Posts Tagged ‘பஜனை’

ஶ்ரீ அன்னமாச்சாரியாரின் 515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது!

ஏப்ரல் 29, 2018

ஶ்ரீ அன்னமாச்சாரியாரின் 515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது!

Annamacharya, stamp

அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் இன்றும்பாமர பாடல்களாகபட்டிதொட்டிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன: “அன்னமாச்சாரியா கீர்த்தனைகள்” எனப்படும் பக்தி பாடல்களை திருமலை-திருப்பதிக்களுக்குச் சென்றவர்கள் கேட்காமல் இருக்க முடியாது. கீழ் திருப்பதி முதல், மேல் திருமலை வரை எல்லா இடங்களிலும் [டீகடைகள், வீடுகள், கோவில்கள்] ஒலித்துக் கொண்டிருக்கும். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் அவை பாடப்பட்டுள்ளன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அவற்றை முன்னர் கேசட், இப்பொழுது சிடிக்களாக வெளியிட்டுள்ளனர். அன்னமாச்சாரி அவர் காலத்தில் பட்டி-தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றதால், அவை மிகவும் பிரபலமாக, பொது மக்களிடம் “பாமர பாடல்களாக” இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

The House where Talapakkam Annamacharya lived

இடைக்காலத்தில் பிறந்து, பாடல்கள் மூலம் ஒற்றுனையை வளர்த்த அன்னமாச்சாரியா: அன்னமாச்சாரியா [తాళ్ళపాక అన్నమాచార్య; , 1408-1503] தாள்ளப்பாக்கம் என்ற கிராமத்தில் [ராஜம்பேட்டை] கடப்பா மாவட்டம், ஆந்திர மாநிலம் 22 May 1408 அன்று சூரி – அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். “சுபத்ரா கல்யாணம்” இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான ‘’திம்மக்கா” என்பவர் அன்னமாச்சாரியாரின் மனைவியாவார். இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரி, பேரன் சின்னையன் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். ஏப்ரல் 4, 1503 அன்று 94 வயதில் திருமலையில் காலமானார். இன்றும் புகைப்படத்தில் அவரது வீட்டைப் பார்க்கும் போது, இடைக்காலத்தைய வாழ்க்கைமுறையினை எடுத்துக் காட்டுகிறது. அக்காலத்தில், முகமதியர்களின் தாக்குதல்களால், கிராமப் பகுதிகள் தாம் அதிகம் பாதிக்கப் பட்டன. அதனால் தான், இவரைப் போன்றவர், பற்பல இடங்களுக்கு நடந்தே சென்று, பக்தி உருவில், தேசப் பற்றை வளர்த்தனர். சொல்ல வந்த கருத்துகளை கடவுளை வாழ்த்தும், போற்றும் மற்றும் துதிக்கும் பாடல்களில் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் படி பாடினர்.

Annamacharya depicted as sculpture-door way either side

அன்னமாச்சாரியா பாதைஅன்னமய மார்க்கம்: தாள்ளப்பாக்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப் படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை / அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இந்தப்பாதையில் மாமண்டூரில் இருந்து திருமலைக்கு வரக்கூடிய வனப்பகுதியில் பாறைகள் இல்லாத சமமான மலைப்பகுதியாக 16 கிலோ மீட்டர் உள்ளது.  அதை நினைவு படுத்தும் வகையில், ஆயிரக் கணக்கான மக்கள் விரதம் மேற்கொண்டு, நடந்தே திருமலைக்கு வந்து செல்கின்றனர்.

Annamacharya kirtan on copper plates

சமத்துவத்திற்காக உழைத்த அன்னமாச்சாரியா: அன்னமாச்சாரியாருக்கு வேறு வேலை இல்லையா, இப்படி, தினம்-தினம் பாடிக் கொண்டே செல்ல வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். அக்காலத்தில் முகமதியர் விஜயநகர பேரரசைத் தாக்கி வந்ததால், மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரிசா முதல் தமிழகம் வரை பல இடங்களுக்கு சென்றுள்ளார். அவரது பாடல்களில் அது வெளிப்படுகிறது. அன்னமாச்சாரியா ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் கொண்டு 32,000 கீர்த்தனைகள் / பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இப்பொழுது சுமார் 12,000 கிடைத்துள்ளன. அவை ஆன்மீகம் மற்றும் சிருங்காரம் என்று இருவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. தீண்டாமையை எதிர்த்து பாடியுள்ளார்.  அன்னமாச்சாரி 32,000 முதல் 36,000 பாடல்கள் பாடியிருக்கிறார் என்றால், தினமும் 5 முதல் 10 கீர்த்தனைகள் பாடியிருக்க வேண்டும்! உண்மையில் தினமும் ஒரு பாடல் பாடுவேன் என்று அவர் உறுதி பூண்டிருந்தார்[1]. உயரமாக இருக்கும் பிராமணனின் இடமும், கீழே உள்ள சண்டாளனின் பாதமும் ஒன்றே.

Annamacharya on caste, untiuchability etc

அதாவது அந்த பிராமணனின் இடம் சண்டாளனின் பாதத்திற்கும் கீழானது! [మెండైన బ్రాహ్మణుడు మెట్టుభూమి యొకటె చండాలు డుండేటి సరిభూమి యొకటే = the high level land of the Brahmin and the low flat level of the Chandala are the same, there is no high and low, Srihari is the soul of all[2]]. அன்னமாச்சாரி பட்டி-தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர்-சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார்! அதாவது, உணவில், நீரில் எதுவும் ஒட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் அங்குதான் சுத்தமானவை கிடைக்கும். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தென்னகத்தே பல்லாயிர கொவில்களுக்கு, அதாவது கிராமங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான்! அன்னமாச்சாரியாரின் பாடல்கள் ஆழ்வார்கள் பாடல்களை அறிந்திருந்தார் என்று எடுத்துக் காட்டுகிறது.

Annamacharya and Thyagayya

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து மறக்கப் பட்டு, 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள்: ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. சுமார் 150 பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 1950ல், பாலமுரளி கிருஷ்ணாவின் தலைமையில், 800 பாடல்கள் பாடப்பட்டு, மக்களிடையே மறுபடியும் பரவச் செய்தது. ஷொபா ராஜு என்பவர் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகளை படித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 1976ல் டிடிடி இவருக்கு ஊக்கத்தொகைக் கொடுத்து கௌரவித்தது. 1978ல் “வெங்கடேஸ்வர கீத் மாலிகா” என்ற ஒலிநாடாவை வெளியிட்டார். பார்வதி ரவி கண்டசாலா 1994ல் கீர்த்தனைகளை பரத நாட்டியம் உருவில் அர்ப்பணித்து, புகழடையச் செய்தார். 1997ல் “அன்னமய்யா” என்ற தெலுங்கு திரைப்படமும் தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டது. கடையநல்லூர் வெங்கட்ராமன் இசையில், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாட, கீர்த்தனைகளும் வெளியிடப் பட்டன.

Annamacharya sankeertanalu

அன்னமாச்சாரியாரின் சுப்ரபாதமும் (தெலுங்கில்), அன்னங்காச்சாரியாரின் சுப்ரபாதமும் (சமஸ்கிருதத்தில்): இவர் பாடல்களில் புகழ் பெற்றது வேங்கடேச சுப்ரபாதம் அதாவது பங்காரு வாகிலி என்பது ஸ்தாபன மண்டபத்தின் அழகிய தங்கக் கதவுகள் கொண்ட வாயில். இங்குதான் தினமும் அதிகாலையில் அன்னங்காச்சாரியாரின் சுப்ரபாதம் ஒலிக்கப்படும் போது, அன்னமாச்சாரியாரின் வழிவந்தவர்களால் “வேங்கடேச சுப்ரபாதம்”, தெலுங்கு திருப்பள்ளி எழுச்சி – அவரது பாடல்கள் இசைக்கப்படுகிறது.  சமஸ்கிருத சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கர அனந்தாச்சாரியாரால் 1430 CEல் இயற்றப்பட்டது.

कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।

उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥

“ O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the divine daily rituals have to be performed[3].

மார்கழி மாதம் முழுதும் ஆண்டாளின் திருப்பாவை ஒலிபரப்பப் படுகிறது[4].

Annamacharya Jayanti greetings

515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது: இவர் திருமலை ஶ்ரீ வெங்கடசலபதியின் மீது ஆயிரக் கணக்கான பாடல்களை இயற்றியவர்.  தென்னிந்திய இசையில் குறிப்பிட்ட மரபைத் தோற்றுவித்து, பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் கொடுத்து, பஜனை மரபைத் தொகுத்து வழங்கினார். இவரது பல கீர்த்தனைகளில், நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகள் பிரதிபலிக்கின்றன. திருமலை கோயிலில் கர்னாடக இசையின் தந்தை என போற்றப்படும் புரந்தரதாஸரை சந்தித்துள்ளார். சமஸ்கிருதத்தில் ‘சங்கீர்த்த லட்சணம்’, ‘வெங்கடாசலபதி மஹிமா’, ‘த்விபர்த ராமாயணா’, ‘ஸ்ருங்கார மஞ்சரி’ தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்கள் கொண்டது) ஆகிய நூல்களை படைத்துள்ளார். 8 அடி உயரத்தில் இவவரது முழு உருவ சிலை தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் நிறுவப்பட்டது.  1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ‘அன்னமாச்சாரியா‘ திரைப்படத்திற்காக கிடைத்தது.  1997-ல் வெளியிடப்பட்ட அப்படம்பெரும் வெற்றி பெற்றது.

© வேதபிரகாஷ்

29-04-2018

Annamacharya, MS-CD, Cinema

[1] அடப ராமகிருஷ்ண ராவ், அன்னமாச்சார்ய, சாகித்திய அகடமி, 1996, ப.45.

[2]

తందనాన అహి – తందనాన పురె
తందనాన భళా – తందనాన
బ్రహ్మమొక్కటె పర – బ్రహ్మమొక్కటె
పరబ్రహ్మమొక్కటె పర బ్రహ్మమొక్కటె
కందువగు హీనాధికములిందు లేవు
అందరికి శ్రీహరే అంతరాత్మ
ఇందులో జంతుకుల మంతానొక్కటె
అందరికి శ్రీహరే అంతరాత్మ
నిండార రాజు నిద్రించు నిద్రయు నొకటె
అంటనే బంటునిద్ర అదియు నొకటె
మెండైన బ్రాహ్మణుడు మెట్టుభూమి యొకటె
చండాలు డుండేటి సరిభూమి యొకటే
కడగి యేనుగు మీద కాయు యెండొకటే
పుడమి శునకము మీద బొలయు యెండొకటే
కడుపుణ్యులను పాపకర్ములను సరిగావ
జడియు శ్రీ వేంకటేశ్వరుని నామమొకటె

[3] Valmiki Ramayanam॥ 1.23.2 ॥

[4]  ‘Suprabhatam’ is the first and foremost pre-dawn seva performed in the temple of Lord Venkateswara.  This ritual is performed at Sayana Mandapam inside sanctum sanctorum to wake up the Lord from His celestial sleep, amidst the rhythmic chanting of vedic hymns. Every day in the early hours acharyapurushas recite the hymns beginning with ‘Kausalya Supraja Rama Purva Sandhya Pravarthathe’ in front of the main deity at Bangaru Vakili, while on the other hand, a descendant of Tallapaka Annamacharya sings some songs penned by the great saint poet in praise of Lord Venakteswara at the first corridor of the sanctum sanctum at the same time. http://www.tirumala.org/Suprabhatam.aspx

Advertisements

பித்துக்குளி முருகதாஸ் [1920-2015]

நவம்பர் 17, 2015

பித்துக்குளி முருகதாஸ் [1920-2015]

Pithukuli murugadas palying harmonium - old photo.4பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் (95) உடல்நலக்குறைவால் சென்னையில் 17-11-2015 [செவ்வாய்கிழமை] அன்று காலமானார்[1]. இன்றைய நாட்களில் அமைதியாக தொண்டாற்றி வரும் பெரியவர்களைப் பற்றிய விவரங்கள் ஊடகங்களில் வருவதில்லை. உதாரணத்திற்கு இவரையே எடுத்துக் கொண்டால், இவர் ஒரு ஆன்மீகவாதி, சுதந்திர போராட்ட வீரர், உப்புசத்தியாகிரகத்தில் பங்கு கொண்டவர், சிறைக்குச் சென்றவர் என்பதெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது. எம்.பில், பி.எச்டி ஆய்வுக்கு கண்டவர்களைப் பற்றியல்லாம் ஆராய்ச்சி செய்பவர்கள், இவர் போன்றவர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். இந்திய விடுதலை போர் பற்றி ஏகப்பட்ட கருத்தரங்கங்கள், கூட்டங்கள் நடந்தாலும், அங்கெல்லாம் கூட இவரைப் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூசத் திருநாளில் பிறந்தார்[2].  இவர் தனது தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்[3]. ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர் இயற்றிய பாடல்களை பாடியபோது, இவர் மற்றவர்களால் கவனிக்கப்பட்டார்[4].

Pithukuli murugadas old photoபக்திப்பாடல்களால் கோடானு கொடி மக்களைக் கவர்ந்தவர்: 1947-ல் தனது இசைப் பயணத்தை தொடங்கிய பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது கணீர் என்ற குரல், ஹார்மோனியத்துடன் இணையும் போது, இரண்டிற்கும் வித்தியாசமே தெரியாத அளவிற்கு இருக்கும். அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு போன்ற பாடல்களைப் பாடி பிரபலப்படுத்தினார்[5]. தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி உள்பட முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார்[6]. கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார்[7]. அவர் பாடிய ‘அலைபாயுதே கண்ணா’ மற்றும் தெய்வம் திரைப்படத்தில் வரும் ‘நாடறியும் நூறு மலை’ பாடல்கள் மிகவும் பிரபலமானவை[8].

Pithukuli Murugadas - Swami sivananda centenary - 08-11-1987சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது, சிறைசென்றது: அக்காலகட்டத்தில், சுதந்திர போராட்டம் நாடு முழுவதும் பரவியிருந்ததால், சிறுவர் முதல், முதியோர் வரை அதில் கலந்து கொண்டனர். அவ்வாறே பாலசுப்ரமணியும் 1931ல் தனது பதினொன்றாம் வயதில் உப்பு சத்தியாகிரகத்தில் பங்குக் கொண்டு சில நாட்கள் சிறையிலும் இருந்தார்[9]. இந்தியாவில் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற இவர்மீது 1936-ம் ஆண்டு போலீசார் நடத்திய முரட்டுத்தனமான தாக்குதலில் பித்துக்குளி முருகதாசின் இடதுகண் பார்வை பறிபோனது. அப்பொழுதும் ஆறு மாதம் சிறைவாசம் இடைத்தது. அதிலிருந்து இவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். பிறகு, மைசூர் மஹாராஜா ஜெயசாமராஜேந்திர உடையார் திருமணத்தின் போது, கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, இவரும் விடுதலை ஆனார். இன்றைக்கு எதற்கோ சிறை சென்றவர்கள் எல்லாம், ஏதோ பெரிய போராளிகள் போல சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மையான போராளிகள் மறைக்கப்படுகிறார்கள்; மறக்கப்படுகிறார்கள்; இதனால், இக்காலத்தவர், குறிப்பாக இளைஞர்கள் உண்மை அறியாமலேயே, தங்களது ஞானத்தை வளர்த்து-வைத்துக் கொள்கிறார்கள்.

Pithukuli Murugadas - at the end of a concert in 1996பாலசுப்ரமணியம் பித்துக்குளி ஆனது: சிறுவயதில், தனது ஊரின் தெருவில் விளையாடும் போது, வழியே சென்ற ஒருவர் மீது இவர் வீசிய கல் பட்டு காயமடைந்த பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார், தனது நெற்றியில் இருந்து இரத்தம் வடிய… ‘அடேய்நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? ஒருநாள் இல்லை ஒருநாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போகிறாய்என்று வேடிக்கையாக கூறவே, அதுவே பித்துக்குளி முருகதாஸ் ஆக நிலைத்துவிட்டது[10]. முருகனுக்கு தாசனாய், முருகன் மீது பைத்தியமாய் இருப்பதால் தனது பெயருக்கு முன்னால் ‘பித்துக்குளி’யை இவர் சேர்த்துக்கொண்டார். 1935ல் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் மூழ்கினார். பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். 1939ல் பின்னாளில், கேரள மாநிலத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தின் ஆன்மீக குரு சுவாமி ராமதாஸ் முருகதாஸ் என்ற பெயரை பித்துக்குளி என்ற நாமத்துடன் இணைத்தார். அன்று முதல் பித்துக்குளி முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார்[11]. 1940ல் சேந்தமங்கலத்தில் இருந்த சுவாமி ஸ்வயம் பிரகாஷ் என்ற அவதூதரிடம் இருந்தார். பிறகு கால்நடையாகவே தீர்த்தயாத்திரையாக பல இடங்களுக்குச் சென்று வந்தார். சுதந்திர போராட்ட எண்ணங்களினாலும், தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களினாலும் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் அனாதை குழந்தைகளை காக்க வேண்டும் என்று தீர்மானித்தார். 1947ல் வாலாஜாபேட்டையில் உள்ள தீனபந்து ஆஸ்ரமத்தின் / அனாதை இல்லத்தின் பாதுகாவலர்களுள் ஒருவரானார்[12].

Pithukuli Murugadas in a Kumbabhishekam in Singaporeதமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், சந்தப்பத்திற்கு ஏற்றவகையில் பாடல்களை புனைந்து பாட வல்லவர். தென்னாப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்[13]. பித்துக்குளி முருகதாஸ் தியாகராஜர் விருது, 1984ல் தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல இசை விருதுகளை பெற்றுள்ளார்[14]. தன்னுடன் கச்சேரிகளில் பக்திப்பாடல்களை பாடிய தேவி சரோஜா என்பவரை 1978ல் தனது அறுபதாவது வயதில் மணந்து கொண்டார். இந்த தம்பதியர் ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்! இவர் 2011ல் காலமானார். சிறந்த முருகபக்தராக கருதப்படும் பித்துக்குளி முருகதாஸ், சென்னையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ ஜோதிர் மாயா தேவி அறக்கட்டளையை தொடங்கினார். தனது பக்தி பாடல் கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து பல ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் மிக உயரிய சமூகத்தொண்டாற்றி வந்தார். வெகுநாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தீவிர முருகபக்தரான பித்துக்குளி முருகதாஸ், சூரசம்ஹார தினமான 17-11-2015 [செவ்வாய்கிழமை] அன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை மரணமடைந்தார்[15].

© வேதபிரகாஷ்

17-11-2015

[1] மாலைமலர், பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17, 12:20 PM IST.

[2]  தினமலர், பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், நவம்பர்.17, 2015: 07.24.

[3] தி.இந்து, பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், Published: November 17, 2015 11:17 ISTUpdated: November 17, 2015 11:17 IST.

[4] http://www.thehindu.com/news/national/tamil-nadu/singer-pithukuli-murugadas-passes-away/article7886850.ece

[5] http://www.newindianexpress.com/cities/chennai/Devotional-Singer-Pithukuli-Murugadas-Passes-Away/2015/11/17/article3132653.ece

[6] தமிழ்.ஒன்.இந்தியா, தைபூசத்தில் பிறந்து கந்த சஷ்டியில் காலமானார் முருக பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ், Posted by: Mayura Akilan Updated: Tuesday, November 17, 2015, 10:25 [IST].

[7] http://www.vikatan.com/news/article.php?aid=55136

[8] http://ns7.tv/ta/singer-pithukuli-murugadas-passes-away.html

[9] https://en.wikipedia.org/wiki/Pithukuli_Murugadas

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/singer-pithukuli-murugadas-passes-away-239986.html#slide175317

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7886986.ece

[12] http://www.pithukulimurugadas.com/

[13] விகடன், முருகன் பக்தி பாடல் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!, Posted Date : 08:52 (17/11/2015); Last updated : 08:52 (17/11/2015).

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1388839&

[15] http://www.maalaimalar.com/2015/11/17122010/Devotional-singer-Pithukkulli.html