வங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்!

வங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்!

சோழர்கடலில் படகு போட்டிற்கு தமிழர்களுக்கு பயிற்சியாம்: வங்காள விரிகுடா முன்னர் “சோழர்கள் கடல்” என்றே அழக்கப்பட்டது. சோழர்கள் திடீரென்று மறைந்தது போல, அப்பெயரும் மறைந்து விட்டது. மக்களும் மறந்து விட்டார்கள். இப்பொழுது அதே கடலில், பாய்மர படகுப் போட்டிகள் நடப்பது நல்ல விஷயம்தான்! ஆனால், இங்குள்ள மாண்வர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது என்பதுதான் வேடிக்கை!

Last Updated :

சர்வதேச படகு போட்டி: அக்டோபர் 3-ல் தொடக்கம்[1]: உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான பாய்மரப் படகு போட்டி அக்டோபர் 3-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக “தமிழக பாய்மரப் படகு போட்டி சங்க”த்தின் தலைவர் அசோக் தக்கார் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: “தமிழ்நாடு படகோட்டும் சங்கத்தின் சார்பில் இந்திய சர்வதேச பாய்மரப் படகு போட்டியை சென்ûனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 3 முதல் 10-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது[2].

வங்காள விரிகுடா கடலில் பாய்மர படகுப் போட்டிகள்: வங்காள விரிகுடா கடலில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஈரான், ஸ்லோவேனியா, மியான்மர், சேஷல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழல், இயற்கை ஆதார வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாய்மரப் படகு ஓட்டுவதை ஆபத்தாக கருதாமல் ஓர் ஆரோக்கியமான விளையாட்டுப் போட்டியாக பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார் அசோக் தக்கார்[3]. பாவம், அந்த அளவிற்கு, தமிழர்களின் படகோட்டும் திறன் குறைந்து, மறைந்து விட்டது போலும்.

பாய்மர போட்டி வரைமுறைகள்: இந்தப் படகு போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 8 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு “சிங்கிள் ஹாண்டட் ஆப்டிமிஸ்ட்’ என்ற படகுகளும், 15 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு “டபுள் ஹாண்டட்’ என்ற படகு வகைகளும் கொடுக்கப்படும். மொத்தம் 9 சுற்றுகளாக இந்தப் போட்டிகள் 8 நாள்கள் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடையும் படகுகளுக்கு இந்திய படகு போட்டிகள் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம்:அரசு லட்சங்களை இல்லை கோடிகளை செலவு செய்து ராஜராஜனின் கைங்கர்யத்தினால், இன்றுள்ள இந்து விரோத நாத்திகர்கள் கூட்டம் போட்டுள்ளனர். ராஜராஜன், ராஜேந்திரன் புகழ் பெற்றது இந்தியாவின் பெரும் பகுதியை வென்றது, தென்மேற்கு ஆசிய நாடுகளை வென்றது என்ற நிலையில் இருந்தது. தென்னிந்திய கடற்கரைகள் மற்றும் இந்து மஹா சமுத்திரத்தில், இவர்களை எதிர்த்து யாரும் கப்பல் விட முடியாது. கப்பற் கொள்ளைக்காரர்கள் சோழர்கள் என்றாலே கதிகலங்குவார்கள். ஆனால், இன்றைய தமிழக இந்தியர்கள் அல்லது இந்தியாவை வெறுக்கும் தமிழர்கள், கடற்கரைகளையே கொள்ளைக் காரர்களுக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளனர். கடத்தலில் பங்குப் பெற்று தாய்நாட்டையேக் காட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர். அக்காலத்திலும் அப்படித்தான். உள்ளூர் பாண்டியர்களும், மலையாளத்து சேரர்களும் அரேபியர்கள் மற்றும் சீனர்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்தனர். முன்னூறு ஆண்டுகளில் சோழ பேரரசை மறையச் செய்து விட்டனர்.


[1] தினமணி, சர்வதேச படகு போட்டி: அக்டோபர் 3-ல் தொடக்கம், First Published : 22 Sep 2010 01:04:20 AM IST; http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sports&artid=306596&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=

[2] தினத்தந்தி, பாய்மர படகு போட்டியில் மாணவர்களுக்கு பயிற்சி,  22-09-2010; http://www.dailythanthi.com/article.asp?NewsID=595625&disdate=9/22/2010

[3] http://www.dinakaran.com/sportsdetail.aspx?id=15988&id1=2

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: