தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி புத்தகங்கள் காணாமல் போவது எப்படி?:

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி புத்தகங்கள் காணாமல் போவது எப்படி?:

Saraswati Mahal -library

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், புத்தகங்கள்: தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு முன்பு பழைமையான நூல் திருட்டு போன சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்[1]. நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான பெருமையுடைய இந்த நூலகம் கி.பி. 1535 – 1675 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் மூன்று லட்சம் மோடி ஆவணங்கள் ஆகியவை உள்ளன. நூலகத்தில் 49 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிகளில் காணப்படும் ஓலைச்சுவடிகள் பெரும்பாலானவை. கன்னடம், மலையாளம் மொழிகளில் ஓரிரு எண்ணிக்கையிலும், பர்மா மொழியில் ஒரு ஓலைச்சுவடியும் உள்ளது. 70 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகள் மட்டுமின்றி 200 ஆண்டுகளுக்கு முன்பு அயல்நாடுகளில் அச்சிடப்பெற்ற ஜெர்மன், இத்தாலி, டச்சு, ஆங்கில மொழியில் அமைந்த நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் உள்ளன. இதில் பண்டைய தமிழர்களின் பண்பாடு பற்றிய தகவல்கள், ஜோதிடம், மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன[2].

Ziegenbalg book

புதிய ஆகமங்களின் முதலாம் பங்குஎன்ற புத்தகம் காணாமல் 2006ல் போனது: ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன்பால்கு, தரங்கம்பாடியில் புதிய அச்சுக்கூடத்தை நிறுவினார். அங்கு 1810-ம் ஆண்டு ‘புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு’ என்னும் நூலை 3 பிரதிகள் மட்டும் அச்சிட்டார். முதல் பிரதி லண்டன் அருங்காட்சியகத்திலும், மற்றொரு பிரதி தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திலும் பாதுகாக்கப்பட்டு வந்தது. 3-வது பிரதி எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. இந்நிலையில், 2006, அக். 8-ம் தேதி இந்நூலை பார்ப்பதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் சிறப்பு அனுமதி பெற்று வந்தனர். கண்ணாடிப் பேழையிலிருந்த இந்நூலை இருவரும் பார்த்து, ஒவ்வொரு பக்கமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நீண்ட நேரமாக புகைப்படம் எடுத்து கொண்டிருந்ததால் ஊழியர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியது. இருவரும் சென்ற பிறகு இந்நூல் காணாமல்போனது தெரிய வந்தது. சுற்றுலா பயணிகள் 2 பேர் தான் அந்த நூலை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. அப்போது, நூலக பாதுகாவலர் பெருமாள், நூலகர் சுதர்சன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Saraswati Mahal Library- mss and book

ஓலைசுவடி திருட்டு வழக்கமாக இருந்து வந்துள்ளது[3]: இதற்கு முன்பு அரிய   ஓலைச்சுவடிகளும், பழைமையான சித்த மருத்துவம், ஆன்மிக ஜோதிட புத்தகங்களும் காணாமல் போயுள்ளன[4]. இதுகுறித்து யாரும் கவலைப்படவில்லை. அவையெல்லாம் பதிவாகவும் இல்லை. அப்படியென்றால், தமிழர்களின் பற்று எப்படியிருக்கும் என்பதனை  கண்டு கொள்ளலாம். கலைகளையும், பாரம்பர்யத்தையும் இழந்து நவீனத்தின் திசையில் நிற்கும், நம் சந்ததியினருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள், ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதால் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை ஆய்வு செய்து கணக்கெடுத்து கண்காணிப்புக்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் தஞ்சாவூர் மக்கள்!

Saraswati Mahal Library- mss and book Dinakaran

2006லிருந்து 2019 வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது: திருடு போன நூலைக் கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள், சரஸ்வதி மஹால் நூலக ஊழியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் சார்பாக அரசுக்கு புகார்கள் சென்றன. ஏனெனில், நூலகத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்குத் தெரியாமல், இது நடக்க முடியாது. கேமராக்களும் பொறுத்தப் பட்டிருப்பதால், அவர்களுடைய உதவி இல்லாமல் நடக்காது என்பது தெரிந்தவிசயம் தான். இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதற்குள், வி,ஜெயகுமார் என்பவர் தம் நண்பர்களுடன், இட்தைப் பற்றி புகார் கொடுத்தனர்[5]. அக்டோபர் 8, 2006லிருந்து அப்புத்தகம் காணாமல் போயிருக்கிறது. அதே போல, ரத்தினங்கள்  பதிக்கப்பட்ட கிருஷ்ணர் ஓவியம் 1968லிருந்து காணவில்லை என்று எடுத்துக் காட்டினர்[6].

