பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “சித்தாந்தத்திற்கு” எதிரான வாத–விவாதங்களும், கண்டன-கண்டனங்கள் [7]
13-08-2019 – நான்காவது நாள் – முதல் அமர்வு – செவ்வாய் கிழமை: முதல் அமர்வில் ஒன்பது கட்டுரைகள் வாசிக்கப் பட்டன:
- லெமூரியா[1] – மா. ரங்கநாதன் கதையின் மீது ஆதாரமாக, அரைமணி நேரம் கதையை வாசித்தார். மாநாடு தலைப்பு மற்றும் பொருளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தம் என்று தெரியவில்லை.
- அடுத்து பேசிய பெண்மணி, தனக்கு சைவசித்தாந்தம் என்றாலே என்னவென்று தெரியாது, சைவம் என்றால், மாமிச உணவு புசிக்கக் கூடாது என்றெல்லாம் நினத்தாராம். பிறகு பசி, பட்டினி என்றெல்லாம் பேசினார்.
- அருளம்பாள், சைவ இலக்கியத்தின் தொன்மை பற்றி படித்தார்.
- கே. பி. ரவி, சைவ சித்தாந்தத்தில் மனிதம் என்று வாசித்தார்.
- எஸ். விக்னேஸ், ஈஸ்வர மூர்த்தி முத்துப்பிள்ளை என்பவ்ரைப் பற்றி வாசித்தார்.
- பாலகுரு, சைவ சித்தாந்தமும், திருக்குறளும் என்று படித்தார்.
- ஶ்ரீராம், பல ஆத்மாக்கள் இருக்கின்றன என்று படித்தார்.
- பாலசிகாமணி என்பவர் முதன்முதலாக மறுப்பு, கண்டனம் போன்றவற்றைப் பற்றி கட்டுரை படித்தார். கண்டனம், நிராகரணம் பற்றி பேசியது இவர் ஒருவர் தான் எனலாம். ஆனால், கட்டுரை வாசித்தப் பிறகு, அவரிடம் கேள்வி / சந்தேகம் கேட்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. சித்தாந்தம், சித்தாந்த கண்டனம், சித்தாந்த கண்டன கண்டனம், சித்தாந்த கண்டன கண்டன கண்டனம், பற்றி கே.வி. ராமகிருஷ்ண ராவ் கேட்டார். ஆனால், மறுக்கப் பட்டது.
- ரேவதி, சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் என்று ஆரம்பித்து, படித்தார்.
ஏதோ கட்டுரையை வாசித்தே ஆகவேண்டும் என்று வெறி பிடித்தது போல படித்தது விசித்திரமாக இருந்தது. அமர்வுகளின் தலைவர்கள், பொதுவாக விஷயங்களையும், அவற்றில் உள்ள விவரங்கள் கட்டுரை வழங்குநர்களையும் முதலியவற்றை பொருட்படுத்தாமல் பாராட்டுகிறார்கள். நிச்சயமாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே விசயத்தைப் பற்றி பேசுவது, இயந்திர வாசிப்பு போன்று படிப்பது, உண்மைத் தவறுகள் போன்றவற்றைப் பற்றியும் கவலைப்படாமல் வாசிப்பது, முதலியன விசித்திரமாக இருந்தன. ஆனால், இவ்வாறு சைவ சித்தாந்தம் தெரியாதவர்களை வைத்து, சரவணன், சைவ சித்தாந்தம் பற்றி கட்டுரைகளை வாசிக்க வைத்ததே, பெரிய சாதனையாகும் என்று பாராட்டினார். நல்லது, ஆனால், பெரும்பான்மையான கட்டுரைகள் அவ்வாறு இருந்தது ஏற்புடையது அல்ல. பிறகு, அனைத்துலக-பன்னாட்டு பல்துறை போன்ற தம்பட்டங்கள் தேவையில்லை. ரூ 1000/- கொடுத்து, புதியதாக விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தவர்களுக்கு பெரிய சோதனையாக இருந்தது.
கண்டன-கண்டன, வாத-விவாதம் புரிய தர்க்கமுறை, ஞானம் வேண்டும்: சபாபதி நாவலர் சித்தாந்த மரபு கண்டன கண்ட னம், வைரக்குப்பாயம், சிவசமய வாத உரை மறுப்பு முதலிய சமயக் கண்டன நூல்களைச் சிதம்பரத்திலிருந்து வெளியிட்டார். 19ம் நூற்றாண்டில் சமயக் கண்டனங்களும் மறுப்பு நூல்கள் பலவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒருவரை ஒருவர் வன்மையாகவும் தாக்கிக் கொண்டனர். வைரக்குப்பாயம், குதர்க்கவிபஞ்சனி, கண்டனம், கண்டன கண்டனம் என்ற வகையில் பல நூல்கள் வெளிவந்தன. தர்க்கரீதியில் மற்றும் கணிதம் வைத்துக் கொண்டு விவாதங்கள் நடந்தன. துகளறுபோதம்மென்ற சித்தாந்த நூலை சீகாழிச் சிற்றம்பல நாடிகள் ஆக்கினார் என்று பெரியோர் கூறுகின்றனர். மெய் கண்ட நூல்களின் கருத்தையே இந்நூல் விரிக்க வந்தது என்பது பாயிரத்தால் தெரிகிறது. சிவஞானபோதம் முதலிய நூல்களில் அரிதினுணர்தற் பாலனவாய்க் கிடந்த அருங்கருத்துக்கள் இந்நூலில் தெளிவுற விளக்கப்பட்டிருக்கின்றன. மற்றும், சைவ சித்தாந்த நூல்களைப் பயிலுவதற்குத் தொடங்குமுன் இந்நூலிற் பயிற்சி சிறிதிருக்குமேல் அது மிகவும் பயன்படும். சைவ சித்தாந்தத்தில் இன்றியமையாதன அறிந்து தத்துவங்களில் தெளிவாகவும் விரிவாகவும் கூறும் நூல்களை படிக்க வேண்டும்.
திருத்தணியைத் தாண்டி ஏன் சைவ சித்தாந்தம் பிரபலமடையவில்லை?: திருமுருகா கிருபானந்தாவாரியார் அறக்கட்டளை சொற்பொழிவு 2019-20, சாது சண்முக அடிகள், பழனி சாது சுவாமிகள் வழங்கினார். முதலில் அவர் பழனி சைவ மாநாடு எவ்வாறு நடைபெற்றது என்பதையும், அதற்காக லட்சங்கள் செலவிடப்பட்டது என்பதையும் சுருக்கமாக விளக்கினார். சுமார் 1,000 பேர் கொண்ட கூட்டம் இருந்தது, மூன்றாம் நாளில் மட்டுமே கூட்டம் குறைந்தது, என்றார். பிறகு, 780 ஆண்டுகளாக தமிழ்நாடு எவ்வாறு வெளிநாட்டினர் மற்றும் பிற மாநிலங்களால் ஆட்சி செய்யப்பட்டது என்பதை அவர் விளக்கினார்; 1335 வாக்கில் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது, 1730 வாக்கில் சோழர் ஆட்சி; மற்றும் பல. சைவ சித்தாந்திற்கு ஆதரவு இருந்தபோதிலும், அது திருத்தணிக்கு அப்பால் வளரவும் பரவவும் முடியவில்லை, ஏனெனில், இது ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. மதத்தை சாதிக்கு மட்டும் கட்டுப்படுத்தக்கூடாது, ஆனால், ஒரு மதத்திற்குள் சாதிகளை ஒன்றிணைக்க வேண்டும். இப்படி இதை ஏதோ ஒரு “சுலோகன்” விளம்பர வாசகம் / கூப்பாடு போன்று உபயோகப் படுத்தப் படுவது தெரிகிறது. வெள்ளாளர்களை ஆதரிக்கிறார்களா, எதிர்க்கிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.
சைவசித்தாந்தத்தை இடையில் வைக்க வேண்டும் என்றால், “இந்து இல்லை” என்று வேறு வருகிறதே?: சாது சண்முக அடிகள் தொடர்ந்து பேசும்போது, “எஸ். ராதாகிருஷ்ணன் சைவ சித்தாந்தத்தை ஒரு தனி தத்துவ அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனெனில் இது விஷிஸ்தாத்வைதமாகத் தோன்றியது. அவர் யாழ்பாணம் எழுத்தாளர் எழுதிய “இந்தியா தத்துவ ஞானம்” என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டு, அதைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சைவ சித்தாந்தத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தருடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படும் சோமசுந்தரா நாயக்கரைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். பிரம்மத்தை இவ்வாறு காட்சிப்படுத்த முடிந்தால் –
- மிகப் பெரியது
- பெரியது
- இடைப்பட்டது
- சிறியது
- மிகவும் சிறியது
எனக் கொண்டால், பின்னர், அந்த “இடையில்” “சைவ சித்தாந்தம்” என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்”, என்று கூறி அவர் முடித்தார். ஆனால், சைவமே “இந்து அல்ல” எனும்போது, ஏன் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டும் என்று தெரியவில்லை.
மடங்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்த வேண்டும்: பேராசிரியர் தேவ நடராஜன் நினைவு சொற்பொழிவு 2018—19, சிவஞான பாலாலய சுவாமிகள், பொம்மபுரம் மடம், மைலம் வழங்கினார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் 10-08-2019 அன்று வர முடியவில்லை. இன்று கூட, அவர் தாமதமாக வந்தார், சாது சண்முக அடிகள் தனது உரையாற்றிக் கொண்டிருந்த போது வந்தார். கர்நாடக மடங்கள் செய்து வருவதைப் போல, தமிழக மடங்கள் சமூக சேவையைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 111 வயதில் இறந்த மரியாதைக்குரிய சிவகுமார சுவாமியின் இறுதி சடங்கு விழாவில் இவர் கலந்து கொண்டார். அவரது மடம் அனைவருக்கும் கல்வி வழங்கும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்தி வருகிறது, எனவே கர்நாடக மக்கள் அவரை “நடக்கும் கடவுளாக” மதித்தனர். அதே வழியில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்துவதன் மூலமும், மதத்தை கற்பிப்பதன் மூலமும் தமிழக மடங்கள் கல்வி கொடுக்க வேண்டும். அவர்கள் சமூக சேவைகளையும் செய்ய வேண்டும், என்று பேசினார்.
சாப்பாடு போட்டால் கூட்டம் வரும், என்று கடுமையாக விமர்சித்த சரவணன்: வழக்கம் போல, மதியம் 1.50 மணியளவில் நீதிபதிகள் வரவிருந்த நிலையில், நேரத்தை சரிசெய்ய, சரவணன் “சாப்பிடுவது” பற்றி பேசத் தொடங்கினார், எத்தனை பேர் பழனி மாநாட்டில் சாப்பிட்டார்கள் என்று விவரித்தார். சாப்படு பரிமாறும் நேரம் கூட முடிந்தது, ஆனால், மக்கள் சாப்பிட வந்தார்கள், ஆகவே, அவர் அவர்களைக் நோக்கி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்……திட்டினார்… ..என்று பெருமையாக சொல்லிக் கொண்டார். கையில் நெய் வழியும் வண்ணம் நக்கி-நக்கி சாப்பிட்டனர்…இந்த மாதத்தில் தினமும் நடத்தப்படவுள்ள “குரு பூஜை” பற்றி அறிவித்த அமைப்பாளர்களை அவர் விமர்சித்தார், ஏனெனில், அந்நாட்களில் உணவு வழங்கப்படும் என்று குறிக்கிறது. மக்கள் சாப்பிடுவதற்காக வருகிறார்கள், உணவு பரிமாறப்பட்டால் அதிக கூட்டம் வரும் ……… .. இந்த வழியில் அவர் கடுமையான மற்றும் பிற சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்தார். ஆனால், இங்கு, பன்னாட்டு மாநாடு, இவ்வாறு நடந்துள்ளது பற்றி யோசிக்க வேண்டும். இங்கு அவ்வாறு கேவலமாக பெசியது அநாகரிகமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
டாக்டர் கே. பாண்டியன், தேர்வு ஆணையாளர், சென்னைப்பல்கலைக்கழகம்: கோவில்கள் இருந்த தஞ்சாவூர் தனது ஊர் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்களை நடந்தன, அத்தகைய கோயில் சூழலில் அவர் சிறுவதிலிருந்து எவ்வாறு வாழ்ந்தார் என்று குறிப்பிட்டு, தனது அனுபவத்தை விளக்கினார். அவர் “இந்து” மதத்தைக் குறிப்பிட்டு தனது தனிப்பட்ட அனுபவத்தை விவரித்தார். சரவணன் இவர் பேசியதை கவனித்தாரா என்று தெரியவில்லை. இவர்கள் தாங்கள் இந்து இல்லை எனும்போது, அவர் தா இந்து என்று பேசியது, தமாஷாகத்தான் இருந்தது. ஒருவெளை. உண்மையை இவர், பல்கலை நண்பர்கள், அதிகாரிகளிடம் சொல்லவில்லை போலும். ஆக, சரவணனுக்கு, இதில் ஏதோ பிரச்சினை உள்ளது என்று தெரிகிறது.
© வேதபிரகாஷ்
21-08-2019
[1] “சித்தாந்தம்” இதழ் ஆலோசனைக் குழுவில் இருக்கும் “சிவத்திரு மா. லெமூரியா”வும், இவரும் ஒன்று என்றால், சரவணனுக்கு வேண்டியவர் என்பதால், அவர் ஒரு மணி நேரம், பிடிவாதமாக கட்டுரை வாசித்தாலும், யாரும் ஒன்று செய்ய முடியாது.