Archive for the ‘இந்து சங்கம்’ Category

கம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார-முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா? (2)

மே 25, 2018

கம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும்வியாபாரமுதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும்  மாநாடா? (2)

World Tamil conference - 22-05-2018-thankar bachan

திராவிடம், திராவிடன் என்ற சொல்லை தமிழன் உச்சரிக்கக் கூடாது என என்றைக்கு முடிவெடுத்து செயல் படுகிறோமோ அன்று வரை தமிழனுக்கு விடிவே இல்லை: தங்கர்பச்சான், காகிதத்தில் இருந்தத்தைப் படித்தார்[1], “பிழைப்பிற்காக தமிழைக் கற்றுக் கொண்டு, வெளியில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள்…இத்தகைய மாநாடுகளில் கூட தனிழரல்லாதர் தான் கலந்து கொள்கிறாற்கள்….இனி ஒருநாள் கூட தமிழர் அல்லாதவர்களை சேர்த்துக் கொண்டு தமிழ் சங்கங்கள் செயல்பட கூடாது.. [கைதட்டல்…….]…அவர்கள் / அவை மாற்றப்பட வேண்டும்… அதாவது ”உலக தமிழர் சங்கம்”   மாற்றினால் தமிழர் அதிகாரம் தமிழருக்கு வந்து விடும்….அதற்குத் தேவை தமிழனுக்கு வேண்டிய ஒற்றுமை….ஜாதியை ஒழிக்க வேண்டும்….5% தமிழர் தமிழில் பேசுவதில்லை….பள்ளிகளில் தமிழில் பேசினால், கண்டிக்கப் படுகிறார்கள்….தமிழில் மட்டும் பேசு என்றால் ஒரு நிமிடம் பிறமொழி கலப்பில்லாமல், 1% தமிழன் கூட பேச மாட்டான்…திராவிடன் என்று ஒருபோதும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்களும் தம்மை அழைத்துக் கொள்வதில்லை.அப்படி சொல்லி சொல்லி வாழ்கையினையும், அதிகாரத்தையும் இழந்தவன் தமிழன் மட்டுமே.இதற்குப் பிறகாவது, திராவிடம், திராவிடன் என்ற சொல்லை தமிழன் உச்சரிக்கக் கூடாது என என்றைக்கு முடிவெடுத்து செயல் படுகிறோமோ அன்று வரை தமிழனுக்கு விடிவே இல்லை……..இன்னும், பழம்பெருமை பேசி எத்தனை நாள் தாம் காலம் கழிக்கப் போகிறோம்..”. “திராவிடத்தால் வீழ்ந்தோம்” பாணியில் ஆரம்பித்து, தமிழ் பிரிவினைவாதத்தை தெளிவாக பேசி வெளிப்படுத்தினார்.

World Tamil conference - 22-05-2018-saratkumar

மாநாட்டில் பங்கு கொண்டவர்: இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் தங்கர்பச்சான், நடிகர் சரத்குமார்[2] உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத்தமிழ் மன்றமான சைவநெறிக்கூடம், ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ்வழிபாட்டுத் தீர்மான நோக்கத்தினையும் வெளிப்படுத்தியது. பேர்ன் நகரில் அமையவிருக்கும் ‘தமிழர் களறி” எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் திட்டத்தினை விரிவாக விளக்கியது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் இவ்விளக்கம் இதழாகப் பதிப்பெடுத்து கையளிக்கப்பட்டது. உலகெங்கினும் தமிழர்கள் வழிபடும் திருக்கோவில் முழுவதும் கருவறையில் செந்தமிழ்த் திருமறை ஒலிக்க இங்கு கூடியுள்ள தமிழார்வலர்கள் முயலவேண்டும் என சைவநெறிக்கூடத்தின் வேண்டுகோள் இந்மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. சைவநெறிக்கூடத்தின் பேர்ன் சுவிற்சர்லாந்து நடுவத்தின் சார்பில் தில்லையம்பலம் சிவகீர்த்தி, ஐக்கியராச்சியக் கிளையின் சார்பில் ஸ்ரீரஞ்சன் பங்கேற்று உரையாற்றினர்.

World Tamil conference - 22-05-2018-Kannan

60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர்: உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில் உணவகம் ஒன்றில் பண்டைத் தமிழரின் வர்த்தகப் பாதைகளில் முக்கிய இடமான   கம்போடியாவில் “உலகத் தமிழர் மாநாடு” நடைபெற்றது[3]. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்தனர்[4]. தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமைந்தது[5]. பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்தனர்[6].

World Tamil conference - 22-05-2018-Balakrishnan, Ranjan, Srinivasa Rao, Sadasivan

மாநாட்டை ஆதரித்த குழுமங்கள்: முன்னர் “பிடா” – The Federation of International Tamizh Association (FITA) சார்பில் இம்மாநாடு நடக்கும், அதில் ஆயிரக்கணக்கில் தமிழர் கலந்து கொள்வார் என்று செய்தி வெளியாகியது என்று குறிப்பிடப் பட்டது[7]. தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் “Global organization for Tamil youth” போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது[8]. ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

World Tamil conference - 22-05-2018-Kokilam, Sindhiya, Subashini, Malarvizhi

பேச்சாளர்களின் விவரங்கள் முதலியன: 152 நாடுகளில் பரவி உள்ள தமிழர்களுக்கு இடையே வணிக சங்கிலியை ஏற்படுத்தும் வகையில் உலக தமிழர் வணிக மாநாடாக நடத்தப்பட உள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தாலும், அரைத்த மாவையே அரைத்தது தான், கட்டுரை வாசித்தவர்கள் மூலம் தெரிந்தது.  புதியதாக சொன்ன விவரங்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

 1. சுபா சசிதரன்[9] (பொதுவாக பேசியது……….),
 2. சிந்தியா லிங்கஸ்வாமி (கம்போடியாவும், தமிழரும், முதல் நூற்றாண்டு கடல் வணிகத்திற்கு முக்கியமானது, கண்ணாடி மணிகள், தங்கத் தகடு இறந்தவர் கணிகளின் மீது வைத்தல், …..)[10],
 3. ஆர்.ஜே. பொன் கோகிலம்[11] (வானொலி…..பற்றி பேசியது…..),
 4. மலர்விழி பாஸ்கரன்[12] (கடல்வழி பட்டுப்பாதை)
 5. செபாஸ்டியன்[13] (வடக்கிலிருந்து தமிழகத்திற்கு கோவில் கட்டும் முறை வந்தது, மந்தகப்பட்டு உதாரணம், தமிழரின் வழிபாட்டு மரபில் பல்லவகளின் தாக்கம்)
 6. கா. தணிகாச்சலம்[14] (அரிசி, அரசு, அரசியல்….கட்டுமரம், யானை, ……..வேளாண்மை செய்த குடி தமிழர்…உலகத்தை ஆண்டவர் தமிழர்…)
 7. ராமர்[15] (இலங்கலையில் தமிழ் கல்வெட்டுகள்),
 8. தேவதாஸ்[16],
 9. ஞானசேகரன்[17] (சைக்கிளில் உலகம் சுற்றியவர், பீகாரில் இருந்து வந்தவர் பெயரைக்க் கெடுத்ததால், தமிழர் கூட “கொசுவலை தமிழன்” என்றது, போன்றவற்றை சொன்னார்), சோழன் நாச்சியார்[18],
 10. காமராஜ்[19] (தமிழரின் எதிர்காலம்),
 11. சதாசிவம்[20] (ஆசியநாடுகளில் தமிழர் வர்த்தகம் கட்டமைப்பு, குஜராத்திய வியாபாரிகளுடன் ஒப்பிட்டது, டாக்காவிற்கும்-கொல்கொத்தாவிற்கும் நடக்கும் படகு போக்குவரட்த்து போன்று, தமிழகம்-இலங்கைக்கு ஏன் நடத்தக் கூடாது),
 12. சீனிவாச ராவ்[21] (சைக்கிளில் உலகம் சுற்றியவர், 2000 வருடங்களுக்கு முன்னர் பூம்புகார் போன்ற துறைமுகங்கள்மூலம் 80% தமிழகம் ஏற்றுமதி செய்தது), வீடியோக்களில் அவர்களது பேச்சை, வாசிப்பை உன்னிப்பாக, கவனித்த பிறகே இக்கருத்து பதிவு செய்யப்படுகிறது.
 13. அழகு துரை[22] [அணைக்கட்டு, நீர் மாசுப் படுவது…மாசுக் கட்டுப்பாடு…]

ஆய்வுக்கட்டுரைகள் படிப்பது போல இருந்தாலும், மேடைப் பேச்சாகத்தான் இருந்தது.

© வேதபிரகாஷ்

25-05-2018

World Tamil conference - 22-05-2018-Inauguration

[1] Shruti TV, உலகத் தமிழர் மாநாடுகம்போடியா, இயக்குனர் தங்கர்பச்சான் உரை, Published on May 19, 2018

https://www.youtube.com/watch?v=6ikBiz-DWUE

[2] Saratkumar speech – https://www.youtube.com/watch?v=4FLJRR0gw3g

[3] https://tamil.oneindia.com/art-culture/essays/world-tamilar-conference-held-cambodia-320403.html

[4] 4தமிழ்.மீடியா, கம்போடியாவில் விமரிசையாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு, NAVAN 20 MAY 2018 CREATED: 20 MAY 2018.

[5] http://4tamilmedia.com/newses/world/11444-world-tamil-conference-in-cambodia

[6] புதியதொலைகாட்சி, உலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்!, Web Team, Published : 20 May, 2018 09:13 pm

[7] The Hindu, World Tamil conference on May 19, 20, STAFF REPORTER PUDUCHERRY, APRIL 16, 2018 01:010 IST; UPDATED: APRIL 16, 2018 01:01 IST

The Federation of International Tamizh Association (FITA) is organising World Tamizh Conference 2018 at Angkor Wat in Cambodia on May 19 and 20, 2018. Thanikatchalam, president, FITA, in a press statement said thousands of Tamilians are expected to participate in the conference, which will be held next to the famous temple complex

[8] http://www.puthiyathalaimurai.com/news/world/45562-world-tamil-s-conference-contain-in-cambodia.html

[9] https://www.youtube.com/watch?v=nTVgcLcDk0U

[10] https://www.youtube.com/watch?v=4u_CyWDEMXE

[11] https://www.youtube.com/watch?v=BKezP0r4hYU

[12] https://www.youtube.com/watch?v=5JLQGk7SOQ4

[13] https://www.youtube.com/watch?v=DWY5mpWXEkw

[14] https://www.youtube.com/watch?v=TqwWBTKB_uc

[15] https://www.youtube.com/watch?v=qNyB8YSA_EY

[16] https://www.youtube.com/watch?v=EDLKaRu-LYA

[17] https://www.youtube.com/watch?v=OJB6QsqaKN8

[18] https://www.youtube.com/watch?v=a001htlfbPs

[19] https://www.youtube.com/watch?v=btYakqgfvDM

[20] https://www.youtube.com/watch?v=221fIZ0owg8

[21] https://www.youtube.com/watch?v=UqfolrB8RnY

[22] https://www.youtube.com/watch?v=Y0RN7CXLCK0

Advertisements

மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

மே 19, 2012

மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

சமீபத்தில், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.

ஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

முஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.

முஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.

இஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது?

விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://tamilheritage.wordpress.com/2010/01/02/madurai-pontiff-confronting-with-christians-muslims/

மதமாற்றம் என்ற பெயரில் மலேசியாவில் என்ன நடக்கிறது?

நவம்பர் 13, 2010

மதமாற்றம் என்ற பெயரில் மலேசியாவில் என்ன நடக்கிறது?

மலேசியாவில் இந்து பெண்கள் படும்பாடு அதிகமாகவே உள்ளது. முக்கியமாக மதமாற்றத்தினால் அதிகமாகவே பாதிக்கப் படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் பிரிக்கப்படுகின்றன. ஏதோ ஆடு-மாடுகளைப் போல அவை பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன. எல்லா வழக்குகளிலும் பொதுவாக பார்க்கும் பிரச்சினை, ஒரு ஆண் முஸ்லீமாக மாறுகிறான், பிறகு, தனது மனைவி-குழந்தைகளை முஸ்லீமாக வற்புறுத்துகின்றான். மனை மறுக்கிறாள். குழந்தைகள் பறிக்கப்படுகின்றன, வலுக்கட்டாயமாக மதமாற்றப்படுகின்றன. தந்தையே அவ்வாறு செய்யும்போது, மலேசிய அரசு ஊக்குவிக்கிறது, உதவுகிறது. சரீயத் சட்டத்திகீழ் வழக்குகள் நடத்தப் படும் போது, காஃபிர்-இந்துக்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை, கிடைக்காது. இதையறியாத அல்லது அறிந்தும் அறியாதது போல இருக்கும் மலேசிய இந்துக்கள் இவ்வாறுதான் அவஸ்தைப்படுகிறார்கள்.

ஷாமலா என்ற இந்து பெண்மணி படும்பாடு: ஷாமலா எட்டுவருடங்களுக்கு முன்பாக தனது கணவனிடமிருந்து பிரிந்து வாழும் இந்து. கணவனோ மதமாறிய முஸ்லீம். அவளுக்குத் தெரியாமல், இரண்டு குழந்தைகளை அவன் முஸ்லீமாக மதமாற்றி விடுகிறான். இருவருமே தங்களுடைய குழந்தைகள் தத்தம் மதத்தின்படித்தான் வளர்க்கப்படவேண்டும் என்று சண்டையிட்டுக் கொண்டு, நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். வழக்கில் ஷாமலா தோற்றால், குழந்தைகள் அவளிடமிருந்து பிரிக்கப்படும். ஆகையால், 2004ல் அவள் மலேசியாவை விட்டு தனது இரண்டு பையன்களுடன் – சக்திவரன் (11) மற்றும் தெய்வஸ்வரன் (9) தலைமறைவாகி விட்டாள். ஆனால் 12-11-2010 அன்று மலேசியாவின் நீதிமன்றம் அவளுடைய வேண்டுக்கோளை மறுத்துவிட்டதுடன், நீதிமன்ற பாஅதுகாவல் வேண்டும் என்றால், அவள் உடனடியாக மலேசியாவிற்குத் திரும்பவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

Malaysian court refuses mum’s bid to convert sons religion

by The Malaysian Insider ; 05:55 AM Nov 13, 2010

http://www.todayonline.com/World/EDC101113-0000074/Malaysian-court-refuses-mums-bid-to-convert-sons-religion

PUTRAJAYA – Malaysia’s top court on Friday unanimously dismissed a Hindu mother’s bid to raise her two young children in the religion they grew up with.

Ms S Shamala’s two children were converted to Islam eight years ago by her estranged Hindu-turned-Muslim husband, without her knowledge or consent.

Friday’s 5-0 ruling in the Federal Court is a blow to the battle to end one-sided religious conversions. These have caused a rift in the nation, which is multicultural and secular but recognises Islam as the official creed. The panel, led by Chief Justice Zaki Azmi, also ruled that Ms Shamala must return to Malaysia if she wants the court’s protection.

The 38-year-old fled the country in 2004 with her two sons Saktiwaran and Theivaswaran – now aged 11 and nine years old respectively. Their current location is unknown.

Both parents are in a bitter fight to gain custody over the two boys and be allowed to raise them in their respective religions.

http://www.mysinchew.com/node/47992

இப்பிரச்சினைப் பற்றிய முந்தைய செய்திகள்-வழக்குகள்-விவாதங்கள்

மதமாற்ற விவகாரம்: இந்து சங்கம் அமைச்சரவை உதவியை நாடுகிறது

தாயாரின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக மூன்று இளங்குழந்தைகள் ஈப்போவில் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சங்கத் தலைவர் எ. வைத்திலிங்கம் புதிய அமைச்சரவையின் உதவியை நாடியுள்ளார்.

“இப்பிரச்னை துணைப் பிரதமர் முகைதின், பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன் மற்றும் மனிதவள அமைச்சர் எஸ். சுப்ரமணியம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபின், இது ஒரு கடுமையான பிரச்னையாகக் கருதப்படுகிறது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இப்பிரச்னையைக் கையாள்வதற்கு கோ, சுப்ரமணியம் மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பகாரும் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை துணைப் பிரதமர் முகைதின் அமைத்துள்ளார் என்றாவர்.

“இதற்கிடையில், சம்பந்தப்பட்ட அனைவரும் அமைதி காத்து இப்பிரச்னைக்கு நியாயமான தீர்வு காண உதவுமாறு இந்து சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நீதிக்காகப் பிராத்னை செய்வோம்”, என்று வைத்திலிங்கம் கூறினார்.

வயது ஒன்றிலிருந்து பன்னிரண்டு வயதுடைய மூன்று குழந்தைகளை அவர்களுடைய தகப்பனார் முகமட் ரிட்ஜுவான் அப்துல்லா ஏப்ரல் 12 ஆம் தேதி அக்குழந்தைகளின் பிறப்புப் பத்திரங்களை மட்டுமே முன்வைத்து மதமாற்றம் செய்தார். குழந்தைகளைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்வதற்கான உத்தரவைப் பெறுவதற்கு ஷரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அக்குழந்தைகளின் தாயார், எம். இந்திரா காந்தி, 35, அவருடைய குழந்தைகள் இந்து மதத்தைப் பின்பற்ற அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.

தற்போது, அத்தம்பதிகளின் இளையமகள் பிரசன்னா திக்சா, முகமட் ரிட்ஜ்வானுடன் இருக்கிறார். இதர இரண்டு குழந்தைகளும் – தேவி தர்க்ஷிணி, 12, மற்றும் காரன் தினேஷ் – தாயார் இந்திராவுடன் இருக்கின்றனர்.

இஸ்லாமிய இலாகா அதிகாரிகள் அவ்விரு குழந்தைகளையும் எடுத்துக்கொண்டுபோய் விடுவார்கள் என்ற அச்சத்தில் அந்த பாலர்பள்ளி ஆசிரியர் தன்னுடைய உறவினரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

அமைச்சரவைக்குழு என்ன செய்ய முடியும்?

அடுத்த வாரம் குழந்தைகளை தாயாரின் பொறுப்பில் விடுவதற்கான மனு தாக்கல் செய்யப்படும். பின்னர் மதமாற்றம் சம்பந்தமான விசயங்கள் கவனிக்கப்படும் என்று இந்திராவின் வழக்குரைஞர் எ. சிவநேசன் கூறினார்.

“இம்மாதிரியான விவகாரங்களில் நீதி கிடைப்பதில்லை.”

“நான் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய வேதனைகளைப் பார்த்திருக்கிறேன், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களின் வேதனையை”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அமைச்சரவைக்குழுமீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று சிவநேசன் கூறினார்.

” புதிய குழு என்ன செய்யப்போகிறது? மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டதன் மூலம் அக்குழு பிரச்னையை எப்படி தீர்க்கப்போகிறது”, என்று அவர் வினவினார்.

மதமாற்றம் செய்ய விரும்புகிறவர் இஸ்லாமிய இலாகாவில் தனது மதமாற்றத்தைப் பதிவு செய்துகொள்வதற்குமுன் அவர் சிவில் சட்டப்படி செய்து கொண்ட திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் முறையாக செய்து முடித்துவிட்டது கட்டாயமாக்கப்படுவதின் வழி மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று சிவநேசன் கூறினார்.

“இரு தரப்பினரும் மதம் மாறினால், பிரச்னை இல்லை. ஆனால், ஒருவர் மதம் மாறி இன்னொருவர் மாற விரும்பவில்லை என்றால், அவர்களுடைய குழந்தைகள் 18 வயதை அடைந்து அவர்கள் தாங்களாகவே ஒரு முடிவு எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

சர்ச்சைக்குரிய பிரச்னை

சிவில் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் அல்லாதவர்களின் மதமாற்றம் – ஒருவர் மதம் மாற விரும்புவதும் இன்னொருவர் மறுப்பதும் – எப்போதும் பெரும் சர்ச்சையை கிளரிவிடுகிறது. ஏனென்றால் இது சம்பந்தப்பட்ட சட்ட நிவாரணங்கள் தெளிவற்றவைகளாக இருப்பதுடன் முஸ்லிம் தரப்பிற்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது.

2006 ஆம் ஆண்டில் தங்களுடைய குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்து மனைவி ஆர். சுபாஷினிக்கும் முஸ்லிமாக மாறி முகம்மட் சாபி என்ற பெயர் கொண்ட டி. சரவணனுக்கும் இடையிலான சட்டப் போராட்டம் பிரசித்தி பெற்றதாக இருந்தது.

முகம்மட் சாபி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்கும், குழந்தைகளை தன் பொறுப்பில் வைத்துக்கொள்வதற்கும் ஷரியா நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடினார்.

இதன் பின்னர், தன்னுடைய பிரிந்துவிட்ட கணவர் ஷரியா நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக்கோரி சுபாஷினி செய்து கொண்ட மனு உச்ச நீதிமன்றம் வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் நிராகரிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில், நாட்டின் உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட விதி 12(4) இன் கீழ் ஒரு குழந்தையின் மதமாற்றத்திற்கு பெற்றோர்களில் ஒருவரின் ஒப்புதல் போதுமானது என்று தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருப்பது என்பது பற்றி தெளிவான தீர்ப்பு அளிக்கவில்லை. அது குறித்து கணவனும் மனைவியும் அவரவர் சம்பந்தப்பட்ட சட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தது.

இப்பிரச்னை பலதடவைகளில் எழுப்பப்பட்டபோதிலும் அரசாங்கம் இது குறித்து மௌனமாக இருந்து வந்திருக்கிறது.

மலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது?

ஜனவரி 5, 2010

மலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது?

மலாக்கா / மலேசியா இஸ்லாமிய மயமாக்கப்பட்ட கதைகள் இவ்வாறு உள்ளன. பரமேஸ்வரன் என்ற இந்து ராஜா 1409ல் “பசை” என்ற இளவரசியைத் திருமணம் செய்து கொண்டானாம். இஸ்கந்தர் ஷா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டானாம். தென்னிந்திய ராவுத்தர்கள், மரக்காயர்கள்தாம் திருமணத்தை அறிமுகப்படுத்தினார்களாம்.

மலாக்காவின் சுல்தான் ஆட்சிசெய்த காலம்
பரமேஸ்வரன் எனப்படும் இஸ்கந்தர் ஷா 1400 – 1414
மேகத் இஸ்கந்தர் ஷா 1414 – 1424
முஹம்மத் ஷா 1424 – 1444
அபு ஸைய்யத் 1444 – 1446
முஸாஃபிர் ஷா 1446 – 1459
மன்சூர் ஷா 1459 – 1477
அலவுத்தீன் ரியாத் ஷா 1477 – 1488
மஹுமுத் ஷா 1488 – 1528

இருப்பினும் உண்மையாகவே பரமேஸ்வரன் மதம் மாறினானா இல்லையா என்று தெளிவான ஆதாரங்கள் இல்லையாம். மேற்குறிப்பிடப்பட்டது சப்ரி ஸைன் என்பவரது கருதுகோளாகும். சோழர் காலத்திலேயே தமிழ் / இந்திய வணிகர்கள் சீன ஆவணங்களில் முகமதிய பெயர்களில் குறிப்பிடப்பட்டார்கள். இது இன்றும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், தங்கள் பெயர்களை முஸ்லிம் பெயர்கள் போல மாற்றிக் கூறுவதற்கு ஒப்பாகும். டி.வி.எஸ் கம்பெனிக்கு வேலைக் கேட்டுச் செல்பவர்கள் நாமம் போட்டுக் கொண்டு செல்வது மாதிரிதான். இந்த கதை / பழக்கம்.

 

An artist’s impression of Parameswara, who ruled Singapore in the 1390s.

பரமேஸ்வரன் இறந்ததும் அவனது மகன் மலாக்காவின் இரண்டாவது அரசனாக சீனர்களால் எற்றுக் கொள்ளப்பட்டானாம், அவனுக்கு ராஜா ஸ்ரீ ராம விக்ரம, டெமாசிக் மற்றும் மெலகவின் என்று அங்கீகரிக்கப்பட்டானாம். அவன் இறந்ததும் மலைமேல் “தஞ்சுங் துயான்” (also known as Cape Rachado), near Port Dickson என்ற இடத்தில் புதைக்கப்பட்டானாம். ஒரு அடையாள சமாதி கானிங் கோட்டை அருகில் சிங்கப்பூரிலும் (Fort Canning in Singapore) உள்ளாதாம்! “துஞ்சும் தூயான்” என்று தமிழில் பொருள் கொண்டால் தூங்கினாலும், தூங்கவில்லை என்று பொருள் வருகிறது அதாவது இறந்த பிறகும் வாழ்கிறான் என்றாகிறது!

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம். 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே.

Parameswara (aka Iskandar Shah)
1st Ruler of Malacca

An artist’s impression of Parameswara, who ruled Singapore in the 1390s.
Reign Malacca Sultanate: c. 1400-1414
Titles Prince of Srivijaya, Raja of Temasek
Born 1344
Birthplace Palembang, Sumatra
Died 1414 (aged 69 or 70?)
Place of death Malacca, Sultanate of Malacca
Buried Disputed
Predecessor Paduka Seri Rana Wira Kerma, Raja of Temasek
Successor Megat Iskandar Shah (Sultan of Malacca)
Offspring Megat Iskandar Shah (Sultan of Malacca)
Royal House Srivijaya
Father Paduka Seri Rana Wira Kerma, Raja of Temasek

நன்றி:
http://en.wikipedia.org/wiki/Parameswara_(sultan)