அன்னவாசல் அருகே வயலோகம் அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதா, மீட்டெடுக்கப் பட்டதா, உழவாரப் பணி நடந்ததா?

ஒக்ரோபர் 10, 2017

அன்னவாசல் அருகே வயலோகம் அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதா, மீட்டெடுக்கப் பட்டதா, உழவாரப் பணி நடந்ததா?

Vayalogam Sivan temple-google

உழவாரப்பணி நடந்த கோவில் செய்தி வெளியானதும், கண்டு பிடிப்பு போல நடக்கும் விவாதமும்: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகத்தில் மிகவும் சிறப்பு பெற்ற சிவன்கோயில் உள்ளது. மிகவும் பழைமைவாய்ந்த இக்கோயிலின் உள்புறம் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் முள்புதர் மண்டிக்கிடந்தது. இதனால், கோயிலுக்குள் யாரும் செல்லமுடியாத நிலை இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த வரலாற்று ஆர்வலரும், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவருமான கோமகன் தலைமையில், வீரசோழன் அணுக்கன் படையைச் சேர்ந்த சசிதரன் உள்ளிட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் தன்னார்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் வயலோகம் வந்தனர்[1]. அவர்கள், இந்தக் கோயிலில் கடந்த செப். 29 ஆம் தேதி தொடங்கி, அக். 1 ஆம் தேதி வரை 3 நாள்கள் உழவாரப் பணியை மேற்கொண்டனர்[2]. Vayalogam temple cleaning- Dinamani-03-10-2017இதையறிந்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் ராஜேந்திரன், மணிகண்டன் உள்ளிட்டோர் வயலோகம் சென்று சிவன்கோயிலில் உள்ள கல்வெட்டு மற்றும் கோயில் குறித்த தகவல்களை தன்னார்வலர்களுக்கு விளக்கினர்.

Vayalogam Sivan temple-google-close view

1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில், மீட்டெடுக்கப் பட்டுள்ளது: தினமலர், தனக்கேயுரிய பாணியில் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில், மீட்டெடுக்கப் பட்டுள்ளது[3]. சமூகவலைதள உதவிபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை மீட்டெடுத்து, சீரமைக்க, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. Vayalogam temple discovered - Dinamalar-03-10-2017புதுக்கோட்டை மாவட்ட சமூக வலைதள நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, செப்., 29ல், வயலோகம் கிராமத்தில், தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள், இளைஞர்கள், 60 பேர் ஒன்று திரண்டனர்[4]. அவர்கள், சிதைந்த கோவிலை சுற்றி, மண்டிக் கிடந்த புதர்களை சுத்தம் செய்தனர்[5]. மூன்று நாட்கள்தொடர்ந்து, மூன்று நாட்கள் மண் மேடு, செடி கொடிகளை அகற்றி, சுத்தம் செய்தனர். கோவிலை சுற்றி மண்டிக்கிடந்த முட்புதர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினார்கள்[6].

Vayalogam temple cleaning-Nakkeeran-03-10-2017.1

1000 வருடக்களாக இருந்து வந்த கோவிலை கண்டு பிடித்தது என்பது விசித்திரமே: அங்கிருந்த கல்வெட்டுகள் மூலம், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதும், மூன்றாம் குலோத்துங்கன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய மன்னர்கள் காலத்தில், திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது[7]. கோபுரம், மடப்பள்ளி என, அனைத்தும் சிதிலமடைந்துள்ளன. அங்கிருந்த இரண்டு சிவலிங்கம், இரண்டு அம்மன் சிலைகள், ஆறு முகங்கள் கொண்ட முருகன் சிலை, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், நந்தி சிலைகள் சேதமடையும் நிலையில் இருப்பதால், அவற்றை தனியே எடுத்து பாதுகாத்து வருவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.Vayalogam temple discovered - Dinamalar-03-10-2017.anotherநடவடிக்கை வேண்டும்’கோவிலை புனரமைக்கவும், அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற் சிலைகளை பாதுகாக்கவும், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வ பணியில் ஈடுபட்டவர்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினரும், வயலோகம் மற்றும் வயலோகம் சுற்றுவட்டாரப் பகுதியினை சேர்ந்த பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்[8].

Vayalogam temple cleaning-Nakkeeran-03-10-2017.2

அன்னவாசல் அருகே விசலூரில் CE 10- ம் நூற்றாண்டை சேந்த கற்சிற்பங்கள் கண்டுபிடிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே விசலூரில் CE 10- ம் நூற்றாண்டை சேந்த கற்சிற்பங்கள் கண்டுபிடிப்பு. அன்னவாசல்,நவ.15- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த விசலூரில் கிபி 10 – ம் நூற்றாண்டை சேர்ந்த 10 – கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை எடுக்க வருவாய்துறை மற்றும் அருங்காட்சியத்துறையினர் சென்றதால் சிலைகளைஎடுக்க கூடாது என ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விசலூர் பெரிய குளத்தில் கருவைகள்சூழ்ந்த முற்புதருக்குள் கற்சிற்பங்கள் இருப்பதாகவும் இதை அருங்காட்சிய காப்பாச்சியரிடம் ஒப்படைக்கும் படியும் இலுப்பூர் வட்டாச்சியருக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பரிந்துரை செய்தார் இதனை அடுத்து விசலூரில் உள்ள சம்பவ இடத்திற்கு இலுப்பூர் வட்டாச்சியர் தமிழ்மணி மற்றும் புதுக்கோட்டை அருங்காட்சிய காப்பாச்சியர் பக்கிரிசாமி ஆகியோர் கொண்ட குழுக்கள் சென்றன மேலும் அங்கிருந்த கிபி 10 – ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிற்பங்களை எடுக்க முயன்றனர் ஆனால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி எங்கள் ஊர் சாமி சிலைகளை எடுக்க கூடாது என எதிர்பு தெறிவித்தனர். இதனை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல்துறை ஆய்வாளர் செந்தில்மாறன் மற்றும் தாசில்தார் தமிழ்மணி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு கற்சிற்பங்களை எடுக்கும் பணி தொடங்கியது இதைகான சுற்றுவாட்டார பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டது.

Annavasal, Visalur, sculptures found - Dinathanthi-1

கிடைத்த 10- சிலைகளின் விபரங்கள்[9] ; 1 – சேஷ்டா தேவி – அமர்ந்த நிலையிலும் 2 – தெட்சிணா மூர்த்தி – அமர்ந்த நிலையிலும் 3 – பிரம்மா – அமர்ந்த நிலையிலும் 4 – நரசிம்மா – அமர்ந்த நிலையிலும் 5 – துவார பாலகர் – அமர்ந்த நிலையிலும் 6 – சாண்டிகேஸ்வர – அமர்ந்த நிலையிலும் 7 – இந்திரன் – அமர்ந்த நிலையிலும் 8 – நந்தி சிலைகள் 3. என 10 – கற்சிற்பங்கள் உள்ளே இருந்து எடுக்கப்பட்டன பின்பு இவை அனைத்தும் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அருங்காட்சியத்திற்கு கொண்டுசென்று மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேற்கண்ட கற்சிற்பங்கள் காணப்படும் கலை நுணுக்கங்களையும் வேலைபாடுகளையும் ஆராயும் போது இவைகள் கிபி – 10 ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் எனவும் இதை அருங்காட்சியத்தில் வைத்து காட்சிபடுத்தினால் பார்வையாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர் மேலும் 10 – கற்சிற்பங்களையும் இலுப்பூர் வட்டாச்சியர் தமிழ்மணி புதுக்கோட்டை அருங்காட்சிய காப்பாச்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்தார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் காவல்துறை ஆய்வாளர் செந்தில்மாறன் தலைமையில் போலீசார் செய்துருந்தனர். ஜேஸ்டா தேவி மற்ற உக்கிரதேவிகளின் உருவங்களை அப்புறப்படுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மறுபடியும் உபயோகிக்கக் கூடாது என்று புதைப்பதும் வழக்கமாக இருந்தது. ஆகையால் இவற்றைக் கண்டுபிடிப்பது என்பது ஒன்றும் இல்லை.

© வேதபிரகாஷ்

30-09-2017

Annavasal, Visalur, sculptures found - Dinathanthi-2

[1] தினமணி, வயலோகம் சிவன் கோயிலில் உழவாரப் பணி நிறைவு,  Published on : 03rd October 2017 09:50 AM

[2]  http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/oct/03/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2783635.html

 

[3] தினமலர், 1,000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் மீட்டெடுப்பு, பதிவு செய்த நாள். அக்டோபர்.2, 2017, 21.26.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1867161

[4] நக்கீரன், சிவன் கோவிலில் தன்னார்வலர்களின் உழவாரப்பணி: பொதுமக்கள் பாராட்டு, Monday, 02 Oct, 2.08 pm- இரா.பகத்சிங்.

[5] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=199623

[6] நக்கீரன், சிவன் கோவிலில் தன்னார்வலர்களின் உழவாரப்பணி: பொதுமக்கள் பாராட்டு, Monday, 02 Oct, 2.08 pm- இரா.பகத்சிங்

[7] புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தென்னிந்திய சாசனங்களில் இவை பதிவாகியுள்ளன. அதாவது, கோவில் இருப்பது தெரிந்த விசயம் தான்.

[8] https://m.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/sivan+kovilil+tannarvalarkalin+uzhavarappani+bothumakkal+barattu-newsid-74169188

[9] https://peravuranitown.blogspot.in/2016/11/151103.html

Advertisements

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1930-2016) – இந்திய தேசியத்தின் இசைசின்னமாக, ஆழிசேர் இசையாக, ஊழிவரை ஒலியோடு வாழ்பவர்!

நவம்பர் 24, 2016

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1930-2016) – இந்திய தேசியத்தின் இசைசின்னமாக, ஆழிசேர் இசையாக, ஊழிவரை ஒலியோடு வாழ்பவர்!

dr-m-balamuralikrishna-with-r-venkatraman-and-othersபல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்தவர்: சந்தியராகா (கன்னடம்), சங்கரச்சாரியா (சமஸ்கிருதம்), மாத்வாச்சாரியா (கன்னடம்), ராமானுஜாச்சாரிய (தமிழ்), தலைவனுக்கோர் தலைவி (தமிழ்) போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார்[1]. கே. வி. மகாதேவன், இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல தமிழ் படங்களின் இசையமைப்பாளர்களின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல தென்னிந்தியாவில் பிரபலமாக திகழ்ந்த பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண் [1991][2], பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதையும், இரண்டு முறை தேசிய விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே, சங்கீத கலாநிதி (1975), சங்கீத கலாசிகாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்[3]. இருப்பினும் அரசால், இவர் முறைப்படி கௌரவிக்கப்படவில்லை என்று கர்நாடக வித்வான்கள் மத்தியில் கருத்துள்ளது.

s-ranganathan-pattabhiramaiyah-m-balamuralikrishna-papanasam-sivan-and-r-yagnaraman-behind-pattabhiramaiyahகர்நாடக இசையில்லை, இந்திய இசைதான்: கர்நாடக / கருநாடக இசை என்றாலே பொறுமும், உருமும், பம்மும் தமிழ்-பிரிவினைவாதிகள், திராவிடத்துவவாதிகள், இந்திய-விரோதிகள் உள்ளனர். உண்மையில், கர்நாடக சங்கீதம் மற்றும் மைசூர் உணவு வகையறாக்கள் [மைசூர் பாகு, போண்டா, ரசம் முதலியன] கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் அரசில் ஆதிக்கத்தில் இருந்தபோது, ஏற்பட்டநிலையாகும். அரசை ஆண்டவர்கள், தமிழர், தெலுங்கர், கன்னடிகர் என்றுதான் இருந்தனர். அவர்கள் இலக்கியம், கலை, உணவு போன்ற எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். அவற்றின் தரங்களை உயர்த்தி, மதிப்பீட்டுடன், சிறந்தவர்களை உருவாக்கினர். ஆனால், பாடல்கள் எல்லா மொழிகளிலும் இயற்றப்பட்டன, பாடபட்டன. அடிப்படை விசயங்கள் ஒன்றுதான். இதனால்தான், இசை, நடனம் முதலியவை எல்லோரோலும் விரும்ப, ரசிக்க, ஆராதிக்க, போற்ற முடிந்தது. பாரதி சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்றெல்லாம் பாடியது அத்தகைய ஒருமைப்பாட்டை, ஒற்றுமையைச் சுட்டிக்காட்டத்தான். மொழிவாரி மாகாணங்கள் செயற்கையாக இந்தியர்களை பிரிக்க ஆரம்பித்தது. ஆனால், மறுபடியும் இசை மூலம் அவர்கள் ஒன்றுபட ஆரம்பித்தனர். அங்கு ஜதியம் முதலியவை பார்க்கப்படவில்லை. பாலமுரளிகிருஷ்ண போன்ற கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் பாட முடிந்தது, விருதுகளையும் பெறமுடிந்தது.