Enquiry at Saraswati Mahal - 13-03-2019

மார்ச் 2019ல் நடந்த விசாரணை: இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர் விசாரணை நடத்தி வந்தார். இதுதொடர்பாக நூலகத்தைச் சேர்ந்த சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நூல் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் இரு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை விசாரணை நடத்தினர். இதில், சம்பவம் நிகழ்ந்த காலத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

Saraswati Mahal Library- mss and book - complaint given

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு .ஜி. பொன்மாணிக்கவேல் இருமுறை விசாரித்தது: இதேபோல 1968-ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவரத்தினங்கள் பொறிக்கப்பட்ட கிருஷ்ணர் படம் கொள்ளை போனது. சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன நூல், கிருஷ்ணர் படத்தையும் மீட்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இந்த புகார் தொடர்பாக 2 முறை ரகசியமாக சரசுவதி மகால் நூலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்[7]. இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் சரசுவதி மகால் நூலுகத்துக்கு 13-03-2019 அன்று காலை 11 மணிக்கு வந்தனர்[8]. அவர்கள் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களிடம் கொள்ளை போன நூல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.  தொடர்ந்து திருடு போன சமயத்தில் நூலகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்த பெருமாளிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்[9]. அப்போது ஊழியர்கள் அளித்த வாக்குமூலத்தை தட்டச்சு மூலம் உடனுக்குடன் போலீசார் பதிவு செய்தனர்.

Harshavardhan at Saraswati Mahal Library

காணாமல் போன நூல் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டதா?: விகடன் இவ்வாறு புரளி கிளப்பியுள்ளது. இந்த விசாரணை மாலை 4.15 மணி வரை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரிடம் நிருபர்கள் கேட்டபோது, நூல் கொள்ளை போனது குறித்து புகார் வந்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு எதை பற்றியும் சொல்ல முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றார். காணாமல் போன நூல் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நூலக வட்டாரத்தில் பேசிக்கொண்டனர். ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து உறுதியான தகவலும் இல்லை[10]. பிறகு எதற்கு விகடன் புரளி செய்தியை வெளியிடுகிறாது என்றூ தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

19-03-2019

Ziegenbalg New testament book - complaint given

[1] தினமணி, சரசுவதி மகால் நூலகத்தில் நூல் திருட்டு சம்பவம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை, By DIN | Published on : 14th March 2019 08:44 AM

[2] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/mar/14/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3113523.html

[3] விகடன், சீகன்பால்கு அச்சிட்டபுதிய ஆகமங்களின் முதலாம் பங்குநூல் எங்கே? – தஞ்சை சரஸ்வதி மகாலில் களவுபோகும் பொக்கிஷங்கள்!, வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (01/09/2017) கடைசி தொடர்பு:12:10 (01/09/2017)

[4] https://www.vikatan.com/news/spirituality/100946-old-scripts-theft-in-thanjavur-saraswathi-mahal-library.html

[5] On Wednesday, a group of RTI activists and lawyers, led by V Jeevakumar, submitted a petition to T Senthilkumar, SP, in which, they pointed out that a rare Tamil book titled “Puthiya Agamangalin Muthalam Pangu” printed in 1810 was missing from the library since October 8, 2006. The petitioners suspected two German tourists to whom the book was taken out from the showcase and shown to them. Similarly, a Thanjavur Painting, which depicted Krishna, studded with precious stones was also stolen from the library in 1968.

[6] https://www.dtnext.in/News/TamilNadu/2018/03/15033603/1065121/Ancient-treasures-missing-from-Saraswathi-Mahal.vpf

[7] தினத்தந்தி, தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன அரிய நூல் குறித்து ஊழியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை, பதிவு: மார்ச் 14,  2019 04:45 AM.

[8] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/14001410/The-5hour-investigation-was-conducted-by-the-employees.vpf

[9] விகடன், தஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடு போன நூல்ரூ.18 கோடிக்கு விற்பனையா?, வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/03/2019) கடைசி தொடர்பு:22:00 (13/03/2019)

[10] https://www.vikatan.com/news/tamilnadu/152227-thanjavur-saraswathi-mahal-book-stolen-and-sales-in-18-crore.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி புத்தகங்கள் காணாமல் போவது எப்படி?:”

 1. vedaprakash Says:

  தினமலர், ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளருக்கு மதிப்பு கிடைப்பதில்லை
  Updated : ஜூன் 26, 2010 00:02 | Added : ஜூன் 25, 2010 23:15 |
  https://www.dinamalar.com/News_Detail.asp?Id=26380

