Archive for the ‘Uncategorized’ Category

பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “இந்தியா” பற்றிய வாத-விவாதங்களும் [6]

ஓகஸ்ட் 22, 2019

பன்னாட்டு பல்துறை மாநாடுவரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடுசித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “இந்தியாபற்றிய வாதவிவாதங்களும் [6]

Saiva vellala dominance

சைவ வெள்ளாளர், இந்தியர் அல்லாத குழுக்கள் குழப்பம் ஏற்படுத்த முடியாது: சைவ சித்தாந்தம் இன்று தென்னிந்தியா மற்றும் இலங்கையின் சைவர்களிடைய, குறிப்பாக வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே பரவலாக நடைமுறையில் பின்பற்றபட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரின் சைவர்களிடமும் இது நடைமுறையில் உள்ளது. முக்கிய சித்தாந்த சங்கங்கள், கோயில்கள் மற்றும் மடங்கள் பல நாடுகளிலும் உள்ளன. அமெரிக்கத் தீவான, ஹவாயில் இந்து மதம், உலகளாவிய இந்துக்களின் சங்கத்தை ஊக்குவிக்கும் சைவ சித்தாந்த பீடம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள். இதை சத்குரு சிவாய சுப்ரமுனியஸ்வாமி (1927-2001) நிறுவினார், இது தற்போது சுப்ரமுணியஸ்வாமியின் நியமிக்கப்பட்ட வாரிசான சத்குரு போதிநாத வேலன்ஸ்வாமியின் (1942-) அனுசரணையில் உள்ளது. அவர்கள் “இந்து” என்று தான் பின்பற்றுகிறாற்கள்[1]. வட இலங்கையின் சைவ சித்தர்களிடம் தங்களது மூலங்களை தொட்சர்பு படுத்திக் கொள்கின்றனர். திருமுலரால் விளக்கப்பட்ட அசல் சைவ சித்தாந்தம் தத்துவ நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது, அது தனித்துவமானது, மேலும் இந்த போதனையை அத்வைத சைவ சித்தாந்தம் என்று பரப்புகிறது.

Pro separatist proest outside Sri Lanka

இலங்கை சைவமும், பிரினைவாதமும்: இலங்கை சைவ முனிவரின் புகழ்பெற்ற பாடல்கள், சிவயோகசாமி, கடவுள், ஆத்மா மற்றும் உலகத்தின் தன்மை குறித்த இந்த பார்வையை இறுதியில் ஒன்று என்று சான்றளிக்கின்றன. முரண்பாடாக, நவீனமயமாக்கலின் காரணமாக, அவர்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவு உண்ணும் நம்பிக்கை உள்ளது. அவைத்தான் கிரியை, சடங்குகளில் குழப்பங்களை உண்டாக்குகின்றன. ஶ்ரீலங்கா பிரிவினைவாதம், தனி-ஈழம் போன்ற காரணங்களினால், எல்.டி.டி.ஈ மற்றும் பணக்கார-அதிகாரம் கொண்ட தமிழர் ஊக்குவிப்பதால், சைவம் தனியான மதம், இந்து அல்ல என்று சொல்லிக் கொள்ள இந்தியா அல்லாத மற்ற நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு சில சலுகைகள், முக்கியத்துவம் கிடைக்கும் என்ற ரீதியில், அவர்கள் இப்பொழுது, சைவத்தைத் திரித்து வருகிறார்கள். ஆறுமுக நாவலர் போன்றோர் இருந்த இடத்தில் தான் அத்தகைய திரிபுவாதங்களை சிலர் உருவாக்குகின்றனர்.

Siva in Sumeria

மூன்றாவது  அமர்வு: இருவர் வாசித்தனர். சடங்கு போன்று படிக்கப் பட்டதால், விவரங்கள் தெரியவில்லை.

மதிய உணவிற்குப் பிறகு, ஆங்கில மற்றும் PPTயுடன் கூடிய கட்டுரைகள் வாசிக்க நேரம் ஒதுக்கப் பட்டது. மாநாடு ஏற்பாடு செய்தவர்கள், PPT காட்டுவதற்கான புரொஜெக்டர் இல்லை என்று தள்ளிப் போட்டனர் . இவ்வமர்வில் ஐந்து பேர் தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர்:

 1. எஸ். நடராஜன் – concept, precept in Saiva siddhanta, அவர் சித்தாந்தத்தின் கருத்து, கருத்துருவாக்கம் மற்றும் வளர்ச்சி பற்றி பலவற்றை விளக்க முயன்றார். அவரது பேச்சு மிகவும் சுருக்கமாக இருந்தது, அதுவும் PPT இல்லாமல் பார்வையாளர்களால் அவரைப் பின்தொடர முடியவில்லை. உண்மையில், அவர் இரண்டாவது முறையாக ஆய்வுக்கட்டுரை வழங்கினார்.jains-persecuted-sculpture-from-chidambaram
 2. நீலககேசி – ஆய்வுக்கட்டுரை மதுரையில் சமணர்களின் தண்டனைக்குள்ளானது / துன்புறுத்தல் குறித்து வழங்கப்பட்டது. அவரது PP விளக்கக்காட்சியை ஏற்கனவே இரண்டு இடங்களில் வழங்கியிருக்கிறார் என்று தெரிகிறது[2]. பெரும்பாலான படங்கள் / புகைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எந்தவொரு மத விவாதத்திற்கும் பின்னர் மதுரையில் தண்டிக்கப்பட்டதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை[3]. இத்தகைய கற்பனையான துன்புறுத்தல்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள் இலக்கிய விவரிப்புகளை பெரிதுபடுத்தி வருகின்றனர். தற்செயலாக, சமணர்கள் சூனியம் நுட்பங்களைப் பின்பற்றி, தர்மசேனா / அப்பர் மீது தொடுத்தனர். Samana-natham, where Jains impaledஒரு சமணர் சம்பந்தரின் வீட்டிற்கு தீ வைத்தார், அவர் உடனடியாக அத்தீயை, நோயாக மாறி, ஜைன மன்னருக்கு கடுமையான வயிற்று வலியாக மாற்றினார். இதனால், அவரைக் கொல்ல ஜைனர்கள் பல முறைகளில் ஈடுபட்டனர். மேலும், சிற்பங்கள், கோயில் ஓவியங்கள் மற்றும் பிற சான்றுகள் 17 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. உண்மையில், கவிதை குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு, உண்மையான துன்புறுத்தலுக்கு உட்படுத்த முடியாது என்று நீலகேசி தானே கூறுகிறார்.Samana-natham, where Jains impaled or mastrubating
 3. – சுமேரியாவில் சிவன் – சுமேரியாவில் தமிழ் பேசப் பட்டது, கில்காமிஷ் பாட்டு தமிழில் பாடப்பட்டது…… சுமேரியாவில் சிவா வழிபாடு இருப்பதாக அவர் கூற முயன்றார். அவர் அக்காடியன் முத்திரைகள் மற்றும் வரிவடிவங்கள்-சித்திர எழுத்துக்ளைக் காட்டி, அவர்கள் தமிழ் என்று உறுதியாக சொன்னார். கில்காமிஷ் கவிதையை தமிழில் பாடியது மிக தமாஷாக இருந்தது. அதே தலைப்பில் அவரது கட்டுரை இங்கே கிடைக்கிறது. அவருக்கு முன், டாக்டர் கே. லோகநாதன் அதைப் பற்றி பேசியது, வீடியோ மற்றும் பிற இடுகைகளை இணைதளங்களில் பார்க்கலாம்[4]. ஆகவே அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார் என்பது தெளிவாகிறது[5].  இத்தகைய கட்டுரைகள் இணைதளங்களில் காணக்கிடக்கின்றன[6]. சரித்திர ஆதாரங்கள் இல்லாமல், மொழிக்கூறு, மொழி விளக்கம், வாதம் முதலியவற்றின் மீது ஆதாரமாக இவை இருப்படால், சரித்திராசிரியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
 4. ராதா – தன்னுடைய புத்தகத்தைப் பற்றி விளம்பரப் படுத்தினார். குமரிக்கண்டத்தைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் ஏற்புடையதாக இல்லை. அது மூழ்கிய போது, அகத்தியர் முகம் தெரிந்தது, அதில் விபூதி தெரிந்தது, அந்த வீடியோ உள்ளது என்றெல்லாம் பேசியது வியப்பாக இருந்தது.12-08-2019 PPT presentation.Nilakesi.KVR
 5. ராமகிருஷ்ண ராவ் – பிரம்மதேசத்தில் சைவம், பர்மாவில் சைவ கோவில்கள்-சிலைகள் மற்றும் மியன்மாரில் சைவர். – பிரம்மதேசத்தில் சிவா கோயில்கள், பர்மாவில் சைவம் மற்றும் மியான்மரில் உள்ள சிவா சின்னங்கள் ”என்ற தனது கட்டுரையை பிபிடி மூலம் பிரம்மதேசத்தில் சைவ மதம் எவ்வாறு செழித்து வளர்ந்தது, பின்னர் தேரவாத புத்தமதத்தின் எழுச்சியுடன் காணாமல் போனது என்பதை எடுத்துக் காட்டினார். பர்மா பண்டைய காலங்களில் பிரம்மதேசம், இடைக்காலத்தில் ஸ்வர்ணத்விபம் மற்றும் இப்போழுது மியான்மர் என்றாகி, கலாச்சாரம், பாரம்பரியம், பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தின் தெளிவான மாற்றத்துடன் அறியப்படுகிறது. பௌத்த -தாந்த்ரீக கலப்பு வழிபாட்டின் எழுச்சி மூலம் இடைக்காலம் வரை இருந்த பிரம்மா வழிபாடு அழிக்கப்பட்டது. சிவ-விஷ்ணு நம்பிக்கை இடைக்காலத்தில் தேரவாத புத்தமதத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் குறைக்கப்பட்டது. இராணுவ ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்திய இந்து நம்பிக்கை சிறுபான்மை மட்டத்திற்குக் குறைக்கப்பட்டு, அந்த நேரத்தில் பெரும்பாலான கோயில்களும் உருவங்களும் அழிக்கப்பட்டு எஞ்சியவை அருங்காட்சியகங்களுக்கும், தெரியாத சேகரிப்பாளர்களுக்கும் சென்றுவிட்டன என்பதை பல புகப்பட ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார்.