dr-m-balamuralikrishna-with-jayalalita-cmகர்நாடக இசையில்லை, இந்திய இசைதான்: கர்நாடக / கருநாடக இசை என்றாலே பொறுமும், உருமும், பம்மும் தமிழ்-பிரிவினைவாதிகள், திராவிடத்துவவாதிகள், இந்திய-விரோதிகள் உள்ளனர். உண்மையில், கர்நாடக சங்கீதம் மற்றும் மைசூர் உணவு வகையறாக்கள் [மைசூர் பாகு, போண்டா, ரசம் முதலியன] கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் அரசில் ஆதிக்கத்தில் இருந்தபோது, ஏற்பட்டநிலையாகும். அரசை ஆண்டவர்கள், தமிழர், தெலுங்கர், கன்னடிகர் என்றுதான் இருந்தனர். அவர்கள் இலக்கியம், கலை, உணவு போன்ற எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். அவற்றின் தரங்களை உயர்த்தி, மதிப்பீட்டுடன், சிறந்தவர்களை உருவாக்கினர். ஆனால், பாடல்கள் எல்லா மொழிகளிலும் இயற்றப்பட்டன, பாடபட்டன. அடிப்படை விசயங்கள் ஒன்றுதான். இதனால்தான், இசை, நடனம் முதலியவை எல்லோரோலும் விரும்ப, ரசிக்க, ஆராதிக்க, போற்ற முடிந்தது. பாரதி சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்றெல்லாம் பாடியது அத்தகைய ஒருமைப்பாட்டை, ஒற்றுமையைச் சுட்டிக்காட்டத்தான். மொழிவாரி மாகாணங்கள் செயற்கையாக இந்தியர்களை பிரிக்க ஆரம்பித்தது. ஆனால், மறுபடியும் இசை மூலம் அவர்கள் ஒன்றுபட ஆரம்பித்தனர். அங்கு ஜதியம் முதலியவை பார்க்கப்படவில்லை. பாலமுரளிகிருஷ்ண போன்ற கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் பாட முடிந்தது, விருதுகளையும் பெறமுடிந்தது.

dr-m-balamuralikrishna-with-bhimsen-joshiபாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ள விருதுகள்: இப்பொழுதைய நிலைப்போலில்லாமல், இவரைத் தேடி விருதுகள் வந்தன. இப்பொழுதெல்லாம், அரசியல், அந்தஸ்து, மற்ற பின்னணி, பரிந்துரைக்க ஆதிக்கத்தில் இருக்கும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் என்ற முறையில் தான் விருதுகள் வழங்கப்படுகின்றன.

 1. பத்மஶ்ரீ(1971).
 2. சங்கீத நாடக அகாதமி விருது, 1975.
 3. சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1976; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு.
 4. சங்கீத கலாநிதி விருது, 1978; வழங்கியது:மியூசிக் அகாதெமி, சென்னை.
 5. சிறந்ததிரைப்பட இசை இயக்குனர், 1987; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு.
 6. சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1987; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு.
 7. பத்ம விபூஷண்(1991).
 8. சங்கீத கலாசிகாமணி விருது, 1991; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி.
 9. இசைப்பேரறிஞர் விருது, 2002.
 10. சங்கீத கலாசாரதி (2002).
 11. சிறந்தபாரம்பரிய இசைப் பாடகர், 2010; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு.
 12. யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய மகாத்மா காந்தி வெள்ளிப் பதக்கம்.
 13. செவாலியே விருது, வழங்கியது:பிரான்ஸ்

dr-m-balamuralikrishna-a-house-of-love-a-song அதிசய ராகம்.. ஆனந்த ராகம்என்ற பாடலை உண்டாக்கியவர் பாலமுரளி கிருஷ்ணா ஆனால் பாடியது ஜேசுதாஸ்: இசையில், இசை நுணுக்கங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், இவரைத்தான் அணுகுவது வழக்கமாக இருந்தது. சாதாரண இசைப்பிரியர்கள், சங்கீதம் கற்பவர்கள், இசை வல்லுனர்கள், பாடகர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இவரை அணுகி கேட்பர். கே.பாலசந்தர் அபூர்வராகங்கள் என்ற படம் எடுத்தபோது, பாடலில் இதுவரை இல்லாத ஒரு ராகம் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அவர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்ல, எம்.எஸ்.வி. தொடர்பு கொண்டது பாலமுரளி கிருஷ்ணாவை. சாதாரணமாக ஒரு ராகத்திற்கு ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும். இவர் நான்கு ஸ்வரங்களை மட்டுமே கொண்ட ‘மகதி’ ராகத்தை உருவாக்கினார். அது பாடலாகவும் பிரபலமானது.  ‘அதிசய ராகம்.. ஆனந்த ராகம்’ என்ற பாடல்தான் அது[4]. ஆனால், அதை இவர் பாடாமல், ஜேசுதாஸ் பாடியது வினோதமே.

dr-m-balamuralikrishna-with-others-mile-suru-mera-tumara-anotherபல அற்புத பாடல்களைப் பாடி, இசையில், நாதத்தில், ஒலியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்: தமிழில் ‛திருவிளையாடல்’ படத்தில் இவர் பாடிய ‛ஒரு நாள் போதுமா….’, ‛கவிக்குயில்’ படத்தில் ‛‛சின்ன கண்ணன் அழைக்கிறான்…’, ‛கலைக் கோயில்’ என்ற படத்தில், ‛‛தங்கம் ரதம் வந்தது வீதியிலே…”, ‛சாது மிரண்டால்’ படத்தில் ‛‛அருள்வாயே நீ அருள்வாயே…”, ‛சுபதினம்’ படத்தில் ‛‛புத்தம் புது மேனி…”, ‛கண்மலர்’ படத்தில் ‛‛ஓதுவார் உன் பெயர் ஓதுவார்…”, ‛உயர்ந்தவர்கள்’ படத்தில் ‛‛ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே…”, ‛நூல் வேலி’ படத்தில் ‛‛மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே….”, ‛திசைமாறிய பறவைகள்’ படத்தில் ‛‛அருட்ஜோதி தெய்வம்…”, ‛வடைமாலை’ படத்தில், ‛‛கேட்டேன் கண்ணனின் கீதோ உபதேசம்…”, ‛தெய்வத்திருமணங்கள்’ படத்தில் ‛‛தங்கம் வைரம் நவமணிகள்…”, ‛மகாசக்தி மாரியம்மன்’ படத்தில், ‛மகரந்தம் தான் ஊதும், சக்கரவர்த்தி மிருதங்கம் படத்தில், ‛‛கேட்க திகட்டாத கானம்…‛, ‛இசைப்பாடும் தென்றல்’ படத்தில் ‛‛ரகுவர நின்னோ…” போன்ற பாடல்கள் கேட்க கேட்க என்றும் திகட்டாதவை. பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் சென்னை, ஆர்கேவி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு பல கர்நாடக இசை பிரபலங்கள், திரையுலகினர்… என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியும், இரங்கலும் தெரிவித்து உள்ளனர்.

 

© வேதபிரகாஷ்

24-11-2016

ajoy-chakrabarty-and-m-balamuralikrishna-at-the-felicitation-pic-by-s-r-raghunathan

[1] தினமணி, கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு,  பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 05.57. பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 04.02.

[2] http://www.bbc.com/tamil/arts-and-culture-38062440

[3] http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2016/nov/23/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2603299.html

[4] http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/73172-the-music-world-mourns-on-dr-m-balamuralikrishnas-sudden-demise.art?artfrm=read_please

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1930-2016) – இசையுலகத்தின் சகலகலா வல்லவர் – குரலால் வாழ்பவர்!

நவம்பர் 24, 2016

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1930-2016) – இசையுலகத்தின் சகலகலா வல்லவர் – குரலால் வாழ்பவர்!

dr-m-balamuralikrishna-as-a-youth

சிறுவயதிலேயே பாட ஆரம்பித்த பாலமுரளி கிருஷ்ணா (1930-2016)[1]: பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (1930-2016), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் 22-11-2016 அன்று தனது 86 வயதில் காலமானார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் மகள்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அனைவருமே மருத்துவர்கள். இசையையே உயிர்மூச்சாக, வைத்து, மதித்து, போற்றி வாழ்ந்தவர். பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரான பாலமுரளி கிருஷ்ணா, ஆனால், படோபடம் இல்லாமல் அமைதியாக வாழ்ந்தவர். ஒன்றிணைந்த பாரதத்தின் மெட்ராஸ் பிரெசிடென்சியில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார். இசைக்குடும்பமத்தைச் சேர்ந்த பட்டாபி ராமைய்யா – சூரியகாந்தம் தம்பதியருக்கு 1930ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி பிறந்தவர். பால முரளியின் இயற்பெயர் முரளி கிருஷ்ணா. அப்பா-அம்மா இருவருமே இசை குடும்பத்தை சேர்ந்தவர்கள். தந்தை பட்டாபி ராமய்யா ஒரு இசை ஆசான் தாயார் சூரியகாந்தம் ஒரு வீணை கலைஞர்.

balamurali-krishna-hailing-from-thyagaraja-shishyaகர்நாடக இசை திரிமூர்த்திகளில் ஒருவரான, தியாகராஜரின் சிஷ்யப் பரம்பரையில் தோன்றியவர்: பாரம்பரியமிக்க இசை குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, சிறுவயது முதல் இசையில் ஆர்வம் கொண்ட பாலமுரளி கிருஷ்ணா, பாருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பவரிடம் முறைப்படி இசை பயின்றார். அதுமட்டுமல்லாது, பாலமுரளிகிருஷ்ணாவின் சங்கீதப் பாரம்பரியம் மிகச் சிறப்பானது. தியாகய்யரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் அவர். அந்தப் பரம்பரையில் நான்காவது தலைமுறைக்காரர்[2].  தியாகராஜரின் புகழ் பெற்ற சிஷ்யர்களில் ஒருவர் மானம்புசாவடி வெங்கடசுப்பையா. அவருடைய சிஷ்யர் சுசர்ல தக்ஷிணாமூர்த்தி சாஸ்திரி. அவருடைய சிஷ்யர் பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு. பாருபள்ளியின் சிஷ்யர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா[3]. இவ்வாறு கர்நாடக இசை திரிமூர்த்திகளில் ஒருவரான, தியாகராஜரின் சிஷ்யப் பரம்பரையில் தோன்றியவர் என்ற பெருமையும் கொண்டவர்.

balamurali-krishna-hailing-from-thyagaraja-shishya-at-young-ageஆறு வயதிலேயே கச்சேரியில் பன்முகமாக திகழ்ந்ததால் பாலமுரளி கிருஷ்ணா என்றழைக்கப்பட்டார்: தனது 6வது வயதிலிருந்து கச்சேரிகளில் பாட தொடங்கினார். 1939ல், 9 வயதில் வாய்பாட்டு இல்லாமல் வயலின், மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றார்[4]. செம்பை வைத்தியநாதன் அவர்கள் பாடல்கள் பாடும்போது, இவர் கஞ்சிரா வாசித்திருக்கிறார். வீணை, வயலின், புல்லாங்குழல் மற்றும் வேறு சில கருவிகளும் வாசிக்கத் தெரிந்தவர்[5].  ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன[6].  விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனையில் கலந்து கொண்டு, எட்டு வயதில் சிறப்பாகப் பாடியதால், முசுனூரி சூரியநாராயண பாகவதர் இவருக்கு பால என்ற பட்டத்தைக் கொடுத்தார். அதனால் தான் பாலமுரளி கிருஷ்ணா என்றழைக்கப்பட்டார். இவர் 15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன்படுத்தி கிருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார்.

