கம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார–முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா? (2)
திராவிடம், திராவிடன் என்ற சொல்லை தமிழன் உச்சரிக்கக் கூடாது என என்றைக்கு முடிவெடுத்து செயல் படுகிறோமோ அன்று வரை தமிழனுக்கு விடிவே இல்லை: தங்கர்பச்சான், காகிதத்தில் இருந்தத்தைப் படித்தார்[1], “பிழைப்பிற்காக தமிழைக் கற்றுக் கொண்டு, வெளியில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள்…இத்தகைய மாநாடுகளில் கூட தனிழரல்லாதர் தான் கலந்து கொள்கிறாற்கள்….இனி ஒருநாள் கூட தமிழர் அல்லாதவர்களை சேர்த்துக் கொண்டு தமிழ் சங்கங்கள் செயல்பட கூடாது.. [கைதட்டல்…….]…அவர்கள் / அவை மாற்றப்பட வேண்டும்… அதாவது ”உலக தமிழர் சங்கம்” மாற்றினால் தமிழர் அதிகாரம் தமிழருக்கு வந்து விடும்….அதற்குத் தேவை தமிழனுக்கு வேண்டிய ஒற்றுமை….ஜாதியை ஒழிக்க வேண்டும்….5% தமிழர் தமிழில் பேசுவதில்லை….பள்ளிகளில் தமிழில் பேசினால், கண்டிக்கப் படுகிறார்கள்….தமிழில் மட்டும் பேசு என்றால் ஒரு நிமிடம் பிறமொழி கலப்பில்லாமல், 1% தமிழன் கூட பேச மாட்டான்…திராவிடன் என்று ஒருபோதும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்களும் தம்மை அழைத்துக் கொள்வதில்லை.அப்படி சொல்லி சொல்லி வாழ்கையினையும், அதிகாரத்தையும் இழந்தவன் தமிழன் மட்டுமே.இதற்குப் பிறகாவது, திராவிடம், திராவிடன் என்ற சொல்லை தமிழன் உச்சரிக்கக் கூடாது என என்றைக்கு முடிவெடுத்து செயல் படுகிறோமோ அன்று வரை தமிழனுக்கு விடிவே இல்லை……..இன்னும், பழம்பெருமை பேசி எத்தனை நாள் தாம் காலம் கழிக்கப் போகிறோம்..”. “திராவிடத்தால் வீழ்ந்தோம்” பாணியில் ஆரம்பித்து, தமிழ் பிரிவினைவாதத்தை தெளிவாக பேசி வெளிப்படுத்தினார்.
மாநாட்டில் பங்கு கொண்டவர்: இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் தங்கர்பச்சான், நடிகர் சரத்குமார்[2] உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத்தமிழ் மன்றமான சைவநெறிக்கூடம், ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ்வழிபாட்டுத் தீர்மான நோக்கத்தினையும் வெளிப்படுத்தியது. பேர்ன் நகரில் அமையவிருக்கும் ‘தமிழர் களறி” எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் திட்டத்தினை விரிவாக விளக்கியது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் இவ்விளக்கம் இதழாகப் பதிப்பெடுத்து கையளிக்கப்பட்டது. உலகெங்கினும் தமிழர்கள் வழிபடும் திருக்கோவில் முழுவதும் கருவறையில் செந்தமிழ்த் திருமறை ஒலிக்க இங்கு கூடியுள்ள தமிழார்வலர்கள் முயலவேண்டும் என சைவநெறிக்கூடத்தின் வேண்டுகோள் இந்மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. சைவநெறிக்கூடத்தின் பேர்ன் சுவிற்சர்லாந்து நடுவத்தின் சார்பில் தில்லையம்பலம் சிவகீர்த்தி, ஐக்கியராச்சியக் கிளையின் சார்பில் ஸ்ரீரஞ்சன் பங்கேற்று உரையாற்றினர்.
60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர்: உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில் உணவகம் ஒன்றில் பண்டைத் தமிழரின் வர்த்தகப் பாதைகளில் முக்கிய இடமான கம்போடியாவில் “உலகத் தமிழர் மாநாடு” நடைபெற்றது[3]. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்தனர்[4]. தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமைந்தது[5]. பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்தனர்[6].
மாநாட்டை ஆதரித்த குழுமங்கள்: முன்னர் “பிடா” – The Federation of International Tamizh Association (FITA) சார்பில் இம்மாநாடு நடக்கும், அதில் ஆயிரக்கணக்கில் தமிழர் கலந்து கொள்வார் என்று செய்தி வெளியாகியது என்று குறிப்பிடப் பட்டது[7]. தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் “Global organization for Tamil youth” போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது[8]. ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பேச்சாளர்களின் விவரங்கள் முதலியன: 152 நாடுகளில் பரவி உள்ள தமிழர்களுக்கு இடையே வணிக சங்கிலியை ஏற்படுத்தும் வகையில் உலக தமிழர் வணிக மாநாடாக நடத்தப்பட உள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தாலும், அரைத்த மாவையே அரைத்தது தான், கட்டுரை வாசித்தவர்கள் மூலம் தெரிந்தது. புதியதாக சொன்ன விவரங்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
- சுபா சசிதரன்[9] (பொதுவாக பேசியது……….),
- சிந்தியா லிங்கஸ்வாமி (கம்போடியாவும், தமிழரும், முதல் நூற்றாண்டு கடல் வணிகத்திற்கு முக்கியமானது, கண்ணாடி மணிகள், தங்கத் தகடு இறந்தவர் கணிகளின் மீது வைத்தல், …..)[10],
- ஆர்.ஜே. பொன் கோகிலம்[11] (வானொலி…..பற்றி பேசியது…..),
- மலர்விழி பாஸ்கரன்[12] (கடல்வழி பட்டுப்பாதை)
- செபாஸ்டியன்[13] (வடக்கிலிருந்து தமிழகத்திற்கு கோவில் கட்டும் முறை வந்தது, மந்தகப்பட்டு உதாரணம், தமிழரின் வழிபாட்டு மரபில் பல்லவகளின் தாக்கம்)
- கா. தணிகாச்சலம்[14] (அரிசி, அரசு, அரசியல்….கட்டுமரம், யானை, ……..வேளாண்மை செய்த குடி தமிழர்…உலகத்தை ஆண்டவர் தமிழர்…)
- ராமர்[15] (இலங்கலையில் தமிழ் கல்வெட்டுகள்),
- தேவதாஸ்[16],
- ஞானசேகரன்[17] (சைக்கிளில் உலகம் சுற்றியவர், பீகாரில் இருந்து வந்தவர் பெயரைக்க் கெடுத்ததால், தமிழர் கூட “கொசுவலை தமிழன்” என்றது, போன்றவற்றை சொன்னார்), சோழன் நாச்சியார்[18],
- காமராஜ்[19] (தமிழரின் எதிர்காலம்),
- சதாசிவம்[20] (ஆசியநாடுகளில் தமிழர் வர்த்தகம் கட்டமைப்பு, குஜராத்திய வியாபாரிகளுடன் ஒப்பிட்டது, டாக்காவிற்கும்-கொல்கொத்தாவிற்கும் நடக்கும் படகு போக்குவரட்த்து போன்று, தமிழகம்-இலங்கைக்கு ஏன் நடத்தக் கூடாது),
- சீனிவாச ராவ்[21] (சைக்கிளில் உலகம் சுற்றியவர், 2000 வருடங்களுக்கு முன்னர் பூம்புகார் போன்ற துறைமுகங்கள்மூலம் 80% தமிழகம் ஏற்றுமதி செய்தது), வீடியோக்களில் அவர்களது பேச்சை, வாசிப்பை உன்னிப்பாக, கவனித்த பிறகே இக்கருத்து பதிவு செய்யப்படுகிறது.
- அழகு துரை[22] [அணைக்கட்டு, நீர் மாசுப் படுவது…மாசுக் கட்டுப்பாடு…]
ஆய்வுக்கட்டுரைகள் படிப்பது போல இருந்தாலும், மேடைப் பேச்சாகத்தான் இருந்தது.
© வேதபிரகாஷ்
25-05-2018
[1] Shruti TV, உலகத் தமிழர் மாநாடு – கம்போடியா, இயக்குனர் தங்கர்பச்சான் உரை, Published on May 19, 2018
https://www.youtube.com/watch?v=6ikBiz-DWUE
[2] Saratkumar speech – https://www.youtube.com/watch?v=4FLJRR0gw3g
[3] https://tamil.oneindia.com/art-culture/essays/world-tamilar-conference-held-cambodia-320403.html
[4] 4தமிழ்.மீடியா, கம்போடியாவில் விமரிசையாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு, NAVAN 20 MAY 2018 CREATED: 20 MAY 2018.
[5] http://4tamilmedia.com/newses/world/11444-world-tamil-conference-in-cambodia
[6] புதியதொலைகாட்சி, உலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்!, Web Team, Published : 20 May, 2018 09:13 pm
[7] The Hindu, World Tamil conference on May 19, 20, STAFF REPORTER PUDUCHERRY, APRIL 16, 2018 01:010 IST; UPDATED: APRIL 16, 2018 01:01 IST
The Federation of International Tamizh Association (FITA) is organising World Tamizh Conference 2018 at Angkor Wat in Cambodia on May 19 and 20, 2018. Thanikatchalam, president, FITA, in a press statement said thousands of Tamilians are expected to participate in the conference, which will be held next to the famous temple complex
[8] http://www.puthiyathalaimurai.com/news/world/45562-world-tamil-s-conference-contain-in-cambodia.html
[9] https://www.youtube.com/watch?v=nTVgcLcDk0U
[10] https://www.youtube.com/watch?v=4u_CyWDEMXE
[11] https://www.youtube.com/watch?v=BKezP0r4hYU
[12] https://www.youtube.com/watch?v=5JLQGk7SOQ4
[13] https://www.youtube.com/watch?v=DWY5mpWXEkw
[14] https://www.youtube.com/watch?v=TqwWBTKB_uc
[15] https://www.youtube.com/watch?v=qNyB8YSA_EY
[16] https://www.youtube.com/watch?v=EDLKaRu-LYA
[17] https://www.youtube.com/watch?v=OJB6QsqaKN8
[18] https://www.youtube.com/watch?v=a001htlfbPs
[19] https://www.youtube.com/watch?v=btYakqgfvDM
[20] https://www.youtube.com/watch?v=221fIZ0owg8