மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

சமீபத்தில், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.

ஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

முஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.

முஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.

இஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது?

விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://tamilheritage.wordpress.com/2010/01/02/madurai-pontiff-confronting-with-christians-muslims/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?”

 1. vedaprakash Says:

  இந்துக்களை அழிக்க நினைக்கிறார் அர்ஜுன் சம்பத்: மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு கண்டனம்

  First Published : 20 May 2012 04:49:57 PM IST
  Last Updated : 20 May 2012 04:51:30 PM IST
  http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=600996&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  மதுரை, மே.20: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தனியார் தொலைக்காட்சித்கு உடந்தையாக இருந்து இந்துக்களை அழிக்க நினைக்கிறார் என்று மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
  மதுரை ஆதீன மடத்தில் ஆத்ம சைதன்ய பீடம் அனுமன் சேனா, சிவசேனா அதிரடிப் படை, அகில பாரத இந்து மகாசபா., அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை, அனைத்து சைவ வெள்ளாளர் கூட்டமைப்பு, திருநெல்வேலி வஉசி இளைஞர் பேரவை உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஒருங்கிணைந்து மதுரை ஆதீனம் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதுரை ஆதின மடத்தில் நடைபெற்றது.

  இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  *293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தரை நியமித்ததற்கு நன்றி
  *இந்து மத பக்தர்களின் நீண்டகால கோரிக்கையான புனித யாத்திரை பயணத்துக்கு சலுகைகள் கொடுப்பதாக அறிவித்துள்ள முதல்வருக்கு பாராட்டு

  *2800 ஆண்டுகள் பழமையும், புகழும்பெற்ற மதுரை ஆதீனத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் பரப்புவதற்கு முட்டுக்கட்டையாக செயல்படும் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதீனங்கள், குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் அறிக்கைக்கு கண்டனம்

  *நித்யானந்தரை அவதூறு செய்ததுடன் 292-வது ஆதினத்தின் முடிவை எதிர்க்கின்ற மடாதிபதிகள், பீடாதிபதிகள் ஆதீனங்கள் தங்களது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.

  *தனியார் தொலைக்காட்சிக்கு உடந்தையாக இருந்து இந்துக்களை அழிக்க நினைக்கும் அர்ஜுன் சம்பத்துக்கு கண்டனம்.

  *காங்கிரஸார் பொதுக்கூட்டங்களுக்கு அழைக்காததால் அரசியல் பேச வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நெல்லை கண்ணன் மதுரை ஆதீனம் விஷயத்தில் தலையை நுழைக்கிறார். அவரது செயலுக்கும் கண்டனம்

  *மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள சமூக விரோதிகள் உடனடியாக மதுரை ஆதீனத்திடம் சொத்துகளை ஒப்படைக்க வேண்டும்.
  இவ்வாறு அந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 2. vedaprakash Says:

  மதுரை ஆதீன மடத்தில் ஆதீன பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம்: 50 ஆதரவு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பு Madurai ஞாயிற்றுக்கிழமை, மே 20, 1:30 PM IST
  http://www.maalaimalar.com/2012/05/20133010/madurai-adhinam-rescue-comitte.html

  மதுரை, மே. 20 2012-

  மதுரை ஆதீன மடத்துக்கு இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆதீன மீட்பு குழு என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் மதுரை ஆதீன பாதுகாப்பு குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் முதல் ஆலோசனை கூட்டம் மதுரை ஆதீன மடத்தில் இன்று நடந்தது.

  இந்த கூட்டத்தில் ஆதீன பாதுகாப்புக்குழுவில் இடம் பெற்று உள்ள பொள்ளாச்சி ஆதீனம், ஆத்ம சைதன்ய சுவாமி, இந்து தர்மா சக்தி, இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதர் அனுமன் சேனை) தேவர் பேரவை, அம்பேத்கார் அமைப்பு உள்பட 50 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் மதுரை ஆதீன மடத்தை காப்பது, மடத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவது, மக்களிடம் ஆன்மீக சிந்தனையை எவ்வாறு பரப்புவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 3. vedaprakash Says:

  மதுரை ஆதீனம் பதவிக்கு நித்யானந்தா தகுதியானவர்: பாரத அனுமன் சேனா

  First Published : 20 May 2012 01:59:50 PM IST

  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=600900&SectionID=164&MainSectionID=164&SEO=&Title= வேலூர், மே.20: மதுரை ஆதீனம் பதவிக்கு நித்யானந்தா தகுதியானவர்தான் என்று அகில பாரத அனுமன் சேனாவின் நிறுவன தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
  இதுகுறித்து வேலூர் மாவட்டம் ஏலகிரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தானே புயல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டபோது சங்கராச்சாரியார் உள்பட எந்த மடாதிபதியும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தைகூட கூறவில்லை. ஆனால் நித்யானந்தா தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் உணவளித்து ஆறுதல் கூறினார்.
  மேலும் எந்த மடாதிபதியும் தன்னை ஒரு இந்து மதத்தின் மடாதிபதி என கூறிக்கொள்ளவில்லை. நித்யானந்தா ஒருவர் மட்டும் தான் தன்னை ஒரு இந்து என்றும் இந்து மடாதிபதி என்றும் இந்து அறக்கட்டளை என்றும் பதிவு செய்துள்ளார்.
  இளைய ஆதினம் பொறுப்புக்கு அவர் தகுதியானவர்தான். ஆதலால் நித்யானந்தாவை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. காஞ்சி மடாதிபதி மேல் கொலை வழக்கு உள்ளது. அவர் நித்யானந்தா மீது குற்றம் சுமத்துவதற்கு தகுதியில்லை என ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 4. vedaprakash Says:

  கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவை குறைசொல்ல தகுதியில்லை: அகில பாரத அனுமன் சேனா ஞாயிற்றுக்கிழமை, மே 20, 2012, 12:54 [IST]
  http://tamil.oneindia.in/news/2012/05/20/tamilnadu-jayendrar-shouldnt-accuse-nithyananda-154280.html
  வேலூர்: கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவை குறைசொல்ல தகுதியில்லை என்று இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனாவின் நிறுவன தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

  நம் நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவி மலைவாழ் இனத்தைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை. வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், மலைவாழ் இனத்தைச் சேர்நதவருமான பி.ஏ. சங்மாவை ஆதரிப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நாங்களும் சங்க்மாவை ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

  தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சங்கராச்சாரியார் உள்பட எந்த ஒரு மடாதிபதியும் ஆறுதல் கூறவில்லை. ஆனால் நித்யானந்தாவோ தனது சொந்த செலவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்து ஆறுதல் கூறினார். எந்த ஒரு மடாதிபதியும் தன்னை இந்து மதத்தின் மடாதிபதி என்று கூறவில்லை. இந்நிலையில் நித்யானந்தா மட்டுமே தன்னை ஒரு இந்து என்றும், தான் ஒரு இந்து மடாதிபதி என்றும், தான் வைத்திருப்பது இந்து அறக்கட்டளை என்றும் பதிவு செய்துள்ளார்.

  மதுரை இளைய ஆதீனம் பதவிக்கு அவர் தகுதியானவரே. அதனால் எங்கள் கட்சி நித்யானந்தாவை ஆதரிக்கிறது. தன் மீது கொலை வழக்கு உள்ள காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா மீது குற்றம் சுமத்த தகுதியில்லை.

  தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் சாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு மக்கள் இலவசமாக சாமியை தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பணம் வசூலிக்கப்பட்டால் நாங்கள் சென்னை கோட்டையை நோக்கி அறப்போராட்டம் நடத்துவோம் என்றார்.

 5. “இந்து” இயக்கங்கள் அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள் முதலியவைக் கொடுப்பது-போடுவது, இந Says:

  […] [11] https://tamilheritage.wordpress.com/2012/05/19/what-arjun-sampath-nellai-kannan-were-doing-when-the-m… […]

 6. “இந்து” இயக்கங்கள் அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள் முதலியவைக் கொடுப்பது-போடுவது, இந Says:

  […] [11] https://tamilheritage.wordpress.com/2012/05/19/what-arjun-sampath-nellai-kannan-were-doing-when-the-m… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: