சோழ மன்னரின் பரம்பரையை சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழகனார் திடீர் மரணம்!

சோழ மன்னரின் பரம்பரையை சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழகனார் திடீர் மரணம்!

Chola lineage claiming dead

 

சோழ வம்சாவளியில் வந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் இவர், திடீரென்று காலடைந்த செய்தி வந்துள்ளது.

ஆண்டியப்ப சோழ வளகனார்.2

சோழ  மன்னரின்  பரம்பரையை  சேர்ந்த  சிதம்பரநாத  சூரப்ப  சோழகனார்  திடீர்மரணம்[1]: சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தை சேர்ந்தவர் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் (வயது 68 / 63[2]). கடந்த 10 ஆண்டுகளாக சிதம்பரம் பாவா முதலிதெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சோழமன்னர்கள் பரம்பரையை சேர்ந்தவர் என சில வரலாற்று சுவடுகளில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது[3]. சோழர் பரம்பரையில் வந்த வாரிசுகள் சிதம்பரத்தையடுத்த பிச்சாவரத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிச்சாவரம் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சிதம்பரநாத சூரப்ப சோழகனாரின் முன்னோர்கள்தான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகித்து வந்ததாகவும் அந்த வரலாற்று சுவடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தினமும் பூஜைகள் முடிந்தபிறகு அந்த கோவில் சாவியை பல்லக்கில் வைத்து இவரது முன்னோர்களின் வீட்டுக்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த சுவடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பிற்காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டது. எனவே மீண்டும் இந்த உரிமையை வழங்ககோரி சிதம்பரநாத சூரப்ப சோழகனார் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தார். எனினும் சிதம்பரம் நடராஜர்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்களின்போது இவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வந்தது.

ஆண்டியப்ப சோழ வளகனார்

திடீரென  மயங்கி  விழுந்து  சிகிச்சையளித்தும்  பலனின்றி  இறந்த  சிதம்பரநாத  சூரப்ப  சோழகனார்    சிதம்பரநாத  சூரப்ப  சோழகனார்: நடப்பு ஆண்டில் இந்த கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று தொடங்கியுள்ள நிலையில், நேற்று இரவு சிதம்பரநாத சூரப்ப சோழகனார் வழக்கம்போல் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சிதம்பரம் கீழ ரதவீதியில் இரவு 8.30 மணி அளவில் இவர் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்தார். இவரது இறுதி சடங்கு நாகை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டையில் நடைபெற உள்ளது. சிதம்பரநாத சூரப்ப சோழகனாருக்கு சாந்திதேவி என்ற மனைவியும், சக்கரவர்த்தி, மன்னர் மன்னன் என்ற மகன்களும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

Cholas-Kanal1

பாமக  நிறுவனர்  ராமதாஸ்  வெளியிட்ட   இரங்கல்  செய்தி: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்[4], “சோழ மன்னர்களின் வாரிசும், வன்னிய குலத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் உடல்நலக் குறைவால் சிதம்பரத்தில் நேற்றிரவு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், தாங்கமுடியாத துயரமும் அடைந்தேன். சோழர் பரம்பரையில் வந்த வாரிசுகள் சிதம்பரத்தையடுத்த பிச்சாவரத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிச்சாவரம் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சோழர் பரம்பரையில் வந்த சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு கடந்த 1978 ஆம் ஆண்டு சோழர்களின் குலக் கோவிலான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்களால் முடிசூட்டப்பட்டதுசோழ மன்னர்களுக்கு மட்டும் தான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் முடி சூட்டப்படும் என்பதும், சோழர்களை வெற்றி கண்ட களப்பிரர் மன்னர் கூற்றுவநாயனார் தமக்கு முடி சூட்டும்படி கோரிய போது அதை ஏற்க சிதம்பரம் தீட்சிதர்கள்  மறுத்துவிட்டனர் என்று வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதும் சிதம்பரநாத  சூரப்ப சோழனார் சோழர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றாகும்[5].

 Cholas-Kanal2

செல்லப்பன்  பேட்டையில்  நடைபெறும்   இறுதிச்சடங்குகளில்   வன்னியர்கள்  கலந்து   கொள்வார்கள்: ஆன்மிக வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் சூரப்ப சோழனாரின் முன்னோர்கள் ஏராளமான உதவிகளை செய்திருக்கின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது சூரப்ப சோழனார் குடும்பத்தினர் தான். சிதம்பரம் நடராஜர் கோயில் சிறிது காலத்திற்கு முன்புவரை இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது[6]. சமூக முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஏராளமான உதவிகளை வாரிவழங்கிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், வன்னிய குல மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்[7]. தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகில் உள்ள செல்லப்பன்பேட்டையில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

Cholas-Kanal.3

“மஹா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு 16 . 06 . 1978 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழ மன்னராக பாரம்பரிய முறைப்படி முடிசூட்டப்பட்டது. அடுத்த நாள் (17. 06 .1978 ) சோழ மன்னருக்கும் உடையார் பாளையம் சமஸ்தானம் ஜெயவிலாஸ் அரண்மனை உயர் திரு. சின்ன குழந்தை ராஜா காலாட்கள் தோழ உடையார் அவர்களின் மகள் சாந்தி தேவி என்கிற ஜெலஜகந்தி ஆயாள் அவர்களுக்கும்  உடையார் பாளையம் ஜெயவிலாஸ் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது”, என்று ஒரு இணைத்தளப் பதிவு குறிப்பிடுகின்றது[8].

09-03-2005 தினமலர் செய்திஇன்னொரு  இணைத்  தளப்பதிவு   கீழ்கண்ட   விவரங்களைக்   கொடுக்கிறது[9]: இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் “சோழனார்” என்று அழைக்கப்பட்டனர். கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம் (பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார். இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி “திருக்கை வளம்” என்ற நூலில் காணப் பெறுகிறது. இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார். இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர். இம்மரபினரில் ஒருவர் பெயர்: புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார். தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார். இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.

19-20 நூற்றாண்டுகளில்  வம்சாவளி: இந்த சோழனார் மரபில் –

  • கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார்
  • பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார்,
  • கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார்,
  • 1943 – இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார்,
  • பின்பு 1978 – இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார்

முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/8/1943 – இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த மன்னர் 19/8/1943 – இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 – இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம். அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர். இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர். பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் வன்னிய குலத்தினர் ஆவர். நடன காசிநாதன் கட்டுரையும் ஆதாரமாகக் காட்டப் படுகிறது[10].தொண்டை மண்டல முதலியார்களும் சோழ பரம்பரையில் வந்ததாகக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

குறிப்பு: குறிப்பிட்ட இணைதளங்களிலிருந்து புகைப்படங்கள் எடுத்தாளப் பட்டுள்ளது. நன்றி.


[1] மாலைமலர், சோழமன்னரின்பரம்பரையைசேர்ந்தசிதம்பரநாதசூரப்பசோழகனார்திடீர்மரணம் , பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 09, 12:35 PM IST

[4] நக்கீரன், சோழமன்னர்சிதம்பரநாதசூரப்பசோழனார்மறைவுக்குமருத்துவர்ராமதாஸ்இரங்கல்   , திங்கட்கிழமை, 9, டிசம்பர் 2013 (15:18 IST)

குறிச்சொற்கள்: , , , , , ,

2 பதில்கள் to “சோழ மன்னரின் பரம்பரையை சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழகனார் திடீர் மரணம்!”

  1. பாலு Says:

    // 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

    2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

    3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 – இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 – இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.//

    1. களப்பிர அரசன் (காலம் கி.பி 300 – இவன் புத்த மதத்தை சேர்ந்தவர், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, இவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தும்உண்டு அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
    அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்

    2) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800)
    இவர்கள் அதே அந்தணர்களா. கோவில் நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது,

    3) கிகி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை
    மேலாக
    சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார்.

    • vedaprakash Says:

      1. சோழர்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதால், இணைதளத்தில், இவ்விவரங்கள் கண்டபோது, அதனை தொகுத்து வெளியிட்டேன்.

      2. சரித்திர ஆதாரங்களுடன், அவை சரிபார்க்கப் பட வேண்டியுள்ளது.

      3. ஆங்கிலேயர்கள் தங்களது கொள்கைகளினால், இந்திய ராஜவம்சாவளிகளை குளறுபடி செய்து மாற்றி, மறைத்ததோடு, “டாக்ட்ரைன் ஆப் லாப்ஸ்” போன்ற திட்டங்களினால் அழிக்கவும் செய்தார்கள்.

      4. சில சமஸ்தானங்களே, தங்களது மூலங்களை பத்திரப்படுத்திக் கொண்டன. அதாவது, ராஜவம்ச ஆதாரங்கள் (கிரீடம், கத்தி, சிம்மாசனம், உடை, வசாவளி அட்டவணை போன்றவை) கொண்டிருந்தன. அரண்மனைகளில் தொடர்ந்து வாழ்ந்தனர்.

      5. அத்தகைய நிலை தமிழக அரசர்களில் சிலரிடமே காணப்பட்டன.

      6. இவ்ஜாவ்விசயங்களில் கோணத்தில் விளக்கம் காண்பது சரியில்லை.அதுவும் ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப் பட்ட திரிபுவாதங்களில் ஒன்றாகும்.

      7. மேலும் இதற்கெல்லாம் சரித்திர ஆதாரங்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். வெறும் வாய்வழி அல்லது சமீபத்தில் கட்டப்பட்ட கதைகள் மூலம் இறுதியாக எதையும் சொல்ல முடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: