த்தனைகளை விஜயீந்திர பஜனை மண்டலியினர் பாடினர். மேலும், வேத வல்லுனர்களின் உபன்யாசங்களும் நடந்தன. தமிழகம், டில்லி, மும்பை, கர்நாடகா, ஆந்திரா உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர். ஆண்டுதோறும் ஆராதனை விழாவின்போது கும்பகோணம் பகுதியில் உள்ள வேத வல்லுனர்கள், மகாவித்வான்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்களுக்கும், சாதனையாளர்கள் ஆகியோர்களை கவுரவித்து சன்மானம் வழங்குவதுபோல் இவ்வாண்டும் அதேபோல் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் பாஸ்கர், செயலாளர் ராஜா. ராஜகோபாலச்சார், கூடுதல் செயலாளர் சுயமேந்திராச்சார் மற்றும் ஆனந்தராவ், உமர்ஜி.மாதவன், ரவி, ரமணி, குரு, குருபிரசாத் ஆச்சார், பத்மநாப ஆச்சார், விஜயேந்திரன், விஷ்ணுபாலாஜி மற்றும் மடத்து நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்தனர்.

© வேதபிரகாஷ்

04-07-2020

Sri Vijayendra Brindavan, Kumbokonam-arch

[1]  இதெல்லாம் ஜைன-பௌத்தர்களின் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அதற்கேற்றப் போலவே, அவரது, “அதிசயங்கள்” நிகழ்ச்சிகளும் உள்ளன.

[2]  நஜன், த்வைத ஆசார்யர்கள் வைபவம், பிரதிபா பிரசுரம், சென்னை, 1982, பக்கம் 35

[3] தினமணி, மிருத்திகா பிருந்தாவனத்துக்கு மகா கும்பாபிஷேகம், By கும்பகோணம், | Published on : 13th June 2015 03:39 AM.

[4]  https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2015/jun/13/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-1130703.html

[5] தினமலர், விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் ஆராதனை மகோத்சவம் கும்பகோணத்தில் கோலாகல துவக்கம், Added : ஜூலை 07, 2010 03:02.

[6] அப்பைய தீட்சிதர் வடஆர்க்காட்டிலே வேலூருக்கு அப்பால் திரிவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520இல் பிறந்தவர்.

[7]  வேலா. ராஜமாணிக்கம், பெம்மான் பசவர் (வரலாறும் நடைமுறைகளும்), சிவலிங்க நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1979.

பெம்மான் பசவர் என்று வேலா. ராஜமாணிக்கம் போன்றோர் குறிப்பிடுகின்றனர். உண்மையில் பெம்மான் என்றால், சிவனைக் குறிக்கும் சொல், ஞானசம்பந்தர் போன்றோர் தேவாரத்தில் உபயோகப் படுத்தியுள்ளனர். ஆனால், இக்கால திரிபு எழுத்தாளர்கள் அவ்வார்த்தையை பெருமான், கடவுள், பெரியோன், உயர்ந்தவன் என்று நீர்த்து இவ்வாறு உபயோகப் படுத்துகின்றனர். எப்படி “கர்த்தர்” (சிவபெருமான்) சொல்லை கிருத்துவர்கள் உபயோகப் படுத்துகிறார்களோ, அவ்வாறு உபயோகப் படுத்தப் படுகிறது.

[8] இதையெல்லாம் மறந்து, மறைத்து, ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் விட்டார்கள் என்றெல்லாம் கதைக் கட்டி, இன்றும் தமிழகத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி அயல்நாடுகளில் இன்றும் லட்சக் கணக்கான ஓலைச் சுவடிகள் உள்ளன என்பது நோக்கத் தக்கது. சமீபத்தில் கூட, வெளிநாட்டு இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள், ஓலைச்சுவடிகளை எடுத்துச் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப் பட்டதை கவனிக்கலாம்.

[9]  https://www.dinamalar.com/news_detail.asp?id=34233&Print=1

ஶ்ரீ அன்னமாச்சாரியாரின் 515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது!

ஏப்ரல் 29, 2018

ஶ்ரீ அன்னமாச்சாரியாரின் 515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது!

Annamacharya, stamp

அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் இன்றும்பாமர பாடல்களாகபட்டிதொட்டிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன: “அன்னமாச்சாரியா கீர்த்தனைகள்” எனப்படும் பக்தி பாடல்களை திருமலை-திருப்பதிக்களுக்குச் சென்றவர்கள் கேட்காமல் இருக்க முடியாது. கீழ் திருப்பதி முதல், மேல் திருமலை வரை எல்லா இடங்களிலும் [டீகடைகள், வீடுகள், கோவில்கள்] ஒலித்துக் கொண்டிருக்கும். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் அவை பாடப்பட்டுள்ளன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அவற்றை முன்னர் கேசட், இப்பொழுது சிடிக்களாக வெளியிட்டுள்ளனர். அன்னமாச்சாரி அவர் காலத்தில் பட்டி-தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றதால், அவை மிகவும் பிரபலமாக, பொது மக்களிடம் “பாமர பாடல்களாக” இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

The House where Talapakkam Annamacharya lived

இடைக்காலத்தில் பிறந்து, பாடல்கள் மூலம் ஒற்றுனையை வளர்த்த அன்னமாச்சாரியா: அன்னமாச்சாரியா [తాళ్ళపాక అన్నమాచార్య; , 1408-1503] தாள்ளப்பாக்கம் என்ற கிராமத்தில் [ராஜம்பேட்டை] கடப்பா மாவட்டம், ஆந்திர மாநிலம் 22 May 1408 அன்று சூரி – அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். “சுபத்ரா கல்யாணம்” இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான ‘’திம்மக்கா” என்பவர் அன்னமாச்சாரியாரின் மனைவியாவார். இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரி, பேரன் சின்னையன் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். ஏப்ரல் 4, 1503 அன்று 94 வயதில் திருமலையில் காலமானார். இன்றும் புகைப்படத்தில் அவரது வீட்டைப் பார்க்கும் போது, இடைக்காலத்தைய வாழ்க்கைமுறையினை எடுத்துக் காட்டுகிறது. அக்காலத்தில், முகமதியர்களின் தாக்குதல்களால், கிராமப் பகுதிகள் தாம் அதிகம் பாதிக்கப் பட்டன. அதனால் தான், இவரைப் போன்றவர், பற்பல இடங்களுக்கு நடந்தே சென்று, பக்தி உருவில், தேசப் பற்றை வளர்த்தனர். சொல்ல வந்த கருத்துகளை கடவுளை வாழ்த்தும், போற்றும் மற்றும் துதிக்கும் பாடல்களில் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் படி பாடினர்.

Annamacharya depicted as sculpture-door way either side

அன்னமாச்சாரியா பாதைஅன்னமய மார்க்கம்: தாள்ளப்பாக்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப் படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை / அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இந்தப்பாதையில் மாமண்டூரில் இருந்து திருமலைக்கு வரக்கூடிய வனப்பகுதியில் பாறைகள் இல்லாத சமமான மலைப்பகுதியாக 16 கிலோ மீட்டர் உள்ளது.  அதை நினைவு படுத்தும் வகையில், ஆயிரக் கணக்கான மக்கள் விரதம் மேற்கொண்டு, நடந்தே திருமலைக்கு வந்து செல்கின்றனர்.

Annamacharya kirtan on copper plates

சமத்துவத்திற்காக உழைத்த அன்னமாச்சாரியா: அன்னமாச்சாரியாருக்கு வேறு வேலை இல்லையா, இப்படி, தினம்-தினம் பாடிக் கொண்டே செல்ல வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். அக்காலத்தில் முகமதியர் விஜயநகர பேரரசைத் தாக்கி வந்ததால், மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரிசா முதல் தமிழகம் வரை பல இடங்களுக்கு சென்றுள்ளார். அவரது பாடல்களில் அது வெளிப்படுகிறது. அன்னமாச்சாரியா ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் கொண்டு 32,000 கீர்த்தனைகள் / பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இப்பொழுது சுமார் 12,000 கிடைத்துள்ளன. அவை ஆன்மீகம் மற்றும் சிருங்காரம் என்று இருவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. தீண்டாமையை எதிர்த்து பாடியுள்ளார்.  அன்னமாச்சாரி 32,000 முதல் 36,000 பாடல்கள் பாடியிருக்கிறார் என்றால், தினமும் 5 முதல் 10 கீர்த்தனைகள் பாடியிருக்க வேண்டும்! உண்மையில் தினமும் ஒரு பாடல் பாடுவேன் என்று அவர் உறுதி பூண்டிருந்தார்[1]. உயரமாக இருக்கும் பிராமணனின் இடமும், கீழே உள்ள சண்டாளனின் பாதமும் ஒன்றே.

Annamacharya on caste, untiuchability etc

அதாவது அந்த பிராமணனின் இடம் சண்டாளனின் பாதத்திற்கும் கீழானது! [మెండైన బ్రాహ్మణుడు మెట్టుభూమి యొకటె చండాలు డుండేటి సరిభూమి యొకటే = the high level land of the Brahmin and the low flat level of the Chandala are the same, there is no high and low, Srihari is the soul of all[2]]. அன்னமாச்சாரி பட்டி-தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர்-சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார்! அதாவது, உணவில், நீரில் எதுவும் ஒட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் அங்குதான் சுத்தமானவை கிடைக்கும். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தென்னகத்தே பல்லாயிர கொவில்களுக்கு, அதாவது கிராமங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான்! அன்னமாச்சாரியாரின் பாடல்கள் ஆழ்வார்கள் பாடல்களை அறிந்திருந்தார் என்று எடுத்துக் காட்டுகிறது.

Annamacharya and Thyagayya

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து மறக்கப் பட்டு, 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள்: ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. சுமார் 150 பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 1950ல், பாலமுரளி கிருஷ்ணாவின் தலைமையில், 800 பாடல்கள் பாடப்பட்டு, மக்களிடையே மறுபடியும் பரவச் செய்தது. ஷொபா ராஜு என்பவர் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகளை படித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 1976ல் டிடிடி இவருக்கு ஊக்கத்தொகைக் கொடுத்து கௌரவித்தது. 1978ல் “வெங்கடேஸ்வர கீத் மாலிகா” என்ற ஒலிநாடாவை வெளியிட்டார். பார்வதி ரவி கண்டசாலா 1994ல் கீர்த்தனைகளை பரத நாட்டியம் உருவில் அர்ப்பணித்து, புகழடையச் செய்தார். 1997ல் “அன்னமய்யா” என்ற தெலுங்கு திரைப்படமும் தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டது. கடையநல்லூர் வெங்கட்ராமன் இசையில், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாட, கீர்த்தனைகளும் வெளியிடப் பட்டன.

Annamacharya sankeertanalu

அன்னமாச்சாரியாரின் சுப்ரபாதமும் (தெலுங்கில்), அன்னங்காச்சாரியாரின் சுப்ரபாதமும் (சமஸ்கிருதத்தில்): இவர் பாடல்களில் புகழ் பெற்றது வேங்கடேச சுப்ரபாதம் அதாவது பங்காரு வாகிலி என்பது ஸ்தாபன மண்டபத்தின் அழகிய தங்கக் கதவுகள் கொண்ட வாயில். இங்குதான் தினமும் அதிகாலையில் அன்னங்காச்சாரியாரின் சுப்ரபாதம் ஒலிக்கப்படும் போது, அன்னமாச்சாரியாரின் வழிவந்தவர்களால் “வேங்கடேச சுப்ரபாதம்”, தெலுங்கு திருப்பள்ளி எழுச்சி – அவரது பாடல்கள் இசைக்கப்படுகிறது.  சமஸ்கிருத சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கர அனந்தாச்சாரியாரால் 1430 CEல் இயற்றப்பட்டது.

कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।

उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥

“ O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the divine daily rituals have to be performed[3].

மார்கழி மாதம் முழுதும் ஆண்டாளின் திருப்பாவை ஒலிபரப்பப் படுகிறது[4].

Annamacharya Jayanti greetings

515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது: இவர் திருமலை ஶ்ரீ வெங்கடசலபதியின் மீது ஆயிரக் கணக்கான பாடல்களை இயற்றியவர்.  தென்னிந்திய இசையில் குறிப்பிட்ட மரபைத் தோற்றுவித்து, பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் கொடுத்து, பஜனை மரபைத் தொகுத்து வழங்கினார். இவரது பல கீர்த்தனைகளில், நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகள் பிரதிபலிக்கின்றன. திருமலை கோயிலில் கர்னாடக இசையின் தந்தை என போற்றப்படும் புரந்தரதாஸரை சந்தித்துள்ளார். சமஸ்கிருதத்தில் ‘சங்கீர்த்த லட்சணம்’, ‘வெங்கடாசலபதி மஹிமா’, ‘த்விபர்த ராமாயணா’, ‘ஸ்ருங்கார மஞ்சரி’ தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்கள் கொண்டது) ஆகிய நூல்களை படைத்துள்ளார். 8 அடி உயரத்தில் இவவரது முழு உருவ சிலை தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் நிறுவப்பட்டது.  1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ‘அன்னமாச்சாரியா‘ திரைப்படத்திற்காக கிடைத்தது.  1997-ல் வெளியிடப்பட்ட அப்படம்பெரும் வெற்றி பெற்றது.

© வேதபிரகாஷ்

29-04-2018

Annamacharya, MS-CD, Cinema

[1] அடப ராமகிருஷ்ண ராவ், அன்னமாச்சார்ய, சாகித்திய அகடமி, 1996, ப.45.

[2]

తందనాన అహి – తందనాన పురె
తందనాన భళా – తందనాన
బ్రహ్మమొక్కటె పర – బ్రహ్మమొక్కటె
పరబ్రహ్మమొక్కటె పర బ్రహ్మమొక్కటె
కందువగు హీనాధికములిందు లేవు
అందరికి శ్రీహరే అంతరాత్మ
ఇందులో జంతుకుల మంతానొక్కటె
అందరికి శ్రీహరే అంతరాత్మ
నిండార రాజు నిద్రించు నిద్రయు నొకటె
అంటనే బంటునిద్ర అదియు నొకటె
మెండైన బ్రాహ్మణుడు మెట్టుభూమి యొకటె
చండాలు డుండేటి సరిభూమి యొకటే
కడగి యేనుగు మీద కాయు యెండొకటే
పుడమి శునకము మీద బొలయు యెండొకటే
కడుపుణ్యులను పాపకర్ములను సరిగావ
జడియు శ్రీ వేంకటేశ్వరుని నామమొకటె

[3] Valmiki Ramayanam॥ 1.23.2 ॥

[4]  ‘Suprabhatam’ is the first and foremost pre-dawn seva performed in the temple of Lord Venkateswara.  This ritual is performed at Sayana Mandapam inside sanctum sanctorum to wake up the Lord from His celestial sleep, amidst the rhythmic chanting of vedic hymns. Every day in the early hours acharyapurushas recite the hymns beginning with ‘Kausalya Supraja Rama Purva Sandhya Pravarthathe’ in front of the main deity at Bangaru Vakili, while on the other hand, a descendant of Tallapaka Annamacharya sings some songs penned by the great saint poet in praise of Lord Venakteswara at the first corridor of the sanctum sanctum at the same time. http://www.tirumala.org/Suprabhatam.aspx

மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

மே 19, 2012

மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

சமீபத்தில், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.

ஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

முஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.

முஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.

இஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது?

விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://tamilheritage.wordpress.com/2010/01/02/madurai-pontiff-confronting-with-christians-muslims/

உலகமெலாம் பரவியிருந்த லிங்க வழிபாடு.

மே 11, 2010

உலகமெலாம் பரவியிருந்த லிங்க வழிபாடு

கோ. வே. ராமகிருஷ்ண ராவ்

சிவலிங்க வழிபாட்டைப் பற்றி தவறான கருத்துகள் சைனர்கள், பௌத்தர்கள் காலம் தொடங்கி, முகாலயர் காலத்தில் அவதூறாக்கி, ஆங்கிலேயர் காலத்தில் ஆபாசமாக்கி, பிறகு வந்த இந்து-விரோத சித்தாந்திகள் அசிங்கமாக்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அதனால்தான் பாஷாண்டிகள், கபோதிகள், துணங்கர், துலுக்கர், ………………..என்றெல்லாம் இந்திய மக்களால் இன்றளவும் சொற்பிரயோகத்தில்ல் பல வார்த்தைகள் இருந்து வருகின்றன.

ஆனால், உண்மை அறியாமல் அல்லது மறைத்து இன்றும் அத்தகைய துன்மார்க்க முறையில் எழுதி வருகின்றனர்.

ஆனால் பாவம், இன்றும் உள்ள அத்தாட்சிகள் அவர்களுடைய கொடிய மனங்களை, குரூரச் சிந்தனைகளை, ஆபாச போக்கை……………….வெளிக்காட்டுகின்றன.

இதோ, சமீபத்தில் சிதம்பரத்தில் பிப்ரவரி 5 முதல் 7 வரை 2010ல் நடந்த பன்னிரண்டாவது உலக சைவ மாநாட்டில் ஆய்வாளர் – கோ. வே. ராமகிருஷ்ண ராவ், சென்னை அவர்களால் வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை – “ஆய்வுக்கோவை-தொகுதி-2, பக்கங்கள்.375-386ல் காணலாம்.

வசதிக்காக, இங்கே பதிவிடப்படுறது.

முன்னுரை (அணுகு முறை): மேனாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் முதலியோர் பிறகு சரித்திர ஆசிரியர்களாக மாறி தாம் தத்தமக்கு அறிந்தது, புரிந்தது, தெரிந்தது என்றவற்றையெல்லாம் எழுதி வைத்ததை இந்தியர்கள் படித்து இன்று விவாதிப்பதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்[1]. மூலங்களைப் படிக்காமல், உள்ள அத்தாட்சிகளைப் பார்க்காமல், “மற்றவர்கள்” மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்களோ, அவையே ஆதாரம் என்று, அதையே உண்மையென்று மற்றும் நிரூபணம் செய்யப்பட்ட முடிவுகள் என்றும் சாதிக்கும் நிலையிலும் அத்தகைய தர்க்கங்கள் உள்ளன[2]. இப்பிரச்சினைகளோடு இனம், மொழி, ஜாதி, நாடு, மதம், அனைத்திற்கும் மேலாக சித்தாந்தம் போன்றவைக் கருத்தை, மனங்களை, சிந்தனையோட்டங்களைக் கட்டுப் படுத்துகின்றபோது செய்துகொள்ளும் சமரசம், உடன்பாடு உண்மைகளை மறைத்துவிடுகின்றன[3].  இத்தகைய நிலையில் மறைக்கப் பட்ட, திரிபுவாதங்களுக்குட்பட்ட லிங்கவழிபாடு ஆராய்ச்சிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உண்மையான லிங்கவழிபாடு எவ்வாறு தனித்துள்ளது என்பது ஆராயப்படுகிறது. முன்பு இதைப்பற்றிய முந்தைய ஆய்வுகளில் விவரங்கள் சிறிதளவேக் காணப்படுகின்றன[4].

குத்துக்கல் – நடுகல் வழிபாடு: தொல்லியல் ரீதியாக பழங்கற்கால (Palaeolithic), நுண்ணிய / சிறுகற்கால (microlithic), இடைக்கற்கால (Mesolithic), பெருங்கற்கால (Megalithic), புதியகற்கால (Neolithic) மனிதயெச்சங்கள் – குத்துகற்கள் (menhirs) மற்றும் நடுகற்கள் (Memorial stones), கற்கிடைகள் (Dolmen), கல்வட்டங்கள் (Cromlechs) என பலவைகையானவை நினைவுச்சின்னங்களாக (Monuments) மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் புதைப்பு மற்றும் வழிபாடு இவற்றிற்குள்ள பகுப்பிலுள்ளதைக் கவனிக்கவேண்டும். வானிற்கும் பூமிக்கும் சம்பந்தம் உள்ளது என்ற நிலையில் குத்துக்கற்கள், நெடுகற்கள் நடப்பட்டன. பிறகு அவை நீளத்தின் பிரச்சினைக் கருதி, மேற்பகுதி கூர்மையாகவோ, கவிகையாகவோ கழிக்கப்பட்டன[5]. அந்நிலையில் மனிதனால் எண்ணத்தால் உருவத்தை அடக்க நினைக்கும்போது, அது சிறிதாகிவிடுகிறது. எண்ணிலி நீளத்தில் வானைத்தை, பேரண்டத்தையே தொட்டுவிடலாம் என்ற மனித எண்ணங்களை அவ்வாறு தடுத்து, சிறியதாகியதால்தான் உருவான அந்த கல்-உருவங்களும் அமைந்தன. இவை வழிபாட்டில் அடங்கும்.

இறப்பு-பிறப்பு குறிக்கும் குறிக்கற்கள், சிற்பங்கள்: புதைப்பு முறையில் நடுகல், இடுகுழுப்புதைப்பு (Cist), தாழிப்புதைப்பு (Urn), எனவரும் அவற்றிலும் எரியூட்டிப்பின் புதைப்பு (Post-cremational), துண்டப்புதைப்பு (Fractional burial), ஊனகற்சிப்பின் புதைப்பு (Post-Excarnation) என்று அடையாளங்காணப்படும்[6]. ஆழத்தை வைத்து அவை ஆழ்கல்லறை (Catacomb), நிலவறை (Cellar) எனவும் அறியப்படும். மேற்குறிப்பிடப்பட்ட நினைவுச் சின்னங்கள் பலவகைகளாக உருவெடுக்கும்போது அவை பள்ளிப்படை (Memorial building), ஞாபகஸ்தூபி / தூண் (Cenotaph), நிரல் / ஸ்தம்பம் / கம்பம் (Column), தூண் (Tope), சிறியஸ்தூபி (Turret), என்றாகின்றன. கோபுரம் (Tower), வெற்றித்தூண்கள் (Victory pillars / colunmns) முதலியனவும் மனிதனால் கட்டபடுகிறது. இவ்வாறே பிறப்பிற்குக் காரணமாக கற்கள் அடையாளங்காணப்படுகின்றன.

கரு-உருவாக்கம், கரு-காத்தல், கரு-வளர்தல், கர்ப்பம்-காத்தல், குழந்தைப் பெற்றெடுத்தல் முதலியவற்றிற்கும் கற்கள், வடிவங்கள், சிற்பங்கள், முதலியன உபயோகப்படுத்தப் பட்டன[7]. விதைகள், மரங்கள், பறவைகள், விலங்குகள் முதலியன அவற்றுடன் சம்பந்தப்படுத்தும் போது, உருவாகும் சின்னங்கள், கிரியைகள், சடங்குகள் முதலியனவும் வளர்கின்றன[8]. அத்தகைய பிறப்பிற்கு உதவும் கற்கள், வடிவங்கள், சிற்பங்கள் முதலியன தெய்வீகமாகக் கருதப்படும்போது, அவை இறைவடிவங்களாக ஏற்கப்பட்டன. உருவவழிபாடு மறுக்கும் மதங்களும் அத்தைகைய சின்னங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தம்முள் அடக்கி தமது விசுவாசிகளைத் திருப்திப்படுத்தி வருகின்றன[9]. சில மதங்களில் பிறப்பு-இறப்புச் சின்னங்கள் கலந்து உபயோகிப்பதால், அதாவது ஒன்று அதன் தோற்றங்களை மறைக்க அல்லது உள்ள தொன்மையான மதங்களைவிட தமது இன்னும் தொன்மையானது என்று காட்டிக்கொள்ள புதிய விளக்கங்கள் கொடுக்கும்போது, அத்தகைய நேரங்களில் இறையியல் முரண்பாடுகள், பிரச்சினைகள், ஏன் போர்களே உண்டாகின்றன[10].

லிங்க வழிபாடு: இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் லிங்கவழிபாடு என்றுமே இறைவழிபாடாகத் தான் ஏற்படுத்தபட்டு, பின்பற்றப்பட்டு வந்துள்ளது, இன்றும் வருகிறது. ஜைன-பௌத்த மதங்கள் அத்தகைய சின்னங்களை தம்முள் தகவமைக்கும்பொழுது, மாற்றும்பொழுது, முந்தைய வேத-இறையியல் கோட்பாடுகளை எதிர்க்கும்போது முரண்பாடுகள் ஏற்பட்டன. சிற்பச்சாத்திரம் என்று எடுத்துக் கொள்ளும்போது, நிச்சயமாக அவை முந்தியிருந்த சிற்பநூல்களைத்தான் உபயோகித்தன[11]. அவ்வாறே கல்-தச்சர்கள், சிற்பிகள், முதலியோர் உபயாகப்படுத்தப் பட்டிருப்பார்கள். அரசியல் ரீதியில் அவர்கள் வலுப்பெற்றப்பிறகு, தமது என்று முந்தைய நூல்களை மாற்றியமைத்து இருப்பார்கள் அல்லது எழுதியிருப்பார்கள்[12]. ஆகையால்தான் சைத்தியம் மற்றும் புத்த-உருவம் உருவான ஆராய்ச்சிகளில் பற்பலக் கருத்துகள் சொல்லபடுகின்றன[13]. பல நேரங்களில், இடங்களில் சைத்தியத்திற்கும், லிங்க உருவங்களுக்கும் சிறிதே வித்தியாசங்கள், அதாவது, புத்தர் எப்படி மஹாவீரர் விக்கிரங்களினின்று வேறுபடுத்திக் காண்பிக்கப் படுகிறாரோ, அவ்வாறே அடையாளங்காணப்படுகின்றன[14]. முப்பரிமாணப் பார்வையில் அளவியலை வைத்துப் பார்த்தால் அவை எளிதாகவே அத்தகைய ஒற்றுமையைக் காட்டுகின்றன.

புதிய மதங்களில் சின்னங்கள் மாறும் அல்லது தகவமைக்கப்படும் விதம்: உருவாக்குபவர் ஒருவர் இருக்கும்போது, அவரை மற்ற வழிகளில், அல்லது அந்த உருவாக்ககும் தொழிலை அடக்கியாள யாராவது நினைத்தால், அவ்வாறே முடியும் என்ற நிலையிருந்தால், அவர் அடிபணியவேண்டியதுதான். அதாவது தக்ஷன், மயன், விசுவகர்மா, பிரம்மா போன்றவர்கள், மற்றவர்களுக்கு அடிபணிய நேரிட்டால் அவர்கள் தொழிலும் அவ்வாறே இருக்கும். இதனால்தான் பாம்பைப் படைத்தவனிடத்திலிருந்து பாம்பு எடுக்கப்படுகிறது அல்லது பாம்பை அடக்கும் நிலை காட்டப்படுகிறது. விஷ்ணு பாம்பின் மீது ஆனந்தமாக படுக்கிறார் அல்லது ஏறி ஆடுகிறார். சிவன் அதனை அணிகிறார். மஹாவீரர், புத்தர் முதலியோகளுக்கு குடைபிடித்து, ஆசனமாகின்றன. இன்று ஏசுவிற்கும் அந்த ஆசைவிடவில்லை, அதாவது கிருத்துவர்களுக்கு அத்தகைய ஆசை வந்துவிட்டது. எனவே கிருத்துவும் காவி அணிந்து, பாம்பாசனம் மீது உட்காரவைத்து விட்டார்கள்[15]. பௌத்தம் அரசியல் ரீதியில் ஆதிக்கம் கொண்டிருக்கும்போது, அவ்வாறான தகவமைப்பிகளுக்கு விஷ்ணு விக்கிரங்கள் உட்படுத்தப்பட்டிருக்கலாம். ஏனெனில், புத்தவிக்கிரகங்கள்தாம் அப்படி விஷ்ணுபோலவே நான்கு கைகளுடன் உள்ளன, பாம்பாசனத்தில் உட்கார்ந்த மாதிரியுள்ளன; விஷ்ணுவைப்போலவே சயனத்திலும் உள்ளன. விஷ்ணு சிலையிலுள்ள அலங்கார வேலைகளையெல்லாம் செதுக்கிவிட்டால், மஹாவீரர் அல்லது புத்தர் சிலை உருவாகிவிடும். மேலும் சிற்பிகளுக்கு அந்தவேலை மிகவும் எளிமையானது[16]. சைனாவில் குவான்சூய் என்ற இடத்திலிருந்த சிவன், விஷ்ணு முதலிய கோவில்கள் இடிக்கப்பட்டபோது, அதன் அஸ்திவாரங்களின்மீதுதான் புத்தவிஹாரங்கள் கட்டப்பட்டன[17]. அப்பொழுது காலைத்தூக்கி ஆடும் நடராஜார் போன்ற சிலைகள் / விக்கிரங்கள் காணவில்லை என்று அறிவித்துவிட்டர்கள்[18]. அதே மாதிரி லிங்கங்களிலிருந்து சைத்தியங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்குதான் வேலை அதிகம், அதாவது வெறும் லிங்கத்தின் புறப்பரப்பில் அலங்கார சின்னங்கள், வடிவங்கள் முதலியன உருவாக்கவேண்டும். எனவே உள்ள வடிவத்தைவிட சிறிய அளவாகத்தான் அவ்வாறான சிலைகள், சிற்பங்கள், சைத்தியங்கள் உருவாகும். மேலைநாடுகளில், கிருத்துவர்கள், உள்ள பழைய லிங்கம் போன்ற கற்கள், கல்தூண்கள் முதலியற்றின்மீதே சிலுவைகளைச் செதுக்கினர். முஹம்மது நபி கூட மெக்காவில் இருந்த 360 விக்கிரங்களை உடைத்தாலும், அரேபியர்களது வேண்டுக்கோளிற்கு இணங்கி காபா என்ற விக்கிரத்தை விட்டுவைத்தாராம்[19]. அதனை இன்றுவரை முஸ்லிம்களும் விடவில்லை. உடைக்காமல் பத்திரமாகவே வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் நிலை: லிங்கவழிபாடு, கல்லுருவம், நாகம்[20], மரம், திரிசூலம் முதலியற்றின் தொடர்பு[21], சிவலிங்கமாக வழிபட்டது, முதலியவை அகழ்வாய்வு ஆதாரங்கள், காலக்கணக்கியல் மற்றும் இலக்கிய அத்தாட்சிகளுடன் தொடர்பு படுத்தி ஆராயப்படுகிறது. நூற்றுக்கும் மேலாக உலகமெலாம் பல நாடுகளில் அவ்வாறு இருந்த, இருக்கின்ற அத்தகைய அத்தாட்சிகளின் புகைப்படங்களுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

அகழ்வாய்வு ஆதாரங்கள்: அகழ்வாய்வு ஆதாரங்கள் உலகமெலாம் லிங்க வழிபாடு பரவியிருந்ததை எடுத்துக் காட்டுகின்றன[22]. சரித்திரகாலத்திற்கு முந்தைய ஐரோப்பியக் குத்துகற்கள் (menhirs) மற்றும் cromlechs ளில் பாம்பு வடிவம் பொறிக்கப்பட்டுள்ளன, இவையெல்லாம் லிங்கவழிபாட்டின் அறிகுறிகளே[23]. லிங்கவழிபாட்டைக் கொண்டிருந்த கஸார் என்ற நாகரிகம் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.

அகழ்வாய்வுகள் பல நாடுகளில் அத்தகைய லிங்க உருவ சிற்பங்கள், முழுவதுமாகவோ, பாகங்களாகவோ, கல், உலோகம் முதலியவற்றில் கிடைக்கின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கிடைத்த “ஏகமுக லிங்கங்களை”ப் பற்றி விவரங்கள் வெளியிடப்படுகின்றன[24]. பாபிலோனியாவில் ஸியூன். எகிப்தில் சிவா / செவா / ஐஸிஸ் / ஒரிஸிஸ், ஃபிஜியில் சிவா / சிவஜ்யா, ரோமில் பிரியபஸ், சீனாவில் ஹுஹே-ஹைஃபுஹா, யூனானில் ஃபல்லஸ், தாய்லாந்தில் அகோனிஸ் / அஸ்தர்ஜெரிஸ், இஸ்ரேலில் பெல்ஃபெகோ என்று அழைக்கப்பட்டன. ஓ. ஏ. வால்[25] ஸோஹப் பள்ளத்தாக்கில் 3000 BCக்கு முன்பு விவசாயம் செய்யும் குடிமக்களால் வழிபட்டுவந்த லிங்கம் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். ஜே. எம், அல்லெக்ரோ[26], ரோமானியர் வழிபட்டுவந்த லிங்கத்தை அவர்கள் ஃப்ஸினஸ் என்றழைத்தனர் என்று குறிப்பிடுகிறார். டேவிட்ஸன்[27], லிங்கங்கள் வடக்கு ஐரோப்பாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. உப்பசாலாவிலுள்ள கோவிலுள்ள விக்கிரமானது லிங்கம்தான் என்று பிரெமனைச் சார்ந்த ஆடம்ஸ் என்பவர் கூறுகிறார்.

பாலியல் ரீதியிலான சிந்தனைகள், விளக்கங்கள், சிற்பங்கள் உருவான நிலை: சிவலிங்கவழிபாடு எனும்போது கவனிக்கவேண்டியது ஆண்குறி வழிபாட்டிற்கும், சிவலிங்க வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டைத்தான். மேன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக ஆண்குறி / பிறப்புறுப்பு வழிபாடு என்று குறிப்பிட்டதால், இன்றும் அவ்வாறே குறிப்பிடுவதால், அத்தகைய எண்ணத்திலிருந்து விடுபட்டு ஆராயவேண்டியுள்ளது. மேனாட்டவர் கல்லுருவம், நாகம்[28], மரம் முதலியற்றின் தொடர்பு[29] பற்றி ஆராயும்போது, அவர் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு நிலைகளில் அவர்கள் எண்ணங்கள் இருந்ததால், அவர்கள் அவற்றை ஆண்குறி என்று கொண்டு அவ்வாறேப் பார்த்தனர், விளக்கங்களும் கொடுத்தனர். மேனாட்டுத் தட்பவெப்பநிலை, அவ்வாறான சிந்தனைகளை வளர்த்தது. கடுங்குளிர் காலங்களில் அவர்கள் தங்களைக்காத்துக் கொள்ள மரங்களினால் ஆன வீடுகளில் வசித்தனர். அதுமட்டுமல்லாது, ஓவ்வொரு வீட்டிலும் குளிர்காய்வதற்காக நெருப்பெரியும் கூடு மற்றும் நிலவறையும் இருக்கும். மிகக்கடுங்குளிர் காலங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் நிலவறையில் தூங்கி சூரியன் உதித்தப்பிறகு வெளியே வருவர். எனவே மேனாட்டு ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் சரித்திராசியர்களின் எழுத்துகள் அத்தகைய பாலியல் விளக்கங்களுக்குள் கட்டுண்டன. சிலர் உண்மையறிந்தாலும், சித்தாந்த மன-இருக்கங்களினால் இந்தியநிலைக்கு எதிராகவே அத்தகையக் கருத்தைப் பரப்பினர். ஆகவே அத்தகைய மனநிலையின் வெளிப்பாடு அவ்வாறே இருந்தது வியப்பில்லை. உதாரணத்திற்கு ஒன்று எடுதுக் கொள்ளப்படுகிறது.

“ஸிஸ்ன தேவாஹ்” என்பது ஆண்குறியுள்ள கடவுளா அல்லது லிங்கமா? ஆண்குறிவழிபாடு இந்தியாவில் நாகரிகமற்ற எனக்கருதப்படும் காட்டுவாசிகளிடம்கூட இருந்திருக்கவில்லை[30]. மேக்டொனல் என்பவர்தாம் ரிக்வேதத்தில் இரு இடங்களில் காணப்படும் “ஸிஸ்ன தேவாஹ்” என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு “ஸிஸ்ன தேவாஹ்” என்றால் “ஆண்குறியுள்ள வணங்கும் கடவுள்” எனப்பொருள்கொண்டு வேதகாலத்திலேயே ஆண்குறிவழிபாடு இருந்தது என்று வாதித்தார். ஆனால் வேடிக்கையென்னவென்றால், இந்திரன் “ஸிஸ்ன தேவாஹ்” என்பவன் யக்ஞ நெருப்பிற்கு அருகிலே வரவிடக்கூடாது[31] என்று பணித்ததுடன், அவன் நூறு கோட்டைகளில் இருந்த புதையல்களை அடைந்தபோது அவனை (“ஸிஸ்ன தேவாஹ்” என்பவனை) கொன்றுவிடுகிறான்[32]! பிறகு மூய்ர் என்பவரும் அவ்வாறெ எழுதுகிறார்[33]. சாயனர், யக்ஸர் என்பருடைய ஆதாரத்தைச் சுட்டிக்காட்டி, “ஸிஸ்ன தேவாஹ்” என்றால், “யார் அதனுடன் தொடர்பு வைக்குக் கொண்டுள்ளார்களோ அவர்கள் அதாவது ஒழுக்கமில்லாத ஆண்கள்” என்று பொருள் தருகிறார்[34]. நிருக்தா என்ற நூலில், துர்கா என்ற விளக்கவுரை ஆசிரியரும் அதே பொருளைத்தருகிறார். இருப்பினும், இந்த விளக்கங்களுக்குத் திருப்தியடையாமல் “தேவாஹ்” என்று முடியும் வார்த்தைகளையெல்லாம் ஆய்ந்து, “வேதகால ரிஷிகளுடன் இந்த ஆண்குறிவழிபாடு இருந்தற்கான ஆதாரங்களை ஆயும்போது, அத்தகைய அத்தாட்சிகள் இல்லை” என்று முடிவிற்கு வருகிறார். இருப்பினும் பிறகு வந்தவர்கள் ஆண்குறிவழிபாடு இருந்தது என்றும் அதனை லிங்கவழிப்பாட்டுடன் தொடர்பு படுத்தியும் எழுதிவருகின்றனர்[35].

சிவன்-ருத்திரன்; சைவசித்தாந்தத்தின் தொன்மை முதலியப் பிரச்சினைகள்: சங்க இலக்கியத்தில் சிவன் மற்றும் லிங்கம் என்ற வார்த்தைகள் காணப்படுவதில்லை. ஆகவே, அத்தகைய சித்தாந்தங்கள் மற்றும் அவற்றின் உருவ அமைப்புகள், பதிவுகள் பிற்காலத்தில்தான் தோன்றிருக்கக்கூடும். இப்பிரச்சினைகளும் உருவவழிபாடு, அதாவது சிற்பங்கள் முதலிய ஆதாரங்களை வைத்து ஆராய்ந்தால் அத்தகைய பிரச்சினைகள் தீரும். ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒரு தத்துவம் திடீரென்றுக் காணப்படும்போது, அது இந்தியாவில் இல்லை அல்லது வேறொரு மொழியில் உள்ளதால் வெளியேயிருந்து நுழைந்தது என்ற சிந்தனைகள், வாதங்கள் இந்தியாவிற்கு வெளியேக் காணப்படும் சிவலிங்கங்களைப் பார்க்கும்போது, தவறு என்று விளங்கும். இடத்திற்கேற்றாற்போல மக்களின் பாவங்கள் அவற்றில் பிரதிபலித்திருந்தாலும் அதிலுள்ள இந்தியத் தாக்கத்தை, தொடர்பை, பிணைப்பை மறுக்கமுடியாது. ஆகவே இந்தியாவிற்கு வெளியேயுள்ள அத்தாட்சிகளே இந்தியாவுடன் இணையும்போது, இந்தியவிலுள்ள ஆதாரங்கள் அவற்றை மறுக்கும்போது வேடிக்கையாக உள்ளது.

மேலும் சிற்பிகள் மற்றும் அத்தகைய உருவங்களை மனத்தில் உருவாக்கி, அதனை கல்லில் செதுக்கி உயிர்தரும்போது, அத்தகைய எண்ணங்களில் வேறுபாடு இருந்திருக்குமேயானால் அது வெளிப்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய கோளாறுகள் மாற்று மதத்தினர் சிலைகளை, சிற்பங்களை, கோவில்களை மாற்றும்போதோ, இடிக்கும்போதோ, மாற்றிக் கட்டும்போதோ அவ்வாறு நேருகின்றன என்பது முன்னமே சுட்டிக் காட்டப்பட்டது. ஆகவே சித்தாந்தரீதியிலுள்ளப் போராட்டங்கள், கருத்து மோதல்கள், மரபு கண்டனங்கள்[36] இக்காலத்தில் தேவையில்லை. நம்பிக்கையுள்ள மக்களை இணைக்க, கட்டுக்கோப்புடன் வைத்திருக்க, வருங்கால சந்ததியரை நம்பிக்கையுடன் இருக்க, அத்தகைய சித்தாந்தங்களின் விளக்கங்களைக் கொடுத்தாலே போதும்.

புராணங்களும், அகழ்வாய்வு ஆதாரங்களும்: தொல்லியல் ஆராய்ச்சியும், அகழ்வாய்வும் இலக்கிய ஆதாரங்கள் இல்லாமல் புரிந்து கொள்ளமுடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் பலதடவை எடுத்துக்காட்டியுள்ளார்கள். விஷ்ணு, பிரம்மன் சிவனின் அடி-முடியைத்தேடிசென்ற கதை அகழ்வாழ்வு-தொல்லியில் துறைகளில் பல புதிர்களுக்கு விடைதருகிறது எனலாம். உலகத்தில் ஓரளவிற்கு வடபகுதிகளில் பிரம்மன், தென்பகுதிகளில் விஷ்ணு மற்றும் நடுப்பகுதிளில் சிவன் வழிபாடுகள் இருந்திருப்பதைக் காணாலாம். இத்தகைய பதிவுகள் சைவம் மேலோங்கியிருந்தபோது, எப்படி பிரம்மா மற்றும் விஷ்ணு சிலைகள் மாற்றப்பட்டன என்ற சூட்சுமத்தைக் காட்டுகின்றன எனலாம். பிரம்மதேசத்தில் இருந்த பிரம்மனின் சிற்பங்கள் மற்ற இடங்களில் உள்ள சிற்பங்களுடன் ஒப்பிடும்போது, எவ்வாறு அவை சிவனாக மாற்றப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது துருவங்கள் மாறுவதைப்போல இவற்றின் வழிபாடும் மாறியிருக்கலாம். ஆத்தல், அழித்தல், காத்தல் என்ற செயல்கள் தெய்வீகத்துடன் தொடர்புபடுத்தி, இயற்கை வழிபாட்டை அதனுடன் இணைத்தப்பொது, மனிதர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் அவ்வாறே மாறியன, வடிவங்களைப் பெற்றன. பூகோளாரீதியில், அந்தந்த கலாச்சார, பாரம்பரிய, நாகரிகங்களில் அவ்வாறே உருவெடுத்தன. ஆகையால்தான் கற்களில்கூட இந்த மூன்று தொழிலதிபர்களுக்கு உண்டானது என்றுப் பிரிக்கப்பட்டது போலும். பிறகு விதைகள், பூக்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள் முதலிவனவெல்லாம்கூட அவர்களுக்குரித்தானது என்று தனித்தனியாக, பிரத்யேகமாக அடையளங்காணப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறே அவை அந்தந்த கடவுளர்களின் சிற்பங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளதைக் காணலாம். மனிதன் என்றுமே தான் அறிந்திருந்ததலிருந்துதான் அறியாததை அறிந்து கொள்கிறான் என்பதினால், புதிய சித்தாந்தவாதிகள், மதவாதிகளும் முன்பறிந்திருந்தவற்றையே மக்களுக்கேற்றபடி மாற்றியமைத்து கொடுத்திருக்கலாம்.

முத்தொழில்கள், மூன்று தெய்வங்கள், மும்மூர்த்திகள், முத்தேவியர் பகுக்கப்பட்டது: பகுத்தல், விரித்தல், தொகுத்தல் என்ற காரியங்கள் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள் எனலாம். இந்த லிங்கத்தத்துவத்தில் அது காணப்படுகிறது என்றால் மிகையாகாது. முதல் மூன்று நிறங்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் இயற்கையிலுள்ளப் பொருட்களுடன் சம்பந்தப்படுத்தியபோது, இறைத்ததுவங்களும் அவ்வாறேப் பகுக்கப்பட்டது போலும். பிறகு ஒற்றுமையேற்பட்ட பிறகு, மறுபடியும் லிங்கவழிபாட்டில் மும்மூர்த்தி வழிப்பாட்டை இணைத்திருக்கலாம். அதனால்தான், லிங்கமே மூன்று பாகங்கள் –சதுரமான அடிப்பாகம்:பிரம்மா, எண்கோண நடுப்பகுதி:விஷ்ணு, வட்டமான மேற்பாகம்:சிவன் – கொண்டதாக உருவாக்கப்படுகிறது. மேலும் நீளுருண்டையாக இருக்கும் தலைப்பகுதி பூஜாபாகம் எனப்படும் மற்றும் அதன்மீது பிரம்மசூத்ர எனப்படும் குறிப்பிட்ட கோடுகளும் காணப்படும்.  அந்த கோடுகள் இல்லையென்றால், அந்த லிங்கம் வழிபாட்டிறுப் பயன்படாது[37], என்றேல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மேலும் சல = நகரக்கூடியது மற்றும் அசல = நகராதது என்ற இருவகை லிங்கங்கள் உள்ளன. ஏகமுகலிங்கம், சதுர்முகலிங்கம், பஞ்சமுகலிங்கம் என்ற பிரிவுகளும் உள்ளன. அதுமட்டுமல்லாது, நான்கு பகுதிகளில் நான்குவிதமான தெய்வங்கள் அல்லது தேவியர் காணப்படும் லிங்கங்களும் உள்ளன. சதாசிவன் என்ற பஞ்சமுக லிங்கம் – 1. தத்புருஷ, 2. அகோர, 3. வாமதேவ, 4. சதயோஜத, 5. ஈஸான – என் ஐந்து முகங்களைக் கொண்டது. ஒரு சதுர்முகலிங்கத்தில் – 1. பிராஹ்மணி, 2. வைஷ்ணவி, 3. மஹேஸ்வரி 4. இந்திராணி என நான்கு தேவியர்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு தட்சசீல லிங்கத்தில் ஒருபக்கம் மூன்றுதலைகளுடன் புத்தர் காணப்படுகிறார்! மறுபக்கத்தில் சிவன். மற்றொரு குப்தர்கால லிங்கத்திலன் நான்கு பக்கங்களில் – சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் சூரியதேவன் என்று நான்கு மூர்த்திகள் காணப்படுகின்றனர்.  இந்த முக்கியமான வேறுபாடும் ஆண்குறிவழிபாடு என்ற வாதத்தைப் பொய்யாக்குகிறது

உலகமுழுவதும் சிவன்: சிவனின் அருவுருவ வழிபாடு, லிங்க வழிபாடாக உலகம் முழுவதும் இருந்து வந்துள்ளது. ஆனால், இதனை மறைத்தும், பழித்தும் எழுதியும், பேசியும் வருவது, மேனாட்டைய ஆராய்ச்சியாளர்களின் போக்கு. லிங்க வழிபாட்டை “ஆண்குறி” வழி பாடு என்று இன்றளவிலும் அவர்கள் பேசியும்-எழுதியும் வருகின்றனர். ஆனால், உண்மையில் லிங்க வழிபாட்டிற்கும் அத்தகைய வம்சவிருத்தி வழிபாட்டிற்கும்  (fertility rites)  உள்ள வித்தியாசங்களை அவர்கள் எடுத்துக் காட்டி விவாதிப்பதில்லை. வம்சவிருத்தி வழிபாடு, சடங்குகள், பூஜாவிதானங்கள், பலி முதலிய காரியங்கள், கிரியைகள், லிங்க வழிபாட்டிலிருந்து வேறுபட்டுத் தனித்திருப்பதை காணலாம்.

லிங்க வழிபாட்டிற்கும், ஆண்குறி வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்:  உலகமுழுவதும் பல இடங்களில் லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் நீள்-உருண்டை, சிலிண்டர் போன்ற குத்துக்கற்கள் வடிவங்களைப் பார்த்த மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள், அவை ஆண்குறிபோல தோற்றமளித்ததால், அதனை  Phallic என்றும் அத்தகைய வழிபாட்டை -phallic worship – என்றும் குறிப்பிட்டு எழுத ஆரம்பித்தனர் [38]. ஆனால், அத்தகைய வழிபாடும், சிவன் வழிபாடும் வேறு என்று இந்திய நூல்களைப் படித்த பிறகு மற்றும் லிங்கங்களைப் பார்த்தப் பிறகுத் தெரிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாது, யூத-கிருத்துவ-முகமதிய மதங்களில் மறைந்திருக்கும் லிங்கவழிபாட்டிற்கும் இந்திய லிங்க வழிபாட்டிற்கும் உள்ள வித்தியாசம் அத்தகைய இறையியல் தத்துவங்களில் தெளிவாக வெளிப்படுகிறது என்பதனையும் அறிந்து கொண்டனர். நன்றான விளைச்சலுக்கு எதிர்பார்த்து கொடுக்கும் தலைமகன் பலி (sacrifice of the first son), மனிதன் ஆண்டவனுக்கு கொடுத்தற்கான செய்யும் பலி, முதல் மனிதன் செய்த பாவத்திற்கான பிராயசித்தம்  (redemption from the original sin), குழந்தைக்காக பெண்கள் செய்யும் ஆராதனை-வழிபாடுகள்  (fertility rites)[39], ஆண்துணையன்றி குழந்தை பிறப்பு (immaculate conception), முதலியன அத்தகைய பாலியில் ரீதியிலான, மகப்பேறு கிடைக்க செய்யப்படும் சடங்குகள், பலிகள் கீழே வரலாம்[40]. மேனாட்டு மதங்களிடையே அதற்கான பல இலக்கிய, தொல் பொருள் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், மும்மூர்த்திகளின் வழிபாடும் – லிங்கம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று பாகங்களாக / தத்துவங்களாக குறிப்பிடுவதால் – இணைத்திருக்கிறது.

சிற்பிகள்-சித்தாந்திகளின் வெளிப்பாடு: உலகமெலாம் இருந்த, இன்றுமுள்ள லிங்கங்களின் உருவங்கள், அமைப்புகள் அவற்றுடன் தொடர்பு படுத்திக் காட்டியுள்ளச் சின்னங்கள் முதலியவற்றை வைத்து பார்க்கும்போது, உருவங்களிலுள்ள ஒற்றுமையை, அடிப்படையிலுள்ள இணைப்பை, மக்களின் பிணைப்பை உணரலாம். மனத்தில் ஒரு உருவத்தை நினைத்தல், அதனை கருத்துருவாக்கத்துடன் சமைத்தல், கல்லில் அவ்வாறே உருவாக்கல், பிறகு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுதல் என்பது முதலா அல்லது, ஒரு சித்தாந்தி ஒரு அருவத்திற்கு உருகொடுத்து, அருவுருவாக்கி, அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறை செய்தபிறகு தான், சிற்பி அவ்வாறு செய்யமுடியும் என்பது முதலா எனும் தர்க்கம் ஆரம்பம்-முடிவில்லாத வாதத்தில்தான் முடியும் அல்லது தொடரும். ஆகவே உள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது குறிப்பாக எடுத்துக் காட்டப்பட்ட ஒற்றுமையை எற்றுக் கொண்டு, லிங்கவழிபாடு, இந்திய நோக்கில் இறையியல்-ரீதியாக சிவலிங்க வழிபாடாக இருந்துவந்துள்ளது. அதனுடன் சம்பந்தப்படுத்தும் அடையாளங்கள், சின்னங்கள், குறியீடுகள் அதை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. லிங்கங்கள் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் அவற்றை செதுக்கியவர்கள், உருவாக்கியவர்கள் மற்றும் அதற்கான அடிப்படையைத் தந்தவர்கள், அவர்களின் மனங்களில் பதிவானதற்கான மூலங்கள் இவை இந்தியாவைத்தான் காட்டுகிறது.

மக்கள் பெருக்கத்தில் வளர்ந்து, பரந்து பல இடங்களில் வாழும் நிலையில், அவ்வாறே அந்தந்த இடங்களில் உள்ளவாறு அவர்களது வெளிப்பாடுகள் வழிபாடுகளில் தகவமைத்துக் கொண்டனர். இருப்பினும் அடிப்படையிலுள்ள ஒற்றுமை, பிணைப்பு பாரம்பரிய, கலாச்சார, காலக்கிரியமாக நடந்துவரும் பூஜைகள், விழாக்கள், சடங்குகள், தீர்த்தயாத்திரைகள் முதலியனற்றின் மூலம் வெளிப்படுகின்றது.

முடிவுரை: இன்றுள்ள நிலையில், இந்திய மக்கள் தங்களது பாரம்பரியச் சின்னங்களை பாதுகாக்கவேண்டும். எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரங்களினின்று எப்படி, உலகம் முழுவதும், இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் பரவியிருந்தன என்பதை அறியலாம். ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களில் அவை மறைந்து விட்டன. எஞ்சியவைதாம் அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளன. இந்தியாவில் உள்ளவையோ மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. மதசார்பற்ற அரசு என்ற நிலையிலும், நாத்திகம், கம்யூனிஸம் முதலிய சிதாந்தங்கள் பேசிக்கொண்டு குறிப்பிட்டக் காரணைகளை எதிர்த்து வருகிறார்கள். எனவே அந்நிலையில், மடாதிபதிகள், பெரியவர்கள், மற்றவர்கள் நம்பபக்கையாளர்களை வழிநடத்திச் செல்லவேண்டியுள்ளது. அதற்கு இந்திய சரித்திரத்தை ஆழ்ந்து படிக்கவேண்டியுள்ளது. உள்ள ஆதாரங்களை, அத்தாட்சிகளைப் போற்றிக் காப்பாற்றவேண்டியுள்ளது. உள்சமய பிரச்சினைகளை முன்வைத்து மேலும் பிரிவினைவாதிகளுக்கு, எதிரிகளுக்குத் துணை போகாமல், நம்பிக்கையாளர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க மடாதிபதிகள், பெரியவர்கள், மற்ற நலம்-விரும்பிகள் பாடுபடவேண்டும். குறிப்பாக இக்கால இளைஞர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும்.


[1] இந்தியர்களது சரித்திரம் ஐரோப்பிய, குறிப்பாக ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டுள்ளது, இப்பொழுது பல ஆண்டுகள் ஆகியும், பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தும், நன்றாகத் தவறு என்று அறிந்த பலவற்றை இன்றும் சரித்திரம் என்று படித்து, பட்டங்கள் பெற்று, பதவிகளில் அமர்ந்து, அந்த பழங்கதைகளையே உண்மையென்று பிடித்துக் கொண்டு வாதிட்டு வருகின்றனர்.

[2] அதாவது மற்ற படிப்புகள் போன்று புதிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் பழையவற்றை, குறிப்பாக தவறான, பிழையான கருதுகோள்கள், சித்தாந்தங்கள் முதலியவற்றை கழித்து, உண்மைகளை வெளியிடுவதில்லை.

[3] சரித்திரம், காலக்கணக்கீட்டியல், சரித்திர நிகழ்ச்சிகளை காலக்கிரயமாகப் பார்ப்பது, சமகாலத்தைய நிகழ்வுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அவ்வாறே நிகழ்ந்திருக்குமா, நிகழ சாத்தியமா, என்றெல்லாம், தமிழ் எழுத்தாளர்கள் பார்ப்பது கிடையாது. ராஜராஜ சோழன் எப்படி கப்பல் கட்டினான், கப்பற்படையை சரியாக நடத்திக் கொண்டு தெற்காசிய நாடுகளுக்குச் சென்று போரிட்டு வென்றான், திரும்ப வந்தான் என்பதை அறிவுப்பூர்வமாக ஆராய்ச்சி செய்யாமல், இனம், மொழி, சாதி விளக்கங்கள்தாம் இன்னும் கொடுக்கப்படுகின்றன.

[4] V. G. Ramachandran, Siva Around the World, International Society for the Investigation of Ancent Civilizations, Guindy, Chennai, 1983.

இதில் சிவனைப்பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் – கலிஃபோர்னியாவில் சாஸ்தாமலை, அமெரிக்காவில் சிவன் கோவில் எனக்குறிப்பிட்டு – லெமூரியா, குமரிக்கண்டம் என்ற கோணத்தில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

[5] இதன் பின்புலம்தான் எண்ணும் எழுத்தும் சேரும் தத்துவமும், கணிதமும் உள்ளன. பூஜ்யம் ம்குதல் எண்ணிலி வரையிலான எண்கள் உருவானது, மற்றும் வட்டத்தைச் சதுரமாகவும், சதுரத்தை வட்டமாகவும் மற்றூகின்ற ரகசியங்களும் உள்ளன. மற்ற நாகரிகங்களில் அவ்வாறு இல்லை. இதுதான் முக்கியமான வேறுபாடு ஆகும்.

[6] மணிமேகலையிலேயே இத்தகைய விவரங்கள் காணப்படுகின்ரன.

[7] John Mitchell, The Earth Spirit: Its ways, Shrines and Mysteries, AVON Booka, New York, USA, 1975,  pages.39,41,  78-79, 82-84.

[8] K. V. Ramakrishna Rao, Magic, Myth and connected Practices of the Ancient Tamils, Proceedings of the Indian History Congress, 58th Bangalore Session, 1997, pp.164-165.

[9] எப்படி கிருத்துவர்களும், முகமதியர்களும் முந்தைய நாகரிகங்களின் அத்தகைய கல்-உருவங்களை, சிற்பங்களை மாற்றின அல்லது தகவமைத்துக் கொண்டன என்பதை பின்னால் விளக்கப்பட்டுள்ளது.

[10] உருவ வழிபாட்டை வைத்துக் கொண்டே மற்றவர்களின் உருவ வழிபாட்டைக் குறை கூறுவது, ஏதோ செய்யக்கூடாததைச் செய்வதாக தூஷிப்பது, அவர்களுடைய விக்கிரங்கள், கோவில்களைத் தாக்குவது, இடிப்பது, அழிப்பன போன்ற செயல்களில் ஈடுபடுவது முதலிய காரியங்கள்.

[11] K. V. Ramakrishna Rao, Stone – Work, Art, Architecture, Style and Dating in Indian Context, a paper presented  at the ICIH -2009, New Delhi,  p.78. Full paper can be accessed and downloaded from website.

[12] P. K. Acharya, Hindu Architecture in India and Aboard, LPP, New Delhi, 1998

………….…..,  An Encyclopedia of Hindu Architecture, LPP, New Delhi, Vol.VII, 2001.

[13] A. Foucher, The Beginnings of the Buddhist Art, Paris / London, 1917.

W. W. Tarn, The Greeks in Bactria and India, pp395ff.

H. Heras, The Origin of So-called Greceo-Buddhist School of Sculpture of Gandhara, JBBRAS, Vol.12, 1936, pp.77-97.

S. N. Chakravarti, The Origin of the Buddha Image, JUPHS, Vol.XVI, 1943, pp.63-75.

P. C. Jain, Putting the Ocean in a Bowl: The Origin of the Buddha Image, in Exotic India website, 2004.

J. C. Huttington, The Origin of Buddha Image: Early Image Traditions and the Concept of Buddhadatsanapunya,  in A. K. Natain, Studuies in Buddhist Art of South Asia, New Delhi, 1985.

[14] குடையிருந்தால் மஹாவீரர், இல்லாவிட்டால் புத்தர் என்ற நிலையில் இருவரது சிலைகளும் ஒத்துப் போகின்றன.

[15] “உள்கலாச்சாரமயமாகல்” என்ற திட்டத்தில் அவர்கள், கிருத்துவ மதத்தை இந்துக்களுக்குத் தர அவ்வாறு செய்கின்றனர். சர்ச்சுகளை கோவில்போல கட்டுகிறார்கள். இந்து சாமியார்=சந்நியாசிகள் போல காவி உடுத்து, பெயர்கள் வைத்துக் கொண்டு உலா வர்கிறார்கள்.

[16] K. V. Ramakrishna Rao, The Chola-Chinese Connection, A paper to be presented during the 29th session of the South Indian History Congress to be held at Tirunelveli from January 30th to February 1, 2009.

[17] Tim Turpin, Innovation, Technology Policy and Regional Development: Evidence from China and Australia, Edward Elgar Publishing, 2002, p.89.

[18] John Guy, Tamil Merchant Guilds and the Quanzhou Trade, in The Empire of the World Maritime Quanzhou, 1000-1400, edited by Angela Schottenhammer, Brill, 2001, pp.283-305.

[19] இதைத்தவிர அல்லாவின் மகள்கள் என்று மூன்று விக்கிரங்கள் அ—ல்லத், அல்-மனத், அல்-உஜ்ஜா என்றிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. இவையெல்லாம் இந்தியாவில் உள்ளன என்றறிந்துதான் முஹம்மதுகஜினி அவற்றை ஒழிக்க படையெடுத்துவந்து வந்தான்.

[20] J. H. Rivett-Carnac, Rough Notes on the Snake Symbol in India in connection with the worship of Siva, Journal of the Asiatic Society of Bengal, Calcutta, 1879.

[21] James Fergusson, Tree and Serpent worship: Illustrations of mythology and art in India and fourth century after Christ, 1873.

[22] Hyde Clarke, Serpent and Siva worship and mythology  in Central America, Africa and Asia,  Journal of Anthropological Institute, London, 1876.

[23] J. H. Rivett-Carnac, The Snake Symbol in India, Journal of the Asiatic Society of Bengal, Calcutta,

[24] Farid Khan, The Ekamukhalinga from Wanda Shahabhel Northwest Frontier, Pakistan, South Asian Studies, Volume.p, 1993, pp.87-91.

[25] Otto Augustus Wall, Sex and Sex Worship, St. Louis, C. V. Mosby & co., 1922, USA.

[26] John Marco Allegro

[27] . As Davidson mentioned in his book God and Myths’. ‘According to Adam of Bremen the statue of Freyr in the temple at Uppsala was phallic.’

[28] J. H. Rivett-Carnac, Rough Notes on the Snake Symbol in India in connection with the worship of Siva, Journal of the Asiatic Society of Bengal, Calcutta, 1879.

[29] James Fergusson, Tree and Serpent worship: Illustrations of mythology and art in India and fourth century after Christ, 1873.

[30] C. V. Narayana Ayyar,  Origin and early history of Saivism in South India, Uversty of Madras, Madras, 1936. p.49.

[31] ரிக்வேதம்.மண்டலம்,VII.21.5

[32] A. A. MacDonnell, Vedic Mythology, p.155.

[33] Muir (Trans.), Vedic Hymns, Vl. IV, p.409.

[34] Ibid.

[35] நாராயண ஐயர் அப்பொழுது ஆர். ஜி. பண்டார்கர் தமது புத்தகத்தில் Vaisnanism, Saivism, etc., p.115, எழுதியதை விமர்சித்து எடுத்துக் காட்டியுள்ளார்.

[36] சித்தாந்த மரபு, சித்தாந்த மரபு கண்டனம், சித்தாந்த மரபு கண்டன கண்டனம், ஆதினம்,

[37] Swami Harshnanda, Hindu Gods and Goddesses, Sri Ramakrishna Ashrama, Mysore, 1982,  p.84

[38] http://www.sacred-texts.com/sex/pw/pw.htm

[39] http://www.worldhistorysite.com/humansacrifice.html

[40] Frazer, Golden Bough, Penguin, 2007.

கபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்!

ஏப்ரல் 20, 2010

கபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்!

கார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்

ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்!

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………

மயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில்,  மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

கயிலைப் பதிஅரன் முருகோனே

கடலக் கரை திரை அருகேசூழ்

மயிலைப் பதிதனில் உறைவோனே

என்று அருணகிரிநாதர் மாடியுள்ளார்.

  • பிறகு எங்கே அந்த கோயில்?

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

இந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி!

மயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…

சைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………

கிருத்துவக் கொடியவர்களும் துலுக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்: துலுக்கர் / முஸ்லீம்களைப் போல பற்பல அநியாயங்களை, அக்கிரமங்களை, குரூரங்களை, கொடுமைகளை இந்தியாவில் கிருத்துவர்கள் செய்துள்ளார்கள். ஆனால், ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்ததால், அவை வெளிவராமல் அமுக்கி வைத்தனர் (negationism). “செயின்ட்” சேவியர் என்றெல்லாம் புகழப் படும் கிருத்துவ மதத்தலைவர்கள், பாதிரிகள், ஔரங்கசீப்பைவிட மோசமான கொடுமைகளில் ஈடுபட்டிருப்பதை மறைத்துள்ளனர். ஏனெனில் கோவா மததண்டனைகள் / கொடுமைகள் (Goa Inquisition) பற்றி பேசுவது கிடையாது. அங்கு குழைந்தைகள் என்றுகூட பார்க்காமல், துலுக்கர்களைப் போல அல்லது அதைவிட கொடூரமாகக் கொன்றனர். பெண்களை பெற்றோர், கணவன்மார்களுக்கு முன்பாகவே கற்பழித்தனர், கொன்றனர். முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதெல்லாம் சரித்திரம்.

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கத்தோலிக்கக் காவாலிகள்: சென்னையிலும் கிருத்துவ மதவெறியர்களின் ஆட்டம் சொல்ல மாளாது. முக்கியமாக கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்தவர்கள் அவர்கள் தாம். ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக, மாற்றிக் கட்டுதல்-புதுப்பித்தல் என்ற போர்வையில், அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் முதலியவற்றை அடியோடு மறைத்து, இப்பொழுதுள்ள சர்ச்சைக் கட்டியுள்ளார்கள்.

Temple-says-christians-demolishedTemple-says-christians-demolished

போலி ஆவணங்கள் தயாரித்தது, சிறைக்குச் சென்றது: இந்த கேடுகெட்ட செயல், ஒரு பக்கம் இருக்க, அருளப்பா இருக்கும் போது லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து போலி ஆவணங்களை உருவாக்குவதில் ஈடு பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டு, அவமானம் பட்டனர். இருப்பினும் சூடு, சுரணை இல்லாமல் மறுபடி-மறுபடி தெய்வநாயகம் என்ற போலி ஆராய்ச்சியாளனை வைத்துக் கொண்டு, வெட்கமில்லாமல், கத்தோலிக்கர்கள் மறுபடியும் இதைக் கிளப்புகிறார்கள் போலும்.

Kapaleswar-temple-saysKapaleswar-temple-says

பெண்களை சூரையாடும், கற்பழிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை: இன்றைய நாளில் வாடிகனே செக்ஸ் அசிங்களினால் ஆடி போய் இருக்கிறது. கற்பழிக்கப் பட்ட லட்சக் கணக்கான சிறுமியர்கள், இளம்பெண்கள் முதலியோர்க்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்ள போப்போ கதி கலங்கிக் கிடக்கிறார். அந்நிலையில், வெட்கம், மானம் எல்லாம் காற்றில் பறந்து உலகமெல்லாம் நாறிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தகைய கேடு கெட்ட செயல்களில் இறங்கி விட்டார்கள் போலும்.

தமிழ் பத்திரிக்கைகளின் அலங்கோலம்: நக்கீரன் ஏற்கெனெவே ஒரு மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான நிலைக்கு வந்து விட்டது. இப்பொழுது இத்தகைய முறைகளில் அந்த மோசடி பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி வெளியிடும் பொய்களின் மூலம், தனது நிலையை இன்னும் உயர்த்திக் கொள்கிறது போலும்!

தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது: கோயிலை இடித்த காவலிகள் இப்படி சொல்வதற்கு வெட்கமில்லை?  உண்மையிலேயே சைவத்தின் மீது இந்த போலிகளுக்கு பாசம் இருந்தால், அல்லது இந்தியர்கள் / தமிழர்கள் என்று சூடு, சொரணை, வெட்கம், மானம்………………………..ஏதாவது இருந்தால், இப்பொழுதுள்ள சாந்தோம் சர்ச்சை முதலில் இடித்துவிட்டு, அங்கேயே – அதாவது கபாலீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்து, பிறகு வரட்டும் பார்க்கலாம்!

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக! கபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை!

கபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது”! கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:

MYLAPORE FELL INTO THE HANDS OF THE PORTUGUESE IN A.D 1566 WHEN THE TEMPLE SUFFERED DEMOLITION. THE PRESENT TEMPLE WAS REBUILT 300 YEARS AGO. THERE ARE SOME FRAGMENTARY INSCRIPTIONS FROM THE OLD TEMPLE STILL FOUND IN THE PRESENT SHRINE AND IN St. THOMAS CATHEDRAL.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு:

“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.

ஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:

நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

மார்ச் 16, 2010

நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

First Published : 16 Mar 2010 02:54:12 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=212223&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

சிதம்பரம், மார்ச் 15: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடத்தை இடிப்பது போன்ற செயல்பாடுகளில் அறநிலையத் துறையினர் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இந்து அறநிலையத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆலய வளாகத்தில் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டு ஓராண்டில் ரூ.17 லட்சம் வசூலானது. ரூ.27 லட்சத்துக்கு பிரசாதக் கடைகள் ஏலம் விடப்பட்டன. பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு புதிய செயல் அலுவலர் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயிலை இந்து அறநிலையத் துறையினர் கையகப்படுத்தியதற்கு தடை கோரி ஆலய பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மார்ச் 15-ந் தேதி நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்பிரமணியம்சுவாமி வாதாடினார். மேலும் தீட்சிதர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாத ஐயர், வெங்கட்ராம ஐயர் ஆகியோரும், சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பில் காலிஸ்கன்சால்வேள், பி.ஆர்.கோவிலன் பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அசோக்தேசாய், மரிய அற்புதம், நெடுமாறன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் பல்வேறு விஷயங்களை ஆராய கால அவகாசம் தேவை. அதனால் இவ்வழக்கை ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், வழக்கு விசாரணை முடியும் வரை அறநிலையத் துறையினர் கோயிலின் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடங்களை இடிப்பதோ, புதிய பணிகளை மேற்கொள்ளவதோ கூடாது. பழுதுநீக்கம் செய்யலாம். அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.