தமிழகத்தில் சிவன் கோவில்கள் ஏன் கவனிப்பாரன்றி கிடக்கின்றன, சிதிலமடந்து கிடக்கின்றன, காணமலும் போகின்றன?

தமிழகத்தில் சிவன் கோவில்கள் ஏன் கவனிப்பாரன்றி கிடக்கின்றன, சிதிலமடந்து கிடக்கின்றன,  காணமலும் போகின்றன?

 

பெண்ணாடம் சிவன் கோவில்

பெண்ணாடம் சிவன் கோவில்

நாத்திக புற்றுநோயா, ஆத்திக புது நோயா?: தமிழகத்தில் அடிக்கடி இத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  பொதுவாக 60 ஆண்டுகால நாத்திக திகவினர் ஆட்சியினால் தான் இந்நிலை ஏற்பட்டது என்று சொல்லிவந்தாலும், ஏன்  “இந்துக்கள்” என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள், பக்தர்கள், சிவனடியார்கள் மற்றவர்கள் இவ்விவகாரங்களில் ஈடுபடவில்லை என்று தெரியவில்லை. லட்சங்களைக் கொட்டி, நிதி வாங்கிக் கொண்டு, கலை ஆராய்ச்சியாளர்கள்,  சிற்பக்கலை வல்லுனர்கள், சித்திரங்கள் ஆய்வு வல்லுனர்கள் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டு,  புகைப்படங்களைப் பிடித்துச் சென்று, சொற்பொழிவுகள் நடத்தி, பிரபல ஆங்கில நாளிதழ்களில் எழுதி,  ஏன் புத்தகங்களையும் வெளியிட்டு புகழ், பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,  சிதிலமடையும் இக்கோவில்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அழகை ரசிக்கிறேன், கலையை ஆராதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே அழகு-கலை முதலியன மற்ற கொடுங்கோலர்களால் கற்பழிக்கப்படும் போது, “நமக்கேன் வம்பு” என்று இருந்து விடுகிறார்கள்.  ஆனால், இவ்விவகாரங்களிலும் ஒரு அமைப்பு தென்படுகிறது. அதாவது கோவில்கள் இவ்வா றுகாணமல் போனால்,  சிலைகளை விற்றுப் பிழைத்துக் கொள்கின்றனர்;  குளங்களைத் தூர்த்து நிலங்களைப் பட்டாப் போட்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆகின்றனர்; கோவில் நிலங்களை தரிசு நிலங்கள் என்று சொல்லி விற்று கொள்ளை அடிக்கின்றனர்.  இதனால், மற்றவர்களும் கண்டு கொள்ளவில்லை, கண்டு கொள்கிறவர்கள் அமுக்கப் படுகின்றனர்.

kallangudi Kambar temple Sivagenga

kallangudi Kambar temple Sivagenga

சிதிலமடைந்த சிவன் கோவிலைப் புதுப்பிக்க மக்கள் கோரிக்கை – கும்மிடிப்பூண்டி (மே.25,2014): ‘சிதிலமடைந்து கிடக்கும் சிவன் கோவிலை, இந்து சமய அறநிலைய துறை புதுப்பிக்க வேண்டும்’ என,  கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன்கோவில் ஒன்று முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது. சில நாட்களுக்கு முன்,  கிராம மக்கள்பு தர்களை அகற்றி துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். கருவறையில் சிவலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள், நந்தி ஆகிய சிலைகள் இல்லை. கோவிலின் முன்புறமும், பின்புறமும் பிரமாண்ட குளங்கள்  உள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்வரை, அந்த கோவிலில், சிறப்பு வழிபாடுகள் மற்றும் தேர்திருவிழா நடந்தாக கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் தெரிவிக்கின்றனர். சிதிலமடைந்து காணப்படும் அந்த சிவன்கோவிலை இந்துசமய அறநிலையதுறை புதுப்பித்து வழிபாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும், அதன் வரலாற்றை புத்தமாக வெளியிட வேண்டும் எனவும், ஏ.என்.குப்பம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[1].

பழனி பாதிரி விநாயகர் கோயில் அருகே உள்ள ஐந்து கண் பாலத்தின் கீழே கண்டுபிடிக்கப்பட்ட சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு

பழனி பாதிரி விநாயகர் கோயில் அருகே உள்ள ஐந்து கண் பாலத்தின் கீழே கண்டுபிடிக்கப்பட்ட சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு

சிதிலமடைந்த நிலையில் சிவன்கோவில் அறநிலையத் துறைக்கு கோரிக்கை  (மே.14, 2014):ஓசூர் அருகே, மலைமீது உள்ள சிவன்கோவிலை, இந்துசமய அறநிலையத்துறை பராமரிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஓசூரை அடுத்த, கெலமங்கலம் அருகே உள்ள, ஊடேதுர்க்கம் பகுதியின் மலைஉச்சியில்,  சிவன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த இரு கோவில்களும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது என,  இப்பகுதி பக்தர்கள் தெரிவிக்கின்றனர். சுமார், 600 ஆண்டு பழமையான இந்த இரு கோவில்களில், சிவன் கோவில் மட்டும், மிகவும் மோசமான நிலையில் உள்ளது.ஆஞ்சநேயர் கோவிலில், சனிக்கிழமை தோறும் பூஜைகள் செய்யும் இப்பகுதிமக்கள், சிவன் கோவிலை கண்டு கொள்வது இல்லை.  சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோவிலில் அமைந்துள்ள லிங்கம், மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறும் பக்தர்கள்,  சுமார் ஆறு கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் தரிசனம் செய்தால், தீராத வினைகள் யாவும் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறுகின்றனர். ஆனால், மலைஉச்சியில் கோவில் அமைந்துள்ளதால், இந்த கோவிலுக்கு செல்லும் சாலை, கல்லும், மண்ணும், பாறைகளும் நிறைந்த பகுதியாக உள்ளது.இதனால், சற்று சிரமப்பட்டுதான், மலையின் உச்சிக்கு செல்லமுடியும். சிவன்கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலை, இப்பகுதி மக்கள் பராமரித்து வருவதால், கோவில் கட்டிடம் மற்றும் சுற்றுப்பகுதிகள் சுத்தமாக உள்ளன. ஆனால், அந்த காலத்திலேயே, செங்கல்மூலம்கட்டப்பட்டுள்ளஇந்தசிவன்கோவில்கட்டிடம், சரியானபராமரிப்புஇல்லாததால், மிகவும்பாழடைந்து, சிதிலமடைந்துள்ளது. எனவே, “இந்தகோவிலை, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என கூறும்பக்தர்கள்,  கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப் பட்ட இந்த கோவிலை பராமரிக்கவேண்டியது அரசின்கடமை,  என்றனர்[2].

மணல்மேல்குடி ராஜராஜ சோழன் கட்டிய கோவில்

மணல்மேல்குடி ராஜராஜ சோழன் கட்டிய கோவில்

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய வெள்ளூர் சிவன்கோவில் சிதிலமடைந்து வரும் அவலம் (மார்ச்.21, 2014) :மணமேல்குடி, மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய வெள்ளூர் சிவன் கோவில்இடிந்துசிதிலமடைந்துவருகிறது[3]. இந்த கோவிலை சீரமைத்து தர இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிவன்கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அருள்பாலித்து வரும் சுவாமி இத்ரேஸ்வரர் எனவும், அம்மன் பர்வதவர்த்தினி எனவும் அழைக்கப் படுகின்றனர்[4]. இந்த கோவிலின் ராஜகோபுரம் தான் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக உயரம் கொண்ட கோபுரமாக இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.   இந்த கோவில் ராஜகோபுரத்தின் அருகில் உள்ள அகழிகளில் தனது படைகளை பாதுகாப்பாக வைத்து கொண்டு இலங்கைக்கு படை எடுத்தான் ராஜராஜசோழன் எனத கவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு இந்த கோவிலுக்கு இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். தற்போது இந்த கோவிலின் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானம் ஆகியவை இடிந்து சரிந்து கீழே விழுந்து காணப்படுகிறது. இதனால் தற்போது இந்த கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வந்து செல்வதில்லை.  இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கோவிலை சுற்றிலும் முள்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு சென்று வழிபட முடியாமல் பக்தர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். எனவே கோவிலை முழுமையாக சீரமைத்து தருவதுடன், கோவிலை சுற்றிலும் உள்ள முள்வேலியை அகற்றி பக்தர்கள் வழிபட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகளுக்கு ஆன்மிக அன்பர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[5].

செஞ்சி அருகே சிவன் கோவில்

செஞ்சி அருகே சிவன் கோவில்

சிதிலமடைந்துள்ள தளவானூர் சிவன் கோவில் கல்வெட்டுகள் பாதுகாக்கப்படுமா?[6] (ஆகஸ்ட்.18, 2011): செஞ்சி அருகே சோழர்கால சிவன்கோயில் சிதிலமடைந்து அழியும் நிலையில் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் பல்லவர் காலகுடைவரைக்கு உதாரணமாக செஞ்சி அருகே உள்ள தளாவானூர், மண்டகப்பட்டு ஆகிய இடங்களை குறிப்பிடுகின்றனர். இதில் தளவானூரில் உள்ள சத்ரு மல்லேஸ்வராலயம் என்ற குடைவரைக் கோவிலை பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் கி.பி. 580-630 ஆண்டில் உருவாக்கினான். இந்த குடைவரை கோவிலை செஞ்சிகோட்டையில் உள்ள இந்திய தொல்லியல்துறையினர் பராமரித்து வருகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊரில் மேலும் ஒரு சிவன்கோவில் அழிவின் விளிம்பில் உள்ளது. ஊருக்கு மத்தியில் சிறந்த கட்டடக்கலையுடன் காணப்படும், இந்த சிவன்கோவிலின் முன்புறம் மகாமண்டபம், முகமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவையும், கருவறையில் சிவலிங்கமும் உள்ளது. மேலும் கோவிலின் உள்ளே அம்மாள், பைரவர், தட்சணாமூர்த்திசிலைகள்உள்ளன.பிற்காலசோழர்கள்இக்கோவிலைகட்டியுள்ளனர். கோவிலின் வெளியில் உள்ள கற்சுவர்களிலும், கோவில் உள்ளே உள்ள தூண்களிலும் பழங்கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மூலவரின் பெயர் பற்றியோ, கல்வெட்டுக்கள் குறித்தோ இவ்ஊர் மக்கள் எந்தத கவலையும் அறிந்திருக்கவில்லை. பழமையான இக்கோவிலின் பலபகுதிகள் சிதிலமடைந்து வருகின்றன. கருவறை கோபுரத்தின் மீது பெரிய அளவில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. மரங்களின் வேர்கள் ஆழமாக ஊடுருவி கோவில் கட்டத்தை பலவீனப் படுத்தியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கோவில் கோபுரமும், இதன் கீழ் உள்ள கல்கட்டுமானமும் சரிந்து விழும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இந்தகோவிலுக்கு என எந்த வருவாயும் இல்லை என்பதால் கிராமமக்களும் இக்கோவிலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்த கோவிலை சீரமைத்து பாதுகாக்க மத்திய அரசின் இந்திய தொல்பொருள்துறையினர் மற்றும் தமிழக இந்துசமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்[7].

நாகப்பட்டினம் சிவன் கோவில் காணவில்லை 2013

நாகப்பட்டினம் சிவன் கோவில் காணவில்லை 2013

பழமையான சிவன்கோவிலை காணோம்: நாகை அருகே கிராம மக்கள் புலம்பல் (ஜூலை.2, 2013): நாகை அருகே, சூரனூர் கிராமத்தில் காணாமல் போன, பழமையான சிவன்கோவிலை மீண்டும் கட்டித்தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்[8]. நாகை, வைப்பூர் அடுத்த, சூரனூரில், 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, கருங்கல்லால் கட்டப்பட்ட, தர்மாம்பாள் சமேத தர்மபுரீஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவிலில் விநாயகர், சனீஸ்வர பகவான், பைரவர், முருகன், சண்டிகேஸ்வரர், பலிபீடம் நந்தி மற்றும் பரிவார தேவதைகள் என, தனித்தனி சன்னிதி கொண்டு அருள்பாலித்து வந்தனர். கிராமமக்கள் சார்பில், 50 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, சுவாமி சிலைகளை பாலாலயம் செய்து, கோவிலையொட்டிய பகுதியில், கீற்றுக்கொட்டகையில், சுவாமிகளை வைத்து, பூஜைகள் நடந்துள்ளது. இக்கிராமத்தில் வறட்சியால் பஞ்சம் ஏற்பட்டு, கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்ட கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள், பிழைப்புதேடியும், வேலை நிமித்தமாகவும் பல்வேறுபகுதிகளில் குடிபெயர்ந்தனர். இதையடுத்து, கும்பாபிஷேக பணிகள் தொய்வடைந்து, காலப்போக்கில் சுவாமிகளுக்கு நடந்து வந்த பூஜைகளும் நின்று போயின.பழமையான கோவிலும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து, கேட்பாரின்றி கிடந்ததால், வேறுபகுதிகளில் இருந்து, இப்பகுதியில் குடியேறிவர்களுக்கு இக்கோவிலின் அருமை தெரியாமல், கோவிலில் இருந்த கருங்கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, களத்துமேட்டில் நெல்கதிர்களை அடிக்கவும், கிராம மக்களின் பல்வேறுபணிகளுக்கும் பயன்பட்டுள்ளன. பராமரிக்கப்பட்டு வந்த சுவாமிசிலைகளும் மர்மநபர்களால் கொள்ளை போயுள்ளது. தற்போது, கோவில் இருந்த இடம் முட்புதர்கள் மண்டி, குப்பைமேடாக காட்சிஅளிக்கிறது. மூலவர் சன்னிதியில் இருந்த சிவலிங்கம் வைக்கோல் போரால் மூடப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு எதிரில் நந்தி சிலையும், பரிவார தேவதைகள் சிலைகளும் கிடக்கின்றன. சண்டிகேஸ்வரர் சிலை சிதைக்கப் பட்டுகிடக்கிறது. இதுகுறித்து, இக்கிராமத்தை சேர்ந்த, வெங்கட்ராமன் என்பவர் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நாங்கள் சிறியவர்களாக இருந்தப்போது, இப்பகுதியைச் சேர்ந்தவர்களும், சுற்றுவட்டார மக்களும், இக்கோவிலில் வழிபட்டோம்; நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடக்கும். இக்கிராமமக்கள் நகரப் பகுதிகளுக்கு, இடம் பெயர்ந்ததால், கோவில் மராமத்துபணி நடக்காததால், பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் இருந்த இடம், மண்மேடாக காட்சி அளிப்பது கிராமத்து மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இக்கோவிலின் வரலாறு தெரிந்தோர், இப்போது உயிருடன் இல்லை. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். அரசு தலையிட்டு, கோவில் இருந்த இடத்தில், மீண்டும் கோவில் க ட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர்கூறினார்[9].

கோவிலை அணைக்கும் மரங்கள்

கோவிலை அணைக்கும் மரங்கள்

சிதிலமடைந்த கோவில் கோபுரங்கள்: சீர் செய்யுமா தமிழக அரசு? (ஜூன்.5. 2010): பஞ்ச பூததலங்களில் ஒன்றான, காளஹஸ்தி சிவன்கோவில் கோபுரம் இடிந்து தரைமட்டமான சோகம், இன்னும் பக்தர்கள் மனதில் இருந்து அகலவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் கலைபொக்கிஷங்களாக விளங்கும், பழமையான கோவில்களின் கோபுரங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவற்றை, உரிய முறையில் காப்பாற்ற அறநிலையத்துறை முன் வரவேண்டும். தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பெரும்பாலானவை இந்துசமய அறநிலையத்துறை வசம் உள்ளன. வருவாய் அதிகமுள்ள கோவில்களில், திருப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம்காட்டும் இந்துசமய அறநிலையத்துறை, வருவாய் குறைவான கோவில்களை கண்டுகொள்வதில்லை என்றகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், காளஹஸ்தி கோவில்கோபுரம் இடிந்து விழுந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழககோவில் கோபுரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பலமுனைகளில் இருந்தும் எழுந்துள்ளது[10]. இது குறித்து மாமல்லபுரத்தை சேர்ந்த சிற்பிகள், பக்தர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

கோவிலை மறைக்கும் புதர்க

கோவிலை மறைக்கும் புதர்க

கோபுரங்கள் விழாமல் இருக்க பராமரிப்பு தேவை: தமிழகத்தில் பலகோவில் கோபுரங்கள் சிதலமடைந்துள்ளன. குறிப்பாக, சென்னைக்கு அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஐந்து கோபுரங்களும், மிகமோசமான நிலையில் காணப்படுகின்றன. தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பழமையான கோவில், கோபுரங்கள் பலவும் மிகமோசமான நிலையில் உள்ளன.கோவில் கோபுரங்களில் அதில் மரங்கள் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அப்படி மரங்கள் வளர்ந்தால், அவற்றை பிடுங்கி எறிவதெற்கென்றே, “மரம்பிடுங்கிகள்’ இருப்பர். இத்தகைய, “மரம்பிடிங்கிகளை’ அதிக அளவில் நியமிக்க வேண்டும். பெரும்பாலான கோபுரங்கள் பறவைகள், குரங்குகளின் வசிப்பிடங்களாக திகழ்கின்றன. அவைகளின் எச்சங்களில் இருந்து, மரங்கள் வளர்ந்து விடுகின்றன. இதை தடுக்க, பலகோவில் கோபுரங்களில், சாளரப்பகுதியில் இரும்புவலை அடித்து பறவைகள், குரங்குகள் வசிக்க முடியாத அளவிற்கு, ஒவ்வொரு நிலையிலும், சாளரத்தில் இரும்புவலை அடிக்க வேண்டும். அறநிலையத்துறையில் ஒரு தலைமை ஸ்தபதி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில், தலா ஒரு ஸ்தபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களுக்கும் நிரந்தர பணி கிடையாது. ஸ்தபதிகளுக்கு மிககுறைவான சம்பளம்த ருவதால், அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, அதிகாரிகள் அழைக்கும் போது மட்டும், வந்துசெல்வர். இதனால் கோபுர பராமரிப்பு என்பது வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது.

பராபரிப்பற்ற கோ[புர

பராபரிப்பற்ற கோபுரம்

கோவிலைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்வதால், கோவிலின் புராதன கட்டுமான அமைப்பு, பாதுகாப்பு முதலியன பாதிக்கப் படுகின்றன: ஆந்திர மாநிலத்தில், உதவி கமிஷனர் நிலையில் இருந்து இணைகமிஷனர் நிலைவரை அனைத்து இடங்களிலும் ஸ்தபதி பணிக்கு ஆட்கள் உள்ளனர். அப்படி இருந்தும், காளஹஸ்திகோவில் கோபுரத்தை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், முன்பு கோவிலை சுற்றி கட்டுமானங்கள் ஏதும் இருக்காது. தேர்ஓடும் அளவிற்கு திறந்தவெளி இருக்கும். மழைநீர் பூமியில் சேகரமாகும் நிலையில் இருக்கும். கோபுரங்களை பாதுகாக்கும் பொருட்டு, மனையடி சாஸ்திரத்திற்கு உட்பட்டு திருக்குளங்கள் வெட்டப்பட்டிருக்கும். இதன்மூலம், கோபுரம் இருக்கும் பகுதியில் மழைநீர் சேகரமாகி மண்ணில் நெகிழ்வுதன்மை ஏற்படாமல் தடுக்கப்பட்டு, கோபுரங்கள் பாதுகாக்கப் பட்டுவந்தன. ஆனால், இன்றோ திருக்குளங்கள் வறண்டு, கோபுரத்தை ஒட்டிய பகுதிகளில், பூமியில் மழைநீர் சேகரமாக வசதியின்றி, சுற்றிலும் வானூயர்ந்த கட்டடங்கள்க ட்டப்படுகின்றன. இந்த கட்டடங்களின் கடைக்காலுக்காக தோண்டப்படும் பள்ளங்களால், கோபுரத்தை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டு கோபுரங்களின் நிலை மோசமாகிறது.தமிழகத்தின் கலை, கலாசார கூடங்களாக விளங்கும் கோவில்களை பாதுகாக்கவேண்டும் என்பதில் நாத்திகவாதிகளுக்கு கூட மாற்று கருத்து இருக்கமுடியாது. எனவே இந்த விஷயத்தில் இனியும் அரசு தாமதம் செய்யாமல் தமிழகத்தின் பொக்கிஷங்களாக விளங்கும்கோவில் கோபுரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”கோபுர தரிசனம்; கோடி புண்ணியம்’ என்பார்கள். கோபுரங்களை காக்கும் பணியை அரசு மேற்கொண்டால், கோடி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இக்கல்வெட்டுகள் மறைந்து போய் விடலாம்