balamurali-krishna-with-s-radhakrishnanபள்ளிப்படிப்பை விட்டாலும், இசையை விடாததால் புகழ் பெற்றார்: ஐந்தாவது படிக்கும் போதே, இவருக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால், ஆசிரியர்கள் இவரை, இசைப்பயிற்சி கொடுங்கள் என்றனர்[7]. இதனால், இசை ஆர்வம் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார்[8]. இருந்தாலும், இசையில் சிறந்து விளங்கினார். இதனால், இசையுலகம் அவரை கற்றவராகவே ஏற்றுக்கொண்டது. ஆமாம், வானொலியில் முதன்முதலில் இசை அரங்கேற்றம் நடத்தினார். அகில இந்திய வானொலியுடன் இணைந்து 60களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா தனது பக்திப் பாடல்களுக்காக அப்போது பிரபலமாக அறியப்பட்டார். முதலில் விஜயவாடா , பின்னர் ஹைதராபாத் வானொலி நிலையங்களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா, பின்னர் சென்னை அகில இந்திய வானொலியிலும் பணியாற்றி, சென்னையிலேயே குடி பெயர்ந்தார்[9]. வானொலியில் ‛பக்தி மஞ்சரி’ என்ற நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கி வந்தார். அரியக்குடி, செம்பை, மகாராஜபுரம், ஜி.என்.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணி பாடகர்களுக்கு வயலின் கலைஞராக பக்கவாத்தியம் வாசித்துள்ளார். தொடர்ந்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகள் நடத்தியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவர் பாடாத சபாக்களே இல்லை. 1967-ம் ஆண்டு ‛பக்த பிரகலாதா’ என்ற படத்தில் நாரதர் வேடத்திலும், சந்தினே செந்தின சிந்தூரம் (மலையாளம்) படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

balamurali-krishna-with-v-v-giriபுதிய ராகங்களைக் கண்டுப் பிடித்தவர்: கர்நாடக சங்கீதத்தில் எண்ணற்ற ராகங்கள் இருந்தாலும் அதன் மூல ராகம் என்று சொல்லப்படும் தாய் ராங்கள் 72 தான். இந்த 72 மேலகர்த்தா ராகங்களில் கிருத்திகள் இயற்றி சாதனை படைத்துள்ளார். கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் வாசிப்பது பல அபூர்வ ராகங்களில் பாடல்கள் இயக்கும் திறன், ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன் ஜூகல்பந்தி என்ற இசையில் பல்வேறு பரிமாணங்களில் வல்லவர். மேடைகச்சேரி, வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் பிரதிபலித்தவர். சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள், மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்றே சுவரங்கள்), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே, மோகன்காந்தி… இப்படி பல புதிய ராகங்களை உருவாக்கியவர். பி.ஜெயச்சந்திரன், கமல்ஹாசன், நடிகை வைஜெயந்தி மாலா, டி எம் சுந்தரம் (இசை ஆராய்ச்சியாளர்) உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரிடம் இசை பயின்றவர்கள். 1952ல் ஜனக ராக மஞ்சரி மற்றும் ராகாங்க ராவலி என்ற ஒன்பது இசைத் தொகுப்புகள், சங்கீதா ரிகார்டிங் கம்பெனி மூலம் வெளியிடப்பட்டன.

dr-m-balamuralikrishna-with-others-mile-suru-mera-tumaraபலமொழிகளில் உச்சரிப்பு தவறாமல் பாடும் திறமைக் கொண்டவர்: தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, வடவிந்திய மொழிகளிலும் உச்சரிப்பு தவறாமல் பாடும் திறமை கொண்டவர். ஜுகல் பந்தி என்றழைக்கப்படும், இருவித சங்கீதமுறைப் பாடல்கள், இசைக்கும் நிகழ்ச்சிகளில் பண்டிதர் பீம்சேன் ஜோஷி, ஹரிபிரசாத் சௌரஸியா, கிஷோரி அமோன்கர் முதலியோருடன் கலந்து கொண்டிருக்கிறார். ரபீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடலை தனியாக பாடி இங்கிலாந்து நாட்டு விருதைப் பெற்றார். தாகூரின் கீதாஞ்சலி பாடல் பதிவிற்கும் அழைக்கப்பட்டார். பிரெஞ்சு ஃபூஸனிலும், டி. எச். சுபாஷ் சந்திரன் என்பவருடன் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். விசாகபட்டினத்தில், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கச்சேரி நடத்தியுள்ளார். “மிலே சுரு மேரா துமாஹ்ரா” என்ற பாடலில், பல மொழிகளில் பாடியபோது, இவர் தமிழில், “இசைந்தால் நம்மிருவர் ஸ்வரமும் நமதாகும், இசை வேறானாலும் ஆழிசே ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல் சை, நம் இசை…………. ,” பாடியது இன்றும்-என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்[10].

© வேதபிரகாஷ்

24-11-2016

advocate-srikantiah-felicitating-padmasri-balamuralikrishna-in-1971-in-parvathi

[1] தினமலர், ‛‛சின்னக்கண்ணனை அழைத்துக்கொண்ட இறைவன்”: பாலமுரளி கிருஷ்ணா மறைவு, பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 05.57.

[2] தினமணி, இசையாய் வாழ்ந்த சங்கீத சாகரம்,  பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 05.57. பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 11.04.

[3]http://www.dinamani.com/tamilnadu/2016/nov/23/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2603575.html

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1654464

[5] விகடன், கண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனைபாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு, Posted Date : 19:14 (22/11/2016), Last updated : 21:43 (22/11/2016)

[6] தினத்தந்தி, சின்னக் கண்ணன் அழைக்கிறான்பாடல் புகழ்பெற்ற பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார், பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 22,2016, 6:10 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 22,2016, 6:10 PM IST

[7] B. M. Sundaram, Mangalampalli Balamuralikrishna – a Prodigy and a genius, Sruti, October 2011, pp.13-14.

[8] http://www.dailythanthi.com/News/State/2016/11/22181005/Balamurali-Krishna-died.vpf

[9] பிபிசி, கர்நாடக இசை ஜாம்பவான், பாலமுரளி கிருஷ்ணா காலமானார், நவம்பர் 22,2016.

[10] http://www.bharatwap.com/upload_file/2983/3049/Mile sur mera tumhara – National Integration Song-(BharatWap.com).mp3

சுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி!

ஜூலை 24, 2016

சுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசைஇந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி!

Bharatiya Ganathon 23-07-2016

மழையை நிறுத்திய இசை மழை: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு 24-07-2016 சனிக்கிழமை நடைபெற்ற  “பாரதீய கானதான்” என்ற சேர்ந்து பாடும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் பல கல்லூரி மற்றும் பள்ளிகளிலலிருந்து வந்து கலந்து கொண்டனர். வண்ண-வண்ண உடைகளில் வந்து அவர்கள் பாடியபோது, சுற்றுப்புறம் மற்றும் வானம் வரை அதிர்ந்தது எனலாம். அதனால், மேகங்கள் கூட மழையினை பெய்விக்காமல் தடுத்து விட்டது போலும். சுமார் 11,000 மாணவிகள் பங்கேற்ற (இடமிருந்து) பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், டி.சி.எஸ். நிறுவனத் துணைத் தலைவர் ஹேமா கோபால், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, இசைக் கலைஞர் அருணா சாய்ராம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பாரதிய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஆடிட்டர் சுப்பிரமணியம். (வலது) இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ என்ற தலைப்பில் 10,000 மாணவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது[1].

Bharatiya Ganathon 23-07-2016- these three provided real music

எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு பிறந்த விழா (1606-2015 முதல் 16-09-2016 வரை): செப்டம்பர் 16, 1916ல் எம்.எஸ் பிறந்தார். அதனால், இந்த ஆண்டு செப்டம்பர் 16, 2015லிருந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.எஸ். தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரபல வழக்கறிஞர். தாய் சண்முகவடிவு, வீணை இசைக் கலைஞர். வீட்டில் குஞ்சம்மா என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.  5-வது படிக்கும்போது, ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட, குஞ்சம்மா மயக்கமாகிவிட்டார். சில நாட்களில் உடல்நிலை சரியான பிறகும், குஞ்சம்மாவை இடைவிடாத இருமல் வாட்டியது. அம்மா சண்முகவடிவின் முடிவுப்படி பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒருமுறை மேடையில் மகளை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார் சண்முகவடிவு. ‘மராத்தி’பஜன் ஒன்றைக் குஞ்சம்மா பாட, அந்த இனிய குரலில் அங்கிருந்தவர்கள் சொக்கிப்போனார்கள். குஞ்சம்மாவின் திறமையைக் கண்டறிந்த ரசிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில், அவருடைய குரலை ஹெச்.எம்.வி. நிறுவனம் பதிவுசெய்து வெளியிட்டது. ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, ‘மரகத வடிவு’ பாடியபோது குஞ்சம்மாவுக்கு வயது 10. ‘மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் ரெக்கார்டு லேபிளில் பெயர் அச்சிடப்பட்டது. பிறகு, எம்.எஸ்.எஸ். என்பது சுருங்கி, உலகமே இன்றும் என்றும் உச்சரிக்கும் ‘எம்.எஸ்’ ஆனது! இந்தியாவில் அவரது குரல் ஒலிக்காத இடமே இல்லை, அறியாத ஆளே இல்லை எனலாம்.

MS_Subbulakshmi_with Gandhi

8-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி:  சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக –

 1. சுற்றுச்சூழல் பராமரித்தல்,
 2. பெற்றோர்-ஆசிரியர்-பெரியோர்களை வணங்குதல்,
 3. பெண்மையைப் போற்றுதல்,
 4. எல்லா ஜீவராசிகளையும் பேணுதல்,
 5. நாட்டுப்பற்று,
 6. வனம்-வன விலங்குகளைப் பாதுகாத்தல்

போன்ற ஆறு நோக்கங்களை மையமாகக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது[2]. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பலவித உந்துதல்கள், கவர்ச்சிகள் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு, இத்தகைய நற்பண்புகளினின்று அதிகமாகவே விலகி சென்று கொண்டிருக்கின்றனர். அந்நேரத்தில், இக்த்தகைய நிகழ்சிகள் மிகவும் அவசியமாகின்றன. இதில் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சம்ஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், பாரதீய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஹேமா கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி, இசைப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  பத்மா சுப்ரமணியம் முதலில் இந்த கொண்டாட்டம் பற்றி விவரங்களை விளக்கமாக முன்னுரையாகக் கூறினார்.

Bharatiya Ganathon 23-07-2016- Dinathanthi photo

இந்திய மொழிகளில் பாட்டுகள் பாடப்பட்டன: எட்டு மொழிகளில் பாடியபோது, இசைதான் கேட்பவர்களுக்குத் தெரிந்தது, வேறோன்று வித்தியாசமும் தெரியவில்லை. கீழ்கனாட பாடல்கள் பாடப்பட்டன:

எண் பாடல் மொழி மையப் பொருள்
1 மைத்ரிம் பஜதா சமஸ்கிருதம் உலக அன்பு, நட்பு, உறவு
2 ஈஸாவாஸ்ய இதம் சர்வம். சமஸ்கிருதம் அண்ட-பேரண்ட வணக்கம்
3 ஜிஸ் கர் மே இந்தி சிறந்த வீடு எப்படி இருக்கும்
4 பிரபோ கணபதே தமிழ் கஜ – கணபதி வந்தனம்
5 தண்டால தெலுங்கு
6 ஜய ஜெய ஜெய துளாஸி மாதா மராத்தி துளஸி-செடி-கொடிகள்-தாவரங்கள் வழிபாடு
7 ஜோ கனி கன்னடம்
8 காணி நிலம் வேண்டும். தமிழ் பூமிக்கு வணக்கம்
9 மாதா பிதா குரு தெய்வம். மலையாளம் மன்னை, தந்தை, ஆசிரியர் மற்று கடவுள் இவர்களுக்கு வணக்கம்

இந்த ஒவ்வொரு பாட்டிற்கும் சிறப்புண்டு. கேட்பவர்களுக்கு இசைதான் தெரிந்தது. ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் சிறு குறிப்பு கூறப்பட்டது. உன்னி கிருஷ்ணன் மகள், செல்வி உத்தரா ஒரு பாட்டு தனியாக பாடினாள். இவ்வாறு ஆயிரக்கணக்கில் மாணவிகள் வந்து பாடுவது என்பது சாதாரண நிகழ்சி அல்ல. பல மாதங்களாக ஆசிரியைகள், மாணவிகள், பயிற்சி கொடுப்போர், பெற்றோர் என்று பலர் இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பங்கு கொண்டு செயலாற்றியுள்ளனர். சேர்ந்து பாடும் முறையே இப்பொழுது குறைந்து வருகிறது.

IMG_20160723_172211101

நினைவுப் பரிசு[3]: இத்தகைய நிகழ்சியை தீடீரென்று நடத்தி விட முடியாதுவீதன் பின்னணியில் பலர் பல மாதங்களாக பாடுபட்டு வந்துள்ளனர். பொதுவாக இந்தியாவில், நிறைய பேர் வேலை / சேவை செய்து விட்டு அமைதியாக, கண்டுகொள்ளாமல், மறைந்தே இருப்பர். அத்தகையோரின் சேவையினல் தான், இத்தகைய நல்ல நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சேர்ந்திசை பாட உதவிய 10 இசை ஆசிரியர்கள், 3 சிறப்பு விருந்தினர் என 13 பேருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பண்பு கலாசார பயிற்சி அறக்கட்டளையின்[4] நிர்வாக அறங்காவலரும், ஹிந்து ஆன்மிக சேவை மையத்தின் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Bharatiya Ganathon 23-07-2016- started singing.4

இந்து ஆன்மிக கண்காட்சி குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது[5]: “சென்னையில் 2009-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஒரு சிறிய ஆன்மிக நிகழ்ச்சி இன்று அகில இந்திய அளவில் ஒரு கலாசார இயக்கமாக மாறி வருகிறது. இது அகில இந்திய அளவில் இந்து தர்மத்தை சரியான நோக்கில் பார்க்க வைக்கும் ஒரு பிரமாண்டமான இயக்கமாக உள்ளது. இதில் ஏற்க முடியாத கருத்துகளோ, சிந்தனைகளோ, நிகழ்ச்சிகளோ அல்லது அமைப்புகளோ இல்லை. மாறாக எல்லோரும் ஏற்க கூடிய 6 நற்கருத்துகளும், சிந்தனைகளும் இதில் உள்ளது. அப்படியானால் ஏன் இதற்கு இந்து ஆன்மிக சேவை கண்காட்சி என்று பெயர் வைத்துள்ளர்கள் என்று கேட்கலாம், ‘இந்துஎன்பது நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறை என்று தான் அர்த்தம்[6]. இது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சி இல்லை. 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை நடத்துவது ஒரு சேவை அமைப்பு என்று கூறி உள்ளது[7]. எனவே வருமானவரித் துறையும் வரிவிலக்கு அளித்து உள்ளது.”
Bharatiya Ganathon 23-07-2016- the venue was full with young singers.3

இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் நிகழ்ச்சி நிரல்: குருமூர்த்தி தொடர்ந்து பேசியது,அந்தவகையில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஆகஸ்டு 2-ந்தேதி மீனம்பாக்கம் .எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது[8]. தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்ளும்கங்கா காவிரி தீர்த்த மங்கல கலச யாத்திரைநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. பதஞ்சலி யோகா பீடம் நிறுவனர் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். 3-ந்தேதி (புதன்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 6 நற்குணங்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

 1. சுற்றுச்சூழலை பாதுகாத்து, பராமரித்தலை வலியுறுத்தும் வகையில்கங்காபூமி வந்தனம்நிகழ்ச்சி,
 2. குடும்பநலன்சமூக நலனை போற்றி பாதுகாத்து பெற்றோர்ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்கும் வகையில்குரு வந்தனம்நிகழ்ச்சி,
 3. பெண்மையை போற்றும் வகையில்கன்யா வந்தனம்நிகழ்ச்சி,
 4. சுற்றுச்சூழலை நிலையாக வைத்திருப்பதை மையமாக வைத்து பசு, யானையை வைத்து துளசிவந்தனம் நிகழ்ச்சிகள்,
 5. நாட்டுப்பற்றை போற்றும் வகையில்பாரத் மாதா வந்தனம்’, ‘பரம்வீர் வந்தனம்நிகழ்ச்சியும்,
 6. வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்அனைத்து உயிரினங்களையும் பேணும் வகையில்விருட்சவந்தனம்’, ‘நாக வந்தனம்நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இதுதவிர நாட்டிய நிகழ்ச்சிகள், வள்ளித்திருமணம், ‘கிருஷ்ணாஇசை நடன நிகழ்ச்சி, வாதாபி சூரசம்ஹாரம், தெருக்கூத்து என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை இலவசமாக கண்டுகளிக்கலாம்”,  இவ்வாறு அவர் கூறினார்[9].  மேலும் விவரங்கள், புகைப்படங்களுக்கு இங்கு பார்க்கவும்[10].

 

© வேதபிரகாஷ்

24-07-2016

Bharatiya Ganathon 23-07-2016- the venue was full with young singers.2

[1] இது “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ இல்லை “பாரதீய கானதான்”! நிருபர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல தோன்றுகிறது.

[2] தினமணி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி முன்னோட்டம், By dn, சென்னை, First Published : 23 July 2016 11:48 PM IST

[3]http://www.dinamani.com/tamilnadu/2016/07/23/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/article3544007.ece

[4] Hindu Spiritual and Service FoundationHead Office: “Bharata Mata Sadan”, “Gargi”, 1st Floor,
Old No : 9, New No 6, D’monte Street, Santhome,Chennai – 600 004; Ph: 044-24622311 / 312 / 313; E-Mail: hssfhq@gmail.com 

[5] தினத்தந்தி, 8-வது இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற மெகா பாட்டு நிகழ்ச்சி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST

[6] http://www.hssf.in/about-us.html

[7] Dr Ramesh Prabhoo vs Prabhakar –   https://indiankanoon.org/doc/925631/;  K. Kunte and in Manohar Joshi v.Nitin Bhaurao Patil  https://indiankanoon.org/doc/1215497/

[8] http://www.hssf.in/

[9] http://www.dailythanthi.com/News/State/2016/07/24050256/10-thousand-students-participated-in-the-8-mega-music.vpf

[10] https://www.facebook.com/vedam.vedaprakash

பித்துக்குளி முருகதாஸ் [1920-2015]

நவம்பர் 17, 2015

பித்துக்குளி முருகதாஸ் [1920-2015]

Pithukuli murugadas palying harmonium - old photo.4பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் (95) உடல்நலக்குறைவால் சென்னையில் 17-11-2015 [செவ்வாய்கிழமை] அன்று காலமானார்[1]. இன்றைய நாட்களில் அமைதியாக தொண்டாற்றி வரும் பெரியவர்களைப் பற்றிய விவரங்கள் ஊடகங்களில் வருவதில்லை. உதாரணத்திற்கு இவரையே எடுத்துக் கொண்டால், இவர் ஒரு ஆன்மீகவாதி, சுதந்திர போராட்ட வீரர், உப்புசத்தியாகிரகத்தில் பங்கு கொண்டவர், சிறைக்குச் சென்றவர் என்பதெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது. எம்.பில், பி.எச்டி ஆய்வுக்கு கண்டவர்களைப் பற்றியல்லாம் ஆராய்ச்சி செய்பவர்கள், இவர் போன்றவர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். இந்திய விடுதலை போர் பற்றி ஏகப்பட்ட கருத்தரங்கங்கள், கூட்டங்கள் நடந்தாலும், அங்கெல்லாம் கூட இவரைப் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூசத் திருநாளில் பிறந்தார்[2].  இவர் தனது தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்[3]. ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர் இயற்றிய பாடல்களை பாடியபோது, இவர் மற்றவர்களால் கவனிக்கப்பட்டார்[4].

Pithukuli murugadas old photoபக்திப்பாடல்களால் கோடானு கொடி மக்களைக் கவர்ந்தவர்: 1947-ல் தனது இசைப் பயணத்தை தொடங்கிய பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது கணீர் என்ற குரல், ஹார்மோனியத்துடன் இணையும் போது, இரண்டிற்கும் வித்தியாசமே தெரியாத அளவிற்கு இருக்கும். அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு போன்ற பாடல்களைப் பாடி பிரபலப்படுத்தினார்[5]. தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி உள்பட முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார்[6]. கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார்[7]. அவர் பாடிய ‘அலைபாயுதே கண்ணா’ மற்றும் தெய்வம் திரைப்படத்தில் வரும் ‘நாடறியும் நூறு மலை’ பாடல்கள் மிகவும் பிரபலமானவை[8].

Pithukuli Murugadas - Swami sivananda centenary - 08-11-1987சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது, சிறைசென்றது: அக்காலகட்டத்தில், சுதந்திர போராட்டம் நாடு முழுவதும் பரவியிருந்ததால், சிறுவர் முதல், முதியோர் வரை அதில் கலந்து கொண்டனர். அவ்வாறே பாலசுப்ரமணியும் 1931ல் தனது பதினொன்றாம் வயதில் உப்பு சத்தியாகிரகத்தில் பங்குக் கொண்டு சில நாட்கள் சிறையிலும் இருந்தார்[9]. இந்தியாவில் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற இவர்மீது 1936-ம் ஆண்டு போலீசார் நடத்திய முரட்டுத்தனமான தாக்குதலில் பித்துக்குளி முருகதாசின் இடதுகண் பார்வை பறிபோனது. அப்பொழுதும் ஆறு மாதம் சிறைவாசம் இடைத்தது. அதிலிருந்து இவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். பிறகு, மைசூர் மஹாராஜா ஜெயசாமராஜேந்திர உடையார் திருமணத்தின் போது, கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, இவரும் விடுதலை ஆனார். இன்றைக்கு எதற்கோ சிறை சென்றவர்கள் எல்லாம், ஏதோ பெரிய போராளிகள் போல சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மையான போராளிகள் மறைக்கப்படுகிறார்கள்; மறக்கப்படுகிறார்கள்; இதனால், இக்காலத்தவர், குறிப்பாக இளைஞர்கள் உண்மை அறியாமலேயே, தங்களது ஞானத்தை வளர்த்து-வைத்துக் கொள்கிறார்கள்.

Pithukuli Murugadas - at the end of a concert in 1996பாலசுப்ரமணியம் பித்துக்குளி ஆனது: சிறுவயதில், தனது ஊரின் தெருவில் விளையாடும் போது, வழியே சென்ற ஒருவர் மீது இவர் வீசிய கல் பட்டு காயமடைந்த பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார், தனது நெற்றியில் இருந்து இரத்தம் வடிய… ‘அடேய்நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? ஒருநாள் இல்லை ஒருநாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போகிறாய்என்று வேடிக்கையாக கூறவே, அதுவே பித்துக்குளி முருகதாஸ் ஆக நிலைத்துவிட்டது[10]. முருகனுக்கு தாசனாய், முருகன் மீது பைத்தியமாய் இருப்பதால் தனது பெயருக்கு முன்னால் ‘பித்துக்குளி’யை இவர் சேர்த்துக்கொண்டார். 1935ல் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் மூழ்கினார். பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். 1939ல் பின்னாளில், கேரள மாநிலத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தின் ஆன்மீக குரு சுவாமி ராமதாஸ் முருகதாஸ் என்ற பெயரை பித்துக்குளி என்ற நாமத்துடன் இணைத்தார். அன்று முதல் பித்துக்குளி முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார்[11]. 1940ல் சேந்தமங்கலத்தில் இருந்த சுவாமி ஸ்வயம் பிரகாஷ் என்ற அவதூதரிடம் இருந்தார். பிறகு கால்நடையாகவே தீர்த்தயாத்திரையாக பல இடங்களுக்குச் சென்று வந்தார். சுதந்திர போராட்ட எண்ணங்களினாலும், தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களினாலும் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் அனாதை குழந்தைகளை காக்க வேண்டும் என்று தீர்மானித்தார். 1947ல் வாலாஜாபேட்டையில் உள்ள தீனபந்து ஆஸ்ரமத்தின் / அனாதை இல்லத்தின் பாதுகாவலர்களுள் ஒருவரானார்[12].

Pithukuli Murugadas in a Kumbabhishekam in Singaporeதமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், சந்தப்பத்திற்கு ஏற்றவகையில் பாடல்களை புனைந்து பாட வல்லவர். தென்னாப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்[13]. பித்துக்குளி முருகதாஸ் தியாகராஜர் விருது, 1984ல் தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல இசை விருதுகளை பெற்றுள்ளார்[14]. தன்னுடன் கச்சேரிகளில் பக்திப்பாடல்களை பாடிய தேவி சரோஜா என்பவரை 1978ல் தனது அறுபதாவது வயதில் மணந்து கொண்டார். இந்த தம்பதியர் ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்! இவர் 2011ல் காலமானார். சிறந்த முருகபக்தராக கருதப்படும் பித்துக்குளி முருகதாஸ், சென்னையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ ஜோதிர் மாயா தேவி அறக்கட்டளையை தொடங்கினார். தனது பக்தி பாடல் கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து பல ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் மிக உயரிய சமூகத்தொண்டாற்றி வந்தார். வெகுநாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தீவிர முருகபக்தரான பித்துக்குளி முருகதாஸ், சூரசம்ஹார தினமான 17-11-2015 [செவ்வாய்கிழமை] அன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை மரணமடைந்தார்[15].

© வேதபிரகாஷ்

17-11-2015

[1] மாலைமலர், பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17, 12:20 PM IST.

[2]  தினமலர், பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், நவம்பர்.17, 2015: 07.24.

[3] தி.இந்து, பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், Published: November 17, 2015 11:17 ISTUpdated: November 17, 2015 11:17 IST.

[4] http://www.thehindu.com/news/national/tamil-nadu/singer-pithukuli-murugadas-passes-away/article7886850.ece

[5] http://www.newindianexpress.com/cities/chennai/Devotional-Singer-Pithukuli-Murugadas-Passes-Away/2015/11/17/article3132653.ece

[6] தமிழ்.ஒன்.இந்தியா, தைபூசத்தில் பிறந்து கந்த சஷ்டியில் காலமானார் முருக பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ், Posted by: Mayura Akilan Updated: Tuesday, November 17, 2015, 10:25 [IST].

[7] http://www.vikatan.com/news/article.php?aid=55136

[8] http://ns7.tv/ta/singer-pithukuli-murugadas-passes-away.html

[9] https://en.wikipedia.org/wiki/Pithukuli_Murugadas

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/singer-pithukuli-murugadas-passes-away-239986.html#slide175317

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7886986.ece

[12] http://www.pithukulimurugadas.com/

[13] விகடன், முருகன் பக்தி பாடல் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!, Posted Date : 08:52 (17/11/2015); Last updated : 08:52 (17/11/2015).

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1388839&

[15] http://www.maalaimalar.com/2015/11/17122010/Devotional-singer-Pithukkulli.html

தமிழகத்தில் சிவன் கோவில்கள் ஏன் கவனிப்பாரன்றி கிடக்கின்றன, சிதிலமடந்து கிடக்கின்றன, காணமலும் போகின்றன?

மே 25, 2014

தமிழகத்தில் சிவன் கோவில்கள் ஏன் கவனிப்பாரன்றி கிடக்கின்றன, சிதிலமடந்து கிடக்கின்றன,  காணமலும் போகின்றன?

 

பெண்ணாடம் சிவன் கோவில்

பெண்ணாடம் சிவன் கோவில்

நாத்திக புற்றுநோயா, ஆத்திக புது நோயா?: தமிழகத்தில் அடிக்கடி இத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  பொதுவாக 60 ஆண்டுகால நாத்திக திகவினர் ஆட்சியினால் தான் இந்நிலை ஏற்பட்டது என்று சொல்லிவந்தாலும், ஏன்  “இந்துக்கள்” என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள், பக்தர்கள், சிவனடியார்கள் மற்றவர்கள் இவ்விவகாரங்களில் ஈடுபடவில்லை என்று தெரியவில்லை. லட்சங்களைக் கொட்டி, நிதி வாங்கிக் கொண்டு, கலை ஆராய்ச்சியாளர்கள்,  சிற்பக்கலை வல்லுனர்கள், சித்திரங்கள் ஆய்வு வல்லுனர்கள் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டு,  புகைப்படங்களைப் பிடித்துச் சென்று, சொற்பொழிவுகள் நடத்தி, பிரபல ஆங்கில நாளிதழ்களில் எழுதி,  ஏன் புத்தகங்களையும் வெளியிட்டு புகழ், பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,  சிதிலமடையும் இக்கோவில்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அழகை ரசிக்கிறேன், கலையை ஆராதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே அழகு-கலை முதலியன மற்ற கொடுங்கோலர்களால் கற்பழிக்கப்படும் போது, “நமக்கேன் வம்பு” என்று இருந்து விடுகிறார்கள்.  ஆனால், இவ்விவகாரங்களிலும் ஒரு அமைப்பு தென்படுகிறது. அதாவது கோவில்கள் இவ்வா றுகாணமல் போனால்,  சிலைகளை விற்றுப் பிழைத்துக் கொள்கின்றனர்;  குளங்களைத் தூர்த்து நிலங்களைப் பட்டாப் போட்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆகின்றனர்; கோவில் நிலங்களை தரிசு நிலங்கள் என்று சொல்லி விற்று கொள்ளை அடிக்கின்றனர்.  இதனால், மற்றவர்களும் கண்டு கொள்ளவில்லை, கண்டு கொள்கிறவர்கள் அமுக்கப் படுகின்றனர்.

kallangudi Kambar temple Sivagenga

kallangudi Kambar temple Sivagenga

சிதிலமடைந்த சிவன் கோவிலைப் புதுப்பிக்க மக்கள் கோரிக்கை – கும்மிடிப்பூண்டி (மே.25,2014): ‘சிதிலமடைந்து கிடக்கும் சிவன் கோவிலை, இந்து சமய அறநிலைய துறை புதுப்பிக்க வேண்டும்’ என,  கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன்கோவில் ஒன்று முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது. சில நாட்களுக்கு முன்,  கிராம மக்கள்பு தர்களை அகற்றி துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். கருவறையில் சிவலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள், நந்தி ஆகிய சிலைகள் இல்லை. கோவிலின் முன்புறமும், பின்புறமும் பிரமாண்ட குளங்கள்  உள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்வரை, அந்த கோவிலில், சிறப்பு வழிபாடுகள் மற்றும் தேர்திருவிழா நடந்தாக கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் தெரிவிக்கின்றனர். சிதிலமடைந்து காணப்படும் அந்த சிவன்கோவிலை இந்துசமய அறநிலையதுறை புதுப்பித்து வழிபாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும், அதன் வரலாற்றை புத்தமாக வெளியிட வேண்டும் எனவும், ஏ.என்.குப்பம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[1].

பழனி பாதிரி விநாயகர் கோயில் அருகே உள்ள ஐந்து கண் பாலத்தின் கீழே கண்டுபிடிக்கப்பட்ட சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு

பழனி பாதிரி விநாயகர் கோயில் அருகே உள்ள ஐந்து கண் பாலத்தின் கீழே கண்டுபிடிக்கப்பட்ட சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு

சிதிலமடைந்த நிலையில் சிவன்கோவில் அறநிலையத் துறைக்கு கோரிக்கை  (மே.14, 2014):ஓசூர் அருகே, மலைமீது உள்ள சிவன்கோவிலை, இந்துசமய அறநிலையத்துறை பராமரிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஓசூரை அடுத்த, கெலமங்கலம் அருகே உள்ள, ஊடேதுர்க்கம் பகுதியின் மலைஉச்சியில்,  சிவன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த இரு கோவில்களும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது என,  இப்பகுதி பக்தர்கள் தெரிவிக்கின்றனர். சுமார், 600 ஆண்டு பழமையான இந்த இரு கோவில்களில், சிவன் கோவில் மட்டும், மிகவும் மோசமான நிலையில் உள்ளது.ஆஞ்சநேயர் கோவிலில், சனிக்கிழமை தோறும் பூஜைகள் செய்யும் இப்பகுதிமக்கள், சிவன் கோவிலை கண்டு கொள்வது இல்லை.  சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோவிலில் அமைந்துள்ள லிங்கம், மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறும் பக்தர்கள்,  சுமார் ஆறு கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் தரிசனம் செய்தால், தீராத வினைகள் யாவும் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறுகின்றனர். ஆனால், மலைஉச்சியில் கோவில் அமைந்துள்ளதால், இந்த கோவிலுக்கு செல்லும் சாலை, கல்லும், மண்ணும், பாறைகளும் நிறைந்த பகுதியாக உள்ளது.இதனால், சற்று சிரமப்பட்டுதான், மலையின் உச்சிக்கு செல்லமுடியும். சிவன்கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலை, இப்பகுதி மக்கள் பராமரித்து வருவதால், கோவில் கட்டிடம் மற்றும் சுற்றுப்பகுதிகள் சுத்தமாக உள்ளன. ஆனால், அந்த காலத்திலேயே, செங்கல்மூலம்கட்டப்பட்டுள்ளஇந்தசிவன்கோவில்கட்டிடம், சரியானபராமரிப்புஇல்லாததால், மிகவும்பாழடைந்து, சிதிலமடைந்துள்ளது. எனவே, “இந்தகோவிலை, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என கூறும்பக்தர்கள்,  கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப் பட்ட இந்த கோவிலை பராமரிக்கவேண்டியது அரசின்கடமை,  என்றனர்[2].

மணல்மேல்குடி ராஜராஜ சோழன் கட்டிய கோவில்

மணல்மேல்குடி ராஜராஜ சோழன் கட்டிய கோவில்

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய வெள்ளூர் சிவன்கோவில் சிதிலமடைந்து வரும் அவலம் (மார்ச்.21, 2014) :மணமேல்குடி, மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய வெள்ளூர் சிவன் கோவில்இடிந்துசிதிலமடைந்துவருகிறது[3]. இந்த கோவிலை சீரமைத்து தர இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிவன்கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அருள்பாலித்து வரும் சுவாமி இத்ரேஸ்வரர் எனவும், அம்மன் பர்வதவர்த்தினி எனவும் அழைக்கப் படுகின்றனர்[4]. இந்த கோவிலின் ராஜகோபுரம் தான் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக உயரம் கொண்ட கோபுரமாக இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.   இந்த கோவில் ராஜகோபுரத்தின் அருகில் உள்ள அகழிகளில் தனது படைகளை பாதுகாப்பாக வைத்து கொண்டு இலங்கைக்கு படை எடுத்தான் ராஜராஜசோழன் எனத கவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு இந்த கோவிலுக்கு இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். தற்போது இந்த கோவிலின் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானம் ஆகியவை இடிந்து சரிந்து கீழே விழுந்து காணப்படுகிறது. இதனால் தற்போது இந்த கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வந்து செல்வதில்லை.  இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கோவிலை சுற்றிலும் முள்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு சென்று வழிபட முடியாமல் பக்தர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். எனவே கோவிலை முழுமையாக சீரமைத்து தருவதுடன், கோவிலை சுற்றிலும் உள்ள முள்வேலியை அகற்றி பக்தர்கள் வழிபட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகளுக்கு ஆன்மிக அன்பர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[5].

செஞ்சி அருகே சிவன் கோவில்

செஞ்சி அருகே சிவன் கோவில்

சிதிலமடைந்துள்ள தளவானூர் சிவன் கோவில் கல்வெட்டுகள் பாதுகாக்கப்படுமா?[6] (ஆகஸ்ட்.18, 2011): செஞ்சி அருகே சோழர்கால சிவன்கோயில் சிதிலமடைந்து அழியும் நிலையில் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் பல்லவர் காலகுடைவரைக்கு உதாரணமாக செஞ்சி அருகே உள்ள தளாவானூர், மண்டகப்பட்டு ஆகிய இடங்களை குறிப்பிடுகின்றனர். இதில் தளவானூரில் உள்ள சத்ரு மல்லேஸ்வராலயம் என்ற குடைவரைக் கோவிலை பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் கி.பி. 580-630 ஆண்டில் உருவாக்கினான். இந்த குடைவரை கோவிலை செஞ்சிகோட்டையில் உள்ள இந்திய தொல்லியல்துறையினர் பராமரித்து வருகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊரில் மேலும் ஒரு சிவன்கோவில் அழிவின் விளிம்பில் உள்ளது. ஊருக்கு மத்தியில் சிறந்த கட்டடக்கலையுடன் காணப்படும், இந்த சிவன்கோவிலின் முன்புறம் மகாமண்டபம், முகமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவையும், கருவறையில் சிவலிங்கமும் உள்ளது. மேலும் கோவிலின் உள்ளே அம்மாள், பைரவர், தட்சணாமூர்த்திசிலைகள்உள்ளன.பிற்காலசோழர்கள்இக்கோவிலைகட்டியுள்ளனர். கோவிலின் வெளியில் உள்ள கற்சுவர்களிலும், கோவில் உள்ளே உள்ள தூண்களிலும் பழங்கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மூலவரின் பெயர் பற்றியோ, கல்வெட்டுக்கள் குறித்தோ இவ்ஊர் மக்கள் எந்தத கவலையும் அறிந்திருக்கவில்லை. பழமையான இக்கோவிலின் பலபகுதிகள் சிதிலமடைந்து வருகின்றன. கருவறை கோபுரத்தின் மீது பெரிய அளவில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. மரங்களின் வேர்கள் ஆழமாக ஊடுருவி கோவில் கட்டத்தை பலவீனப் படுத்தியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கோவில் கோபுரமும், இதன் கீழ் உள்ள கல்கட்டுமானமும் சரிந்து விழும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இந்தகோவிலுக்கு என எந்த வருவாயும் இல்லை என்பதால் கிராமமக்களும் இக்கோவிலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்த கோவிலை சீரமைத்து பாதுகாக்க மத்திய அரசின் இந்திய தொல்பொருள்துறையினர் மற்றும் தமிழக இந்துசமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்[7].

நாகப்பட்டினம் சிவன் கோவில் காணவில்லை 2013

நாகப்பட்டினம் சிவன் கோவில் காணவில்லை 2013

பழமையான சிவன்கோவிலை காணோம்: நாகை அருகே கிராம மக்கள் புலம்பல் (ஜூலை.2, 2013): நாகை அருகே, சூரனூர் கிராமத்தில் காணாமல் போன, பழமையான சிவன்கோவிலை மீண்டும் கட்டித்தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்[8]. நாகை, வைப்பூர் அடுத்த, சூரனூரில், 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, கருங்கல்லால் கட்டப்பட்ட, தர்மாம்பாள் சமேத தர்மபுரீஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவிலில் விநாயகர், சனீஸ்வர பகவான், பைரவர், முருகன், சண்டிகேஸ்வரர், பலிபீடம் நந்தி மற்றும் பரிவார தேவதைகள் என, தனித்தனி சன்னிதி கொண்டு அருள்பாலித்து வந்தனர். கிராமமக்கள் சார்பில், 50 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, சுவாமி சிலைகளை பாலாலயம் செய்து, கோவிலையொட்டிய பகுதியில், கீற்றுக்கொட்டகையில், சுவாமிகளை வைத்து, பூஜைகள் நடந்துள்ளது. இக்கிராமத்தில் வறட்சியால் பஞ்சம் ஏற்பட்டு, கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்ட கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள், பிழைப்புதேடியும், வேலை நிமித்தமாகவும் பல்வேறுபகுதிகளில் குடிபெயர்ந்தனர். இதையடுத்து, கும்பாபிஷேக பணிகள் தொய்வடைந்து, காலப்போக்கில் சுவாமிகளுக்கு நடந்து வந்த பூஜைகளும் நின்று போயின.பழமையான கோவிலும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து, கேட்பாரின்றி கிடந்ததால், வேறுபகுதிகளில் இருந்து, இப்பகுதியில் குடியேறிவர்களுக்கு இக்கோவிலின் அருமை தெரியாமல், கோவிலில் இருந்த கருங்கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, களத்துமேட்டில் நெல்கதிர்களை அடிக்கவும், கிராம மக்களின் பல்வேறுபணிகளுக்கும் பயன்பட்டுள்ளன. பராமரிக்கப்பட்டு வந்த சுவாமிசிலைகளும் மர்மநபர்களால் கொள்ளை போயுள்ளது. தற்போது, கோவில் இருந்த இடம் முட்புதர்கள் மண்டி, குப்பைமேடாக காட்சிஅளிக்கிறது. மூலவர் சன்னிதியில் இருந்த சிவலிங்கம் வைக்கோல் போரால் மூடப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு எதிரில் நந்தி சிலையும், பரிவார தேவதைகள் சிலைகளும் கிடக்கின்றன. சண்டிகேஸ்வரர் சிலை சிதைக்கப் பட்டுகிடக்கிறது. இதுகுறித்து, இக்கிராமத்தை சேர்ந்த, வெங்கட்ராமன் என்பவர் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நாங்கள் சிறியவர்களாக இருந்தப்போது, இப்பகுதியைச் சேர்ந்தவர்களும், சுற்றுவட்டார மக்களும், இக்கோவிலில் வழிபட்டோம்; நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடக்கும். இக்கிராமமக்கள் நகரப் பகுதிகளுக்கு, இடம் பெயர்ந்ததால், கோவில் மராமத்துபணி நடக்காததால், பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் இருந்த இடம், மண்மேடாக காட்சி அளிப்பது கிராமத்து மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இக்கோவிலின் வரலாறு தெரிந்தோர், இப்போது உயிருடன் இல்லை. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். அரசு தலையிட்டு, கோவில் இருந்த இடத்தில், மீண்டும் கோவில் க ட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர்கூறினார்[9].

கோவிலை அணைக்கும் மரங்கள்

கோவிலை அணைக்கும் மரங்கள்

சிதிலமடைந்த கோவில் கோபுரங்கள்: சீர் செய்யுமா தமிழக அரசு? (ஜூன்.5. 2010): பஞ்ச பூததலங்களில் ஒன்றான, காளஹஸ்தி சிவன்கோவில் கோபுரம் இடிந்து தரைமட்டமான சோகம், இன்னும் பக்தர்கள் மனதில் இருந்து அகலவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் கலைபொக்கிஷங்களாக விளங்கும், பழமையான கோவில்களின் கோபுரங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவற்றை, உரிய முறையில் காப்பாற்ற அறநிலையத்துறை முன் வரவேண்டும். தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பெரும்பாலானவை இந்துசமய அறநிலையத்துறை வசம் உள்ளன. வருவாய் அதிகமுள்ள கோவில்களில், திருப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம்காட்டும் இந்துசமய அறநிலையத்துறை, வருவாய் குறைவான கோவில்களை கண்டுகொள்வதில்லை என்றகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், காளஹஸ்தி கோவில்கோபுரம் இடிந்து விழுந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழககோவில் கோபுரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பலமுனைகளில் இருந்தும் எழுந்துள்ளது[10]. இது குறித்து மாமல்லபுரத்தை சேர்ந்த சிற்பிகள், பக்தர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

கோவிலை மறைக்கும் புதர்க

கோவிலை மறைக்கும் புதர்க

கோபுரங்கள் விழாமல் இருக்க பராமரிப்பு தேவை: தமிழகத்தில் பலகோவில் கோபுரங்கள் சிதலமடைந்துள்ளன. குறிப்பாக, சென்னைக்கு அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஐந்து கோபுரங்களும், மிகமோசமான நிலையில் காணப்படுகின்றன. தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பழமையான கோவில், கோபுரங்கள் பலவும் மிகமோசமான நிலையில் உள்ளன.கோவில் கோபுரங்களில் அதில் மரங்கள் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அப்படி மரங்கள் வளர்ந்தால், அவற்றை பிடுங்கி எறிவதெற்கென்றே, “மரம்பிடுங்கிகள்’ இருப்பர். இத்தகைய, “மரம்பிடிங்கிகளை’ அதிக அளவில் நியமிக்க வேண்டும். பெரும்பாலான கோபுரங்கள் பறவைகள், குரங்குகளின் வசிப்பிடங்களாக திகழ்கின்றன. அவைகளின் எச்சங்களில் இருந்து, மரங்கள் வளர்ந்து விடுகின்றன. இதை தடுக்க, பலகோவில் கோபுரங்களில், சாளரப்பகுதியில் இரும்புவலை அடித்து பறவைகள், குரங்குகள் வசிக்க முடியாத அளவிற்கு, ஒவ்வொரு நிலையிலும், சாளரத்தில் இரும்புவலை அடிக்க வேண்டும். அறநிலையத்துறையில் ஒரு தலைமை ஸ்தபதி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில், தலா ஒரு ஸ்தபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களுக்கும் நிரந்தர பணி கிடையாது. ஸ்தபதிகளுக்கு மிககுறைவான சம்பளம்த ருவதால், அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, அதிகாரிகள் அழைக்கும் போது மட்டும், வந்துசெல்வர். இதனால் கோபுர பராமரிப்பு என்பது வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது.

பராபரிப்பற்ற கோ[புர

பராபரிப்பற்ற கோபுரம்

கோவிலைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்வதால், கோவிலின் புராதன கட்டுமான அமைப்பு, பாதுகாப்பு முதலியன பாதிக்கப் படுகின்றன: ஆந்திர மாநிலத்தில், உதவி கமிஷனர் நிலையில் இருந்து இணைகமிஷனர் நிலைவரை அனைத்து இடங்களிலும் ஸ்தபதி பணிக்கு ஆட்கள் உள்ளனர். அப்படி இருந்தும், காளஹஸ்திகோவில் கோபுரத்தை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், முன்பு கோவிலை சுற்றி கட்டுமானங்கள் ஏதும் இருக்காது. தேர்ஓடும் அளவிற்கு திறந்தவெளி இருக்கும். மழைநீர் பூமியில் சேகரமாகும் நிலையில் இருக்கும். கோபுரங்களை பாதுகாக்கும் பொருட்டு, மனையடி சாஸ்திரத்திற்கு உட்பட்டு திருக்குளங்கள் வெட்டப்பட்டிருக்கும். இதன்மூலம், கோபுரம் இருக்கும் பகுதியில் மழைநீர் சேகரமாகி மண்ணில் நெகிழ்வுதன்மை ஏற்படாமல் தடுக்கப்பட்டு, கோபுரங்கள் பாதுகாக்கப் பட்டுவந்தன. ஆனால், இன்றோ திருக்குளங்கள் வறண்டு, கோபுரத்தை ஒட்டிய பகுதிகளில், பூமியில் மழைநீர் சேகரமாக வசதியின்றி, சுற்றிலும் வானூயர்ந்த கட்டடங்கள்க ட்டப்படுகின்றன. இந்த கட்டடங்களின் கடைக்காலுக்காக தோண்டப்படும் பள்ளங்களால், கோபுரத்தை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டு கோபுரங்களின் நிலை மோசமாகிறது.தமிழகத்தின் கலை, கலாசார கூடங்களாக விளங்கும் கோவில்களை பாதுகாக்கவேண்டும் என்பதில் நாத்திகவாதிகளுக்கு கூட மாற்று கருத்து இருக்கமுடியாது. எனவே இந்த விஷயத்தில் இனியும் அரசு தாமதம் செய்யாமல் தமிழகத்தின் பொக்கிஷங்களாக விளங்கும்கோவில் கோபுரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”கோபுர தரிசனம்; கோடி புண்ணியம்’ என்பார்கள். கோபுரங்களை காக்கும் பணியை அரசு மேற்கொண்டால், கோடி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இக்கல்வெட்டுகள் மறைந்து போய் விடலாம்

இக்கல்வெட்டுகள் மறைந்து போய் விடலாம்

மிகவும் அபாய நிலையில் திருக்கழுக்குன்றம் கோவில் கோபுரம்: திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவில் கோபுரங்களை பாதுகாக்க கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் புகழ்பெற்றது. இதன் சார்பு கோவிலாக மலைக்கு தென்மேற்கில் பக்தவச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு திசைக்கு ஒரு ராஜகோபுரம் வீதம் நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள் அமைந்துள்ளன.  இக்கோபுரங்களில் செடிகள் வளர்ந்துள்ளதால் கோபுரம் சிதிலமடைய துவங்கியுள்ளது. அதேபோல் கோவில் மண்டபம், மதில்சுவர் ஆகியவற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. இக்கோவில் 1999ம் ஆண்டு ஜூலைமாதம் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அதன்பின், கோபுரங்களில் வளரும் செடிகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. அவை மீண்டும் வளர்வதை தடுப்பதற்கு நிரந்தர நடவடிக்கை இல்லை. வடக்கு மற்றும் தெற்கு கோபுரத்தில் செடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. மேற்கு கோபுர கலசத்தின் அருகே தென்முனைப் பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. மதில்சுவர் மீது பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன.சமீபத்தில், ஆந்திரா மாநிலம் காளஹஸ்தியில் கோவில் கோபுரம் பராமரிப்பின்றி இடிந்தது. இந்நிலையில், திருக்கழுக்குன்றம் கோவில் கோபுரங்கள் பராமரிப்பின்றி இருப்பது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் செயல் அலுவலர் சங்கர் கூறியதாவது: இக்கோவிலில் நன்கொடையாளர் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்ய அரசுக்கு மதிப்பீடு அனுப்பியுள்ளோம். ராஜகோபுரங்கள், மூலஸ்தானம், அனைத்து சன்னிதிகள், திருச்சுவர் ஆகியவற்றை பழுதுபார்த்து புதுப்பிக்கவும், கோவில் குளங்களை தூர்வாரி சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். லட்சுமி விநாயகர் கோவில் குளத்தை 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளோம். அரசு அனுமதி கிடைத்ததும் பணிகள் துவக்கப்படும். இவ்வாறு சங்கர் கூறினார்.

திருமூலர் எச்சரிக்கைக்கு பயப்படாத திராவிட நாத்திகர்கள்

திருமூலர் எச்சரிக்கைக்கு பயப்படாத திராவிட நாத்திகர்கள்

திருமந்திரம், திருமூலர், தமிழ் முதலியவற்றை மறந்தது: மேற் குறிப்பிட்டபடி, புதுப்பிப்பது என்று வைத்துக் கொண்டாலும், அதை வைத்து எந்த ஆதாயம் தேடலாம் என்று பார்க்கின்றர். இந்துஅற நிலையைத்துறையினரைப் பொறுத்தவரைக்கும், ஏதாவது பணம் கிடைக்குமா என்று பார்த்துதான், புனர்நிர்மாணபணிகளுக்கு, கும்பாபிஷேகங்களுக்கு அனுமதி கொடுக்கின்றனர். அதனால், காசு வராது என்றால் கண்டு கொள்வதில்லை. தமிழ்-தமிழ் என்று பேசி ஊரை ஏமாற்றினாலும், தமிழுக்காக உயிரைக்கொடுப்பேன் என்றெல்லாம் வீராவேசமாகப் பேசி-எழுதினாலும், இதில் எதையும் காட்டுவதில்லை. திருமந்திரம், திருமூலர் பற்றியெல்லாம் கூட கரைத்துக் குடித்தவர்கள் போல பேசுவார்கள்-எழுதுவார்கள், ஆனால், சிவன் கோவில் நிலைமாறினால் என்னாகும் என்று திருமூலர் எச்சரித்தது பற்றியெல்லாம் கவலைப் படமாட்டார்கள்; “சிவன் சொத்து குலநாசம்” என்பதைக்கூட மறந்துவிடுவர்.

வேதபிரகாஷ்

25-05-2014

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=982745

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=954684

[3] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=303433&cat=504

[4] http://www.dailythanthi.com/2014-03-21-vellur-shiva-temple-ruins-of-the-plight-pudukkottai-news

[5]தினகரன், 1600 ஆண்டுகள்முற்பட்டசிதிலமடைந்தசிவன்கோயில்சீரமைத்துதரபக்தர்கள்கோரிக்கை, பதிவுசெய்தநேரம்:2014-04-07 10:27:28

[6] http://thinamalar.net/district_detail.asp?id=296215

[7] தினமலர், , சிதிலமடைந்துள்ளதளவானூர்சிவன்கோவில்கல்வெட்டுகள்பாதுகாக்கப்படுமா?,ஆகஸ்ட்.18, 2011.

