Archive for the ‘துவைதம்’ Category

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 109-ம் ஆண்டு ஆராதனை விழா நெரூரில் நடந்தது!

மே 2, 2023

ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 109ம் ஆண்டு ஆராதனை விழா நெரூரில் நடந்தது!

109-ம் ஆண்டு ஆராதனை விழா நெரூரில் நடந்தது: நெரூர் சதாசிவ பிரமேந்திராள் 109-ம் ஆண்டு ஆராதனை விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 30-04-2023 தசமி அன்று ஆராதனை முடிவு பெற்றது. கொரோனா காலத்திற்குப் பிறகு கூட்டம் குறைந்து விட்டது. 30-ந் தேதி ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, விருத்தி, குரு உஞ்சவ் விருத்தி, அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேசுவர பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர். 109-ம் ஆண்டு ஆராதனை விழா – இதனையொட்டி தினமும் உஞ்ச விருத்தி, கிராம பிரதட்சினம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன[1]. இதனைத்தொடர்ந்து நேற்று ஆராதனை விழாவையொட்டி சதாசிவ பிரமேந்திரநாள் சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவமும், லட்சார்ச்சனை, தெய்வீக பேரூரைகள், திவ்யநாம சங்கீர்த்தனை, பஜனை ஆகியவைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்[2].

கூட்டம் குறைந்து வருவது வருத்தமாக இருக்கிறது: கொரோனா காரணங்களால் 2020-2023 ஆண்டுகளில் கூட்டம் குறைவானது. முன்னர், “உருளல்” இல்லை என்ற போதே ஆயிரக்கணக்கான கூட்டம், நூற்றளவில் குறைந்து விட்டது. இப்பொழுது, தவறாமல் வரவேண்டும் என்ற வேண்டுதல், உறுதி இருப்பவர்கள், வருகிறவர்கள் மட்டும் விடாமல் வந்து செல்கின்றனர். கரூர் ராமகிருஷ்ணன் 03.02.2022 அன்று காலமானப் பிறகு, அவரது நண்பர்கள் வருவதும் குறைந்து விட்டது. நண்பர்களிடையே ஏதோ ஒன்று போய் விட்டது அல்லது குறைந்து விட்டது போன்ற உணர்ச்சி / எண்ணமும் தோன்றுகிறது. குறிப்பிட்ட நண்பர்கள் வருவர், இரவு முழுவதும் தத்துவம், ஆன்மீகம் போன்ற விசயங்கள் பேசிக் கொண்டிருப்பர். மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் இருக்கும் பொழுது, அவரவர் அனுபவங்கள் பரிமாறிக் கொள்ளப் படும். முன்பெல்லாம், 100-200 பேர் அவரது வள்ளலார் சபையில் வந்து தங்குவர். கூட்டம் அந்த அளவுக்கு இருக்கும். அதாவது, மற்ற இடங்களில் தங்க இடமில்லை என்ற நிலையில், இங்கு வந்து தங்குவர்.

விருப்பங்கள் தேவைகள் மாறுகின்றன: இப்பொழுது அந்த கூட்டத்தைக் காணமுடியவில்லை. எல்லா நாளிதழ்களும் சிறப்பு பிரதியைக் கொண்டு வரும். அதற்கு கரூர் சுற்றியுள்ள வியாபாரிகள் விளம்பரம் கொடுப்பர். கரூர்-நெரூர் பேரூந்துகள் சென்று கொண்டே இருக்கும். இப்பொழுது, எல்லாமே குறைந்து விட்டது. ஆனால், அரைத்த மாவை அரைத்து, எல்லாம் தெரிந்தது போல, யூ-டியூப்புகள் மட்டும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இப்பொழுதெல்லாம் இணைதளத் திருட்டு சர்வசகஜமாகி விட்டது. ஒருவர் கஷ்டப் பட்டு, எல்லா விவரங்களையும் சேகரித்து, இணைதளத்தில் பதிவு செய்தால், சில நிமிடங்களில் அதை “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து தமது போல போட்டுக் கொள்வர். பணம், வசதி, முதலியவை உள்ளவர்கள், எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாகவும் போட்டு விடுவர். ஆனால், பக்தியுடன் அங்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வருடம் 2023ல் அக்ராஹார கால்வாயில் காவிரி நீர் ஓடிக் கொண்டிருந்தது. வழக்கமான நிகழ்ச்சிகளுடம் நடந்து கொண்டிருந்தன.

அக்ரஹார மடத்தின் வாசல்

கோலங்களுடன் தயாராகும் ஆராதனை விழா…

வழக்கம் போல திருவுருவப் படம் எடுத்துச் செல்லப் படுகிறது…..

ஆராதனை – இசை மூலம் சமர்ப்பணம்……

இம்முறை ஒரு பெண்மணி தவில் வாசித்தார்…

மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா தொடங்கியது. ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர். மானாமதுரை சிவகங்கை மாவட்டம் மானசசஞ்சரே எனபாடி இறைவன் அம்பிகையை எந்த நேரமும் வழிபாடு செய்து ஆண்-பெண் தோற்றத்துடன் கூடிய மகான் சதசிவ பிரம்மேந்திராள். இவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரிலும், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் உள்ளது. இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திராள் இசைஆராதனை விழா மானாமதுரையில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது[3]. இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தனர்[4]. கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் நினைவை போற்றும் வகையில் இந்த விழா நடைபெற்றது. முதல் நாள் விழா மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மகாலில் காலை முதல் வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, பூஜைகள், புல்லாங்குழல், பாட்டு நடந்தது. வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். மாலையில் இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

© வேதபிரகாஷ்

01-05-2023


[1] தினத்தந்தி, நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை, தினத்தந்தி மே 1, 1:14 am

[2] https://www.dailythanthi.com/News/State/nerur-sadasiva-pramendra-aradhana-954600

[3] மாலை மலர், சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா , By மாலை மலர், 29 ஏப்ரல் 2023 1:19 PM.

[4]  https://www.maalaimalar.com/news/district/sivagangai-news-satasiva-brahmendra-aradhana-started-602777?infinitescroll=1

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்-ராகவேந்திரர் போன்றோர் சைவ-வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [3]

ஜூலை 5, 2020

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்ராகவேந்திரர் போன்றோர் சைவவைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [3]

Saiva - Vaishnava divide can be removed!

சனாதன நம்பிக்கையாளர்களுக்குள் ஏன் விரோதம், போட்டி, தாக்குதல் முதலியன இடைக்காலங்ளில் இருந்தன?: ஃபாஹியான் (399-414), யுவான் சுவாங்  (ஏழாம் நூற்றாண்டு) முதலிய சீன-பௌத்த யாத்திரிகர்கள் தென்னகத்திற்கு வந்து சென்றுள்ளனர். தாராளமாக ஓலைச்சுவடிகளை வாரிச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை எதிர்த்ததாகவோ, மறுத்ததாகவோ எந்த குறிப்புகளும் இல்லை. ஆனால், மத்வாச்சாரியார் தீர்த்த யாத்திரையாகச் சென்றபோது, ஏன் அப்படி சைவமடாதிபதிகள் தமது வெறுப்பைக் காட்டினர், சனாதன நம்பிக்கைக் கொண்டவர்களுக்குள் அத்தகைய போட்டி (Intra-religious rivalry) முதலியன ஏன் நிலவின என்று தெரியவில்லை. மேலும் அவர்களைத் தாக்குவது, விரட்டுவது மற்றும் தொடர்ந்து தொந்தரவு செய்தல், இம்சித்தல் (persecution) போன்றவை நடந்துள்ளன என்பது, அதைவிட திகைப்படையும் செயல்களாகும். வேதக் கொள்கைகள் கொண்டவர்கள் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆதிசங்கரர் முதல், பௌத்தர்கள் எப்பொழுதும் வாதங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜைன-பௌத்த வாத-விவாதங்கள் தண்டனைகளில் முடிந்துள்ளன[1]. ஆனால், அவற்றையும் சைவர்கள் செய்தார்கள் என்று இப்பொழுது 21ம் நூற்றாண்டில், மாற்றி திரிபு விளக்கம் அளிக்கப் படுகிறது.

Simhagiri caturmukha Linga four sides, Karnataka

ராமானுஜர் மற்றும் மத்வாச்சாரியார் தாக்குதல்களுக்கு (persecution) உட்பட்டது:   ஒரு சோழ அரசன் தாக்குதல்களால், தப்பித்து ராமானுஜர் கர்நாடகாவிற்கு செல்ல நேர்ந்தது. அதே போல, மத்வாச்சாரியார் கேரளாவுக்குச் சென்றபோது, சிருங்கேரி மடத்தினரால் தாக்குதலுக்கு உட்பட்டார். பிறகு, அவரது நூலகத்தில் இருந்த புத்தகங்கள் / ஓலைச்சுவடிகள் சிருங்கேரி மடத்தினரால் தூக்கிச் செல்லப் பட்டன. இவையெல்லாம், எந்த ஆராய்ச்சியாளராலும் விவாதிக்கப் படுவதில்லை. ஒருவேளை சைவர், வைணவரைத் தாக்கியதால், சொல்லவேண்டாம் என்று மறைத்தனர் போலும். ஆனால், மத்வர் போன்ற சமரச-ஒற்றுமை உண்டாக்கும் மதகுருக்கள், மடாதிபதிகள், தத்துவவாதிகள் தாக்கப் பட்டது, வினோதமாக உள்ளது. அது, ஜைன-பௌத்தர்களின் முறைப் போன்றுள்ளது. அதாவது, சைவ-வைணவ மதங்களில் சேர்ந்த  ஜைன-பௌத்தர்களின் பிரிப்பு சூழ்ச்சிகள் தொடர்ந்தன என்றாகிறது. சித்தாந்தம், சித்தாந்த மரபு, சித்தாந்த  மரபு கண்டனம், சித்தாந்த  மரபு கண்டன-கண்டனம், சித்தாந்த  மரபு கண்டன-கண்டன-கண்டனம், போன்ற நூல்கள் எல்லாம் வெளி வந்த காலம். ஆனால், மத்வாச்சாரியாரோ, “சர்வ தர்ம சங்கிரஹ” போன்ற நூலை எழுதி, எல்லா சனாதன பிரிவுகளும் ஒன்றாக வர பாடுபட்டார்.

