Archive for the ‘மாலுமி’ Category

சோழற்கால தாமிர பட்டயங்கள், உலோகச் சிலைகள் மற்ற பொருட்கள் கிடைப்பது!

ஓகஸ்ட் 12, 2010

சோழற்கால தாமிர பட்டயங்கள், உலோகச் சிலைகள் மற்ற பொருட்கள் கிடைப்பது!

கடற்கரை மாவட்டங்களில் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி) சோழர்கால செப்பேடுகள், பஞ்சலோக / வெண்கலச்சிலைகள், பூஜைக்குறிய பாத்திரங்கள் முதலியவை கிடைத்து வருவது, சோழர்களின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. கிழக்கு-மேற்கு கடல்களில் ஆதிக்கம் செல்லுத்தி வந்த சோழர்கள் திடீரென்று மறைந்து விட்டதைப் பற்றி, சரித்திர ஆசிரியர்கள் விளக்கம் கொடுப்பதில்லை. அவர்களின் கடற்படைகள் என்னவாயிற்று, கப்பல்கள் எங்குச் சென்று மறைந்தன, அந்த கப்பல் தொழிற்நுட்பம் அறிந்த வல்லுனர்கள், கட்டுபவர்கள், மரக்கல நாயகர்கள், மீகாமன்கள், மாலுமிகள் முதலியோர்கள் எங்கு மறைந்து விட்டனர்? அதைப் பற்றி ஆராய்ச்சியும் செய்வது இல்லை.

Chola-bronzes-found-2010

Chola-bronzes-found-2010

இப்பொழுதுகூட தாமிரப்பட்டயங்கள் கிடைத்தன என்கிறார்களேத் தவிர, அதில் உள்ள விவரங்களைக் கொடுப்பதில்லை. அதைப்பற்றி உடனடியாக அறிக்கை மற்றும் படங்களை வெளியிடுவதும் இல்லை. ஏதோ பத்திரிக்கைகளில் ஒரு-சில புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். அத்துறை தலைவர், ஏதோ தான்தான் அவற்றைக் கண்டுபிடித்தது மாதிரி பேட்டிகொடுத்து மறைந்துவிடுகிறார். சிலைகளைவிட, மற்றவர்கள் சூழ்ந்து கொண்டு, தங்களது முகங்கள் காட்டும் மாதிரி “போஸ்” கொடுக்கும் புகைப்படங்களுக்கும் குறைவில்லை.

Chola-period-artifacts-unearthed

Chola-period-artifacts-unearthed

இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தாலும், சோழர்களது கடற்வழி மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கும் வண்ணம் – அவர்களது கப்பற்தொழிற்நுட்பம், கப்பல் கட்டும் திறமை, கப்பல்கள் கட்டப்பட்ட இடங்கள், உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள், பாய்மரங்கள், உபகரணங்கள், கருவிகள், முதலியவை எங்கு சென்று மறைந்தன?

Copper Plate Grant of Rajendra Chola I

Copper Plate Grant of Rajendra Chola I

ஏன் சோழர்களின் கட்டுமானங்களில், கோவில்களில், சிற்பங்களில் கப்பற்துறை பற்றிய விவரங்கள் காணப்படுவதில்லை? ஏதோ ஒரு ஐரோப்பியனது உருவம், கோபுரத்தில் செதுக்கத் தெரிந்தவனுக்கு, தமது கப்பற்படை பற்றிய மேன்மையை செதுக்க மறந்திருப்பானா? ஒருவேளை, அத்தகைய சிற்பங்கள் அழிக்கப்பட்டிருக்குமா? “லேடன் தாமிர பட்டயங்கள்” மாதிரி, ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுவிட்டிருப்பார்களா?


Interesting find:Bronze icons which were excavated from a construction site in Velankanni on Tuesday (reported in “The Hindu” dated Wednesday, Aug 04, 2010).

School Education MinisterThangam Thennarasu showing the recently discovered Chola period artefacts found near Thiruindalur to Chief Minister M.Karunanidhi in Chennai on Thursday. Deputy Chief Minister M.K.Stalin, Union Minister A.Raja, Agriculture Minister Veerapandi S.Arumugam and Information Minister Parithi Ellamvazhuthi are in the picture.
Photo:DIPR School Education MinisterThangam Thennarasu showing the recently discovered Chola period artefacts found near Thiruindalur to Chief Minister M.Karunanidhi in Chennai on Thursday. Deputy Chief Minister M.K.Stalin, Union Minister A.Raja, Agriculture Minister Veerapandi S.Arumugam and Information Minister Parithi Ellamvazhuthi are in the picture.

மலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது?

ஜனவரி 5, 2010

மலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது?

மலாக்கா / மலேசியா இஸ்லாமிய மயமாக்கப்பட்ட கதைகள் இவ்வாறு உள்ளன. பரமேஸ்வரன் என்ற இந்து ராஜா 1409ல் “பசை” என்ற இளவரசியைத் திருமணம் செய்து கொண்டானாம். இஸ்கந்தர் ஷா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டானாம். தென்னிந்திய ராவுத்தர்கள், மரக்காயர்கள்தாம் திருமணத்தை அறிமுகப்படுத்தினார்களாம்.

மலாக்காவின் சுல்தான் ஆட்சிசெய்த காலம்
பரமேஸ்வரன் எனப்படும் இஸ்கந்தர் ஷா 1400 – 1414
மேகத் இஸ்கந்தர் ஷா 1414 – 1424
முஹம்மத் ஷா 1424 – 1444
அபு ஸைய்யத் 1444 – 1446
முஸாஃபிர் ஷா 1446 – 1459
மன்சூர் ஷா 1459 – 1477
அலவுத்தீன் ரியாத் ஷா 1477 – 1488
மஹுமுத் ஷா 1488 – 1528

இருப்பினும் உண்மையாகவே பரமேஸ்வரன் மதம் மாறினானா இல்லையா என்று தெளிவான ஆதாரங்கள் இல்லையாம். மேற்குறிப்பிடப்பட்டது சப்ரி ஸைன் என்பவரது கருதுகோளாகும். சோழர் காலத்திலேயே தமிழ் / இந்திய வணிகர்கள் சீன ஆவணங்களில் முகமதிய பெயர்களில் குறிப்பிடப்பட்டார்கள். இது இன்றும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், தங்கள் பெயர்களை முஸ்லிம் பெயர்கள் போல மாற்றிக் கூறுவதற்கு ஒப்பாகும். டி.வி.எஸ் கம்பெனிக்கு வேலைக் கேட்டுச் செல்பவர்கள் நாமம் போட்டுக் கொண்டு செல்வது மாதிரிதான். இந்த கதை / பழக்கம்.

 

An artist’s impression of Parameswara, who ruled Singapore in the 1390s.

பரமேஸ்வரன் இறந்ததும் அவனது மகன் மலாக்காவின் இரண்டாவது அரசனாக சீனர்களால் எற்றுக் கொள்ளப்பட்டானாம், அவனுக்கு ராஜா ஸ்ரீ ராம விக்ரம, டெமாசிக் மற்றும் மெலகவின் என்று அங்கீகரிக்கப்பட்டானாம். அவன் இறந்ததும் மலைமேல் “தஞ்சுங் துயான்” (also known as Cape Rachado), near Port Dickson என்ற இடத்தில் புதைக்கப்பட்டானாம். ஒரு அடையாள சமாதி கானிங் கோட்டை அருகில் சிங்கப்பூரிலும் (Fort Canning in Singapore) உள்ளாதாம்! “துஞ்சும் தூயான்” என்று தமிழில் பொருள் கொண்டால் தூங்கினாலும், தூங்கவில்லை என்று பொருள் வருகிறது அதாவது இறந்த பிறகும் வாழ்கிறான் என்றாகிறது!

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம். 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே.

Parameswara (aka Iskandar Shah)
1st Ruler of Malacca

An artist’s impression of Parameswara, who ruled Singapore in the 1390s.
Reign Malacca Sultanate: c. 1400-1414
Titles Prince of Srivijaya, Raja of Temasek
Born 1344
Birthplace Palembang, Sumatra
Died 1414 (aged 69 or 70?)
Place of death Malacca, Sultanate of Malacca
Buried Disputed
Predecessor Paduka Seri Rana Wira Kerma, Raja of Temasek
Successor Megat Iskandar Shah (Sultan of Malacca)
Offspring Megat Iskandar Shah (Sultan of Malacca)
Royal House Srivijaya
Father Paduka Seri Rana Wira Kerma, Raja of Temasek

நன்றி:
http://en.wikipedia.org/wiki/Parameswara_(sultan)