Archive for the ‘ஆனந்த குடும்பம்’ Category

ஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா?

ஓகஸ்ட் 22, 2010

ஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா?

பொதுவாக இன்று இந்தியர்கள், இந்தியா அல்லாத இந்தியாவிற்குப் பொறுந்தாத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்……….முதலியவற்றைப் பின்பற்றுவதால்தான் இத்தகைய சோரம் போகும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

குறிப்பாக, இந்தியா எனும்போதே “பாரதத்தை” விட்டுவிடுகிறோம். அரசியல் நிர்ணய சட்டம், இந்தியா என்கின்ற பாரதம் என்றதால், பாரத்தத்தை மறைந்து வாழ்கின்ற பாரத மக்கள், தங்களது தாம்பத்திய, குடும்ப, ஆண்-பெண் நல்லுறவுகளை இழந்து உழல வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.

“கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா” என்று ஆரம்பித்து, “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” என்றாகியபோதே, பொறுப்புள்ள மக்கள் அதைப் பற்றி சிந்திக்காமல், வெட்டியாக நேரத்தை விரசத்தில் வீணாக்கி, தமிழை விபச்சரமாக்கிய, கொச்சைப்பேர்வழிகளைத் தலைவர்களாக்கினார்கள். அவர்கள்தாம் அன்று “(……………)…………………ஆளுக்குப்பாதி” என்று போஸ்டர்கள் ஒட்டி, இத்தகைய சீரழிவை ஆரம்பித்து வைத்தனர். எனவே, அந்த அயோக்கியர்களை ஏன் விரட்டக்கூடாது?

150 ஆண்டுகளாக கூட்டுக் குடும்பத்திற்கு முன்னுதாரமாக விளங்கும் குடும்பம்

ஜனவரி 2, 2010
150 ஆண்டுகளாக கூட்டுக் குடும்பத்திற்கு முன்னுதாரமாக விளங்கும் குடும்பம்
ஜனவரி 01,2010,23:56  IST
http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=141

இன்று படித்த செய்திகளில் மனதுக்கு ஆறுதலாகவும், நிம்மதியகவும், சந்தோஷமாகவும் இருந்தது இதுதான்!

அக்குடும்பத்தாரின் பெரியவர்கள் வாழ்க பல்லாண்டு!

அவர் வழி வந்தவர்களும் அவர்கள் மூதாதையர் போலவே, ஆலமரத்தை வளர்க்க இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போமாக!

* ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்கிறோம்;

* குடும்பத்தின் சுக, துக்கங்களில் பங்கேற்கிறோம்.

* இதனால், உறவுகளில் விரிசல் ஏற்படாமல், ஆலமரத்தின் விழுதுகள் போல் உள்ளோம்.

உண்மையில் இதைத்தான் ரத்தினங்களால் இழைத்து பட்டயத்தில் பதிக்கவேண்டும்!

ஆனால், எதையெதையோ பதிக்கவேண்டும் என்று ஒரு பெருசு கூறுகிறது!

Human Intrest detail newsஅழகர்கோவில் : தனிக்குடித்தன மோகம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், 150 ஆண்டுகளாக ஏழு தலைமுறைகளாய், ஒன்றாக சேர்ந்து பிரார்த்தித்து கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை மற்றவர்களுக்கு உணர்த்துகின்றனர், திருநெல்வேலியைச் சேர்ந்த விசுவாசம் குடும்பத்தினர்.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலைப்பகுதிக்கு, 1860ம் ஆண்டு, வனத் துறை அதிகாரியாக, விசுவாசம் என்பவர், குடும்பத்துடன் வந்தார். இவருக்கு இயேசுதாஸ், துரைராஜ், மேரியம்மாள், செல்லையா, ரெத்தினவதி, தாயம்மாள், பொன்னையா என, ஏழு குழந்தைகள். வெவ்வேறு தொழில்கள் செய்து வந்தாலும், அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர். இவர்கள் குழந்தைகள், தற்போது பல்வேறு நாடுகளில் பணியில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிச., 30ம் தேதி, அனைவரும், அழகர்கோவில், பொய்கைக்கரைப் பட்டியில் உள்ள ஜெபத்தோட்டத்தில் ஒன்று கூடி, அன்று முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றனர். இதற்காக, முதல்நாளே, ஒரே வீட்டில் ஐக்கியமாகி விடுகின்றனர். தற்போது, இந்த குடும்பத்தில், 150 பேர் உள்ளனர்.