Sri Vijiyendra Tirth and Raghavendra, guru and shishya

சைவவைணவ ஒற்றுமைக்கு பாடுபட்டது: மத்வ சம்பிரதாயத்து, மடாதிபதிகள் குறிப்பாக, சைவ-வைணவ வேறுபாடுகளைப் போக்கப் பாடுபட்டனர். வித்தியாசமில்லாமல், கும்பகோணத்தில் இருந்த கோவில்களை நிர்வகித்து வந்தனர். ஜைன-பௌத்த மதத்தவர் சைவ-வைணவ மதங்களில் சேர்ந்த போது, அவர்களில் இருந்து புல்லுருவிகள் மோதல்களை உருவாக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர். வீரசைவர் போன்றவரும், ஜைனர்களை கட்டுப்படுத்தினாலும், தீவிரமான கொள்கைகளினால், வைணவர்களை எதிர்த்து வந்தனர். “ஶ்ரீ மத்வ விஜயம்”, “ராகவேந்திர விஜயம்” போன்ற நூல்களே, அத்தகைய நிலையை எடுத்துக் காட்டுகின்றன[2]. அந்நிலை, கர்நாடகத்தில் இன்றும் தொடர்கிறது[3]. கடவுள் எல்லோரியத்திலும் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதை விட, கடவுள் வேறு, மனிதன் வேறு என்று எடுத்துக் காட்டி, ஏன் மனிதர்கள் அவ்வாறு பிரிந்து கிடக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டி, நற்சிந்தனைகளால், நற்செய்கைகளால் ஒன்று பட பாடுபட்டனர். அவ்விதத்தில் தான், ஶ்ரீராகவேந்திரர் போன்றோர், மாநில எல்லைகளையும் கடந்து, தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

Sri Raghavendrar, picture, Mantalaya

மத்வ சம்பிரதாயம், மத்வர்களின் நிலை: ஶ்ரீமத் மத்வாச்சாரியாரைப் பின்பற்றுகிறவர்கள், மத்வர்கள் எனப்படுகிறார்கள். பொதுவாக கன்னடம் பேசுபவர்கள் தான் மத்வர்கள் போன்ற கருத்துகள் தவறானதாகும். ஏனெனில், ராகவேந்திரர் புவனகிரியில் பிறந்தவர். விஜியேந்திர தீர்த்தர் குமகோண மடத்தில் இருந்தவர். மராத்தி, தெலுங்கு, கன்னடம் என்று அந்தந்த மாநிலங்களில் பேசுகிறார்கள். இப்பொழுது தமிழ் பேசுபவர்களும் இருக்கிறார்கள்[4]. இக்கால கட்டத்தில் மத்வர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:

Sri Purandaradasa , Sri Kankadasa, Sri Vijiyendra Tirth

  1. ஒரு மத்வன், தான் எப்படி நல்ல மத்வனாக இருக்கவேண்டும், முழு மத்வனாக மாற வேண்டும் என்று சிந்தித்து, முயன்று வாழ்கிறான்.
  1. மத்வ குடும்பமே அவ்வாறிருக்க முயல்கிறது. குறிப்பாக பெண்கள் மறக்காமல், நாட்களை ஞாபகம் வைத்துக் கொள்வது, செய்ய வேண்டியதை செய்வது முதலியவற்றைக் கடைபிடித்து வருகிறார்கள்.
  1. முடிந்த அளவில் பூஜை-புனஸ்காரங்கள், சடங்குகள்-கிரியைகள், விழாக்கள்-கொண்டாட்டங்கள் முதலியவற்றை செய்து வருகிறான்.
  1. ஏழை மற்றும் மத்திய வர்க்க கீழ்தட்டு மத்வர்களால் ஆயிரம், பத்தாயிரம் என்றெல்லாம் வரும் போது, செய்யமுடியாமல் தவிக்கிறார்கள், வருந்துகிறார்கள்.
  1. வீட்டில் தாசர்களின் பாடல்களைப் பாடி அல்லது கேட்டுக் கொண்டிருப்பர். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பர்.
  1. குழந்தைகள், சிறியவர்கள் அவ்வாறான சூழ்நிலைகளில் வளரும் போது, தானாகவே, அவற்றில் ஈடுபடுகின்றன, ஈடுபடுத்தப் படுகின்றன.
  1. ஏழையோ-பணக்காரனோ, குடிசையோ-பெரிய வீடோ, ஒரு மத்வர் வீட்டில், மத்வாச்சாரியார் படம் இல்லாமல் இருக்காது.
  1. மத்வர்கள் யாரும் தங்களது நம்பிக்கைகளை, சம்பிரதாயங்களை அடுத்தவர் மீது திணிப்பதில்லை.
  1. தங்களை, இந்து என்று சொல்லிக்கொள்ள, இருக்க என்றும் அவன் தயங்குவதில்லை. தினம்-தினம் அவன் “சங்கல்பம்” சொல்கிறான்[5].
  1. இக்கால அயல்நாட்டு மோகங்கள், மேல் படிப்புகள், வேலைகள், பணம் அதிகரிப்பு முதலியவை அவர்களை பாதிக்கின்றன. சில பிறழ்சிகள் ஏற்படுகின்றன[6]. அவற்றை அவர்கள் நிகழா வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

04-07-2020

Madhwacharya attitude towards Siva

[1] 788ல் அகாலங்க என்ற ஜைனர், தோற்றுபோன, பௌத்தர்க்களை கழுவில் ஏற்றாமல், எண்ணை அறைக்கும் எந்திரங்களில் போடாமல், இலங்கைக்கு நாடு கடத்தினார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

[2] G. B. Joshi (Ed. And trans), Narasimhacharya’s Raghavendra Vijaya,  Shri Raghavendra Swami Brindavan office, Mantralaya, 1968,

[3]  லிங்காயத்துகள் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள். தமிழகத்திலும், இப்பொழுது சில கோஷ்டிகள் அத்தகைய முழக்கத்தை வைத்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. ஆனால், கர்நாடகாவில் கனிசமான மக்கட்தொகை, மடங்கள், அரசியல் ஆதரவு எல்லாமே இருக்கின்றன.

[4] மொழியை வைத்து, நம்பிக்கையாளர்களைப் பிரிக்க முடியாது. இக்காலத்தில், மொழிபெயர்த்து படிக்கிறார்கள். தேவைப்படும் போது, கற்றுக் கொள்கிறார்கள்.

[5]  “சங்கல்பம்” என்பதில், சொல்லுகின்ற இடம் (பூகோள ரீதியில்), நேரம், காலம், ஆண்டு, ருது, வருடம், கல்பம் (வானசாஸ்திர ரீதியில்) எல்லாமே வரும்.

[6]  கடல் கடக்கலாமா போன்ற விவாதங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறகு, கர்நாடகாவிலிருந்து கௌன்டின்ய பிராமணர், எப்படி, சுவர்ணதேசம், ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் செல்லமுடியும் என்பதை யோசிக்க வேண்டும். தமக்குப் போட்டியாக, பிராமணர்கள் வந்துவிடக் கூடாது என்று பௌத்தர்கள் தான் அத்தகைய தடைகளை விதித்தார்கள்.

Sri Appaiya Dikhshitar, Sri Vijiyendra Tirth- good friends

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்-ராகவேந்திரர் போன்றோர் சைவ-வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [2]

ஜூலை 5, 2020

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்ராகவேந்திரர் போன்றோர் சைவவைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [2]

Sri Vijayendra Brindavan, Kumbokonam-closer view

விஜியேந்திர தீர்த்தர் காலம்: விட்டலாச்சாரியார் என்ற பெயர் இருந்து, விஷ்ணு தீர்த்தர் என்று மாறி, விஜயீந்திரர் என்றாகியது. இள வயதிலேயே கற்க வேண்டிய நூல்களை எல்லாம் சிறப்பாக கற்றுணர்ந்தார். அத்திறமையினால் 64-கலைகளையும் கற்று சிறந்து விளங்கினார் என்று விவரிக்கப் படுகிறது[1]. 1530-ஆம் ஆண்டு வாக்கில் விஷ்ணு தீர்த்தருக்கு ‘ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர்’ என்கிற தீட்சா நாமம் வழங்கி, தான் அமர்ந்த பீடத்தில் கோலாகலமாக அமர்த்தினார் சுரேந்திரர். கும்பகோணத்தில் இருந்த இவரை, தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன் (1532-1560) ஆதரித்தான். அப்பைய்ய தீக்ஷதரின் (1520-1593) நெருங்கிய நண்பர். வியாசராய மடத்துடன் தொடர்புடைய விபூதேந்திர மடத்தலைவராகவும் இருந்தார்[2]. ‘ஸ்ரீராகவேந்திர மடம்’ என்று தற்போது அறியபடும் இந்த மத்வ மடத்தின் / மத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை இருந்தவர் ஸ்ரீவிஜயீந்திரர்.  1614-ல் உயிர் நீத்த போது, காவிரிக் கரை ஓரம் பிருந்தாவனத்தில் உறங்கினார். ஸ்ரீராகவேந்திரர் தனது காலத்தில் இங்கு அமர்ந்துதான் கல்வி கற்றார். துவைதத்தின் முக்கியத்துவம் மேலே எடுத்துக் காட்டப் பட்டது.

Sri Vijayendra Brindsvan, Kumbokonam

கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் மடம்: கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் ஜூலை 7ம் தேதி 2010 அன்று  தொடங்குகியது[3]. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகளின் மடம் படித்துறைச் சந்திற்கு அடுத்தபடியாகஅமைந்துள்ளது[4]. மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட வேதாந்த மதமான த்வைத மத குருமார்களில் ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுணர்ந்தவருமான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள் (c.1514-1595), கோவில் நகரம் பாஸ்கர சேத்திரம் எனப்படும் காவேரி நதிக்கரை ஓரத்தில் பிருந்தாவனம் கொண்டுள்ளார்[5]. மடத்தின் நடுவில் விஜேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. மந்த்ராலயம் என்னுமிடத்தில் ராகவேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் காணப்படுகிறது போலவே, இங்கும் இதே வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மடத்தில் மத்வாச்சாரியார், லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு வரிசையாக தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. மிருத்திகா பிருந்தாவன மடம் என்று சொல்லப்படுகின்ற இந்த மடத்தில் ராகவேந்திர சுவாமிகள் தங்கி, குருவிடம் வேதாப்யாசம் பெற்ற இடமாகும். அவர் அருள்பாலித்துவரும் ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா (புண்ணிய மண்) பிருந்தாவனத்தின் கும்பாபிஷேம் சூன் 12, 2015 அன்று நடைபெற்றது.

