கீழடி வைத்து உண்டாக்கும் பிரம்மி, தமிழி, திராவிடம் முதலிய குழப்பங்கள், சித்தாந்த திரிபு வாதங்கள் மற்றும் சரித்திரம் மறந்த நிபுணர்கள் [5]
“பிரம்மி ஆரம்பம் ஆன சரித்திரம்: சமஸ்கிருதத்தை / வேதங்களை ஆராய்ந்த ஐரோப்பியர், இந்தியர்களுக்கு எழுதத் தெரியாது, அதாவது, அவர்களுக்கு எழுத்துரு கிடையாது என்ற கொள்கையினை பிடிவாதமாக நம்பி வந்தனர். அதாவது அதன் மூலம், அவர்களுக்கு சரித்திரம் இல்லை. எழுதி வைத்த ஆவணங்கள் இல்லை என்று வாதிட்டு வந்தனர். அப்பொழுது எழுத்துகள் பொறிக்கப் பட்ட கல்வெட்டுகள் பலவற்றைப் பார்க்க நேர்ந்தது. ஆனால், அவ்வெழுத்து என்ன வகை, மொழி என்ன என்று தெரியவில்லை. பிறகு படிக்க ஆரம்பித்த போது, “தேவ்நாம் பியா திஸ்ஸா” என்றிருந்தது.” இப்பெயரில் 307 BCE to 267 BCE காலத்தில் இலங்கையில் ஒரு அரசன் வாழ்ந்ததாக உள்ளது. ஆகையால், இரடு அசோகர்களில், ஒரு அசோகனை எடுத்து அவன் 304-232 BCE காலகட்டத்தில் வாழ்ந்ததாக எடுத்துக் கொள்ளப் பட்டது. அவனை இந்த “தேவ்நாம் பியா திஸ்ஸா”வுடன் இணைத்து அவனுடைய கல்வெட்டுகள் தான் என்று வின்ட்சென்ட் ஸ்மித் தீர்மானித்தான்தவர்களைப் பொறுத்த வரையில் “இந்திய சரித்திரம்” அலெக்சாந்தர் படையெடுப்பிற்குப் பிறகு 326 BCE தான் தொடங்குகின்றது. முதலில், ஐரோப்பியரே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஆகவே, இது தமிழ்-பேரினவாத-அடிப்படைவாதிகளுக்கும் பொறுந்தும்.
பிரம்மி லிபி – எழுத்துருவம் தோற்றம்: பிரம்மியை ஐரோப்பியர், இவ்வெழுத்துகள் பின் / குண்டூசிகளைப் போன்று இருந்ததால், ஆங்கிலத்தில் “பின்-மேன்” என்று குறிப்பிட்டனர். 1354ல் சுல்தான் இரண்டு தூண்களை தோப்ரா மற்றும் மீரட்டிலிருந்து, தில்லிக்குக் கொண்டு வந்தான். அதிலிருந்த எழுத்தகளைப் படித்து சொன்னால் பரிசு என்று அறிவித்தானாம். ஆனால் யாரும் படிக்கவில்லையாம்.பிறகு பிரின்செப் என்ற ஆங்கிலேய மற்றும் கிருஸ்டியன் லேஸன் படிக்க முயன்றனர். இலங்கையில் இருந்த பாலி எழுத்துகளை வைத்து, அசோகனின் கல்வெட்டு எழுத்துருவை தொடர்பு படுத்தி, படிக்க முயன்றனர். பிறகு, பிரம்மி, கரோஷ்டி என்று பிராக்ருத மொழியில் எழுதப் பட்டவற்றை ஒப்பிட்டு படித்துக் காட்டப் பட்டது. இதனால் தான் பல கல்வெட்டுகள் அசோகனின் கல்வெட்டுகள் என்று அடையாளம் காணப்பட்டது. முதலில், வடக்கு செமித்திய எழுத்துமுறையுடன், பிரம்மி ஒப்பிடப் படுத்தப் பட்டது. ஜியார்ஜ் பூலர் 1898ல் அவ்வாறு படித்தார். ஆனால், மற்றவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆர்.பி. பாண்டே, போனீஸியர் / பனீஸ் இந்திய மூலம் கொண்டவர், எனவே அவர்கள் இந்தியாவிலிருந்து தான் மத்திய தரைக் கடல் நாடுகளுக்கு பரவினர். அப்பொழுது, எழுத்துருவும் பரவியது என்றார்.[1] லேஸன், எட்வொர்ட் தாமஸ் போன்றோ, பிரம்மி தென்னிந்தியாவில் இருந்து தோன்றியது என்றும் எடுத்துக் காட்டினர். ஆர்.ஜி. பண்டார்கரும், பிரம்மியின் மூலம் இந்தியா என்றார்[2]. ஜான் டௌஸன், கங்கை கரையில், பிரம்மி உயர்வானது என்றார்[3]. அதனை, “இந்தியன் பாலி” என்று குறிப்பிட்டார். லாங்க்டன்[4], சிந்துசமவெளியில் பிரம்மி தோன்றியது என்றார். பிரம்மிற்கும், நகரிக்கும் தொடர்பு இருக்கிறது. நெட்டெழுத்தின் ஆரம்பம் அதில் அமைகிறது. ஆனால், மற்றவை, வட்டெழுத்துகள் மூலம் மாறி வளர்ச்சி அடைகின்றன. தென்னிந்திய வரிவைவங்கள் அவ்வாறானவை. தென்கிழக்காசிஉஅ நாடுகளிலும் அவ்வாறே உள்ளன. அதாவது, வரிவடிவம் ஒரே மாதிரியாக இருந்தாலும், மொழிகள் வெவ்வேறாகின்றன.
- கரோஷ்டி வலது பக்கத்திலிருந்து, இடது பக்கமாக எழுதப்பட்டது / படுகிறது.
- பிரம்ம்பி இடது பக்கத்திலிருந்து, வலது பக்கமாக எழுதப்பட்டது / படுகிறது.
- சிந்துசமவெளி சித்திர உருவம் / சின்னம்/ முத்திரை – பார்வை தோற்றம் வேறு, நகல் வேறு.
- கல்வெட்டுகள் வேறு, அவற்றின் நகல் வேறு.
இத்தகைய தகவல்களுடன் தான் கல்வெட்டுகளைப் படிக்க முடியும். பாலி, பிராக்ருதம், குச்சி எழுத்து, கொம்பு எழுத்து என்றெல்லாம் சொல்லப் பட்டாலும் பிரம்மா / பிரம்மி என்ற பெயர் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதைத் தவிர,
- குப்த பிரம்மி
- நகரி
- தேவநகரி
- சாரதா
- குர்முகி போன்ற எழுத்துருவங்களும் இருக்கின்றன. அவைப் பொறிக்கப் பட்ட கல்வெட்டுகள், ஆவணங்கள் உள்ளன.
இவ்வகையில் பார்த்தால், தமிழ் மொழிக்கான, வரிவடிவத்திற்கு வேறெந்த சரித்திரம் சொல்ல முடியுமா என்று பார்க்க வேண்டும். மற்ற வரிவடிவங்கள் / எழுத்துருக்களில் வர்க்கங்கள் முதலியன இருக்கும் போது, தமிழில் படிக்கும் போது, அவற்றை விட்டுவிடுவார்களா அல்லது தமது கற்பனைக்கு ஏற்றப்படி படித்துக் கொள்வார்களா என்று கவனிக்க வேண்டும். இந்நிலையில், தமிழி, திரவிடி போன்ற பிரயோகங்கள், பிடிவாதமான பரிந்துரைகள் குழப்பத்தில் முடியும் என்றே தோன்றுகிறது. பிறகு, தெலுங்கி, கன்னடகி, மலையாளி என்றெல்லாம் சொல்லமுடியுமா என்று கவனிக்க வேண்டும்.
எழுத்துரு எழுதப் படும் ஊடகத்தைப் பொறுத்தது: கெட்டியான கற்களில் நெட்டெழுத்து தான் பொறிக்க முடியும். மிருதுவான கற்களில் வட்டெழுத்துகளை வெட்டி செதுக்கலாம். நெட்டெழுத்துகளில் கல்வெட்டுகள் இருந்தன என்றால், அவ்வெழுத்து முறை சாதாரண மக்கள் படிக்கும் எழுத்துருவாக இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், பானை ஓடுகளில்படித்த ஆசாமி நன்றாகவே வட்டெழுத்தில் கிறுக்கி இருக்கலாம், அதாவது எழுதியிருக்கலாம். பிறகு அவன் என்ன எழுதினான், என்ன பாடையில் எழுதினான் போன்ற பிரச்சினை எல்லாம் வந்திருக்காது. மேலும் ஆராய்ச்சி குறிப்புகள். அகழ்வாய்வு ஆதாரங்கள், முதலியன மற்றவர்களும் பார்த்து, படுத்து ஒப்புக் கொள்ளவேண்டும். அதனால், தமிழகத்தில் கிடைத்திருக்கின்றவற்றை வைத்துக் கொண்டு, தன்னிச்சையாகவும், யதேச்சதிகாரமும், உணர்ச்சிப் பூர்வமாக, பிரச்சாரம் போல நடத்தி, அழுத்தத்தை உண்டாக்கி, முடிவுகளை ஏற்றுக் கொள்ள வைக்க முடியாது. இல்லை, அதுதான் அக்காலத்து எழுத்துரு வடிவம் எதில் பொறித்தாலும், அப்படித்தான் ஒறிக்க வேண்டும் என்றால், அது போல இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அதனை குறியீடுகள் / எழுத்துரு உள்ள எல்லாமே ஒரே காலத்தைச் சேர்ந்ததாகிறது. இந்தியா முழுவதும் அது உள்ளது எனும்போது, மொழி ஒன்றுதான் என்று தெரிகிறது.
அமர்நாத் ராமகிருஷ்ணனின் பேச்சுகள் மாறி வருகின்றன: இதுவரை இவர் நடுநிலை அரசு அதிகாரி என்று நினைத்திருந்தேன். ஆனால், இவர் இப்பொழுது பல மேடைகளில் ஏறும் போது, பலவிதமாக பேசி வருவதைக் கவனிக்கிறேன். வீடியோக்களில் பேச்சுகளைக் கேட்கும் போது, முரண்பாடுகள் தெரிகின்றன. “மஹாபாரத ஆதாரங்களை தேடுகிறார்கள் ஆனால் கிடைக்காது, ஏனெனில் அது மித் / கட்டுக்தகை [myth] என்று சொன்னது, அவரது தன்மையை கேள்விக்குறியாக்குகிறது,” ஏனெனில், அது, எஸ்.ராவ், துவாரகையைக் கண்டு பிடித்ததை மறுப்பதாகத் தெரிகிறது. இன்னொரு பக்கம், சுபாஷிணி டிரெம்மல் என்ற அம்மணி, விதவிதமாக பேசி வருகிறார்[5]. அவர் ஏறும் மேடைகளே முரணாக்கத்தான் தெரிகிறது[6]. இருப்பினும், தமிழுக்கு உயிர்விடும் தியாகிகள் போன்ற பேச்சு, போட்டோகள் முதலியன செயற்கையாகத் தெரிகின்றன. சன் – டிவிக்கு கொடுத்த பேட்டியில்[7], “சுட்டப் பிறகுதான், எழுத்துரு எழுதப் பட்டது. எழுத்துரு இங்கிருந்து தான் மற்ற இடங்களுக்குப் பரவியது…இதனை தமிழி என்று சொல்ல வேண்டும்…..இது தொழிற்சாலை கிடையாது. கிடைத்தவை எல்லாம் முழுமையான பொருட்கள்…மக்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்ததால், இவ்விடம் விடப்பட்டது. இதற்கு திருவிளையாடற்புராணம் ஆதரமாக இருக்கிறது. ஒன்று 13 மற்றொன்று 15ம் நூற்றாண்டுகளை சேர்ந்தது. 10% வேலைதான் நடந்துள்ளது. இன்னும் நடத்த வேண்டும்.திராவிடம் என்பது இடம், அதிலிருந்து தான் மற்ற திராவிட மொழிகள் தோன்றின…,” என்கிறார்[8].
பெரியாரிய பார்வையில் கீழடி என்ற போர்வையில்[9], “சாதி – சமயமற்ற தமிழர் நாகரிகம் கீழடி” என்ற தலைப்பில் 03-10-2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில், சமூகநீதி வழக்கறிஞர்கள் மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரையில் கீழடி பற்றி சொல்லாமல், வழவழ என்று ஒஉ மணி நேரம் பேசியது பிரயோஜனம் இல்லை. தமிழ் என்று சொல்லக் கூடாது, திராவிட நாகரிகம் என்று வாதித்தது வேடிக்கை தான்[10]. ஆர். பாலகிருஷ்ணன் போன்றோரும், கடந்த ஆண்டுகளில் எல்லாமே தமிழ் என்ற ரீதியில் பேசி வருகிறார்[11]. சரித்திராசிரியர்கள் எவரும் இவரது பேச்சைக் கண்டு கொள்வதில்லை. சிந்துசமவெளியில் உள்ள ஊர்கள் எல்லாமே தமிழ் என்று பேசி வருகிறார். இப்பொழுதும், சுமார் இரண்டு மணி நேரம் பேசினாலும், புதியதாக எதையும் சொல்லவில்லை[12].
© வேதபிரகாஷ்
12-10-2019
[1] Pandey, Indian Paleography, Part-I, pp.40-41.
[2] R. G. Bhadarkar, Asutosh Mookarjee Silver Judlee Volume, No.III, pp.502-514.
[3] Chandrika Sinh Upasak, The History and aleography of Mauryan Brahmi Script, Nava Nalanda Mahavihara, Nalanda, 1960.
[4] JRAS (New Series), Vol.XIII, 1881, p.112.
[5] சுபாஷிணி டிரெம்மல் பேட்டி, கீழடியில் தொழிற்சாலைகள் இருந்ததா?ஆதாரத்துடன்..!, Oct 2, 2019 https://www.youtube.com/watch?v=1BLZ4yTPrCM
[6] கிருத்துவ, துலுக்க, கம்யூனிஸ, விடுதலை சிறுத்தைகள் என்று பலவிதமான மேடைகளில், பலவிதமான திரிபுவாதங்கள் செய்து வருகிறார்.
[7] சன் நியூஸ்.தொலைகாட்சி, கீழடி 4 ஆம் கட்ட அகழாய்வு | Nerukku Ner | Amarnath Ramakrishna, Oct 8, 2019.
[8] https://www.youtube.com/watch?v=KHhB4Zfl2kU
[9] பேரா. கருணானந்தன், கீழடி: அவர்கள் ஏன் கதறுகிறார்கள்? | | Prof. Karunanandan | KEEZHADI, Oct 4, 2019.
[10] https://www.youtube.com/watch?v=2ZsuuBHvufM
[11] சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே! Feb 9, 2019, சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற தலைப்பில் திருப்பூர் புத்தக கண்காட்சியில் சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப, ஆற்றிய உரை.