சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – ஆரிய படையெடுப்பு சித்தாந்தம் – கலந்துரையாடல்கள் (4)
3.45 முதல் 5.00 வரை – ஆரிய படையெடுப்பு சித்தாந்தம்: ஆரிய படையெடுப்பு சித்தாந்தம் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அதில் ஶ்ரீகாந்த தலகேரி, நிலேஷ் ஓக்[1], முதலியோர் கலந்து கொண்டனர். ராஜிவ் மல்ஹோத்ரா நடுவராக இருந்தார். ஐரோப்பியர் எவ்வாறு ஒரு உயர்ந்த-சிறந்த இனமக்களை உலகில் தேடியபோது, இந்தியாவின் கங்கைக் கரையில் வாழ்ந்த பிராமணர்கள் அத்தகையோர் என்று தீர்மானித்தனர்[2]. சமஸ்கிருதத்தில், “ஆர்ய” என்ற சொல் இருப்பதனால், மனிதவியல் ரீதியாக, அவர்கள் ஐரோப்பியர்கள் போன்றே இருக்கின்றனர், அதனால், ஐரோப்பியர் மற்றும் பிராமணர் “ஆரியர்”, அவர்கள் பேசும் மொழி “ஆரிய மொழி”, சமஸ்கிருதம், கிரேக்கம், முதலியவற்றில் ஒற்றுமையுள்ளது என்று முடிவு செய்தனர். ஆனால், ஜெர்மானிய ஆதிக்கம் உலகப்போர்கள் முதலியவற்றிற்குப் பிறகு, “இனவாத” சித்தாந்தங்களை நீர்த்து விட்டனர். இந்தோ-ஆரிய மொழி குடும்பம் என்றது, இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பம் ஆகி, இனவாதம் கைவிடப்பட்டது. இருப்பினும், இந்திய அளவில், ஆரிய-திராவிட இனசித்தாந்தங்கள் கைவிடவில்லை.
இனம்-மொழிவாதங்கலுக்குப் பிறகு, மரபனுவியல் வாதங்கள்: இப்பொழுது, டி.என்.ஏ, குரோமோசோம் போன்ற மனிதவியல், உயிரியல் ஆராய்ச்சிகள் மூலம், மறுபடியும், இனவாத இனசித்தாந்தங்களை, மறைமுகமாக புகுத்த திரிபு விளக்கம் கொடுத்து வருகின்றனர். வழக்கம் போல இந்த “விஞ்ஞான” ஆய்வுகளும், பூர்வீக மக்கள் ஆப்பிரிக்காவிலிருந்து, மற்ற ஆசிய-ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பரவினர். பிறகு, வேறு கூட்டம் / கூட்டங்கள் மத்திய ஆசியாவிலிருந்து மற்ற ஆசிய-ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பரவினர் என்று தான் விளக்கம் அளிக்கின்றனர். ஆனால், இவற்றில் 100% என்று எந்த மக்கள் குழுமமும் இல்லை. மேலும் இதில் ஜாதிரீதியிலான வாதங்கள் வைப்பது, “விஞ்ஞானமாகத்”. தெரியவில்லை, மறுபடியும், முன்னர் போல, “போலி விஞ்ஞான” முறையாக மாற்றப் பட்டு, தங்களது முடிவுகளுக்கு ஏற்றபடி, புள்ளி விவரங்களை மாற்றிக் கொள்கின்றனர், தகவமைத்துக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாடும் எழுந்துள்ளது. எப்படியாகிலும், மரபணுக்களை வைத்து ஜாதி, மொழி முதலியவை தீர்மானிக்கப் படுகிறது என்பது, பொய்யாகத்தான் உள்ளது.
திராவிடர்கள் பற்றி குறிப்பிடாதது: அந்நிலையில் தான் மொழிக்கும், ஜெனிடிக்ஸ் ஆராய்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று எடுத்துக் காட்டப் படுகிறது. அதனால், AIT / MIT / OIA போன்ற சித்தாந்தங்கள், கருதுகோள்கள் முதலியனவும் மறுக்கப் படுகின்றன. இக்கருத்துகளை, இவர்கள் “பூர்வபக்ஷ வாதம்” என்ற ரீதியில் விளக்கம் கொடுக்கின்றனர். கருதுகோள், எதிர்-கருதுகோள் மற்றும் இரண்டையும் சேர்த்து உருவாக்கப் படும் கருதுகோள் [Thesis, athi-thesis and synthesis] என்ற முறையில் தான் இவர்கள் வாதங்கள் இருக்கின்றன. ஆனால், சங்க இலக்கியம் பற்றியோ, திராவிட இனம்-மொழி சித்தாந்தங்கள், கருதுகோள்கள் பற்றியோ, ஒன்றையும் குறிப்பிடாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. “திராவிடர்களுக்கு” என்று 100% குரோமோசோம்கள் இருந்தால், அவர்கள் ஜாதி, மொழி முதலியவை என்ன-என்னவென்று அறுதியிட்டுக் கூறும் நிலையில் எந்த ஆராய்ச்சியாளரும் இல்லை. ஏற்கெனவே சங்க-இலக்கியத்தை ஆராய்ந்து, ஆரிய இனம்[3], திராவிட இனம் இல்லை[4], அவர்கள் எல்லோருமே சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் பெயர்களே என்று எடுத்துக் காட்டப் பட்ட ஆய்வுகளையும் தெரியாதது போலக் காட்டிக் கொண்டனர். இணைதள குழுக்கள், உரையாடல்கள், பிளாக்குகள் முதலியவற்றைக் கவனிக்கும் போது, குறிப்பிட்ட ஆய்வுக்கட்டுரைகள் பரிமாறப்பட்டுள்ளன், இருப்பினும் பெயர் குறிப்பிடப்படாமல் உள்ளன[5].
மரபணுவியல் வாதங்களில் உள்ள விசயங்களும், முரண்பாடுகளும்[6]: 19-20 நூற்றாண்டுகளில் இனவாதம், மனிதனின் தோல்-கண் நிறம், வெளியுடல் அமைப்பு, மூக்கு-தலை வடிவமைப்பு, குட்டை-நெட்டை, ரத்தம் என்று வளர்ந்தது. இப்பொழுது, குரோமோசோம் என்று மரபணுவியல் ரீதியில் உள்ளது[7]. உலகப்போர்களுக்குப் பிறகு “இனம்” இல்லை என்று அறிவிக்கப் பட்ட பிறகு, இந்த ஆராய்ச்சிகள் தொடர்வதை கவனிக்கலாம்[8].
- ஆப்பிரிக்காவில் தான் முதன் முதலில் மனிதகுலம் தோன்றியது, பிறகு அது உலகம் முழுவதும் பரவியது என்பது, “ஆப்பிரிக்காவை விட்டு வெளியே” ஆப்பிரிக்க மூலம் கொண்டது [Out of Africa] என்ற கருதுகோளில் மரபியல் ஆராய்ச்சியாளர்கள் வைத்தனர். 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரட்சி ஏற்பட்டதால், அவர்கள் வெளியே சென்றனராம்.
- பெரும்பாலான, ஐரோப்பிய-ஆப்பிரிக்க மரபியல் ஆராய்ச்சியாளர்கள் “ஆப்பிரிக்காவை விட்டு வெளியே” கருதுகோளை விரும்புவதில்லை, ஏனெனில், அது அவர்களது உறுதியான மற்ற சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ளன.
- சமீபத்திய ஆப்பிரிக்க மூலமா அல்லது தொன்மையான ஆப்பிரிக்க மூலமா என்று கருத்து வேறுபாடு இருந்தது (அதாவது அத்தகைய கருதுகோள் உருவாக்கப்பட்டது). ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி ஐரோப்பா, இந்தியா, சீனா, இந்தோனேசியா என யூரேசியா என்று பரவினர், இல்லை, பிறகு இந்த மானுட மூதாதைகள் எல்லாம் மறைந்து விட்டனர், இன்றைக்கு உலகெங்கும் உள்ள மானுடம் முழுமையாக சமீபத்தில் ஒன்று பிறகு சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய ஒரு கூட்டமே என்றனர்.
- சுமார் 60,000 ஆண்டுகள் முன்பு தெற்குப் பாதை வழியே வந்தவர்களும் சுமார் 6,000 ஆண்டுகள் முன்பு வடகிழக்கில் இருந்து வந்தவர்களும் இணைந்துதான் திராவிட மொழிகள் பேசும் மக்கட் பகுதிகளை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் திராவிட மொழிகள் பேசுவோரும் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள். அதாவது, ஆரியர்களுக்கு முன், திராவிடகள் இந்தியாவிற்கு வந்தேறினர்.
- இன்னொரு பரபியல் ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்1ஏ ஹாப்லோ’ குழு, இந்தியாவில் தோன்றி பின்னர் வெளியே பரவியது என்றனர்.
6. ஏனெனில், அவை மற்ற பிரதேசங்களிலுள்ள குழுக்களை விட அதிக வேறுபாடுகளைக் கொண்டதால், அக்குழு இந்தியாவிலேயே உருவாகி, பின்னர் வெளியே பரவியது.
7. பிறகு, வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மரபணுக்கள் இந்தியாவுக்குள் வந்தன என்றனர்.
8. ‘இஸட் 93’ உப குழுவின் மிகவும் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் தோராயமாக 4,000 – 5,000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.
9. ஏறக்குறைய 4,000 ஆண்டுகளுக்கு முன்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. எனினும், புலம்பெயர்தலினால் சிந்துச் சமவெளி நாகரிகம் வீழ்ச்சியுற்றதென்றோ அல்லது சிந்துச் சமவெளி நாகரிக வீழ்ச்சியினால் புலம்பெயர்தல் நிகழ்ந்ததென்றோ சொல்வதற்கான அகழ்வாராய்ச்சி உட்பட எந்த ஆதாரமும் இல்லை.
10. மரபணு அடிப்படையில் பிறகு சாதி, மொழி, இனம்முதலியவற்றைக் கலந்து திரிபு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆகவே, இவற்றிலும், விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி, கருதுகோள், சித்தாந்தம் முதலியவை பலவிதங்களில் தாக்கம் இருப்பதை அறிய முடிகிறது.
© வேதபிரகாஷ்
26-12-2017.
[1] https://nileshoak.wordpress.com/2015/12/13/genetic-illiteracy-consequent-dogmatic-nonsense/
[2] Poliakov, Leon. The Aryan myth: A history of racist and nationalist ideas in Europe. Vol. 495. Plume, 1977.
[3] K. V. Ramakrishna Rao, A paper presented at the Indian History Congress, Calcutta.Summary published in the Proceedings of the Indian History Congress, Calcutta, 1990, p.165.
…………………………., “The Aryan Problem” in “Seminar on the Aryan Problem”, The Mythic Society and The Bharatriya Itihasa Sankalana Samiti, Bangalore, 1991, pp.215-225. Can be accessed from here – https://kvramakrishnarao.wordpress.com/2010/07/18/%E2%80%9Cariyar%E2%80%9D-in-the-ancient-tamil-literature/
………………………….. “The Aryan Problem” by Bharatiya Itihasa Sankalana Samiti, Pune, 1993, pp.75-80.
[4] K. V. Ramakrishna Rao, The Dravidian Problem, Proceedings of BISS, Warangal, 1992, pp.38-45; can be accessed from here: https://www.scribd.com/document/7521429/the-dravidian-problem
[5] https://groups.google.com/forum/ – !topic/houstontamil/5kyqWG2CUW0
[6] பல ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு மூலம், கொடுக்கப்பட்ட சுருக்கமான விசயங்கள். குறிப்பாக, ப.கு. ராஜன் என்பவரின் கட்டுரை அருமையான தொகுப்பாக உள்ளது. அதனை இங்கே வாசிக்கலாம். http://www.socialsciencecollective.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/
[7] Boyd, William C. Genetics and the Races of Man. Scientific Publications, 1923.
[8] Juan Comas, Racial Myths, UNESCO, Paris, 1951.