Sri Vijayendra Brindavan, Kumbokonam-entrance

விஜயீந்திர தீர்த்தர் அத்வைதத்தை நிலநிறுத்தியது: விஜயீந்திர தீர்த்தர் அப்பைய்ய தீக்ஷதர்[6] (1520–1593), எம்மெ / பெம்மான் பசவ[7], லிங்க ராஜேந்திரர் போன்றோரிடம், இறையியல்-தத்துவ தர்க்க-வாதங்களில் வென்றதால் புகழ் பெற்றார். இவையெல்லாம் “சித்தாந்த கண்டனம்,” போன்ற வகையில் சர்ச்சைகளுடன் இருந்ததால், பல நூல்கள் அழிக்கப் பட்டன இல்லை ஐரோப்பியர் எடுத்துச் சென்று ஆராய்ச்சி என்று “சைவ-வைணவ” பிரிப்பிற்கு உபயோகப் படுத்துவர். விஜயீந்திர தீர்த்தரின் 104 நூல்களில் 60 தான் இப்பொழுது உள்ளன. அதாவது 40ற்கும் மேற்பட்ட நூல்கள் காணவில்லை என்படுவது அதுதான் காரணம்[8]. அந்த ஓலைச்சுவடிகள் நஞ்சன்கூடு, மந்திராலயம் மற்றும் கும்பகோண மடங்களில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. மந்திராலயம் ராகவேந்திர சுவாமிகளின் (c.1595-1671) குருவாக திகழ்கிறார். வியாழன் தோறும் ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயத்தில் இருந்து இங்கு வந்து தனது பரமகுருவான விஜயீந்திர சுவாமிகளிடம் ஆசி வாங்கிச் செல்வதாக ஐதீகம்[9]. அதனால், வியாழன்று இங்கு பக்தர்கள் இரண்டு சுவாமிகளையும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதால் அதிகமாக வந்து செல்கின்றனர். இவ்வாறு சிறப்புகள் பெற்ற விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகளின் ஆராதன மகோத்சவ விழா பூர்வாராதனையுடன் தொடங்குகியது. நாளை 8ம் தேதி ஏகாதசியும், மிக முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் தேதி மத்ய ஆராதன வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

Sri Vijayendra Brindavan, Kumbokonam-Pada
400 ஆண்டுகள் கடந்ததால் ஆராதனைகள் விஷேசமாக நடப்பது (2010): ஜூலை பத்தாம் தேதி உத்தர ஆராதனை நடந்தது. இதை முன்னிட்டு பத்தாம் தேதி காலை ஏழு மணியளவில் விஜயீந்திர சுவாமிகளின் திருவுருவ சிலை பட்டணபிரவேசமாக வீதியுலா நடந்தது. அன்று மாலை ஆறு மணிக்கு மடத்தில் உள்ள கஷ்யப்பத் தீர்த்தகுளத்தில் தெப்ப உற்சவமும் நடந்தது. ஆராதனை விழாவில் பங்கேற்பதற்காக மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பீடாதிபதி ஆயிரத்து எட்டு சுயதீந்திர தீர்த்தசுவாமிகள் கும்பகோணத்துக்கு வருகை தந்து தினமும் காலை லஷ்மிநாராயணர், விஜயீந்திரர் மூலபிருந்தாவனம், ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம், மூலராமர்பூஜை ஆகியவைகளை சுவாமிகள் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகினார். ஆராதனை விழாவை முன்னிட்டு தினமும் அதிகாலை விசுவரூப தரிசனம், நிர்மால்ய தரிசனம், காலை அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள், வேதகோஷங்கள் முழுங்க தாஸரூப் பக்திப்பாடல்கள் பாடப்பெற்று அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

Vijiyendra thirth with Nayaka and Saivas

ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது (2010): தினமும் காலை, இரவு பிரபல வித்வான்களின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், புரந்தரதாசர் கீர்த்தனைகளை விஜயீந்திர பஜனை மண்டலியினர் பாடினர். மேலும், வேத வல்லுனர்களின் உபன்யாசங்களும் நடந்தன. தமிழகம், டில்லி, மும்பை, கர்நாடகா, ஆந்திரா உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர். ஆண்டுதோறும் ஆராதனை விழாவின்போது கும்பகோணம் பகுதியில் உள்ள வேத வல்லுனர்கள், மகாவித்வான்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்களுக்கும், சாதனையாளர்கள் ஆகியோர்களை கவுரவித்து சன்மானம் வழங்குவதுபோல் இவ்வாண்டும் அதேபோல் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் பாஸ்கர், செயலாளர் ராஜா. ராஜகோபாலச்சார், கூடுதல் செயலாளர் சுயமேந்திராச்சார் மற்றும் ஆனந்தராவ், உமர்ஜி.மாதவன், ரவி, ரமணி, குரு, குருபிரசாத் ஆச்சார், பத்மநாப ஆச்சார், விஜயேந்திரன், விஷ்ணுபாலாஜி மற்றும் மடத்து நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்தனர்.

