பண்டிகைகள் குடிப்பதற்காகவா?

தமிழர்கள் பெரும்பாலும், தமது கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் என்றெல்லாம் பேசுபவர்கள். அதே நேரத்தில் “திராவிடக் கலாசாரம்” என்று அரசியல் ரீதியில் வளர்ந்த பிறகு, அவை எங்கேயோ செல்வது வருத்தமாக உள்ளது. பகுத்தறிவு என்ற பெயரிலேயே அவை அவமதிக்கப் படுகின்றன, தூஷிக்கப் படுகின்றன; கேவலப் படுத்தப் படுகின்றன;

இப்பொழுதுள்ள அரசாங்கம் போலித்தனமாக ஒருபக்கம் “காந்தியம்” பேசிக் கொண்டும், மறுபக்கத்தில் மது / சாரயம் விற்றுக் கொண்டும் இருக்கிறது.குடிக்கும் தமிழர்கள்

காந்தியை “மஹாத்மா” என்று கூட சொல்ல மறுத்தவர்கள்,  “மஹாத்மா காந்தி சாலை”யை “உத்தமர் காந்தி சாலை”யாக்கியவர்கள்,  அந்த அடாத செயலுக்கு ஒரு போலி விளக்கமும் அளித்தவர்கள், இன்று  காந்தியின் பெயரால் “இலங்கைப் பிரச்சினை”யைப் பற்றி பேசுகின்றனர்.

காந்திய அற வழியில் இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை: முதல்வர் கருணாநிதி நம்பிக்கை
அக்டோபர் 15,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14409

Latest indian and world political news information

சென்னை : “காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லோரும் சம உரிமையுடன் வாழும் நிலை பிறக்கும்’ என, முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

———————————————————————————————————————————

காந்தியைப் பற்றி, கருணாநிதிக்கு என்னவாயிற்றோத் தெரியவில்லை.

சமீபத்தில், காந்தி சிலைக்கு பூ தூவினார்!

முன்பெல்லாம், கண்டுகொண்டதே கிடையாது!!

ஒருவேளை, “தேசியப் பற்று” அதிகமாகி விட்டது போலும். ஏனெனில், மத்தியில் ஒரு மகன் மந்திரியாகவும், திரும்பி இணைந்த “பேரன்” மற்றொரு மந்திரியாகவும் இருப்பதால், “காந்தியம்” பேசினால், “தேசியத் தலைவர்” என்ற நிலை வந்து விடும் என்று எதிர்பார்க்கிறாரோ என்னவோ!

மது அதிகம் விற்போம், “தீபாவலி” அன்று உண்மையிலேயே “வலி” உண்டாக்குவோம் என்று தீர்மானமாக, “150 கோடி” வியாபாரம் என்று மார் தட்டுகின்றனர்!

“சரக்கு-ஸ்டாக்” நிறைய உள்ளனவாம்! காய்கறிகளின் ஸ்டாக் உள்ளதா?

அதைப் பற்றி கவலை இல்லை, சாராயம் பற்றிதான் கவலை!!

இதோ கொசுரு:

ஒயினுக்கான வரியை இந்தியா ரத்து செய்ய வேண்டும்: யூரோப் யூனியன்

அக்டோபர் 15,2009,15:48

http://www.dinamalar.com/business/

ப்ரூஸ்சல்ஸ்: ஒயினுக்கான வரியை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று யூரோப் யூனியன் கூறியுள்ளது. இதற்காக உலக வர்த்தக அமைப்பினையும்(டபுல்யு.டி.ஓ.,) யூரோப் யூனியன் நாட உள்ளது. இதுகுறித்து யூரோப் அக்ரிகல்சுரல் அன்ட் ரூரல் ‌டெவலப்மென்ட் செய்திதொடர்பாளர் மைகேல்மான் தெரிவிக்கும் போது, ஒயினுக்கான வரியை பொறுத்தவரை இந்தியாவுடன் ஒப்பந்த நோக்குடன் கூடி கலந்து பேசி தேவையான முடிவுகளை எடுக்க நினைக்கிறோம். ஓயினுக்கான வரியை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதனை உலக வர்த்தக அமைப்பிடமும் முறையிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: ,

ஒரு பதில் to “பண்டிகைகள் குடிப்பதற்காகவா?”

  1. vedaprakash Says:

    மல்லையாவின் தீபாவளி அன்பளிப்பு : திருப்பி அனுப்பினார் பா.ஜ., எம்.பி.,
    அக்டோபர் 15,2009,00:00 IST

    http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14415

    புதுடில்லி : தீபாவளியையொட்டி எம்.பி.,க்களுக்கு விஸ்கி பாட்டிலுடன் வாழ்த்து அனுப்பியுள்ளார் சாராய அதிபர் விஜய் மல்லையா. பாரதிய ஜனதா கட்சி எம்.பி., ஒருவர் இந்த அன்பளிப்பை திருப்பி அனுப்பி விட்டார்.

    ராஜ்ய சபா முன் னாள் எம்.பி.,யான பிரபல சாராய தொழிலதிபரும், விமான நிறுவன அதிபருமான விஜய் மல்லையா, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி அனைத்து எம்.பி.,க்களுக்கும் விஸ்கி பாட்டிலுடன் தீபாவளி வாழ்த்தையும் சேர்த்து அனுப்புவார். இந்த அன்பளிப்பை பெறும் பல எம்.பி.,க்கள் மகிழ்ச்சி அடைவர். இந்த முறை அவர் அனுப்பிய சில “பிளாக் டாக் விஸ்கி’ பாட்டில்கள் திருப்பி அனுப்பப் பட்டு விட்டன. “காந்திய வழியில் நடக் கும் சில எம்.பி.க்கள், தீபாவளி வாழ்த்தை ஏற்றுக்கொள்கிறோம்; விஸ்கியை ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என, திருப்பி அனுப்பி விடுவர்.

    பாரதிய ஜனதா கட்சி எம்.பி., பிரபாத்ஜா என்பவர், மல்லையா அனுப்பிய பிளாக் டாக் விஸ்கியை இந்த முறை திருப்பி அனுப்பி விட்டார். அத்துடன் அவர் அனுப்பிய கடிதத்தில், “என்னுடைய வாழ்க்கை முறைக்கு விஸ்கி உகந்ததாக இல்லை. நீங்கள் அனுப்பிய விஸ்கி பல எம்.பி.,க்களுக்கு பயன்பட்டிருக்கலாம். ஆனால், பார்லிமென்ட்டுக்கும், பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கென்று ஒரு கவுரவம் இருக்கிறது. அதை நீங்கள் மதிக்க வேண்டும். நீங்கள் உலகின் மிகப்பெரிய வர்த்தகராக இருக்கலாம், ஆனால், இந்திய அரசிலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். இனி என்னை போன்றவர்களுக்கு விஸ்கியை அன்பளிப்பாக அளிக்க வேண்டாம்’ என, தெரிவித்துள்ளார்.

பின்னூட்டமொன்றை இடுக