கீழடி – முடிவுகள் பெறும் முன்னரே, பிடிவாதமான கருத்துகள் அறிவித்து அரசியலாக்கப்பட்ட அகழ்வாய்வு சர்ச்சைகள், பேரினவாதங்கள், மற்றும் முரண்பாடுகள் [3]
நக்கீரன், வினவு போன்ற தளங்களின் இனவெறி, மொழி பித்து பிடித்த செய்திகள்[1]: நக்கீரன் கதை, இவ்வாறுள்ளது, “கீழடி அகழாய்வில் சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க் கும் மேற்பட்ட விளையாட்டுப் தொல்பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், மத வழிபாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வேத நாகரிகத்துக்கு மாறான, தனித்துவமிக்க இயற்கை சார்ந்த சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே கீழடியும் உண்மையாக்குகிறது. இதன்மூலம், எந்தவொரு மத அடையாளத்தையும் தமிழர்கள் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் எழுதப்படுவதற்கு முன்பே அந்த வாழ்க்கை முறையைத் தமிழர்கள் கடைப்பிடித்திருப்பதும் தெரிய வருகிறது”. இத்தகைய ஆரிய-திராவிட போக்கில், நாத்திகத்தில் முடிப்பதில் தான் இவர்களது பண்டிதத் தனம் வெளிப்படுகிறது[2]. பாலகிருஷ்ணன் போன்றோர், இதற்கு பதில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் எல்லோருமே, “diplomatic”கா அமைதியாக இருந்து விடுவர்.
மதுரையில் சமணம்[3]: இந்த தலைப்பில், “கீழடி” அறிக்கையில், குறிப்பிட்டுள்ளாவது, “கர்நாடகா மாநிலத்திலுள்ள சரவணபெலகோலா எனும் இடத்துக்கு பத்ரபாகு தலைமையில் இடம் பெயர்ந்த சமணர்களால் தென்னிந்தியாவில் சமணம் பரவியது என்று கூறப்படுகிறது. மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சமணர்கள் தமது தனித்த வாழ்வை மேற்கொள்ளப் பொருத்தமான இடங்களாக விளங்கின. மதுரையைச் சுற்றி அமைந்திருந்த இயற்கையான பாறைக் குகைகளை தேர்வு செய்து குடியேறினர். இவ்வாறு பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட 14 குகைகளை மதுரையைச் சுற்றி காண முடியும். இந்த மலைக்குகை பகுதிகளில் கி.மு.500 முதல் கி.பி. 300 வரையிலான எழுத்தமைதியைில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவைகளுள் பழமையானது ஐந்து தமிழிக் கல்வெட்டுகளைக் கொண்டு திகழும் மாங்குளம் ஆகும்.” ஆக சமணம் இருந்தது, அவர்களது கல்வெட்டுகள் இருந்தது என்றெல்லாம் சேர்க்கத் தெரிந்த அறிஞர்களுக்கு, கீழடி மக்களின் மதம் தெரியவில்லை என்பது, மடத்தனமானது. ஏனெனில்,தேவையில்லாத சர்ச்சையை உருவக்கிய போக்கு தான் வெளிப்பட்டுள்ளது.
அரைகுறை விவரங்களைத் தொகுத்து அறிக்கை என்று வெளியிட்டு மாட்டிக் கொண்டது: வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்ற தலைப்பில், “இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளை முறையாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் கூடுதல் தெளிவு பெற முடியும்,” என்றும்[4], கட்டட தொழிற்நுட்பம் என்றதன் கீழ், “தற்போது அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செங்கல் கட்டுமானங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இக்கட்டுமானத்தின் பயன்பாடு குறித்து முழுமையாகத் தெரியவரும்,” என்றெல்லாம் குறிப்பிடும் போது[5], வழிபாடு விசயத்தில், பகுத்தறிவு வெளிப்பட்டது போலும். அமர்நாத் மட்டுமல்ல, மற்ற ராஜன் போன்றோருக்கும், இது இழுக்காகிறது. அறிக்கை அவர்கள் தொகுத்து, சரிபார்த்து வெளியிடப் பட்டது என்றிருப்பதால், அவர்கள் தான், இதற்கு பொறுப்பாகிறார்கள். அதனால், இப்பொழுது, யாராவது கொண்டு வந்து போட்டார்களா என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கீறல்களில் இருந்து தமிழ் பிராமி எப்படி, கீறல்கள் எப்படி மெல்ல, மெல்ல எழுத்தாக மாறியது எப்படி?[6]: அமர்நாத் ராமகிருஷ்ணன், பிபிசி.தமிழ் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் சொல்லியிருப்பதாவது[7], “சங்க காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது ஒரு சார்புநிலை கால மதிப்பீடுதான் (relative dating). தவிர, பெருங்கற்காலமும் சங்க காலமும் வேறு வேறா என்ற பிரச்சனையும் இன்னும் தீரவில்லை. ஏனென்றால் காலத்தை இன்னும் நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியவில்லை[8].
சிந்துச் சமவெளி நாகரீகத்தில் அதைச் செய்திருக்கிறார்கள். மெகார்கர் பகுதி, புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது ஹரப்பாவுக்கு முந்தைய நகரமாகக் கருதப்படுகிறது. அதன் காலகட்டம் கி.மு. 7000. இதற்குப் பிறகு முதிர்ந்த ஹரப்பா நாகரீகம். அதற்குப் பிறகு சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என இந்தக் காலவரிசை தொடர்கிறது. ஆனால், அதுபோல ஆய்வுகள் தமிழகத்தில் நடக்கவில்லை. இங்கேயும் பழங்கற்காலம், புதிய கற்காலம், இடை கற்காலம் ஆகியவை உண்டு. இதற்கிடையில்தான் பெருங்கற்காலம் வருகிறது. இது எந்தெந்த வருடங்களை ஒட்டியது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. |
7000 BCEக்கு சென்ற பிறகு தான், சிந்துச் சமவெளி நாகரீகத்துடன் ஒப்பிட்டு பேச முடியும். ஆனால், 580 BCE வந்ததற்கே, இவ்வளவு ஆர்பாட்டம் செய்கிறார்களே? “இது [பெருங்கற்காலம்] எந்தெந்த வருடங்களை ஒட்டியது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.” – இருப்பினும், சிந்துச் சமவெளி நாகரீகத்துடன் ஒப்பிடுவதுடன், அசோகன் பிரம்மியை விட முந்தியாது போன்ற வாதங்கள் வைக்கப் படுகின்றன. இதில், ஆரிய-திராவிட வாத-விவாதங்கள் வேறு வருகின்றன. |
மேலும் தமிழ்நாட்டில் தமிழ் பிராமி குறித்த முழுமையான ஆய்வுகள் தேவை. அப்படி நடந்தால்தான், கீறல்களில் இருந்து தமிழ் பிராமி எப்படி உருவானது என்பதை வரையறுத்துச் சொல்ல முடியும். கீறல்கள் எப்படி மெல்ல, மெல்ல எழுத்தாக மாறியது என்பதை ஆராய வேண்டும்.”
கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. 02-10-2019 அன்று தஞ்சவூரில் பேசியது[9]: தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று ‘கீழடி – தமிழர் வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பில் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில்[10],
“கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும். அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். |
1. “கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை,” என்றால், தீர்மானிக்கப் பட்டது போல, ஏன், இத்தனை பேர் உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதும், அறிக்கை விடுவதும் நடந்து வருகின்றன என்று தெரியவில்லை. 2. “இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும்,” ஆனால், கோடிக்கணக்கான கால அளவு பேசப் படுகிறது. “குமரிக் கண்டம்” எல்லாம் இழுக்கப் படுகிறது! |
கீழடி இன்னும் பல பொக்கிஷங்களை கொண்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன. அவற்றையும் அகழாய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விரிந்த அகழாய்வு இதுவரை நடைபெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்[11]. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் போன்ற மூன்று இடங்களில் தான் ஓரளவுக்குப் பெரிய அளவில் அகழாய்வுகள் செய்யப்பட்டன,” என்றார்.
© வேதபிரகாஷ்
12-10-2019
[1] நக்கீரன், தமிழனுக்கு மதம் இருக்கிறதா…அரசியல் சூழ்ச்சி…கீழடி தரும் அதிர்ச்சி தகவல்!, Published on 26/09/2019 (11:52) | Edited on 26/09/2019 (12:04), ச.ப.மதிவாணன்.
[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/tamil-cult
ure-history-rewind-by-keeladi-research-and-get-shocking[3] அறிக்கை, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை, கீழடி – வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம், 2019, பக்கம்.8
[4] மேற்படி, பக்கம்.4
[5] மேற்படி, பக்கம்.6
[6] பிபிசி.தமிழ், கீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி? முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன?, 1 அக்டோபர் 2019
[7] https://www.bbc.com/tamil/india-49888909
[8] இருப்பினும், டிவிசெனல்களில் வாதிடும் கீழடி-நிபுணர்கள், எல்லாம் தீர்மானித்து விட்டது போல பேசுகிறார்கள்.
[9] தினமணி, கீழடி ஸ்பெஷல்: தமிழர் வாழ்வும் வரலாறும்!, By DIN | Published on : 05th October 2019 01:04 PM
[10] https://www.dinamani.com/keezhadi-special/2019/oct/05/kezhadi-special-tamizhar-life-and-history-3248499.html
[11] அதாவது, “கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழ தினமணி, கீழடி ஸ்பெஷல்: தமிழர் வாழ்வும் வரலாறும்!, By DIN | Published on : 05th October 2019 01:04 PM ங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும்,” என்பதை விளக்கியுள்ளார்.