Archive for the ‘யோகா’ Category

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – பூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் – கலந்துரையாடல்கள் (3)

திசெம்பர் 27, 2017

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கைபூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம்கலந்துரையாடல்கள் (3)

Rajiv Malhothra, Sheldon Pollock

பூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் என்றால் என்ன?: இம்மாநாட்டவர், இந்த முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால், இவையென்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தர்க்கம், வாத-விவாதங்களில், வேண்டிய முறைகளை “தெய்வத்தின் குரலில்”, ஶ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள் அழகாக விவரித்துள்ளார்[1]:

 1. ஓர் ஊரில் ஒரு வழக்கு வந்தால் அலஹாபாத்தில் இந்த மாதிரி வந்த கேஸில் இந்த மாதிரித் தீர்ப்பு செய்திருக்கிறார்கள், பம்பாயில் இப்படித் தீர்ப்பு பண்ணினார்கள் என்று தெரிந்துகொண்டு அவைகளை அநுசரித்துத் தீர்மானம் செய்கிறார்கள் [precedance of law].
 2. அதுபோல ஓர் இடத்தில் அர்த்த நிர்ணயம் செய்ததை வேறு சில இடங்களில் எடுத்து அமைத்துக் கொள்ளலாம் [established law].
 3. இப்படி ஆயிரம் விதமான விஷயங்களை எடுத்துக் கொண்டு எவ்வளவு யுக்தி உண்டோ அவ்வளவினாலும் ஆக்ஷேபணை செய்து அவ்வளவையும் பூர்வபக்ஷம் செய்து நிர்ணயம் செய்வது மீமாம்ஸை [collective defence in argument].
 4. முதலில் ஒரு வேதவாக்கியத்தை எடுத்துக் கொள்வது (விஷயயாக்யா) [taking one hypothesis, theory or law];
 5. இரண்டாவதாக அதன் அர்த்தம் இதுவா என்ற கேள்வி (ஸம்சயம்) [questioning its validity];
 6. மூன்றாவதாக எதிர்த்தரப்பிலே அர்த்தம் பண்ணுவது (பூர்வ பக்ஷம்) [getting view from others];
 7. நாலாவதாக, அந்தத் தரப்பை ஆக்ஷேபிப்பது (உத்தரபக்ஷம்) [refuting such views obtained from the opponents];
 8. ஐந்தாவதாக, கடைசியில் இதுதான் தாத்பரியம் என்று முடிவு பண்ணுவது (நிர்ணயம்) [finally, asserting that this is the valid argument].
 9. ஒவ்வொரு விஷய நிர்ணயம் ஒவ்வொர் அதிகரணமாக இருக்கிறது [However, each fact has its own merit, as specific case laws are applicable only to the specificapplicants or respondents in the cases involved].
 10. முடிவாக எல்லோருமே ஏற்றுக்கொண்டால் தான், அது உண்மையாக கருதப்படுகிறது.

Purvapaksha-uttarapaksha

இவற்றில் பூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் எடுத்துக் கொண்டு, ராஜிவ் மல்ஹோத்ரா போன்றோர்[2], “நடைமுறையில் நன்றாக பார்த்தது, வாத-விவாதம் புரிந்து அறிந்தது மற்றும் ஒத்த வல்லுனர்களுடன் உரையாடி முடிவுக்கு வந்தது போன்றவற்றின் தொகுப்புதான், இந்திய தர்க்கமுறைகளான, பூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் ஆகும். இவை விஞ்ஞான முறைகளுடன் ஒத்துள்ளன. இவை விஞ்ஞான முறைகளுடன் எந்த விதமான இருக்கத்தையும், மோதலையும் உருவாக்குவது அல்ல, ஏனெனில், மறுபடியும் நிகழ்த்தி காட்ட முடியாத மற்றும் அதனால் அவற்றை சரிபார்க்க முடியாத என்ற ரீதியில் 100%” ஆதாரங்களுடன் சரித்திரம் போன்ற வாதங்களுக்குட்படுத்த முடியாது.”