[8] http://m.dinamalar.in/news_detail.asp?id=748092

[9] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=296352

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13417

சோழ மன்னரின் பரம்பரையை சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழகனார் திடீர் மரணம்!

திசெம்பர் 10, 2013

சோழ மன்னரின் பரம்பரையை சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழகனார் திடீர் மரணம்!

Chola lineage claiming dead

 

சோழ வம்சாவளியில் வந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் இவர், திடீரென்று காலடைந்த செய்தி வந்துள்ளது.

ஆண்டியப்ப சோழ வளகனார்.2

சோழ  மன்னரின்  பரம்பரையை  சேர்ந்த  சிதம்பரநாத  சூரப்ப  சோழகனார்  திடீர்மரணம்[1]: சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தை சேர்ந்தவர் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் (வயது 68 / 63[2]). கடந்த 10 ஆண்டுகளாக சிதம்பரம் பாவா முதலிதெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சோழமன்னர்கள் பரம்பரையை சேர்ந்தவர் என சில வரலாற்று சுவடுகளில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது[3]. சோழர் பரம்பரையில் வந்த வாரிசுகள் சிதம்பரத்தையடுத்த பிச்சாவரத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிச்சாவரம் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சிதம்பரநாத சூரப்ப சோழகனாரின் முன்னோர்கள்தான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகித்து வந்ததாகவும் அந்த வரலாற்று சுவடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தினமும் பூஜைகள் முடிந்தபிறகு அந்த கோவில் சாவியை பல்லக்கில் வைத்து இவரது முன்னோர்களின் வீட்டுக்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த சுவடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பிற்காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டது. எனவே மீண்டும் இந்த உரிமையை வழங்ககோரி சிதம்பரநாத சூரப்ப சோழகனார் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தார். எனினும் சிதம்பரம் நடராஜர்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்களின்போது இவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வந்தது.

ஆண்டியப்ப சோழ வளகனார்

திடீரென  மயங்கி  விழுந்து  சிகிச்சையளித்தும்  பலனின்றி  இறந்த  சிதம்பரநாத  சூரப்ப  சோழகனார்    சிதம்பரநாத  சூரப்ப  சோழகனார்: நடப்பு ஆண்டில் இந்த கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று தொடங்கியுள்ள நிலையில், நேற்று இரவு சிதம்பரநாத சூரப்ப சோழகனார் வழக்கம்போல் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சிதம்பரம் கீழ ரதவீதியில் இரவு 8.30 மணி அளவில் இவர் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்தார். இவரது இறுதி சடங்கு நாகை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டையில் நடைபெற உள்ளது. சிதம்பரநாத சூரப்ப சோழகனாருக்கு சாந்திதேவி என்ற மனைவியும், சக்கரவர்த்தி, மன்னர் மன்னன் என்ற மகன்களும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

Cholas-Kanal1

பாமக  நிறுவனர்  ராமதாஸ்  வெளியிட்ட   இரங்கல்  செய்தி: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்[4], “சோழ மன்னர்களின் வாரிசும், வன்னிய குலத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் உடல்நலக் குறைவால் சிதம்பரத்தில் நேற்றிரவு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், தாங்கமுடியாத துயரமும் அடைந்தேன். சோழர் பரம்பரையில் வந்த வாரிசுகள் சிதம்பரத்தையடுத்த பிச்சாவரத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிச்சாவரம் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சோழர் பரம்பரையில் வந்த சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு கடந்த 1978 ஆம் ஆண்டு சோழர்களின் குலக் கோவிலான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்களால் முடிசூட்டப்பட்டதுசோழ மன்னர்களுக்கு மட்டும் தான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் முடி சூட்டப்படும் என்பதும், சோழர்களை வெற்றி கண்ட களப்பிரர் மன்னர் கூற்றுவநாயனார் தமக்கு முடி சூட்டும்படி கோரிய போது அதை ஏற்க சிதம்பரம் தீட்சிதர்கள்  மறுத்துவிட்டனர் என்று வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதும் சிதம்பரநாத  சூரப்ப சோழனார் சோழர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றாகும்[5].

 Cholas-Kanal2

செல்லப்பன்  பேட்டையில்  நடைபெறும்   இறுதிச்சடங்குகளில்   வன்னியர்கள்  கலந்து   கொள்வார்கள்: ஆன்மிக வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் சூரப்ப சோழனாரின் முன்னோர்கள் ஏராளமான உதவிகளை செய்திருக்கின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது சூரப்ப சோழனார் குடும்பத்தினர் தான். சிதம்பரம் நடராஜர் கோயில் சிறிது காலத்திற்கு முன்புவரை இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது[6]. சமூக முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஏராளமான உதவிகளை வாரிவழங்கிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், வன்னிய குல மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்[7]. தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகில் உள்ள செல்லப்பன்பேட்டையில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

Cholas-Kanal.3

“மஹா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு 16 . 06 . 1978 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழ மன்னராக பாரம்பரிய முறைப்படி முடிசூட்டப்பட்டது. அடுத்த நாள் (17. 06 .1978 ) சோழ மன்னருக்கும் உடையார் பாளையம் சமஸ்தானம் ஜெயவிலாஸ் அரண்மனை உயர் திரு. சின்ன குழந்தை ராஜா காலாட்கள் தோழ உடையார் அவர்களின் மகள் சாந்தி தேவி என்கிற ஜெலஜகந்தி ஆயாள் அவர்களுக்கும்  உடையார் பாளையம் ஜெயவிலாஸ் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது”, என்று ஒரு இணைத்தளப் பதிவு குறிப்பிடுகின்றது[8].

09-03-2005 தினமலர் செய்திஇன்னொரு  இணைத்  தளப்பதிவு   கீழ்கண்ட   விவரங்களைக்   கொடுக்கிறது[9]: இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் “சோழனார்” என்று அழைக்கப்பட்டனர். கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம் (பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார். இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி “திருக்கை வளம்” என்ற நூலில் காணப் பெறுகிறது. இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார். இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர். இம்மரபினரில் ஒருவர் பெயர்: புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார். தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார். இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.

19-20 நூற்றாண்டுகளில்  வம்சாவளி: இந்த சோழனார் மரபில் –

 • கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார்
 • பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார்,
 • கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார்,
 • 1943 – இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார்,
 • பின்பு 1978 – இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார்

முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/8/1943 – இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த மன்னர் 19/8/1943 – இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 – இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம். அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர். இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர். பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் வன்னிய குலத்தினர் ஆவர். நடன காசிநாதன் கட்டுரையும் ஆதாரமாகக் காட்டப் படுகிறது[10].தொண்டை மண்டல முதலியார்களும் சோழ பரம்பரையில் வந்ததாகக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

குறிப்பு: குறிப்பிட்ட இணைதளங்களிலிருந்து புகைப்படங்கள் எடுத்தாளப் பட்டுள்ளது. நன்றி.


[1] மாலைமலர், சோழமன்னரின்பரம்பரையைசேர்ந்தசிதம்பரநாதசூரப்பசோழகனார்திடீர்மரணம் , பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 09, 12:35 PM IST

[4] நக்கீரன், சோழமன்னர்சிதம்பரநாதசூரப்பசோழனார்மறைவுக்குமருத்துவர்ராமதாஸ்இரங்கல்   , திங்கட்கிழமை, 9, டிசம்பர் 2013 (15:18 IST)

“ராமாயணம் – சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை”

நவம்பர் 10, 2013

“ராமாயணம் – சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை”

“ராமாயணம் – சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை” என்ற தலைப்பில் கே.எஸ். சங்கரநாராயணன் என்பவர், 09-11-2013 அன்று “தமிழ் ஹெரிடேஜ் பவுண்டேஷன்” சார்பில், வால்மீகிக்கேத் தெரியாத “இராமாயணம்” தமிழகத்தில் இருந்தது போலவும், ராமன் தமிழகத்தில் நடந்து சென்றது போலவும் சில இலக்கிய, சிற்பங்களை வைத்துக் கொண்டு பேசினார். ஏ.கே. ராமானுஜத்தின்[1] “300 ராமாயணங்கள்”, மற்றும் ஜைன-பௌத்த ராமாயணங்களையும் புகழ்ந்து விளக்கம் அளித்தார். காலக்கணக்கியல் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஏதோ ராமாயணம் தமிழகத்தில் தான் நடந்தது போன்று, அவர் பேசிய விதமும் ஆச்சரியமாக இருந்தது.  இதுவரை நாத்திகவாதிகள் தாம்[2] ஏ.கே. ராமானுஜத்தின் “ராமாயணங்களை” துணைகொண்டு வால்மீகியை தூஷித்துள்ளனர்[3].

 
வால்மீகியின் தாக்கம் உலகம் முழுவதும் இருந்தது[4]. எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள், அந்தந்த கலாச்சாரம், பாரம்பரியம் முதலிய உள்ளூர் காரணிகளூக்கேற்ப தகவமைத்துக் கொண்டு, மாற்றிக் கொண்டு இலக்கியம், சிற்பங்களை உருவாக்கியிருந்தால், அவை வால்மீகிக்குத் தெரியாதது என்றாகாது. வால்மீகி ராமாயணம் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது அல்லது அதைப் பற்றி சிற்பிகள் கவலைப்படவில்லை என்றுதான் கொள்ளமுடியும். கல்லில் எப்படி வடிக்க முடியுமோ அதுபோலத்தான் அமைத்திருப்பார்கள். இலக்கியத்திலும், எதுகை-மோனை-சொல்லாடல்கள் மற்றும் ஒப்பீடு, உதாரணம் முதலிய காரணங்களுக்காக உபயோகப்படுத்தப் பட்ட வர்ணனைகள், வார்த்தைகளை வைத்துக் கொண்டு, விளக்கம் கொடுக்க முடியாது.

 
100-700 CE: ஜைன-பௌத்த ராமாயணங்கள் காலத்தின் கட்டாயத்தினால், குறிப்பாக வெகுஜன மக்களின் ஏற்றுக் கொண்ட நிலையினால் அதனை தமகேற்றபடி மாற்றி எழுதிவைத்தனர். ஆனால், அவர்கள் அஹிம்சாவாதிகள், போரிட விரும்வில்லை என்றெல்லாம் ராமாயணம் சங்கரநாராயணன் பேசியபோது வியப்பாக இருந்தது. ஏனெனில் முதல் நூற்றாண்டுகளின் தமிழக சரித்திரம் இருண்ட காலமாக இருந்ததற்கே களப்பிரர்கள் என்கின்ற ஜைனர்கள் தாம் காரணம் என்று தமிழ் பண்டிதர்கள் கூறியுள்ளார்கள். தமிழ் கலாச்சாரம், நாகரிகம், இலக்கியங்கள் அனைத்தையும் அழித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாரதத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த அல்லது தாக்கம் கொண்டிருந்த இரு மதங்களும் குறைந்தது ஏன் என்று பார்த்தால், அவர்களது சித்தாந்தங்கள் எடுபடவில்லை என்று தெரிகிறது. அஹிம்சைவாதிகளாக இருந்திருந்தால், அப்படி ஏன் நடந்திருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

 
700-1000 CE: சம்பந்தரே அவர்களை கடுமையாகவே சாடியுள்ளார். இடைக்காலத்திலும், ஜைனர்கள்-சைவர்கள் போராட்டங்கள் கர்நாடகப் பகுதியில் அதிகமாகவே இருந்துள்ளன. சரித்திரம் அவருக்கு சரியாகத் தெரியவில்லை போலும். மேலும், தெற்காசிய மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் பரவியிருந்ததால், தமிழகத்திலும் தெரியப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

 
எச்.டி.சங்காலியா போன்ற தலைசிறந்த அகழ்வாய்வு மற்றும் சரித்திர ஆசிரியர்களின் படி, ராமர் தென்னிந்தியாவிற்கு வரவேயில்லை, லங்கையே மத்திய பிரதேசத்தில் தான் இருந்தது என்று புத்தகங்களில் எழுதியுள்ளனர். அதாவது ராமாயண லங்கை எங்கிருந்தது என்பதில் சர்ச்சை இருந்தது. பூமத்திய ரேகையில், வெகுகாலத்திற்கு முன்பு மூழ்கிய தீவுகளில் லங்கை இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அதாவது, இப்பொழுதைய இலங்கை  இராமாயண இலங்கை இல்லை என்றாகிறது. அந்நிலையில் இடைக்கால சிற்பங்களை வைத்துக் கொண்டு, ராமாயணத்தை தமிழகத்தில் சுருக்கி, இக்கால லங்கையுடன் இணைத்துப் பேசுவது சரியாகாது.  இவ்விசயங்களைப் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் உள்ளன.


