Posts Tagged ‘கோயில்’

சுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி!

ஜூலை 24, 2016

சுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசைஇந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி!

Bharatiya Ganathon 23-07-2016

மழையை நிறுத்திய இசை மழை: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு 24-07-2016 சனிக்கிழமை நடைபெற்ற  “பாரதீய கானதான்” என்ற சேர்ந்து பாடும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் பல கல்லூரி மற்றும் பள்ளிகளிலலிருந்து வந்து கலந்து கொண்டனர். வண்ண-வண்ண உடைகளில் வந்து அவர்கள் பாடியபோது, சுற்றுப்புறம் மற்றும் வானம் வரை அதிர்ந்தது எனலாம். அதனால், மேகங்கள் கூட மழையினை பெய்விக்காமல் தடுத்து விட்டது போலும். சுமார் 11,000 மாணவிகள் பங்கேற்ற (இடமிருந்து) பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், டி.சி.எஸ். நிறுவனத் துணைத் தலைவர் ஹேமா கோபால், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, இசைக் கலைஞர் அருணா சாய்ராம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பாரதிய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஆடிட்டர் சுப்பிரமணியம். (வலது) இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ என்ற தலைப்பில் 10,000 மாணவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது[1].

Bharatiya Ganathon 23-07-2016- these three provided real music

எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு பிறந்த விழா (1606-2015 முதல் 16-09-2016 வரை): செப்டம்பர் 16, 1916ல் எம்.எஸ் பிறந்தார். அதனால், இந்த ஆண்டு செப்டம்பர் 16, 2015லிருந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.எஸ். தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரபல வழக்கறிஞர். தாய் சண்முகவடிவு, வீணை இசைக் கலைஞர். வீட்டில் குஞ்சம்மா என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.  5-வது படிக்கும்போது, ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட, குஞ்சம்மா மயக்கமாகிவிட்டார். சில நாட்களில் உடல்நிலை சரியான பிறகும், குஞ்சம்மாவை இடைவிடாத இருமல் வாட்டியது. அம்மா சண்முகவடிவின் முடிவுப்படி பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒருமுறை மேடையில் மகளை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார் சண்முகவடிவு. ‘மராத்தி’பஜன் ஒன்றைக் குஞ்சம்மா பாட, அந்த இனிய குரலில் அங்கிருந்தவர்கள் சொக்கிப்போனார்கள். குஞ்சம்மாவின் திறமையைக் கண்டறிந்த ரசிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில், அவருடைய குரலை ஹெச்.எம்.வி. நிறுவனம் பதிவுசெய்து வெளியிட்டது. ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, ‘மரகத வடிவு’ பாடியபோது குஞ்சம்மாவுக்கு வயது 10. ‘மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் ரெக்கார்டு லேபிளில் பெயர் அச்சிடப்பட்டது. பிறகு, எம்.எஸ்.எஸ். என்பது சுருங்கி, உலகமே இன்றும் என்றும் உச்சரிக்கும் ‘எம்.எஸ்’ ஆனது! இந்தியாவில் அவரது குரல் ஒலிக்காத இடமே இல்லை, அறியாத ஆளே இல்லை எனலாம்.

MS_Subbulakshmi_with Gandhi

8-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி:  சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக –

 1. சுற்றுச்சூழல் பராமரித்தல்,
 2. பெற்றோர்-ஆசிரியர்-பெரியோர்களை வணங்குதல்,
 3. பெண்மையைப் போற்றுதல்,
 4. எல்லா ஜீவராசிகளையும் பேணுதல்,
 5. நாட்டுப்பற்று,
 6. வனம்-வன விலங்குகளைப் பாதுகாத்தல்

போன்ற ஆறு நோக்கங்களை மையமாகக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது[2]. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பலவித உந்துதல்கள், கவர்ச்சிகள் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு, இத்தகைய நற்பண்புகளினின்று அதிகமாகவே விலகி சென்று கொண்டிருக்கின்றனர். அந்நேரத்தில், இக்த்தகைய நிகழ்சிகள் மிகவும் அவசியமாகின்றன. இதில் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சம்ஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், பாரதீய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஹேமா கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி, இசைப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  பத்மா சுப்ரமணியம் முதலில் இந்த கொண்டாட்டம் பற்றி விவரங்களை விளக்கமாக முன்னுரையாகக் கூறினார்.

Bharatiya Ganathon 23-07-2016- Dinathanthi photo

இந்திய மொழிகளில் பாட்டுகள் பாடப்பட்டன: எட்டு மொழிகளில் பாடியபோது, இசைதான் கேட்பவர்களுக்குத் தெரிந்தது, வேறோன்று வித்தியாசமும் தெரியவில்லை. கீழ்கனாட பாடல்கள் பாடப்பட்டன:

எண் பாடல் மொழி மையப் பொருள்
1 மைத்ரிம் பஜதா சமஸ்கிருதம் உலக அன்பு, நட்பு, உறவு
2 ஈஸாவாஸ்ய இதம் சர்வம். சமஸ்கிருதம் அண்ட-பேரண்ட வணக்கம்
3 ஜிஸ் கர் மே இந்தி சிறந்த வீடு எப்படி இருக்கும்
4 பிரபோ கணபதே தமிழ் கஜ – கணபதி வந்தனம்
5 தண்டால தெலுங்கு
6 ஜய ஜெய ஜெய துளாஸி மாதா மராத்தி துளஸி-செடி-கொடிகள்-தாவரங்கள் வழிபாடு
7 ஜோ கனி கன்னடம்
8 காணி நிலம் வேண்டும். தமிழ் பூமிக்கு வணக்கம்
9 மாதா பிதா குரு தெய்வம். மலையாளம் மன்னை, தந்தை, ஆசிரியர் மற்று கடவுள் இவர்களுக்கு வணக்கம்

இந்த ஒவ்வொரு பாட்டிற்கும் சிறப்புண்டு. கேட்பவர்களுக்கு இசைதான் தெரிந்தது. ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் சிறு குறிப்பு கூறப்பட்டது. உன்னி கிருஷ்ணன் மகள், செல்வி உத்தரா ஒரு பாட்டு தனியாக பாடினாள். இவ்வாறு ஆயிரக்கணக்கில் மாணவிகள் வந்து பாடுவது என்பது சாதாரண நிகழ்சி அல்ல. பல மாதங்களாக ஆசிரியைகள், மாணவிகள், பயிற்சி கொடுப்போர், பெற்றோர் என்று பலர் இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பங்கு கொண்டு செயலாற்றியுள்ளனர். சேர்ந்து பாடும் முறையே இப்பொழுது குறைந்து வருகிறது.

IMG_20160723_172211101

நினைவுப் பரிசு[3]: இத்தகைய நிகழ்சியை தீடீரென்று நடத்தி விட முடியாதுவீதன் பின்னணியில் பலர் பல மாதங்களாக பாடுபட்டு வந்துள்ளனர். பொதுவாக இந்தியாவில், நிறைய பேர் வேலை / சேவை செய்து விட்டு அமைதியாக, கண்டுகொள்ளாமல், மறைந்தே இருப்பர். அத்தகையோரின் சேவையினல் தான், இத்தகைய நல்ல நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சேர்ந்திசை பாட உதவிய 10 இசை ஆசிரியர்கள், 3 சிறப்பு விருந்தினர் என 13 பேருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பண்பு கலாசார பயிற்சி அறக்கட்டளையின்[4] நிர்வாக அறங்காவலரும், ஹிந்து ஆன்மிக சேவை மையத்தின் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Bharatiya Ganathon 23-07-2016- started singing.4

இந்து ஆன்மிக கண்காட்சி குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது[5]: “சென்னையில் 2009-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஒரு சிறிய ஆன்மிக நிகழ்ச்சி இன்று அகில இந்திய அளவில் ஒரு கலாசார இயக்கமாக மாறி வருகிறது. இது அகில இந்திய அளவில் இந்து தர்மத்தை சரியான நோக்கில் பார்க்க வைக்கும் ஒரு பிரமாண்டமான இயக்கமாக உள்ளது. இதில் ஏற்க முடியாத கருத்துகளோ, சிந்தனைகளோ, நிகழ்ச்சிகளோ அல்லது அமைப்புகளோ இல்லை. மாறாக எல்லோரும் ஏற்க கூடிய 6 நற்கருத்துகளும், சிந்தனைகளும் இதில் உள்ளது. அப்படியானால் ஏன் இதற்கு இந்து ஆன்மிக சேவை கண்காட்சி என்று பெயர் வைத்துள்ளர்கள் என்று கேட்கலாம், ‘இந்துஎன்பது நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறை என்று தான் அர்த்தம்[6]. இது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சி இல்லை. 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை நடத்துவது ஒரு சேவை அமைப்பு என்று கூறி உள்ளது[7]. எனவே வருமானவரித் துறையும் வரிவிலக்கு அளித்து உள்ளது.”
Bharatiya Ganathon 23-07-2016- the venue was full with young singers.3

இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் நிகழ்ச்சி நிரல்: குருமூர்த்தி தொடர்ந்து பேசியது,அந்தவகையில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஆகஸ்டு 2-ந்தேதி மீனம்பாக்கம் .எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது[8]. தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்ளும்கங்கா காவிரி தீர்த்த மங்கல கலச யாத்திரைநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. பதஞ்சலி யோகா பீடம் நிறுவனர் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். 3-ந்தேதி (புதன்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 6 நற்குணங்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

 1. சுற்றுச்சூழலை பாதுகாத்து, பராமரித்தலை வலியுறுத்தும் வகையில்கங்காபூமி வந்தனம்நிகழ்ச்சி,
 2. குடும்பநலன்சமூக நலனை போற்றி பாதுகாத்து பெற்றோர்ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்கும் வகையில்குரு வந்தனம்நிகழ்ச்சி,
 3. பெண்மையை போற்றும் வகையில்கன்யா வந்தனம்நிகழ்ச்சி,
 4. சுற்றுச்சூழலை நிலையாக வைத்திருப்பதை மையமாக வைத்து பசு, யானையை வைத்து துளசிவந்தனம் நிகழ்ச்சிகள்,
 5. நாட்டுப்பற்றை போற்றும் வகையில்பாரத் மாதா வந்தனம்’, ‘பரம்வீர் வந்தனம்நிகழ்ச்சியும்,
 6. வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்அனைத்து உயிரினங்களையும் பேணும் வகையில்விருட்சவந்தனம்’, ‘நாக வந்தனம்நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இதுதவிர நாட்டிய நிகழ்ச்சிகள், வள்ளித்திருமணம், ‘கிருஷ்ணாஇசை நடன நிகழ்ச்சி, வாதாபி சூரசம்ஹாரம், தெருக்கூத்து என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை இலவசமாக கண்டுகளிக்கலாம்”,  இவ்வாறு அவர் கூறினார்[9].  மேலும் விவரங்கள், புகைப்படங்களுக்கு இங்கு பார்க்கவும்[10].

 

© வேதபிரகாஷ்

24-07-2016

Bharatiya Ganathon 23-07-2016- the venue was full with young singers.2

[1] இது “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ இல்லை “பாரதீய கானதான்”! நிருபர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல தோன்றுகிறது.

[2] தினமணி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி முன்னோட்டம், By dn, சென்னை, First Published : 23 July 2016 11:48 PM IST

[3]http://www.dinamani.com/tamilnadu/2016/07/23/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/article3544007.ece

[4] Hindu Spiritual and Service FoundationHead Office: “Bharata Mata Sadan”, “Gargi”, 1st Floor,
Old No : 9, New No 6, D’monte Street, Santhome,Chennai – 600 004; Ph: 044-24622311 / 312 / 313; E-Mail: hssfhq@gmail.com 

[5] தினத்தந்தி, 8-வது இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற மெகா பாட்டு நிகழ்ச்சி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST

[6] http://www.hssf.in/about-us.html

[7] Dr Ramesh Prabhoo vs Prabhakar –   https://indiankanoon.org/doc/925631/;  K. Kunte and in Manohar Joshi v.Nitin Bhaurao Patil  https://indiankanoon.org/doc/1215497/

[8] http://www.hssf.in/

[9] http://www.dailythanthi.com/News/State/2016/07/24050256/10-thousand-students-participated-in-the-8-mega-music.vpf

[10] https://www.facebook.com/vedam.vedaprakash

நவீனகால மயாசுரன்: ஸ்ரீ கணபதி ஸ்தபதி!

செப்ரெம்பர் 10, 2011

நவீனகால மயாசுரன் : ஸ்ரீ கணபதி ஸ்தபதி!


ஸ்ரீ கணபதி ஸ்தபதி வாழ்க்கை சுருக்கம்: புகழ்பெற்ற ஸ்தபதியான கணபதி ஸ்தபதி 06-09-2011 (செவ்வாய் கிழமை) அன்று மாலை சென்னைக்கு அருகே தனியார் மருத்துவமனையில் காலமானார்[1]. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமன‌ை‌யி‌ல் ‌தீ‌விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.  ஸ்ரீவைத்யநாத ஸ்தபதி மற்றும் வெள்ளம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக பிள்ளையார்பட்டியில் 1927ல் பிறந்தவர். ஸ்தபதி குடும்பத்தில் பிறந்த இவர், அதே துறையில் மிகச் சிறந்த கலைஞராக சிறந்தார். காரைக்குடி அழகப்பாச் செட்டியார் கல்லூரியில் கணிதத்தில் பட்டப்படிப்பு பெற்றார். கணிதம் என்பது மனிதனின் இரண்டு கண்களில் ஒன்று என்றறிந்தே படித்தார் போலும். சிறு வயதிலேயே தனது கருத்துகளை எழுதவும் ஆரம்பித்தார். மார்ச் 13, 1957 அன்று, இவரது கட்டுரை “தி ஹிந்து” நாளிதழில் வெளிவந்தது. அதில் “ஸ்தபதி” என்ற சொல்லிற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அதைப் படித்த தந்தையார், மிகவும் மகிழ்ந்தார். அதே ஆண்டில் பழனி தண்டாயுத சுவாமி கோவிலின் ஸ்தபதியாக, இந்து அறநிலைத்துறையால் நியமிக்கப் பட்டார். பல்வேறு கோவில்களை, சிற்ப மண்டபங்களைக் கட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.

சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராக ஆற்றியப் பணி: மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் 27 ஆண்டுகாலம் பணியாற்றினார்[2]. ராஜாஜி சிற்பக்கலைக்கு தனியாக ஒரு கல்லூரி இருக்க வேண்டும் என்று உத்தேசித்தபோது, 1957ல் திருமதி கமலா தேவி சட்டோபாத்யாய என்பவரால் இக்கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. திரு எம். வைத்தியநாத ஸ்தபதி தலைவராக இருந்தார். இவர் காலமானப் பிறகு, 1961ல் கணபதி ஸ்தபதி தலைவரானார். அதிலிருந்து 1988 வரை 27 வருடங்கள் அங்கு பணியாற்றினார். சிற்ப-கோவில் பணிகளுக்காகவும், ஆராய்ச்சி நிமித்தமாகவும், இவர் பல நாடுகளுக்குச் சென்றிருந்தார். அங்கிருக்கும் கோவில்-கட்டிடங்களுக்கும், இந்தியாவிற்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக் கட்டியுள்ளார். பத்மபூஷன்[3] உள்ளிட்ட அரசின் உயரிய விருதுகளையும் பெற்றவர்[4].

 

பரம்பரை சிற்ப வல்லுனர்: பாரதப் பண்பாட்டிற்கு ஏற்ப, இவரது குடும்பமே ஒரு சிற்பிகளின் பரம்பரையாக, கலைக்கோவிலாக இருந்து வந்தது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் பல இந்து கோவில்களையும் நிர்மாணித்தவர் இவர்[5]. தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை நிர்மாணித்த குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் பரம்பரையில் அவர் வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுவர். 18வது நூற்றாண்டில் மருத் சகோதரர்கள் ஆதரவில் கட்டப்பட்டக் கோவில்களை, இவரது மூதாதையர் வடிவமைத்தாக கூறிக்கொள்கின்றனர்[6]. 19வது நூற்றாண்டில், நகரத்தார் ஆதரவில், இவர் பல பணிகளை செய்துள்ளார். பண்டையக் கட்டிடக்கலைக்கும் இன்றைய கட்டிடக்கலைக்குமிடையே பாலமாக விளங்கியவர் கணபதி ஸ்தபதி என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

நாத்திக-ஆத்திக உறவுகள்:  கடந்த ஆண்டுகளில், இவர் கடவுளைப் படைப்பவர்களே நாங்கள் தாம் என்ற கருத்தைச் சொல்லி வந்தார். எங்களால் தான் கோவில்கள் இருக்கின்றன, ஏன் கடவுளின் விக்கிரங்களும் இருக்கின்றன என்று கூட பேசியிருக்கிறார். ஒரு புத்தகத்தை எழுதி, கருணாநிதி மூலம் வெளியிடப் போகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் ”நாம் நினைத்தவாறு சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பவும் துணையாக இருந்து, அந்த பணிகளில் இரவு பகலாக கண் விழித்து வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சமீபத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி ஏற்படாவிட்டாலும் கூட, சில மாதங்களுக்கு ஒரு முறை எப்படியாவது என்னைச் சந்தித்து விடுவார்அவரது மறைவு தமிழகத்திற்கும், சிற்ப கலைக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் சிற்பக் கலை வல்லுனர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்[7].

கடவுளையே நான் படைத்தேன் என்றவரின் பழைய நினைவுகள்: 1999-2000களில் இத்தகைக் கருத்துகளைக் கொண்ட இவர், முன்பு இவ்விதமாகவும் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்: “ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்-திருக்கிறாங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படறீங்க? நீங்க, அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டுவரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?”, என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்[8]. திக.காரர்களுக்கும் கொண்டாட்டம் தான்[9].

 

நாத்திகர்களுடான சகவாசத்தில் பிறந்த கோவில்: கருணாநிதி முதல்வராயிருந்த போது 23.04.1975ல் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரசாங்கம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி தரப்படுகிறது. இறுதிக்கட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு மேலும் ஐந்து லட்சம் நிதி ஒதுக்கியது. 16.4.1993 அன்று கருணாநிதி இக்கோயில் திறந்து வைக்கப்பட்டறது. “தமிழ்த்தாய்” என்று சொல்லப்பட்ட சிற்பம், ஏதோ அம்மன் சிலைப் போல இருந்தது. ஒரு கையில் விளக்கு, இன்னொரு கையில் வீணை, மற்றொரு கையில் உத்திராட்ச மாலை, மற்றொரு கையில் பனையோலை என நான்கு கைகள் கொண்டு தாமரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இக்கோயிலின் கடவுளை வடிவமைத்தவர்கள் பிரபல சிற்பிகள் கணேசன் மற்றும் கணபதி ஸ்தபதி ஆகியோர். இக்கோயில் காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகில் கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், அதே ஸ்தபதி, வேறு இடங்களில், வேறு மாதிரியுக் பேசியுள்ளார். உதாரணத்திற்கு, கீழ் கண்ட விஷயம்:

 

கணபதி ஸ்தபதி சிவனைப் பார்த்தாரா? “சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். 1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.

அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.  சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.

வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.

அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன். பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார். ‘காமகோடி’ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம் – பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி

தஞ்சை கோவில் “புதிர்கள்!’ வை.கணபதி ஸ்தபதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்[10]: “தினமலர்’ நாளிதழில் வெளியான கி.ஸ்ரீதரன் எழுதிய, “தஞ்சைப் பெரிய கோவில் சதயத் திருவிழா’ என்ற கட்டுரையைப் படித்து ஆச்சர்யம் அடைந்தேன். இன்னும் ஆச்சர்யம் அடைவதற்குரிய அனந்தம் உண்டு தான். அவை, கல்வெட்டுக்கு வராதிருக்குமானால், அதுவும் ஆச்சர்யம் தான். ஸ்ரீதரன் சம்ஸ்கிருத விற்பன்னர்; நேர்த்தியான செம்மொழியில் கட்டுரை எழுதியிருப்பதைக் கண்டு, ஆச்சர்யம் அடைகிறேன். இக்கட்டுரையில், கல்வெட்டுகள் பொறித்த, சாத்தன்குடி வெள்ளாளன் ரவிபாலூடையாருக்கு உரித்தாகும் செய்தி இனிக்கிறது. தஞ்சை மாவட்டத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, இந்த தஞ்சை பெருவுடையார் கோவில், இன்னும் பல ரகசியங்களைக் கொண்டுள்ளது. கருவறையில், பெருவுடையார் லிங்கத் திருமேனியாக இருக்கிறார். அதில் நிறை, குறை என்ன? இதில் குறை இருப்பதாக, பல ஆண்டுகளுக்கு முன், சிற்பியர் பலர் பேசிக் கொண்டிருந்தனர். கருவறையின் உள்சுவரைக் கீறி(சுவரை தோண்டி), அதில், “நாளம் கோமுகை’ வைத்த செய்தி உள்ளது. இது எப்படி நடந்தது? அது போல, ஏற்கனவே கட்டப்பட்ட கருவறை, லிங்கத் திருமேனிக்கு ஒத்துப்போகும் சிற்ப அளவில், ஒரு நந்தி இருந்ததை எல்லாரும் இப்போதும் பார்க்கலாம். அதை மாற்றி, புதிய நந்தி அமைத்தது ஏன்? கோவில் சாநித்யம் மிகுவதற்காகவா? ஆனால், அல்ல என்று பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல, கோவில் முன்பக்கம், லிங்கத்துக்கும், நந்திக்கும் இடையில் தரை மட்டத்தில், 12 அடி நீளத்தில், ஒரு நீண்ட கோடு இருந்ததை, நானும், என் தந்தை சிற்பக் கலாசாகரம் வைத்தியநாதன் ஸ்தபதியும் பார்த்தோம். அதன்பிறகு இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து பார்த்தபோது, அந்தக் கல் அங்கே இல்லை. அது எங்கே? அதில் தான் ரகசியம் உள்ளது. பிற்காலத்தில் உள்ள சிற்பியர்களின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும், பல பரிவாரக் கோவில்களை எழுப்பியிருக்கின்றனர் என நினைக்க இடமுள்ளது. இப்படி பல இடங்கள் சரியாக அமையவில்லை. யார் சொல்படி செய்யப்பட்டன என்பது புதிர். மற்றபடி, இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. இக்குறைகளை நீக்கி, “சாநித்யம்’ என்ற சொல் சொல்லப்படும் உயிர்ப்பை உண்டாக்கி, கோவில் மறுவாழ்வு பெற செய்யப்படுமா? இப்போதுள்ள பரம்பரை ராஜா இதைத் தெரிந்து, அவர்களிடமே இப்பணியைச் செய்ய, அரசு முன் வர வேண்டும்.

ஸ்தபதியின் மெய்ஞானம்: மேற்குறிப்பிட்டபடி, சில நேரங்களில் அவர் பேசியது, ஆள்பவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், அவரது மெய்ஞான உணர்வை மறக்க / மறுக்க முடியாது. தன்னை மயாசுரனின் வாரிசு என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். மயாசுரன், இந்திய கட்டிடக்கலை, சிற்பக்கலை, மற்ற எல்லா கட்டுமானத்துறைகளின் முதல்வன். மயாசுரன் பெயரில் பல புத்தகங்கள் இருக்கின்றன. விஸ்வகர்மா உலகத்தையே படைத்த வித்தகர்.  “இந்திய நாட்டு விஞ்ஞானக் கலாச்சாரத்தில் விசுவகர்மர்” என்ற நூலில், ஸ்தபதியே அருமையாக விளக்கியுள்ளார்[11]. அதாவது, வஸ்துவிலிருந்து வாஸ்து. எப்படி வருகிறது என்பதை இவர்கள் மெய்ப்பித்துக் காட்டியவர்கள். ஸ்தபதி அவர்கள் இதனை அடிக்கடி எடுத்து சொல்வார். E = mc2 என்று அருமையாக விளக்குவார். உலகத்தில் குழந்தைப் பிறப்பது அதாவது, பெண்ணின் வயற்றில் கரு உருவாவது தான், இந்த சூத்திரத்தின் ஆதாரம். தென்னமெரிக்காவிற்குச் சென்று திரும்பியவுடன், அங்கிருக்கும் கட்டிடங்களில், எவ்வாறு இந்திய கட்டிடக் கலையின் அடிப்படைகள் உள்ளன என்று அடுக்கடுக்காக எடுத்துக் காட்டி விளக்கினார்[12]. உண்மையில், அவரது உரைகளை இக்கால மாணவர்கள், இளைஞர்கள் முதலியோர் கேட்டிருக்க வேண்டும். ஏதோ சினிமா, கிரிக்கெட் என்று அலையும் அவர்களில் எத்தனை பேர்களுக்கு இவரைப் பற்றித் தெரியும் என்று தெரியவில்லை. அத்தகைய அஞ் ஞானத்திற்கும், நாம் தாம் பொறுப்பேற்க வேண்டும். இன்றைக்கு “சமச்சீர் கல்வி” என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்நிலையில், இவர் எழுதியுள்ள புத்தகங்களில் ஒன்றைப் பரிந்துரைத்து, அதை மாணவர்கள் படித்தால், நமது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை தெரிந்து கொள்வார்கள். அதுமட்டுமல்ல, பல கணித, வடிவியல், கட்டிடவியல், முதலியவற்றைப் பற்றியும் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்[13].


[8] பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி , கல்கி 11.6.2006

[11] வாஸ்து வேத ஆராய்ச்சி மையம், சென்னை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நூல்.

[12] V. Ganapati Sthapati, Vastu Shastra – A scientific treatise, Vastu Vedic Research Centre, B-2, Geethalaya Apartments, Tiruvanmiyur, 1996 (வெட்டுவாங்கேணியில் உள்ள தற்போதைய இல்லத்திற்கு முந்தைய விலாசம் இது).

[13] வை. கணபதி ஸ்தபதி, விண்ஞானக் கொயில்கள், சென்னை, 1995.

இந்தியாவில் பழைய கட்டிடங்களில் சுரங்கங்கள், பதுங்கு அறைகள், முதலியன ஏன் இருந்தன?

ஜூன் 4, 2010

இந்தியாவில் பழைய கட்டிடங்களில் சுரங்கங்கள், பதுங்கு அறைகள், முதலியன ஏன் இருந்தன?

நகரி (03-06-2010): காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுடன் இணைந்துள்ள, பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் வளாகத்தில், சுரங்கப்பாதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரதராஜசுவாமி கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணி 2 மாதங்களாக நடந்து வருகிறது. இக்கோவிலில் சுவாமியின் விக்ரகத்தை உயரமான இடத்தில் வைக்க, கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. மேலும், கோவில் முன் உள்ள மண்டபத்தை விரிவாக்கம் செய்வதற்கு அங்குள்ள சிறிய அறையை அப்புறப்படுத்த முயன்ற போது, அங்கு மூன்று சிறிய அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுரங்கம் போன்ற அந்த இருட்டு அறையில் சுவாமியின் திருவாபரணங்கள், அதை பத்திரப்படுத்துவதற்கான பெட்டி, அதன் மீது தாமிர பத்திரம், பழைய காலத்து கத்தி, குத்துவிளக்குகள், செம்பு குடம் போன்ற பூஜைக்கான பொருட்கள் உள்ளதை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

முருகன் கோவிலில் சுரங்கம் கண்டுபிடிப்பு
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 21, 2006, 5:30[IST]

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் உள்ள பழம்பெரும் முருகன்கோவிலுக்குள் ஒரு சுரங்கப் பாதையும், இரண்டு அறைகளும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வல்லக்கோட்டை முருகன் கோவில் வட மாவட்டங்களில் பிரபலமான முருகன்தலமாகும். இங்கு கோவில் வளாகத்தில், பூமிக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதைஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக ஆய்வாளர் திருமூர்த்திகூறுகையில், “1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் மண்டபம்கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுபோல எந்தக் கோவிலிலும் சுரங்கப் பாதை இருப்பதாகத்தெரியவில்லை. இந்த சுரங்கப் பாதைக்குள் சுடு மண்ணால் கட்டப்பட்ட இரண்டு அறைகளும் உள்ளன.இந்த சுரங்கப் பாதை குறித்தும், அதன் அறைகள் குறித்தும் மேலும் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன”, என்றார் திருமூர்த்தி. வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை இந்த புதிய சுரங்கம் கவர்ந்திழுத்து வருகிறது.

இந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்.

மே 4, 2010

இந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்

கபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது”! கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:

MYLAPORE FELL INTO THE HANDS OF THE PORTUGUESE IN A.D 1566 WHEN THE TEMPLE SUFFERED DEMOLITION. THE PRESENT TEMPLE WAS REBUILT 300 YEARS AGO. THERE ARE SOME FRAGMENTARY INSCRIPTIONS FROM THE OLD TEMPLE STILL FOUND IN THE PRESENT SHRINE AND IN St. THOMAS CATHEDRAL.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு:

“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.

ஆகவே, இந்துக்கள் தாரளமாக, தங்களது இடத்தைக் கேட்கலாம். பெரும்பாலும், சரித்திர ஞானம் இல்லாமல் அல்லது இருந்தும், செக்யூலரிஸ மாயயையில் கட்டுண்டு, இந்துக்கள், தங்களது உரிமைகளை இழந்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு, கிருத்துவர்கள் அயோக்கியத்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர். அத்தகைய நிகழ்ச்சிதான் சம்பந்தமே இல்லாத, கிருத்துவர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் நழைவேன் என்று மிரட்டுவது!

இந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்.

உடனடியாக பக்தர்கள் அனைவரும், அந்த அவலச் சின்னமான சர்ச்சின் முன்பு அமைதியாக உல்கார்ந்து கொண்டு சிவநாம ஜெபம் செய்யவேண்டும்.

கோயில்களை புனரமைக்கும் சென்னை பெண்ணின் சாதனை

பிப்ரவரி 9, 2010
கோயில்களை புனரமைக்கும் சென்னை பெண்ணின் சாதனை
ஜனவரி 04,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6163

Front page news and headlines today
கோயில் புனரமைப்பு சேவையில் ஒரு பெண்மணி: கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், கோவில் இருந்தும் அதைப்பராமரிப் பவர்கள் இல்லாமல் புதர் மண்டிக்கிடப்பவை எத்தனையோ! இப்படிப்பட்ட கோவில்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியம்.

பழைய சிதிலமடைந்த கோயில்களைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்விக்கும் பெண்மணி: குரு சேவா ரத்னா, திருப்பணி செம்மல், திருப்பணி திலகம் போன்ற பலப்பல விருதுகளை பெற்றுள்ள இவர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் நூலகராகவும், லயன்ஸ் கிளப்பில் தலைவராகவும் உள்ளார்.மயிலாடுதுறை அருகிலுள்ள கோழிகுத்தி இவர் பிறந்த ஊர். இங்குள்ள வானமுட்டி பெருமாள் கோவில் மிகவும் பாழடைந்து மேற்கூரையின்றி சிதிலமடைந்து காணப் பட்டது.உடனே, ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி, அவரவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்து கும்பாபிஷேகத்தை நல்லமுறையில் நடத்தினார்.

விஜயநகர பேரரசு, நாயக்கர் இவர்களுக்குப் பிறகு, பெண்மணி செய்யும் அதிசய கோயில் சேவை: இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் பகுதியிலுள்ள பாழடைந்த கோவில்களிலும் திருப்பணி செய்ய இவரை கேட்டுக்கொண்டனர். அன்று முதல் பழமையான கோயில்களை புனரமைக்கும் தொண்டைச் செய்துவருகிறார்.இதுவரை, 12 கோவில்களில் திருப்பணி முடிந்துள்ளது. 42 கோவில்களில் திருப்பணி நடந்துவருகிறது.கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதோடு நின்றுவிடாது, அந்த கோவிலில் தினசரி பூஜை நடக்கவும், பராமரிப்பிற்கும் தேவையான நிதிக்கு ஏற்பாடு செய்கிறார். தனது மருமகன் கார்த்திக் கவுசிக், மகன் அர்ஜுன், மகள் ரம்யா ஆகியோர் மூலமாக, கணிசமான நிதியை வழங்கி வருகிறார்.

திருப்பணி செய்ய இவரை அணுகலாம்: திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவிலுக்கு முற்பட்டதான ரிஷிபுரீஸ்வரர், சேஷாத்ரி சுவாமிகள் பிறந்த ஊரான வழூர் சுந்தரவதனப் பெருமாள் கோவில், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள அபிராமி அம்பாள் சமேத குலசேகர சுவாமி கோவில் போன்ற கோவில்களை புனரமைப்பு செய்ய வாய்ப்பு கிடைத்ததை, பாக்கியமாகக் கருதுகிறார்.இவருடன் இணைந்து, கோவில் திருப்பணியில் பங்கேற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மகாலட்சுமி சுப்பிரமணியம், துளசி அப்பார்ட்மென்ட், 11,குப்புசாமி தெரு, தி.நகர், சென்னை-17. போன்: 099400 53289, 044-2815 2533.

என்னே விந்தை! அரசு நாசாமாக்கும்போது, தனிப்பட்டப்  பெண்மணி நேசத்துடன் உயிரூட்டுகிறார்!: தமிழ்-தமிழ் என்று பேசி, தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து, கோயில் நிலங்களைக் கொள்ளையடித்து, நாத்திகம் பேசி, கோயில் விக்கிரங்கள்-சிலைகள் முதலியவற்ரைக் கடத்தி விற்று, தமிழ் நாகரிகத்தை தொலைக்கும் நேரத்தில், இப்படியொரு பெண்மணி சேவை செய்கின்றார் என்றால், அவருக்கல்லவோ பரிசுகள், பாராட்டுகள் செய்யவேண்டும்! ஆனால் கோயில்-கொள்ளைக்காரர்களுக்கு, தமிழ்-நூல்களை எரித்தவர்களுக்கு, தமிழை அவமதித்தவர்களுக்கு பாராட்டு செய்கிறர்கள் இந்த தமிழ்நாட்டில்!