இதுகுறித்து, மூத்த குடும்பத் தலைவி பத்மாவில்சன் கூறியதாவது: இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம் உறவுகள்; அதை நாம் பாதுகாக்க வேண்டும். ஏழு தலைமுறையாக, உறவுகளை பாதுகாத்து வருகிறோம். பேரன், பேத்திகள் சிலர், வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். அனைவரும் ஒன்று சேரும் இந்த நாளில், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்கிறோம்; குடும்பத்தின் சுக, துக்கங்களில் பங்கேற்கிறோம். இதனால், உறவுகளில் விரிசல் ஏற்படாமல், ஆலமரத்தின் விழுதுகள் போல் உள்ளோம். இவ்வாறு பத்மா வில்சன் கூறினார்.

நூற்றாண்டு கண்ட தாத்தாவிற்குவிழா கொண்டாடிய பேரன்கள்
ஜனவரி 04,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20497

General India news in detailசெஞ்சி:செஞ்சி அருகே 100 வயதை நிறைவு செய்த தாத்தாவுக்கு, பேரக்குழந்தைகள் விழா கொண்டாடினர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா, அவியூரை சேர்ந்தவர் முனுசாமி. இவர், 1910ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்தார். நேற்று முன்தினம் தனது 100 வயதை நிறைவு செய்தார்.முனுசாமியின் மனைவி கண்ணம்மாள், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். கணபதி (65), ராமகிருஷ்ணன் (59) என்ற மகன்கள் உள்ளனர். பரசுராமன் என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் இறந்து விட்டனர். சீனுவாசன் (98) என்ற தம்பியும், ஜானகி (93) என்ற தங்கையும் உள்ளனர்.

முனுசாமிக்கு எட்டு பேரன்கள், ஆறு பேத்திகள், 11 கொள்ளுப்பேரன்கள், 10 கொள்ளு பேத்திகள் உள்ளனர். மேலும் தம்பி மகன், மகள் வழியிலும் 15க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர்.சென்னை உட்பட பல ஊர்களில் உள்ள பேரப்பிள்ளைகளும், கொள்ளு பேரக் குழந்தைகளும் சேர்ந்து முனுசாமிக்கு நேற்று நூற்றாண்டு நிறைவு விழா நடத்தினர். உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பியதுடன், போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டினர். காலையும், மதியமும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உறவினர்கள் அனைவரும் முனுசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

திண்ணைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்த முனுசாமி, அவியூர் ஊராட்சித் தலைவராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் கூட இல்லாதவர். இளம் வயது முதல், அனைத்து இடங்களுக்கும் நடந்து செல்லும் பழக்கம் உடையர். இவருக்கு சமீபத்தில் நடத்திய மருத்துவ பரிசோதனையில் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த நோய்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.நேற்று நடந்த விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், ம.தி.மு.க., மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் மணி உள்ளிட்டவர்கள் சால்வை அணிவித்து, வாழ்த்து பெற்றனர்.நூறு வயதை கடந்த பின்னரும் கண்ணாடி அணியாமல் பேப்பர் படிப்பதும், மற்றவர்கள் துணை இல்லாமல் நடந்து செல்வதும் முனுசாமியின் நல்ல பழங்கங்களுக்கு கிடைத்த பரிசாக கிராம மக்கள் பாராட்டினர்.