Archive for the ‘பனாரஸ்’ Category

கொரிய அரசியைப் பற்றிய கட்டுக் கதையும், “தமிழ்” பெயரில் நடக்கும் உணர்ச்சி தூண்டுதலும், சரித்திரத் தன்மை அற்ற பிரச்சாரமும் (1)

மே 21, 2018

கொரிய அரசியைப் பற்றிய கட்டுக் கதையும், “தமிழ்” பெயரில் நடக்கும் உணர்ச்சி தூண்டுதலும், சரித்திரத் தன்மை அற்ற பிரச்சாரமும் (1)

Korea Puzhou Queen mother Huagyu Xu native place.Tamil Heritage foundation

மே 19-20 தேதிகளில் கம்போடியாவில்உலகத் தமிழ்மாநாடுஒன்று நடந்தது: மலேசிய நண்பர் ஒருவர், கம்போடியாவில் “உலகத் தமிழ்மாநாடு” ஒன்று மே 19-20 தேதிகளில் நடந்ததாகவும், அதில், கண்ணன் என்பவர் பேசிய வீடியோவை அனுப்பி, என்னுடைய கருத்தைக் கேட்டார். அதை கவனமாகக் கேட்டேன். புதியதாக ஒன்றும் விசயம் இல்லை, 2015லிருந்து இணைதளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கட்டுக்கதையை, உணர்ச்சிப் பூர்வமாக, “தமிழ்-தமிழ்” என்று அவர் பேசியது வேடிக்கையாக இருந்தது. அதாவது, தமிழகத்திலிருந்து தான், ஒரு இளவரசி கப்பல்மூலம், கொரியாவுக்குச் சென்று, அந்நாட்டு அரசரை திருமணம் செய்து கொண்டார், இப்பொழுது, அவரை தெய்வமாக கொரிய மக்கள் வணங்கி வருகின்றனர், என்று பேசினார். வழக்கம் போல, உணர்ச்சிப் பூர்வமான, உசுப்பி விடும் எல்லாம் தமிழ், எல்லாவற்றயும் தமிழன் தான் செய்தான், கண்டு பிடித்தான், போன்ற போக்கில் அவர் பேச்சு இருந்தது. 2011ல் இவரே வாசித்ததாக, இன்னொரு கரட்டுரையில், கிம் பியாங்மோவைக் [Kim Byeongmo] குறிப்பிட்டு, அதே கதையை அயோத்தியாவிலிருந்து ஆரம்பித்துள்ளார்[1]. இதிலும், ஒப்பீடுகளை பிடிவாதமாக செய்துள்ளது தெரிகிறது[2]. சரித்திர ஆதாரங்கள் பற்றி கவலையே இல்லாமல் பேசுவது, அவர்களைப் போன்றவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

Korea Queen - Tamil history suppressed

செம்பவள ராணி பற்றிய யு-டியூப் பிரச்சாரம் முதலியன: போதாகுறைக்கு அரைத்த மாவையே, அரைக்கும் போக்கில், ஐந்தாறு யூ-டியூப் முதலியனவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.  இவற்றில் கிழே குறிப்பிட்ட இரண்டுமே கண்ணன் மற்றும் ஒரிசா பாலு – போன்றோரைக் குறிப்பிட்டு உலா வௌகிறது. அதாவது, அவர்களைப் பாராட்டும் விதமாக, பிரச்சாரரீதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது[3]. இரண்டுமே ஒரே விசயத்தை, ஒரு ஆண் மற்றும் பெண் குரல்களில் உள்ளன[4]. கோரல்ஶ்ரீ பெயரில் உள்ளது  “மின்-தமிழ்” என்ற இணைதளத்தில் உள்ளவற்றை “ஆமை வளர்த்த பாதை, செம்பவளம், பாம்படம்,……”எல்லாம் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது[5]. இதெல்லாம், இவர்களே தயாரித்த [stage-managed], தனி மனித புகழ்ச்சி, விளம்பரம் போன்ற நிலைகளில் உருவாக்கப்பட்டது தெரிகிறது. ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசிரியர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஏனெனில், அவர்களது ஆய்வுக்கட்டுரைகள் மற்றவர் முன்பாக சமர்ப்பிக்கும் போது, கேள்விகள் கேட்கப் படும், முறையாக பதில் சொன்னால் தான், ஏற்றுக் கொள்ளப்படு, பதிபிக்கப் படும். ஆனால், இங்கு அதெல்லாம் இல்லை.

Korea Queen - Indias plan

18 ஆன்நூற்றாண்டில்தான் வெளிஉலகுக்குக் கொரியா பற்றித் தெரியவந்தது: “மின்-தமிழ்” என்ற இணைதள குழுவில், “அன்டார்ட்டிகா தமிழன்” என்ற பெயரில் யாரோ ஆதாரங்கள் எதையும் கொடுக்காமல், கீழ்கண்டவாறு, எழுதியிருந்தார்[6], “கொரியா என்ற நாடு வெளியுலக்குத் தெரியாத நாடாகவே இருந்தது.  கொரியாவின் வரலாறு சீன ஜப்பான் மொழிகளில் இருந்து கி.பி 13 ஆம் நூற்றாண்டில் கொரிய மொழியில் எழுதப்பட்டது. மேலைநாட்டினர் மார்க்கோபோலோ ஆவணங்கள் மூலம் கொரியாவைப்பற்றி அறிந்தாலும் 18 ஆன்நூற்றாண்டில்தான் வெளிஉலகுக்குக் கொரியா பற்றித் தெரியவந்தது.  தமிழகத்தில் கொரியாவில் இருந்து கார் உற்பத்தித் தொழிற்சாலை வரும்வரையில் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது.  கொரியர்கள் தங்களின் வேரைத் தேடும் முயற்சியில் ஆயுத்தா என்ற நாடு அயோத்தியா என்று கருதி அரசி அயோத்தியா இளவரசி என்று நம்பிவிட்டனர்.  இப்போது கிரேக்க நாட்டு நிலவரைபடங்கள் கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதைக் கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம்….[என்று சில “மேப்புகளை”ப் போட்டு[7]], “  கதையை விவரித்தார்[8]. பூகோள வரைப்படங்களைப் போட்டு, அதில் சில பெயர்களை வைத்து, ஒட்டு மொத்தமாக, ஒரு சரித்திர நிகழ்வினை தீர்மானிக்கும் போக்குதான் அதில் காணப்படுகிறது.

 Akanda dravidastan

கி.மு 1300-ல் அகண்ட திராவிடம் அகண்ட தமிழகம்:  “அன்டார்ட்டிகா தமிழன்” தொடர்கிறார், “கி.மு 1300-ல் அகண்ட திராவிடம் அகண்ட தமிழகம்”, கி.மு 50-ல்  ஆய் கொங்கு நாடுகள் இவை இரண்டும் தமிழக வரலாற்றில் எங்குமே அதிகம் பேசப்படவில்லை. ஆய் நாடு என்பது எது என்பதும் கொங்கு  வேளிர்கள் மூவேந்த்ர்களுடன் நான்காவதாக இருந்த வரலாற  தமிழர்களால் அதிகம் பேசப்படுவதில்லைகி.மு 1 ஆம் ஆண்டில் கொரிய நிலப்பகுதியில் கயா என்ற நாடு உருவாகிறது.  அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஆய் கொங்குநாடு இருந்ததற்கான ஆதாரம் கீழே…….[மேப்புகள்]………..கொரியா பல ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்டிருந்தாலும் அதன் வரலாற்றுத் தகவல்கள் சீனா ஜப்பான் ஆதிக்கத்தின் அழுத்தத்தில் இருந்ததால் முறையாக எழுதப்படவில்லை.  13 ஆம் நூற்றாண்டில் கொரியர்கள் தங்கள் வரலாற்றைத் தங்கள் மொழியில் மூன்றுநாடுகள் வரலாறு எனத் தொகுக்கிறார்கள்.  14 ஆம் நூற்றாண்டில் மார்க்கொப்பொலோ கொரியா பற்றிய தகவலை மேலைநாட்டுக்கு அறிவிக்கிறார்…………………”  ஆய் என்ற பெயர் அந்த பூகோள வரைப்படத்தில், உபயோகப்படுத்தியதால், அக்காலத்தில், தமிழ் பெண் தான், கொரியாவிற்கு, கற்களுடன், கப்பலில் ஏறி அங்கு சென்றதாக முடிவுக்கு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

Korea Queen - tamilachi ruled

ஆய் இளவரசி கடல்பயணம் செய்து கொரியாவில் பூசன் என்ற பகுதியில் கரையிறங்குகிறார்: “அன்டார்ட்டிகா தமிழன்” மேலும் தொடர்கிறார், “கி.பி 48 ல் ஆய் இளவரசி கடல்பயணம் செய்து கொரியாவில் பூசன் என்ற பகுதியில் கரையிறங்குகிறார்.  கயா அரசனை மணந்து கொரிய அரசியாக அதியணை ஏறுகிறார்………………….கொரிய அரசி ஆட்சிக்காலத்தில் அவருடன் பயணம் செய்த தம்பி பக்கத்துநாட்டில் ஆட்சிபுரிகிறார்.  கொரிய அரசிக்குப்பிறந்த பத்து ஆண்குழந்தைகளில் மூவர் மூன்றுநாடுகளிலும் ஆட்சிபுரிய அரசியில் மூத்த அண்ணன் புத்தபிக்கு மீதியுள்ள 7 குழந்தைகளைப் புத்தமதத்தில் ஈடுபடுத்துகிறார்.  தமிழ்நாட்டில் இருந்து ஆசீவகம் புத்தம் கொரிய அரசியால் அந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவரின் குடிமக்கள் சிறப்புடன் வாழ வழிவகுத்தார்……………………….கி.பி 200 ல் ஆய் மற்றும் கொங்கு வேளிர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிந்தனர் கயா அரசும் சிறப்பாக நடந்தது…………..கி.பி 300-ல் ஆய் கொங்குநாடுகள் இருந்த நிலையில் கயா கூட்ட்டரசாக மாறுகிறது…………………கி.பி 400-ல் ஆய் அரசு மட்டுமன்றி தமிஅகத்தின் மற்ற சேர சோழ பாண்டிய அரசுகளும் களப்பிரர்கள் கைப்பற்றியதால் தமிழ்நாடு களப்பிரர் ஆட்சிக்கு மாறுகிறது……………………தரவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் கொரிய அரசி ஆய் வேளிர் நாட்டு இளவரசி என்று நிறுவுதலைக் காணலாம்.  அயோத்தியா என்ற இடமும் கயா நாடும் கி.பி 48 ல் இல்லை என்பதை இந்த ஆவணங்கள் தெளிவுபடுத்தும்அன்டார்ட்டிகா தமிழன்.” பிறகு, யதேச்சையாக, நாகராஜன் என்பவரிம் கட்டுரையை வாசித்தபோது, அவரும், இவர் குறிப்பிட்ட “மேப்புகளைக்” [100 BCE முதல் 400 CE வரை] குறிப்பிட்டு ஆங்கிலத்தில் அதே விசயங்களைக் கொடுத்துள்ளார்[9]. அதாவது, அந்த “மின்-தமிழ்” என்ற இணைதள குழுவில், “அன்டார்ட்டிகா தமிழன்” என்ற பெயரில் தமிழில் வெளிவந்ததை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது போல தெரிகிறது.

 

© வேதபிரகாஷ்

21-05-2018

Korea Queen -RJB-photo

[1] Narayanan Kannan, Tamil–Korean relationship, Proceedings on the International Seminar on the Contributions of Tamils to the Composite Culture of Asia, Institute of Asian Studies, Chennai, India. 16th-18th January 2011.

[2] ஒரு நாணயத்தில் இரட்டை மீன் உள்ளது, காதுகளில் தொங்கடான் அணிந்துள்ளது, முதலியவற்றை வைத்து, அப்பெண் தமிழ் பெண்தான் என்று முடிவுக்கு வந்தது. “மின்-தமிழ்” அனுமானத்தை, இதில் முடிவாக்கியிருக்கிறார்!

[3] கண்ணன் மற்றும் ஒரிசா பாலு – போன்றோரைக் குறிப்பிட்டு உலா வரும் வீடியோ –

https://www.youtube.com/watch?v=5Wu5gucJMLs

[4] Inside Tamil, Published on Oct 1, 2017; https://www.youtube.com/watch?v=z3nzzYP4w6c

[5] coral shree, 2ஆம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, Published on Jun 15, 2017; https://www.youtube.com/watch?v=FWJwATMVlag

 

[6] https://groups.google.com/forum/ – !topic/mintamil/cdZ85yfRACI%5B1-25%5D

[7] http://worldhistorymaps.info/images/East-Hem_100bc.jpg

http://worldhistorymaps.info/images/East-Hem_050bc.jpg

http://worldhistorymaps.info/images/East-Hem_001ad.jpg

http://worldhistorymaps.info/images/East-Hem_050ad.jpg

http://worldhistorymaps.info/images/East-Hem_100ad.jpg

http://worldhistorymaps.info/images/East-Hem_200ad.jpg

http://worldhistorymaps.info/images/East-Hem_300ad.jpg

http://worldhistorymaps.info/images/East-Hem_400ad.jpg

[8] பிடிவாதமாக, கிமு-கிபி உபயோகம், ஆதாரங்கள் இல்லாமல் எழுதுவது, முதலியவைத்தான், இதில் காணப்படுகிறது.

[9] Prof.V.Nagarajan, The legend of Queen Heo Hwang-ok – the first queen of Korea. Historizing her as the princess from India, Virtual freelance researcher; Email: professor.nagarajan@gmail.com, Mobile: 09003271687

 

 

பட்டுப்புடவை என்று ஏமாற்றும் துணிக்கடைகள்: “பிராண்ட்” வியாபாரத்தில் கொள்ளையெடிக்கும் வியாபாரிகள் (1)

ஒக்ரோபர் 8, 2011

பட்டுப்புடவை என்று ஏமாற்றும் துணிக்கடைகள்: “பிராண்ட்” வியாபாரத்தில் கொள்ளையெடிக்கும் வியாபாரிகள் (1)

“பிராண்ட்” வியாபாரம் செய்து கொள்ளையடிக்கும் பட்டு வியாபாரிகள்:  வஸ்த்ரகலா, சாமுத்ரிகா, விவாஹா, சுபமுஹூர்த்த, வசுந்தரா, ஜடாவு, முஹூர்த்த, நகாசு, பிரைடல் செவன், இப்படி பெயர்கள் நீளுகின்றன. நல்ல வேளை, தமிழகப் பட்டுப் புடவைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை, எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை!  பெண்களின் கூட்டமோ அதிகரிக்கின்றது. ஆனால், பாவம் அவர்கள் அருகில் சென்று விலையைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது – ரூ 3,000/- 3,500/-, 4,000/-, 5,000/- என்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது! ஆகவே, சாதாரண மக்கள் பட்டுப்புடவை, அதிலும் உண்மையான வெள்ளி ஜரிகை வைத்து வாங்குவது என்பது சாத்தியமில்லை. எனவே, தலைப்பு, ஒருபக்க / சிங்கிள் பார்டர், இருபக்க / டபுள் பார்டர் என்றெல்லாம் பார்த்து ஏமாற வேண்டிய வேலையில்லை, அவசியமில்லை.  புடவை முழுக்க டிஷைன் இருக்காது.  உள்ளே மறைந்து விடும் என்பதால் மூன்றில் ஒருபகுதியில் டிஷைன் / ஜரிகை இருக்காது. ஆனால் முழுக்க உள்ளது போல புடவையை தலைப்புப் பக்கம் மட்டும் திருப்பி-திருப்பிக் காட்டுவார்கள். இழைகள் மாறியிருந்தால், விட்டிருந்தால், துருத்திக் கொண்டிருந்தால், அவையெல்லாம் “செகண்ட்ஸ்” என்று ஒப்புக்கொள்ளாமல், ஏதேதொ காரணம் காட்டி பேசுவார்கள், திசைத்திருப்புவார்கள்.

பருத்தி ஆடைகளை மறந்து பட்டிற்கு பறக்கும் இந்திய பெண்கள்: காந்தியடிகள் கதராடை வேண்டும் என்று, பருத்தியைத்தான் சர்க்காவில் நெய்ய வேண்டும் என்று சத்தியாகிரக போராட்டத்தில் அதையும் சேர்த்துக் கொண்டார். சுதேசிய இயக்கத்தின் சின்னமாக்கினார். ஆனால், இன்றோ, இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு, இந்த வியாபாரிகள் அயல்நாட்டு வியாபரிகளின் லாபத்தைப் பெருக்கி வருகிறார்கள்.  இழை, இழைத்திரிப்பு, நூல், சாயம், சுத்தகரிப்பு, நூற்பு என்ற பல நிலைகளில் இந்திரமயமாக்கி, இந்திய மக்களைக் கொன்று, அயல்நாட்டு வியாபாரிகளை, தொழிற்நுட்பங்களை ஊக்குவிக்கின்றனர். டிஷைன்கள் / வடிவமைப்புகள் என்று கணினிகளை உபயோகப் படுத்தி, மக்களின் வாழ்வாதரங்களை அழிக்கின்றனர்.  ஆராய்ச்சி என்ற பெயரில், பழங்கால சிற்பங்களில் / சிலைகளில் உள்ள வடிவமைப்புகளை காப்பியடித்து, மாற்றி அவற்றை தமதென்று சொல்லி லட்சங்களை அள்ளுகின்றனர். அதனால், புடவைய வாங்கும் உழைத்து சம்பாதிக்கும் மக்கள் அதற்கும் சேர்த்து காசு கொடுக்கிறார்கள்.

ரூ 40-50 லட்சங்களில் கூட புடவைகள் விற்கப்படுகின்றன: ரூ 40-50 லட்சங்களில் கூட புடவைகள் உள்ளன என்பதை விட, அதையும் வாங்க ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது, பட்டுப்புடவை வியாபாரம் நடக்கிறாதா அல்லது வேறு வியாபாரம் நடக்கிறதா என்ற சந்தேகமே வருகின்றது.  அதாவது, ரூ 1,000/- அல்லது 2,000/-ற்கே வாங்க முடியாமல் தவிக்கும் ஏழைகள், கீழ்தட்டு மத்தியத்தர குடும்பத்தினர் தவிக்கும் போது, வீடு வாங்கும் விலையில் எப்படி பட்டுப்புடவையை வாங்குகிறார்கள்? அடுத்தாத்து அம்புஜங்களும், இந்தாத்து பட்டுகளும் ஏழைகளாக, சாதாரண மக்களாகி விட்டார்கள் போலும், ஆகையால், இப்பொழுதெல்லாம் வேறு ஜாதி / சாதி மக்கள் பட்டுப்புடவைகள் வாங்க ஆரம்பித்து விட்டனர் போலும். இதற்கு அப்படி லட்சங்கள் எங்கிருந்து வருகின்றன?

நேர்மையற்ற பட்டுப்புடவை  வியாபாரம்: முன்பு போல, இப்பொழுதெல்லாம் உண்மையான பட்டுப் புடவையோ, அதிலும் ஜரிகையுள்ள பட்டுப்புடவையோ கிடைப்பதில்லை. வெள்ளி ஜரிகைக்குப் பதிலாக போலி ஜரிகையை உபயோகப்படுத்துகிறார்கள். பட்டிற்குப் பதிலாக பளப்பளபான கோரைப்புற்களின்  நார்களை சேர்த்து புடவைகளை உருவாக்குகிறார்கள். அப்பொழுதெல்லாம் “நாரப்பட்டு” என்று சொல்லியே விற்பார்கள், ஆனால், இப்பொழுது பெரிய கடைகளில் ஏசி போட்டு, லை போட்டு, குளிபானம் கொடுத்து,  சொல்லாமல் ஏமாற்றி விற்கிறார்கள். விலை அதிகரிக்க நடிகைகளை வைத்து அதிரடி விளம்பரங்களை செய்து பெண்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ரூ 500/- முதல் ரூ 5,000/- 10,000/- உயர்வாக விலைவைத்து விற்கிறார்கள். ஆயிரம் ரூபாய் புடவையை இரண்டாயியம் என்றும் விற்கிறார்கள். இதில் இடைத்தரகர்கள், கடைகளில் சாமர்த்தியமாகப் பேசி விற்கும் கடையாட்கள் என பலருக்குக் கமிஷனும் கொடுக்கப் படுகிறது.

உழவர் சந்தை போல, ஏன் நெசவாளி சந்தை இருக்கக் கூடாது? “உழவர் சந்தை” போல, ஏன் “நெசவாளி சந்தை” இருக்கக் கூடாது. ஒரு பட்டுப்புடவையை நெய்து முடிக்க ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் ஆகும், அதில் ஒன்றிற்கும் மேலாக பல தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள், இரவுப்பகலாக உழைத்து உருவாக்குவார்கள். ஆனால், அவர்களுக்கு, ஒரு புடவைக்கு ரூ 100/- முதல் 10,000/- கிடைக்கும் என்ற நிலையுள்ள போது, வியாபாரி எப்படி ரூ 500/- முதல் ரூ 20,000/- வரை லாபமடைகிறார்? முன்பு போல, வியாபாரி வீட்டிற்கே வந்து வியாபாரம் செய்தால், விலை குறையதா? பிறகு ஏன் அத்தகைய இந்திய கலாச்சார, பாரம்பரிய, நாகரிகம் மிக்க வியாபாரமுறையைக் கொன்றுவிட்டனர்?

50-100 வருடங்களுக்கு முன்பான  பட்டுப்புடவை வியாபாரம்: எனது பாட்டிக் காலத்திலிருந்து பட்டுப் புடவைகளை பெண்கள் வாங்குவதைப் பார்த்திருக்கின்றேன். பொதுவாக திருமணம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தான் பட்டுப்புடவைகள் பிரத்யேகமாக வாங்குவார்கள்.  பட்டுப்புடவை விற்பவர் வீட்டிற்கே மூட்டையோடு வந்து, ஜமக்காளம் போட்டு அனைவரும் உட்கார, புடவைகளைப் பிரித்துக் காட்டி, பேரம் பேசி, ஒரு வழியாக வாங்கி முடிப்பார்கள். அதற்குள் புடவைகள் எல்லாவிதமான “தரநிர்ணய” சோதனைகளுக்கு உட்பட்டுவிடும். அதாவது, அனுபவம் மிக்க பெண்களே அத்தகைய சோதனைகள் செய்து முடித்து விடுவார்கள். நூல், சரிகை, தரிப்பிழைகள், கோடுகள், அழுக்கு, சாயம் பூசப்பட்டது, என அலசி பார்த்து விடுவார்கள். வியாபாரி ஒன்றும் செய்ய முடியாது. பெண்களும் அத்தகைய புடவைகளை ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால், இப்பொழுதோ போலிப்பட்டுப் புடவையை கண்டு பிடிக்க ஒரு எந்திரத்தை வைத்துள்ளார்களாம். அதில் சோதனை செய்ய ரூ 50/- ரூபாயாம்!

வேதபிரகாஷ்

08-10-2011