Archive for the ‘அருணை வடிவேலு முதலியார்’ Category

பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு –சைவம் “தமிழர் சமயம்” ஆகி, சித்தாந்தம் நீர்த்தது! [7]

ஓகஸ்ட் 22, 2019

பன்னாட்டு பல்துறை மாநாடுவரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடுசைவம் தமிழர் சமயம்” ஆகி, சித்தாந்தம் நீர்த்தது!  [7]

Saiva Siddhanta Conference 2019-Dinathanti 17-08-2019

நீதிபதி பேசியது, சான்றிதழ்கள் கொடுக்கப் பட்டது, மாநாடு முடிந்தது: மாண்புமிகு திரு. நீதிபதி எம். கோவிந்தராஜ் ஜனாதிபதி உரையாற்றுவார் என்றிருந்த்ச்து, ஆனால், அவர் பேசவில்லை. மாண்புமிகு திரு. நீதிபதி கே. கல்யாணசுந்தரம் வாழ்த்துரை வழங்குவார் என்று போடப்பட்டிருந்தது, ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாண்புமிகு திரு. நீதிபதி ஆர். மகாதேவன் மட்டும் சைவ சித்தாந்தத்தைப் பற்றி சுருக்கமாக பேசி முடித்தார். “சமத்துவ சிந்தனையோடு கூடிய சித்தாந்த தத்துவமே  சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தத்தின் இறைத்தன்மையில் உண்மையான முழுமையான முக்தி கிடைக்கும். சமூக சிந்தனையோடு சமுதாய வளர்ச்சியிலும் சைவ சித்தாந்தம் செயல்பட்டு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது,” என்றார். பிறகு, சான்றிதழ்கள் நீதிபதிகளால் விநியோகிக்கப்பட்டன. சிறிது நெரம் கழித்து, அவர்கள் சென்றுவிட்டார்கள், அதனால், இரண்டு மடாதிபதிகளால் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.

Saravanan - Deivawayagam, what works behind

தமிழர் சமயம்வாதம் போலித்தனமானது: மு. தெய்வநாயகம், சைவ சித்தாந்தத்தை திரிபுவாதத்திற்கு உட்படுத்தியது, சைவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த திருபுவாதத்தை மறுத்து, அருணை வடிவேலு முதலியாரின் மறுப்பு புத்தகம் வெளியிடப் பட்டது. கத்தோலிக்கர் ஆதரவுடன், “தமிழர் சமயம்” என்ற மாநாட்டை கத்தோலிக்க பிஷப்புகளில் டையோசிஸ் வளாகத்தில் 15-08-2007 முதல் 19-08-2007 வரை நடத்தியது சரவணனுக்கு தெரிந்திருக்கும். இதைப் பற்றிய என்னுடைய விவரமான கட்டுரையை இங்கே படிக்கலாம்[1]. அதன் விளைவுகளைப் பற்றிய கட்டுரையை இங்கே படிக்கலாம்[2]. இதில் வேடிக்கை அல்லது பொருந்திய விசயம் என்னவென்றால், அடுத்த கட்டுரையே, “கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?” என்பது தான்[3].  அதில்தான், மைலம் மடாதிபதி, கோவில் நிலத்தை, கிருத்துவர்களுக்கு விற்ற பிரச்சினை வருகிறது. “சிவாக்கியா பாலய சுவாமி” யார் என்று கவனிக்க வேண்டியுள்ளது. 1971 மற்றும் 2018 தீர்ப்புகளில் அவரது பெயர் இருக்கிறது[4]. நீதிமன்ற ஆவணங்கள் படி சரி பார்த்தால், அவரும், இவரும் ஒருவரே என்று தெரிகிறது[5]. 2018 தீர்ப்பை மாண்புமிகு திரு. நீதிபதி ஆர். மகாதேவன் தான் கொடுத்துள்ளார். மாநாட்டிற்கு, முந்தைய விழாக்களுக்கு வந்துள்ளார். இதெல்லாம் தற்செயலாக நிகழ்ந்தனவா, தெய்வம் தீர்மானித்து, நடத்தி வைத்த நிகழ்வுகளா என்று தெரியவில்லை.

Saravanan-approach towards Tirukkural

திருக்குறள், சைவ சித்தாந்தம், வேதங்கள்: சரவணன் அன்ட் கம்பெனி, இப்பிரச்சினையையும் எடுத்துள்ளது, மேலும் கேள்விகளை எழுப்புகின்றன. மு.தெய்வநாயகம், தூஷித்த போது, கோழைகளாக பதுங்கியிருந்த இக்கூட்டம், இப்பொழுது, திடீரென்று ஓலமிடுவது ஏன் என்று தெரியவில்லை. குறளா-குரானா என்றெல்லாம் அச்ங்கப் படுத்தியபோதும், இவர்களுக்கு சூடு-சொரணை எதுவும் இல்லாமல் இருந்தது போலும். ஆனால், இப்பொழுது, வரிந் து கட்டிக் கொண்டு வந்துள்ளது, இவர்கள் உண்மையிலேயே, யாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர், என்ற கேள்வி எழுகின்றது. ஒரு பக்கம், சைவம் இந்து அல்ல என்பது; சித்தாடந்தம் தனி வழி என்பது; பிரிவினைவாதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்வது; பிறகு, குறளுக்கும் வேதங்களுக்கும் தொடர்பு என்றால் குதிப்பது…இவையெல்லாம் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக? சரவணன் அன்ட் கம்பெனி நேரிடையாக பதில் சொல்ல முடியுமா? அருணை வடிவேலு முதலியார் புத்தகம் இருட்டடிக்கும் ரகசியம் இதுதானா?

Saravanan, deceit Saivite or true devotee

எஸ். சரவணனின் நிலைப்பாடு என்ன?: ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் பெயர்களை சொல்லி, விளம்பரம் தேடுவதும் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் சைவர்களுக்கு விரோதமானவர் அல்ல. இம்மாநாட்டில் பேசிதைப் போல, ஏசு சித்தர், என்௷றெல்லாம் உளர மாட்டார்கள். எனவே இளங்கோ மற்றும் சரவணன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விபூதி பூசிக் கொண்டு, ருத்ராக்ஷம் கட்டி, சிவன் கோவில்களில் தத்துவம் பேசி, மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது.  சரவணனின் பேச்செல்லாம் சைவத்திற்கு எதிராக உள்ளவை தான். 200-300 பேரை வேண்டுமானால், அவர் ஏமாற்றி காலத்தை ஓட்டலாம். ஆனால், முடிவில் உண்மை தெரியத்தான் போகிறது. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி, பாரம்பரிய சைவனாக, சைவ சித்தாந்தியாக இருந்து பார்த்தாலே, இவர் மற்றும் இவருக்கு பின்னால் இருக்கும் கூட்டம், மாபெரும் சைவ தூஷணத்தை செய்து வருகிறது என்பதை அறிந்து கொள்வர். யாழ்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோர் இருந்திருந்தால், வள்ளலாரை கேள்வி கேட்டது போல கேட்டிருப்பார். ஒருவேளை தெய்வநாயகம் படுத்து விட்டதால், இவர் எழுந்து, அந்த வேளையை செய்கிறார் போலும். நிச்சயமாக, சிவபெருமான் சும்மா விட மாட்டார்.

Saravanan-confronting RSS for publicity

முடிவுரைமாநாட்டைப் பற்றிய கருத்துகள்: பால்வரை தெய்வம் நல்வினை தீயவினைகளை வகுக்குந் தெய்வமா, பிரிக்கும் கடவுளா, நம்பிக்கையாளர்களைக் குழப்பும் இறைவனா? திரு. அருணைவடிவேலு முதலியார் எழுதிய மறுப்பு நூலை மறைக்க, தருமபுர ஆதீனம் வெளியிட்டதை, “சைவ சித்தாந்த பெருமன்றமே” சதி செய்கின்றது! இப்பொழுதெல்லாம் நிறைய பேர் நான் விவேகானந்த கல்லூரியில் படித்தவன் என்று வேறு மாதிரியாக பேசுவது, சித்தாந்தம் சொல்லி அலைவது என்று ஆரம்பித்துள்ளனர்.  திராவிட கழக கருணானந்தம் விவேகானந்த கல்லூரியில் படித்தவராம், என்ன பிரயோஜனம்? நல்லூர் சரவணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவராம்! இந்த இளங்கோவும் விவேகானந்த கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறாராம்! இந்தியா நாடல்ல, ஒன்றியம்……..370 எடுத்தது, லடாக்கை உருவாக்கியது…. தவறு என்றெல்லாம் பேசிய விவேகானந்த கல்லூரி ஆசிரியர் – கணபதி இளங்கோ! இதெல்லாம் கூட சைவ சித்தாந்தத்தில் வரும் போல!

Saravanan-ignoring Deivanagam and mudaliar

சைவ சித்தாந்தப் பெருமன்றம், எண்.7, முதல் மாடி, வேங்கடேச அக்கிரகாரம் சாலை மயிலாப்பூர், சென்னை – 600 004 – இத்தகைய போலி சித்தாந்திகளிடமிருந்து மீட்கப் படவேண்டும்! சாது சண்முக அடிகள், சிவஞான பாலாய சுவாமிகள், சரவணனுக்கு ஆதரவு கொடுப்பதால் அம்மடங்களும் இந்து அல்ல என்று அறிவிக்குமா? சைவம் இந்து அல்ல என்று பழனியில் தீர்மானம் போட்டார்களாமே, எஸ். சரவணன் சொல்கிறார்! இந்துத்துவ வாதிகள், ஒன்றும் சொல்ல காணோமே? சிவனே இல்லாத சைவ சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, தமிழர் சமயம் என்றால், “இந்துக்கள்” என்ற சான்றிதழ்களை கிழித்துப் போடலாம்! இங்கு – பேஸ் புக்கில், உங்களது வீராப்பு காட்டிக் கொண்டிருந்தால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை, சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்து கொண்டிருக்கும் சைவம், மற்றும் சைவ சித்தாந்த மாநாட்டில் வந்து காட்ட வேண்டும்.

© வேதபிரகாஷ்

21-08-2019

Saravanan-opposing Nagasamy

[1]  வேதபிரகாஷ், தமிழர் சமயம்: கிருத்துவர்கள் நடத்திய மாநாடு, 2008, மே.18, 2010, https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[2] வேதபிரகாஷ், தமிழர் சமயம் – 2: அதன் பிரச்சினைகளும, விளைவுகளும், மே.18,2010,https://christianityindia.wordpress.com/2010/05/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[3] வேதபிரகாஷ், கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?, என்பது தான், 19-05-2010.

https://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

[4] Madras High Court, Srila Sri Sivagnana Balaya … vs The State Of Tamil Nadu By The … on 9 March, 1971

Equivalent citations: (1972) 2 MLJ 605, Author: K Palaniswamy, ORDER K.S. Palaniswamy, J.

[5] Madras High Court, Sri Math Sivagnana Balaya … vs The State Of Tamil Nadu on 14 September, 2018; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 14.09.2018, CORAM, THE HONOURABLE MR. JUSTICE R.MAHADEVAN, W.P.No.23948 of 2018
Sri Math Sivagnana Balaya Swamigal , Thirumadam Thirukailaya Parambarai , Mailam Pommapura Aathenam Mailam,, Tindivanam Taluk, Villupuram District. .. Petitioner Vs

1. The State of Tamil Nadu,

rep. by Principal Revenue Secretary,

St. George Fort, Chennai.

 

2.The District Collector,

Kancheepuram District,

Kancheepuram.

 

3.The Assistant Settlement Officer (North),

The Commissioner of Survey and

Settlement Office, Survey Illam,

3rd Floor, Chepauk, Chennai-5.

 

4.The District Revenue Officer,

Kancheepuram District,

Kancheepuram.

 

5.The Tahsildar,

Chengalpattu Taluk,

Kancheepuram District.

 

6.The Tahsildar,

Thirukazhukundram Taluk,

Kancheepuram District. .. Respondents

 

பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “இந்தியா” பற்றிய வாத-விவாதங்களும் [5]

ஓகஸ்ட் 21, 2019

பன்னாட்டு பல்துறை மாநாடுவரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடுசித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “இந்தியா” பற்றிய வாத-விவாதங்களும் [5]

Lokanayaki

11-08-2019 – சனிக்கிழமை இரண்டாவது நாள்மூன்றாவது  அமர்வு:  பொதிகை வள்ளலாராக நடித்தவர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.  பாவம்-புண்ணியம், அவரவர் அனுபவம் அவருக்கு, மக்களுக்கு செய்யும் காரியங்களில் அகம்பாவம் இருக்கக் கூடாது; என்றெல்லாம் பேசினார். ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் பொதுவானவையாக இருந்தன, மீண்டும் மீண்டும் சொன்ன விசயங்களை திருப்பிச் சொல்வாத இருந்தன, இதனால், பார்வையாளர்கள், கேட்பவர்களுக்கு ஆர்வமற்றவர்களாக ஆக்கியது. ஆய்வுக்கட்டுரைகளின் பட்டியல் வழங்கப்படாததாலும், அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றப்பட்டதாலும், எதையும் கண்காணிக்க முடியவில்லை. ஷீபா சீனிவாசன்,  ஒரு கட்டுரையை வாசித்தார். கட்டுரை வாசித்தவர்ரும், உடனே சென்று விட்டார். மற்றவர் வாசிப்பைக் கேட்க தயாராக இல்லை என்று தெரிந்தது.

Vasuki, Vijayalakshmi

நான்காவது அமர்வு – 3.00 மணி முதல்…..:

  1. அருணகிரிநாதர்- பற்றியது – புதியதாக ஒன்றும் இல்லை.
  2. விவேகானந்த கல்லூரியைச் சேந்த கணபதி இளங்கோ[1], சைவ சிந்தாந்தம் மற்றும் சிவாவின் வேத வழிபாடு இவற்றை வேறுபடுத்திக் காட்ட முயன்றார். “தமிழர் சமயம்” என்பதை வலியுறுத்துவது, தமிழர்கள் பின்பற்றும் மதம் அதிலிருந்து வேறுபட்டது போல வாசித்தார். அவர் ஒரு மார்க்சியவாதியைப் போல கோசாம்பி, சர்மா என்றெல்லாம் குறிப்பிட்டு விளக்குகினார். இந்தியா இல்லை என்றும், எனவே எந்த மதமும் இல்லை என்றும் அவர் கூறிக்கொண்டிருந்தார். அதேசமயம், தமிழ் என்பது பண்டைய மொழி, இதனால் தமிழின் மதம் வேறுபட்டது. தொடர்ந்து எம்.எம். அடிகளைக் குறிப்பிட்டு, சைவம் மற்றும் சித்தாந்தம் மாறுபட்டது என்றார்.

கே. வி. ராமகிருஷ்ண ராவ் இந்தியாவே இல்லை என்றால், கொலம்பஸ் எதைக் கண்டு பிடிக்க போனார் என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் மழுப்பினார். அதாவது, “இந்தியா” இருந்ததினால் தான், இந்தியாவுடன் வியாபாரம் செய்ய, கம்பெனிகளை உருவாக்கிக் கொண்டு வந்தன. “East India Company” என்று பெயர் வைத்துக் கொண்டபோது, தெற்காசிய நாடுகளையும் சேர்த்து தான் “இந்தியா” என்றது.

  1. செல்வி – திருவருட்பா.
  2. மர-வழிபாடு பற்றி ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது.

India intra and extra gangem - 1

ஐந்தாவது அமர்வு: முருகேசன் தலைமையில் கட்டுரைகள் படிக்கப்பட்டன.

  1. ஔவையார் – பல ஔவையார்கள் இருந்தது பற்றி கவலிப் படவில்லை.
  2. வெறியாடல் – இது பற்றி படித்த பெண்மணிக்கு பல விசயங்கள் தெரியாமலே இருந்தன. முருகு, முருகன் வேறு என்று தெரியாமலே குழப்பிக் கொண்டிருந்தார். மரியறுத்தல் பற்றி குறிப்பிடவில்லை. மரியறுத்தல், கழங்கு நிறம் மாறுதல், நெய்யணி மயக்கம் முதலியவை இருந்தன. கே. வி. ராமகிருஷ்ண ராவ், இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டினார். சரவணன் இடைமறித்து தனது விளக்கத்தைக் கொடுத்தார். இருப்பினும், கே. வி. ராமகிருஷ்ண ராவ் சே-சேஎய்-சேய், சேயோன்[2] மற்றும் கந்து-கந்தழி-கடம்பா[3] போன்றவற்றை குறிப்பிட்டு தெளிவு படுத்தினார். இவை பற்றிய அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் இணைதளத்தில் உள்ளன[4]. ஆனால், எதையும் குறிப்பிடாமல், பொதுப்படையாக வாசிப்பது வியர்த்தமான செயலாக இருக்கிறது.
  3. மாணிக்கவாசகர்……
  4. பிரியா – சைவசித்தாந்தத்தில் சமய வளர்ச்சியில் ஸ்தல புராணங்கள்.
  5. திருவந்திபுரம் – ஆண்பனை, பெண்பனையாக மாற்றியது

India intra and extra gangem - 2

12-08-2019 – மூன்றாவது நாள், சனிக்கிழமைமுதல் அமர்வு:

  1. வாசுகி கண்ணப்பன் – திருக்குறளில் சைவ சித்தாந்தம் (படித்துச் சென்று விட்டார்[5]), இது பற்றி பல கட்டுரைகள் ஏற்கெனவே வாசிக்கப் பட்டு விட்டன.
  2. விஜயலட்சுமி – வினைத் தீர்க்கும் திருப்பதி, நேரம் மற்றும் இடம் பற்றி விவாதிக்காமல் அற்புதங்களை விவரித்து நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். சரவணன் ஒருபுறம் புராணத்தை விமர்சித்து வருவதும், மறுபுறம் பாராட்டுவதும், விஞ்ஞான ரீதியாகவோ அல்லது வரலாற்று ரீதியாகவோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இதனால் இத்தகைய கதைகள் இன்றைய இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையா என்று தெரியவில்லை.
  3. சரஸ்வதி ஐயப்பன் – கண்ணதாசன் பாடல்களில் முப்பொருள்,
  4. சந்தியா – வள்ளலாரின் சிந்தனைகள்,
  5. சரோஜா – மாணிக்கவாசகரின் இலக்கிய சிறப்பு,
  6. கீதா – காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் முப்பொருள்,

How Siddhanta came

இரண்டாவது அமர்வு: பாலு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

  1. பாலு,
  2. வீர சைவம்
  3. ஆரோக்கிய மேரி –
  4. சைவசித்தாந்தத்தில் பக்தி இலக்கியம்.

சைவ சித்தாந்த சூழலில் “வீரசைவம்” கொள்கைகளை விளக்கவும், வித்தியாசப் படுத்திக் காட்டவும், அணுகவும் ஆராய்ச்சியாளர்கள் வசதியாக இல்லை. பல சமயங்களில், சமணர்களுக்கும் வீரசைவர்களுக்கும் இடையிலான மோதல்களை ஆராய்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் இல்லாமல், வீரசைவ இலக்கியங்களைப் படித்து ஆராய்ச்சி செய்ய முடியாது. எவ்வாறாயினும், இந்த தமிழ் சார்பு ஆராய்ச்சியாளர்கள் இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து விளக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர், ஆகவே, அவை ஜீவகாருண்யம், புலால்-மறுப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகளை அணுகும் போது,  வெளிப்படுகின்றன. பசவர் சாதி அமைப்புக்கு எதிராக வழிநடத்தி கர்நாடகாவில் சிவ வழிபாட்டை பிரபலப்படுத்தினார். அவரைப் பின்பற்றுபவர்கள் லிங்காயத்துகள் என்று அழைக்கப்பட்டனர். இறுதிக்கடன், இறந்தவர்களின் தகனம் போன்ற பல இந்து மத நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் சடலங்களை அடக்கம் செய்கிறார்கள். வேதங்களையும் பிற புனித நூல்களையும் ஓதினால் மட்டுமே கடவுளை உணர முடியாது. ஆசைகளை கைவிடுவதன் மூலம் மட்டுமே கடவுள் மனதில் உணரப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Bssaveswara, Veera Saiva

சித்தாந்தத்தை நோக்கிய அகோரசிவாச்சார்யாரின் அணுகுமுறை: சிதம்பரத்தில் அமர்தக ஒழுங்கின் கிளை மடத்தின் தலைவரான அகோரசிவாச்சார்யா, 12 பன்னிரண்டாம் நூற்றாண்டில், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சித்தாந்த மரபுகளை ஒன்றிணைக்க முடிவு செய்தார். சித்தாந்தத்தின் ஒற்றை விளக்கங்களை கடுமையாக மறுத்து, அகோரசிவாச்சார்யா முதல் ஐந்து கொள்கைகளை அல்லது தத்துவங்களை (நாத, பிந்து, சதாசிவா, ஈஸ்வர மற்றும் சுத்தவித்யா) பாசம் (பத்தங்கள்) வகைக்கு மறுவடிவமைப்பதன் மூலம் சிவாவைப் புரிந்துகொள்வதில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். பண்டைய ஒருமித்த பாரம்பரியத்தின் சமஸ்கிருத சடங்குகளை பாதுகாப்பதில் அகோராசிவா வெற்றி பெற்றார். ஆக, அகோரசிவாவின் சித்தாந்த தத்துவத்தை கிட்டத்தட்ட அனைத்து பரம்பரை கோயில் சிவாச்சார்யார்கள் பின்பற்றுகிறார்கள், மேலும் அகமங்கள் குறித்த அவரது நூல்கள் நிலையான பூஜை கையேடுகளாக மாறிவிட்டன. சைவத்தின் அன்றாட வழிபாடு, அவ்வப்போது சடங்குகள், தீட்சை சடங்குகள், இறுதி சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட ஷைவ சித்தாந்த சடங்கின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பரந்த படைப்பு அவரது கிரியக்ரமாதியோதிகா ஆகும்.

How Siddhanta came-vs Vedanta

மூலங்கள், அசல் ஆதாரங்கள் இல்லாமல் தமிழ் சைவ சித்தாந்தம் இருக்க முடியாது: 13 ஆம் நூற்றாண்டில், தமிழ் சைவ சித்தாந்தம், மெய்கந்தர், அருள்நந்தி சிவாச்சார்யார், மற்றும் உமபதி சிவாச்சார்யா ஆகியோர் தமிழ் சைவ சித்தாந்தத்தை மேலும் பரப்பினர். 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் கூறப்படும் மெய்கந்தரின் பன்னிரண்டு சூத்திரங்கள் கொண்ட, சிவஜனபோதம் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள், மெய்கண்டார் சம்பிரதாயத்தின் (பரம்பரை) அடித்தளத்தை அமைத்தன, இது கடவுள், ஆத்மாக்கள் மற்றும் உலகம் ஒன்றிணைந்து ஆரம்பத்தில் இல்லாமல் ஒரு பன்மைத்துவ யதார்த்தத்தை முன்வைக்கிறது. சிவன் ஒரு திறமையான ஆனால் பொருள் காரணமல்ல. சிவாவில் ஆன்மா ஒன்றிணைவது தண்ணீரில் கரையும் உப்பு போன்றது, என்று அவர்கள் கருதுகிறார்கள், இது ஒரு நித்திய ஒற்றுமை, இது இரட்டையர். எனவே, ஒரு மெல்லிய வித்தியாசத்தால், அவர்கள் வேறுபட்டவர்கள் என்றும், அசல் இலக்கியம், வேதங்கள் போன்றவற்றுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூற முடியாது. எதிரான திராவிட சித்தாந்தத்தை இங்கு கொண்டு வந்து ஆய்வு கட்டுரைகளை குழப்ப முடியாது.

© வேதபிரகாஷ்

20-08-2019

Siddhanta in tiruvacakam

[1] தமிழ் துறையைச் சேர்ந்தவர்- இவருக்கு மற்ற விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும், ஆனால், இந்தியா என்ற தேசம் இல்லை, பல நாடுகள் கொண்ட தேசம் போன்ற கொள்கைகளுடன், இவர் படித்த கட்டுரை இருந்தது.

[2]  K.V. Ramakrishna Rao, The Development of Muruku-Muruka-Vēlan and Ce-ce-cey-Ceyon in Cankam Literature, http://murugan.org/research/rao.htm

[3] http://murugan.org/research/rao-zodiac.htm

[4] http://murugan.org/events/2003_synopses/synopses.htm#rao1

http://murugan.org/events/2003_synopses/synopses.htm#rao2

http://murugan.org/events/2003_synopses/synopses.htm#rao3

[5] அவருக்கு அடுத்த நாள் “கலைமாமணி” விருது கொடுப்பதால் சென்று விட்டாராம்!

பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ-விரோதம் அரங்கேறுகிறதா? [3]

ஓகஸ்ட் 21, 2019

பன்னாட்டு பல்துறை மாநாடுவரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடுசைவம் போர்வையில் சைவவிரோதம் அரங்கேறுகிறதா? [3]

Saravanan - Deivawayagam, what works behind

தமிழர் சமயம், சைவசித்தாந்தம், இந்து அல்ல: எஸ். சரவணன், சைவ சித்தாந்தத் துறைத் தலைவர், “சோமசுந்தர நாயக்கர்” (1846–1901) வைத்து, குறுகிய சைவ சித்தாந்தத்தை உருவாக்கப் பார்க்கிறார். மறைமலை அடிகளுக்கு அவர் தான் குரு, ஆனால், அவர், தனித்தமிழ் இயக்கம் மூலம் பிரபலம் அடைந்ததால், இவர் பின்னுக்குத் தள்ளப் பட்டார். ஆனால், நாயக்கரின் சைவம், வைணவ விரோதமாக இருந்ததை மறைத்துப் பேசியது, திகைப்படையச் செய்தது. சைவ-வைணவ துவேசத்தை வளர்த்து சித்தாந்தம் உருவாக முடியாது, அதற்கு எந்த மாநாடும் துணை போக முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருக்கும் சைவர்களுக்கு, சைவ சித்தாந்திகளுக்கு, சைவ போராளிகளுக்கு இத்தகைய சிந்தனைகள் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை. சென்னையில் இருக்கும் சைவர்கள், சைவ சித்தாந்திகள், சைவ போராளிகள் இங்கே வரலாமே? கடவுள் இல்லை என்ற தோரணையில் எஸ்.சரவணன், பேசுவதற்குத் தான் சைவ சித்தாந்த மன்னாட்டுப் பல்துறை மாநாட்டின் நோக்கமா? சைவசித்தாந்திகளும், இந்துவிரோத தெய்வநாயக கிருத்துவ கூட்டமும் “தமிழர் சமயம்” என்கின்றன[1], பிறகு இவர்களுக்குள் என்ன கூட்டோ? இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கிருத்துவர்களுக்குத் துணைப் போகும் நிலைப்பாடு என்னெவென்று புரியவில்லை[2]. 2008லேயே எச்சரித்து, கட்டுரைகளில் எழுதியிருந்தேன். இப்பொழுது 2019ல் அப்படியே நடக்கிறது[3]. ஆட்கள் மாறினாலும், சித்தாந்தம் மாறவில்லை. அப்பொழுது, தெய்வநாயகத்திற்கு பின்புலமாக கத்தோலிக்க சர்ச் வேலை செய்தது வெளிப்படையாக இருந்தது[4]. இப்பொழுது, சரவணனை, தெய்வநாயகமாக்கியது யார் என்று தெரியவில்லை.

Pazhani, Saiva siddhanta conference, 19-21, July 2019 saivam not Hindu

தமிழர் சமயமான சைவத்திற்கும் அணுவளவும் தொடர்பில்லை என்பதனைத் தனது ஆய்வுகளின் மூலம் நல்லூர் சரவணன் மெய்ப்பித்து வருவது[5]: நாம் தமிழர் கட்சி சீமான் கூறியது, “சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களின் சைவச் சமயக் கருத்தியல் பரவலையும், அதுதொடர்பான ஆய்வுகளையும் முடக்கும் நோக்கோடு அவரை அச்சுறுத்தி ஒடுக்க நினைக்கும் இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இந்து என்கிற கோட்பாட்டுக்கும்தமிழர் சமயமான சைவத்திற்கும் அணுவளவும் தொடர்பில்லை என்பதனைத் தனது ஆய்வுகளின் மூலம் நல்லூர் சரவணன் மெய்ப்பித்து வருவதே காவிப் பயங்கரவாதிகளின் இத்தகைய போக்குக் காரணமாகும். இதனால், தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அவரைப் பணியைவிட்டு நீக்கம் செய்யவும், பணியினைத் தொடரவிடாது இடையூறு செய்யவுமானச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்துத்துவத்தின் கோர முகத்தையும், அதன் போலித்தனத்தையும் முற்றுமுழுதாகத் துகிலுரித்து மக்களிடையே கருத்தியல் பரப்புரையை மேற்கொண்டதற்காகக் காவிப்பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேசு போன்றவர்கள் எத்தகைய அச்சுறுத்தலையும், அடக்குமுறைகளையும் சந்தித்தனரோ அதற்கு நிகரான ஒரு கொடும் எதிர்வினையை நல்லூர் சரவணன் அவர்களும் சந்தித்து வருகிறார் என்பதிலிருந்து இச்சிக்கலின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்”.

Seeman supports Saravanan Dec.2018

நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியோடு நிற்கும்: நாம் தமிழர் கட்சி சீமான் தொடந்து கூறியது, “முனைவர் .பத்மாவாதி அவர்கள் எழுதிய, ‘மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும்என்கிற நூல்வெளியீட்டு விழாவில், ஆரியத்திற்கெதிரான மாணிக்கவாசகரின் கருத்துக்களை மேற்கோள்காட்டிப் பேசியதற்காக முனைவர் நல்லூர் சரவணன் அவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தும், மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுமட்டுமல்லாது அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள ஒரு சனநாயக நாட்டில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கே இத்தகைய நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் இருக்கிறதென்றால் கருத்துச்சுதந்திரமும், தனிமனித உரிமைகளும் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதனை உணர்ந்து அதற்கெதிராகச் சனநாயக ஆற்றல்கள் அணிதிரள வேண்டியது அவசியமாகிறது.

Seeman supports Saravanan Dec.2018.2

கல்வியாளர்களை அச்சுறுத்துவதும், கல்வி நிறுவனங்களைக் காவிப்படுத்த முயல்வதுமானக் கொடுஞ்செயல்களை எதிர்த்து கருத்தியல்ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியும் சமரசமின்றிச் சமர் செய்து அதனை வீழ்த்தி முடிக்கும் எனச் சூளுரைக்கிறேன். ஆகவே, இத்தருணத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியோடு நிற்கும் எனவும், காவிப்பயங்கரவாதிகளின் மதத்துவேச நடவடிக்கைகளையும், சதிச்செயல்களையும் களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.”

Seeman supports Saravanan Dec.2018.3

சரவணன் சைவவிரோத செயல்கள் செய்வது எப்படி?: பிறகு சி.பி.ஐ.எம்.எல் போன்ற தீவிரவாத நக்சலைட் ஆதரவாளர்களும் இவருக்கு துணையாக இறங்குகிறார்கள்[6].  பல்கலைக் கழகத்திலேயே ஏ.பி.எஸ்.சி பேனரில் ஆர்பாட்டம் செய்கிறார்கள்[7]. கடந்த 18ம் தேதி ஒரு கும்பல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதுடன் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது பல்கலைக் கழக துணை வேந்தரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்ற துணை வேந்தர், பேராசிரியர் நல்லூர் சரவணன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அத்துமீறி பல்கலைக் கழகத்தில் நுழைந்த கும்பல் மீது துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேராசிரியருக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அந்த கும்பல் மீது வழக்கு தொடர வேண்டும். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவிப்போம்[8]. இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறையின் மாணவரும் தமிழ் தேசிய மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான   கோபிநாதன் தெரிவித்தார்[9].

Arunai Vadivelu Mudaliar, his book

சரவணன் ஆதரவு கோஷ்டிகள் ஒரே பாணியில் இருப்பது எப்படி?: அதே பாட்டை மற்ற இணைதளங்களும் பாடி வருகின்றன[10]. அவற்றின் பின்னணி, இந்திய-விரோதமும் இருப்பதை கவனிக்கலாம்[11]. பிறகு, இவர்களின் திட்டம் என்ன? சைவ சித்தாந்த ஆராய்ச்சியா? சரவணன் இதற்கெல்லாம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அதாவது, அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டு, தான், இத்தகைய இந்துவிரோத ஆராய்ச்சிகளை செய்யவில்லை, சைவத்தை அவ்வாறு தூஷிக்கவில்லை, சைவ சித்தாந்தத்தை திரித்து கூறவில்லை என்று மறுக்கவில்லை. மாறாக ஊடகங்களுக்கு அவ்விதமாகவே பேட்டிக் கொடுத்தார்[12]. விளைவு, பழனியில் இந்துவே இல்லை என்ற ரீதியில் வந்துள்ளார்[13]. இத்தகைய சைவ-விரோத கருத்துகளை வைத்துக் கொண்டு, இவர் எப்படி, சைவ மகாஜனம் மன்றத்தின் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. அருணை வடிவேலு முதலியார் புத்தகத்தை மறைக்கும், இவரது போக்கே, வியப்பாக இருக்கிறது. முதலில், சைவத்தை ஆதரிப்பதாக இருந்தால், அப்புத்தகத்தை மறுபடி பதிப்பித்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை. முன்பு அவரது புத்தகத்தை வரவிடாமல் தடுத்த அதே சக்திகள் மறுபடியும் வேலை செய்கின்றன போலும். அதற்கு, இந்த சரவணன் வேலை செய்வது நிச்சயமாகிறது.

© வேதபிரகாஷ்

20-08-2019

Arunai Vadivelu Mudaliar

[1]  வேதபிரகாஷ், தமிழர் சமயம்: கிருத்துவர்கள் நடத்திய மாநாடு, 2008, ஆகஸ்ட்.15, 2008.

[2] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[3] வேதபிரகாஷ், தமிழர் சமயம் – 2: அதன் பிரச்சினைகளும், விளைவுகளும், 2008, ஆகஸ்ட்.15, 2008.

[4]https://christianityindia.wordpress.com/2010/05/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[5] நாம்.தமிழர்.கட்சி, சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாய் நின்று, அவருக்கெதிரான இந்துத்துவ அடிப்படைவாதிகளின் சதிச்செயல்களை முறியடிப்போம்! – சீமான், நாள்: செப்டம்பர் 17, 2018

https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/

[6] வினவு, சிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் !, By புமாஇமு – October 1, 2018

[7] https://www.vinavu.com/2018/10/01/organise-against-hindutuva-attack-on-mu-professor/

[8] தினகரன், மாணிக்கவாசகர் குறித்து கருத்து தெரிவித்த பல்கலைப் பேராசிரியரை மிரட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை, 2018-09-25@ 00:17:28

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=438223

[10] கருப்பு.தமிழ்.ஸ்டூடியோ, தமிழர்கள் ஆரியருக்கு எதிரானவர்கள் என நிறுவிய பேராசிரியருக்கு தொடர் அச்சுறுத்தல், By Shanmuga Vasanthan at Monday, September, 17, 2018 7:39 PM.

[11] https://karuppu.thamizhstudio.com/news/professor-nallur-saravanan-threatened-by-hindutva

[12] பிபிசி தமிழ், மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், 4 அக்டோபர் 2018

[13] https://www.bbc.com/tamil/india-45734041