Impalement of Jains refuted-1

தத்துவத்தின் விவாதம் அல்லது மந்திரங்கள் Vs சூனியம் ஆகியவை மரண தண்டனைக்கு வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படலாமா ?: நிலகேசியின் விளக்கக்காட்சியைப் பொறுத்தவரை, சூழலில் பல அம்சங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. மதுரையில் சமண துறவிகளை தண்டித்த புராணக்கதை சோழர் காலத்திலிருந்து சமணர்களின் பிரபலமான தமிழ் சைவ இலக்கிய கட்டுமானங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பால் டன்டாஸ் (1992, 109-110) சுட்டிக்காட்டியுள்ளபடி, ஒரு உண்மையான படுகொலை நடந்ததாக எந்த பதிவும் இல்லை. பால் டன்டாஸ் (1992, 109-110) சுட்டிக்காட்டியுள்ளபடி, ஒரு உண்மையான படுகொலை நடந்ததாக எந்த பதிவும் இல்லை என்றாலும், புராணக்கதை, பாரம்பரியத்தில் ஒரு கட்டத்தில் அந்த எண்ணிக்கை எட்டாயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. இது சமண சன்யாசத்தின் மீது ஆகம சைவ மதத்தின் வெற்றியின் பிரதிநிதித்துவமாக சித்தரிப்பாகக் கொள்ளலாம். ஒருநிலையில், ஜைனர்கள் மதுரையிலிருந்து, ஒருளாதாரக் காரணங்களுக்காக வெளியேறிய நிலையை அவ்வாறு உருவகப் படுத்திக் காட்டப் பட்டிருக்கலாம். இவையெல்லாமே, ஒட்டக்கூத்தர், தக்கயாகப் பரணியில் குறிப்பிட்டாலும், நம்பிக்கு முந்தைய கட்டுக்கதைகள் போன்றிருக்கிறன. சம்பந்தரின்  பங்கு அதில் சொல்லப்படவில்லை. இருப்பினும், அது சமணத்தின் மீதான சைவத்தின் வெற்றியாகக் கருதப் பட்டு, திருவிளையாடல் புராணத்தில் குறிக்கப் பட்டு, ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.

Impalement of Jains refuted-2

சமணர்களை அழிப்பதற்காக சம்பந்தர் முருகன் ஆனார் என்ற கதை இருக்க முடியுமா?: கொடூரமான தண்டனைகளில் சம்பந்தர் உடந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேக்கியாருக்குக் கூட அசௌகரியம் இருந்தது தெரிகிறது. சமணர்கள் தாங்கள் இறக்கும் முறையை தானாக முன்வந்து தேர்வு செய்வதிலும், தோல்வியைத் தாங்குவதிலும், இதனால் அவர்களின் தண்டனையை ஏற்றுக்கொள்வதிலும் திருப்தி இல்லை, சேக்கியார் தண்டனையை நிறைவேற்றுவதில் சம்பந்தரின் சம்பந்தத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார். நெருங்கிய சமகாலத்தவரான சோழரவை கவிஞர் ஒட்டக்கூத்தர், மதுரை ஜெயின சர்ச்சை பற்றிய விளக்கத்தை தனது தக்கயக்கப்பரணியில் (தக்காயக்கப்பரணி 6: 169-220) உள்ளடக்கியுள்ளார், இது சிவனை ஒரு போர்வீரனாக சித்தரிக்கிறது. ஒட்டக்கூத்தர் சம்பந்தரை போர் கடவுள் முருகன்- அவதாரமாக சித்தரித்து, ஜைனர்களை ஒழிக்க வந்தவர் போல சித்தரிக்கிறார்.

 

நான்காவது  அமர்வு: கீழ்கண்டவர் / தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப் பட்டனர். ஒருவர் வரவில்லை என்றாலும், அவரது கட்டுரை வாசிக்கப் பட்டது. அத்தகைய “In absentia papr presentation,” அனுமதிப்பதிலை.

 1. தில்லி பல்கலைக்கழகம் மாணவியர்
 2. ஆனந்த லஹரி
 3. In absentia paper – தில்லி பல்கலைக்கழகம்
 4. சைவ சித்தாந்தம்
 5. வீர சைவம்

© வேதபிரகாஷ்

21-08-2019

Siva in Sumeria-2 seal

[1] https://www.himalayanacademy.com/livespiritually/global-fellowship

[2]  டிசம்பர் 2018ல் ஐ.ஐ.டியில், சுவதேசி இந்தியவியல் மாநாடு நடந்த போது, இத்தகைய கட்டுரை- மற்றும் படங்கள் காண்பித்தார் – இவரங்களை இந்த வீடிடோவில் பார்க்கலாம் –  https://youtu.be/yvEY5GQ78wo; https://www.youtube.com/watch?v=yvEY5GQ78wo&feature=youtu.be

[3] Paul Dundas, The Jains, Routledge, London, Second edition, 2002, pp.127-128.

[4] https://www.academia.edu/33637869/SUMERIAN_AND_TAMIL_-_A_COMPARISON_AND_STUDY_WITH_REFERENCE_TO_A_TRANSLITERATED_TEXT_AND_STANDARD_TRANSLATIONS

[5] Siva and Sakti in Sumeria, http://mssubashinik.tripod.com/sivaalayam/sumer1.htm

[6] https://www.academia.edu/6741373/Fifty_names_of_the_Sumerian_god_Marduk

சுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி!

ஜூலை 24, 2016

சுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசைஇந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி!

Bharatiya Ganathon 23-07-2016

மழையை நிறுத்திய இசை மழை: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு 24-07-2016 சனிக்கிழமை நடைபெற்ற  “பாரதீய கானதான்” என்ற சேர்ந்து பாடும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் பல கல்லூரி மற்றும் பள்ளிகளிலலிருந்து வந்து கலந்து கொண்டனர். வண்ண-வண்ண உடைகளில் வந்து அவர்கள் பாடியபோது, சுற்றுப்புறம் மற்றும் வானம் வரை அதிர்ந்தது எனலாம். அதனால், மேகங்கள் கூட மழையினை பெய்விக்காமல் தடுத்து விட்டது போலும். சுமார் 11,000 மாணவிகள் பங்கேற்ற (இடமிருந்து) பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், டி.சி.எஸ். நிறுவனத் துணைத் தலைவர் ஹேமா கோபால், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, இசைக் கலைஞர் அருணா சாய்ராம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பாரதிய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஆடிட்டர் சுப்பிரமணியம். (வலது) இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ என்ற தலைப்பில் 10,000 மாணவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது[1].