இக்கல்வெட்டுகள் மறைந்து போய் விடலாம்

மிகவும் அபாய நிலையில் திருக்கழுக்குன்றம் கோவில் கோபுரம்: திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவில் கோபுரங்களை பாதுகாக்க கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் புகழ்பெற்றது. இதன் சார்பு கோவிலாக மலைக்கு தென்மேற்கில் பக்தவச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு திசைக்கு ஒரு ராஜகோபுரம் வீதம் நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள் அமைந்துள்ளன.  இக்கோபுரங்களில் செடிகள் வளர்ந்துள்ளதால் கோபுரம் சிதிலமடைய துவங்கியுள்ளது. அதேபோல் கோவில் மண்டபம், மதில்சுவர் ஆகியவற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. இக்கோவில் 1999ம் ஆண்டு ஜூலைமாதம் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அதன்பின், கோபுரங்களில் வளரும் செடிகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. அவை மீண்டும் வளர்வதை தடுப்பதற்கு நிரந்தர நடவடிக்கை இல்லை. வடக்கு மற்றும் தெற்கு கோபுரத்தில் செடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. மேற்கு கோபுர கலசத்தின் அருகே தென்முனைப் பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. மதில்சுவர் மீது பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன.சமீபத்தில், ஆந்திரா மாநிலம் காளஹஸ்தியில் கோவில் கோபுரம் பராமரிப்பின்றி இடிந்தது. இந்நிலையில், திருக்கழுக்குன்றம் கோவில் கோபுரங்கள் பராமரிப்பின்றி இருப்பது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் செயல் அலுவலர் சங்கர் கூறியதாவது: இக்கோவிலில் நன்கொடையாளர் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்ய அரசுக்கு மதிப்பீடு அனுப்பியுள்ளோம். ராஜகோபுரங்கள், மூலஸ்தானம், அனைத்து சன்னிதிகள், திருச்சுவர் ஆகியவற்றை பழுதுபார்த்து புதுப்பிக்கவும், கோவில் குளங்களை தூர்வாரி சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். லட்சுமி விநாயகர் கோவில் குளத்தை 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளோம். அரசு அனுமதி கிடைத்ததும் பணிகள் துவக்கப்படும். இவ்வாறு சங்கர் கூறினார்.

திருமூலர் எச்சரிக்கைக்கு பயப்படாத திராவிட நாத்திகர்கள்

திருமூலர் எச்சரிக்கைக்கு பயப்படாத திராவிட நாத்திகர்கள்

திருமந்திரம், திருமூலர், தமிழ் முதலியவற்றை மறந்தது: மேற் குறிப்பிட்டபடி, புதுப்பிப்பது என்று வைத்துக் கொண்டாலும், அதை வைத்து எந்த ஆதாயம் தேடலாம் என்று பார்க்கின்றர். இந்துஅற நிலையைத்துறையினரைப் பொறுத்தவரைக்கும், ஏதாவது பணம் கிடைக்குமா என்று பார்த்துதான், புனர்நிர்மாணபணிகளுக்கு, கும்பாபிஷேகங்களுக்கு அனுமதி கொடுக்கின்றனர். அதனால், காசு வராது என்றால் கண்டு கொள்வதில்லை. தமிழ்-தமிழ் என்று பேசி ஊரை ஏமாற்றினாலும், தமிழுக்காக உயிரைக்கொடுப்பேன் என்றெல்லாம் வீராவேசமாகப் பேசி-எழுதினாலும், இதில் எதையும் காட்டுவதில்லை. திருமந்திரம், திருமூலர் பற்றியெல்லாம் கூட கரைத்துக் குடித்தவர்கள் போல பேசுவார்கள்-எழுதுவார்கள், ஆனால், சிவன் கோவில் நிலைமாறினால் என்னாகும் என்று திருமூலர் எச்சரித்தது பற்றியெல்லாம் கவலைப் படமாட்டார்கள்; “சிவன் சொத்து குலநாசம்” என்பதைக்கூட மறந்துவிடுவர்.

வேதபிரகாஷ்

25-05-2014

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=982745

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=954684

[3] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=303433&cat=504

[4] http://www.dailythanthi.com/2014-03-21-vellur-shiva-temple-ruins-of-the-plight-pudukkottai-news

[5]தினகரன், 1600 ஆண்டுகள்முற்பட்டசிதிலமடைந்தசிவன்கோயில்சீரமைத்துதரபக்தர்கள்கோரிக்கை, பதிவுசெய்தநேரம்:2014-04-07 10:27:28

[6] http://thinamalar.net/district_detail.asp?id=296215

[7] தினமலர், , சிதிலமடைந்துள்ளதளவானூர்சிவன்கோவில்கல்வெட்டுகள்பாதுகாக்கப்படுமா?,ஆகஸ்ட்.18, 2011.

[8] http://m.dinamalar.in/news_detail.asp?id=748092

[9] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=296352

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13417

Advertisements

குறிச்சொற்கள்: ,

2 பதில்கள் to “தமிழகத்தில் சிவன் கோவில்கள் ஏன் கவனிப்பாரன்றி கிடக்கின்றன, சிதிலமடந்து கிடக்கின்றன, காணமலும் போகின்றன?”

  1. thirukalukundram temple Says:

    about Thirukalukundram Temple History click

    http://www.thirukalukundram.in

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: