சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை இந்து-எதிர்ப்பு மனப்பாங்குகலந்துரையாடல்கள் (5)

SIC-Hinduphobia-discussion-1

5.00 முதல் 6.00 வரை: “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[1] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[2] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[3] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[4] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[5] நடுவராக இருந்தார். ம. வெங்கடேசன், ஈவேரா மூலம் அத்தகைய மனப்பாங்கு உருவானதை எடுத்துக் காட்டினார்.

M.Venkatesan talks on EVR etc

. வெங்கடேசன் பேசியது: ம. வெங்கடேசன், பெரியார் எப்படி பறையர், எஸ்.சி, தலித்துக்களுக்காக ஒன்றையும் செய்யவில்லை, மாறாக எதிர்த்தார் என்பதனை எடுத்துக் காட்டினார். “துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது  தான்! வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாதுஎன்று .வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய அவரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்[6].

 SIC-Hinduphobia-discussion-audience

என். அனந்த பத்மநாபன் பேசியது: என். அனந்த பத்மநாபன் பாரதியாரின் பாடல்களை உதாரணமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய கருத்தை முறையாக எடுத்து வைத்தார். ஜடாயு, கம்ப ராமாயணம் உதாரணங்களை வைத்து பேசினார். குறிப்பாக கீழ்கண்ட பாரதியாரின் எழுத்தை எடுத்துக் காட்டினார்: “என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பகத் தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா? நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா? பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக் கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன்தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கர்யம்”.

Guna, Bangalore- Tiruvalluvar statue

.வி. கோபாலகிருஷ்ணன் பேசியது: ஏ.வி. கோபாலகிருஷ்ணன், தெய்வநாயகம் எழுதிய புத்தகங்களை வைத்து, எவ்வாறு திருக்குறள், திருவள்ளுவர் கிருத்துவமயமாக்கப் பட்டார் என்று விளக்கினார். இவர் இவற்றையெல்லாம் ஏற்கெனவே இணைதளத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்[7].  திருவள்ளுவ உருவம் மாற்றியது பற்றி –  “நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்’ என்றார். திரு.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார். –ஜி.யு.போப் “திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்க முடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி ஓலைச்சுவடி செப்பு தகடு   தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார்[8].  திருக்குறள் கிருத்துவ நூல் என புத்தகம் தயாரிக்க ஆய்வுக் குழு தயார் செய்தார். இதன்  பின்னணி தேவநேயப் பாவாணர். முகம் தெய்வநாயகம்.  கலைஞர் வாழ்த்துரையோடு வந்த நூல். கத்தோலிக்கம் மற்றும் பல சிஎஸ் ஐ சர்ச் பாதிர்கள் கலந்து கொள்ள அன்பழகன் தலைமையில் வெளியிடப்பட்டது. “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31 கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧௭3 -நன்றி- தகவல், படங்கள் தேவப்ரியா சாலமன்”[9].

Different Tiruvalluvar figures

“சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் – சைவ சித்தாந்தம் எனும் உளறல். ஏசு தோமோ யார் வாழ்ந்தார் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. பேராயர் துணைவர்கள் சர்ச்சின் செயல்பாடு ஆதாரம் இல்லா கட்டுக்கதை என உணர்ந்து, ஆசார்யா பால் காணேஷ் மீது காவல் துறையில் புகார் செய்ய, வழக்கு நீதிமன்றத்தில் நடக்க, சிறை தண்டனை உறுதியானது. ஆசார்யா பால் சர்ச் தூண்டி செய்தது தான் என இல்லஸ்ட்ரேடட் வீக்லீ பத்திரிக்கை பேட்டியில் சொல்லி மேலும் ஆதாரம் வெளியிடுவேன் என்றிட பேரம் பேசி வங்கியில் பணமாக் இருந்தவை, கார் போன்றவை திருப்பித்தர வேண்டும், சர்ச் பணத்தில் வாங்கிய வீடு, சிறு நகைகள் வைத்துக்க் கொளலாம் என உடன்பாட்டில் வழக்கு -நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துகொண்டனர். பேராயர் அருளப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்”.

Arunai, TNR, .Vedaprakash pictures included

“சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் சின்னப்பா சாந்தோம் “புனித தோமையார்” 100 கோடி செலவில் சினிமா படம் அறிவித்து கலைஞர் தலைமையில் விழா நடந்தது. “`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதிய அவதாரம் குறித்துபுனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி – கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா? `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர்  “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார். இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை.  pages92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar”.

Ellis coins, stamp etc- Tiruvalluvar

உண்மையான ஆராய்ய்ச்சியாளர்களின் பெயர்களை, நூல்களை குறிப்பிடாமல் இருப்பது:  ஆராய்ச்சி எனும்போது, குறிப்பிட்ட தலைப்பு, விசயம், பாடம் முதலியவற்றில், முன்னர் என்ன உள்ளது, அவற்றை விடுத்து, புதியதாக நாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற நிலையில் இருக்கவேண்டும். ஆனால், இவர் தெய்வநாயகத்தைப் பார்த்தது, பேசியது, உரையாடியது கிடையாது, இருப்பினும், திடீரென்று அவர் மீது அக்கரைக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். 19855ல், “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்” புத்தகம் வெளியிட்டபோது இவ என்ன செய்து கொண்டிருந்தார்; 1991ல் அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் வெளியிட்டபோது, எங்கிருந்தார், என்பதெல்லாம் தெரியாது. சென்னையிலேயே இருக்கும் தெய்வநாயகம் பற்றி, இப்படி “இந்துத்துவாதிகள்” அதிகமாக விளம்பரம் கொடுப்பதே விசித்திரமாக இருக்கிறது. என்னுடைய பிளாக்குகளை அப்படியே “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து தனது பிளாக்குகளில் போட்டுக் கொள்வார், ஆனால், அங்கிருந்து தான் எடுத்தார் என்று கூட குறிப்பிட மாட்டார். தெய்வநாயகம் “தமிழர் சமயம்” மாநாடு நடத்திய போது கூட, கிருத்துவப் பெயர் கொடுத்து கலந்து கொண்டவர்களும் உண்டு[10]. அவகளுக்கு யார்-யார் பேசுகிறார்கள் என்று கூட தெரியாத நிலை இருந்தது. முன்பு கூட, “உடையும் இந்தியா” புத்தகத்தில், தெய்வநாயகத்திற்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் குறித்து, தெய்வநாயகமே ஆச்சரியப்பட்டது தமாஷாக இருந்தது. .  திருவள்ளுவர் பற்றி இத்தனை அக்கரைக் கொண்ட இவர், மைலாப்பூரில் வி.ஜி.சந்தோஷத்தை வரவழைத்து, பாராட்டி, பேசி, விருது வழங்கியதைப் பற்றி ஒன்றும்கண்டு கொள்ளவில்லை[11]. ஆக இவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்ற்றிக் கொள்கிறார்களா அல்லது வேறேதாவது விசயம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

SIC-3 delved much upon Hinduphobia

இந்துஎன்றால் ஏற்படும் பயம்” [Hinduphobia]: இது பற்றி ஆய்ந்தவர்கள், எதிர்-இந்துத்துவத்தைப் பற்றிதான் அதிகம் பேசினர்! அதாவது இந்து மதம் மற்றும் இந்துக்களுக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிகமாக பேசினர். “இந்து” என்றால் பயம், அச்சம், பீதி, திகில் .. வெறுப்பு, காழ்ப்பு, துவேசம்…., அலர்ஜி, அசௌகரியம், கஷ்டம், எதிர்ப்புத்தன்மை, ஏற்படுகின்றன என்றாள், யாருக்கு, ஏன் என்பதை விளக்க வேண்டும். மேலும், அதற்கு இந்துக்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் என்பது பற்றி, விவரங்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றனர். இல்லை, அரசாங்கம், அவ்வாறு குறிப்பிட்ட, நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகின்றனரே என்றும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

27-12-2017.

SIC-3 delved much upon Hinduphobia-what

[1] M.Venkatesan is well known Tamil writer and publisher. He is an original thinker and dharmic activist. He has written books on Ambedkar, EV Ramasamy Naicker, the Dravidian movement and Justice Party. His books such as ஈவே ராமசாமியின் மறுபக்கம் (The Other side of EV Ramasamy), ‘புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? (Why did Ambedkar Convert to Buddhism? ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare? )’, ‘ஹிந்துத்துவ அம்பேத்கர் (Hindutva Ambedkar) ‘ have been making a significant impact on the intellectual climate of Tamil Nadu.

[2]  N.A. Padmanabhan is a Tamil journalist and writer having a very rich experience in both Tamil print and visual media. He has authored books on Indian Philosophy and Hindu spirituality. His books such as ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே (Rejection of God is also Spirituality), தத்துவ தரிசனங்கள் (Indian Philosophical Perspectives: Dharsanas) are widely popular in the state. https://www.facebook.com/padman.anandapadmanaban?fref=ts

[3] Jataayu (R N Sankara Narayanan) is an IT professional. He is a well-known Tamil Writer and Hindutvaite thinker. He has been one of the editors of website Tamil Hindu and Valam magazine. He has a deep interest in Kambaramayanam and knows Sanskrit well. He has written a number of articles in Tamil Hindu and Thinnai websites. His most recent publications include பண்பாட்டைப் பேசுதல் (Talking on Culture), சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் (இணையாசிரியர் அரவிந்த நீலகண்டன்) – A New Perspective on Jati (with Aravindan Neelakandan), காலம்தோறும் நரசிங்கம் (பண்பாட்டு கட்டுரைகளின் தொகுதி) Narasimham Over the Ages – Compendium of Articles on Culture).

[4] . A.V.Gopalakrishnan is an engineer by profession and a passionate historical researcher on Bible and theology. For over fifteen years he has been writing blogs on the historicity of Bible under his pen name Devapriya ji.

[5] Professor, Department of Social Work, Mizoram University, https://www.facebook.com/mekanagaraj

[6] http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part15/

[7]https://tamilsamayam.wordpress.com/2015/07/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/

[8]  இந்த விவரங்கள் எல்லாம் இவருக்கு எப்படி தெரியும் என்று எடுத்துக் காட்டவில்லை.

[9] நிச்சயம்மாக, “தேவப்ரியா சாலமன்” குறிப்பிட்டிருந்தால், அவர் மூலங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

[10] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

https://christianityindia.wordpress.com/2010/05/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[11] https://secularsim.wordpress.com/2017/06/16/why-hindutwavadis-hobnob-with-christians-under-the-guise-of-valluvar-promotion/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)”

  1. Suma Latha Says:

    While discussing “Hinduphobia”, ironically, they gave exhibited their “Christian-phobia”, as both are not good for research and research methodology.

    No doubt, the anti-Indian groups thrive unde various masquarades like amti-brahmin, anti-sanskrit, anti-hindu, anti-Indian and finally anti-Hindu, they have to exposed with their acts, activities and outcomes with documents, instead of making rhetoric.

    Balanced, nonchalant and unbiased research with material evidences could have created more impact than such emotional oratory.

  2. “வெளிச்சத்தை நோக்கி” என்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்!  [2] | Says:

    […] [9] https://tamilheritage.wordpress.com/2017/12/28/swadeshi-indology-conference-discussion-on-hinduphobi… […]

பின்னூட்டமொன்றை இடுக