Bharatiya Ganathon 23-07-2016- these three provided real music

எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு பிறந்த விழா (1606-2015 முதல் 16-09-2016 வரை): செப்டம்பர் 16, 1916ல் எம்.எஸ் பிறந்தார். அதனால், இந்த ஆண்டு செப்டம்பர் 16, 2015லிருந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.எஸ். தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரபல வழக்கறிஞர். தாய் சண்முகவடிவு, வீணை இசைக் கலைஞர். வீட்டில் குஞ்சம்மா என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.  5-வது படிக்கும்போது, ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட, குஞ்சம்மா மயக்கமாகிவிட்டார். சில நாட்களில் உடல்நிலை சரியான பிறகும், குஞ்சம்மாவை இடைவிடாத இருமல் வாட்டியது. அம்மா சண்முகவடிவின் முடிவுப்படி பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒருமுறை மேடையில் மகளை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார் சண்முகவடிவு. ‘மராத்தி’பஜன் ஒன்றைக் குஞ்சம்மா பாட, அந்த இனிய குரலில் அங்கிருந்தவர்கள் சொக்கிப்போனார்கள். குஞ்சம்மாவின் திறமையைக் கண்டறிந்த ரசிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில், அவருடைய குரலை ஹெச்.எம்.வி. நிறுவனம் பதிவுசெய்து வெளியிட்டது. ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, ‘மரகத வடிவு’ பாடியபோது குஞ்சம்மாவுக்கு வயது 10. ‘மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் ரெக்கார்டு லேபிளில் பெயர் அச்சிடப்பட்டது. பிறகு, எம்.எஸ்.எஸ். என்பது சுருங்கி, உலகமே இன்றும் என்றும் உச்சரிக்கும் ‘எம்.எஸ்’ ஆனது! இந்தியாவில் அவரது குரல் ஒலிக்காத இடமே இல்லை, அறியாத ஆளே இல்லை எனலாம்.

MS_Subbulakshmi_with Gandhi

8-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி:  சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக –

 1. சுற்றுச்சூழல் பராமரித்தல்,
 2. பெற்றோர்-ஆசிரியர்-பெரியோர்களை வணங்குதல்,
 3. பெண்மையைப் போற்றுதல்,
 4. எல்லா ஜீவராசிகளையும் பேணுதல்,
 5. நாட்டுப்பற்று,
 6. வனம்-வன விலங்குகளைப் பாதுகாத்தல்

போன்ற ஆறு நோக்கங்களை மையமாகக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது[2]. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பலவித உந்துதல்கள், கவர்ச்சிகள் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு, இத்தகைய நற்பண்புகளினின்று அதிகமாகவே விலகி சென்று கொண்டிருக்கின்றனர். அந்நேரத்தில், இக்த்தகைய நிகழ்சிகள் மிகவும் அவசியமாகின்றன. இதில் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சம்ஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், பாரதீய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஹேமா கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி, இசைப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  பத்மா சுப்ரமணியம் முதலில் இந்த கொண்டாட்டம் பற்றி விவரங்களை விளக்கமாக முன்னுரையாகக் கூறினார்.

Bharatiya Ganathon 23-07-2016- Dinathanthi photo

இந்திய மொழிகளில் பாட்டுகள் பாடப்பட்டன: எட்டு மொழிகளில் பாடியபோது, இசைதான் கேட்பவர்களுக்குத் தெரிந்தது, வேறோன்று வித்தியாசமும் தெரியவில்லை. கீழ்கனாட பாடல்கள் பாடப்பட்டன:

எண் பாடல் மொழி மையப் பொருள்
1 மைத்ரிம் பஜதா சமஸ்கிருதம் உலக அன்பு, நட்பு, உறவு
2 ஈஸாவாஸ்ய இதம் சர்வம். சமஸ்கிருதம் அண்ட-பேரண்ட வணக்கம்
3 ஜிஸ் கர் மே இந்தி சிறந்த வீடு எப்படி இருக்கும்
4 பிரபோ கணபதே தமிழ் கஜ – கணபதி வந்தனம்
5 தண்டால தெலுங்கு
6 ஜய ஜெய ஜெய துளாஸி மாதா மராத்தி துளஸி-செடி-கொடிகள்-தாவரங்கள் வழிபாடு
7 ஜோ கனி கன்னடம்
8 காணி நிலம் வேண்டும். தமிழ் பூமிக்கு வணக்கம்
9 மாதா பிதா குரு தெய்வம். மலையாளம் மன்னை, தந்தை, ஆசிரியர் மற்று கடவுள் இவர்களுக்கு வணக்கம்

இந்த ஒவ்வொரு பாட்டிற்கும் சிறப்புண்டு. கேட்பவர்களுக்கு இசைதான் தெரிந்தது. ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் சிறு குறிப்பு கூறப்பட்டது. உன்னி கிருஷ்ணன் மகள், செல்வி உத்தரா ஒரு பாட்டு தனியாக பாடினாள். இவ்வாறு ஆயிரக்கணக்கில் மாணவிகள் வந்து பாடுவது என்பது சாதாரண நிகழ்சி அல்ல. பல மாதங்களாக ஆசிரியைகள், மாணவிகள், பயிற்சி கொடுப்போர், பெற்றோர் என்று பலர் இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பங்கு கொண்டு செயலாற்றியுள்ளனர். சேர்ந்து பாடும் முறையே இப்பொழுது குறைந்து வருகிறது.

IMG_20160723_172211101

நினைவுப் பரிசு[3]: இத்தகைய நிகழ்சியை தீடீரென்று நடத்தி விட முடியாதுவீதன் பின்னணியில் பலர் பல மாதங்களாக பாடுபட்டு வந்துள்ளனர். பொதுவாக இந்தியாவில், நிறைய பேர் வேலை / சேவை செய்து விட்டு அமைதியாக, கண்டுகொள்ளாமல், மறைந்தே இருப்பர். அத்தகையோரின் சேவையினல் தான், இத்தகைய நல்ல நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சேர்ந்திசை பாட உதவிய 10 இசை ஆசிரியர்கள், 3 சிறப்பு விருந்தினர் என 13 பேருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பண்பு கலாசார பயிற்சி அறக்கட்டளையின்[4] நிர்வாக அறங்காவலரும், ஹிந்து ஆன்மிக சேவை மையத்தின் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Bharatiya Ganathon 23-07-2016- started singing.4

இந்து ஆன்மிக கண்காட்சி குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது[5]: “சென்னையில் 2009-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஒரு சிறிய ஆன்மிக நிகழ்ச்சி இன்று அகில இந்திய அளவில் ஒரு கலாசார இயக்கமாக மாறி வருகிறது. இது அகில இந்திய அளவில் இந்து தர்மத்தை சரியான நோக்கில் பார்க்க வைக்கும் ஒரு பிரமாண்டமான இயக்கமாக உள்ளது. இதில் ஏற்க முடியாத கருத்துகளோ, சிந்தனைகளோ, நிகழ்ச்சிகளோ அல்லது அமைப்புகளோ இல்லை. மாறாக எல்லோரும் ஏற்க கூடிய 6 நற்கருத்துகளும், சிந்தனைகளும் இதில் உள்ளது. அப்படியானால் ஏன் இதற்கு இந்து ஆன்மிக சேவை கண்காட்சி என்று பெயர் வைத்துள்ளர்கள் என்று கேட்கலாம், ‘இந்துஎன்பது நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறை என்று தான் அர்த்தம்[6]. இது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சி இல்லை. 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை நடத்துவது ஒரு சேவை அமைப்பு என்று கூறி உள்ளது[7]. எனவே வருமானவரித் துறையும் வரிவிலக்கு அளித்து உள்ளது.”
Bharatiya Ganathon 23-07-2016- the venue was full with young singers.3

இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் நிகழ்ச்சி நிரல்: குருமூர்த்தி தொடர்ந்து பேசியது,அந்தவகையில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஆகஸ்டு 2-ந்தேதி மீனம்பாக்கம் .எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது[8]. தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்ளும்கங்கா காவிரி தீர்த்த மங்கல கலச யாத்திரைநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. பதஞ்சலி யோகா பீடம் நிறுவனர் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். 3-ந்தேதி (புதன்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 6 நற்குணங்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

 1. சுற்றுச்சூழலை பாதுகாத்து, பராமரித்தலை வலியுறுத்தும் வகையில்கங்காபூமி வந்தனம்நிகழ்ச்சி,
 2. குடும்பநலன்சமூக நலனை போற்றி பாதுகாத்து பெற்றோர்ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்கும் வகையில்குரு வந்தனம்நிகழ்ச்சி,
 3. பெண்மையை போற்றும் வகையில்கன்யா வந்தனம்நிகழ்ச்சி,
 4. சுற்றுச்சூழலை நிலையாக வைத்திருப்பதை மையமாக வைத்து பசு, யானையை வைத்து துளசிவந்தனம் நிகழ்ச்சிகள்,
 5. நாட்டுப்பற்றை போற்றும் வகையில்பாரத் மாதா வந்தனம்’, ‘பரம்வீர் வந்தனம்நிகழ்ச்சியும்,
 6. வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்அனைத்து உயிரினங்களையும் பேணும் வகையில்விருட்சவந்தனம்’, ‘நாக வந்தனம்நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இதுதவிர நாட்டிய நிகழ்ச்சிகள், வள்ளித்திருமணம், ‘கிருஷ்ணாஇசை நடன நிகழ்ச்சி, வாதாபி சூரசம்ஹாரம், தெருக்கூத்து என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை இலவசமாக கண்டுகளிக்கலாம்”,  இவ்வாறு அவர் கூறினார்[9].  மேலும் விவரங்கள், புகைப்படங்களுக்கு இங்கு பார்க்கவும்[10].

 

© வேதபிரகாஷ்

24-07-2016

Bharatiya Ganathon 23-07-2016- the venue was full with young singers.2

[1] இது “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ இல்லை “பாரதீய கானதான்”! நிருபர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல தோன்றுகிறது.

[2] தினமணி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி முன்னோட்டம், By dn, சென்னை, First Published : 23 July 2016 11:48 PM IST

[3]http://www.dinamani.com/tamilnadu/2016/07/23/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/article3544007.ece

[4] Hindu Spiritual and Service FoundationHead Office: “Bharata Mata Sadan”, “Gargi”, 1st Floor,
Old No : 9, New No 6, D’monte Street, Santhome,Chennai – 600 004; Ph: 044-24622311 / 312 / 313; E-Mail: hssfhq@gmail.com 

[5] தினத்தந்தி, 8-வது இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற மெகா பாட்டு நிகழ்ச்சி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST

[6] http://www.hssf.in/about-us.html

[7] Dr Ramesh Prabhoo vs Prabhakar –   https://indiankanoon.org/doc/925631/;  K. Kunte and in Manohar Joshi v.Nitin Bhaurao Patil  https://indiankanoon.org/doc/1215497/

[8] http://www.hssf.in/

[9] http://www.dailythanthi.com/News/State/2016/07/24050256/10-thousand-students-participated-in-the-8-mega-music.vpf

[10] https://www.facebook.com/vedam.vedaprakash

தமிழ்நாட்டில் நிஜமாக இருப்பது எது?

மார்ச் 17, 2010

தமிழ்நாட்டில் நிஜமாக இருப்பது எது?

தினம்-தினம் செய்தி வருகிறது – போலி ஐ.பி.எஸ். அதிகாரி, போலி போலீஸ், போலி அதிகாரி, போலி டாக்டர், போலி மருத்துவர், போலி ஆவணம், போலி வக்கீல், போலி ரப்பர் ஸ்டாம்புகள்……………….இப்படி தொடர்கின்றன.

ஜாமீன் பெற போலி ஆவணம் தயாரித்த கும்பல் கைது

First Published : 17 Mar 2010 01:07:01 AM IST; Last Updated : 17 Mar 2010 08:47:22 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=212621&SectionID=136&MainSectionID=136&SEO………….81

சேலம், ​​ மார்ச் 16, 2010:​ சேலத்தில் நீதிமன்றங்களில் ஜாமீன் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை போலியாகத் தயாரித்து கொடுத்த 8 பேர் கும்பலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். பல்வேறு வகையான வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் வழங்கும்போது ஒருவர் அல்லது இருவர் ஜாமீன் கொடுக்க வேண்டும்.​ இதற்காக அவர்களின் வருமானம்,​​ சொத்து உள்ளிட்டவை குறித்து வட்டாட்சியர்,​​ கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் கையொப்பம் வாங்கி வர வேண்டும்.இதை ஆதாரமாக வைத்துதான் அவர்களுக்கு பிணை வழங்கப்படும்.​ இந்நிலையில் சேலத்தில் வி.ஏ.ஓ.,​​ வட்டாட்சியர் போன்ற அதிகாரிகள் ஜாமீனுக்காக வழங்கும் சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.மேலும் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியாக இருப்பதை அறிந்த நீதிபதி ஒருவரும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.​ இது குறித்து வழக்குப் பதிவு செய்த அஸ்தம்பட்டி போலீஸôர் நீதிமன்ற வளாகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த வாழப்பாடி ஜெகநாதன் ​(75),​ கன்னங்குறிச்சி ராஜு ​(48),​ பள்ளிப்பட்டி பழனிசாமி ​(50),​ சீலநாயக்கன்பட்டி முருகேசன் ​(62),​ அழகாபுரம் பாலகிருஷ்ணன் ​(59),​ ஆறுமுகம் ​(65),​ எளம்பிள்ளை நாராயணசாமி ​(34),​ சையது உமர் ​(45) ஆகிய 8 பேரை போலீஸôர் கைது செய்தனர்.​ ​இவர்களிடம் போலீஸôர் நடத்திய சோதனையில் வட்டாட்சியர்,​​ துணை வட்டாட்சியர்,​​ பல்வேறு ஊர்களின் கிராம நிர்வாக அலுவலர்களின் போலி ரப்பர் ஸ்டாம்புகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன.இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுக்கும் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.​ ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.150 முதல் ரூ.500 வரை பணம் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.​ இதையடுத்து அவர்களிடம் போலீஸôர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி கையெழுத்தைப் போட்ட நோட்டரி வக்கீல் – அதாவது போலி நீதிபதியும் தயார்!

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=230&id1=11

நீதிபதி கையெழுத்தை போட்டு மோசடி கோவை நோட்டரி வக்கீல் கைது

தினகரன் – ‎10 மணிநேரம் முன்பு‎
கோவை : கோவை யில் சிறுநீரக தான பிரமாண பத்திரத்தில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடி செய்த நோட்டரி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே வட வள்ளி அம்மன்குளத்தை

போலி நிருபர்களும் அட்டூழியம் தமிழகத்தை கலக்கும் போலி பெண்

தினத் தந்தி – ‎7 மணிநேரம் முன்பு‎
அதிகாரி சாருலதா போலி ஐ.பி.எஸ். அதிகாரி என்று வலம் வந்ததுபோல, சுமன்சிங் என்ற பெண் ஒருவரும் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சென்னையில் வலம் வந்து மோசடி மூலம் பல லட்சங்களை

போலி பெண் அதிகாரிகள் நடமாட்டம் அதிகரிப்பு : காவல் துறைக்கு

தினமலர் – ‎15 மார்., 2010‎
ஐ., அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சூர்யகலா என்பவரை, போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இது போல, போலி பெண் அதிகாரிகள் நடமாட்டம் அதிகரித்துள் ளதை அடுத்து,

ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் தபால் துறை அதிகாரிகள் மீது

தினத் தந்தி – ‎7 மணிநேரம் முன்பு‎
மாத வருவாய் சேமிப்பு திட்டம், முதியோர் சேமிப்பு திட்டம் ஆகியவற்றில் போடப்பட்ட பணத்தை போலி கையெழுத்து போட்டு போலி ஆவணங்கள் மூலமும் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தும்

போலி பெண் அதிகாரி கைது

தினகரன் – ‎12 மார்., 2010‎
விரைந்து வந்த போலீசார் சூர்யகலாவை பிடித்து விசாரித்தனர். அவர் போலி என தெரிந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். சூர்யகலா அளித்த வாக்குமூலத்தில், ‘எனது சொந்த ஊர் மைசூர்.

உயிரோடு விளையாடும் போலிகள்‘ விலை கொடுத்து வாங்குவது மருந்தா

தினகரன் – ‎15 மார்., 2010‎
மாதவிடாய் மாத்திரையில் போலிகளை தயாரித்து விற்ற கும்பலும் ஆந்திராவில் தான் ஐக்கியம் என்கிறது அதிகாரிகள் வட்டாரம். வழக்கு போட்டதோடு சரி. புகாரின்படி கடைகளில்

மொபட்டில் கடத்தி செல்லப்பட்ட 40 கிலோ போலி டீத்தூள் பறிமுதல்

தினத் தந்தி – ‎5 மார்., 2010‎
மொபட்டில் கடத்தி செல்லப்பட்ட 40 கிலோ போலி டீத்தூளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலி டீத்தூள்
ஏன் போலி அரசியல்வாதிகள் இல்லை?
சரி.

அரசியல்வாதி மட்டும் எப்படி நிஜமகவே இருக்கிறன்?

அதில் போலி அரசியல்வாதி இல்லயே ஏன்?

நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

மார்ச் 16, 2010

நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

First Published : 16 Mar 2010 02:54:12 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=212223&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

சிதம்பரம், மார்ச் 15: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடத்தை இடிப்பது போன்ற செயல்பாடுகளில் அறநிலையத் துறையினர் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இந்து அறநிலையத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆலய வளாகத்தில் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டு ஓராண்டில் ரூ.17 லட்சம் வசூலானது. ரூ.27 லட்சத்துக்கு பிரசாதக் கடைகள் ஏலம் விடப்பட்டன. பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு புதிய செயல் அலுவலர் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயிலை இந்து அறநிலையத் துறையினர் கையகப்படுத்தியதற்கு தடை கோரி ஆலய பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மார்ச் 15-ந் தேதி நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்பிரமணியம்சுவாமி வாதாடினார். மேலும் தீட்சிதர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாத ஐயர், வெங்கட்ராம ஐயர் ஆகியோரும், சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பில் காலிஸ்கன்சால்வேள், பி.ஆர்.கோவிலன் பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அசோக்தேசாய், மரிய அற்புதம், நெடுமாறன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் பல்வேறு விஷயங்களை ஆராய கால அவகாசம் தேவை. அதனால் இவ்வழக்கை ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், வழக்கு விசாரணை முடியும் வரை அறநிலையத் துறையினர் கோயிலின் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடங்களை இடிப்பதோ, புதிய பணிகளை மேற்கொள்ளவதோ கூடாது. பழுதுநீக்கம் செய்யலாம். அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

“கிழவன், கிழவி ஆட்டம்” வேண்டுமாம்: கருணாநிதி, கனிமொழி கவனிப்பார்களா?

திசெம்பர் 29, 2009
“கிழவன், கிழவி ஆட்டம்” வேண்டுமாம்: கருணாநிதி, கனிமொழி கவனிப்பார்களா?’
டிஸ்கோ’ டான்சுக்கு வேண்டும் தடை: கிராமிய கலைஞர்களின் குமுறல்
டிசம்பர் 29,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20253

கிழவன், கிழவி ஆட்டம் அழிந்து வருகிறது: திண்டுக்கல்: சினிமா மோகத்தால், பாரம்பரிய கருத்துக்களை கூறும் கிழவன், கிழவி ஆட்டம் அழிந்து வருவதாக, கலைஞர்கள் வருத்தப்பட்டனர். தமிழகத்தில் ஒரு காலத்தில், மேடைகளில் கிழவன், கிழவி ஆட்டம் சிறப்பு பெற்று விளங்கியது. இவர்கள் நடனமாடி ஒழுக்கத்தையும், வரலாற்றுக் கதைகளையும் கூறுவர். இளைஞர்கள் திருந்துவதற்கும், நல்வழிபடுத்துவதற்கும் ஏதுவாக இருந்தது. ஆனால், இன்று கிழவன், கிழவி ஆட்டத்தை, தமிழக மேடைகளில் காண முடியவில்லை. கிழவன், கிழவி ஆட்டம் ஆடும் திண்டுக்கல் மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த ராமராஜ்(22), சிலுவத்தூரை சேர்ந்த கனராஜ்(32) கூறியதாவது: மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி உட்பட 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கிழவன், கிழவி ஆட்டம் ஆடுவர். தற்போது சினிமா மோகத்தால், அரை, குறை ஆடையுடன் ஆடும் சினிமா பாடல்களால், இளைஞர்கள் சிந்தனை சீரழிந்து வருகிறது.

கலைஞர்கள் வாடுகின்றனர், கலைஞர் கவனிப்பாரா? வாய்ப்பு கிடைக்காமல் கிழவன், கிழவி ஆட்டம் ஆடும் கலைஞர்கள், வறுமையில் வாடுகின்றனர். இவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. கலைஞர்களை, கலை விழாவிற்கு அழைத்துச் செல்லும் அதிகாரிகளும், 250 ரூபாய் எழுதி, கையெழுத்து வாங்கி, 150 ரூபாய் மட்டுமே தருகின்றனர்.கலைநிகழ்ச்சி இல்லாமல் வறுமையில் வாடும் எங்களுக்கு, அரசு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்;

டிஸ்கோ’ டான்சுக்கு வேண்டும் தடை: கனிமொழி கவனிப்பாரா?: தற்போது சினிமா மோகத்தால், அரை, குறை ஆடையுடன் ஆடும் சினிமா பாடல்களால், இளைஞர்கள் சிந்தனை சீரழிந்து வருகிறது. அரைகுறை ஆடையுடன் கிராமங்களில் ஆடும் டான்சுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். “கலைஞர்” டிவியில் “மானாட, மயிலாட” பதிலாக, கிழவன் – கிழவி ஆட்டம் அரங்கேறுமா?

ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் பூட்டை உடைத்து புகுந்தனர் பக்தர்கள்!

திசெம்பர் 23, 2009
ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் பூட்டை உடைத்து புகுந்தனர் பக்தர்கள்
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14895

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில், பெருமாள் பக்தர்கள் திடீரென நேற்று முற்றுகையிட்டனர். அங்குள்ள சீனிவாச பெருமாள் சன்னிதி பூட்டை உடைத்து, பக்தர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு நிலவியது.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ளது பலஹரி புருஷோத்தம ஜீயர் மடம். இந்த மடத்தின் ஜீயர், லட்சுமணராமானுஜம் ஜீயர். இங்கு சமையல் வேலை பார்ப்பவர் பத்ரி. இவர், மனைவி கோதாராணியுடன் வசிக்கின்றார். மடத்துக்கு கோதாராணி வந்ததில் இருந்து, இங்குள்ள சீனிவாச பெருமாள் சன்னிதி இழுத்து மூடப்பட்டது. இதனால், சீனிவாச பெருமாளை பக்தர்கள் பல ஆண்டாக தரிசிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து ஜீயரின் சீடர்கள், “சீனிவாச பெருமாள் சன்னிதியை திறந்து, பக்தர்கள் வழிபாட்டுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று, கோவிந்த ராமானுஜ தாசா என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இதைத்தொடர்ந்து, ஜீயர் மடத்தில் உள்ள சீனிவாச பெருமாள் சன்னிதியை திறந்துவிட வேண்டும் என்று,கோர்ட் உத்திரவிட்டது. இருந்தபோதிலும், ஸ்ரீரங்கம் போலீஸார் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற முன்வரவில்லை.

இதைத்தொடர்ந்து, பலஹரி புருஷாத்தம ராமானுஜ ஜீயர் மடத்து சீடர்கள், சங்கத் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசா, சீனிவாச பெருமாள் சன்னிதியை திறக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். இதனால், ஸ்ரீரங்கம் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் உள்ள டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் நடந்த கூட்டத்தில், பலஹரி புரு�ஷாத்தம ராமானுஜ ஜீயர் மடத்தில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் சன்னிதி பொதுமக்கள் தரிசனத்துக்காக திறந்துவிடப்படும். பலஹரி மடத்தில் இருந்த பலகோடி மதிப்புள்ள சுவாமி விக்ரகம், கொல்கத்தா திருட்டு கும்பல் வெளிநாட்டுக்கு கடத்தும் முன் அதை கைப்பற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்படுவதாக, உறுதி அளித்ததன் பேரில், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

நேற்று மடத்தில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் சன்னிதியை திறக்க பக்தர்கள் முயன்றதை முன்னிட்டு, போலீஸ் அதிகாரிகள் மடத்தில் குவிந்தனர்.கோவிந்த ராமானுஜ தாசா தலைமையில் பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆடியும் மடத்தை முற்றுகையிட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது. மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டதும், பக்தர்கள் உள்ளே புகுந்தனர். இதன் பிறகு, ஸ்ரீசீனிவாச பெருமாள் சன்னிதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பூஜைகள் நடந்தன. சீடர்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் சீனிவாச பெருமாளை தரிசித்தனர்.

விமர்சனம்:

இதில் பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருக்கிறது:

1. ‘மடத்துக்கு கோதாராணி வந்ததில் இருந்து, இங்குள்ள சீனிவாச பெருமாள் சன்னிதி இழுத்து மூடப்பட்டது. இதனால், சீனிவாச பெருமாளை பக்தர்கள் பல ஆண்டாக தரிசிக்க முடியவில்லை”: யார்  இந்த கோதாரணீ? அவர் வந்ததிலிருந்து, ஏன் கோவில் மூடவேண்டும்?

2. கோர்ட் உத்திரவிட்ட பிறகும்,  ஸ்ரீரங்கம் போலீஸார் கோர்ட் ஏன் உத்தரவை நிறைவேற்ற முன்வரவில்லை..

3. பலஹரி மடத்தில் இருந்த பலகோடி மதிப்புள்ள சுவாமி விக்ரகம், கொல்கத்தா திருட்டு கும்பல் வெளிநாட்டுக்கு கடத்தும் முன் அதை கைப்பற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்படுவதாக, உறுதி அளித்ததன் பேரில், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது: இதன் பின்னணி என்ன?

4. பக்தர்கள் கூடியவுடனே, அதிகாரிகளே முன்வந்து, போலீஸாரிடம் சொல்லி, கட்ய்ஹவைத் திறாக்கச் சொல்லியிருக்கலாமே?

பெண்களின் மார்புடை சர்ச்சை!

திசெம்பர் 18, 2009

பெண்களின் மார்புடை சர்ச்சை!

