Posts Tagged ‘போலி போலீஸ்’

தமிழ்நாட்டில் நிஜமாக இருப்பது எது?

மார்ச் 17, 2010

தமிழ்நாட்டில் நிஜமாக இருப்பது எது?

தினம்-தினம் செய்தி வருகிறது – போலி ஐ.பி.எஸ். அதிகாரி, போலி போலீஸ், போலி அதிகாரி, போலி டாக்டர், போலி மருத்துவர், போலி ஆவணம், போலி வக்கீல், போலி ரப்பர் ஸ்டாம்புகள்……………….இப்படி தொடர்கின்றன.

ஜாமீன் பெற போலி ஆவணம் தயாரித்த கும்பல் கைது

First Published : 17 Mar 2010 01:07:01 AM IST; Last Updated : 17 Mar 2010 08:47:22 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=212621&SectionID=136&MainSectionID=136&SEO………….81

சேலம், ​​ மார்ச் 16, 2010:​ சேலத்தில் நீதிமன்றங்களில் ஜாமீன் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை போலியாகத் தயாரித்து கொடுத்த 8 பேர் கும்பலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். பல்வேறு வகையான வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் வழங்கும்போது ஒருவர் அல்லது இருவர் ஜாமீன் கொடுக்க வேண்டும்.​ இதற்காக அவர்களின் வருமானம்,​​ சொத்து உள்ளிட்டவை குறித்து வட்டாட்சியர்,​​ கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் கையொப்பம் வாங்கி வர வேண்டும்.இதை ஆதாரமாக வைத்துதான் அவர்களுக்கு பிணை வழங்கப்படும்.​ இந்நிலையில் சேலத்தில் வி.ஏ.ஓ.,​​ வட்டாட்சியர் போன்ற அதிகாரிகள் ஜாமீனுக்காக வழங்கும் சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.மேலும் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியாக இருப்பதை அறிந்த நீதிபதி ஒருவரும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.​ இது குறித்து வழக்குப் பதிவு செய்த அஸ்தம்பட்டி போலீஸôர் நீதிமன்ற வளாகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த வாழப்பாடி ஜெகநாதன் ​(75),​ கன்னங்குறிச்சி ராஜு ​(48),​ பள்ளிப்பட்டி பழனிசாமி ​(50),​ சீலநாயக்கன்பட்டி முருகேசன் ​(62),​ அழகாபுரம் பாலகிருஷ்ணன் ​(59),​ ஆறுமுகம் ​(65),​ எளம்பிள்ளை நாராயணசாமி ​(34),​ சையது உமர் ​(45) ஆகிய 8 பேரை போலீஸôர் கைது செய்தனர்.​ ​இவர்களிடம் போலீஸôர் நடத்திய சோதனையில் வட்டாட்சியர்,​​ துணை வட்டாட்சியர்,​​ பல்வேறு ஊர்களின் கிராம நிர்வாக அலுவலர்களின் போலி ரப்பர் ஸ்டாம்புகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன.இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுக்கும் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.​ ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.150 முதல் ரூ.500 வரை பணம் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.​ இதையடுத்து அவர்களிடம் போலீஸôர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி கையெழுத்தைப் போட்ட நோட்டரி வக்கீல் – அதாவது போலி நீதிபதியும் தயார்!

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=230&id1=11

நீதிபதி கையெழுத்தை போட்டு மோசடி கோவை நோட்டரி வக்கீல் கைது

தினகரன் – ‎10 மணிநேரம் முன்பு‎
கோவை : கோவை யில் சிறுநீரக தான பிரமாண பத்திரத்தில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடி செய்த நோட்டரி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே வட வள்ளி அம்மன்குளத்தை

போலி நிருபர்களும் அட்டூழியம் தமிழகத்தை கலக்கும் போலி பெண்

தினத் தந்தி – ‎7 மணிநேரம் முன்பு‎
அதிகாரி சாருலதா போலி ஐ.பி.எஸ். அதிகாரி என்று வலம் வந்ததுபோல, சுமன்சிங் என்ற பெண் ஒருவரும் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சென்னையில் வலம் வந்து மோசடி மூலம் பல லட்சங்களை

போலி பெண் அதிகாரிகள் நடமாட்டம் அதிகரிப்பு : காவல் துறைக்கு

தினமலர் – ‎15 மார்., 2010‎
ஐ., அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சூர்யகலா என்பவரை, போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இது போல, போலி பெண் அதிகாரிகள் நடமாட்டம் அதிகரித்துள் ளதை அடுத்து,

ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் தபால் துறை அதிகாரிகள் மீது

தினத் தந்தி – ‎7 மணிநேரம் முன்பு‎
மாத வருவாய் சேமிப்பு திட்டம், முதியோர் சேமிப்பு திட்டம் ஆகியவற்றில் போடப்பட்ட பணத்தை போலி கையெழுத்து போட்டு போலி ஆவணங்கள் மூலமும் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தும்

போலி பெண் அதிகாரி கைது

தினகரன் – ‎12 மார்., 2010‎
விரைந்து வந்த போலீசார் சூர்யகலாவை பிடித்து விசாரித்தனர். அவர் போலி என தெரிந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். சூர்யகலா அளித்த வாக்குமூலத்தில், ‘எனது சொந்த ஊர் மைசூர்.

உயிரோடு விளையாடும் போலிகள்‘ விலை கொடுத்து வாங்குவது மருந்தா

தினகரன் – ‎15 மார்., 2010‎
மாதவிடாய் மாத்திரையில் போலிகளை தயாரித்து விற்ற கும்பலும் ஆந்திராவில் தான் ஐக்கியம் என்கிறது அதிகாரிகள் வட்டாரம். வழக்கு போட்டதோடு சரி. புகாரின்படி கடைகளில்

மொபட்டில் கடத்தி செல்லப்பட்ட 40 கிலோ போலி டீத்தூள் பறிமுதல்

தினத் தந்தி – ‎5 மார்., 2010‎
மொபட்டில் கடத்தி செல்லப்பட்ட 40 கிலோ போலி டீத்தூளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலி டீத்தூள்
ஏன் போலி அரசியல்வாதிகள் இல்லை?
சரி.

அரசியல்வாதி மட்டும் எப்படி நிஜமகவே இருக்கிறன்?

அதில் போலி அரசியல்வாதி இல்லயே ஏன்?