  கோவை : “தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு உள்ள மதிப்பு கூட, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை’ என்று மூத்த ஓலைச்சுவடி நிபுணர் நாகராஜன் தெரிவித்தார். இது குறித்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்கில், தினமலர் இதழுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழில் உள்ள பழம் பெரும் செல்வங்கள் ஓலைச்சுவடியிலிருந்துதான் வந்தன. ஓலைச்சுவடி பதிப்புகளுக்குப் பிறகுதான் தமிழ் ஆராய்ச்சி முறையாக வந்தது. இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட தகவல்கள் அங்கிருந்து தான் பெறப்பட்டன. உ.வே.சா., அவர்கள் தான் சுவடியிலிருந்து துல்லியமான தகவல்களைப் பெற்று நூல்கள் வெளியிட்டார். அப்போது அவருக்கு எந்த விதமான அறிவியல் சாதனங்களும் இல்லை. கையால்தான் அவர் எழுதியாக வேண்டும். தற்போது, அறிவியல் சாதனங்கள் இருந்த போதிலும், சுவடியிலுள்ள கருத்துக்களை வெளிக்கொண்டு வரும் வேலை வேகமாக நடக்கவில்லை.

  இன்று சுவடியிலிருந்து தகவல்களைப் பெறுவதில் தரம் குன்றி வருகிறது. அதே சமயத்தில் இம்முயற்சி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பேர் இத்துறைக்கு வருகிறார்கள். அதனால் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.இது கட்டாயமும் கூட. இது தமிழ் பதிப்பு உயரவும், தமிழ் உயரவும் வழி வகுக்கும்.

  இன்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. இவற்றை புத்தகங்களாக வெளியிட இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும். இவற்றில் பெரும்பாலானவை மருத்துவத் தகவல்களைக் கொண்டிருக்கின்றன. இது அறியப்பட்டால் தமிழ் மருத்துவத்துக்கு என தனிப் பல்கலைக்கழகம் வைக்கும் அளவுக்கு தகவல்கள் பெறப்படும். சுவடியில் பிற இலக்கியமும் கிடைக்க வாய்ப்புள்ளது. பாரம்பரியமாக பலர் சுவடிகளை பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் அந்த சுவடிகளை பொதுப் பயன்பாட்டுக்குத் தர மறுக்கிறார்கள். என்றாலும் தொடர்ந்து சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
  சுவடியில் உள்ள தகவல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலானவை. அவற்றை பெயர்த்து புத்தகங்களாக மாற்ற வேண்டுமானால், யாப்பு தெரிய வேண்டும். பின்னர் உரைநடைக்கு மாற்ற வேண்டும். ஆனால் இன்று முதுகலை படிக்கும் மாணவர்கள் கூட, யாப்பு தெரியாமல் வெளி வந்துவிட முடியும். ஏனென்றால் இன்று ஆய்வு செய்யும் அளவுக்கு தமிழ் மொழியில் நூல்கள் வந்துவிட்டதால், யாப்பை மாணவர்கள் கற்பதில்லை.

  செய்யுளிலிருந்து யாப்புக்கு கொண்டு வருவதற்குத் தனித் தகுதிகள் வேண்டும். யாப்பிலக்கணம் தெரிந்தால்தான் சுவடியியலில் சிறந்து விளங்க முடியும். தமிழ்த் தகவல்கள் புத்தக வடிவுக்கு கொண்டு வர முடியும். சுவடியைக் கூட யாரும் படிக்கலாம். 15 நாளில் தெளிவு பெறலாம். ஆனால் யாப்பு படிப்பது அதைவிட கடினமானது. ஆகவே யாப்பு வளர வேண்டும். பழைய யாப்பு தெரிய வேண்டும்.பழைய பொக்கிஷத்தை அறிய இது அவசியம். இவ்வாறு நாகராஜன் தெரிவித்தார்.

 2. vedaprakash Says:

  கோவை: பண்டைய ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு

  January 27, 201Posted By : SuryaAuthors
  http://www.ns7.tv/index.php/ta/node/7245

  5 தலைமுறைகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பண்டைய ஓலைச்சுவடிகள் தற்போது கோவை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5000 நோய்களுக்கான மருந்துகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

  பண்டைய காலங்களில் தகவல் பரிமாற்றங்களுக்காக ஓலைச்சுவடிகளே பெரும்பாலும் பயன்பட்டன. மேலும் மருத்துவக் குறிப்புகளை இதுபோன்ற ஓலைச்சுவடிகளிலேயே எழுதி வைத்திருந்தனர். 84கட்டுக்கள் கொண்ட 12 ஆயிரம் ஓலைச்சுவடிகள் தற்போது கோவை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  இந்த ஓலைச்சுவடிகளில் சுமார் 4ஆயிரத்து 442 நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் போரின் போது கை, கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் தைலங்கள் பற்றிய குறிப்பும் அடங்கியுள்ளன. இதனைப் பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்தியதாக தெரிவிக்கிறார் சித்த மருத்துவர் துரைசாமி.

  தொல்லியல் கழகத்தின் வேண்டுகோளின்படி சில ஓலைச்சுவடிகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஓலைச்சுவடிகளின் மூலம் தயாரித்த சில தைலங்கள் நல்ல முறையில் விற்கப்பட்டு அதை வாங்கிய பொதுமக்கள் நன்மை அடைந்துள்ளனர். மேலும் புற்றுநோய் மையங்களுக்கும் இந்த மருந்துவ குறிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 3. vedaprakash Says:

  செண்பகம், தமிழகத்தில் உள்ள வரலாற்று சுவடிகளை காக்க பணம் கொடுத்து உதவிய தேசியத் தலைவர்! By Tharsan On Jul 17, 2017

  https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/

  ஆரம்ப காலத்தில் தமிழரின் தொன்மைகள் ஒவ்வொரு படையெடுப்பின் போதும் அழிக்கப்பட்டு தற்போது மிஞ்சியிருக்கும் ஒரு சிலவற்றினை பாதுகாப்பதற்கு தமிழக அரசு அக்கறை காட்டுவதில்லை. எமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் எண்கணித சாஸ்திரங்கள் போன்ற அரியவகை ஓலைச்சுவடிகள் பல தமிழகத்தை விட்டு வெகு தொலைவுக்கு சென்றுவிட்டது என்பது மிகவும் வேதனையான விடையம்.

  இதற்கு காரணம் தமிழக அரசு மட்டுமே. கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி எமது தொன்மைகளை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இன்று கூட ஜெர்மன் நாட்டிலிருந்து தமிழகம் வரும் ஆய்வாளர்கள் பழனி போன்ற இடங்களுக்கு சென்று அங்கு ஓலைச்சுவடிகலை வெறும் ஐநூறு ஆயிரம் ரூபாக்களுக்கு வாங்கி சென்றுவிடுகின்றனர் என்பது உண்மை.

  பணக்கஷ்டத்தில் இருக்கும் எமது மக்களும் அவற்றினை பணத்துக்காக விற்றுவிடுகின்றனர் என்பது மிகவும் வேதனையான விடையம். இலங்கையில் சமாதான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க தமிழகத்தில் இருந்து பல அறிஞர்கள் பேராசிரியர்கள் வந்து சென்றனர்.

  அப்படி ஒரு முறை வந்த சில தமிழ் உணர்வாளர்கள் தலைவரிடம் எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவடிகள் பணத்துக்காக விற்கப்பட்டுக் கொண்டிருப்பதை தலைவரிடம் கூறினார்கள்.

  தலைவரும் அந்த சுவடிகளை எப்படியும் காக்க வேண்டும். அதனை வெளிநாட்டினருக்கு விற்க விடவேண்டாம் எனவும் மக்களுக்கு தேவையான பணத்தினை நான் தருகிறேன். நீங்கள் அவை அனைத்தையும் வாங்கி பாதுகாருங்கள் என கூறி உடனடியாக பணத்துக்கும் ஒழுங்கு படுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.

  ஈழத்தில் தலைவர் இருந்தபோதும் எங்கெல்லாம் தமிழர்கள் பரந்து வாழ்கின்றனரோ.அங்கெல்லாம் தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனையோடு இருந்தவர்.

  கிளிநொச்சியில் சகல வசதிகளோடு தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 4. vedaprakash Says:

  The Hindu, 17th century Ramayana manuscript under lock and key after theft
  Sandeep Joshi VARANASI, AUGUST 10, 2014 22:13 IST
  UPDATED: AUGUST 11, 2014 08:08 IST

  https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/17th-century-ramayana-manuscript-under-lock-and-key-after-theft/article6301530.ece

  On December 22, 2011 the only original pandulipi (manuscript) of Ramayana dated 1648 AD were stolen.

  On December 22, 2011 when the only original pandulipi (manuscript) of Sri Ramcharitmanas (also referred to as the Ramayana) dated Samvat 1704 (1648 AD) and a few precious articles of its writer, Goswami Tulsidas, were stolen from the Hanuman temple in the Akhara Goswami Tulsidas on Tulsi Ghat, the Mishra family was shocked. Its then ‘Mahant’ or head priest, a noted environmentalist and professor at IIT-BHU, Veer Bhadra Mishra, had to face charges of theft conspiracy.

