Posts Tagged ‘தியானதீப ஆஸ்ரமம்’

நித்யானந்தா தியானதீப ஆஸ்ரம தலமையிலிருந்து விலகினார்!

மார்ச் 30, 2010

நித்யானந்தா தியானதீப ஆஸ்ரம தலமையிலிருந்து விலகினார்!

நித்யானந்தரின் விலகல் அறிக்கை http://dhyanapeetam.org/web/default.aspx என்ற அந்த ஆஸ்ரமத்தின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது:

தியானதீபத்தின் தலமையில் உள்ள நான் கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்டுள்ள நிகழ்வுகள், ஊடகங்களில் என் மீது வரும் செய்திகள் விஷயமாக ஹரித்வாரில் உள்ள தலைச்சிறந்த ஆசாரியார்கள் எல்லோரையும் சந்தித்தேன்.

நடந்தத்தைப் பற்றி நான் அவர்களிடம் உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பற்றி விவாதித்தபோது, நான் தியானதீபத்தின் எதிர்காலத்தக் கருத்திற்கொண்டு, அவர்களுடைய ஆன்மீக மற்றும் தார்மீக ஆதரவையும், வழிகாட்டளையும் வேண்டிக் கேட்டுக் கொண்டேன். நான் என்னுடைய வழக்கறிஞர் என்ன சொல்கிறாரோ அதன்படியே நடப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளேன்.

நான் ஆன்மீக தனிமையில் சில குறிப்பிட்ட காலத்தில் இருக்க விரும்புகிறேன் என்று சொன்னதற்கு ஆச்சாரியார்கள் கொள்கை அளவில் சம்மதம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஞானதீபத்தின் தலமைப் பொறுப்பு மற்றும் எல்லா டிரஸ்ட்டுகளிடமிருந்தும்  நான் விலக முடிவு செய்துள்ளேன். அதன்படியே தேவையான மாற்றங்களை செய்து கொண்டு அவை இயங்கலாம். அதன்படியே பிரச்சினையில்லாத சாதகர்கள் மற்றும் காப்பாளர்கள் டிரஸ்டின் அங்கத்தினர்களாக இருந்து நிர்வாகிப்பர். ஆச்சாரியர்களையும் அவ்வாறே புதியதாக உருவாகும் நிர்வாகக் குழு அங்கத்தினர்களுக்கு வழிகாட்ட வேண்டியுள்ளேன். அதன்படியே தியானதீபத்தின் ஆன்மீக செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கவும், மாற்றியமைக்கவும் வழிகாட்ட வேண்டிக் கொண்டுள்ளேன்.  அத்தகைய புதிய அங்கத்தினர்களையும், ஆச்சாரியர்களின் அறிவுரைப் படி நடக்க சொல்லியிருக்கிறேன்.

நான்  கடந்த பத்தாண்டுகள் மற்றும் மேலான காலத்தில் என்னுடன் இருந்த அனைவர்க்கும், அவர்கள் எனக்கு வழிகாட்டியதற்கும், அத்தகைய சந்தர்ப்பம் ஏற்பட்டதற்கும் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாதனையை சிரத்தையாகக் கடைப்பிடித்து வெற்றிபெற அனைவரயும் கேட்டுக் கொள்கிறேன். அதில் யார் சாதனையில் தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்பதைவிட சாதனையின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த சமீபத்தைய ஊடக செய்திகள் எல்லாம் ஒரு தனிநபருடைய அத்தகைய சாதனையை, சாதனையின் தன்மை மற்றும் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்காது. எப்பொழுது வேண்டுமானலும், தேவைப் பட்டால், நடந்ததைப் பற்றியெல்லாம் ஒரு தனித்த சுதந்திர சாட்சியாக இருந்து என்னுடைய நடத்தைப் பற்றி தூய இதயத்துடனும், சுத்தமான ஆன்மையுடனும், தப்பெண்ணங்கள் இல்லாத சூழ்நிலையில் பேசத் திரும்பி வருவேன்.

எல்லொருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.

(எல்லொரும்) சந்தோஷமாக இருப்பார்களாக.