Archive for the ‘சண்மதங்கள்’ Category

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்-ராகவேந்திரர் போன்றோர் சைவ-வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [1]

ஜூலை 5, 2020

தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்ராகவேந்திரர் போன்றோர் சைவவைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [1]

90 years King Rama Raya treacherously beheaded by the Mohammedans on the battle field of Talikota in 1565.

இடைக்காலத்தில் தமிழகத்தில் இருந்த இக்கட்டான நிலை: சோழர்களின் மறைவுக்குப் பின்னர், பாண்டியர்களின் ஆட்சி-அதிகாரம் வலுவில்லாமல் போனதால், துலுக்கரின் படையெடுப்பு, தென்னிந்தியாவின் பக்கம் திரும்பியது:

  1. 1310-11களில், தமிழகம் துலுக்கரின் படையெடுப்பு, கோவில்கள் இடிப்பு, செல்வத்தை கொள்ளையெடித்தல் போன்றவற்றை மாலிகாபூரின் வரவிலிருந்து அறிந்து கொண்டனர்.
  2. வீரவல்லாளன் (1291-1348) தமிழகத்தைக் காக்க அந்நியரை எதிர்த்து வீரமரணம் எண்பதாவது வயதில் எய்திய மாபெரும் வீரன். கியாசுத்தீன், அவரைக் கொன்று, உடலில் வைக்கோல் அடைக்கப்பட்டு, மதுரை கோட்டையின் மதிற்சுவற்றின் சுவரிலிருந்து தொங்கவிடப்பட்டது.
  3. 1335-1378 வரை மதுரையில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. பல கோவில்கள் ஆக்கிரமிக்கப் பட்டன.

அதாவது வீரவல்லாளனை இன்றைக்கு “கன்னடக்காரன்” என்று தமிழ் சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஒதுக்கலாம், மறைக்கலாம், ஆனால், அவன் தான் துலுக்கரை, துணுங்கரை முறையாக எதிர்த்து 80 வயது வரை போராடியுள்ளார். அதேபோல விஜயநகர அரசர் ராமராயர் 1565ல் தலைக் கோட்டைப் போரில் வீழ்ந்தபோது வயது 90. உண்மையில் இவர்கள் தான் இது மதத்திற்காக முதுமையிலும் போராடி வீரமரணம் எய்திய வீரர்கள், தியாகிகள் ஆவார்கள்[1]. அந்நிலையில், கோவில் புனரமைப்பு, பாதுகாப்பு, போன்றவை மடகுருக்களுக்கு, மடாதிபதிகளுக்கு, நம்பிக்கையாளர்களுக்கு தலையான கடனாகியது, கடமையாகியது. இதில் விஜயநகர, நாயக்க மன்னர்கள் மிகப்பெரிய தொண்டினை ஆற்றியுள்ளனர். ஆனால், மதம் மாறிய ஜைன-பௌத்தர்களின் ஊடுருவல் சித்தாந்தங்கள், இந்துக்களைக் குழப்பியிருந்தது. தேவையில்லாத சைவ-வைணவ வாத-விவாதங்கள் மூலம் திரிபுகளை உண்டாக்கி, நம்பிக்கையாளர்களைப் பிரித்துக் கொண்டிருந்தன.

Ramanuja, Madhwa, Basava

மாற்று மதங்களின் தாக்கங்களில் துவைதம் முக்கியத்துவம் பெற்றது: ஒரு நிலையில் சிவன் பெரிய கடவுளா, விஷ்ணு பெரிய கடவுளா, என்ற நிலைக்கு வந்தது. மத்வாச்சாரியார் தென்னிந்திய விஜத்தின் போது, எப்படி அவர் தூஷிக்கப் பட்டார், நூல்கள் பறிமுதல் செய்யப் பட்டன போன்ற விவரங்கள் திகைப்படையச் செய்கின்றன[2]. சிருங்கேரி மடம் அதில் சம்பந்தப் பட்டது, அதற்கும் மேலான ஆச்சரியம் தான். அந்நிலையில் ராமானுஜர் (1017-1137)-மத்வர் (1238-1317 / 1199-1278) போன்றோரின் வாதங்கள் மக்களின் மீது தாக்கம் இருந்தது. பசவரும் (1105-1167) அதே காலத்தில், வீரசைவம் மூலம், ஜைனர்களின் தாக்கத்தை அடக்கினார். கர்நாடகாவில் ராமானுஜர்[3], பசவர் இருந்திருததால், சந்தித்தனரா என்று தெரியவில்லை. ராமானுஜர் 1078 முதல் 1090 வரை மேலுகோடாவில் இருந்தால், பசவர் தனது 27 முதல் 39 வரை வயதினில், நிச்சயம் பார்த்திருப்பார். அந்நிலையில் தான், இந்துக்களை ஒன்று படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தத்துவம் கூட மக்களை இணைக்க உபயோகப் படுத்த வேண்டும். அபாய காலத்தில் வீரத்துடன் எழுந்து போராடி காத்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களையும் காக்க வேண்டும், அந்நிலையில் கடவுள் எல்லோரிடத்திலும் இருக்கிறார், கடவுள் தான் வந்து கோவிலை இடிக்கிறார், விக்கிரங்களை உடைக்கிறார்,…..என்றெல்லாம் நினைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது[4]. அந்நிலையில் தான், அவன் வேறு, அதனால் தான் அவன் அவ்வாறு செய்கிறான், அதனால், அவனை எதிர்த்துப் போராட வேண்டும் என்று “அத்வைதம்” மற்றும் “விசிஸ்டா-துவைதம்” போதிக்க வேண்டிய அவசியம் உண்டானது.

Madhwacharya sculpture full

மத்வாச்சாரியார் காலம் (1238-1317 / 1199-1278)[5]: மத்வாச்சாரியார் உடுப்பியில் மடத்தை ஏற்படுத்தி, துவைத சித்தாந்தத்தைப் பரப்பினார்[6]. இவரது சீடர்களான – பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்ஷோப்ய தீர்த்தர், ஜெய தீர்த்தர், வித்யாதி தீர்த்தர் முதலியோர், பாரதத்தின் பல பகுதிகளில் துவைத சித்தாந்தத்தைப் பரப்பினர். உத்திராதி மடம், வியாசராய மரடம் மற்றும் சுசீந்திர மடம் என்றாகியபோது[7], விஜயீந்திர தீர்த்தர் (1514-1595), வியாசராயர் சீடர்களில் ஒருவர், மற்றவர் – புரந்தரதாசர் (1484-1564), கனகதாசர் (1509-1609), வாதிராஜர் (c.1480-1560).  இவர்கள் எல்லோரும், ஜாதி முதலியவற்றைப் பாராமல், பக்தி என்ற முறையில் கீர்த்தனைகளைப் பாடி, மக்களை இணைத்தனர். உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

Madhwacharya with Vyasa and others

மத்வாச்சாரியார், சைவத்தை அனுசரித்து, ஆதரித்துச் சென்றது: குறிப்பாக, மத்வாச்சாரியார், சிவனை உயர்வாக மதித்தார். சிவல்லி சைவம் பின்பற்றிய சமூகத்தில் பிறந்ததால், தனது சிறு வயதில் சிவலிங்கத்தை வணங்கி வந்தார். தன்னுடைய எழுத்துகளில், எங்குமே சிவனைப் பற்றி வெறுப்பு உண்டாக்கும்விதமான விவரங்கள் இல்லை[8]. கர்நாடகாவில் சிவன் கோவில்கள் அதிகம் ஏன்,  உடுப்பி மடம் வளாகத்திலேயே சிவன் கோவில்கள் உள்ளன. இதனால், விஷ்ணுலிங்கம், சிவலிங்கம் என்றும் உபயோகத்தில் இருந்தன[9]. ஆனால், அவை அப்படியே பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. சைவர் விஷ்ணுமற்றும் பிரம்மாவை லிங்கத்தின் அடிமுடி தேடிச் சொல்லும் கதைகளைப் புனைந்து, சைவ-வைணவர்களைப் பிரிக்கும் காலத்தில், இவர் இத்தகைய ஒற்றுமையை உணர்த்தினார். தெற்கு நோக்கி, தக்ஷிணாமூர்த்திக்கு பதிலாக, லிங்கோத்பவர் வைக்கும் முறையும் சைவ-வைணவர்களைப் பிரிக்கும் திட்டம் தான். பிறகு லிங்கத்திலேயே பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் பாகங்கள் உள்ளன என்று விளக்கம் அளிக்கப் பட்டது. இதுதான், மத்வர், மத்வ சம்பிரதாயம் முதலியவற்றின் சிறப்பு அம்சம். அதனால் தான், விஜியேந்திரர் காலத்தில், கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்கள் எல்லாம் சிறப்பாக நிர்வகிக்கப் பட்டன. மத்வருடைய அணுகுமுறையை, ஐரோப்பியர், கிருத்துவ மிஷினரிகள் மற்றும் சூபி போர்வையில், சிலர், இவர் கிருத்துவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் ஈர்க்கப் பட்டார் என்றெல்லாம் எழுதினர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று எடுத்துக் காட்டப் பட்டது. அவர்களுக்கு அதே வேலை என்பதால், அத்தகையவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

04-07-2020

chandramouleeswarar temple, udupi mutt

[1] இவர்களைப் பற்றியும் முறையாக, தமிழ் சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதுவதில்லை. ஒருவேளை “செக்யூலரிஸமாக” இருந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

[2] C. N. Krishnamurthy Iyer and S. Subba Rao, Sri Madhwacharya – a Skketch of his life and times and his philosophical system, G. A. Natesan & Co., Madtas, Chapter-V, pp.43-51.

[3] இராமானுசர் சோழ மன்னனின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கர்நாடக மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்றழைக்கப்படும் திருநாராயணபுரம் என்ற ஊரில் அமைந்த திருநாராயணன் கோவிலுக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் தங்கியிருந்தார்.

[4]  சூபித்துவம் போர்வையில், நிறைய சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முதலியோர் அத்தகைய திரிபு விளக்கங்களை அளித்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால், கோவில்களில் தங்கம் இருந்ததால் தான் கொள்ளை அடித்தார்கள் என்று ரோமிலா தாபர் போன்றோர் திரித்து எழுதியுள்ளனர். உருவவழிபாடு கூடாது என்றாதால் தான் அவர்கள், விக்கிரங்களை எல்லாம் உடைத்தச்ர்கள் என்று முஸ்லிம்களில் விளக்கமும் உண்டு. அதாவது உண்மையினை மறாஇக்க, இவ்வாறு ஒன்று சேர்ந்து கொண்டுள்ளனர் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

[5] C.M. Padmanabha Char, The Life And Teachings of Sri Madhvacharyar, The Progressive Press, Madras, 1909. About the date, see. Chapter-III, pp.25-33.

[6] Alur Venkat Rao, A Hand Book Of Madhwacharya Poorna Brahma Phisolophy, Navajeevan Grantha Bhandar, Sadankeri, Dharwar, 1954.

[7] C. N. Krishnamurthy Iyer and S. Subba Rao, Sri Madhwacharya – a Sketch of his life and times and his philosophical system, G. A. Natesan & Co., Madtas, p.40.

[8] Sri Madhva’s attitude towards Siva is very differerent. He found that Siva was the popular deity of the country He was probably born a Shivalli Saivite himself. He found South Canara in particular full of temples where the Lingam was the idol of worship, and Bootastans, invariable adjuncts thereof. In the Ananteswara, Chandramouleswara, Kanana Devata, Veda Bandeswara temples, where he often worshipped in his youth, it is the Lingam that forms the image, though some of these Lingams are considered to be representations of Vishnu and not of Siva. In Sri Madhva’s system, Siva occupies one of the highest ranks, he being placed next to the Four-faced Brahma, Vayu, and their consorts. Madhwas freely visit the temple of Siva, and worship this deity. There is not the least trace of rancour m any references or allusions to this deity in Madhva writings.

C.M. Padmanabha Char, The Life And Teachings of Sri Madhvacharyar, The Progressive Press, Madras, 1909, p.158.

[9] C.M. Padmanabha Char, opt.cit, p.12.

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)

திசெம்பர் 25, 2017

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)

SIC-3, announcement

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3): சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடப்பதாக சில நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால், உள்ளே செல்வதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும், அடையாள அட்டை / ஆதார் கார்ட் போன்றவை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது. மேலும், பதிவு செய்ய ரூ 500/- என்றும் குறிப்பிடப்பட்டது. இதே தேதிகளில் இந்திய பொறியாளர் மாநாடும் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளது. அதனால், நேரில் பார்த்தது, கேட்டது, மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து பெற்ற விவரங்களுடன், இந்த தொகுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. சென்ற 2016 மாநாடு கூட, யாருக்கும் தெரியாமல் நடத்தப் பட்டதாக உள்ளது[1].

IC - SR building, IIT

தமிழகம்தருமத்தின் பூமிஎன்ற பிரதான தலைப்பின் கீழ் நடத்தப்படும் மாநாடு:  இம்மாநாட்டின் மாநாடு ஐ.சி,எஸ்.ஆர் [IC & SR Building] வளாகத்தில் நடந்தது. “தமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் இம்மாநாட்டின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 50-60 வருடங்களாக தமிழக சமூக-அரசியல் சிந்தனைகளை திராவிட இனவாத தத்துவம் ஆதிக்கம் செல்லுத்தி வந்தமையால், அது தமிழக மக்களின் கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக மதிப்புகளை அதிகமாகவே பாதித்துள்ளன. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் போன்றவை, “திராவிடப்”போர்வையில், இந்திய-பண்டைய பாரதகலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகளுலிருந்து வேறுபட்டவைப் போன்று சித்தரிக்கப் பட்டு, அவ்வாறே பள்ளி-கல்லூரி பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டுள்ளன. “தனித்தமிழ் இயக்கம்” இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பெரியாரிஸ, திராவிடஸ்தான், மாநில-சுயயாட்சி, தனித்தமிழ்நாடு போன்ற கொள்கைகள், சித்தாந்தங்கள், இயக்கங்கள், தமிழ்நாட்டை, இந்தியாவிலிருந்து பிரிக்க முயற்சித்தன. ஆனால், சங்க இலக்கியங்களில் அத்தகைய நிலையில்லை. அக்காலத்து மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகள், பாரத்தத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகளுடன் ஒத்தேயிருந்தன. இந்நோக்கில் இந்த மாநாடு நடத்த உத்தேசித்தது[2].

Oduvar Sanmugasundaram

மாநாட்டின் குறிக்கோள் மற்றும் அடையும் நோக்கம்[3]: தமிழகம் இந்திய யூனியனில் ஒரு மாநிலமாக [State] இருக்கின்றது[4]. அதன் நீண்ட சரித்திரத்தில் பலவகை தார்மீக முறைகள், பல்வேறு காலங்களில் இருந்து வந்துள்ளன. அவை ஜைன-பௌத்த மதங்களாக [குறிப்பாக ஜைனம்] இருந்து சைவ-வைணவ மதங்களில் கலந்தன. இருப்பினும் ஒருபக்கம் ஜைன-பௌத்த சித்தாந்தக் குழுக்களும், இன்னொருபக்கம் சைவ-வைணவ சித்தாந்தக் குழுக்களும் எதிரும்-புதிருமாக நின்றநிலையில், வன்முறையான மோதல்களும் ஏற்பட்டன. சிலப்பதிகாரம் துர்க்கையை புகழ்ந்தாலும், ராமரின் அவதாரத்தையும் சிறப்பிக்கிறது. சைவ நாயன்மார்களில் மிகவும் தீவிரமான துறவியாக இருந்த [the most militant Saivite saint] சம்பந்தர், 8,000 ஜைனர்களை தோலுரித்துக் கொன்றதாக, சைவ சம்பிரதாயம் கூறுகின்றது. சம்பந்தரை “மிலிடென்ட்” என்று குறிப்பிட்டது திகைப்பாக இருந்தது[5]. அத்தகைய வார்த்தை பிரயோகம் ஏன் உபயோகிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.

Sethu Saama ghosham by Ganeshan Shastry.

மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகளுக்கான தலைப்புகள்[6]: கீழ்கண்ட தலைப்புகளில் பாடித்தியம் மிகுந்த, பாரபட்சம் இல்லாமல், சுவதேசி கோணத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இப்பொழுதுள்ள ஆய்வுக்கட்டுரைகள், பிஎச்.டி கட்டுரைகள், முதலியவற்றை ஆய்ந்து, அகழ்வாய்வு ஆதாரங்களோடு, மூலநூல்களைப் படித்து கருத்துகளை பதிவிட வேண்டும்.

  1. ஆன்மீக நீரோட்டங்கள்:
  2. திராவிட இயக்கத்தை ஆய்வது மற்றும் ஆதாரங்கள்:
  3. நவீன இந்து-எதிர்ப்பு மற்றும்திராவிட இயக்கம்.
  4. ஜாதியம், தீண்டாமை மற்றும் இந்து மதம்.
  5. தமிழக ஆன்மீக பாரம்பரியங்கள் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்திருந்தன என்பதனை மறுபடியும் அறிவிக்கப்படுதல் மற்றும் தமிழகத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுதல்.

Sambandar - the most militant saint

முதல் நாள் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) நடந்த விவரங்கள்: 22-12-2017 (வெள்ளிக்கிழமை) காலை 8.30க்கு, சரஸ்வதி வந்தனத்துடன், வேத-தேவாரப் பாடகளுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கப் பட்டது. ராஜிவ் மல்ஹோத்ரா பேசும் போது, “தமிழ் உலகத்திலேயே தொன்மையான மொழி”  என்றெல்லாம் பேசினார்.

  1. தமிழ் மிக்கப் பழமையான மொழி
  2. இடைவெளி இல்லாமல், தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றது.
  3. இன்றளவிற்கும், கோடிக்ககணக்கான மக்களால் பேசப்பட்டு வருகின்றது.

என்று எடுத்துக் காட்டினார்.

காலை 9.25-9.40: ஶ்ரீ வல்லப பன்சாலி என்பவர் [chairman, ENAM secuirities and founder of Satya Vigyan Foundation], இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம், தத்துவம்…என்று பொதுவாக பேசினார்.

9.40 முதல் 9.55 வரை: ஶ்ரீ மோஹன்தாஸ் பை என்பவர் [chairman, Manipal Global Educational Services], இந்தியனின், தனிப்பட்ட அடையாள எப்படியிருக்கிறது, ஒரு பிரஜையால் அடையாளங்காணப்படுகிறது என்று எடுத்துக் காட்டினார். தான் ஒரு பிராமணன், சாரஸ்வத பிரிவைச் சேர்ந்தவன், கர்நாடகாவில் வாழ்பவன், ……என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். இப்படி பன்மைமுக காரணிகள் இருந்தாலும், இந்தியர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். முன்பு ஒரு நண்பர் 300 ராமாயணங்கள்[7] இருந்ததாக, இருப்பதாக சொன்னார். ஆமாம், 300 என்ன, 3000 ராமாயணங்கள் கூட இருக்கலாம், ஆனால், ராமாயணக் கதை ஒன்றுதான், அதனை மாற்ற முடியாது, அது போன்றதுதான், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் காரணிகள்…இந்திய இப்பொழுதுள்ள இடதுசாரி சிந்தனைக்கு மாற்று அவசியம்..நூருல் ஹஸன் என்ற காங்கிரஸ் அமைச்சரால் புகுத்தப் பட்ட அத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தம் எதிர்க்கப்பட வேண்டும்…என்றார்.

Nagasamy addressing

9.55 முதல் 11.00 வரை: திரு நாகசாமி எவ்வாறு மனுதர்மம் இப்பொழுதைய இந்தியா மட்டுமல்லாது, இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் போற்றப்பட்டு வந்துள்ளது என்று எடுத்துக் காட்டினார். திருக்குறள் தர்மசாஸ்த்திரங்களை ஒட்டியே எழுதப்பட்டது. தர்ம-அர்த்த-காம-மோட்ச சித்தாந்தத்தில் தான் அது உள்ளது. பல்லவகல்வெட்டுகளில் மனு குறுப்பிடப்பட்டுள்ளான். சோழர்கள் மனுவழி வந்தவர்கள். 8ம் நூற்றாண்டு-பாண்டிய கல்வெட்டு, எவ்வாறு, ஒரு நீதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றால், தருமசாஸ்திரங்கள் பரீட்சையில் தேறியிருக்கவேண்டும் என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். கம்பராமாயணத்தில் மனு குறிப்பிடப்பட்டுள்ளது – வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும், குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ,  மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே,  வஞ்சமன்று மனு வழக்காதலால் அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன், என்று எடுத்துக் காட்டினார்.  “மனு விளங்க ஆட்சி நடாத்திய” என்று 13ஆம் நூற்றாண்டுவரையிலும் சோழனும் பாண்டியனும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

© வேதபிரகாஷ்

25-12-2017.

Tamilnadu, the land of Vedas-Nagasamy

[1] Times of India, IIT-M meet on ‘swadeshi Indology’ irks academic community, TNN | Jul 10, 2016, 01.00 AM IST.

A three-day ‘closed door’ conference on ‘Swadesi Indology’ anchored by NRI writer Rajiv Malhotra, known for his pro-Hindutva views, on the IIT Madras campus has raised the hackles of a section of students and faculty members, at a time when earlier meetings by a few other ‘groups’ have been discouraged.

 

https://timesofindia.indiatimes.com/city/chennai/IIT-M-meet-on-swadeshi-Indology-irks-academic-community/articleshow/53135190.cms

[2] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பல்ல, சுர்க்கமும் அல்ல, முக்கியமான கருத்துகளின் தொகுப்பாகும்.

[3] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பாகும். இது நிச்சயமாக சைவத்திற்கு எதிரான போக்கைக் காண்பிக்கின்றது.

[4] Tamil Nadu is one of the states of the Indian Union which has seen all the major dharmic systems thrive at various times in its long and hoary history.https://swadeshiindology.com/si-3/call-for-papers/

[5] And even Gnana Sambandar considered the most militant Saivaite saint against the Jains, who allowed 8000 Jains to impale themselves according to Saivaite tradition,……………..https://swadeshiindology.com/si-3/call-for-papers/

[6] SCI-3, guidelines for paper presenters.

[7] Ramanujan, A. K. “Three Hundred Ramayanas.” Five examples and three thoughts on translation” in Many Ramayanas-The Diversity of a Narrative Tradition in South Asia, ed. Paula Richman (Delhi, 1992) (1991).

திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்!

ஓகஸ்ட் 14, 2011

திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்!

மடங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது: 2002ல் பரபரப்பாக தினமும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. 650 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும், அத்தகைய மடம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது அடியார்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. சொத்துக்களை நிர்வகிக்கத் தெரியாமல், மடாதிபதிகள் இருப்பது, அரசியல் சார்புடன் குத்தகைக்கு விடுவது, அத்தகைய ஆட்களை கோவில்களில் தக்கார் போன்ற வேலைகளுக்கு நியமிப்பது முதலியவை மடங்களில் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. கடந்த ஆட்சியில், தமிழக மடங்கள் மிரட்டப் பட்டன, மறைமுகமாக பணம் கொடுக்கச் சொல்லியும் வற்புறுத்தப் பட்டன என்று மடாதிபதிகள் புழுங்கிக் கொண்டிருந்தனர். செந்தமிழ் மாநாட்டில் கூட அவர்கள் ஒதுக்கப்பட்டது, மற்றும் இந்து மதத்திற்கு உரிய இடம் அளிக்காதது முதலியவை கருணநிதியின் மனத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. இந்நிலையில் திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் உட்பட 11 பேருக்கு செசன்ஸ் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்தை கொல்ல முயற்சி? அப்பொழுதைய செய்தி:  திருவாவடுதுறை:செவ்வாய்க்கிழமை, ஜூலை 9, 2002, திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாகக் கருதப்படும் 4 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்[1].  நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை ஆதீனம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இதன் 23வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் மற்றும்சொத்துக்கள் உள்ளன.

07-07-2002 கொலை முயற்சி: நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜையில் கலந்து கொண்டு விட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார் சிவப்பிரகாச சுவாமிகள். அப்போது அவருடைய மெய்க்காப்பாளரான வரதராஜன் மாடியில் உள்ள மடாதிபதியின் படுக்கையறைக்குச்சென்றார். அந்த அறையின் அருகே அடையாளம் தெரியாத நான்கு பேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டவுடன் அந்த நான்கு பேரும் வேகமாகத் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து மற்ற ஆதீன ஊழியர்களும் ஓடி வந்து அவர்களைத் தேடினர். ஆனால் அதற்குள் அந்த மர்மமனிதர்கள் எங்கோ ஓடி மறைந்து விட்டனர்.

விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சி: அவர்கள் ஓடுவதற்கு முன் அந்த அறைக்கு அருகிலேயே விஷ ஊசி, தலையணை, கையுறைகள் மற்றும் கயிறு ஆகியவற்றைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிவப்பிரகாச சுவாமிகள் படுக்கையறைக்கு வந்தவுடன் அவரைக் கொலை செய்வதற்காகத் தான் அந்நபர்கள்வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள மடாதிபதியின் படுக்கையறைப் பக்கம் வெளி நபர்கள்யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. எனவே மடத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தான் அங்கு வந்திருக்கக் கூடும் என்று போலீசார்சந்தேகப்படுகின்றனர். தப்பியோடிய நான்கு பேரையும் தேடும் பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

08-07-2002: இளையபட்டம் தற்கொலை முயற்சி:  திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய சிலர் முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் அதன் துணைமடாதிபதி நேற்று மாலை அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்[2]. இது நாடகமா அல்லது கொலை முயற்சியில் தப்பித்துக் கொள்ள செய்த செயலா என்று தெரியவில்லை. இருப்பினும், கொலை முயற்சியில், இவர் சந்தேகிக்கப் பட்டார். ஆனால், மயங்கிய நிலையில் கிடந்த அவரை மடத்தின ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். தன் மீது எல்லோரும் சந்தேகப் பார்வை வீசுவதால் இந்தத் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் அவர் கூறினார்.

முன்னாள் ஊழியர் உள்பட 5 பேர் கைது: திருவாவடுதுறை: மூத்த மடாதிபதியை கொல்ல சதி செய்த இளைய மடாதிபதி கைது[3]:  இந் நிலையில் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப் படை போலீசார் மடத்தில் வேலை செய்த சாமிநாதன், தியகராஜன்ஆகிய 2 ஊழியர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர். இதில் சாமிநாதன், தியாகராஜன் ஆகிய இருவரையும் சமீபத்தில் பெரிய மடாதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்தார். இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். கூலிப் படையின் மூன்றாவது நபரான தமிழ்ச்செல்வன் தனது மனைவியை மடத்துக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியையாக சேர்க்கமுயன்றார். இதற்கு மடாதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இவர் மடாதிபதி மீது அதிருப்தியுடன் இருந்தார். இவர்கள் தவிர சக்திவேல், சிவக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் பணத்துக்காக இந்தக் கொலைசெய்ய முன் வந்தவர்கள். இந்தக் கும்பலுக்கு தலைவனாக சக்திவேல் இருந்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது இளைய மடாதிபதி தான் இந்தக் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாத் தெரியவந்துள்ளது. சொத்துக்களை அபகரிக்கவும், மூத்த மடாதிபதி பதவியைப் பிடிக்கவும் இளைய மடாதிபதி இந்த சதித் திட்டம் போட்டுள்ளார். மேலும் இந்தக் கும்பலை தனது அறையில் பதுங்கியிருக்கச் செய்தும் இளைய மடாதிபதி உதவி செய்திருக்கிறார். தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைய மடாதிபதி இன்று கைது செய்யப்பட்டார்.

மூத்த மடாதிபதி மீது இளையவர் புகார்: இந் நிலையில் இளைய மடாதிபதி காசி விஸ்வாநாதனை கொலைப் பழியில் சிக்க வைக்க மூத்த மடாதிபதி சதி செய்வதாகவும் புகார்எழுந்துள்ளது. பிடிபட்ட 5 பேருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்ட 5 பேரும் இளைய மடாதிபதியின் தூண்டுதலால் தான் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்தந்துள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் வைத்தே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களும் 5 பேர் கூலிப் படைக்கு உதவியாக இருந்ததுதெரியவந்துள்ளது.

20-07-2002:: கொலை முயற்சி நடந்தது: திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த சன்னிதானம் சிவப்பிரகாச பண்டார சந்நிதி, இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சந்நிதி. ஆதினத்தில் ஊழியர்களாக சுவாமிநாதன், தியாகராஜன், சரபோஜி பணியாற்றினர். முன்விரோதம் காரணமாக, விஷ ஊசி மூலம் மூத்த சன்னிதானத்தைக் கொலை செய்ய, தமிழ்ச்செல்வன், சங்கரன், சிவக்குமாருடன் சேர்ந்து சுவாமிநாதன், தியாகராஜன், இளைய சன்னிதானம் சதி செய்ததாக சொல்லப்பட்டது. கூலிப்படையினரை இளைய சன்னிதானத்தின் அறைக்கு, சுவாமிநாதன் அழைத்துச் சென்றார். மூத்த சன்னிதானத்தின் அறைக்குள் நுழைந்து, அவரைக் கொலை செய்வதற்காக விஷ ஊசி, தலையணையுடன் தயாராக இருந்தனர். அறைக்குள் இருந்த கதவின் பின்புறம், இவர்கள் மறைந்திருந்தனர். அப்போது, வரதராஜன் என்பவர், இதைக் கவனித்து விட்டார். உடனே, கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடினர்[4]

27.8.2002: குற்றப்பத்திரிகை மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது:. சிவபிரகாச பண்டார சன்னதி, திருவாடுதுறை ஆதீனத்தின் பெரிய சன்னதியாக செயல்பட்டு வருகிறார். அங்கு காசிவிஸ்வநாத பண்டார சன்னதி, இளைய ஆதீனமாக இருந்தார். முன்விரோதம் காரணமாக, பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இளைய ஆதீனம் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 27.8.2002 அன்று மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரிய ஆதீனத்தை கொலை செய்வதற்காக இளைய சன்னிதானத்துடன் சேர்ந்து ஆதீன ஊழியர்கள், கூலிப்படையினர் சதித்திட்டம் தீட்டியதாகவும், அவருக்கு சயனைடு மருந்தை ஊசிமூலம் செலுத்தியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

22.12.2003: சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது:[5]  இச் சம்பவத்தையடுத்து இளைய மடாதிபதியை அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டார். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.  வாக்குமூலங்கல், மற்ற சுற்றுப்புற சாட்சியங்கள் முதலியவற்ரின் ஆதாரமாக குற்றம் சாட்டப்பட்ட இளைய சன்னிதானம் உட்பட 11 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து 22.12.03 அன்று நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார்[6].

மார்ச் 8, 2005: நாகப்பட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட் உறுதி செய்தது: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தண்டனை விதிக்கப் பட்டவர்கள், மயிலாடுதுறை தீர்ப்பிற்கு எதிராக, கீழ் முறையீடு-நாகபட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முறையீடு செய்தனர். ஆனால், தண்டனையை உறுதி செய்ததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்[7].

மேல் முறையீடு செய்யப்பட்டது: இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை நாகை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மயிலாடுதுறை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். இளைய சன்னிதானம் சார்பில் வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் ஆஜரானார். மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கே.பி.கே.வாசுகி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சங்கரன் இறந்துவிட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது. கொலை முயற்சி குற்றத்துக்கான நோக்கத்தை ஆதாரங்கள் மூலம் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை. காவல்துறையினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், சாட்சியங்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. குற்றவாளியின் அடையாள அணிவகுப்பும் முறையாக நடத்தப்படவில்லை. எனவே இளைய சன்னிதானம் உட்பட அனைவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்படுகின்றன. இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சன்னதி உட்பட 10 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் செம்மொழி மாநாட்டினை விமர்சித்தது: ஆதினம் தமது கருத்தை வெளியிட்டபோது, பத்திரிகைகள் விதவிதமாக அதை வெளியிட்டன. தினமலர், “தியானத்தை வியாபாரமாக்கிவிட்டனர் : திருவாடுதுறை ஆதினம் ஆதங்கம்[8] என்று வெளியிட்டபோது, நக்கீரன் நக்கலாக, “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று வெளியிட்டது. எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது என்று திருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் கூறினார்.

இங்குதான் நாத்திக சித்தாந்திகள் எப்படி தவறாக திரித்துக் கூறுகிறர்கள், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக அவர்  “பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும்” என்று சொன்னதை, அப்படியே தலைப்பாக வைத்து, எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை! ஆனால்,  “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று மட்டும் தலைப்பிடத் தெரிந்துள்ளது!

இதுகுறித்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாய்ப்பாலுக்குப்பின் பசுவின் பாலைத்தான் மக்கள் குடிக்கின்றனர். கோயிலுக்கு தேவையான திருநீறு உட்பட அனைத்து பொருட்களும் பசுவிடம் இருந்தே கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும். தேவாரம், திருவாசகம் நாள்தோறும் படிப்பதால் துன்பங்கள் விலகும். நன்மைகள், அமைதி ஏற்படும். எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது. ஆசிரமங்களில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு சமுதாயமும் ஒரு காரணம். மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உடல், மனரீதியான பயிற்சிகளை செய்தபின்தான் தியானத்திற்கு செல்ல வேண்டும். தியானத்தினால் மனோசக்தி வரும். இன்று தியானத்தை பலரும் வியாபாரமாக்கி விட்டனர்.  செம்மொழி மாநாட்டில் சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் சேர்க்கப்படவில்லை. பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மிகம் சார்ந்த தமிழ் நூல்களும் செம்மொழி மாநாட்டில் சேர்க்கவேண்டும்”, என்றார்.

இந்து மடாதிபதிகள் தெரிந்து கொள்ள வேண்டிவை என்ன? இத்தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படுமா இல்லையா என்று தெரியவில்லை. இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளில், இப்பிரச்சினைப் பற்றி, பலரும் பலவிதமாக அலசி, விமர்சித்துள்ளனர். மாற்று சித்தாந்திகள், மதத்தவர்களுக்குத் தேவையில்லை, நன்றாகவே மென்று உமிழ்ந்துள்ளனர். இருப்பினும், மடாதிபதிகள் முதலில் தாங்கள் எப்படி முறைப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகி வருகிறது. இந்தியாவில் உள்ள சந்நியாசிகள், மடாதிபதிகள், குருக்கள் முதலியோர், தெய்வ நம்பிக்கை, ஆன்மீகம் முதலிய காரணிகளைக் கொண்டே, தமது சீடர்கள், பக்தர்கள், மற்றவர்களை திருப்தி படுத்தி வரலாம். ஆனால், இன்று அவர்கள், அதையும் மீறி மற்ற காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கின்றனர். ஆகையால், ஒற்றர்களைப் போல உள்ளே நுழைந்து, விஷயங்களை அறிந்து, அவற்றைத் திரித்துக் கூறி, எழுதி குழப்பத்தைக் கூட உண்டாக்கலாம். குறிப்பாக, மடங்கள் இடைக்காலங்களிலிருந்து முகமதிய, கிருத்துவ மதத்தினர்களால் அதிகமாகவே பாதிக்கப் பட்டு வந்துள்ளன. இப்பொழுது கூட திருவாடுதுறை ஆதினம் என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்திற்கு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெய்வநாயகம் போன்றவர்களுடன், ஒரு சாமியார் உலவி வருகின்றார்[9]. அவர் பட்டத்தில் / பதவியில் இல்லை என்கிறார்கள். இருப்பினும், ஜடாமுடியுடன், உத்திராக்ஷகோட்டை மாலை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை, காவி உடை சகிதம் வந்து, கிருத்துவர்களை ஆதரித்து பேசி வருகிறார்[10]. வெளிநாட்டவர்கள் கொடுக்கும் டாலர்கள் அல்லது அவர்களுடைய நிலை அல்லது வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும் என்ற ஆசி முதலியவற்றில் மயங்கிக் கூட, பற்பல மத விஷயங்கள், தத்துவ நுணுக்கங்கள், கூர்மையான வாதங்கள், முக்கியமான கிரியைகள் முதலியவற்ரைப் பற்றி சொல்லிக் கொடுக்கின்றனர்[11]. ஆனால், அவர்களோ அவற்றைத் திரித்து அவர்களது மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப மாற்றி, சாதுர்யமாக விளக்கம் கொடுக்கின்றனர். அதிலும், நம்மவர்கள் மயங்கி, அவர்களது நுணுக்கங்களை, வஞ்சகங்களை, ஏமாற்று வித்தைகளை அறிந்து கொள்ளாமல், இங்கு நடக்கும் நிகழ்சிகளில், மாநாடுகளில், கூட்டங்களில் தாராளமாக இடம் கொடுத்து, மேடைகளில் அமர்த்தி, மாலை-சால்வை போட்டு மரியாதை செய்கின்றனர். ஆனால், அவர்களோ, தங்களது இடங்களுக்கு / நாடுகளுக்கு சென்றவுடன் தத்தமது உள்ளெண்ணங்களுக்கேற்ப, அவர்களுடைய திட்டங்களுக்கேற்ப, அவர்களது தலைவர்களின் ஆணைகளுக்கேற்பத்தான் செயபடுகிறார்கள்.

வேதபிரகாஷ்

14-08-2011


[7] The lower appellate court — Principal Sessions Judge in Nagapattinam — on March 28, 2005 confirmed the conviction and  sentence.  Hence, the present revision petition before the High Court.

http://expressbuzz.com/cities/chennai/all-accused-in-adheenam-murder-bid-case-acquitte/301196.html

[9] தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது, இவர் மேடையில் தெய்வநாயகம், சின்னப்பா, லாரன்ஸ் பயாஸ் போன்றவகளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, நெருக்கமாக பேசி, அளவளாவிக்கொண்டிருந்தார். போதாகுறைக்கு, ஒரு ஜீயர் வேறு வந்திருந்தார்!

[10] சிவஸ்தலங்களில் இத்தகைய உருவங்களுடன் பிச்சைக்காரர்கல் கூட உலவி வருகிறார்கள். உண்மை சொல்லப் போனால், அத்தகைய பிச்சைக்காரர்கள் மற்றும் போலிகள், உண்மை மடாதிபதிகளை விட நன்றாகவே தோற்றளிக்கிறார்கள், புதியதாக வருபவர்கள், தெரியாதவர்கள் இவர்களைப் பார்த்தால், நம்பி ஏமாந்தே விடுவார்கள்!

[11] அவர்களுக்கு அத்தகைய தகுதி உண்டா இல்லையா என்று கூட பார்ப்பதில்லை. குறிப்பாக ஆராய்ச்சிற்காக என்ரு வரும் மாணவ-மாணவிகளுக்கு அத்தகைய நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் ஏதோ எல்லாவற்றையும் கரைக்கண்டவர்கள் போல எழுதுவதை மற்றும் சொல்லிக்கொடுத்தவகளையே பாதகமாக விமர்சிப்பது, இந்து மதத்தை கேவலமாக குறிப்பிடுவது, முதலியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள்.

பல்லவர்கள் குகைக் கோவில் தர்காவாக மாற்றப்பட்டுள்ள நிலையில், பல்லாவரத்தில் வட்டக் கல் கிடைத்துள்ளதாம்!

செப்ரெம்பர் 19, 2010

பல்லவர்கள் குகைக் கோவில் தர்காவாக மாற்றப்பட்டுள்ள நிலையில், பல்லாவரத்தில் வட்டக் கல் கிடைத்துள்ளதாம்!

பல்லாவரத்தில் கிடைத்துள்ள அதிசய வட்டக்கல் பழமையானதா?: பல்லாவரம் தர்கா சாலை சுரங்கப்பால திட்டத்திற்காக பள்ளம் தோண்டிய போது, ஏழு அடி அகலம், ஒன்றரை அடி உயரத்திலான, வட்ட வடிவிலான ஒரு ராட்சத கல் கிடைத்தது[1]. இந்த கல் வரலாற்றுப் பெருமை கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுவதால், தொல்லியல் துறையினர் இதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், “பழைய பல்லாவரத்தில் சில பகுதிகளை புராதன சின்னங்கள் கொண்ட பகுதியாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், சுரங்கப் பாலத்திற்காக பள்ளம் தோண்டிய போது, பழங்கால கல் கிடைத்திருப்பதால், மேலும் பள்ளம் தோண்டும் பட்சத்தில் இப்பகுதியில் மேலும் சில அரிய புராதன சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தொல்லியல் துறையினர் இங்கு நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு, கிடைத்துள்ள வட்டக்கல் வரலாற்றுப் பெருமை வாய்ந்ததா என்பதை அறிய வேண்டும்’ என்றனர்.

Pallavaram-circular stone-recovered

Pallavaram-circular stone-recovered

பல்லவபுரத்தின் தொன்மை: சென்னை பல்கலைக் கழக தொல்லியல் வரலாற்றுத் துறையினர் மேற்கொண்ட ஒரு கள ஆய்வில், அக்காலத்தில் பல்லாவரம் மிகச் சிறந்த வணிக நகரமாக பல்லவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிந்தது.  பல்லாவரம் நகரின் குறிப்பிட்ட சில இடங்களில் தொன்மையை பறைசாற்றும் சான்றுகள் உள்ளதாக தெரிய வந்துள்ளதால், அந்த இடங்களில் கட்டுமானங்கள் கட்ட தொல்லியல் துறை தடை செய்துள்ளது. இந்நிலையில், பாலம் கட்டுவதற்காக பல்லாவரத்தில் தோண்டும் போது கிடைத்த ஒரு வட்ட வடிவிலான கல் கிடைத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[2].

Pallavaram-Cave temple -occupied by the Muslims

Pallavaram-Cave temple -occupied by the Muslims

சுரங்கப்பாலம் கட்டுவதற்காக தோண்டுதல் பணி: பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையையும், கீழ்கட்டளையையும் இணைக்கும் வகையில் தர்கா சாலையில் 17.92 கோடி ரூபாய் மதிப்பில் இலகு ரக வாகன சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கு பகுதியில் சுரங்கப்பால பணிகளுக்கு தேவையான 2,800 சதுர மீட்டர் அளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்த கட்டடங்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே கேட்டில் இருந்து மேற்கு பகுதியில் சுரங்கப்பால பணிகளை துவங்கும் வகையில், அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் எட்டு அடி ஆழத்தில் பாறைகள் தென்பட்டன. சுற்றிலும் உள்ள மண் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஏழு அடி அகலம், ஒன்றரை அடி உயரத்திற்கு பிரமாண்டமான முழு நீள கருங்கல் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. கல்லில் எந்த இடத்திலும் இணைப்பு இல்லை. பழங்கால எழுத்துக்கள், குறியீடுகளும் இல்லை. இது குறித்து ஆலந்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cave-temple-at-Pallavaram-used as Darga by the Muslims

Cave-temple-at-Pallavaram-used as Darga by the Muslims

மஹேந்திரவர்மன் கட்டிய குகைக் கோவில்: பல்லாவரம் என்கின்ற பல்லவபுரம் பல்லவர்களால் ஆளப்பட்டதால், அப்பெயர் பெற்றது. “பஞ்சப் பாண்டவர் மலை” என்று அழைக்கப்படுகின்ற, இம்மலைக்குன்றின் மீது, ஐந்து பிரகாரகங்கள் கொண்ட குகைக் கோவில், முதலாம் மஹேந்திரவர்மனால் கட்டப்பட்டது. நடுவில் பிரம்மா, இரு பக்கமும், சிவன், விஷ்ணு மற்ற இரண்டு பிரகாரகங்களில் இரண்டு கடவுளர்கள் இருப்பது போல இக்கோவில் கட்டப்பட்டது. இப்பொழுது, இடிபாடுகளுடன் இருக்கும் இந்த குகைக் கோவில், முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப் பட்டு, தர்காவாக உபயோகிக்கப் பட்டு வருகிறது[3]. இதை புகைப்படம் எடுக்கவும் தடுக்கிறார்கள். போதாகுறைக்கு முகமதுவின் உடற்கூறு அங்கு இருக்கிறது என்று வேறு கதைவிடுகிறார்கள். தொல்துறைத் துறையினர் இங்கு எப்படி மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[4].

Pallavaram-Cave temple -occupied -by the Muslims

Pallavaram-Cave temple -occupied -by the Muslims

இந்திய தொல்துறைப் பிரிவினரால் குறிக்கப்பட்ட கல்வெட்டுகள்: கோவில் தூண்களில் சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் எழுதப் பட்ட கல்வெட்டுகள் உள்ளன[5]. ஆனால், இப்பொழுது முஸ்லீம்கள் சுவர் எழுப்பி, வெள்ளை அடித்து அவற்றை மறைத்து விட்டனர். இந்த தூண் கல்வெட்டுகள் திருச்சியில் உள்ளது ;போலவே உள்ளது என்றும் ஜொவ்வே டுப்ரெயில் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்[6]. ஒருவேளை, மலைக்கோவிலுக்கு போகும் வழியில் உள்ள “சண்மதங்களைக்” குறிப்பது போல இக்கோவிலும் கட்டியிருக்கலாம். அருகில் இடிந்த கட்டுமானங்கள் உள்ளன.

Pallavaram-Cave temple occupied by the Muslims

Pallavaram-Cave temple occupied by the Muslims

சென்னையிலுள்ள சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் தூங்குகிறார்கள் போலும்: சென்னையில், பலமுறை, இந்திய வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை, போன்றவை மாநாடுகள் நடத்தியுள்ளன, ஆனால், இதைப்பற்றிக் கவலைப்ப்ட்டதாகத் தெரியவில்லை. பல்லவர்களைப் பற்றி சென்னையிலேயே இருந்து கொண்டு, வாய் கிழிய பேசும் “வாய் சொல் வீரர்கள்”, முதலியோரும் கண்டுகொள்வதில்லை. கோடிகளைக் கொட்டி தமாஷா கொண்டாடும் செந்தமிழ் சூராதி சூரர்களும் குருடர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.

Pallava_cave_temple-Trichy

Pallava_cave_temple-Trichy

இது உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு போகும் வழியில் உள்ளது. ஒப்புமைக்காகக் காட்டப் படுகிறது.

No. 8.

(A. R. No. 411 of 1904).

Trichinopoly, Trichinopoly Taluk, Trichinopoly District.

On the beam and pillars in the upper cave on ‘the rock.’

Of the two monolithic  caves, one at the foot and the other half-way up, of ‘the rock’ t Trichinopoly, the latter alone contains inscriptions, two of which, published in South Indian Inscriptions, Vol. I, pages 29 and 30, state that the cave (upper) was constructed by Gunabhara (i.e.) Mahendravarman I.  A verse inscription (No. 9 below) engraved on the beam over the inner row of pillars here, calls the cave Lalitankura-Pallavesvara-griham’ after the title ‘Lalitankura’ of this king, which also occurs in his record at Pallavaram.  His birudas are engraved in bold Pallava-Grantha and Tamil characters on all the pillars in the upper cave at Trichnipoly.  The outer wall of the sanctuary in this cave seems to have contained an inscription, but only a few letters of its first line are now visible, the rest being completely damaged.  The name ‘Mahendravikrama’ is found mentioned in the inscription on the extreme left outer pillar and most of the birudas occurring here are also found in the records of this king at Pallavaram and other rock-cut excavations of his time.  Some of these titles are unintelligible and appear to be Telugu in origin.  The bottom of each of the four pillars contains a biruda in the Pallava-Tamil characters, of which only two are now clear, viz.  Pinapinakku and Chitti[rakara]ppuli.

It is of interest to note that the birudas are alphabetically arranged and so engraved on the front face of the pillars.  The same arrangement, though followed in the Pallavaram inscription, is not so conspicuous there as in the present record (plates I and II).

The characters employd in the present inscriptions are of an ornate nature and provide an interesting contrast with the simpler variety of letters found in the Pallavaram record of the same king, where almost all these birudas are repeated.

A description of the cave is found in the Memoir of the Archaeological Survey of India, No. 17, pages 13 – 15.

No. 13.

(A. R. No. 369 of 1908).

Pallavaram, Saidapet Taluk, Chingleput District.

On the beams in the rock-cut cave now used as a ‘Darga’.

This inscription is engraved in Pallava-Grantha characters in a single line on the beams of the upper and lower verandahs of the rock-cut cave[7] (plates II and IV.) It gives a long list of birudas, some of them obscure in their import, of the Pallava king Mahendravikrama (I) with whose name the inscription commences.  These titles are in Sanskrit, Tamil and Telugu and indicate the character, erudition and personal tastes of the king.  Some of these birudas are also found in the upper cave at Trichinopoly (No. 8 above).

The rock-cut temple is described in the Memoir of the Archaeological Survey of India, No. 17, page 16.


[1] தினமலர், பல்லாவரத்தில் கிடைத்துள்ள அதிசய வட்டக்கல் பழமையானதா? பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2010,02:14 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 18,2010,06:58 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87134

[2] பல புராதன இடங்களில் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், இதுவரை எந்த பழங்கால சிற்பங்கள், கட்டுமானப் பொருட்கள், சிலைகள், கட்டிடங்கள் முதலியவை கண்டதாக செய்தி வரவில்லை. ஒருவேளை, அப்படி கண்டாலும் தமது வேளை நின்றுவிடுமேயன்று, காண்டிரக்டர்கள் மறைத்து விட்டிருக்கலாம். இதனை மக்கள் பார்த்து விட்டதால், செய்தியாக வந்துள்ளது போலும்!

[3] http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_tambaramhistory.htm

[4] இரண்டு தினங்களுக்கு முன்பு, ஒரு கோவிலில் அம்மன் சிலை வைத்ததற்கே, ஓடி வந்து அதனை அகற்றியுள்ளனர். ஆனால், பல மசூதிகளில் முஸ்லீம்கள் தமக்கு இஷ்டம் போல உபயோகித்து வருகிறார்கள். அதனைக் கட்டுப்படுத்துவதில்லை.

[5] V. Venkatatasubba Ayyar, South Indian Inscriptions, Vol.XII – The Pallavas, Government Press, Madras, 1942, Plates – II and IV, pp.8-9.

[6] G. Jouveau-Dubreuil, Pallava Antiquities, Asian Educational Serives, New Delhi, p.25.

[7] http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_12/stones_1_to_25.html