  It led to massive search operations by the Varanasi police, which was ‘informally’ aided by the CBI and the intelligence agencies as it was feared that these rare articles could be smuggled abroad. It took seven months before the police recovered all the articles — the rare pandulipi of Sri Ramcharitmanas, the piece of Goswami Tulsidas’ boat and a few ornaments of the temple — from two people in Varanasi. “But this theft changed everything…The articles that were so far available for public viewing were safely locked only to be taken out once every year to celebrate the Tulsi Jayanti,” says Professor V.N. Mishra, son of Professor Veer Bhadra Mishra, who is now the ‘Mahant’.

  Perturbed by all kinds of insinuations that his family had to face and the national and international media coverage, the Mishra family decided to make foolproof arrangements for safety and security of all articles related to Goswami Tulsidas in the temple where the great saint lived, even as they faced pressure from top government officials to hand over these items for greater safety. “My father thought how could he hand over the articles to the government when his family has been the custodian for centuries. So we brought a special fire and bullet resistant safe that weighed three quintals and placed it inside the temple. All the precious articles were then placed safely.”

  Those seven months till the police recovered the rare manuscript of Sri Ramcharitmanas led to an interesting development. “As the chances of recovering the original manuscript dwindled with each passing day, I decided to collect as many manuscripts of Goswami Tulsidas works as possible, including Sri Ramcharitmanas, from whatever source I could,” says Dr. Vijay Nath Mishra, a leading neurologist and younger son of Professor Veer Bhadra Mishra. “And since then I have collected 173 handwritten manuscripts from all over India. These include the Ramayana and other works of Goswami Tulsidas. I also found Sri Ramcharitmanas in Urdu that was printed in a Lahore press 90 years ago, which contains rare handmade pictures related to the Ramayana. I even have manuscripts in Farsi and Awadhi,” says Dr. Mishra.

 5. vedaprakash Says:

  Times of India, Mughal period Persian manuscripts stolen from public library, Farzand Ahmed, August 12, 2014
  ISSUE DATE: May 31, 1977; UPDATED: March 27, 2015 18:09 IST

  https://www.indiatoday.in/magazine/crime/story/19770531-mughal-period-persian-manuscripts-stolen-from-public-library-823742-2014-08-12

  An interior view of the library
  Over four years ago, on the night of January 8, 1973, a five-man gang sneaked into a huge fortress in the sleepy village of Bharatpura, eight kilometres northeast of Pali, broke open a strong room and escaped leaving behind the night guard in a pool of blood.
  On February 28, 1977, five persons were convicted for criminal conspiracy, dacoity and disposal of stolen property and sentenced to rigorous jail terms ranging from six to seven years, by the Special Judge of Patna, N.K.P. Sinha. The number was the same but the faces were different – among the convicts were a nawab of Rohtas, Baquar Hassan Belgrami, and a self-styled “research scholar”, Wazir Haider.

  The events from the commission of the crime to the conviction of the culprits reeled through a span of four years like a Hindi crime thriller. They were found guilty of stealing four rare Mughal period Persian manuscripts – Firdausi Shahnama, Sikandarnama, a set of Waslis and the Mutala-ul-Hind (a study of India), from the Gopal Narain Public Library, a private collection of a distinguished zamindar family which was converted into a public library in 1956 by the late Raghuraj Narain Singh.

  The case had a unique and rather dramatic start. Dhurpad Narain Singh, secretary of the library, a member of the family who was in Patna on that fateful night, came to know of the theft the following day. He rushed to the Bikram police station to lodge a complaint but the over-zealous officer in charge brushed him aside with the scornful remark, “a case of old books”! He must have thought there was something wrong with someone making a fuss over some “raddi” (scrap) books without realizing that this would soon turn out to be a sensational theft case. The police officer after much persuasion, reluctantly recorded the first information report.

  The family members who had collected the rare treasures which ran into 2,000 manuscripts in different languages since 1912, felt that the case was being “misdirected” by the police. A hue and cry was raised in Parliament and ultimately B.R. Dubey, D.S.P. of the Central Bureau of Investigation, took up the challenge when the Bihar government transferred the case to the Special Police Establishment in Delhi in June 1973.

  Dubey, heading a team of CBI investigators, combed different parts of the country, screened almost all possible antique dealers and nabbed the “brains behind the crime” leading to the recovery of paintings and pages of manuscripts from Varanasi and Delhi.

  In all nine persons were charge-sheeted including Baquar Hassan Belgrami, Wazir Haider, T.R. Khan, a stone dealer and C.M.N. Sahay, Technical Assistant of the National Museum, Delhi. Two of them, who were allegedly hired for lifting the manuscripts, had turned approvers. The judge acquitted Khan and Sahay as the charges brought against them could not stand.

  The prosecution revealed that Belgrami and Haider “who had got the taste of a clandestine trade in antique art objects” somehow knew of the importance of the hidden treasure of Bharatpura. “Both of them decided to assess the value of the manuscripts and then procure them by hook or crook.”

  Haider, the accused, visited the library in August 1971 under the guise of a “research scholar” and in January 1972 enrolled himself as a member of the library. In February that year, while examining Sikandarnama, he “stealthily” tore out one of the paintings. Belgrami and Haider then visited Delhi and sold the painting to C.M. Goel of Emporium De Art & Craft (Red Fort) for Rs. 400. The painting was subsequently recovered from him following disclosures made by Belgrami.

  Haider continued his “research work” at the library and entered into a pact with Khan (who along with a Patna jeweller was trying to purchase the manuscript) to lay their hands on the Persian manuscripts. Their attempts to induce D.N. Singh having failed, Belgrami, Haider and Khan conspired to hire some criminals to remove these manuscripts. This time they succeeded.

  Among the manuscripts removed, Shahnama of early 17th century, contained nearly 60 paintings, Sikandarnama, written in an exquisite hand within golden borders, contained over a dozen paintings. The Waslis was a collection of 17th century art of calligraphy including those of Muhammad Hussain Zarrin Raquam and Mutala-ul-Hind (a study of India) by Salamat Ali, a court physician. This is stated to be the personal copy of the author dealing with Indian philosophy, mathematics, physics, music, customs and origin of ragas and raginis.

  Barring Mutala-ul-Hind, all the manuscripts had been recovered by the CBI. During their investigations the CBI sleuths recovered Shahnama and the Waslis from Kangra Art Palace (Delhi) owned by P.R. Kapoor and traced out Sikandarnama in Mehra Art Palace (Delhi) ultimately seized from Sahay, who had passed them on to the antique dealers for disposal on approval. Thirteen paintings in pieces were recovered from a scrap dealer of Varanasi.

  Awarding six year jail terms to Belgrami and Haider, the judge observed: “Evidence would go to prove that they were the real ring leaders and at their instance dacoity was committed.” Haider took active part in getting the manuscripts and paintings disposed of. The three others who were awarded seven years R.I. for committing dacoity were: Mohd. Israel, Abdul Ghaffar and Abdul Sattar.

  The two approvers – Hanif and Masihuddin were released. The judge continued: “I, however, find that the prosecution had failed to prove that T.R. Khan was a party to the conspiracy. Similarly, I also find and hold that prosecution could not prove that this accused had dishonestly received or that he had voluntarily assisted in concealing and disposing the same.”

  Disposing the charge framed against Sahay, he said: “I am clearly of the opinion that prosecution had not been able to establish that this accused had any knowledge or had reason to believe that the manuscript was stolen property and its possession was transferred by commission of dacoity. The least that can be said in this regard, is that reasonable doubt has crept in, the benefit of which must go to the accused.”

 6. vedaprakash Says:

  தமிழ்.இந்து, ‘கடவுள் கையெழுத்திட்ட ஓலைச்சுவடி எங்கே?’: தில்லையைச் சுற்றும் புதுச் சர்ச்சை
  Published : 29 Jul 2017 13:51 IST
  Updated : 29 Jul 2017 13:55 IST
  கரு.முத்து

  https://tamil.thehindu.com/tamilnadu/article19384263.ece

  ‘கடவுள் இருக்கிறார்’ என்கிறார்கள் பலர். ‘ இல்லை’ என்கிறார்கள் சிலர். ‘இருந்தால் நல்லாயிருக்குமே’ என்கிறார்கள் ஒரு சிலர். நாம் சொல்லப்போகும் விஷயம் இதற்கெல்லாம் ஒருபடி மேல்.

  ஆம், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மனித உருவில் கடவுளே வந்து ஓலைச்சுவடியில் திருவாசகத்தை எழுதி ஒப்பமிட்டார். அந்தச் சுவடி இப்போது புதுச்சேரியில் உள்ள அம்பலத்தாடி மடத்தில் இருக்கிறது. அதை மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – இப்படியொரு புதுச் சர்ச்சை இப்போது தில்லையைச் சுற்றுகிறது.

  இந்தச் சர்ச்சையை எழுப்பியிருப்பது சாமானிய மனிதரல்ல.. தமிழக அறநிலையத் துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன். நடராஜப் பெருமானே எழுதி ஒப்பமிட்ட இந்த ஓலைச்சுவடிகள் சிதம்பரம் கோயிலின் மதிப்பற்ற சொத்து. இதை மீட்க வேண்டும் என்று கோரி, சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், கடலூர் ஆட்சியர், அறநிலையத் துறை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, புதுவை ஆளுநர் கிரண்பேடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார் சுவாமிநாதன். இவரது கடிதத்தை விசாரணைக்காக புதுச்சேரி காவல்துறை தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் கிரண்பேடி.

  புராணம் என்ன சொல்கிறது?

  இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடரும் முன்பாக ஒரு செய்தி. சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த மாணிக்கவாசகர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் வந்து அங்கே சிவபெருமானை தரிசித்துவிட்டு அங்கேயே குடில் அமைத்து தங்கினார். அப்போது, மாணிக்கவாசகரின் தவக்குடிலுக்கு வந்த பெரியவர் ஒருவர், சிவபெரு மான் ஆணைக்கினங்கவே தான் வந்ததாகக் கூறி, மாணிக்கவாசகரின் பக்தியை மெச்சினார். பிறகு, ‘பாவை பாடிய வாயால் சிவபெருமானை தலைவனாகக் கொண்டு கோவை பாடுக’ என வேண்டினார். மாணிக்கவாசகரும் திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற நூலைப் பாடினார்.

  அவர் பாடப் பாட அந்த 400 பாடல்களையும் ஏடுகளில் எழுதிக் கொண்ட பெரியவர், அவற்றை கையோடு எடுத்துச் சென்று விட்டார். மறுநாள் காலையில் நடராஜர் கோயிலுக்கு பூஜைக்கு வந்த அர்ச்சகர், நடராஜர் சந்நிதி படிக்கட்டில் ஓலைச் சுவடிகள் இருப்பதைப் பார்த்துவிட்டு ஊராருக்குத் தகவல் கொடுத்தார்.

  அந்தச் சுவடிகளில் திருவாசகச் செய்யுள்களும், திருக்கோவையாரின் 400 செய்யுள் களும் இருந்தன. திருக்கோவையார் முடியும் இடத்தில், ‘இவை திருவாதவூரன் பாட, அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் எழுதியவை’ என்று ஒப்பமும் இருந்தது. உடனடியாக, திருவாதவூராரான மாணிக்கவாசகர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். இறைவன் முன் நின்று அந்தச் சுவடிகளைப் பாடிய அவர், ‘நான் எழுதிய பாடல்களுக்குப் பொருள் இவரே’ என இறைவனைக் காட்டிவிட்டு சிவஅருள் ஒளியில் கலந்தார். சிதம்பரம் கோயில் குறித்து இப்படியொரு புராணச் செய்தி உண்டு.

  சுவடி எழுதியது நடராஜரே!

  நடராஜரே கையெழுத்திட்டதாக சொல்லப்படும் 25 அதிகாரங்களும் 400 பாடல்களும் கொண்ட அந்த திருக்கோவையாரும் அத்தோடு இருந்த திருவாசக ஓலைச்சுவடிகளும்தான் தற்போது புதுச்சேரி அம்பலத்தாடி மடத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய வி.வி.சுவாமி நாதன், “மாணிக்கவாசகர் பாடப்பாட அதை எழுதியது சாட்சாத் நடராஜப் பெருமானேதான்.

  இறைவனே கையெழுத்திட்ட அந்த ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டிருந்த பேழையை பல வருடங்களுக்கு முன் சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளியில் காட்சிக்கு வைத்திருந்தபோது நான் பார்த்திருக்கிறேன். மிகப் பழமையானதும் அபூர்வமானதுமான அந்த ஓலைச் சுவடிகளை தமிழக அரசு உடனடியாக மீட்டு பொக்கிஷமாகப் பாதுகாப்பதுடன் பக்தர்களின் பார்வைக்கும் வழிபாட்டுக்கும் அதை வைக்க வேண்டும்” என்கிறார்.

  அம்பலத்தாடி மடத்தில் நடராஜரின் பாதத்துக்கு அருகில் சுமார் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளிப்பேழை வைக்கப் பட்டுள்ளது. அதில்தான் திருவாசக ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கூறுகிறார் மடத்தின் 33-வது பீடாதி பதியான கனகசபை சுவாமிகள்.

  ”மேலும் கீழும் செப்புப் பட்டயங்கள் கோர்க்கப்பட்டு, வெண்பட்டுச் சுற்றி பாதுகாப்புடன் ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டுள்ளன. இதை எக்காரணம் கொண்டும் பிரிக்கவோ, சோதிக்கவோ கூடாது என்பது எங்கள் முன்னோர் அறிவுரை. மாசி மகா சிவராத்திரியின் போது இரவு 11 மணியளவில் பேழை திறக்கப்பட்டு ஓலைச் சுவடிகள் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படும். அதுவும் ஒரு மணி நேரத்துக்குத்தான்.

  அதன்பின், பழையபடி பேழைக்குள் வைக்கப்பட்டு விடும்” என்கிறார் கனகசபை சுவாமிகள். 350 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கர்நாடகப் போரின்போது சிதம்பரம் மடத்தில் இருந்த நடராஜர் விக்கிரகம், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை பாதுகாப்பு கருதி புதுச்சேரிக்கு எடுத்துவரப்பட்டதாக அம்பலத்தாடி மடத்தின் தலபுராணம் கூறுகிறது. இங்குள்ள ஓலைச்சுவடிகளை திருவாசக ஓலைச் சுவடிகளே என்று கனகசபை சுவாமிகளூம் பூஜகரும் தெரிவிக்கின்றனர்.

  இதன் நகல்கள் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் கோயில்களில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் குறித்து சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் சபாவைச் சேர்ந்த உமாநாத் தீட்சிதரிடம் பேசினோம். “ நடராஜர் கையெழுத்திட்டதான ஓலைச்சுவடிகள் இக்கோயிலில் இருந்ததற்கான சான்றுகளோ, ஆவணங்களோ இல்லை. அதனால், புதுவை அம்பலத்தாடி மடத்தில் இருக்கும் ஓலைச் சுவடிகள் குறித்து கோயில் நிர்வாகம் கவலை கொள்ளவில்லை.

  அதேசமயம், இங்கே நால்வர் சந்நிதியில் உள்ள தேவார, திருவாசக ஓலைச் சுவடிகள் பாதுகாப்புடன் உள்ளன. அவற்றிற்கு தினமும் உரிய முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்கிறார் உமாநாத் தீட்சிதர். இந்த விவகாரம் குறித்து தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடமும் பேசினோம். முழு விவரங்களையும் கவனமாக கேட்டுக் கொண்ட அவர் “இப்போதுதான் இந்த விவகாரம் எனது கவனத்துக்கே வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளைக் கொண்டு முழுமையான விசாரணை நடத்திய பிறகு உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார் அமைச்சர்.

 7. vedaprakash Says:

  தினமலர், 350 ஆண்டு கால ஓலைச்சுவடி பழநி அருகே கண்டுபிடிப்பு, Added : பிப் 04, 2018 00:03

  https://www.dinamalar.com/news_detail.asp?id=1951829&fromNewsdog=1&utm_source=NewsDog&utm_medium=referral

  பழநி:பழநி அருகே, கோதைமங்கலம் கிராமத்தில், முருகக் கடவுளை வாழ்த்தும் காவடிப்பாட்டுகள் அடங்கிய, 300 ஆண்டுகள் பழமையான, ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

  பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு மாணவி, யுவராணி, தன் வீட்டில் பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளதாக, வரலாற்று ஆசிரியர், ராஜேஸ்வரி, வரலாற்று ஆய்வாளர் தமிழாசிரியர் நந்திவர்மன் ஆகியோரிடம் தெரிவித்தார்.அவர்கள், ஓலைச்சுவடியை ஆய்வு செய்தபோது, 300 ஆண்டுகளுக்கு முந்தையது என, தெரியவந்துள்ளது.

  அதில், இரண்டு பக்கங்களிலும் பழநி மலை முருகனை பற்றி, காவடிசிந்தாக, 100 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.இது குறித்து ஆய்வாளர் நந்திவர்மன் கூறியதாவது:தங்களது தாத்தா காலத்தில் இருந்து வீட்டில் ஓலைச்சுவடிகள் உள்ளதாக மாணவி தெரிவித்தார். அதை ஆராய்ந்தபோது, ஓர் அடி நீளமும், 4 செ.மீ., அகலம் கொண்டதாக உள்ளது. 50 சுவடிகளில் பழநி மலை முருகன் மேல், ‘காவடிச்சிந்தாக பாடல் எழுதப்பட்டுள்ளது.

  பாடல்கள் எளிய நடையில், முருகனின் வாழ்க்கை வரலாறு, காவடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள், மனிதனுக்கு உண்டாகும் நோய்கள் பற்றியும், அந்த நோய்கள் காவடி எடுப்பதால் தீரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பழநி மட்டுமின்றி திருச்செந்துார் முருகன் குறித்தும், 10 பாடல்கள் உள்ளன. ஓலைச்சுவடி இணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பட்டன், ஆங்கிலேயர் காலத்து மன்னரின் புகைப்படம் அழிந்த நிலையில் உள்ள நாணயம் போல உள்ளது.

  சந்தம், எழுத்து அமைப்பு, ஓலைச்சுவடியின் பழமை கொண்டு ஆராய்ந்ததில் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. ஓலைச்சுவடி பாடல்களை நுாலாக வெளியிட்ட பின், பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: