Archive for the ‘திருவாவடுதுறை ஆதீனம்’ Category

திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்!

ஓகஸ்ட் 14, 2011

திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்!

மடங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது: 2002ல் பரபரப்பாக தினமும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. 650 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும், அத்தகைய மடம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது அடியார்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. சொத்துக்களை நிர்வகிக்கத் தெரியாமல், மடாதிபதிகள் இருப்பது, அரசியல் சார்புடன் குத்தகைக்கு விடுவது, அத்தகைய ஆட்களை கோவில்களில் தக்கார் போன்ற வேலைகளுக்கு நியமிப்பது முதலியவை மடங்களில் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. கடந்த ஆட்சியில், தமிழக மடங்கள் மிரட்டப் பட்டன, மறைமுகமாக பணம் கொடுக்கச் சொல்லியும் வற்புறுத்தப் பட்டன என்று மடாதிபதிகள் புழுங்கிக் கொண்டிருந்தனர். செந்தமிழ் மாநாட்டில் கூட அவர்கள் ஒதுக்கப்பட்டது, மற்றும் இந்து மதத்திற்கு உரிய இடம் அளிக்காதது முதலியவை கருணநிதியின் மனத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. இந்நிலையில் திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் உட்பட 11 பேருக்கு செசன்ஸ் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்தை கொல்ல முயற்சி? அப்பொழுதைய செய்தி:  திருவாவடுதுறை:செவ்வாய்க்கிழமை, ஜூலை 9, 2002, திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாகக் கருதப்படும் 4 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்[1].  நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை ஆதீனம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இதன் 23வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் மற்றும்சொத்துக்கள் உள்ளன.

07-07-2002 கொலை முயற்சி: நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜையில் கலந்து கொண்டு விட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார் சிவப்பிரகாச சுவாமிகள். அப்போது அவருடைய மெய்க்காப்பாளரான வரதராஜன் மாடியில் உள்ள மடாதிபதியின் படுக்கையறைக்குச்சென்றார். அந்த அறையின் அருகே அடையாளம் தெரியாத நான்கு பேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டவுடன் அந்த நான்கு பேரும் வேகமாகத் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து மற்ற ஆதீன ஊழியர்களும் ஓடி வந்து அவர்களைத் தேடினர். ஆனால் அதற்குள் அந்த மர்மமனிதர்கள் எங்கோ ஓடி மறைந்து விட்டனர்.

விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சி: அவர்கள் ஓடுவதற்கு முன் அந்த அறைக்கு அருகிலேயே விஷ ஊசி, தலையணை, கையுறைகள் மற்றும் கயிறு ஆகியவற்றைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிவப்பிரகாச சுவாமிகள் படுக்கையறைக்கு வந்தவுடன் அவரைக் கொலை செய்வதற்காகத் தான் அந்நபர்கள்வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள மடாதிபதியின் படுக்கையறைப் பக்கம் வெளி நபர்கள்யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. எனவே மடத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தான் அங்கு வந்திருக்கக் கூடும் என்று போலீசார்சந்தேகப்படுகின்றனர். தப்பியோடிய நான்கு பேரையும் தேடும் பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

08-07-2002: இளையபட்டம் தற்கொலை முயற்சி:  திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய சிலர் முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் அதன் துணைமடாதிபதி நேற்று மாலை அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்[2]. இது நாடகமா அல்லது கொலை முயற்சியில் தப்பித்துக் கொள்ள செய்த செயலா என்று தெரியவில்லை. இருப்பினும், கொலை முயற்சியில், இவர் சந்தேகிக்கப் பட்டார். ஆனால், மயங்கிய நிலையில் கிடந்த அவரை மடத்தின ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். தன் மீது எல்லோரும் சந்தேகப் பார்வை வீசுவதால் இந்தத் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் அவர் கூறினார்.

முன்னாள் ஊழியர் உள்பட 5 பேர் கைது: திருவாவடுதுறை: மூத்த மடாதிபதியை கொல்ல சதி செய்த இளைய மடாதிபதி கைது[3]:  இந் நிலையில் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப் படை போலீசார் மடத்தில் வேலை செய்த சாமிநாதன், தியகராஜன்ஆகிய 2 ஊழியர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர். இதில் சாமிநாதன், தியாகராஜன் ஆகிய இருவரையும் சமீபத்தில் பெரிய மடாதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்தார். இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். கூலிப் படையின் மூன்றாவது நபரான தமிழ்ச்செல்வன் தனது மனைவியை மடத்துக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியையாக சேர்க்கமுயன்றார். இதற்கு மடாதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இவர் மடாதிபதி மீது அதிருப்தியுடன் இருந்தார். இவர்கள் தவிர சக்திவேல், சிவக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் பணத்துக்காக இந்தக் கொலைசெய்ய முன் வந்தவர்கள். இந்தக் கும்பலுக்கு தலைவனாக சக்திவேல் இருந்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது இளைய மடாதிபதி தான் இந்தக் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாத் தெரியவந்துள்ளது. சொத்துக்களை அபகரிக்கவும், மூத்த மடாதிபதி பதவியைப் பிடிக்கவும் இளைய மடாதிபதி இந்த சதித் திட்டம் போட்டுள்ளார். மேலும் இந்தக் கும்பலை தனது அறையில் பதுங்கியிருக்கச் செய்தும் இளைய மடாதிபதி உதவி செய்திருக்கிறார். தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைய மடாதிபதி இன்று கைது செய்யப்பட்டார்.

மூத்த மடாதிபதி மீது இளையவர் புகார்: இந் நிலையில் இளைய மடாதிபதி காசி விஸ்வாநாதனை கொலைப் பழியில் சிக்க வைக்க மூத்த மடாதிபதி சதி செய்வதாகவும் புகார்எழுந்துள்ளது. பிடிபட்ட 5 பேருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்ட 5 பேரும் இளைய மடாதிபதியின் தூண்டுதலால் தான் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்தந்துள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் வைத்தே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களும் 5 பேர் கூலிப் படைக்கு உதவியாக இருந்ததுதெரியவந்துள்ளது.

20-07-2002:: கொலை முயற்சி நடந்தது: திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த சன்னிதானம் சிவப்பிரகாச பண்டார சந்நிதி, இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சந்நிதி. ஆதினத்தில் ஊழியர்களாக சுவாமிநாதன், தியாகராஜன், சரபோஜி பணியாற்றினர். முன்விரோதம் காரணமாக, விஷ ஊசி மூலம் மூத்த சன்னிதானத்தைக் கொலை செய்ய, தமிழ்ச்செல்வன், சங்கரன், சிவக்குமாருடன் சேர்ந்து சுவாமிநாதன், தியாகராஜன், இளைய சன்னிதானம் சதி செய்ததாக சொல்லப்பட்டது. கூலிப்படையினரை இளைய சன்னிதானத்தின் அறைக்கு, சுவாமிநாதன் அழைத்துச் சென்றார். மூத்த சன்னிதானத்தின் அறைக்குள் நுழைந்து, அவரைக் கொலை செய்வதற்காக விஷ ஊசி, தலையணையுடன் தயாராக இருந்தனர். அறைக்குள் இருந்த கதவின் பின்புறம், இவர்கள் மறைந்திருந்தனர். அப்போது, வரதராஜன் என்பவர், இதைக் கவனித்து விட்டார். உடனே, கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடினர்[4]

27.8.2002: குற்றப்பத்திரிகை மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது:. சிவபிரகாச பண்டார சன்னதி, திருவாடுதுறை ஆதீனத்தின் பெரிய சன்னதியாக செயல்பட்டு வருகிறார். அங்கு காசிவிஸ்வநாத பண்டார சன்னதி, இளைய ஆதீனமாக இருந்தார். முன்விரோதம் காரணமாக, பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இளைய ஆதீனம் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 27.8.2002 அன்று மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரிய ஆதீனத்தை கொலை செய்வதற்காக இளைய சன்னிதானத்துடன் சேர்ந்து ஆதீன ஊழியர்கள், கூலிப்படையினர் சதித்திட்டம் தீட்டியதாகவும், அவருக்கு சயனைடு மருந்தை ஊசிமூலம் செலுத்தியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

22.12.2003: சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது:[5]  இச் சம்பவத்தையடுத்து இளைய மடாதிபதியை அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டார். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.  வாக்குமூலங்கல், மற்ற சுற்றுப்புற சாட்சியங்கள் முதலியவற்ரின் ஆதாரமாக குற்றம் சாட்டப்பட்ட இளைய சன்னிதானம் உட்பட 11 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து 22.12.03 அன்று நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார்[6].

மார்ச் 8, 2005: நாகப்பட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட் உறுதி செய்தது: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தண்டனை விதிக்கப் பட்டவர்கள், மயிலாடுதுறை தீர்ப்பிற்கு எதிராக, கீழ் முறையீடு-நாகபட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முறையீடு செய்தனர். ஆனால், தண்டனையை உறுதி செய்ததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்[7].

மேல் முறையீடு செய்யப்பட்டது: இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை நாகை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மயிலாடுதுறை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். இளைய சன்னிதானம் சார்பில் வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் ஆஜரானார். மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கே.பி.கே.வாசுகி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சங்கரன் இறந்துவிட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது. கொலை முயற்சி குற்றத்துக்கான நோக்கத்தை ஆதாரங்கள் மூலம் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை. காவல்துறையினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், சாட்சியங்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. குற்றவாளியின் அடையாள அணிவகுப்பும் முறையாக நடத்தப்படவில்லை. எனவே இளைய சன்னிதானம் உட்பட அனைவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்படுகின்றன. இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சன்னதி உட்பட 10 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் செம்மொழி மாநாட்டினை விமர்சித்தது: ஆதினம் தமது கருத்தை வெளியிட்டபோது, பத்திரிகைகள் விதவிதமாக அதை வெளியிட்டன. தினமலர், “தியானத்தை வியாபாரமாக்கிவிட்டனர் : திருவாடுதுறை ஆதினம் ஆதங்கம்[8] என்று வெளியிட்டபோது, நக்கீரன் நக்கலாக, “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று வெளியிட்டது. எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது என்று திருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் கூறினார்.

இங்குதான் நாத்திக சித்தாந்திகள் எப்படி தவறாக திரித்துக் கூறுகிறர்கள், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக அவர்  “பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும்” என்று சொன்னதை, அப்படியே தலைப்பாக வைத்து, எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை! ஆனால்,  “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று மட்டும் தலைப்பிடத் தெரிந்துள்ளது!

இதுகுறித்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாய்ப்பாலுக்குப்பின் பசுவின் பாலைத்தான் மக்கள் குடிக்கின்றனர். கோயிலுக்கு தேவையான திருநீறு உட்பட அனைத்து பொருட்களும் பசுவிடம் இருந்தே கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும். தேவாரம், திருவாசகம் நாள்தோறும் படிப்பதால் துன்பங்கள் விலகும். நன்மைகள், அமைதி ஏற்படும். எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது. ஆசிரமங்களில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு சமுதாயமும் ஒரு காரணம். மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உடல், மனரீதியான பயிற்சிகளை செய்தபின்தான் தியானத்திற்கு செல்ல வேண்டும். தியானத்தினால் மனோசக்தி வரும். இன்று தியானத்தை பலரும் வியாபாரமாக்கி விட்டனர்.  செம்மொழி மாநாட்டில் சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் சேர்க்கப்படவில்லை. பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மிகம் சார்ந்த தமிழ் நூல்களும் செம்மொழி மாநாட்டில் சேர்க்கவேண்டும்”, என்றார்.

இந்து மடாதிபதிகள் தெரிந்து கொள்ள வேண்டிவை என்ன? இத்தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படுமா இல்லையா என்று தெரியவில்லை. இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளில், இப்பிரச்சினைப் பற்றி, பலரும் பலவிதமாக அலசி, விமர்சித்துள்ளனர். மாற்று சித்தாந்திகள், மதத்தவர்களுக்குத் தேவையில்லை, நன்றாகவே மென்று உமிழ்ந்துள்ளனர். இருப்பினும், மடாதிபதிகள் முதலில் தாங்கள் எப்படி முறைப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகி வருகிறது. இந்தியாவில் உள்ள சந்நியாசிகள், மடாதிபதிகள், குருக்கள் முதலியோர், தெய்வ நம்பிக்கை, ஆன்மீகம் முதலிய காரணிகளைக் கொண்டே, தமது சீடர்கள், பக்தர்கள், மற்றவர்களை திருப்தி படுத்தி வரலாம். ஆனால், இன்று அவர்கள், அதையும் மீறி மற்ற காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கின்றனர். ஆகையால், ஒற்றர்களைப் போல உள்ளே நுழைந்து, விஷயங்களை அறிந்து, அவற்றைத் திரித்துக் கூறி, எழுதி குழப்பத்தைக் கூட உண்டாக்கலாம். குறிப்பாக, மடங்கள் இடைக்காலங்களிலிருந்து முகமதிய, கிருத்துவ மதத்தினர்களால் அதிகமாகவே பாதிக்கப் பட்டு வந்துள்ளன. இப்பொழுது கூட திருவாடுதுறை ஆதினம் என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்திற்கு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெய்வநாயகம் போன்றவர்களுடன், ஒரு சாமியார் உலவி வருகின்றார்[9]. அவர் பட்டத்தில் / பதவியில் இல்லை என்கிறார்கள். இருப்பினும், ஜடாமுடியுடன், உத்திராக்ஷகோட்டை மாலை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை, காவி உடை சகிதம் வந்து, கிருத்துவர்களை ஆதரித்து பேசி வருகிறார்[10]. வெளிநாட்டவர்கள் கொடுக்கும் டாலர்கள் அல்லது அவர்களுடைய நிலை அல்லது வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும் என்ற ஆசி முதலியவற்றில் மயங்கிக் கூட, பற்பல மத விஷயங்கள், தத்துவ நுணுக்கங்கள், கூர்மையான வாதங்கள், முக்கியமான கிரியைகள் முதலியவற்ரைப் பற்றி சொல்லிக் கொடுக்கின்றனர்[11]. ஆனால், அவர்களோ அவற்றைத் திரித்து அவர்களது மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப மாற்றி, சாதுர்யமாக விளக்கம் கொடுக்கின்றனர். அதிலும், நம்மவர்கள் மயங்கி, அவர்களது நுணுக்கங்களை, வஞ்சகங்களை, ஏமாற்று வித்தைகளை அறிந்து கொள்ளாமல், இங்கு நடக்கும் நிகழ்சிகளில், மாநாடுகளில், கூட்டங்களில் தாராளமாக இடம் கொடுத்து, மேடைகளில் அமர்த்தி, மாலை-சால்வை போட்டு மரியாதை செய்கின்றனர். ஆனால், அவர்களோ, தங்களது இடங்களுக்கு / நாடுகளுக்கு சென்றவுடன் தத்தமது உள்ளெண்ணங்களுக்கேற்ப, அவர்களுடைய திட்டங்களுக்கேற்ப, அவர்களது தலைவர்களின் ஆணைகளுக்கேற்பத்தான் செயபடுகிறார்கள்.

வேதபிரகாஷ்

14-08-2011


[7] The lower appellate court — Principal Sessions Judge in Nagapattinam — on March 28, 2005 confirmed the conviction and  sentence.  Hence, the present revision petition before the High Court.

http://expressbuzz.com/cities/chennai/all-accused-in-adheenam-murder-bid-case-acquitte/301196.html

[9] தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது, இவர் மேடையில் தெய்வநாயகம், சின்னப்பா, லாரன்ஸ் பயாஸ் போன்றவகளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, நெருக்கமாக பேசி, அளவளாவிக்கொண்டிருந்தார். போதாகுறைக்கு, ஒரு ஜீயர் வேறு வந்திருந்தார்!

[10] சிவஸ்தலங்களில் இத்தகைய உருவங்களுடன் பிச்சைக்காரர்கல் கூட உலவி வருகிறார்கள். உண்மை சொல்லப் போனால், அத்தகைய பிச்சைக்காரர்கள் மற்றும் போலிகள், உண்மை மடாதிபதிகளை விட நன்றாகவே தோற்றளிக்கிறார்கள், புதியதாக வருபவர்கள், தெரியாதவர்கள் இவர்களைப் பார்த்தால், நம்பி ஏமாந்தே விடுவார்கள்!

[11] அவர்களுக்கு அத்தகைய தகுதி உண்டா இல்லையா என்று கூட பார்ப்பதில்லை. குறிப்பாக ஆராய்ச்சிற்காக என்ரு வரும் மாணவ-மாணவிகளுக்கு அத்தகைய நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் ஏதோ எல்லாவற்றையும் கரைக்கண்டவர்கள் போல எழுதுவதை மற்றும் சொல்லிக்கொடுத்தவகளையே பாதகமாக விமர்சிப்பது, இந்து மதத்தை கேவலமாக குறிப்பிடுவது, முதலியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆன்மீகப் புரட்சி!

மார்ச் 2, 2010

“ஆதீனங்களும் மடாதிபதிகளும் தாழ்த்தப்பட்டோரைத் தேடிச் செல்லவேண்டும்!

திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆன்மீகப் புரட்சி

– அ.துரைசாமி, குமுதம் ரிப்போர்ட்டர் (04-03-2010)

திருவாவடுதுறை ஆதீனம் செய்திருக்கும் ஆன்மீகப் புரட்சியைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள் மக்கள். அருந்ததியர் கிராமத்திற்குச் சென்று அவர்களோடு அமர்ந்து, அவர்களைத் தொட்டு திருநீறு பூசி அவர் ஆசீர்வதிப்பதே இதற்குக் காரணம்.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அருட்திரு நமச்சிவாய மூர்த்தி ஸ்வாமிகளால் ஸ்தாபிக்கப் பட்டது. திருநெல்வேலி, கன்யாகுமரி, காஞ்சிபுரம், திருநள்ளாறு, ராமேஸ்வரம், மதுரை, திருச்செந்தூர் தவிர காசி, காளஹஸ்தி உட்பட 50 இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன.

நெல்லையில் பிரபலமான சந்திப்பிள்ளையார், குறுக்குத்துறை முருகன் கோவில், திருவாவடுதுறை, திருநள்ளாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான கோயில்கள் உள்ளன. குறிப்பாக திருநள்ளாறு, சூரியனார் கோயில், ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது குருமாஹாசன்னிதானமாக கடந்த 25 ஆண்டுகளாய் பொறுப்பேற்றிருப்பவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள். அறுபது வயதாகும் ஸ்வாமிகளுக்குத் தமிழ் மீது அதீத ஆர்வம். மடாதிபதிகள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘ஸ்ரீலஸ்ரீ’ என்கிற அடைமொழியைப் போடுவது வழக்கம். ஆனால், இவர் ஆதீனமாகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் செய்த முதல் காரியமே ‘ஸ்ரீலஸ்ரீ’யைத் தமிழ் படுத்தி ‘சீர்வளர்சீர்’ என்று மாற்றிக் கொண்டதுதான். ‘காலம் காலமாக இருந்து வந்த பழக்கத்தை எப்படி மாற்றலாம்?’ என்று இதற்குப் பல இடங்களிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தாலும் ஆதீனம் அசைந்து கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஆதீனம் செய்த இன்னொரு தடாலடி காரியம் தான் அவரைப் ‘புரட்சி ஆதீனம்’ என்று அழைக்க வைத்திருக்கிறது.

மடாதிபதிகள் பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். ஆனால் இவர் ஆதீனமானவுடன் அந்த வழக்கத்திற்குத் தடா போட்டுவிட்டார். மனிதனை மனிதன் தூக்குவது சரியல்ல என்பது அவரது வாதம். தேவாரத்தைத் தமிழ் வேதம் என்று சொல்லும் இவர், கடந்த 15-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள முறப்பநாடு மடத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடக்குத் தாழையூத்து கிராமத்திற்குத் திடீர் விஸிட் அடித்திருக்கிறார். அங்கு முழுக்க முழுக்க அருந்ததியர் இன மக்களே வசிக்கிறார்கள். ஆதீனம் அங்கு வந்து சேர்ந்த போது இரவு மணி 7.45. அப்போது நாமும் அங்கே இருந்தோம்.

அங்கிருந்த அருந்ததியர் இன மக்களுக்கு அவரைப்பற்றிப் பெரிதாய் எதுவும் தெரியவில்லை. ‘ஏதோ ஒரு காவி வேட்டி சாமி வருகிறார். ஊரைத் தேடி வருபவரை வரவேற்க வேண்டும். அவ்வளவு தான்’ என்கிற ரீதியிலேயே இருந்தனர். ஸ்வாமிகளும் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமலும், எந்த சங்கோஜமும் இல்லாமலும், ஊர்த்தலைவர்களிடம் பேசிவிட்டு அங்குள்ள காளியம்மன் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவருக்காக விசேஷ பூஜைகள் நடந்தன. நின்றபடியே பூஜையில் பங்கேற்ற ஸ்வாமிகளுக்கு அருந்ததியின பூசாரி தீபத்தைக் காட்டி மாலை அணிவித்ததோடு அவரது நெற்றியில் திருநீறும் இட்டது வேறு எங்கும் நடைபெறாத விஷயம்.

பின்னர் கோயில் முன்பாகவே ஒரு சேரில் அமர்ந்தார் ஸ்வாமிகள். அப்போது அவருடன் வந்த பாளையங்கோட்டை தமிழ் ஆசிரியர் கணபதி சுப்ரமணியன், “வந்திருப்பது மகா மகா சன்னிதானம். அவர் சுட்டு விரலசைத்தால் ஆன்மீக உலகில் பல விஷயங்கள் சுலபமாக நடக்கும்” என்று சின்னதாய் ஒரு அறிமுகம் செய்த பிறகு தான் ஊர் மக்களுக்கு அவரது சக்தி தெரியவந்துள்ளது. அதன் பிறகே ஆங்காங்கு நின்று கொண்டிருந்தவர்களும் கோயிலுக்கு வந்து அவரைச் சுற்றி ஆர்வத்துடன் அமர்ந்து கொள்ள, சுருக்கமான சமயச் சொற்பொழிவொன்றைச் செய்தார் சுவாமிகள்.

பிறகு ஊரில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கிய சுவாமிகள், அதன் பின்னர் செய்த காரியம் தான் நம்மை வியப்பின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. பொதுவாக மடாதிபதிகள் பிறர் கையைத் தொடாமல் திருநீறு, குங்குமம் கொடுப்பது தான் வழக்கம். ஆனால் சுவாமிகளோ, பெண்களுக்கு மட்டும் விபூதியைக் கொடுத்துவிட்டு, மற்றபடி எல்லா அருந்ததியர் ஆண்களுக்கும் தனது கையாலேயே திருநீறு பூசிவிட்டார். தவிர, இருக்கையை விட்டு எழுந்து, தானே போய் ஒவ்வொருவருக்கும் திருநீறு பூசிவிட்டதைப் பார்த்து, ஊர் மக்களே நம்பமுடியாமல் திகைத்தனர். இப்படி சுமார் ஒன்றரை மணிநேரம் அருந்ததியின மக்களிடம் செலவிட்ட சுவாமிகளிடம், ஊர்மக்கள் காளியம்மன் கோவிலுக்குப் பிராகாரம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்ததைக் கேட்டு புன்சிரிப்புடன் விடை பெற்றார்.

“தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்திற்குப் போய் அவர்களுடன் அன்னியோன்யமாய்ப் பேசிக் கலந்தது ஏன்?” என முறப்பநாடு மடத்தில் தங்கியிருந்த சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்துக் கேட்டோம். நம்மையும் அவருக்கு இணையான நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு, நிதானமாய் பதில் சொன்னார்.

“நான் திருவாவடுதுறையை விட்டுக் கிளம்பி எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள அனாதை ஆசிரமம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் கிராமங்களுக்குச் செல்வதை வழக்கமாகவே கொண்டிருக்கிறேன். பொதுவாக தாழத்தப்பட்ட மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கிறுஸ்துவர்கள் முதல் ஆளாய் ஓடிவந்து, “பார்த்தீர்களா, உங்கள் பிரச்சனகளைத் தீர்க்க நாங்கள் தான் வருகிறோம். இந்து மடாதிபதிகள் வருவதில்லை, என்று கிண்டல் கேலி செய்வதோடு மதமாற்றமும் செய்கிறார்கள். மக்களும் மதமாற்றத்திற்குத் தயாராகிறார்கள். சுனாமி வந்தால் கிறுத்துவப் பாதிரியார்கள் ஓடோடிப்போய் பணம் கொடுத்து மக்களோடு தொடர்பிலிருக்கிறார்கள்.

இந்து மதத்தில் பாகுபாடே கிடையாது என்று திருஞான சம்பந்தரே கூறியிருக்கிறார். சுவாமிகள், துறவிகள், சாமானியர்கள் என்கிற பாகுபாடும் கிடையாது. ஆனால் உண்மை நிலை அப்படியா இருக்கிறது? அதனால் தான் ‘சுவாமிகள் நம்மை எல்லாம் பார்க்க மாட்டார், பேச மாட்டார், தொட மாட்டார்’ என எண்ணி ஆதீனத்தை மக்கள் விலக்கியே பார்க்கிறார்கள். அந்த எண்ணத்தை மாற்றவேண்டும். ஆதீனமும் மனிதர் தான், இறைவனின் அருளால் தான் ஆதினமாகியிருக்கிறார், என்கிற என்ணத்தை மக்களிடம் விதைக்க வேண்டும். சாமானியர்கள் பொருட்செலவு செய்து திருவாவடுதுறைக்கு வருவது சிரமமான காரியம். எனவே தான் நாமே அவர்களைத் தேடிப் போகிறோம்.

கடந்த 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிதம்பரத்தில் ‘உலக சைவ மாநாடு’ நடைபெற்றது. அதில் கூட ‘நம்மிடம் தீண்டாமை இருக்கிறது. அதைப் போக்கத் தாழத்தப்பட்டோரைத் தேடிப் போக வேண்டும். அப்போது தான் மதமாற்றம் நடக்காது’ என்று பேசியிருக்கிறேன். இலங்கையில் பல இந்துக் கோயில்கள் இடித்துத் தள்ளப் பட்டிருக்கின்றன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். அங்கு துன்பப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும். அதுபோல குக்கிராமங்களிலுள்ள பூஜை நடைபெறாத கோயில்களில் உள்ளூர்க்காரர்களுக்கே பயிற்சி கொடுத்து பூஜை புனஸ்காரங்களைச் செய்யவேண்டும் என்கிற தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன” என்றார் அவர்.

தாழ்த்தப்பட்ட மக்களைத் தேடிச்சென்று புதிய ஆன்மீகப் புரட்சிக்கு வித்திட்டிருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்தை மற்றவர்களும் பின்பற்றினால் தீண்டாமை ஒழியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.