© வேதபிரகாஷ்

04-07-2020

Sri Vijayendra Brindavan, Kumbokonam-arch

[1]  இதெல்லாம் ஜைன-பௌத்தர்களின் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அதற்கேற்றப் போலவே, அவரது, “அதிசயங்கள்” நிகழ்ச்சிகளும் உள்ளன.

[2]  நஜன், த்வைத ஆசார்யர்கள் வைபவம், பிரதிபா பிரசுரம், சென்னை, 1982, பக்கம் 35

[3] தினமணி, மிருத்திகா பிருந்தாவனத்துக்கு மகா கும்பாபிஷேகம், By கும்பகோணம், | Published on : 13th June 2015 03:39 AM.

[4]  https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2015/jun/13/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-1130703.html

[5] தினமலர், விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் ஆராதனை மகோத்சவம் கும்பகோணத்தில் கோலாகல துவக்கம், Added : ஜூலை 07, 2010 03:02.

[6] அப்பைய தீட்சிதர் வடஆர்க்காட்டிலே வேலூருக்கு அப்பால் திரிவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520இல் பிறந்தவர்.

[7]  வேலா. ராஜமாணிக்கம், பெம்மான் பசவர் (வரலாறும் நடைமுறைகளும்), சிவலிங்க நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1979.

பெம்மான் பசவர் என்று வேலா. ராஜமாணிக்கம் போன்றோர் குறிப்பிடுகின்றனர். உண்மையில் பெம்மான் என்றால், சிவனைக் குறிக்கும் சொல், ஞானசம்பந்தர் போன்றோர் தேவாரத்தில் உபயோகப் படுத்தியுள்ளனர். ஆனால், இக்கால திரிபு எழுத்தாளர்கள் அவ்வார்த்தையை பெருமான், கடவுள், பெரியோன், உயர்ந்தவன் என்று நீர்த்து இவ்வாறு உபயோகப் படுத்துகின்றனர். எப்படி “கர்த்தர்” (சிவபெருமான்) சொல்லை கிருத்துவர்கள் உபயோகப் படுத்துகிறார்களோ, அவ்வாறு உபயோகப் படுத்தப் படுகிறது.

[8] இதையெல்லாம் மறந்து, மறைத்து, ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் விட்டார்கள் என்றெல்லாம் கதைக் கட்டி, இன்றும் தமிழகத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி அயல்நாடுகளில் இன்றும் லட்சக் கணக்கான ஓலைச் சுவடிகள் உள்ளன என்பது நோக்கத் தக்கது. சமீபத்தில் கூட, வெளிநாட்டு இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள், ஓலைச்சுவடிகளை எடுத்துச் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப் பட்டதை கவனிக்கலாம்.

[9]  https://www.dinamalar.com/news_detail.asp?id=34233&Print=1

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்-ராகவேந்திரர் போன்றோர் சைவ-வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [1]

ஜூலை 5, 2020

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்ராகவேந்திரர் போன்றோர் சைவவைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [1]

90 years King Rama Raya treacherously beheaded by the Mohammedans on the battle field of Talikota in 1565.

இடைக்காலத்தில் தமிழகத்தில் இருந்த இக்கட்டான நிலை: சோழர்களின் மறைவுக்குப் பின்னர், பாண்டியர்களின் ஆட்சி-அதிகாரம் வலுவில்லாமல் போனதால், துலுக்கரின் படையெடுப்பு, தென்னிந்தியாவின் பக்கம் திரும்பியது:

  1. 1310-11களில், தமிழகம் துலுக்கரின் படையெடுப்பு, கோவில்கள் இடிப்பு, செல்வத்தை கொள்ளையெடித்தல் போன்றவற்றை மாலிகாபூரின் வரவிலிருந்து அறிந்து கொண்டனர்.
  2. வீரவல்லாளன் (1291-1348) தமிழகத்தைக் காக்க அந்நியரை எதிர்த்து வீரமரணம் எண்பதாவது வயதில் எய்திய மாபெரும் வீரன். கியாசுத்தீன், அவரைக் கொன்று, உடலில் வைக்கோல் அடைக்கப்பட்டு, மதுரை கோட்டையின் மதிற்சுவற்றின் சுவரிலிருந்து தொங்கவிடப்பட்டது.
  3. 1335-1378 வரை மதுரையில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. பல கோவில்கள் ஆக்கிரமிக்கப் பட்டன.