[4] Chamanlal, Hindu America, Bharatiya Vidhya Bhawan;

http://navalanthivu.blogspot.in/2006/02/valmiki-and-homer-critical-study-of.html

K. V. Ramakrishna Rao, Valmiki and Homer: A Critical Study of alleged Greek influence on Ramayana, Proceedings of the 2oth International Conference on Ramayana, Tirupati, 2005, Vol.II, pp.554-581.

தொகுலுவ மீனாட்சி சௌந்தரராஜன் (1922-2013) – இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியர், பாராட்டப்படவேண்டியவர்.

மே 26, 2013

தொகுலுவ மீனாட்சி சௌந்தரராஜன் (1922-2013) – இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியர், பாராட்டப்படவேண்டியவர்.

T. M. Soundararajan 1922 - 2013

டி. எம். சௌந்தரராஜனுக்கு சிறந்த தேசிய விருது கொடுக்கப்படாதது: டி. எம். சௌந்தரராஜன் (1922-2013) சரியானமுறையில் கௌரவிக்கப்படவில்லை, மரியாதைச் செய்யப்படவில்லை, ஆதரிக்கப்படவில்லை, பாராட்டப்படவில்லை எனலாம். தமிழர், உலகமெலாம் பரவியிருக்கும் தமிழர் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு, தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தாலும், தேசிய அளவில் அவருக்கு எந்த விருதும் கொடுக்கப்படவில்லை, அதாவது, பரிந்துரைக்கப்படவில்லை[1]. தமிழன் “தமிழனை” இல்லை, “தமிழில்” பாடியவனை மதிக்கவில்லை[2]. பிறகு வந்த எஸ். பி. பாலசுரமணியம், கே. ஜே. ஜேசுதாஸ் போன்றோர் மூன்று முறை, “சிறந்த பாடகர்” என்று “தேசிய விருது” பெற்றிருக்கிறர்கள்[3]. இதற்கெல்லாம் காரணம் தமிழர், தமிழ் அரசியல்வாதிகள், குறிப்பாக நாத்திகம் பேசிவந்த-வரும் திராவிட அரசியல்வாதிகள் தாம். இதுதான் உண்மை. ஒரு தெலுங்கனுக்கு, ஒரு மலையாளிக்கு பரிந்துரைக்கலாம், ஆனால், ஒரு சௌராஷ்டிரனுக்கு பரிந்துரைக்கக் கூடாது, அதிலும் தெய்வபக்தி பாடல்கள் பாடும், வடஇந்தியனுக்கு சிறப்பு சேரக்கூடாது என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது[4]. தமிழர்களுக்கே அத்தகைய மனப்பாங்கு, வித்தியாசம், துவேஷம் இருந்தபோது இன்னும் இருக்கும்போது, வடஇந்தியர்களை என்னசொல்வது?

TMS Karnataka music concertகர்நாடக சங்கீதத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர்: டி. எம். சௌந்தரராஜனின் [Thoguluva Meenatchi Soundararajan] தந்தையின் பெயர் மீனாட்சி ஐயங்கார், அவருக்கு இவர் இரண்டாவது மகன் ஆவர். புரோகிட குடும்பத்தில் பிறந்தவர், இவரது சகோதரர் சிறந்த வேதப் பண்டிதர்[5]. TMS singing - AVM, Susheela, Karunanidhi, Lata Mangeskarஏழு வயது முதலே சங்கிதத்தைக் கற்று வந்தவர். சின்னகொண்ட சாரங்கபாணி தேசிகர் என்பவரிடத்தில் கர்நாடக சங்கீதம் பயின்றவர். மதுரையில் சௌராஷ்டிர பள்ளிக் கூடத்தில் இருந்த இசை ஆசிரியர் ஆவர். பிறகு அரியக்குடி ராஜாமணி ஐயங்காரிடத்தில் இசைக் கற்றுக் கொண்டு தனது 23 வயதில் மேடையில் பாட ஆரம்பித்தார். முதன்முதலில் மதுரையிலுள்ள சத்குரு சமாஜம் என்ற சபையில் 1945ல் முதல் கச்சேரி செய்தார். 1946-2013 காலத்தில் 10,000ற்கும் மேலாக பல பாடல்கள், 2500 பக்தி பாடல்கள் முதலியவற்றை, எல்லா மொழிகளிலும் பாடியுள்ளார்[6]. 1957-2012 காலத்தில் கர்நாட இசைக் கச்சேரிகளும் செய்துள்ளார்.

TMS_familyடி. எம். சௌந்தரராஜனின் வருத்தம்: திறமை இருந்தும் ஆரம்ப காலங்களிலிருந்தே, ஒதுக்கப்பட்டவர் டி. எம். சௌந்தரராஜன் எனலாம், இதை அவர் தனிமையில், சில நண்பர்களிடம் சொல்லிக் கொண்டுள்ளார். 2000களில் வெளிப்படையாகவே தன்னைப் பார்க்க வந்தவர்களிடம், தனக்கு பாட சந்தர்ப்பம் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்[7]. தனது மகன் செல்வ குமாருக்கு பாட சில சந்தர்ப்பங்கள் கிடைத்தது, பிறகு கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். பிறகு இரண்டு மகன்களும் இவரது குரலில், இவரோடு பாடி வந்தனர். “கானா பாட்டு” என்ற பெயரில் தனது முருகர் பாடல்களை அவமதித்துள்ளதைப் பற்றி நிரம்பவே வருத்தப்பட்டுள்ளார். குறிப்பாக, சிலர்[8] வேண்டுமென்றே அவ்வாறு செய்வதைக் கேள்விபட்டு மிக்கவே வருந்தினார்.

Hindi film singersஇந்திபாடகர்களப் போல டி. எம். சௌந்தரராஜன் கௌரவிக்கப் படவில்லை, பாராட்டப்படவில்லை: என்னைப் பொறுத்தவரையில் கே. எல். சைகல், முகேஷ், தலத் மெஹ்மூத், மன்னா டே, ஹேமந்த் குமார், மஹேந்திர கபூர், கிஷோர் குமார், முஹமது ரபி எல்லோருமே பிடிக்கும், அவர்கள் பாடல்களை கேட்டிராத இந்தியனே இல்லை எனலாம். அதே போலத்தான் கண்டசாலா, ஜேசுதாஸ், ராஜ் குமார் முதலியோரும். நிச்சயமாக இவர்களைப் போல, ஏன் சில விஷயங்களில், இவர்களையும் விட சிறந்த பாடகர் டி. எம். சௌந்தரராஜன் தான். இவரைப் போல ஒவ்வொரு நடிகனுக்கு அவரவர் குரலில் பாடி, கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும், கண்களை மூடிக் கொண்டு பாடலைக் கேட்டாலும், அந்த பாடல் யாருக்காக டி. எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார் என்பதனை சொல்லிவிட முடியும். அத்திறமை நிச்சயமாக மற்ற பாடகர்களிம் இல்லை. அப்படி அவர்கள் ஒருவேளை முயற்சி செய்திருந்தாலும், அவர்களது இயற்கை குரல் பல இடங்களில் பாடகரைத் தான் நினைவூட்டுமே தவிர, அப்பாடல் பாடப்பட்ட நடிகனை நினைவூட்டாது. அதாவது, அவர்கள் செய்த தவறுகள் அவர்கள் இன்னார் என்பதனைக் காட்டி விடும், காட்டி இருக்கின்றன. தமிழ் உச்சரிப்பே காட்டிக் கொடுத்து விடும். ஆனால், டி. எம். சௌந்தரராஜன் ஒரு விதிவிலக்கு[9].

Tamil-Hindi film singersகடைசி நேரத்தில் கூட ஒதுக்கப் பட்டார்: நேற்று, 25-05-2013 (சனிக்கிழமை) டி. எம். சௌந்தரராஜன் வீட்டிற்கு வந்திருந்தவர்கள் கூட, பெரும்பாலும், ஏதோ வரவேண்டுமே என்ற எண்ணத்தில் தான் வந்திருக்கிறார்கள். ஊடகக்காரர்கள், ஏதோ நேரிடை ஒளி-ஒலிபரப்பு செய்கிறோம் என்று கேவலப் படுத்தியிருக்கிறார்கள். ஏதோ முதன்முதலாக அத்தகைய வேலைக்கு ஒத்திகை பார்த்த மாதிரி இருந்தது. அவர்கள் அவேலையைச் செய்யாமலிருந்தாலே நண்ராக இருந்திருக்கும் போலிருந்தது.

குறிப்பு: இணைதளத்திலிருந்து புகைப்படங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. அனைவருக்கும் நன்றி, இத்தளத்திலிருந்து புகைப்படங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன – http://tmspadam.blogspot.in/ – நன்றி. இவருடைய டளம் மிகவும் அருமையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

26-05-2013


[1] தேசிய விருது கொடுக்கப்பட வேண்டுமானால், அந்தந்த மாநிலத்திலிருந்து பெயர் பரிந்துரைக்கப் படவேண்டும். அவரைப் பற்றிய விவரங்கள் அனுப்பப்படவேண்டும். பிறகு, மத்தியில் “ரெகமன்டேஷன்” தேவை. அப்பொழுதுதான் விருதுகள் கிடைக்கும். “பத்மஶ்ரீ” விருதுகளைப் பெரிதாக நினைக்க வேண்டாம், அது தீவிரவாதிகளுக்கு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது!

[2] எம். எஸ். சுப்புலட்சுமிக்குக் கூட சிறப்பாக, பெருமையாக, திருப்பதியில் எல்லோரும் பார்த்து வியக்கும் வண்ணம், ஆந்திராக்காரர்கள் தாம் வைத்திருக்கிறார்கள், தமிழர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. காற்றினில் கீதங்கள் கரைந்ததோடு சரி!

[3] ஒப்புமைப்படுத்தி சொல்லப்படவில்லை, ஆனால், திறமை இருந்தும் பரிந்துரை செய்ய ஆட்கள் தேவை என்பதைத்தான் சுற்றிக் காட்டப்படுகிறது. தமிழகத்தில் வலுவுள்ள அரசியல்வாதிகள் இருந்தாலும், அவர்கள் தங்களைத் தாமே போற்றி பட்டங்களைக் கொடுத்துக் கொண்டு, பாராட்டு விழா நடத்தினார்களே தவிர டிஎம்சை நிச்சயமாக ஒதுக்கிவைத்தனர்.

[4] இதெல்லாம், இத்தகைய சொற்றொடர்கள் எல்லாம், வாதத்திற்காக, குறிப்பாக திராவிட சித்தாந்திகளுக்கு உரை/உறைப்பதற்காக உபயோகப்படுத்தப் படுத்தப் பட்டுள்ளது, மற்றபடி எந்த மொழியாளர்களின் மீதும் எந்த விதமான வெறுப்புடன் கூறப்படவில்லை.

[5] இதெல்லாமே போதும், ஏன் அவர் தேசிய விருதுகளைப் பெறமுடியவில்லை, குறிப்பாக, தமது மாநிலத்திலிருந்து பரிந்துரைக்கப்படவில்லை என்பதற்கு. இதே வேறொரு மாநிலத்தவராக இருந்தொரிந்தால், இந்நேரம் எங்கேயோ சென்றிருப்பார் டி. எம். சௌந்தரராஜன்.

6 இந்தியில் கூட பாடியுள்ளார், ஆனால், தமிழகத்தில் இருந்து வந்தவர் என்று ஒருசில பாட்டுகளோடு அனுப்பி வைத்து விட்டார்களாம். இதை அவரே சொல்லிக் கொண்டுள்ளார்.

[8] இது விஷமத்தனமாகச் செய்யப்பட்டது தான். ஏனெனில், முன்னமே இதைப் பற்றி விவாதம் வந்துள்ளது. மது அருந்துதல் பற்றி ஒரு பாட்டு உபயோகப்படுத்தப்பட்டது குறித்து, ஒருவர், “இறைவனிடம் கை ஏந்துகள்” என்ற பாட்டை, “பாட்டிலை கையேந்துங்கள், கிக் வராமல் இருப்பது இல்லை” என்று ஒரு பாட்டு “கானா பாட்டாக” வந்தால், முஸ்லீம்கள் சும்மா இருப்பார்களா என்று கேட்டபோது மௌனமாகி விட்டனர்.

[9] இந்த விதிவிலக்குதான், தமிழர்களும் மற்ற இந்தியர்களும் அவரை ஒதுக்கிவிட்டனர் போலும்!

மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

மே 19, 2012

மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

சமீபத்தில், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.

ஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

முஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.

முஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.

இஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது?

விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://tamilheritage.wordpress.com/2010/01/02/madurai-pontiff-confronting-with-christians-muslims/