Posts Tagged ‘கம்பர்’

“ராமாயணம் – சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை”

நவம்பர் 10, 2013

“ராமாயணம் – சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை”

Chandamama, Telugu- Vali vadham

“ராமாயணம் – சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை” : “ராமாயணம் – சங்கம் முதல் முற்சோழர் காலம் வரை” என்ற தலைப்பில் கே.எஸ். சங்கரநாராயணன் என்பவர், 09-11-2013 அன்று “தமிழ் ஹெரிடேஜ் பவுண்டேஷன்” சார்பில், வால்மீகிக்கேத் தெரியாத “இராமாயணம்” தமிழகத்தில் இருந்தது போலவும், ராமன் தமிழகத்தில் நடந்து சென்றது போலவும் சில இலக்கிய, சிற்பங்களை வைத்துக் கொண்டு பேசினார். வெறும் பேச்சு, மேடை பேச்சு போன்று பேசும் போது, சரித்திர உண்மைகளை மறந்து / மறைத்து விடுகிற்ர்கள். ஏ.கே. ராமானுஜத்தின்[1] “300 ராமாயணங்கள்”, மற்றும் ஜைன-பௌத்த ராமாயணங்களையும் புகழ்ந்து விளக்கம் அளித்தார். காலக்கணக்கியல் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஏதோ ராமாயணம் தமிழகத்தில் தான் நடந்தது போன்று, அவர் பேசிய விதமும் ஆச்சரியமாக இருந்தது.  இதுவரை நாத்திகவாதிகள் தாம்[2] ஏ.கே. ராமானுஜத்தின் “ராமாயணங்களை” துணைகொண்டு வால்மீகியை தூஷித்துள்ளனர்[3].

Chandamama, Telugu- Going with Guha

வால்மீகியின் தாக்கம் உலகம் முழுவதும் இருந்தது[4]. மத்திய அமெரிக்காவிலிருந்து, தென்கிழக்காசிய நாடுகள் வரை இடைக்காலம் வரை இந்து கலாச்சாரம் பரவியிருந்ததால், அங்கெல்லாம், ராமாயண சிற்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள், அந்தந்த கலாச்சாரம், பாரம்பரியம் முதலிய உள்ளூர் காரணிகளுக்கேற்ப தகவமைத்துக் கொண்டு, மாற்றிக் கொண்டு இலக்கியம், சிற்பங்களை உருவாக்கியிருந்தால், அவை வால்மீகிக்குத் தெரியாதது என்றாகாது. வால்மீகி ராமாயணம் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது அல்லது அதைப் பற்றி சிற்பிகள் கவலைப்படவில்லை என்றுதான் கொள்ளமுடியும். கல்லில் எப்படி வடிக்க முடியுமோ அதுபோலத்தான் அமைத்திருப்பார்கள். இலக்கியத்திலும், எதுகை-மோனை-சொல்லாடல்கள் மற்றும் ஒப்பீடு, உதாரணம் முதலிய காரணங்களுக்காக உபயோகப்படுத்தப் பட்ட வர்ணனைகள், வார்த்தைகளை வைத்துக் கொண்டு, விளக்கம் கொடுக்க முடியாது.

Chandamama,, elugu-Rama crossing ocean

சங்க இலக்கியத்தில்  c.500-300 BCE ராமாயணக் குறிப்புகள்: சங்ககாலத்தில் ராமாயணம் பற்றிய குறிப்புகள் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அகநானூறு, “இராமன் ராவணனுடன் போர் செய்யச் செல்லும் வழியில் தனுஷ்கோடியில் ஒரு ஆல மரத்தடியில் வீரர்களுடன் அமர்ந்து ஆலோசனை செய்கிறான். மரத்தின் மேலிருந்த பறவைகள் ஆரவாரம் செய்கின்றன. ஆலோசனை தடை படுகிறது. ஆனால் ஆல மரம் கூச்சல்களை அடக்குகிறது”, இதனை உவமையாக்கி, “வெல்லுகின்ற வேற்படையைக் கொண்ட பாண்டியனுடைய பழமையான தனுஷ்கோடியில் முழங்கிக் கொண்டிருக்கின்ற பெரிய கடல் அலைகள் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் கடல் துறையில், வெல்லுகின்ற போர்த்திறமுள்ள இராமன் தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்துகொண்டிருந்தபோது பறவைகளின் ஓசையை அடக்கிய பல விழுதுகளை உடைய ஆலமரம்”, என்று புலவர் எடுத்தாண்டுள்ளார். அதே போல, புறநாற்றில், “விரைந்து செல்லும் தேர் உள்ள இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை வலிமை வாய்ந்த கைகளையுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றான். அந்நாளில் சீதையால் கழற்றி எறியப்பட்ட ஆபரணங்கள் நிலத்தில் வீழ்ந்து ஒளி வீசுகின்றன. இவற்றைச் சிவந்த முகங்களை உடைய குரங்குகள் கண்டன”, என்றுள்ளது. பிறகு கலித்தொகை முதலிய நூல்களில் இருப்பது ஆச்சையமில்லை.

Chandamama, Telugu- Sita in Lanka

100-700 CE: ஜைன-பௌத்த ராமாயணங்கள் காலத்தின் கட்டாயத்தினால், குறிப்பாக வெகுஜன மக்களின் ஏற்றுக் கொண்ட நிலையினால் அதனை தமகேற்றபடி மாற்றி எழுதிவைத்தனர். ஆனால், அவர்கள் அஹிம்சாவாதிகள், போரிட விரும்வில்லை என்றெல்லாம் ராமாயணம் சங்கரநாராயணன் பேசியபோது வியப்பாக இருந்தது. ஏனெனில் முதல் நூற்றாண்டுகளின் தமிழக சரித்திரம் இருண்ட காலமாக இருந்ததற்கே களப்பிரர்கள் என்கின்ற ஜைனர்கள் தாம் காரணம் என்று தமிழ் பண்டிதர்கள் கூறியுள்ளார்கள். தமிழ் கலாச்சாரம், நாகரிகம், இலக்கியங்கள் அனைத்தையும் அழித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாரதத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த அல்லது தாக்கம் கொண்டிருந்த இரு மதங்களும் குறைந்தது ஏன் என்று பார்த்தால், அவர்களது சித்தாந்தங்கள் எடுபடவில்லை என்று தெரிகிறது. அஹிம்சைவாதிகளாக இருந்திருந்தால், அப்படி ஏன் நடந்திருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

Chandamama, Telugu- Awaking Kumbhakarna

700-1000 CE: சம்பந்தரே அவர்களை கடுமையாகவே சாடியுள்ளார். இடைக்காலத்திலும், ஜைனர்கள்-சைவர்கள் போராட்டங்கள் கர்நாடகப் பகுதியில் அதிகமாகவே இருந்துள்ளன. சரித்திரம் அவருக்கு சரியாகத் தெரியவில்லை போலும். மேலும், தெற்காசிய மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் பரவியிருந்ததால், தமிழகத்திலும் தெரியப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

Chandamama, Telugu- Ahodhya Pattabhishekam

ராமாயண இலங்கை பூமத்திய ரேகையில் இருந்தது: எச்.டி.சங்காலியா போன்ற தலைசிறந்த அகழ்வாய்வு மற்றும் சரித்திர ஆசிரியர்களின் படி, ராமர் தென்னிந்தியாவிற்கு வரவேயில்லை, லங்கையே மத்திய பிரதேசத்தில் தான் இருந்தது என்று புத்தகங்களில் எழுதியுள்ளனர். அதாவது ராமாயண லங்கை எங்கிருந்தது என்பதில் சர்ச்சை இருந்தது. பூமத்திய ரேகையில், வெகுகாலத்திற்கு முன்பு மூழ்கிய தீவுகளில் லங்கை இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அதாவது, இப்பொழுதைய இலங்கை இராமாயண இலங்கை இல்லை என்றாகிறது. அந்நிலையில் இடைக்கால சிற்பங்களை வைத்துக் கொண்டு, ராமாயணத்தை தமிழகத்தில் சுருக்கி, இக்கால லங்கையுடன் இணைத்துப் பேசுவது சரியாகாது.  இவ்விசயங்களைப் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் உள்ளன.

Chandamama, Telugu- Anjaneya showing Rama in heart

இந்தியர்களுக்கு, ராமாயாணம் தெரிந்தவர்களுக்கு அவை ராமாயண பாத்திரங்களாகத் தென்படுவது: மத்திய அமெரிக்கா மற்றும் மெசபடோமியா பகுதிகளில் காணப்படும் சிற்பங்களை அந்நாட்டவரோ. மேனாட்டவரோ மற்றவரோ, இப்பொழுது பார்த்தால் ஒன்றும் புரியாது. ஐசிஸ் அல்லது தலிபான்கள் பார்த்தால் உடைத்து விடுவார்கள். ஆனால், இந்தியர்கள் பார்க்கு போது, வில்லேந்திய அந்த வீரர், இராமர் என்று சொல்வர். குரங்குபோல இருக்கும் அவர்களை வானரர்கள் என்றும் சொல்வர். அப்படியென்றால், ஒரு குரங்கு காலிலும், மற்றொரு குரங்கு வணங்கும் ரீதியிலும் ஏன் இருக்க வேண்டும்? இராமாயணம் உலகம் முழுவதும் பரவியிருந்திருக்க வேண்டும். ஏனெனில், அது மனித சரித்திரத்தில் நெடுங்காலத்திற்கு முன்பு நடந்தது. அதனால் தான் இந்தியர்கள், இராமாயணம் திரேதாயுகத்தில் நடந்தது என்றார்கள். இராமாயணத்தின் ஆதாரங்கள், இன்றும் பல நாட்டுகளில் மிஞ்சியிருக்கின்றன. அஸ்டெக், மாயா, இன்கா நாகரிகங்களில் காணப்படுகின்றன.  பொகோஷ்காய் கல்வெட்டில், “இந்திரசீல், மித்ரசீல், நசாத்தியா” என்று வேதக்கடவுளர்கள் இப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளதால், அவர்களுக்கு ராமாயாணம் தெரிந்திருக்கலாம். மேலும், கேகய தேசம் என்பது, ஆப்கானிஸ்தானைத் தாண்டியுள்ள பகுதியில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால், இதைப் பற்றி முறையான ஆராய்ச்சியை தொடர்ந்து செய்யலாம்.

©   வேதபிரகாஷ்

19-11-2013

Chandamama, Telugu- Agastya giving weapons


[4] Chamanlal, Hindu America, Bharatiya Vidhya Bhawan;

http://navalanthivu.blogspot.in/2006/02/valmiki-and-homer-critical-study-of.html

K. V. Ramakrishna Rao, Valmiki and Homer: A Critical Study of alleged Greek influence on Ramayana, Proceedings of the 2oth International Conference on Ramayana, Tirupati, 2005, Vol.II, pp.554-581.