அதாவது வீரவல்லாளனை இன்றைக்கு “கன்னடக்காரன்” என்று தமிழ் சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஒதுக்கலாம், மறைக்கலாம், ஆனால், அவன் தான் துலுக்கரை, துணுங்கரை முறையாக எதிர்த்து 80 வயது வரை போராடியுள்ளார். அதேபோல விஜயநகர அரசர் ராமராயர் 1565ல் தலைக் கோட்டைப் போரில் வீழ்ந்தபோது வயது 90. உண்மையில் இவர்கள் தான் இது மதத்திற்காக முதுமையிலும் போராடி வீரமரணம் எய்திய வீரர்கள், தியாகிகள் ஆவார்கள்[1]. அந்நிலையில், கோவில் புனரமைப்பு, பாதுகாப்பு, போன்றவை மடகுருக்களுக்கு, மடாதிபதிகளுக்கு, நம்பிக்கையாளர்களுக்கு தலையான கடனாகியது, கடமையாகியது. இதில் விஜயநகர, நாயக்க மன்னர்கள் மிகப்பெரிய தொண்டினை ஆற்றியுள்ளனர். ஆனால், மதம் மாறிய ஜைன-பௌத்தர்களின் ஊடுருவல் சித்தாந்தங்கள், இந்துக்களைக் குழப்பியிருந்தது. தேவையில்லாத சைவ-வைணவ வாத-விவாதங்கள் மூலம் திரிபுகளை உண்டாக்கி, நம்பிக்கையாளர்களைப் பிரித்துக் கொண்டிருந்தன.

Ramanuja, Madhwa, Basava

மாற்று மதங்களின் தாக்கங்களில் துவைதம் முக்கியத்துவம் பெற்றது: ஒரு நிலையில் சிவன் பெரிய கடவுளா, விஷ்ணு பெரிய கடவுளா, என்ற நிலைக்கு வந்தது. மத்வாச்சாரியார் தென்னிந்திய விஜத்தின் போது, எப்படி அவர் தூஷிக்கப் பட்டார், நூல்கள் பறிமுதல் செய்யப் பட்டன போன்ற விவரங்கள் திகைப்படையச் செய்கின்றன[2]. சிருங்கேரி மடம் அதில் சம்பந்தப் பட்டது, அதற்கும் மேலான ஆச்சரியம் தான். அந்நிலையில் ராமானுஜர் (1017-1137)-மத்வர் (1238-1317 / 1199-1278) போன்றோரின் வாதங்கள் மக்களின் மீது தாக்கம் இருந்தது. பசவரும் (1105-1167) அதே காலத்தில், வீரசைவம் மூலம், ஜைனர்களின் தாக்கத்தை அடக்கினார். கர்நாடகாவில் ராமானுஜர்[3], பசவர் இருந்திருததால், சந்தித்தனரா என்று தெரியவில்லை. ராமானுஜர் 1078 முதல் 1090 வரை மேலுகோடாவில் இருந்தால், பசவர் தனது 27 முதல் 39 வரை வயதினில், நிச்சயம் பார்த்திருப்பார். அந்நிலையில் தான், இந்துக்களை ஒன்று படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தத்துவம் கூட மக்களை இணைக்க உபயோகப் படுத்த வேண்டும். அபாய காலத்தில் வீரத்துடன் எழுந்து போராடி காத்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களையும் காக்க வேண்டும், அந்நிலையில் கடவுள் எல்லோரிடத்திலும் இருக்கிறார், கடவுள் தான் வந்து கோவிலை இடிக்கிறார், விக்கிரங்களை உடைக்கிறார்,…..என்றெல்லாம் நினைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது[4]. அந்நிலையில் தான், அவன் வேறு, அதனால் தான் அவன் அவ்வாறு செய்கிறான், அதனால், அவனை எதிர்த்துப் போராட வேண்டும் என்று “அத்வைதம்” மற்றும் “விசிஸ்டா-துவைதம்” போதிக்க வேண்டிய அவசியம் உண்டானது.

Madhwacharya sculpture full

மத்வாச்சாரியார் காலம் (1238-1317 / 1199-1278)[5]: மத்வாச்சாரியார் உடுப்பியில் மடத்தை ஏற்படுத்தி, துவைத சித்தாந்தத்தைப் பரப்பினார்[6]. இவரது சீடர்களான – பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்ஷோப்ய தீர்த்தர், ஜெய தீர்த்தர், வித்யாதி தீர்த்தர் முதலியோர், பாரதத்தின் பல பகுதிகளில் துவைத சித்தாந்தத்தைப் பரப்பினர். உத்திராதி மடம், வியாசராய மரடம் மற்றும் சுசீந்திர மடம் என்றாகியபோது[7], விஜயீந்திர தீர்த்தர் (1514-1595), வியாசராயர் சீடர்களில் ஒருவர், மற்றவர் – புரந்தரதாசர் (1484-1564), கனகதாசர் (1509-1609), வாதிராஜர் (c.1480-1560).  இவர்கள் எல்லோரும், ஜாதி முதலியவற்றைப் பாராமல், பக்தி என்ற முறையில் கீர்த்தனைகளைப் பாடி, மக்களை இணைத்தனர். உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

Madhwacharya with Vyasa and others

மத்வாச்சாரியார், சைவத்தை அனுசரித்து, ஆதரித்துச் சென்றது: குறிப்பாக, மத்வாச்சாரியார், சிவனை உயர்வாக மதித்தார். சிவல்லி சைவம் பின்பற்றிய சமூகத்தில் பிறந்ததால், தனது சிறு வயதில் சிவலிங்கத்தை வணங்கி வந்தார். தன்னுடைய எழுத்துகளில், எங்குமே சிவனைப் பற்றி வெறுப்பு உண்டாக்கும்விதமான விவரங்கள் இல்லை[8]. கர்நாடகாவில் சிவன் கோவில்கள் அதிகம் ஏன்,  உடுப்பி மடம் வளாகத்திலேயே சிவன் கோவில்கள் உள்ளன. இதனால், விஷ்ணுலிங்கம், சிவலிங்கம் என்றும் உபயோகத்தில் இருந்தன[9]. ஆனால், அவை அப்படியே பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. சைவர் விஷ்ணுமற்றும் பிரம்மாவை லிங்கத்தின் அடிமுடி தேடிச் சொல்லும் கதைகளைப் புனைந்து, சைவ-வைணவர்களைப் பிரிக்கும் காலத்தில், இவர் இத்தகைய ஒற்றுமையை உணர்த்தினார். தெற்கு நோக்கி, தக்ஷிணாமூர்த்திக்கு பதிலாக, லிங்கோத்பவர் வைக்கும் முறையும் சைவ-வைணவர்களைப் பிரிக்கும் திட்டம் தான். பிறகு லிங்கத்திலேயே பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் பாகங்கள் உள்ளன என்று விளக்கம் அளிக்கப் பட்டது. இதுதான், மத்வர், மத்வ சம்பிரதாயம் முதலியவற்றின் சிறப்பு அம்சம். அதனால் தான், விஜியேந்திரர் காலத்தில், கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்கள் எல்லாம் சிறப்பாக நிர்வகிக்கப் பட்டன. மத்வருடைய அணுகுமுறையை, ஐரோப்பியர், கிருத்துவ மிஷினரிகள் மற்றும் சூபி போர்வையில், சிலர், இவர் கிருத்துவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் ஈர்க்கப் பட்டார் என்றெல்லாம் எழுதினர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று எடுத்துக் காட்டப் பட்டது. அவர்களுக்கு அதே வேலை என்பதால், அத்தகையவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

04-07-2020

chandramouleeswarar temple, udupi mutt

[1] இவர்களைப் பற்றியும் முறையாக, தமிழ் சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதுவதில்லை. ஒருவேளை “செக்யூலரிஸமாக” இருந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

[2] C. N. Krishnamurthy Iyer and S. Subba Rao, Sri Madhwacharya – a Skketch of his life and times and his philosophical system, G. A. Natesan & Co., Madtas, Chapter-V, pp.43-51.

[3] இராமானுசர் சோழ மன்னனின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கர்நாடக மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்றழைக்கப்படும் திருநாராயணபுரம் என்ற ஊரில் அமைந்த திருநாராயணன் கோவிலுக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் தங்கியிருந்தார்.

[4]  சூபித்துவம் போர்வையில், நிறைய சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முதலியோர் அத்தகைய திரிபு விளக்கங்களை அளித்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால், கோவில்களில் தங்கம் இருந்ததால் தான் கொள்ளை அடித்தார்கள் என்று ரோமிலா தாபர் போன்றோர் திரித்து எழுதியுள்ளனர். உருவவழிபாடு கூடாது என்றாதால் தான் அவர்கள், விக்கிரங்களை எல்லாம் உடைத்தச்ர்கள் என்று முஸ்லிம்களில் விளக்கமும் உண்டு. அதாவது உண்மையினை மறாஇக்க, இவ்வாறு ஒன்று சேர்ந்து கொண்டுள்ளனர் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

[5] C.M. Padmanabha Char, The Life And Teachings of Sri Madhvacharyar, The Progressive Press, Madras, 1909. About the date, see. Chapter-III, pp.25-33.

[6] Alur Venkat Rao, A Hand Book Of Madhwacharya Poorna Brahma Phisolophy, Navajeevan Grantha Bhandar, Sadankeri, Dharwar, 1954.

[7] C. N. Krishnamurthy Iyer and S. Subba Rao, Sri Madhwacharya – a Sketch of his life and times and his philosophical system, G. A. Natesan & Co., Madtas, p.40.

[8] Sri Madhva’s attitude towards Siva is very differerent. He found that Siva was the popular deity of the country He was probably born a Shivalli Saivite himself. He found South Canara in particular full of temples where the Lingam was the idol of worship, and Bootastans, invariable adjuncts thereof. In the Ananteswara, Chandramouleswara, Kanana Devata, Veda Bandeswara temples, where he often worshipped in his youth, it is the Lingam that forms the image, though some of these Lingams are considered to be representations of Vishnu and not of Siva. In Sri Madhva’s system, Siva occupies one of the highest ranks, he being placed next to the Four-faced Brahma, Vayu, and their consorts. Madhwas freely visit the temple of Siva, and worship this deity. There is not the least trace of rancour m any references or allusions to this deity in Madhva writings.

C.M. Padmanabha Char, The Life And Teachings of Sri Madhvacharyar, The Progressive Press, Madras, 1909, p.158.

[9] C.M. Padmanabha Char, opt.cit, p.12.