Archive for the ‘தமிழ் அமைப்புகளால் தமிழுக்கு என்ன பயன்?’ Category

இந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்.

மே 4, 2010

இந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்

கபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது”! கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:

MYLAPORE FELL INTO THE HANDS OF THE PORTUGUESE IN A.D 1566 WHEN THE TEMPLE SUFFERED DEMOLITION. THE PRESENT TEMPLE WAS REBUILT 300 YEARS AGO. THERE ARE SOME FRAGMENTARY INSCRIPTIONS FROM THE OLD TEMPLE STILL FOUND IN THE PRESENT SHRINE AND IN St. THOMAS CATHEDRAL.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு:

“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.

ஆகவே, இந்துக்கள் தாரளமாக, தங்களது இடத்தைக் கேட்கலாம். பெரும்பாலும், சரித்திர ஞானம் இல்லாமல் அல்லது இருந்தும், செக்யூலரிஸ மாயயையில் கட்டுண்டு, இந்துக்கள், தங்களது உரிமைகளை இழந்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு, கிருத்துவர்கள் அயோக்கியத்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர். அத்தகைய நிகழ்ச்சிதான் சம்பந்தமே இல்லாத, கிருத்துவர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் நழைவேன் என்று மிரட்டுவது!

இந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்.

உடனடியாக பக்தர்கள் அனைவரும், அந்த அவலச் சின்னமான சர்ச்சின் முன்பு அமைதியாக உல்கார்ந்து கொண்டு சிவநாம ஜெபம் செய்யவேண்டும்.

நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

மார்ச் 16, 2010

நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

First Published : 16 Mar 2010 02:54:12 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=212223&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

சிதம்பரம், மார்ச் 15: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடத்தை இடிப்பது போன்ற செயல்பாடுகளில் அறநிலையத் துறையினர் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இந்து அறநிலையத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆலய வளாகத்தில் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டு ஓராண்டில் ரூ.17 லட்சம் வசூலானது. ரூ.27 லட்சத்துக்கு பிரசாதக் கடைகள் ஏலம் விடப்பட்டன. பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு புதிய செயல் அலுவலர் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயிலை இந்து அறநிலையத் துறையினர் கையகப்படுத்தியதற்கு தடை கோரி ஆலய பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மார்ச் 15-ந் தேதி நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்பிரமணியம்சுவாமி வாதாடினார். மேலும் தீட்சிதர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாத ஐயர், வெங்கட்ராம ஐயர் ஆகியோரும், சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பில் காலிஸ்கன்சால்வேள், பி.ஆர்.கோவிலன் பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அசோக்தேசாய், மரிய அற்புதம், நெடுமாறன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் பல்வேறு விஷயங்களை ஆராய கால அவகாசம் தேவை. அதனால் இவ்வழக்கை ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், வழக்கு விசாரணை முடியும் வரை அறநிலையத் துறையினர் கோயிலின் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடங்களை இடிப்பதோ, புதிய பணிகளை மேற்கொள்ளவதோ கூடாது. பழுதுநீக்கம் செய்யலாம். அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மலேசிய இந்துக்களின் பிரச்சினைகள்: மதமாற்றம்!

ஜனவரி 2, 2010

மலேசிய இந்துக்களின் பிரச்சினைகள்: மதமாற்றம்!

இந்துக்கள் அடக்கி-ஒடுக்கப்படுவது உண்மை: இந்துக்கள் என்று சொன்னலே ஏதோ மதவாதிகள், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தி உண்மையை சொல்லவிடாமல் தடுக்கும் போக்குத் தெரிகிறது. அத்தகைய பிரசாரம் மிக-மிகத் தவறானது, ஏனெனில் மனோதத்துவ ரிதியில் அவ்வாறு இந்துக்களை அடக்கி, ஒடுக்கி, நடுங்கச் செய்வது உலகத்திலேயே நடக்கும், நடக்கின்ற பெரும் குற்றமாகி விடும்.

தமிழர்கள், இந்தியர்கள், தமிழ்-இந்துக்கள், இந்திய-இந்துக்கள், மலேசிய-இந்துக்கள்: இப்படி பகுத்தறிவுவாதிகள், நாத்திகவாதிகள், தமிழைக் காப்பவர்கள், தமிழுக்கு உயிர் கொடுப்போம்..என்றெல்லாம் பேசும் ………..சிந்தாந்திகள், மற்றவர்களைக் குழப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்படும் மலேசிய வம்சாவளியினருக்கு அது நன்றாகவே தெரியும். இருப்பினும் படித்த, கணினி வித்தையறிந்த அல்லது உதவிக் கொண்டு விளையாடும் வலைப்பாதிவாளர்கள் அத்தகைய துர்பிரச்சாரத்தை அதிகமாகவேச் செய்கின்றனர். அவர்கள் தாம் தங்களுடைய மனங்களில் என்வுள்ளது என்று தெரிவிக்கவேண்டும். ஏனெனில், அவர்கள்  இந்தியாவில் இல்லாத பட்சத்தில் பல நாடுகளுக்குச் செல்லும்போது, பலவிதமாக பேசுகிறர்கள், செயல்படுகிறர்கள். இந்தியாவிற்கு வரும்போது “ஒழுங்காக”யிர்ப்பதுபோல காட்சியளிக்கிறார்கள். பெரும்பாலாக, இவர்களுக்கு இந்தியாவினால் தமக்கு என்ன லாபம் என்று திட்டம் போட்டு வருபவர்கள்தாம் ஜாஸ்தி / அதிகம். கணினி மாயம் காட்டி யாதாவது வியாபாரம் செய்யலாம், …………..புடவைகள் விற்கலாம்……………….இத்யாதி………………ஆகவே, இவர்கள் குளு-குளு அறைகளில் உட்கார்ந்து கொண்டு, தங்களின் வேலை நேரங்களுக்கு இடையில் அல்லது, பொழுது போக்கிற்காக “ப்ளாக்குகலிள்” விளையாடுவது வழக்கம். ஆகவே, அவர்கள் தயவு செய்து தங்களது மனங்களை திறந்தால் எல்லொருக்கும் நல்லது.

மலேசிய இந்துக்களின் பிரத்யேகப் பிரச்சினைகள்: மலேசிய இந்துக்களைக் கவனிக்கும்போது, அவர்களின் பிரச்சினைகளை நோக்கும்போது, உண்மையிலேயே அவர்கள் அந்நாட்டு பிரஜைகளாக தங்களது உரிமைகளை பெறுகிறார்களா இல்லையா என்று பார்க்க வேண்டும். அந்தந்த நாட்டுப் பிரச்சினைகளை அந்த நாட்டு சட்ட-திட்டங்களுக்குட்பட்டேதான் நடக்கும். அதனை அடுத்த நாட்டவர் தலையிடமுடியாது.

இந்தியா உதவலாம்: இருப்பினும், இந்தியா ஒரு பழமையானா நாடாகயிருந்து அங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவி அல்லது பரந்த இந்தியா ஒருவேலை சுருங்கி அங்குள்ள மக்கள் அவ்வாறே இருந்து இன்றைய நிலையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, நிச்சயமாக, அம்மக்களைப் பற்றி விசாரிக்கலாம். முடிந்ததை செய்யலாம்.

ஃபிஜி முதல் மலேசியா வரை: பத்தாண்டுகளிக்கு முன்பு, ஃபிஜியில் இந்துக்கள் கொடுமைப் படுத்தப் பட்டர்கள் என்றபோது, ஓரளவிற்கு செய்திகள் வெளிவந்ததும், ஒருகருத்துருவாக்கம் ஏற்பட யாதுவாயிற்று. அதுபோலத்தான், இந்திய வசாவளியினர் பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லை.

அந்நிலையில், மலேசிய இந்துக்களைப் பற்றிய மற்றொரு பிரச்சினை எடுத்துக் கொள்ளப்படுகிறது:

குழந்தைகள் ரகசியமாக மதமாற்றம் செய்யப்படுவதற்குத் தடை

April 23, 2009, 11:01 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=14515

 • மதமாற்றம் பின்நோக்கியதாக இருக்காது
 • நஜிப்பின் நடவடிக்கையை வரவேற்கிறார் வைத்திலிங்கம்

குழந்தைகளை ரகசியமாக மதமாற்றம் செய்வதற்கு தடை: பல்லினங்களைக் கொண்டுள்ள மலேசியாவில், இன உறவுகளைப் பாதித்துள்ள தகராறுகளை தணிக்கும் ஒரு முயற்சியாக, பெற்றோர்கள் தங்களது விதிக்கப்படுமென்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மாதின் ஒப்புதலின்றி,  பிரிந்து சென்ற அவரது கணவர், அவர்களது மூன்று குழந்தைகளையும் இஸ்லாத்துக்கு ரகசியமாக மதமாற்றம் செய்ததால் அந்த மூன்று குழந்தைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை அம்மாது இழக்கக்கூடிய வழக்கை எதிர்நோக்கியது குறித்து மூண்ட கடும் சர்ச்சையின் விளைவாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

பெற்றோர்கள் இருவரின் ஒப்புதலின்றி குழந்தைகள் மதமாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கு சட்டம் மாற்றப்படுமென பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறினார்.

“சவத்தை கைப்பற்றுதல்” உட்பட மதமாற்ற சர்ச்சைகள்: முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசியாவில், அவ்வப்போது நிகழ்வதுண்டு.  இறந்துபோன ஒரு நபரின் சமயம் குறித்த சர்ச்சையில், இஸ்லாமிய அதிகாரிகள், அவரது உறவினர்களுடன் மோதிக் கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கு அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் அவர்  இடம் பெற்றுள்ளார். இம்மாதிரியான மோதல்களால், நாடு இஸ்லாமியமயமாக்கப்பட்டு வருகிறது என்றும்,  சீன, இந்தியர்களின் உரிமைகள் படிப்படியாக வலுவின்றி போவதாயும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ‘இந்த பிரச்னைக்கு தீர்க்கமான முடிவு காணப்பட வேண்டுமென,” நஸ்ரி தெரிவித்தார். “இம்மாதிரியான மேலும் பல சம்பவங்கள் நிகழலாம் என நாங்கள் எதிர்பார்ப்பதால் ஒரு நீண்ட கால தீர்வு குறித்து நாங்கள் முடிவு செய்துள்ளோம்.”

மதமாற்றம் பின்நோக்கியதாக இருக்காது: மலேசியா, இரட்டை அம்ச நீதி முறையைக் கொண்டுள்ளது. சிவில் நீதிமன்றமும் ஷாரியா நீதிமன்றமும் ஏக காலத்தில் செயல்படுகின்றன. குடும்பச் சட்ட வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்போது, தங்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என்று முஸ்லீம் அல்லாதவர்கள் கூறுகின்றனர். மதமாற்றம் பின்நோக்கியதாக இருக்காதென்றும் நஸ்ரி கூறுகிறார். அதாவது, மதமாற்றத்தைப் பயன்படுத்தி, சிவில் நீதிமன்றம் வழங்கியுள்ள ஜீவனாம்சம் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆணையிலிருந்து ஒருவர் தப்பித்துக் கொள்ள முடியாது. “தற்போது, ஒருவர் இஸ்லாத்துக்கு மாறியவுடன் இஸ்லாமியச் சட்டத்திற்கு  உடனடியாக உட்படுகிறார். இதனால், முன்னர் சிவில் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.” சட்டத்துறை அலுவலகம், திருத்தம்செய்யப்பட வேண்டிய சிவில் சட்டங்களை மறுபரிசீலனை செய்யும். ஆனால் இஸ்லாமியச் சட்டத்தில் செய்யப்படவிருக்கும் மாற்றம் குறித்து சமய காவலர்களாக விளங்கும் மாநிலச் சுல்தான்களுடன் முதலில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நஸ்ரி தெரிவித்தார். இவ்வேளையில், விரிவான அடிப்படையிலான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்யப்போவதாக வாக்குறுதிகளை வழங்கி பிரதமர் பொறுபேற்ற நஜிப் ரசாக்கின் இந்த அறிவிப்பை மலேசிய சமயங்கள் சங்கத்தின் தலைவர் ஏ வைத்திலிங்கம் வரவேற்றுள்ளார். பெற்றோரில் ஒருவர், மதம் மாறினாலும் அவரது குழந்தை ஆதியிலிருந்த சமயத்திலேயே இருக்கலாம் என அங்கீகரிக்கப்படுவதால் இது ஒரு நல்ல தொடக்கம் என்று ஏஎப்பியிடம் அவர் தெரிவித்தார். “பல்வேறு இனங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தி, இன உறவுகளை மேலோங்க செய்வதற்கு பிரதமர் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இது ஒரு முன்னோடியாக அமைகிறது. இது குறித்து முஸ்லீல் அல்லாதவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர்,” என்றார் அவர்.

இந்து சமுதாயத்திற்கு மலேசியாவில் ஆபத்து!

ஜனவரி 1, 2010
இந்து சமுதாயத்திற்கு மலேசியாவில் ஆபத்து
ஜனவரி 01,2010,00:00  IST
http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4515
கோலாலம்பூர்:”மலேசியாவில் இன்னும் சில காலங்களில் இந்திய சமுதாயத்தினர் காணாமல் போய் விடுவர்’ என, அந்நாட்டின் இந்து சங்க துணைத் தலைவர் பாலா தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.முன்பு பிரிட்டிஷார் காலத்தில் அங்குள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்களை அழைத்துச் சென்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பலர் சொந்த நாட்டுக்கு திரும்பினர். அங்கு வாழும் இந்தியர்கள் மலேசியக் குடியுரிமை பெற்றனர். இன்றுள்ள நிலையில், ஏற்கனவே அங்கு வாழும் இந்தியர்களுக்கு அதிக நெருக்கடிகள் வரத் துவங்கி விட்டன.

இந்த சூழ்நிலையில் அவர் மேலும் கூறியதாவது: “மலேசியாவில் இந்திய சமூகத்தினர் சிறுபான்மையினராக உள்ளனர். அதேநேரத்தில், ஒரே ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதனால், வரும் காலங்களில் மலேசியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும். ஒரு கால கட்டத்தில் இந்திய சமுதாயத்தினரே இல்லாமல் போய் விடுவர்.இவ்வாறு தர்மலிங்கம் கூறியுள்ளார். அவர் கருத்தை, “தமிழ் நேசன்’ நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.பன்முக கலாசாரம் கொண்ட மலேசியாவில் மலாய் இனத்தவர் பெரும்பான்மையாக உள்ளனர். சீனர்கள் 25 சதவீதமும், 8 சதவீதம் இந்தியர்களும் உள்ளனர். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே.”


இந்தியர்கள் சுருங்கி விட்டனர்!!!!

November 21, 2008, 10:15 pm மலேசியாஇன்று பிரிவு: என் பார்வை

– ஹெலன் ஆங்

http://www.malaysiaindru.com/?p=7818இரண்டு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 4ஆம் திகதி – நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில், “மலாய்க்காரராகப் பிறப்பதற்கு ஜைய்ட் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று  கூறுகிறார் சையிட் ஹமிட்” என்ற தலைப்பை கொண்ட  ஒரு செய்தி வெளியானது.
கடந்த அக்டோபர் 31ஆம் திகதி –  2008ஆம் ஆண்டு ஆசியச் சட்டம் மீதான மாநாட்டில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜைய்ட் இப்ராகிம் இப்படி கூறியிருந்தார்: மலாய் மேலாண்மை கோட்பாடு கண்மூடித்தனமாகக்  கடைப்பிடிக்கப்படுவது நம்மிடமுள்ள மதிப்புமிக்க ஒன்றை சீரழித்து விட்டது.

“அது நமது சமநோக்கையும் நியாயத்தையும் இழக்கச் செய்து விட்டது.”

இந்த அறிக்கை அம்னோ தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை, “போலீஸ் அறிக்கையால் ராமசாமி மிரளவில்லை” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு செய்தியை மலேசியாகினி வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, அரசுத் துறையில் மலாய்க்காரர் – அல்லாதவர்கள் போதிய எண்ணிக்கையில் பிரதிபலிக்கப்படவில்லை என்று அம்பலப்படுத்தியதற்காக பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பி.ராமசாமி தண்டிக்கப்பட வேண்டுமென அம்னோ இளைஞர் கூறியது.

கொம்தார் கட்டடத்தில் உள்ள மாநில நிர்வாக அலுவலகத்துக்குள் நீங்கள் நுழைந்தால், ராமசாமி கூறியது எவ்வளவு உண்மை என்பதை தெரிந்து கொள்வீர்கள். பினாங்கு மக்கட்தொகையில் பாதிப்பேர் சீனர்களாக இருந்தாலும் அரசுத் துறையில் மலாய்க்காரர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

“Huff, puff, blow the temple down” ( நவம்பர் 20.2006) என்ற தலைப்பிலான எமது மலேசியாகினி கட்டுரைப் பகுதியில், செபராங் பிறை நகராண்மை கழக இணையத் தளத்திலிருந்து பின்வரும் அதன் அதிகாரிகள் பட்டியலை நான் வெளியிட்டேன்:

 • Datuk Mohd Aris Ariffin (MPSP municipal president),
 • Fauziah Ariffin (Aris’s special asst),
 • Zainol Abidin Md Noh (municipal sec),
 • Siti Aishah Kassim (SUP’s special asst),
 • Noraziah Abdul Aziz (director, admin & HR),
 • Mohd Ibrahim Mohd Nor (asst director, HR),
 • Norhayati Sulaiman (asst director, R & D),
 • Latifah Razali (asst director, acquisition & supply),
 • Siti Haslinda Hasan (asst director, training & quality),
 • Maskiah Abdullah (counter officer),
 • Asma Othman (auditor),
 • Lee Moong Nah (director, IT),
 • Hassan Hashim (info systems officer),
 • Abdul Fikri Ridzauudin Abdullah (info systems officer),
 • Mansor Hashim (legal director),
 • Rosnada Abu Hassan (asst director, legal),
 • Munir Affan (asst director, enforcement & security),
 • Mohd Hairay Mohd Yusof (finance director),
 • Shahrulnizad Abdul Razak (finance asst director),
 • Ummi Kalthum Shuib (finance asst director),
 • Dr Romli Awang (health & urban services director),
 • Fadzilah Hasan (director, licensing),
 • Mohd Faidzal Hassan (asst director, licensing),
 • Kamaruddin Che Lah (engineering director),
 • Khirul Annuar Shamsudin (asst engineering director),
 • Baderul Amin Abd Hamid (asst engineering director),
 • Rosnani Mahmud (asst engineering director),
 • Mohd Syukri Said (asst engineering director),
 • Mohd Sobri Che Hassan (asst engineering director),
 • Muhamad Kamaruddin (asst engineering director),
 • Md Pilus Md Noor (building director),
 • Abdul Rahman Harun (asst building director),
 • Ahmad Fuad Hashim (town planning director),
 • Norliza Abdullah (asst town planning director),
 • Mohd Ridzal Abdul (asst town planning director),
 • Kamariah Ramli (asst town planning director),
 • Azian Ahmad (asst town planning director),
 • Dahalan Fazil (asst town planning director),
 • Rozali Mohamud (valuation director),
 • Mat Nasir Hassan (asst valuation director),
 • Ahmad Syahrir Jaafar (asst valuation director),
 • Wan Junaidy Yahaya (community director).

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள பெயர்கள் எதை காட்டுகின்றன? இருப்பினும் பினாங்கில் மலாய்க்காரர்களின் நிலை, தங்களது சொந்த தாயகத்திலேயே  வாக்குரிமையை  இழந்து வாடும் பாலஸ்தீனர்களை போன்றதென  குறைகூறுவோரும் உள்ளனர்.

மலாய்க்காரர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக அம்னோ கூறிக் கொள்கிறது.

உண்மையில் அம்னோ, புள்ளி விவரங்களை கூறு போடுகிறது. கட்சி நலன்களைக் காப்பதற்கு எண்கள் மாற்றப்படுகின்றன. மறுபுறம் இதற்குப் பின்னணியில் அம்னோ அராஜகவாதிகள் உள்ளதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

அது (அம்னோ) மிரட்டுகிறது, போலீசாரிடம் முறையீடு  செய்து, ஊடகங்களைப் பயன்படுத்துகிறது. புள்ளி விவரங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படக்கூடாதென்று  கட்டாயப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக மலேசியப் பங்குச் சந்தையில் பூமிபுத்ரா பங்குகள் 36.6 விழுக்காடாக உள்ளதென 2006ஆம் ஆண்டு நவம்பரில் அப்போதைய இரண்டாவது நிதியமைச்சர் டாக்டர் அவாங் அடேக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆறு நாட்களுக்குப் பின்னர் அந்த எண்ணிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது.

தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலா?: கடந்தாண்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இண்ட்ராப் ஐவர் கைது செய்யப்படும் முன்னர், இந்திய சமூகத்தினர் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்றும்  இந்தியர்கள்  நன்றி மறந்து,  புலம்பிக்கொண்டிருப்பதாகவும் ஒரு மாயத் தோற்றம்  சித்தரிக்கப்பட்டது.

இண்ட்ராப் தடை செய்யப்படுவதற்கு  சிறிது காலத்துக்கு முன்னரும், இதே பித்தலாட்டத்தை அவர்கள் கையாண்டனர். அந்த இயக்கத்துக்கு களங்கம் கற்பிக்க, நமது முன்னணி ஊடகங்களும் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கின. ‘The Hundraf of Umno’s making’ என்ற தலைப்பிலான எமது அக்டோபர் கட்டுரையில், வெளியுறவு அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் வேண்டுமென்றே புள்ளி விவரங்களைத் திரித்து, இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்ட  சமூகத்தினர் என்ற கூற்றை நிராகரித்துள்ளதை நான் சுட்டிக்காட்டினேன்.  ஆம். ஹண்ட்ராப் (Hundraf) என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன். ஹண்ட்ராப் – மனித உரிமைகள் செயல் முன்னணி. இண்ட்ராப் உணர்வு அணைந்து விடுமானால் இந்த சொற்றொடரை மலேசிய அரசாங்கம் விரும்பலாம். எமது ‘ஹண்ட்ராப்’ கட்டுரையை வாசித்த “மக்கள் நாடாளுமன்றம்” என்ற அமைப்பின் பங்கேற்பாளர் ஜெயநாத் அப்புத்துரை,  “மலேசிய இந்தியர்கள்: எதிர்பார்புகள்” என்ற தலைப்பிலான தமது புத்தகத்தின் பிரதியை என்னிடம் வழங்கினார். ஜி.ஏ டேவிட் தாஸ் என்பவருடன் கூட்டாக 2008ல் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அதில் மேலும் பல புள்ளிவிவரங்கள் ஆராயப்பட்டுள்ளது.

எமது கண்ணோட்டத்தின்படி பொது மக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் போதுமானதல்ல. போதிய ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், வெளியிடப்பட்ட விவரங்கள் வெளிப்படையாக இல்லை. ராமசாமி வழங்கிய புள்ளிவிவரங்கள் இதற்கு வலுசேர்க்கின்றன. எந்த அரசுத் துறையிலும் மேல் வர்க்க அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட அரையாண்டு வரை ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாக ஜெயநாத் எம்மிடம் கூறினார். ஒரு முழுப் படத்தைச் சித்தரிப்பதற்கு  பலதரப்பட்ட கோணங்களில் புள்ளிவிவரங்கள் ஆராயப்பட்டன என்றாரவர்.  அதிகாரிகள் உதவ முன்வராததால், அது சோகப்படமாகி விட்டது.

சீனர்களும், இந்தியர்களும் குடியேறிகள்!: சீனர்களையும் இந்தியர்களையும் “குடியேறிகள்” எனக் குறிப்பிடுவது, இந்த சிறுபான்மை மக்கள் ஏதோ இப்போதுதான் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் மெதுவாக கப்பலிலிருந்து தரை இறங்கியது போல் தோன்றுகிறது. உண்மையில் தமிழ்த் தொழிலாளர் குடியேற்றம், 1786ல் பினாங்கு பிரிட்டிஷ் காலனி உருவாக்கத்துடன் தொடங்கியது. தோட்டங்களில் வேலை செய்வதற்கும் அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதற்கும் தமிழ்த் தொழிலாளர்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர். 1957ல் சுதந்திரம் கிடைத்தபோது இந்தியர்கள், மக்கட்தொகையில் 11.3 விழுக்காடாக இருந்தனர். 2005ல் 7.5 விழுக்காடாகும். 2020க்குள் இந்தியர்கள் 6.5 விழுக்காடுக்கும் குறைவாக இருப்பரென மதிப்பிடப்படுகிறது.

1957ல் கிட்டத்தட்ட 70 விழுக்காடு இந்தியர்கள் தோட்டத் துறையிலும் சுரங்கத் தொழிலும் இருந்தனர். 1970ல் 46.5 விழுக்காட்டினர் விவசாயத் துறையில் இருந்தனர். 2000ஆம் ஆண்டில் 11.1 விழுக்காட்டினர் மட்டும் விவசாயத்தில் இருந்தனர். அதே வேளை 62 விழுக்காட்டினர் தயாரிப்புத் துறையிலும் சேவைத் துறையிலும் வேலை செய்தனர். கனடாவில் வெளியிடப்பட்ட என்.ஜே கொலேட்டா என்பவரின் ஆராய்ச்சிக் கட்டுரையொன்று,  இந்திய தோட்டத் தொழிலாளர்கள், “மலேசியாவின் மறக்கப்பட்ட சமூகத்தினர்” என்று வர்ணித்துள்ளது. தோட்டங்கள் துண்டாடப்பட்டு அதன் தொழிலாளர்கள் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்க்கப்பட்டனர். அவற்றில் உருவான ஒன்று கம்போங் மேடான் புறம்போக்கு குடிசைப் பகுதி. “மலேசிய இந்தியர்களில் பெரும்பாலோர், நகர்ப்புறங்களில் பாமரத்தனத்தில் உழன்று கொண்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது”, என்கிறார் ஜெயநாத். எனது பள்ளிப்பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன். எனது பள்ளியில் தலைமை மாணவனான ஓர் இந்திய மாணவனுக்கு  உள்நாட்டு பொதுப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவில்லை. இதனால் தனது தந்தையின் கார் நிறுத்துமிட கண்காணிப்பு வேலைக்கு அவன்  செல்ல வேண்டியதாயிற்று. அந்த முன்னாள் மாணவன் இந்த புள்ளிவிவரத்தில் ஒன்றாகி இருக்கலாம்.

“தோட்டங்களில் பால் வெட்டும் தொழிலாளர்களாக இருந்த மலேசிய இந்தியர்கள், நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகளில் உலோகங்களுக்கு பத்ரி வைத்தல், சாக்கடைகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்தல், கார்நிறுத்துமிடங்களை கண்காணித்தல், லோரி ஓட்டுதல் முதலான வேலைகளைச் செய்பவர்களாக மாறியுள்ளனர்.”இப்படி தமது புக்ககத்தில் அவர் எழுதியுள்ளார்.

அங்கீகரிக்க மறுத்தல்: ஒரு மலாய்க்காரராகப் பிறந்திருப்பதற்கு ஜைய்ட் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று சைட் ஹமிட் கூறியுள்ளார். நாட்டின் நிர்மாணிப்புப் பணியில் இந்தியர்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளதை அங்கீகரிக்காமல் அச்சமூகத்தினருக்கு மலேசியா பெருந்தீங்கு இழைத்துள்ளது என்று நான் கூறுவேன். ஏழை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை அவர்களது தேவைக்கேற்ப உயர்த்தாமல், மலேசியா நிலைமையை மேலும் மோசமாக்குகிறது: காரணம் ‘affirmative action’ என்ற நலிவுற்றவர்களுக்கு உதவும் திட்டம் இன பாகுபாடுடையது.  தற்போது நாம் ஒன்பதாவது மலேசியாத் திட்டத்தில் உள்ளோம் (2006-2010). 1969 மே 13ன் விளைவாக  1970ல் புதிய பொருளாதாரக் கொள்கை தொடங்கியது,

இந்த புதிய பொருளாதாரக் கொள்கை, பின்னர் தேசிய மேம்பாட்டுக் கொள்கையாக உருவாக்கம் பெற்றது. இது இரண்டாவது  பெருந்திட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது(1991-2000). தொடர்ந்து இந்த தேசிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு தேசிய லட்சியக் கொள்கை என்ற ஒரு புதுத் தோற்றம் கொடுக்கப்பட்டது. இது மூன்றாவது பெருந்திட்டம் (2001-2010) அல்லது 2020 தூரநோக்குடன் தொடர்புடையது. எட்டாவது மலேசியத் திட்ட காலத்தின்போது ஒரு பொதுவான போக்கு நிலவியது, அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகினர், ஏழைகள், வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர். கூடுதல் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கிடையே பெருத்த வேறுபாட்டைக் கொண்டுள்ள இந்த வட்டார நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும் என கினி குறியீடு கூறுகிறது.

இந்தியர்களின் வறுமை விகிதத்தைக் குறைப்பதற்கு ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த விகிதம் 1999ல் 3.5 விழுக்காடாக இருந்தது. 2004ஆம் ஆண்டுக்குள் வறுமையில்வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை 13,300ஆக அதிகரித்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையை விட கூடுதல் 600ஆகும். வறுமைக்கு அரசாங்கம் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில், இந்தியர்கள் மேலும் ஏழைகளாகி விட்டனரென ஜெயநாத்  தமது முடிவுரையில் தெரிவித்தார்.

இந்தியர்கள், சீனர்களைவிட பின்தங்கியுள்ளனர்: இந்தியர்களின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை பார்க்கும்போது, பூமிபுத்ரா மற்றும் சீனர்களை விட இன்னும் பிந்தங்கிய நிலையிலேயே உள்ளனர். புதிய பொருளாதாரக் கொள்கைக்கு முன்னர், பொதுவாக இந்தியர்கள் – கணிசமான எண்ணிக்கையில் மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் உள்ளனர் என்று கூறுகிறார் சைட் ஹமிட் – தேசிய சராசரி வருமானத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாகப் பெற்றனர். ஆனால் தேசியப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 40ஆண்டுகள் கடந்துள்ள வேளையில்  இந்த இடைவெளி மூடப்பட்டு இப்போது இந்தியர்கள் குறைவான வருமானம் பெறுகின்றனர். மொத்த மலேசியர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையிலான வருமான ஏற்றத்தாழ்வு விகிதாச்சாரம் 1970ல் 1:1.15 ஆகும். 2004ல் 1:1.06 என இரண்டாவது பெருந்திட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இங்கு நாம் எண்களை குறிப்பிட வேண்டியுள்ளதால், பூமிபுத்ரா பங்குடைமை, அந்த மந்திர சக்தி எண்ணான 18.9 விழுக்காட்டிலேயே இருப்பதாக அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. காலவோட்டத்தில், பொருளாதாரத்தில் பூமிபுத்ரா பங்கேற்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது….. இதில் அம்னோவை நாம் நம்பினால். ஐந்து மாநிலங்களில் பக்காத்தான் ராயாட் ஆட்சியை கைப்பற்றியுள்ள. இந்த கட்டத்தில்தான் இதுகாறும் மறைத்து வைக்கப்பட்டிருந்த புள்ளி விவரங்கள் இப்போது அம்பலத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. அதுவும் கூட்டரசு எதிரணியைச் சேர்ந்த துணை முதலமைச்சர், அவர் முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது, தமது சொந்த ஆய்வுகளை நடத்தி, இருட்டறைக்குள் சிறிது வெளிச்சத்தை புகுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் நெடுங்காலமாகவே புதைக்கப்பட்டிருந்தன; காரணம் அவற்றை நாம் தெரிந்து கொள்வதை அம்னோ விரும்பவில்லை.

தமிழ் அமைப்புகள்: இவற்றால் மொழிக்கு கிடைக்கும் பயன்?

ஒக்ரோபர் 17, 2009
தமிழ் அமைப்புகள் எண்ணிக்கை இந்தியாவில் எவ்வளவு? கண்டுபிடிக்க அரசு தீவிரம்
அக்டோபர் 17,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=17948

General India news in detailராமநாதபுரம்: இந்தியா முழுவதும் உள்ள தமிழக அமைப்புகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ் மொழியின் பெயரில் அமைப்புகள் , சங்கம், நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன.

இந்த அமைப்புகள் தமிழுக்கு செய்யும் தொண்டு என்ன? இவற்றால் மொழிக்கு கிடைக்கும் பயன்? போன்றவற்றை ஆராய முடிவு செய்யப் பட்டுள்ளது. இது போன்ற அமைப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவியும் திட்டமும் தமிழகத்தில் தயாராக உள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலும், இந்தியாவின் பிற மாநிங்களிலும் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகளின் முழுவிபரங்களையும் சேகரிக்க தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மாவட்டம் தோறும் அரசு பதிவு பெற்ற தமிழ் அமைப்புகள், தமிழ் சங்கங்கள், நிறுவனங்களின் தொலைபேசி, மெயில் முகவரி ஆகியவை சேகரிக்கப் பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் மூலமாக இப்பணி நடந்து வருகிறது. மேலும் இது குறித்த தகவலை தமிழ் சார்ந்த அமைப்பினர் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

———————————————————————————————————————————————————————————-

நிச்சயமாக, யாதோ பெரிய கண்டுபிடிப்பில்தான் இறங்கியுள்ளனர்!

அதெப்படி 2009ல் தான் அத்தகைய கண்டுபிடிப்பு நேர்ந்திருக்க வேண்டும் என்பது வியப்பாக உள்ளது. ஒருவேளை “தமிழ்சங்கம்” என்றெல்லாம் வைத்துக் கொண்டால், அரசாங்கம் மானியம் முதலியவை கொடுக்கிறார்களோ என்னவோ?

இந்த அமைப்புகள் தமிழுக்கு செய்யும் தொண்டு என்ன?

இவற்றால் மொழிக்கு கிடைக்கும் பயன்?

இவைப் பற்றியல்லாம் என்ன ஆராய்ச்சி வேண்டி கிடக்கிறது?

திரைப்படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால் அரசு மானியம், வரிவிலக்கு, திரைப்படம் எடுக்கவும் பணம் என்றெல்லாம் இருக்கும்போது, ஏன் தமிழின் மீது மோகம் ஏற்படாது?