Posts Tagged ‘தமிழ் பண்பாடு’

தீபாவளி விவாதம் தொடர்கிறது: திராவிட “இந்து-விரோதம்” தொடர்கிறது!

ஒக்ரோபர் 20, 2009

தீபாவளி விவாதம் தொடர்கிறது: திராவிட “இந்து-விரோதம்” தொடர்கிறது!

இந்த தடவை, தீபாவளி மற்றும் “தீபாவலி” அமர்க்களப் படுகிறது!

தீபாவளி முடிந்தாலும், “தீபாவலி” முடியவில்லை, குறையவில்லை!!

தீபாவளி வெடிசத்தங்கள் நின்ற பிறகும், “தீபாவலி சத்தங்கள்” நிற்கவில்லை!!!

இனமானத் தலைவர் பீறிட்டு எழுந்து விட்டார்போலும்.

இன்றய “விடுதலையில்”, வீரமணியின் தலையங்கம் (20-10-2009) பல கேள்விகளுக்கு பதில் இருப்பதுடன், பல கேள்விகளையும் எழுப்புகின்றன.

மிரட்டலா? [விடுதலை, தலையங்கம், 20-10-2009] http://www.viduthalai.com/தன்மானம் உள்ள தமிழா, தீபாவளி கொண்டாடலாமா? ஆரிய திராவிடப் போராட்டத்தை மய்யப்படுத்தி புனையப்பட்ட கதையே தீபாவளி பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா? தீபாவளிப் பண்டிகை அறிவுக்குப் பொருந்துமா? பூமாதேவிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை எப்படி அரக்கனானான்? என்ற வினாக்களை இன்று _ நேற்று அல்ல _ தன்மான இயக்கம் தோற்று விக்கப்பட்ட காலந்தொட்டு 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏடுகளில், இதழ்களில் எழுதப்பட்டும் வருகின்றன. நாடெங்கும் தீபாவளி கண்டனப் பொதுக் கூட்டங்களும் நடத்தப்படுவதுண்டு.

விருதுநகரில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த அடிப்படையில் சிறப்பாக சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டன.

அதில் காணப்படும் வாசகம் வருமாறு:

பொருளாதாரப் பேரழிவு!

சுற்றுச்சூழல் சீர்கேடு!

சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!

ஆரிய ஆபாசப் பண்டிகை!

தீபாவளியைப் புறக்கணிப்போம்!

என்று அந்தச் சுவரொட்டிகளில் கூறப்பட்டு இருந்தது.

இதில் என்ன குற்றம்? என்ன பிழை? ஒரே ஒரு வரியை கால் புள்ளி, அரைப் புள்ளியை மறுக்க முடியுமா?

இவற்றை மறுக்கவியலாத -_ எதிர்த்துக் கருத்துச் சொல்ல வக்கில்லாத சில பேர் இந்து முன்னணி என்ற பெயரால் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனராம். இதற்காகக் காவல்நிலையத்தை முற்றுகை-யிட்டனராம். சுவரொட்டி வெளியிட்டவர்கள்மீதும், அச்சிட்ட அச்சகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளாராம்.

உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு வகையில் இதனை வரவேற்கிறோம். நீதிமன்றத்திலேயே இந்த ஆபாச, மூடத்தன தீபாவளி பண்டிகையைப்பற்றி அக்குவேர் ஆணி வேராகக் கிழித்திட திராவிடர் கழகத்துக்-குக் கிடைத்த அரியதோர் நல்ல சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகிறோம்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான சிந்தனையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரச-மைப்புச் சட்டமே கூறியுள்ளது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்களாக காவல்துறை அதிகாரிகள் இருப்பார்களேயானால், அவர்களும் தெரிந்து கொள்ள வைக்கக் கிடைத்திட்ட கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாகவேகூட இதனை எடுத்துக் கொள்வோம்.

அதே நேரத்தில் இந்து முன்னணியில் உள்ள அப்பாவித் தமிழர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? எதற்காக தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தீபாவளியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்-கின்றனர் என்பது குறித்து திறந்த மனத்தோடு சிந்திக்க வேண்டாமா?

வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்-களிலும் அரக்கர்கள், அரசுர்கள், ராட்சதர்கள் என்ற எழுதப்பட்டவர்கள் எல்லாம் திராவிடர்-களே என்று வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்-பனர்கள் உள்பட) எழுதி இருக்கிறார்களே, அதுபற்றி தெரியுமா? ஏன், ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்-தர்-கூட இதே கருத்தைச் சொல்லியிருப்பதை அறிவார்களா?

இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால் திராவிடர் கழகம் ஏன் தீபாவளிப் பண்டிகையை எதிர்க்கிறது என்பதற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொண்டு இருக்க முடியுமே!

இராமாயணத்தில் சம்புகனை இராமன் வெட்டிக் கொன்றதும், நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா கொன்றதும், சூரபத்மனை சுப்ரமணியன் சம்ஹாரம் செய்ததும் எல்லாம் ஆரியர் ஆரியரல்லாதாரை அழித்தொழித்தது தானே!

காந்தியாரைக் கொலை செய்த கோட்சேக்கு விழா எடுப்பவர்களுக்கு இதெல்லாம் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் ஆறாவது அறிவைக் கொண்டு அவர்களும் சிந்திக்க முற்பட்டால் மனிதர்களாகலாமே!

தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தீபாவளி வாழ்த்-துச் சொல்லாததன் அருமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி, பகுத்தறிவாளர்கள் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முன்பு கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தால், ஒருவேளை திராவிட கண்மணிகள் வன்முறையில் இறங்கி அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்ற பயத்தினால் பதில் சொல்லாமல் இருந்தார்கள், இருந்திருக்கக் கூடும்.

சமீபத்தில் (2006 – 2009) பல கோவில்கள், குருக்கள் தாக்கப் பட்டு, விக்கிரங்கள் உடைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப் பட்டு, அறிவாளால் வெட்டப் படவும் நேர்ந்தது. அத்தகைய அப்பாவி தமிழக இந்து மக்களின் மீது அவிழ்த்து விடப் பட்ட வன்முறையைப் பற்றி முதல்வரோ அல்லது எந்த தலைவரோ கண்டு கொள்ளவில்லை. மாறாக முதல்வரான, கருணாநிதியே இந்துக்கள் “திருடர்கள்” என்றெல்லாம் பேசி, பல வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, நிலுவையிலேயே வைக்கப் பட்டுள்ளன.

“செக்யூலரிஸ நாத்திகம்” அல்லது “இந்து-விரோத நாத்திகம்”, அதிலும் பச்சை “இந்து-விரோதம்” கடை பிடிக்கும் திகவினர் மற்றும் கருப்பு பரிவாரை தமிழ் மக்கள் இப்பொழுது நன்றாகவே அடையாளம் கண்டுகொண்டுள்ளார்கள். ஆகையால், இந்து முன்னணியே இல்லாமல் இருந்தால் கூட அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட இந்துக்கள் நிச்சயமாக ஒருநாள் பொங்கியெழத்தான் செய்வார்கள். அத்தகைய நிலைதான் இப்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது.

திட்டமிட்ட முறையில் வீரமணியும், தனது – ஒரு நிகர பல்கலைகழகத்தின் வேந்தர் – என்றப் பொறுப்பான நிலையையும் மறந்து, அத்தகைய கீழ்த்தரமான கேள்விகளைக் கேட்டு, போஸ்டர்கள் ஒட்டினால், நிச்சயமாக இந்துக்கள் கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள்.

எப்படி கருணாநிதி தான் எல்லொருக்கும் “முதல்வர்” என்பதனை மறந்து “இந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தான் முதல்வர்” என்பது மாதிரி, முற்றிலும் அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறாரோ, அது மாதிரியே காவல்துறையும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது, மறைமுகமாக ஆளும்-அதிகாரத்தை வற்புறுத்ததுவதும் ஜனநாயகம் ஆகாது.

விவேகாநந்தர் பெயர் சொல்லி திரித்துகூறியதை ஏற்கெனவே, எடுத்துக் காட்டப் பட்டது. அவர் மற்றும் அம்பேத்கர் போன்றவர்களே “ஆரிய-திராவிட” இனவாதங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் எடுத்துக் கட்டப் பட்டது. இருப்பினும் அத்தகைய கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக விஷயம் தெரிந்தவர்கள் மதிக்க மாட்டார்கள். நீதிமன்றங்கள் அத்தகைய பொய்களை, கட்டுக் கதைகளை ஏற்று இந்துக்களுக்கு எதிராக செயல் பட்டால், நிச்சயமாக உலகமே கேள்வி கேட்கும். ஒருவேளை நீதிபதிகள் எல்லொருமே அரசியல் ரீதியாக நியமிக்கப் படுவதால், அவர்களும் ஆளும் கட்சிகளுக்கேற்ப தீர்ப்பு கொடுப்பார்கள் என்ற ஆணவத்தில் இருந்தால், ஏனெனில், இந்த தலையங்கம் அந்த தோரணையில் உள்ளது, அது நீதியையும் தமது தகாத “நாத்திக-ஊழலுக்கு” உட்படுத்துவது போல உள்ளது.

“இராமாயணத்தில் சம்புகனை இராமன் வெட்டிக் கொன்றான்” என்ற புளுகை இன்னும் பரப்பிக் கொண்டிருந்தால் யார் நம்புவார்கள். எங்கே, இராமாயணத்தில் எத்தனையாவது அதிகாரத்தில், சுலோகத்தில் உள்ளது என்று எடுத்துக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். இதுவரையிலும் யாரும் எடுத்துக் காணக் காணோம்! இதுதான் அவர்களது நிலை!

எல்லாவற்றிற்கும் மேலாக, “தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லாததன் அருமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி”யதற்கு நன்றி சொல்லவேண்டும்! ஏனெனில், அவர்களே அத்தகைய இந்து-விரோத உண்மையினை / போக்கை சொல்லியிருப்பது நல்லது. ஏற்கெனவே அவர்மீது தொடுக்கப் பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளில் கூட, வாதி இந்த முக்கியமான உண்மையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேதப்ரகாஷ்

20-10-2009