மாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…! கேரள மாட்டுவியாபரிகள் எச்சரிக்கை…!

மாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…! கேரள மாட்டுவியாபரிகள் எச்சரிக்கை…!

இறைச்சி உண்ணும் பழக்கம் மதத்தினால் ஏற்படுகின்றது என்றால், அதிலும் சைவம் மற்றும் அசைவம் இருப்பது வினோதம் தான். அதாவது தின்னும் இறைச்சியில் “ஏற்றுக்கொள்லப்பட்டது / படாதது”, ஏற்புடையது / ஒவ்வாதது என்ற பாகுபாடுகள் உள்ளதும் வேடிக்கையே.இனி அதில் ஹிம்சை, அஹிம்சை என்ற பேச்சிற்கே இடமில்லை! தங்கள் பாரம்பரியத்தை மறந்த தமிழர்கள்: செல்வத்தை “மாடு” என்று வழங்கி வந்த தமிழ் மக்கள், தாங்கள் வளர்த்த “செல்வங்களை” கொல்ல கேரளாவிர்கு அனுப்பி வருகிறார்கள்.  திருவள்ளுவரைப் பற்றி வாய்கிழிய பேசி, கொலைத்தொழிலைச் செய்து வருவதில் வல்லவகள் தமிழர்கள். தமிழகத்திலுள்ள பொள்ளாச்சி, காங்கேயம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், அந்தியூர் போன்ற ஊர்களிலிருந்து தினமும், கேரளாவுக்கு மாடுகள் லாரியில் ஏற்றிச்செல்லப்படுகிறது. ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் புதன்கிழமை மாலையில் தொடங்கி வியாழக்கிழமை காலை வரையில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் சராசரியாக நன்காயிரம் மாடுகளை கேரளாவுக்கு, இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகிறார்கள். இப்படி இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகும் மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு போகும் போது, மாடுகளை சித்தரவதை செய்வதாக சொல்லி விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சில இந்து மதஅமைப்ப்புகளும் புகார் செய்ததை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் கண்ட இடங்களில் மாடு ஏற்றிச்செல்லும் லாரிகளை மடக்கி வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழகத்தின் கட்டுப்பாடு:  கேரள நீதிமன்றம் தான், தமிழக மாடுகள் கேரளாவிற்குல் வருவதைத் தடை செய்து தீர்ப்பளித்தது. கடந்த ஜூலை மாதம், 25ம் தேதி முதல், 10.08.2011 வரை ஏழு லாரி மாடுகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த காவல் துறையினர், ஐம்பது மாடுகளை ஈரோடு மாவட்டம், கொடுமுடி பக்கமுள்ள சாவடிப்பாளையம் கோசலைக்கும், 131 மாடுகளை கோவை மாவட்டம் மைலேரிபாளையத்தில் உள்ள கோசலைக்கும் அனுப்பிவிட்டார்கள். இதை தொடர்ந்து, 10.08.2011 அன்று ஈரோட்டில் கூடிய தமிழக, கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யூசப்[1]

ஒரு முஸ்லீம் வியாபாரியின் வாதம்: தமிழகத்திலிருந்து மாடுகள் மட்டுமல்லகோழி முட்டைகள், இறைச்சி கோழிகள், இறைச்சி ஆடுகள், பால், அரிசி மற்றும் உணவு காய்கறிகள் என பல பொருட்களை நாங்கள் கேரளாவுக்கு தினமும் வாங்கிச்செல்கிறோம், மாடு மட்டுமா…? இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் அதையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை…? இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நாங்கள் தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு வாங்கிக்கொண்டு போகும் அனைத்து பொருட்களையும் தடுப்போம்நாங்கள் குடும்பத்துடன் வந்து கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அமர்ந்து, தமிழகத்திலிருந்து வரும் எல்லா லாரிகளையும் தடுப்போம். தேவைப்பட்டால் எங்கள் குடும்பத்தோடு ஈரோட்டுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்”, என்று பேசினார்.
ஒரு இந்து வியாபாரியின் வாதம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவரான நல்லசாமி, “விவசாயிகள் கால காலமாகவே மாடுகள் வாங்குவது  விற்பது என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது, காங்கேயம் மாடுகள் அத்திக்கோம்பை மாடுகள், பர்கூர் மாடுகள் என்று சொல்லப்படும் தமிழகத்தின் பூர்வீக இன மாடுகள் விவசாயிகள் உழவு செய்யவும், வண்டி இழுக்கவும், கடினமான வேலைகளுக்கும் பயன்பட்டுவந்தது. அந்த வகை மாடுகளை நீங்கள் எத்தனை தூரம் பிடித்துக்கொண்டு போனாலும் நடந்து செல்லும் பலம் அந்த மாடுகளுக்கு இருந்தது. ஆனால் இப்போது உள்ள ஜெர்சி, சிந்து போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகள் உடல் பலமில்லாதவை, இந்த மாடுகள் சாதாரணமாக புல் தின்பதற்குக்கூட காட்டுக்குள் நடக்க முடியாமல், கட்டுத்தரையில் நின்றபடியே விவசாயிகள் அறுத்துக்கொண்டு வந்து போடும் புல்லைத்தான் தின்கிறது. இந்த லட்சனத்தில் அந்த மாடுகளை எப்படி ஐம்பது கிலோ மீட்டர் தூரமோ அல்லது நூறு கிலோ மீட்டர் தூரமோ நடந்து ஒட்டிக்கொண்டுபோவது”, என்கிறார்.

முரண்பட்ட வியாபாரிகளின் நிலை, விவாதங்கள்: வைக்கோல், மாட்டுத்தீவனம் விலை அதிகரித்துவிட்டதால், பால்காரர்கள் கால்நடைகளை குரிப்பாக எருமைகளை வளர்க்க முடியாததால், இறைச்சிற்காக கேரளாவிற்கு விற்க முன்வந்துவிட்டதாக தருமபுரியில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கால்நடைகள் இப்படி இறைச்சிற்காக விற்கப்படுவது தொடர்ந்தால், தமிழகத்தில் பாலிர்கே பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்[2]. தமிழகத்தில் இதைப் பற்றி விவாதிக்க உயர் அதிகாரிகள் கூட்டங்களும் நடந்துள்ளன[3].

2007ல் சிறிது கட்டுப்படுத்தப் பட்டது: 2007ல் தமிழகத்திலிருந்து, கேரளாவிற்கு அனுப்பப்படும் மாடுகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப் பட்டது[4]. அதனால் அதே நேரத்தில். ஜூன் 2007ல் நீதிமன்றத்தின் ஆணைப்படி, லாரிகளில் மாடுகளை அடைத்துச் செல்லும் முறை தடுக்கப்பட்டது. இதனால், மாட்டு மாமிசத்தின் விலை கேரளாவில் உயர்ந்து விட்டது, கிடைப்பதற்கரியதாகி விட்டது என்றெல்லாம் பேசப்பட்டது[5]. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் தான் மாடுகள் வெட்டப்பட்டு, இறைச்சி எடுக்கப்படுகிறது[6]. ஒவ்வொரு கசாப்புக் கடையிலும் சுமார் 30 மாடுகள் கொல்லப்படுகின்றன. இப்படி மாடுகளை கொலை செய்து வரும் கேரளாவில் மாடுகளின் உற்பத்தி 1.13% தான்! ஐக்கிய நாடுகள்ளின் சமூக-பொருளாதார ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்தியாவில், கீழ்தட்டு மக்கள் தாம், மாட்டிறைச்சி, அதிலும் பசு மாட்டிறைச்சியை உண்கின்றனர். இதில் முஸ்லீம்களைப் பற்றி சொல்லவேண்டாம். ஏனெனில், அவர்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை, ஆனால், இந்துக்களில் பெரும்பாலோர் பசு மாட்டு இறைச்சியை உண்பதை தவிர்த்து வருகிறார்கள்.

சித்தாந்தத்தால் ஒன்றுபடுபவர், மொழியினால் வேறுபடும் திராவிடர்கள்: நாத்திகம் பேசினால், அதில் கிருத்துவர்கல், முஸ்லீம்கள் எல்லோருமே கலந்து கொள்வார்கள். இலங்கைத்தமிழர்கள் என்றால், இலங்கை மலையாளிகள் தனியாகி விடுவர். முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் பிரிந்திருப்பர். ஆனால், தமிழர்கள் மதத்தினால் ஒன்றுபட மாட்டார்கள். ஏனென்றால், அங்கு நாத்திகம் வந்து, இந்து மதத்தை எதிர்க்கும் போது, இந்து தமிழர்கலின் நிலை அதோகதியாகி விடும். அதாவது, மாடுகளின் கதிதான். கேரளா, மேர்கு வங்காளம், வடமேற்கு மாநிலங்கள் முதலியவை அதே சித்தாந்தத்தால், மதங்களினால் வெஏருபட்டு இருக்கிறார்கள். சைவம் பேசின்னாலும், நந்தியை மரந்து விடுவார்கள், வைணவர்களாக இருந்தாலும் பசுக்களை மரந்து விடுவர். செல்வத்தை வெட்டுவார்கள், இறைச்சியாக்குவார்கள், ஏற்றுமதி செய்வார்கள்.


குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

ஒரு பதில் to “மாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…! கேரள மாட்டுவியாபரிகள் எச்சரிக்கை…!”

  1. S. Villalan Says:

    பௌத்தர்கள் கூட அஹிம்சை பேசி, ஹிம்சையுடன் ஆடு-மாடுகளின் இறைச்சியைத் தின்றுதான் வாழ்ந்தார்கள், சித்தாந்தம் பேசினார்கள்;

    முஸ்லீம்கள் இவ்வாறு பேசுவது பொறுத்தமே, ஏனெனில் அவர்களிடத்தில் அஹிம்சை முதலியவெல்லாம் எடுபடாது.

பின்னூட்டமொன்றை இடுக