Archive for the ‘சித்தா’ Category

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)

திசெம்பர் 25, 2017

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)

SIC-3, announcement

சுவதேசி இந்தியவியல் மாநாடு (3): சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடப்பதாக சில நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால், உள்ளே செல்வதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும், அடையாள அட்டை / ஆதார் கார்ட் போன்றவை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது. மேலும், பதிவு செய்ய ரூ 500/- என்றும் குறிப்பிடப்பட்டது. இதே தேதிகளில் இந்திய பொறியாளர் மாநாடும் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளது. அதனால், நேரில் பார்த்தது, கேட்டது, மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து பெற்ற விவரங்களுடன், இந்த தொகுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. சென்ற 2016 மாநாடு கூட, யாருக்கும் தெரியாமல் நடத்தப் பட்டதாக உள்ளது[1].

IC - SR building, IIT

தமிழகம்தருமத்தின் பூமிஎன்ற பிரதான தலைப்பின் கீழ் நடத்தப்படும் மாநாடு:  இம்மாநாட்டின் மாநாடு ஐ.சி,எஸ்.ஆர் [IC & SR Building] வளாகத்தில் நடந்தது. “தமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் இம்மாநாட்டின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 50-60 வருடங்களாக தமிழக சமூக-அரசியல் சிந்தனைகளை திராவிட இனவாத தத்துவம் ஆதிக்கம் செல்லுத்தி வந்தமையால், அது தமிழக மக்களின் கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக மதிப்புகளை அதிகமாகவே பாதித்துள்ளன. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் போன்றவை, “திராவிடப்”போர்வையில், இந்திய-பண்டைய பாரதகலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகளுலிருந்து வேறுபட்டவைப் போன்று சித்தரிக்கப் பட்டு, அவ்வாறே பள்ளி-கல்லூரி பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டுள்ளன. “தனித்தமிழ் இயக்கம்” இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பெரியாரிஸ, திராவிடஸ்தான், மாநில-சுயயாட்சி, தனித்தமிழ்நாடு போன்ற கொள்கைகள், சித்தாந்தங்கள், இயக்கங்கள், தமிழ்நாட்டை, இந்தியாவிலிருந்து பிரிக்க முயற்சித்தன. ஆனால், சங்க இலக்கியங்களில் அத்தகைய நிலையில்லை. அக்காலத்து மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகள், பாரத்தத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகளுடன் ஒத்தேயிருந்தன. இந்நோக்கில் இந்த மாநாடு நடத்த உத்தேசித்தது[2].

Oduvar Sanmugasundaram

மாநாட்டின் குறிக்கோள் மற்றும் அடையும் நோக்கம்[3]: தமிழகம் இந்திய யூனியனில் ஒரு மாநிலமாக [State] இருக்கின்றது[4]. அதன் நீண்ட சரித்திரத்தில் பலவகை தார்மீக முறைகள், பல்வேறு காலங்களில் இருந்து வந்துள்ளன. அவை ஜைன-பௌத்த மதங்களாக [குறிப்பாக ஜைனம்] இருந்து சைவ-வைணவ மதங்களில் கலந்தன. இருப்பினும் ஒருபக்கம் ஜைன-பௌத்த சித்தாந்தக் குழுக்களும், இன்னொருபக்கம் சைவ-வைணவ சித்தாந்தக் குழுக்களும் எதிரும்-புதிருமாக நின்றநிலையில், வன்முறையான மோதல்களும் ஏற்பட்டன. சிலப்பதிகாரம் துர்க்கையை புகழ்ந்தாலும், ராமரின் அவதாரத்தையும் சிறப்பிக்கிறது. சைவ நாயன்மார்களில் மிகவும் தீவிரமான துறவியாக இருந்த [the most militant Saivite saint] சம்பந்தர், 8,000 ஜைனர்களை தோலுரித்துக் கொன்றதாக, சைவ சம்பிரதாயம் கூறுகின்றது. சம்பந்தரை “மிலிடென்ட்” என்று குறிப்பிட்டது திகைப்பாக இருந்தது[5]. அத்தகைய வார்த்தை பிரயோகம் ஏன் உபயோகிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.

Sethu Saama ghosham by Ganeshan Shastry.

மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகளுக்கான தலைப்புகள்[6]: கீழ்கண்ட தலைப்புகளில் பாடித்தியம் மிகுந்த, பாரபட்சம் இல்லாமல், சுவதேசி கோணத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இப்பொழுதுள்ள ஆய்வுக்கட்டுரைகள், பிஎச்.டி கட்டுரைகள், முதலியவற்றை ஆய்ந்து, அகழ்வாய்வு ஆதாரங்களோடு, மூலநூல்களைப் படித்து கருத்துகளை பதிவிட வேண்டும்.

  1. ஆன்மீக நீரோட்டங்கள்:
  2. திராவிட இயக்கத்தை ஆய்வது மற்றும் ஆதாரங்கள்:
  3. நவீன இந்து-எதிர்ப்பு மற்றும்திராவிட இயக்கம்.
  4. ஜாதியம், தீண்டாமை மற்றும் இந்து மதம்.
  5. தமிழக ஆன்மீக பாரம்பரியங்கள் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்திருந்தன என்பதனை மறுபடியும் அறிவிக்கப்படுதல் மற்றும் தமிழகத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுதல்.

Sambandar - the most militant saint

முதல் நாள் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) நடந்த விவரங்கள்: 22-12-2017 (வெள்ளிக்கிழமை) காலை 8.30க்கு, சரஸ்வதி வந்தனத்துடன், வேத-தேவாரப் பாடகளுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கப் பட்டது. ராஜிவ் மல்ஹோத்ரா பேசும் போது, “தமிழ் உலகத்திலேயே தொன்மையான மொழி”  என்றெல்லாம் பேசினார்.

  1. தமிழ் மிக்கப் பழமையான மொழி
  2. இடைவெளி இல்லாமல், தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றது.
  3. இன்றளவிற்கும், கோடிக்ககணக்கான மக்களால் பேசப்பட்டு வருகின்றது.

என்று எடுத்துக் காட்டினார்.

காலை 9.25-9.40: ஶ்ரீ வல்லப பன்சாலி என்பவர் [chairman, ENAM secuirities and founder of Satya Vigyan Foundation], இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம், தத்துவம்…என்று பொதுவாக பேசினார்.

9.40 முதல் 9.55 வரை: ஶ்ரீ மோஹன்தாஸ் பை என்பவர் [chairman, Manipal Global Educational Services], இந்தியனின், தனிப்பட்ட அடையாள எப்படியிருக்கிறது, ஒரு பிரஜையால் அடையாளங்காணப்படுகிறது என்று எடுத்துக் காட்டினார். தான் ஒரு பிராமணன், சாரஸ்வத பிரிவைச் சேர்ந்தவன், கர்நாடகாவில் வாழ்பவன், ……என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். இப்படி பன்மைமுக காரணிகள் இருந்தாலும், இந்தியர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். முன்பு ஒரு நண்பர் 300 ராமாயணங்கள்[7] இருந்ததாக, இருப்பதாக சொன்னார். ஆமாம், 300 என்ன, 3000 ராமாயணங்கள் கூட இருக்கலாம், ஆனால், ராமாயணக் கதை ஒன்றுதான், அதனை மாற்ற முடியாது, அது போன்றதுதான், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் காரணிகள்…இந்திய இப்பொழுதுள்ள இடதுசாரி சிந்தனைக்கு மாற்று அவசியம்..நூருல் ஹஸன் என்ற காங்கிரஸ் அமைச்சரால் புகுத்தப் பட்ட அத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தம் எதிர்க்கப்பட வேண்டும்…என்றார்.

Nagasamy addressing

9.55 முதல் 11.00 வரை: திரு நாகசாமி எவ்வாறு மனுதர்மம் இப்பொழுதைய இந்தியா மட்டுமல்லாது, இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் போற்றப்பட்டு வந்துள்ளது என்று எடுத்துக் காட்டினார். திருக்குறள் தர்மசாஸ்த்திரங்களை ஒட்டியே எழுதப்பட்டது. தர்ம-அர்த்த-காம-மோட்ச சித்தாந்தத்தில் தான் அது உள்ளது. பல்லவகல்வெட்டுகளில் மனு குறுப்பிடப்பட்டுள்ளான். சோழர்கள் மனுவழி வந்தவர்கள். 8ம் நூற்றாண்டு-பாண்டிய கல்வெட்டு, எவ்வாறு, ஒரு நீதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றால், தருமசாஸ்திரங்கள் பரீட்சையில் தேறியிருக்கவேண்டும் என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். கம்பராமாயணத்தில் மனு குறிப்பிடப்பட்டுள்ளது – வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும், குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ,  மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே,  வஞ்சமன்று மனு வழக்காதலால் அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன், என்று எடுத்துக் காட்டினார்.  “மனு விளங்க ஆட்சி நடாத்திய” என்று 13ஆம் நூற்றாண்டுவரையிலும் சோழனும் பாண்டியனும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

© வேதபிரகாஷ்

25-12-2017.

Tamilnadu, the land of Vedas-Nagasamy

[1] Times of India, IIT-M meet on ‘swadeshi Indology’ irks academic community, TNN | Jul 10, 2016, 01.00 AM IST.

A three-day ‘closed door’ conference on ‘Swadesi Indology’ anchored by NRI writer Rajiv Malhotra, known for his pro-Hindutva views, on the IIT Madras campus has raised the hackles of a section of students and faculty members, at a time when earlier meetings by a few other ‘groups’ have been discouraged.

 

https://timesofindia.indiatimes.com/city/chennai/IIT-M-meet-on-swadeshi-Indology-irks-academic-community/articleshow/53135190.cms

[2] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பல்ல, சுர்க்கமும் அல்ல, முக்கியமான கருத்துகளின் தொகுப்பாகும்.

[3] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பாகும். இது நிச்சயமாக சைவத்திற்கு எதிரான போக்கைக் காண்பிக்கின்றது.

[4] Tamil Nadu is one of the states of the Indian Union which has seen all the major dharmic systems thrive at various times in its long and hoary history.https://swadeshiindology.com/si-3/call-for-papers/

[5] And even Gnana Sambandar considered the most militant Saivaite saint against the Jains, who allowed 8000 Jains to impale themselves according to Saivaite tradition,……………..https://swadeshiindology.com/si-3/call-for-papers/

[6] SCI-3, guidelines for paper presenters.

[7] Ramanujan, A. K. “Three Hundred Ramayanas.” Five examples and three thoughts on translation” in Many Ramayanas-The Diversity of a Narrative Tradition in South Asia, ed. Paula Richman (Delhi, 1992) (1991).

Advertisements

ஆயுர்வேதம், யோகா-இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளின் நிலை என்ன?

பிப்ரவரி 17, 2012

ஆயுர்வேதம், யோகா-இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளின் நிலை என்ன?

 

Ayush GOI

Ayush GOI

போதிய அடிப்படை வசதிகள் மற்றும் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடிய தகுந்த வாய்ந்த ஆசிரியர்கள் ஏன் இல்லை? ஆயுஸ் என்ற – ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவின் [Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy (AYUSH)[1]] மத்திய மருத்துவத்துறைக் குழு பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரிக்கு சோதனைக்காக வந்த போது போதிய அடிப்படை வசதிகள் மற்றும் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடிய தகுந்த வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை என்று தெரியவந்தது. ஆகையால் அக்கல்லூரியில் அப்படிப்பு ரத்து செய்யப்பட்டது[2]. உடனே அரசு உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்திருக்க வேண்டும். முந்தைய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சித்த மருத்துவ விரும்பிகள் ஆதரவாக வந்திருக்க வேண்டும். சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் தான், திராவிட மருத்துவம் தான் என்றெல்லாம் பேசியவர்கள் அந்த மருத்துவத்தைக் காக்க லட்சங்களை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிலை: இந்தியாவில், பொதுவாக தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிக்கலாம் என்றதும், குறிப்பாக அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு, அனுமதி பெற்று, இரண்டு-மூன்று அறைகளை வைத்துக் கொண்டு, மணிக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து ஆசிரியர்களை அழைத்து பாடம் சொல்லிக் கொடுப்பது, நடைமுறை பயிற்சிக்காக சில தனியார் அல்லது அரசு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பது, உண்மையாக மாணவர்களுக்கு செயல்முறை அனுபவம் கிடைக்க பரிசோதனை கூடம் வைக்காமல் வீடியோ போட்டு காண்பிப்பது என்று நடந்து வருகிறது. இதனால், லட்சங்களை கொடுத்து மருத்துவப் படிப்பு படிக்க வரும் மாணவர்கள் ஏமாற்றமடைகிறார்கள் அல்லது அவ்வாறே படித்து பட்டம் வாங்கிக் கொண்டு வந்து, தகுந்த முறையில் மருத்துவம் செய்யாமல் நோயாளிகளைத் துன்புறுத்தி வருகிறார்கள்.

 

சித்தா போலி டாக்டர்கள் இல்லை

சித்தா போலி டாக்டர்கள் இல்லை

உண்மையில் பிரச்சினை என்ன? இங்கு பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரி மிகவும் பழமையானது. ஆகவே, அது சரியான முறையில் இயக்கப்படவில்லை எனும்போது, மற்ற சந்தேகங்கள் எழுகின்றன. அதாவது தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்க, இவ்வாறு அரசு கல்லூரிகளை மூட சதி செய்கிறார்களா என்றும் தோன்றுகிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் தேவையான அடிப்படை வசதிகள், சோதனைக் கூடம், முதலியவை இருக்கும். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடிய தகுந்த வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை என்றால், ஒன்று அவை வேண்டுமென்றே இல்லாமல் இருக்க செய்திருக்க வேண்டும் அல்லது இருப்பவை மறைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளம் கிடைக்கிறது என்று கூட சென்றிருக்கலாம்.

 

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி போராட்டம்

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி போராட்டம்

மாணவர்கள் உண்மையைத் தெரிந்து கொண்டு போராடுகிறார்களா? நெல்லை பாளயங்கோட்டை அரசு சித்தா மருத்துவ மாணவர்களின் போராட்டம், இன்று (18-02-2012) 8வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று, ஸ்டான்லி ஜோன்ஸ், பானுமதி உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய இந்திய மருத்துவ மத்திய டாக்டர்கள் குழு, பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரியில் ஆய்வு மேற்கொள்கிறது[3]. 2012-13ம் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய இக்குழு வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, இக்குழு ஆய்வு செய்ய வருகை தந்தபோது, கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில், சென்னையில் இருந்து வரும் குழுவினர், போராட்டம் நடத்தி வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுக்கு வரும் குழுவை முற்றுகையிடப் போவதாக, போராட்ட மாணவர்கள் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி போராட்டம்.நக்கீரன்

பாளையங்கோட்டை சித்தா கல்லூரி போராட்டம்.நக்கீரன்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் தலையீடு: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் முடிவை திரும்பப் பெறுமாறு, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு, மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது[4].இரண்டு வாரத்துக்குள் உரிய பதிலளிக்காவிடில், இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ததோடு, அம்மருத்துவ படிப்புகளுக்கான பெயரிலும் மாற்றம் செய்ய எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு, இந்திய முறை மருத்துவக்கான மத்திய கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாடத்திட்டம், பெயரிலும் மாற்றம் செய்ய பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்தால், இம்மருத்துவ படிப்புகளை நடத்த பல்கலைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது. இதையடுத்து, பெயரில் செய்யவிருந்த மாற்றத்தை திரும்பப் பெறுவதாக எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம், மத்திய கவுன்சிலுக்கு தெரிவித்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றத்தை திரும்பப் பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என கேட்டு, மருத்துவ பல்கலைக்கு, மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், இரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

கல்லூரியின் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு[5]: சென்னையில், பிப். 14:, 2012 அன்று பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வேதாரண்யத்தை அடுத்த பஞ்ச நதிக்குளத்தைச் சேர்ந்த டி. அருட்செல்வம் என்கிற அந்த மாணவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “சித்த மருத்துவத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பான எம்.டி. (சித்தா) படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில் நான் வெற்றி பெற்றேன். பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டது. எனினும், இதுவரை வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் புதிய வகுப்புகளுக்கு அனுமதி மறுத்து மத்திய சுகாதாரத் துறை கடந்த ஜனவரி 20-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. கல்லூரியில் உள்ள குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்து கடந்த அக்டோபர் 14-ம் தேதி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனை ஏற்று நடப்பாண்டில் முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்க அனுமதி தர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கடிதத்தை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகளை உடனடியாகத் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நடப்பாண்டில் வகுப்புகளைத் தொடங்க அனுமதி மறுத்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்”, என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் உண்மை அறிந்து செயல்பட வேண்டும்: இவையெல்லாம் அரசு முறைப்படி நடக்கும் சாதாரணமான விஷயங்கள். ஆனால், மாணவர்களும், அரசியல்வாதிகள் போன்று போராட்டம் நடத்துவது என்று இறங்கியுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏற்கெனெவே, முந்தைய ஆட்சியில், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவத் துறைப் படிப்புகளுக்கு தகுந்த இடம் கொடுக்கப் படவில்லை. போலி டாக்டர்கள் கைது என்ற போர்வையில், உண்மையான ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி டாக்டர்கள் கைது செய்யப் பட்டார்கள்., அவமானப் படுத்தப் பட்டார்கள். அப்பொழுதும், சித்த மருத்துவ விரும்பிகள், தமிழர்கள், இனமான போராளிகள், திராவிடர்கள் என்று யாரும் வரவில்லை. இப்பொழுதும், மூச்சுக் கூட விடவில்லை. ஆயுஸ் இணைதளத்தில் ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட அனைத்துலக பத்திரிக்கை உள்ளது[6]. அதில் தரம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன[7]. அவற்றைப் படித்து, மாணவர்கள் தங்களது ஆய்வுத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முறையில், ஆயுர்வேதம்-சித்தா முதலிய மருந்துகளும் தகுந்த முறையில் செயல்படும், நிவாரணம் கொடுக்கும் என்று மெய்ப்பிக்க வேண்டும்[8]. அத்தகைய முறைகளில் மாணவர்கள் செயல்பட்டால், தானாகவே தரம் உயரும். யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

 

வேதபிரகாஷ்

17-02-2012


[2] Following the inspection by the Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy (AYUSH), it was found that the college in Palayamkottai lacked basic facilities and qualified faculty members. As a result, the permission to run the course in the college was cancelled.

http://www.thehindu.com/news/cities/chennai/article2812017.ece

[5] தினமணி, கல்லூரியின் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு, First Published : 15 Feb 2012 03:18:13 AM IST; Last Updated : 15 Feb 2012 10:31:31 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Chennai&artid=553160&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=