மதமாற்றம் என்ற பெயரில் மலேசியாவில் என்ன நடக்கிறது?

மதமாற்றம் என்ற பெயரில் மலேசியாவில் என்ன நடக்கிறது?

மலேசியாவில் இந்து பெண்கள் படும்பாடு அதிகமாகவே உள்ளது. முக்கியமாக மதமாற்றத்தினால் அதிகமாகவே பாதிக்கப் படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் பிரிக்கப்படுகின்றன. ஏதோ ஆடு-மாடுகளைப் போல அவை பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன. எல்லா வழக்குகளிலும் பொதுவாக பார்க்கும் பிரச்சினை, ஒரு ஆண் முஸ்லீமாக மாறுகிறான், பிறகு, தனது மனைவி-குழந்தைகளை முஸ்லீமாக வற்புறுத்துகின்றான். மனை மறுக்கிறாள். குழந்தைகள் பறிக்கப்படுகின்றன, வலுக்கட்டாயமாக மதமாற்றப்படுகின்றன. தந்தையே அவ்வாறு செய்யும்போது, மலேசிய அரசு ஊக்குவிக்கிறது, உதவுகிறது. சரீயத் சட்டத்திகீழ் வழக்குகள் நடத்தப் படும் போது, காஃபிர்-இந்துக்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை, கிடைக்காது. இதையறியாத அல்லது அறிந்தும் அறியாதது போல இருக்கும் மலேசிய இந்துக்கள் இவ்வாறுதான் அவஸ்தைப்படுகிறார்கள்.

ஷாமலா என்ற இந்து பெண்மணி படும்பாடு: ஷாமலா எட்டுவருடங்களுக்கு முன்பாக தனது கணவனிடமிருந்து பிரிந்து வாழும் இந்து. கணவனோ மதமாறிய முஸ்லீம். அவளுக்குத் தெரியாமல், இரண்டு குழந்தைகளை அவன் முஸ்லீமாக மதமாற்றி விடுகிறான். இருவருமே தங்களுடைய குழந்தைகள் தத்தம் மதத்தின்படித்தான் வளர்க்கப்படவேண்டும் என்று சண்டையிட்டுக் கொண்டு, நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். வழக்கில் ஷாமலா தோற்றால், குழந்தைகள் அவளிடமிருந்து பிரிக்கப்படும். ஆகையால், 2004ல் அவள் மலேசியாவை விட்டு தனது இரண்டு பையன்களுடன் – சக்திவரன் (11) மற்றும் தெய்வஸ்வரன் (9) தலைமறைவாகி விட்டாள். ஆனால் 12-11-2010 அன்று மலேசியாவின் நீதிமன்றம் அவளுடைய வேண்டுக்கோளை மறுத்துவிட்டதுடன், நீதிமன்ற பாஅதுகாவல் வேண்டும் என்றால், அவள் உடனடியாக மலேசியாவிற்குத் திரும்பவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

Malaysian court refuses mum’s bid to convert sons religion

by The Malaysian Insider ; 05:55 AM Nov 13, 2010

http://www.todayonline.com/World/EDC101113-0000074/Malaysian-court-refuses-mums-bid-to-convert-sons-religion

PUTRAJAYA – Malaysia’s top court on Friday unanimously dismissed a Hindu mother’s bid to raise her two young children in the religion they grew up with.

Ms S Shamala’s two children were converted to Islam eight years ago by her estranged Hindu-turned-Muslim husband, without her knowledge or consent.

Friday’s 5-0 ruling in the Federal Court is a blow to the battle to end one-sided religious conversions. These have caused a rift in the nation, which is multicultural and secular but recognises Islam as the official creed. The panel, led by Chief Justice Zaki Azmi, also ruled that Ms Shamala must return to Malaysia if she wants the court’s protection.

The 38-year-old fled the country in 2004 with her two sons Saktiwaran and Theivaswaran – now aged 11 and nine years old respectively. Their current location is unknown.

Both parents are in a bitter fight to gain custody over the two boys and be allowed to raise them in their respective religions.

http://www.mysinchew.com/node/47992

இப்பிரச்சினைப் பற்றிய முந்தைய செய்திகள்-வழக்குகள்-விவாதங்கள்

மதமாற்ற விவகாரம்: இந்து சங்கம் அமைச்சரவை உதவியை நாடுகிறது

தாயாரின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக மூன்று இளங்குழந்தைகள் ஈப்போவில் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சங்கத் தலைவர் எ. வைத்திலிங்கம் புதிய அமைச்சரவையின் உதவியை நாடியுள்ளார்.

“இப்பிரச்னை துணைப் பிரதமர் முகைதின், பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன் மற்றும் மனிதவள அமைச்சர் எஸ். சுப்ரமணியம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபின், இது ஒரு கடுமையான பிரச்னையாகக் கருதப்படுகிறது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இப்பிரச்னையைக் கையாள்வதற்கு கோ, சுப்ரமணியம் மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பகாரும் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை துணைப் பிரதமர் முகைதின் அமைத்துள்ளார் என்றாவர்.

“இதற்கிடையில், சம்பந்தப்பட்ட அனைவரும் அமைதி காத்து இப்பிரச்னைக்கு நியாயமான தீர்வு காண உதவுமாறு இந்து சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நீதிக்காகப் பிராத்னை செய்வோம்”, என்று வைத்திலிங்கம் கூறினார்.

வயது ஒன்றிலிருந்து பன்னிரண்டு வயதுடைய மூன்று குழந்தைகளை அவர்களுடைய தகப்பனார் முகமட் ரிட்ஜுவான் அப்துல்லா ஏப்ரல் 12 ஆம் தேதி அக்குழந்தைகளின் பிறப்புப் பத்திரங்களை மட்டுமே முன்வைத்து மதமாற்றம் செய்தார். குழந்தைகளைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்வதற்கான உத்தரவைப் பெறுவதற்கு ஷரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அக்குழந்தைகளின் தாயார், எம். இந்திரா காந்தி, 35, அவருடைய குழந்தைகள் இந்து மதத்தைப் பின்பற்ற அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.

தற்போது, அத்தம்பதிகளின் இளையமகள் பிரசன்னா திக்சா, முகமட் ரிட்ஜ்வானுடன் இருக்கிறார். இதர இரண்டு குழந்தைகளும் – தேவி தர்க்ஷிணி, 12, மற்றும் காரன் தினேஷ் – தாயார் இந்திராவுடன் இருக்கின்றனர்.

இஸ்லாமிய இலாகா அதிகாரிகள் அவ்விரு குழந்தைகளையும் எடுத்துக்கொண்டுபோய் விடுவார்கள் என்ற அச்சத்தில் அந்த பாலர்பள்ளி ஆசிரியர் தன்னுடைய உறவினரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

அமைச்சரவைக்குழு என்ன செய்ய முடியும்?

அடுத்த வாரம் குழந்தைகளை தாயாரின் பொறுப்பில் விடுவதற்கான மனு தாக்கல் செய்யப்படும். பின்னர் மதமாற்றம் சம்பந்தமான விசயங்கள் கவனிக்கப்படும் என்று இந்திராவின் வழக்குரைஞர் எ. சிவநேசன் கூறினார்.

“இம்மாதிரியான விவகாரங்களில் நீதி கிடைப்பதில்லை.”

“நான் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய வேதனைகளைப் பார்த்திருக்கிறேன், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களின் வேதனையை”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அமைச்சரவைக்குழுமீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று சிவநேசன் கூறினார்.

” புதிய குழு என்ன செய்யப்போகிறது? மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டதன் மூலம் அக்குழு பிரச்னையை எப்படி தீர்க்கப்போகிறது”, என்று அவர் வினவினார்.

மதமாற்றம் செய்ய விரும்புகிறவர் இஸ்லாமிய இலாகாவில் தனது மதமாற்றத்தைப் பதிவு செய்துகொள்வதற்குமுன் அவர் சிவில் சட்டப்படி செய்து கொண்ட திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் முறையாக செய்து முடித்துவிட்டது கட்டாயமாக்கப்படுவதின் வழி மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று சிவநேசன் கூறினார்.

“இரு தரப்பினரும் மதம் மாறினால், பிரச்னை இல்லை. ஆனால், ஒருவர் மதம் மாறி இன்னொருவர் மாற விரும்பவில்லை என்றால், அவர்களுடைய குழந்தைகள் 18 வயதை அடைந்து அவர்கள் தாங்களாகவே ஒரு முடிவு எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

சர்ச்சைக்குரிய பிரச்னை

சிவில் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் அல்லாதவர்களின் மதமாற்றம் – ஒருவர் மதம் மாற விரும்புவதும் இன்னொருவர் மறுப்பதும் – எப்போதும் பெரும் சர்ச்சையை கிளரிவிடுகிறது. ஏனென்றால் இது சம்பந்தப்பட்ட சட்ட நிவாரணங்கள் தெளிவற்றவைகளாக இருப்பதுடன் முஸ்லிம் தரப்பிற்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது.

2006 ஆம் ஆண்டில் தங்களுடைய குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்து மனைவி ஆர். சுபாஷினிக்கும் முஸ்லிமாக மாறி முகம்மட் சாபி என்ற பெயர் கொண்ட டி. சரவணனுக்கும் இடையிலான சட்டப் போராட்டம் பிரசித்தி பெற்றதாக இருந்தது.

முகம்மட் சாபி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்கும், குழந்தைகளை தன் பொறுப்பில் வைத்துக்கொள்வதற்கும் ஷரியா நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடினார்.

இதன் பின்னர், தன்னுடைய பிரிந்துவிட்ட கணவர் ஷரியா நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக்கோரி சுபாஷினி செய்து கொண்ட மனு உச்ச நீதிமன்றம் வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் நிராகரிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில், நாட்டின் உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட விதி 12(4) இன் கீழ் ஒரு குழந்தையின் மதமாற்றத்திற்கு பெற்றோர்களில் ஒருவரின் ஒப்புதல் போதுமானது என்று தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருப்பது என்பது பற்றி தெளிவான தீர்ப்பு அளிக்கவில்லை. அது குறித்து கணவனும் மனைவியும் அவரவர் சம்பந்தப்பட்ட சட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தது.

இப்பிரச்னை பலதடவைகளில் எழுப்பப்பட்டபோதிலும் அரசாங்கம் இது குறித்து மௌனமாக இருந்து வந்திருக்கிறது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

3 பதில்கள் to “மதமாற்றம் என்ற பெயரில் மலேசியாவில் என்ன நடக்கிறது?”

 1. vedaprakash Says:

  Chinese and Indian Malaysians fear “Islamization” trend
  Malaysia fails to rule on child conversions to Islam
  Friday, 12 November 2010
  http://www.alarabiya.net/articles/2010/11/12/125857.html

  KUALA LUMPUR (AFP): Malaysia’s top court Friday sidestepped a ruling on whether children can be converted to Islam by one parent, a lawyer said, in a case closely watched by the nation’s non-Muslim minorities.

  The Federal Court was asked to hear the case of Hindu woman S. Shamala who fled to Australia in 2004 with her two young sons after her husband Muhammad Ridzwan Mogarajah converted to Islam and secretly converted the children.

  The High Court in 2004 handed Shamala custody of the children on condition she raised them as Muslims, an order Mogarajah appealed in civil courts and the religious Sharia courts which operate in a parallel system in Malaysia.

  “The court took the position that unless Shamala and the children were within its jurisdiction, the entire hearing would be pointless and so dismissed the case,” Shamala’s counsel David Mathew told AFP.

  “It missed a golden opportunity to rule on the burning issue of whether a child can be converted unilaterally by one parent,” he added.

  “This is disappointing as there are several similar cases in the country, which were looking for the Federal Court’s guidance on this issue.”

  Mathew said Shamala was in fear of returning as a Sharia court order had handed Mogarajah custody of the children and issued a warrant for her arrest.

  Under Sharia law, a non-Muslim parent cannot share custody of converted children. Non-Muslims also complain that they do not get a fair hearing when such cases end up in the religious courts.

  The case has been watched by Malaysia’s ethnic Chinese and Indian minorities who say their rights are being eroded by rising “Islamization” in a country where 60 percent of the population is Muslim Malay.

  Secret conversions of children, which can deprive the non-Muslim parent of custody, and “body-snatching” cases where Islamic authorities tussle with families over the remains of people whose religion is disputed, have raised racial tensions.

  The government last year said legislation would be amended so that children’s conversion required the consent of both parents, but the reform has been stalled pending consultations with the Malay royal rulers.

 2. http://ulagathamizharmaiyam@blogspot.com Says:

  Very Interesting Articles with lot of comparative examples.
  I appreciate this blogger and the effort created by the editor

 3. http://ulagathamizharmaiyam@blogspot.com Says:

  Very Interesting Articles with lot of comparative examples.
  I appreciate this blog and the effort created by the editor

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: