Posts Tagged ‘சிவஞானபோதம்’

பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், வாத-விவாதங்களும் [4]

ஓகஸ்ட் 21, 2019

பன்னாட்டு பல்துறை மாநாடுவரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடுஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், வாத-விவாதங்களும் [4]

Karaikkar Ammaiyar going to Kailash

 10-08-2019 – முதல் நாள் அமர்வு [மாலை 5.00 முதல் 6.00 மணி வரை] ஆய்வுக் கட்டுரை வாசிப்பு: அதன் பிறகு, ஒரு ஆய்வுக்கட்டுரை வாசிப்பு அமர்வு இருந்தது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திருமதி உஷா ராணி, 2017 வரை, பாம்பன் சுவாமிகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார், ஆனால், பின்னர், அவரது படைப்புகளைப் படித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். அவள் “குமார கவசம்” என்பதை விளக்க முயன்றார், ஆனால் அதை சரியாக செய்ய முடியவில்லை. அடுத்து, முகுந்தன் தனது ஆய்வுக்கட்டுரையை மிகவும் பொதுவான முறையில் படித்தார். எப்படியிருந்தாலும், ஆய்வுக்கட்டுரை வாசிப்பு அமர்வு இருந்தது என்ற நோக்கத்திற்காக, இவை மாலை 6.30 மணி வரை சடங்கு போல இழுக்கப்பட்டது. உணவை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், சரவணன் தலையிட்டு பல விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

Raising the dead - Indian way-kailash

11-08-2019 – சனிக்கிழமை இரண்டாவது நாள்முதல் அமர்வு: திருமதி லலிதா தலைமை அமர்வில், நடைபெற்ற அமர்வில் கீழ்கண்டவர்கள் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்தனர். இடையிடையே பேசிய லலிதாவின் கருத்துகள் முன்னுக்கு முரணாக இருந்தன. ஏசுநாதரே ஒரு சித்தர் என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. போகர் சீனாவிலிருந்து வந்தார், தமிழ் படித்தார், சைவ சித்தாந்த நூல்களைக் கொடுத்தார் என்றெல்லாம் பேசினார். சரித்திர நோக்கில் / வரலாற்றுக் கண்ணோட்டத்தில் என்றால் இதெற்கெல்லாம் ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறெல்லாம் இல்லாமல், வெற்று மேடை பேச்சு போன்று கட்டுரை வசித்தது பலனற்றதாக இருந்தது.

  1. லட்சுமி (மலேசியா) – அப்பர் காலத்து வழிபாடு, என்று பேச ஆரம்ப்பித்தார். சைவர்கள் குலம், கோத்ரம் என்று பிரிக்கப் பட்டிருந்தனர். அகத்தவ வழிபாடு இருந்தது. எட்டு நிலைகளைப் பற்றி அல்ல. யமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரத்யாஹாரா, தாரணா, தியானா, சமாதி இவற்றையே யோகத்தின் எட்டு அங்கங்கள், அஷ்டாங்க யோகம்எனப்பட்டது. திருமூலரும் குறிப்பிட்டுள்ளார்.
  2. வேங்கட கலையரசி – சிவவாக்கியர், 6ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று பொதுப்படையாக தெரிந்த விசயங்களையே கூறினார்.
  3. எஸ். நடராஜன் – சிவஞானபோதம், பற்றி தெரிந்த விசயங்களையே தொகுத்துப் படித்தார்.
  4. லலிதா – சிவவாக்கியர் பற்றி படித்தார். கலையரசி படித்ததை சொல்லிக் கொண்டு, அலுத்துக் கொண்டே படித்தார்.
  5. ஆனூர் தேவி – திருமூலரும், தற்காலமும், என்று இக்கால பள்ளி மற்றும்கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளை அளைவதற்கு, சித்தாந்தம் உபயோகப் படுத்த வேண்டும் என்று படித்தார்.
  6. ஆசின் விசாபா (நேபாளம்) – Saiva philosophy of Pasupathi, Nepal, என்று ஆங்கிலத்தில் படித்தார். அவரது ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. கே. வி. ராமகிருஷ்ண ராவ் நேபாள சைவ தத்துவம், எப்படி தமிழக சைவ சித்தாந்ததுடன் ஒத்துப் போகும், மேலும் பலியிடுதலை சைவ சித்தாந்தம் ஏற்காது என்று எடுத்துக் காட்டினார். உடனே நடராஜன், பலியிடுதல் எல்லாம் இன்றும் இருக்கின்றன. கொடுபவர்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று வாதிட்டார். உடனே சரவணனும் நடராஜனை ஆதரித்துப் பேச ஆரம்பித்தார். அப்பொழுது, ராவ் சைவ சித்தாந்தம் உயிர்கொலையை ஏற்காது, அதையும் மீறி, பலிகள் நடத்தலாம் என்றால், அது முரண்பாடாகும் என்றார். தாங்கள் அவ்வாறு வாதிடுவது, சைவ சித்தாந்தத்தின் அஹிம்சை கொள்கைக்கு முரணானது என்பதை அறிவீரா என்று கேட்டதும், அமைதியானார்..

ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தவர், பொதுப்படையாக, ஏற்கெனெவே தெரிந்த விசயங்களையே, மறுபடி-மறுபடி படித்தது, விசித்திரமாக இருந்தது. பக்தி பூர்வமான விசயங்களை விவரித்துச் சொல்வதனால், ஆராய்ச்சியில் என்ன முடிவு சொல்லமுடியும் என்று தெரியவில்லை. சரவணன் அரங்கத்தில் இருந்து கேட்பதற்கு விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம், ஏனெனில், அப்படி நாற்காலிகள் காலியாகும் போது, சித்தர்கள் வந்து அமர்ந்து கொள்வார்கள் என்றார். சக்கரையம்மாள் சித்தர் பறக்கும் சக்தியைக் கொண்டவர் என்று திருவிக தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக சொன்னார். அதாவது, ஒருவேளை, அவரே பறந்து வந்து உட்காருவார் என்பது போல பேசினார்!

Raising the dead - Indian way

இரண்டாவது அமர்வு: மாணிக்கம், [?] அமர்வில் ஆய்வுக்கட்டுரைகளை படித்தனர்.

  1. பெரியபுராணத்தில் சைவசித்தாந்தம் – புதியதாக ஒன்றும் இல்லை.
  2. பால்வரைத் தெய்வம் பற்றி ஒரு பெண்பணி படித்தார். அரைகுறையான விசயங்கள வைத்து படித்தார்.

முனைவர் கோ..முத்துக்குமாரசுவாமி, இதைப் பற்றி கீழ்கண்டவாறு ஏற்கெனவே விளக்கியுள்ளார். வினை, விதி, ஊழ், பால் என்னும் சொற்கள் தம்முள் சிறு வேறுபாட்டுடன் ஒரேபொருளைத் தருவன. சங்க இலக்கியங்கள், இவற்றுள், பால் என்ற சொல்லையே பெரிதும் எடுத்து வழங்கும். “பால்தர வந்த பழவிறற் றாயம்” (புறம்75, விதி தரப்பட்டுத் தம்பால் வந்த அரசுரிமை), “நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே” (புறம்176, நல்லியக் கோடனைத் துணையாக நீ உடையையாதலான், என்னைப் பொருந்திய விதியே).

“நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்

றுணைமலர்ப் பிணைய லன்னவிவர்

மணமகிழ் இயற்கை காட்டியோயே” (குறுந்-229

இத்தலைமக்களின் திருமணத்தைக் காட்டிய விதியே நீ நல்லை ).

“ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப”(களவியல்-2)

இத்தொல்காப்பிய சூத்திரத்தில் வரும் முதலிலுள்ள ‘பால்,’ இடம் என்று பொருள்படும். ‘பாலதாணை’ என்பதற்குப் ‘பால்வரை தெய்வத்தின்’ ஆணையாலே’ என்பது பொருள். பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுக்கும் தெய்வம் என்பது பொருள். (தொல்.சொ.54.சேனா) அதாவது வினை தானே பலனையூட்டாது. வினை செய்தானையும் வினையையும் வினை செய்தவனையும் அறிந்து அவ்வினைக்கும் மேலாம் தெய்வம் பலனை வகுத்து ஊட்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. தெய்வப் புலவர் திருவள்ளுவரும் வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தாருக்கும் துய்த்த லரிது”(377) என்றார். தெய்வம் வகுத்த வகையானல்லது ஒருவனுக்கு நுகர்தலுண்டாகாது. அத்தெய்வம், ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வள்ளுவர் ‘வகுத்தான்’ என்றார். அதனையே தொல்காப்பியர், ‘பால்வரைத் தெய்வம்என்றார்.

Selfl sacrifice, hero-stones

अक्षஎன்ற வார்த்தைக்கு தவறான பொருள்விளக்கம் கொடுத்தது: “अक्ष” என்ற வார்த்தைக்கு போதாகுறைக்கு “अक्ष” என்ற வார்த்தைக்கு தப்பு-தப்பான விளக்கம் கொடுத்து, எதையோ பேசினார். கே.வி. ராமகிருஷ்ண ராவ் இதனை எடுத்துக் காட்டினார். ஆனால், மறுபடியும், தவறை ஒப்புக்கொள்ளாமல், அப்பெண்ணிற்கு அறிவுரை கூறாமல், “அவ்வாறு கூற உங்களுக்கு உரிமை இல்லை,” என்றெல்லாம் வாதம் செய்தார். அதற்காக, என்னவேண்டுமானாலும், ஆய்வுக்கட்டுரை என்று படிக்கலாமா, என்று கேட்டதற்கு, திசைத் திருப்பப் பார்த்தார். ஒரு அனைத்துலக மாநாடு இவ்வாறு நடக்கும், நடத்தும் விதம் கண்டு ஆச்சரியமாகத் தான் இருந்தது.

Raising the dead - Day of judgment

  1. உலக மதங்களில் கர்மவினை கோட்பாடு – “உலக மதங்களிடையே கர்மாவின் கருத்து” என்ற தலைப்பில் மணிக்கம் ஒரு கட்டுரையை வழங்கினார். அவர் உண்மையில் தனது கட்டுரை வேறுபட்டது என்பதை வெளிப்படுத்தினார், ஆனால் சரவணன் இந்த தலைப்பில் ஒரு கட்டுரையை படிக்க பரிந்துரைத்தார். பொதுவாக, அவர் வாழ்க்கை, ஆத்மா, உடல் போன்ற கருத்துகளை சுட்டிக்காட்டினார், ஆனால், மேற்கத்திய மதங்கள் விசயத்தில், ​​அவர் குழப்பமடைந்தார். எனவே, இறுதியாக, ராமகிருஷ்ண ராவ் யூத-கிருத்துவ-முகமதிய கொள்கைகள் எவ்வாறு மாறுபட்டவை என்று எடுத்துக் காட்டினார்., யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற கருத்துக்களை கிழக்கு மதங்களுடன் ஒப்பிட முடியாது என்பதை தெளிவுபடுத்தினார். அவர்கள் உடல்களை எரிப்பதில்லை, ஆனால் புதைக்கிறார்கள். கடைசி நாள் நியாயத்தீர்ப்பு வரும்போது, ​​அவர்களின் உடல்கள் எழுப்பப்பட்டு, உயிர்த்தெழுப்பப்பட்டு, சொர்க்கத்திற்குச் சென்று, கடவுளின் கிருபையினால், அவர்களுக்கு தண்டனை அல்லது மீட்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வல்லளாருக்கும் அத்தகைய பார்வை இருப்பதைக் காட்ட சரவணன் முயன்றார்.

 

© வேதபிரகாஷ்

20-08-2019

Raising the dead - tomb