history-withhout-objectivity1

இக்கால சரித்திராசியர்கள் கூறிக்கொள்வது: சரித்திரம் எனப்படுவது, கடந்த காலத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளவை, எழுதப்படுபவை ஆகாது, ஆனால், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதாகும். ஆனால், 2017ல் ஒருவர் 1000, 2000 வருடங்களுக்கு முன்னர் நடந்தது பற்றி எழுதுகிறார் என்றால், அப்பொழுது, அவர் பார்த்து, படித்து, அறிந்து, புரிந்து கொண்டவற்றை வைத்து எழுதுவதாகும். அம்முயற்சியில், அவர் இருக்கின்ற எல்லா ஆவணங்களையும் –

 1. பார்த்திருக்கலாம், பார்க்காமல் இருந்திருக்கலாம்;
 2. படித்திருக்கலாம், படிக்காமல் இருந்திருக்கலாம்;
 3. எழுதபட்ட மொழி அறிந்திருக்கலாம், அறியாமல் இருந்திருக்கலாம்;
 4. அறிந்தும், புரிந்திருக்கலாம், புரியாமல் இருந்திருக்கலாம்;
 5. புரிந்தும் தனக்கு சாதகமானவற்றை தேர்ந்தெடுத்திருக்கலாம், தேர்ந்த்நெடுக்காமல் இருந்திருக்கலாம்;
 6. அதாவது, பாதகனானவற்றை விடுத்திருக்கலாம், விடாமலிருந்திருக்கலாம்.
 7. தனக்கு தெரியாதவற்றைப் பெற்று எழுதமுடியாது.
 8. ஆக பாரபட்சத் தன்மை, சார்புடமை, மறைப்புத் தன்மை முதலியவை இருக்கத்தான் செய்யும். அதனால், பத்து சரித்திராசிரியர்கள், ஒரே நிகழ்வைப் பற்றி பத்துவித சரித்திரங்கள் எழுதினால், பத்தும் ஏற்றுக் கொள்ளப்படும்.
 9. பெருபான்மையினர் ஏற்றுக்கொண்டது, “சரித்திரம்” ஆகிறது.
 10. அது 100% உண்மையான சரித்திரம் அல்ல, ஏனெனில், சரித்திராசிரியர்களிடம், ஒரு உறுதியான பாரபட்சத் தன்மையில்லாத நிலையை எதிர்பார்க்க முடியாது [Historians need not have objectivity]

Padma Ravichandran, Oli Kannam-Panel discussion-Harvard fund

1.50 முதல் 3.40 வரைஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாற்காலி / இருக்கை: மதிய உணவிற்குப் பிறகு, “ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாற்காலி / இருக்கை” பற்றி கலந்துரையாடல் நடந்தது. அதில் பத்மினி ரவிசந்திரன் மற்றும் ஒலி? கண்ணன் கலந்து கொண்டனர். ராஜிவ் மல்ஹோத்ரா நடுவராக இருந்தார். வைதேகி ஹெர்பர்ட் மற்றும் விஜய் ஜானகிராமனும் சந்தித்த போது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர். அவ்வாறே ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அங்கு, தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ முடிவெடுக்கப்பட்டது[3]. தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்பட்ட 600,000 $, நன்கொடைகள் மூலம் அமைக்கப்பட்டது[4]. இப்பொழுது, உரையாடலில், அம்முயற்சி எதிர்க்கப்பட்டது, ஏனெனில், அங்கிருந்து உருவாகும் ஆராய்ச்சிகள் இந்தியாவிற்கு எதிராக இருக்கும் மேலும், அங்கு அமைக்கப்படும் பாடதிட்டங்களிலும், தமிழகத்தவரின் கட்டுப்பாடு இருக்காது. ஆகையால், இந்தியர்களின் தணிக்கைக்கு உட்படும் வகையில் இருக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. பத்மினி ரவிசந்திரன் இருக்கையை எதிர்த்துப் பேசினாலும், உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.

Harvard - SAngam Professorship=2011

இருக்கை ஏற்படுத்தப்பட்டப் பிறகு நடந்த விவாதம்: கண்ணன் தனது நிலையை விட்டுக் கொடுக்காமல் தான் பேசினார். எவ்வாறு இந்தி திணிக்கப் படுகிறது, என்ன உண்ணலாம்-உண்ணக் கூடாது போன்றவற்றை வைத்து, தமிழுக்கு உலகளவில் மதிப்புப் பெற, இம்முயற்சி அவசியம் என்று எடுத்துக் காட்டினார். . ராஜிவ் மல்ஹோத்ரா எப்படி சீனா, கொரியா போன்ற நாடுகள் நிதியுதவி கொடுத்தாலும், பாடதிட்டங்களில், தமது கட்டுப்பாட்டை வைத்துள்ளது என்பதன சுட்டிக் காட்டினார். எப்படி பாகிஸ்தான் முன்னர் நிதி கொடுத்து, பிறகு விலகிக் கொண்டது என்பதையும் எடுத்துக் காட்டினார்.

Harvard - Sngam Professorship-Patil letter-2016எப்படியாகிலும், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாற்காலி / இருக்கை ஏற்படுத்தியாகி விட்டது. 2011லேயே தீர்மானமாகிவிட்டது[5]. அவர்களும் இணைதளத்தில் ஆவணங்களை வெளிப்படையாக வைத்துள்ளனர்[6]. குறைந்த பட்சம் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இது 2011லேயே தெரிந்திருக்க வேண்டும். இப்பொழுது 2017ல் அதனை எதிர்ப்பது முதலிய விசித்திரமாக இருக்கிறது. ஆகையால், உரையாடலும் முழுமைபெறாமல், முடிவுற்றது. சமஸ்கிருத இருக்கையைப் பொறுத்த வரையில், மைக்கேல் விட்செல் மூலம், ஹார்வார்டில் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொண்டோம், இனி, தமிழ் இருக்கை மூலம், நாம் என்னப் பெறப் போகிறோம் என்பதனை கவனித்துப் பார்க்கவேண்டும். மைக்கேல் விட்செல் போல, எனக்குத்தான், தமிழ்பற்றி எல்லாமே தெரியும், என்னிடம் தான், எல்லோரும் தமிழ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் போன்றவர் உருவாகாமல் இருந்தால் சரி!

© வேதபிரகாஷ்

25-12-2017.

[1] Read more: http://amrithavarshini.proboards.com/thread/1147/#ixzz52Q2VqM97

[2] The tradition of purva paksha and uttara paksha is how major Indian systems were established, i.e., through a combination of empirical observation, argumentation, and peer review which strongly resembles the scientific method. This process has never been in tension with the scientific method because it is not bound to absolutist claims of history that are non-reproducible and hence non-verifiable.

Malhotra, Rajiv. “Author’s Response: Cognitive Science, History-Centrism and the Future of Hindu Studies.” Journal of Hindu-Christian Studies 26.1 (2013): 6.

https://digitalcommons.butler.edu/cgi/viewcontent.cgi?referer=https://scholar.google.com/&httpsredir=1&article=1545&context=jhcs

[3] http://harvardtamilchair.org/

 

[4] Tamil Chair Inc. is a 501(c)(3) non-profit organization, Tax-ID 47-5021758, registered in the state of Maryland (USA) that is currently working on fund raising for Tamil chair – http://harvardtamilchair.org/about-us

[5] http://harvardtamilchair.org/download/IntroductionToTamilChair.pdf

[6] http://harvardtamilchair.org/download/sangamprofessorship.pdf

ஆயுர்வேதம், யோகா-இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளின் நிலை என்ன?

பிப்ரவரி 17, 2012

ஆயுர்வேதம், யோகா-இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளின் நிலை என்ன?

 

Ayush GOI

Ayush GOI

போதிய அடிப்படை வசதிகள் மற்றும் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடிய தகுந்த வாய்ந்த ஆசிரியர்கள் ஏன் இல்லை? ஆயுஸ் என்ற – ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவின் [Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy (AYUSH)[1]] மத்திய மருத்துவத்துறைக் குழு பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரிக்கு சோதனைக்காக வந்த போது போதிய அடிப்படை வசதிகள் மற்றும் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடிய தகுந்த வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை என்று தெரியவந்தது. ஆகையால் அக்கல்லூரியில் அப்படிப்பு ரத்து செய்யப்பட்டது[2]. உடனே அரசு உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்திருக்க வேண்டும். முந்தைய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சித்த மருத்துவ விரும்பிகள் ஆதரவாக வந்திருக்க வேண்டும். சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் தான், திராவிட மருத்துவம் தான் என்றெல்லாம் பேசியவர்கள் அந்த மருத்துவத்தைக் காக்க லட்சங்களை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிலை: இந்தியாவில், பொதுவாக தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிக்கலாம் என்றதும், குறிப்பாக அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு, அனுமதி பெற்று, இரண்டு-மூன்று அறைகளை வைத்துக் கொண்டு, மணிக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து ஆசிரியர்களை அழைத்து பாடம் சொல்லிக் கொடுப்பது, நடைமுறை பயிற்சிக்காக சில தனியார் அல்லது அரசு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பது, உண்மையாக மாணவர்களுக்கு செயல்முறை அனுபவம் கிடைக்க பரிசோதனை கூடம் வைக்காமல் வீடியோ போட்டு காண்பிப்பது என்று நடந்து வருகிறது. இதனால், லட்சங்களை கொடுத்து மருத்துவப் படிப்பு படிக்க வரும் மாணவர்கள் ஏமாற்றமடைகிறார்கள் அல்லது அவ்வாறே படித்து பட்டம் வாங்கிக் கொண்டு வந்து, தகுந்த முறையில் மருத்துவம் செய்யாமல் நோயாளிகளைத் துன்புறுத்தி வருகிறார்கள்.

 

சித்தா போலி டாக்டர்கள் இல்லை

சித்தா போலி டாக்டர்கள் இல்லை

உண்மையில் பிரச்சினை என்ன? இங்கு பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரி மிகவும் பழமையானது. ஆகவே, அது சரியான முறையில் இயக்கப்படவில்லை எனும்போது, மற்ற சந்தேகங்கள் எழுகின்றன. அதாவது தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்க, இவ்வாறு அரசு கல்லூரிகளை மூட சதி செய்கிறார்களா என்றும் தோன்றுகிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் தேவையான அடிப்படை வசதிகள், சோதனைக் கூடம், முதலியவை இருக்கும். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடிய தகுந்த வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை என்றால், ஒன்று அவை வேண்டுமென்றே இல்லாமல் இருக்க செய்திருக்க வேண்டும் அல்லது இருப்பவை மறைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளம் கிடைக்கிறது என்று கூட சென்றிருக்கலாம்.

 

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி போராட்டம்

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி போராட்டம்

மாணவர்கள் உண்மையைத் தெரிந்து கொண்டு போராடுகிறார்களா? நெல்லை பாளயங்கோட்டை அரசு சித்தா மருத்துவ மாணவர்களின் போராட்டம், இன்று (18-02-2012) 8வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று, ஸ்டான்லி ஜோன்ஸ், பானுமதி உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய இந்திய மருத்துவ மத்திய டாக்டர்கள் குழு, பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரியில் ஆய்வு மேற்கொள்கிறது[3]. 2012-13ம் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய இக்குழு வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, இக்குழு ஆய்வு செய்ய வருகை தந்தபோது, கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில், சென்னையில் இருந்து வரும் குழுவினர், போராட்டம் நடத்தி வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுக்கு வரும் குழுவை முற்றுகையிடப் போவதாக, போராட்ட மாணவர்கள் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி போராட்டம்.நக்கீரன்

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி போராட்டம்.நக்கீரன்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் தலையீடு: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் முடிவை திரும்பப் பெறுமாறு, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு, மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது[4].இரண்டு வாரத்துக்குள் உரிய பதிலளிக்காவிடில், இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ததோடு, அம்மருத்துவ படிப்புகளுக்கான பெயரிலும் மாற்றம் செய்ய எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு, இந்திய முறை மருத்துவக்கான மத்திய கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாடத்திட்டம், பெயரிலும் மாற்றம் செய்ய பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்தால், இம்மருத்துவ படிப்புகளை நடத்த பல்கலைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது. இதையடுத்து, பெயரில் செய்யவிருந்த மாற்றத்தை திரும்பப் பெறுவதாக எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம், மத்திய கவுன்சிலுக்கு தெரிவித்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றத்தை திரும்பப் பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என கேட்டு, மருத்துவ பல்கலைக்கு, மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், இரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

கல்லூரியின் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு[5]: சென்னையில், பிப். 14:, 2012 அன்று பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வேதாரண்யத்தை அடுத்த பஞ்ச நதிக்குளத்தைச் சேர்ந்த டி. அருட்செல்வம் என்கிற அந்த மாணவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “சித்த மருத்துவத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பான எம்.டி. (சித்தா) படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில் நான் வெற்றி பெற்றேன். பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டது. எனினும், இதுவரை வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் புதிய வகுப்புகளுக்கு அனுமதி மறுத்து மத்திய சுகாதாரத் துறை கடந்த ஜனவரி 20-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. கல்லூரியில் உள்ள குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்து கடந்த அக்டோபர் 14-ம் தேதி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனை ஏற்று நடப்பாண்டில் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்க அனுமதி தர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கடிதத்தை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகளை உடனடியாகத் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நடப்பாண்டில் வகுப்புகளைத் தொடங்க அனுமதி மறுத்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்”, என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் உண்மை அறிந்து செயல்பட வேண்டும்: இவையெல்லாம் அரசு முறைப்படி நடக்கும் சாதாரணமான விஷயங்கள். ஆனால், மாணவர்களும், அரசியல்வாதிகள் போன்று போராட்டம் நடத்துவது என்று இறங்கியுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏற்கெனெவே, முந்தைய ஆட்சியில், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவத் துறைப் படிப்புகளுக்கு தகுந்த இடம் கொடுக்கப் படவில்லை. போலி டாக்டர்கள் கைது என்ற போர்வையில், உண்மையான ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி டாக்டர்கள் கைது செய்யப் பட்டார்கள்., அவமானப் படுத்தப் பட்டார்கள். அப்பொழுதும், சித்த மருத்துவ விரும்பிகள், தமிழர்கள், இனமான போராளிகள், திராவிடர்கள் என்று யாரும் வரவில்லை. இப்பொழுதும், மூச்சுக் கூட விடவில்லை. ஆயுஸ் இணைதளத்தில் ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட அனைத்துலக பத்திரிக்கை உள்ளது[6]. அதில் தரம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன[7]. அவற்றைப் படித்து, மாணவர்கள் தங்களது ஆய்வுத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முறையில், ஆயுர்வேதம்-சித்தா முதலிய மருந்துகளும் தகுந்த முறையில் செயல்படும், நிவாரணம் கொடுக்கும் என்று மெய்ப்பிக்க வேண்டும்[8]. அத்தகைய முறைகளில் மாணவர்கள் செயல்பட்டால், தானாகவே தரம் உயரும். யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

 

வேதபிரகாஷ்

17-02-2012


[2] Following the inspection by the Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy (AYUSH), it was found that the college in Palayamkottai lacked basic facilities and qualified faculty members. As a result, the permission to run the course in the college was cancelled.

http://www.thehindu.com/news/cities/chennai/article2812017.ece

[5] தினமணி, கல்லூரியின் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு, First Published : 15 Feb 2012 03:18:13 AM IST; Last Updated : 15 Feb 2012 10:31:31 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Chennai&artid=553160&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=