ஜாக்கெட்‘: அரசின் கட்டுப்பாடுஆசிரியைகள் கடும் அதிருப்தி

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009, 11:04[IST]

http://www.deccanchronicle.com/chennai/dress-code-teachers-tn-871

பெற்றோர்களிடமிருந்து புகார்கள்: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு[1] உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்தது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.

ஜாக்கெட்டுகளின் அசிங்கமான-ஆபாசமான அமைப்பு: நாகரிகம் மாறுகிறது, ஆனால் அடிப்படை மனித உணர்வுகள் மாறவில்லை. அவையும் மாறுகின்றன என்றால் மேனாட்டு கோளாறுகள் மூலம்தான். காமத்திற்கும்-காதலுக்கும், நாகரிகத்திற்கும்-ஒழுக்கத்த்ற்கும் இலக்கணம் கேட்டு வாதிப்பதில் கற்போ, பெண்களின் ஐங்குணங்களையோப் போற்றிக் காக்க முடியாது[2]. முன்னும் பின்னும் வேண்டுமென்றே வடிவமைப்பு என்ற “போர்வையில்” உடலை அதிகமாக வெளிக்காட்டவேண்டும், அதிலும் குறிப்பாக கவன ஈர்ப்பு செய்யவேண்டும் என்ற முறையில் அவை இருக்கின்றன (vulgar design cuts of Blouse ). இதில் ஜன்னல் வகைமாடல் (Window type designer blouses) மிகவும் பிரசித்தம், இதை .டிஸைனர் பளவுஸ் என்றும் கூறுகிறார்கள். குஷ்பு இதைதான் அணிந்து பிரபலமாக்கி வருகிறார். அதற்காக அவர் பணமும் பெறுகிறார். ஆண்கள் டி-சர்ட்டுகள், வெளிர்க்கப்பட்ட உடலை ஒட்டிய இருக்கமான ஜீன்ஸ் (bleached and skin-tight jeans) முதலியவை அணிந்து வரக்கூடாது.

நாகரிகமான முறையில் உடை அணிதல்! இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், “எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம். ஆனால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்”. நிச்சயமாக, மக்கள் ஆசிரியர்களிடமிருந்து ஆரோக்யமான கட்டுப்பாடை, பின்பற்ற வேண்டிய ஒழுங்கை, ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகத்தை எதிர்பார்க்கிறார்கள்.

நல்ல டேஸ்ட் / கெட்ட டேஸ்ட் / கேட்ட டேஸ்ட்: இத்தகைய விளக்கங்கள், இலக்கணங்கள், மரபுகள், விவாதங்கள் தேவையா? பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே? மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை! அவள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அவள் சமூகத்தில், அத்லிம் அறிந்து-தெரிந்திருக்கும் சமூகத்தில் இருக்கும்போது, நான் வேறுவிதமாக இருப்பேன் எனும்போது தான் வருகிறது விவகாரம்.

நடிகைகள் செய்வதை எல்லாம் ஆரிசியைகள் செய்வதை எந்த பெற்றொர்களும் விரும்ப மாட்டார்கள்: ஆசிரியைகளின் பெற்றோர்களோ, கணவன்மார்களோ, அவர்களது பிள்ளைகளே விரும்ப மட்டார்கள். எப்படி பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வரும் முன்னர், வர்ம் போது, வந்த பின்னர், தமது கைப் பைகளிலிருந்து நடமாடும் அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொண்டு அலங்காரப் படுத்த்க் கொண்டு உள்ளே நுழைகிறர்கள் என்பது அறிந்ததே. அதுபொலத் தான் ஆடை அலங்காரமும். ஏதாவது “ஃபங்ஸன்” / விழாக்களுக்கு செல்கிறர்கள் என்றால் தனியாக அத்ற்கு ஆடைகளையே எடுத்து வந்து விடுவார்கள். வீட்டில் திட்டுவார்கள், ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அங்லிருந்து அணிந்து சென்று, பிறகு மறுபடியும் மாற்றி வீட்டிற்கு செல்வார்கள்! இத்தகைய “ஆடை மாற்றங்கள்” / போலித்தனங்கள் பெண்களுக்குத் தேவையில்லையே!

கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட்: குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார். ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” என்று குறிப்பிடும்போதே ஆசிரியைகள் வெட்கப் படவேண்டும், ஆத்திரமோ, கோபமோ படக்கூடாது. இங்கு கூட “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” எனும்போது “கண்ணை உருத்தாத / உருத்தாமலிருக்கும் விதமான ஜாக்கெட்” எது என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா, ஆராச்ச்சி செய்வார்களா?

“உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்” சமாச்சாரம் அல்ல: இன்று பெண்ணுரிமை என்று அதற்கும் உரிமைகள் கேட்டு கொடி பிடிக்கிறார்கள் பெண்கள், பெண்ணூர்மை சங்கங்கள் முதலியன! சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா? ஆகவே உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். ட்க்ஹெரிந்தும், தெரியாத மாதிரி நடிப்பது, விதண்டாவாதம் செய்வது முதலியனத் தான் பொறுப்பற்ற செயல்கள். அவர்கள் அசிங்கமான-ஆபாசமான ஜாக்கெட் அணியும் ஆசிரியைகளைவிட மோசமானவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடை: ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. பல பள்ளிகளில் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் சீருடைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. அங்கும் அவ்வாதைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று உள்ளது.
பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும்: அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர். இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது. எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா? என்கிறார் அவர். சௌகரியம் என்று வேற்விதமாக வந்தால் என்னாவது, அதைத்தான் யயசிக்க வேண்டியுள்ளது.

தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.: உண்மை, ஆனால் விதண்டாவாதிகள் உடனே எது தனது கலாச்சாரம், யாருடைய கலாச்சாரம், எது பாரம்பரியம், யாருடைய பாரம்பரியம், என்றெல்லாம் வாதிடுவார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவார்கள். சங்க காலத்தில் பெண்கள் மார்பு கச்சை அணிந்தார்கள், கேரளாவில் சில பெண்கள் ஜாக்கெட்டே போடவில்லை, கோவில் சிலைகளே நிர்வாணமாகத் தானே உள்ளன என்ற வாத்ங்கள் எல்லாம் வரும். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் – ஆணோ, பெண்ணோ – தனது தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களை அத்தகைய நிலைக்குட்படித்துவார்களா? அதேப் போல தனது தந்தை, கணவன், சகோதரன், மகன் இவர்களை எந்த பெண்ணும் புதிய க்லாச்சாரம் / மேனாட்டு இலக்கண வர்க்க விதிகள் / பாலியல் சுதந்திரங்கள் என்ற நோக்கில் அனுமதிப்பார்களா அல்லது  கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவார்களா?

ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள்: ஊடகங்களில் ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள் நாகரிகமாகவா உள்ளன? இதோ உதாரணத்திற்கு சில – இவை ஆசிரியைகள் ஆடை, அலங்காரம், அழகு காட்டுதல், காதல், கள்ளக் காதல் முதலியவற்றை சம்பந்தப்பட்டது:

 • ஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது : கணவர், கள்ளக்காதலி மீது போலீஸ் சந்தேகம்http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=7592
 • பள்ளி சுவர் ஏறி குதித்து காதலை சொன்ன மாணவன் ஆகஸ்ட் 30,2008,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4374
 • கள்ளத்தொடர்பு ஆசிரியை மீது நடவடிக்கை : ஐகோர்ட் கிளை உத்தரவு மே 06,2009,00:00  IST http://www.dinamalar.com/court_detail.asp?news_id=3030
 • பள்ளி மாணவி படுகொலை : ‘கல்நெஞ்ச’ ஆசிரியர் கைது நவம்பர் 09,2008,00:00  ISTதரணிசெல்வனுக்கும், அவர் வேலை பார்த்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தரணிசெல்வனின் மனைவி ராதிகாவை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து, கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர் http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=6115
 • கள்ளக்காதலால் ஆசிரியை குத்திக்கொலை : செஞ்சி அருகே கணவன் போலீசில் சரண் நவம்பர் 04,2008,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=5972

இவையெல்லாம் தமிழக சினிமாக்களில் தமிழ் பேசி வரும் தமிழச்சி நடிகைகளின் விவகாரங்கள் அல்ல. தமிழச்சி ஆசிரியைகளின் அலங்கோலங்கள் தாம். சமூகத்தில் அக்கரைக் கொண்டவர்கள், பெண்ணுரிமை, தனிப்பட்ட நபரின் சுதந்திரம் என்றெல்லாம் நியயப் படுத்துவார்களா? பாடம் சொல்லிக் கொடுக்குக் ஆசிரியைகள் இவ்வாறு இருந்தால், அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் என்னாவார்கள்?

பெண்களிடம்தான் உலகமே இருக்கிறது: இது ஏதோ சித்தாந்தம் அல்ல. அதனால்தான் எல்லா பிரச்சினைகள், விவாதங்கள், சர்ச்சைகள் சம்பாந்தப்பட்ட விவகாரங்கள் எல்லாமே பெண்களுடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஒரு ஆண்-பெண் சேரும் நிலை, சேர்ந்திருக்கும் அமைப்பு, குடும்பம், சமூகம், குமுக்கம், குழு, என்று எப்படி சொன்னாலும், மனிதர்கள் நாய், பன்றிகள் போன்று தமது நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களை மாற்றிக் கொள்ளமுடியாது. விதண்டாவாதங்கள் அல்லது தெரிந்தே தெரியாத மாதிரி செய்யும் வாதங்களினால் எந்த பலனும் இல்லை. ஆகவே இன்றைய சூழ்நிலைகளில் பெண்களே அறிந்து செயல்படவேண்டியுள்ளது,

வேதபிரகாஷ்

18-12-2009 ©


[1] மற்ற விஷயங்களில் – அரசு விழாக்களில் பெண்கள் எப்படி ஆடை அணிந்து வரவேண்டும்………..இத்யாதி………….இவ்வாறு ஆணைகள் பிறப்பிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்!

[2] அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு பெண்களின் ஐங்குணங்கள் என்பர். இவையெல்லாம் பெண்களுக்கு இப்பொழுது வேண்டுமா, வேண்க்டாமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டுமானால் குஷ்பு, நமிதா, ஸ்ரேயா, மல்லிகா, ஸ்னேஹா முதலிய தமிழச்சிகளிடம் சென்று தான் விவரங்களை சேகரித்து வரவேண்டும்.தமிழச்சிக் கலக்குகிறாள்!

திசெம்பர் 4, 2009

பெண்களைப் பற்றி நிறைய விவாதங்கள்!

பெண்ணியம் பற்றியோ சொல்லவே வேண்டாம்.

ஆனால், ஏன் இப்படி?

எது-எதற்கோ தமிழர்கள் ஆர்பரிக்கிறார்கள்!

ஜனாதிபதி வான-ஊர்தியில் சென்றால், அதில் ஒரு தமிழன் என்று செய்தி!

சந்திராயன் என்றால் அதில் ஒரு தமிழன்!

யாரோ நோபல் பரிசு பெற்றால், தமிழன் நோபல் பரிசு பெற்றான் என்பது!

இப்பொழுது என்ன சொல்லப் போகிறர்கள்?

தமிழச்சிகள் என்ன செய்ய போகிறார்கள்?

பத்மலட்சுமி மீண்டும் நி்ர்வாண போஸ்!
வியாழக்கிழமை, டிசம்பர் 3, 2009, 12:48[IST]

தமிழச்சிகளின் அலங்கோலம்

கர்ப்பமாக இருக்கும், சல்மான் ருஷ்டியின் மாஜி மனைவி பத்மா லட்சுமி ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொணட்வர் மாடல் பத்மா லட்சுமி. தற்போது இவர் 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். சல்மான் ருஷ்டியின் மனைவியான இவர் கடந்த 2007ம் ஆண்டோடு ருஷ்டியை விட்டுப் பிரிந்து விட்டார்.

இந்த நிலையில், பேஜ்சிக்ஸ் என்ற பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இந்த போஸ் உள்ளது.

இவர் மாடலிங்குக்காக நிர்வாண போஸ் தருவது இது முதல் முறையல்ல என்றாலும கர்ப்பமாக இருக்கும்போதும் மாடலிங் போஸ் தந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பத்திரிகையின் உள்பக்கம் இடம் பெற்றுள்ள இன்னொரு புகைப்படத்தில், மைலி சைரஸ் வானிட்டி பேர் பத்திரிகைக்கு கொடுத்த குஜால் போஸை காப்பி அடித்து அதேபோல போஸ் கொடுத்துள்ளார் பத்மா.

இதுகுறித்து பத்மா கூறுகையில், நிர்வாணத்தின்போது நான் அழகாக இருப்பதாக உணர்கிறேன். உடைகள் அணிந்திருக்கும்போது அதற்கு ஒரு பெயர் வந்து விடுகிறது. ஆனால் நிர்வாணம் அப்படியல்ல. நம்மை அப்படியே வெளிக்காட்டும் முக்கிய குறியீடாக நான் கருதுகிறேன். நிர்வாணத்தின் மூலம் மட்டுமே நம்மை அப்படியே வெளிக்காட்ட முடியும் என்கிறார்.

39 வயதாகும் பத்ம லட்சுமி, தனது தற்போதைய வாழ்க்கை குறித்து கூறுகையில், எனது வாழ்க்கையை மீண்டும் ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்திக் கொண்டு வருகிறேன். என்னைப பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.

சரி பத்ம லட்சுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை?. அந்தக் கேள்விக்கு பத்மா லட்சுமியே இன்னும் பதில் அளிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்று கூறிச் சிரிக்கிறார்!.

தமிழ் கலாசாரமும், சென்னை பல்கலையின் 150 ஆண்டு பாரம்பரியமும்!

ஒக்ரோபர் 21, 2009

சென்னை பல்கலைக்கழகத்தில் டி ஷர்ட், ஜீன்சுக்கு தடை வரும்
துணை வேந்தர் க.திருவாசகம் பேட்டி

சென்னை, அக். 20_2009 (விடுதலை: 21-10-2009): சென்னை பல்கலைக்-கழகத்திலும் மாணவர்-களுக்கு உடை கட்டுப்-பாடு கொண்டு வருவதற்கு ஆலோசனை நடத்தப்-படும் என்று துணை வேந்தர் திருவாசகம் கூறினார்.

திருவாசகம் அளித்த பேட்டி வருமாறு:

தமிழ் கலாசாரத்-தையும், சென்னை பல்கலை-யின் 150 ஆண்டு பாரம்பரியத்தையும் மாணவர்களின் உடை முறைகள் கெடுத்துவிடக் கூடாது. ஒரு தனியார் நிறுவனத்துக்கு அழைப்-பிதழ் கொடுக்க சென்ற பல்கலை மாணவர்கள், அநாகரிகமான முறை-யில் ஆடைகள் அணிந்தி-ருந்ததாக, புகார் வந்தது. மாணவ, மாணவிகள் ஆபாசமாக உடை அணி-வதை தடுக்க வேண்டும். இதற்கு உடை கட்டுப்-பாடு அவசியம். இதுகு-றித்து முடி-வெடுக்க கல்-லூரி முதல்-வர்கள், துறை தலைவர்-கள், மாணவர்-கள் பிரதி-நிதிகள் ஆலோ-சனை கூட்டம் நடத்தப்-படும். உடை கட்டுப்-பாடு கொண்டு வருவ-தால் ஏற்படும் சாதக பாத-கங்கள் குறித்து விவாதிக்-கப்பட்டு முடிவெடுக்கப்-படும்.

பல்கலை.யின் தொலை-தூர கல்வி நிலைய அலுவலகம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், துணை வேந்தரின் வர-வேற்பு அறை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்-படும். ஆஸ்திரேலிய சுவின் பர் பல்கலையுடன் ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. இதன் மூலம் நமது பல்-கலை. மாணவர்கள் அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளலாம். ஏரோ-நாட்டிக்கல் படிப்பை தொடங்க கல்லூரிகள் முன்வந்தால், அங்கீகாரம் அளிக்கப்படும். மாண-வர்கள் வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெறுவ-தற்கும் வசதி செய்து தரப்படும்.

புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரி-விக்க 20ஆம் தேதி முதல், பல்கலைக்கழக நுழைவு வாயிலில் கிரீன் பாக்ஸ் வைக்கப்படும். இதன் சாவி என்னிடம்தான் இருக்கும். இதில் தெரி-விக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவ-டிக்கை எடுக்கப்படும். இதேபோல இ மெயிலில் புகார்கள் மற்றும் ஆலோ-சனைகள் தெரிவிக்க, http://www.mvcgreenboxgmail.com இணையதளம் இன்று முதல் தொடங்கப்-படு-கிறது. சென்னை பல்-கலைக்கழகத்தில் உள்ள பல வகையான படிப்-புகள் மற்றும் கட்டண விவரங்களை அறிந்து கொள்ள டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய தானி-யங்கி இயந்திரம் வைக்கப்-படும். இவ்வாறு திரு-வாசகம் தெரிவித்தார்.

உண்மையிலேயே சென்னை துணைவேந்தரின் “தமிழ் கலாசாரத்-தையும், சென்னை பல்கலை-யின் 150 ஆண்டு பாரம்பரியத்தையும் மாணவர்களின் உடை முறைகள் கெடுத்துவிடக் கூடாது” என்ற முழக்கத்தைக் கேட்டு புல்லரிக்கிறது! முன்பு சிரேயா என்ற நடிகை கருணாநிதி மற்றும் பலரின் முன்பாக அரைகுறை உடையுடன் வந்து, கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு, பரிசும் வாங்கிச் சென்றபோது, எவரும் அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லையே?

கருணாநிதியைப் பற்றி எம்.ஏ பட்டம் துவங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால், அவர் பெயரில் நடத்தப் படும் டிவியில் “மானாட, மயிலாட” கும்மாளங்களில், குத்தாட்ட நடனப் போட்டிகளில் உடைகளைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லையே?

பிறகு எது தமிழ் கலாச்சாரம்? எது சென்னை பலகலையின் பாரம்பரியம்? இன்றைய தமிழ் சமுதாயத்தில் உள்ள ஆபாசங்களை கண்கள் இருந்தும் குருடனாக பார்க்காத மாதிரி செயல்பட்டு, இன்று ஆபாசத்தைப் பற்றி கவலை கொள்கிறார்! சென்னை பல்கலைகழகம் ‘டாக்டர்” பட்டங்களை வாரி இரைத்தபோது, யாரும் கவலைபடவில்லையே? ஆனால், இன்று பலவற்றைப் பற்றி பேசுகிறார்!

இந்து கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் : தயானந்த சரஸ்வதி சுவாமிகள் பேச்சு

ஒக்ரோபர் 20, 2009

இந்து கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் : தயானந்த சரஸ்வதி சுவாமிகள் பேச்சு

http://www.dinamalar.com/district_events.asp?ncat=Chennai&news_id=245512#245512

Tamilnadu districts latest incidents in detail

சென்னை : “”உலகின் அனைத்து கலாசாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நம் இந்து கலாசாரம் பாதுகாக்கப்பட வேண் டும்” என தயானந்த சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.
இந்து தர்மத்திற்கும், இந்து சமுதாயத்திற்கும் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆற்றி வரும் பணியை பாராட்டி அவருக்கு, தர்ம ரக்ஷன சமிதி சார்பில், வந்தனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுவாமிகளின் 80வது ஆண்டு விழாவாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி, இசை மழலை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அகில இந்திய பரதக்கலை சங்கத்தின் பரத நாட்டிய நிகழ்ச்சியோடு துவங்கியது.

நிகழ்ச்சியில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது: உலக மக்கள் யாரும் தங்களுக்குள் சண்டையேதும் போட்டு கொள்ள வேண்டாம் என இந்து கலாசாரம் கூறுகிறது. அந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம் கலாசாரத்தில் பல்வேறு அமைப்புகளும், மதத்தலைவர்களும் இருக்கின்றனர். இந்த அமைப்புகள் தங்களுக்குள் புரிதல் தன்மையும், தொடர்ந்து தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை பெருக்கி கொள்ள வேண்டும். மிகவும் பழமை வாய்ந்த நம் கலாசாரத்தின் தர்மத்தை நாம் எல்லா வழியிலும் காப்பாற்ற வேண்டும். உண்மையை கடைபிடிக்கும் தர்மத்தை கொண்ட கலாசாரம் நம்முடையது. ஆகையால், உலகில் உள்ள அனைத்து கலாசாரங்களையும் பாதுகாக்க வேண்டுமானால், நம் இந்து கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். “G¥XÖ LXÖNÖW†ÛR• L֐TÖ¼\ ÚY|• GÁ\Ö¥, S• C‹‰ LXÖNÖW†ÛR TÖ‰LÖ†ÚR BL ÚY|•. S•–¥ T¥ÚY¿ AÛU“L·, UR RÛXYŸL· E·[]Ÿ. AYWYŸ RjL· UeLºeh Y³LÖyzL[ÖL ÙNV¥Ty| RjLºeh· “¡RÛX, ÙRÖPŸ“LÛ[ Y¨T|†‡eÙLÖ·[ ÚY|•” GÁ¿ h½‘yPÖŸ.இவ்வாறு தயானந்த சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.

Tamilnadu districts latest incidents in detail

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்  ஜெகத்ரட்சகன் பேசுகையில், “”நாம் உலகின் அனைத்து நீதிகளையும் அறிந்து கொள்ள தமிழில் திருக்குறளையும், வடமொழியில் பகவத்கீதையையும் படித்தாலே போதுமானது. இத்துணை சிறப்பு மிக்க பகவத்கீதையை, மக்களிடம் சிறப்பாக கொண்டு சென்றதில், சுவாமிகளின் பங்கு அதிகம். குறிப்பாக கீதையானது, வாழ்க் கையை தொடங்க இருக்கும் இளைஞர்கள் படிக்க வேண்டியது என்பதை உணர்த்தியுள்ளார்,” என்றார்.“OÖÂL· s¡VÛ]ÚTÖ¥ C£eL ÚY|• GÁ¿ rYÖ–È AzeLz i¿YÖŸ. AY£ÛPV ÙNÖ¼ÙTÖ³°L· AÛ]†‰ RW‘]ÛW• DŸeh• YÛL›¥ AÛU‹‰·[]. h½TÖL, TLY† gÛR ÙNÖ¼ÙTÖ³° AÛ]†‰ RW‘]ÛW• S¥Y³T|†‰YRÖL AÛU‹‰·[‰” GÁ¿ h½‘yPÖŸ.

.நிகழ்ச்சியில் சக்தி குழுமத்தின் நிறுவனர் மகாலிங்கம், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் வேணு ஸ்ரீனிவாசன், தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் கருமுத்து கண் ணன், தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

என். மஹாலிங்கம் தமது ஆராய்ச்சி நிறுவனம் எப்படி சரித்திர நிகழ்ச்சிகளுக்கு காலக்கணக்கிடு செய்துள்ளது, அந்த விவரங்களை ஸ்வாமியுடன் கொடுத்துள்ளார் மர்ரும் அதைப் பற்றிய ஆராய்ச்சி தொடரவேண்டும் என்று பேசினார்.

ஆங்கிலத்தில் பேசிய வேணு சீனிவாசன் சனாதன தர்மத்தின் பெருமையினையும் அதை பின்பற்றவேண்டிய அவசியத்தையும் எடுத்துக் காட்டினார். நமது சமுதாயத்தில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளனர். நாம் செல்வத்தை உருவாக்கும்போது, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் சேவை செய்து அன்பு செலுத்துவது ஒன்றே இந்து தர்மத்திற்கு நாம் செய்யும் சிறந்த சேவை என்றார்.

கருமுத்து கண்ணன் தேவாரம் தமிழகம் முழுவதும் ஒலிக்க ஏற்பாடு செய்யவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறித்தினார். தேவாரம் பாடுவதில் புகழ் பெற்ற ஓதுவார்களுக்கு பயிற்சி ‌அளிக்க, பள்ளிகளை ஏற்படுத்த தயானந்த சரஸ்வதிகள் உதவ வேண்டும் என்றார்.

அவ்வை நடராஜன் எப்படி திருவையாரில் ஒடாமல் இருக்கும் மூன்று தேர்களை பழுது பார்த்து அவற்றை ஓடவைக்கும் முயற்ச்சிகளை ஸ்வாமிகள் எடுத்துள்ளார் என்று பேசினார்.

«ZÖ«¥ SzLŸ WÈÂLÖ‹†, C‹‰ ˜Á]‚ AÛUTÖ[Ÿ WÖUÚLÖTÖXÁ, ^]RÖ Lyp RÛXYŸ r‘WU‚VNÖ–, TÖ.^.L. ‘W˜LŸ rhUÖWÁ S•‘VÖŸ, ‡£U‡ Jš.È.‘. E·TP HWÖ[UÖÚ]ÖŸ LX‹‰ ÙLցP]Ÿ.

«ZÖ ÙRÖPeL†‡¥, ATÍYW• WÖ•È›Á CÛN UZÛX hµ«]¡Á CÛN LoÚN¡•, TWR SÖyzV ÚUÛR T†UÖ r‘WU‚V• H¼TÖyz¥ 96 ÚTŸ TjÚL¼\ ‘W•UցPUÖ] SP] ŒL²op•, ÙNÁÛ] ÛUX֐”Ÿ LTÖ§ÍYWŸ ÚLÖ«¥ N¼h£ SÖR K‰YÖ ™Ÿ†‡›Á ÚRYÖW CÛNTÖP¥ ŒL²op• CP• ÙT¼\].

Tamilnadu districts latest incidents in detail

சென்னையில், தர்ம ரக்ஷண சமிதி சார்பில், தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 80வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில், திரளான மாணவிகள் கலந்து கொண்டு, பரதத்தின் மூலம் தயானந்த சரஸ்வதி சுவாமிக்கு வந்தனம் செலுத்தினர்.