சோழற்கால தாமிர பட்டயங்கள், உலோகச் சிலைகள் மற்ற பொருட்கள் கிடைப்பது!

சோழற்கால தாமிர பட்டயங்கள், உலோகச் சிலைகள் மற்ற பொருட்கள் கிடைப்பது!

கடற்கரை மாவட்டங்களில் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி) சோழர்கால செப்பேடுகள், பஞ்சலோக / வெண்கலச்சிலைகள், பூஜைக்குறிய பாத்திரங்கள் முதலியவை கிடைத்து வருவது, சோழர்களின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. கிழக்கு-மேற்கு கடல்களில் ஆதிக்கம் செல்லுத்தி வந்த சோழர்கள் திடீரென்று மறைந்து விட்டதைப் பற்றி, சரித்திர ஆசிரியர்கள் விளக்கம் கொடுப்பதில்லை. அவர்களின் கடற்படைகள் என்னவாயிற்று, கப்பல்கள் எங்குச் சென்று மறைந்தன, அந்த கப்பல் தொழிற்நுட்பம் அறிந்த வல்லுனர்கள், கட்டுபவர்கள், மரக்கல நாயகர்கள், மீகாமன்கள், மாலுமிகள் முதலியோர்கள் எங்கு மறைந்து விட்டனர்? அதைப் பற்றி ஆராய்ச்சியும் செய்வது இல்லை.

Chola-bronzes-found-2010

Chola-bronzes-found-2010

இப்பொழுதுகூட தாமிரப்பட்டயங்கள் கிடைத்தன என்கிறார்களேத் தவிர, அதில் உள்ள விவரங்களைக் கொடுப்பதில்லை. அதைப்பற்றி உடனடியாக அறிக்கை மற்றும் படங்களை வெளியிடுவதும் இல்லை. ஏதோ பத்திரிக்கைகளில் ஒரு-சில புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். அத்துறை தலைவர், ஏதோ தான்தான் அவற்றைக் கண்டுபிடித்தது மாதிரி பேட்டிகொடுத்து மறைந்துவிடுகிறார். சிலைகளைவிட, மற்றவர்கள் சூழ்ந்து கொண்டு, தங்களது முகங்கள் காட்டும் மாதிரி “போஸ்” கொடுக்கும் புகைப்படங்களுக்கும் குறைவில்லை.

Chola-period-artifacts-unearthed

Chola-period-artifacts-unearthed

இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தாலும், சோழர்களது கடற்வழி மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கும் வண்ணம் – அவர்களது கப்பற்தொழிற்நுட்பம், கப்பல் கட்டும் திறமை, கப்பல்கள் கட்டப்பட்ட இடங்கள், உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள், பாய்மரங்கள், உபகரணங்கள், கருவிகள், முதலியவை எங்கு சென்று மறைந்தன?

Copper Plate Grant of Rajendra Chola I

Copper Plate Grant of Rajendra Chola I

ஏன் சோழர்களின் கட்டுமானங்களில், கோவில்களில், சிற்பங்களில் கப்பற்துறை பற்றிய விவரங்கள் காணப்படுவதில்லை? ஏதோ ஒரு ஐரோப்பியனது உருவம், கோபுரத்தில் செதுக்கத் தெரிந்தவனுக்கு, தமது கப்பற்படை பற்றிய மேன்மையை செதுக்க மறந்திருப்பானா? ஒருவேளை, அத்தகைய சிற்பங்கள் அழிக்கப்பட்டிருக்குமா? “லேடன் தாமிர பட்டயங்கள்” மாதிரி, ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுவிட்டிருப்பார்களா?


Interesting find:Bronze icons which were excavated from a construction site in Velankanni on Tuesday (reported in “The Hindu” dated Wednesday, Aug 04, 2010).

School Education MinisterThangam Thennarasu showing the recently discovered Chola period artefacts found near Thiruindalur to Chief Minister M.Karunanidhi in Chennai on Thursday. Deputy Chief Minister M.K.Stalin, Union Minister A.Raja, Agriculture Minister Veerapandi S.Arumugam and Information Minister Parithi Ellamvazhuthi are in the picture.
Photo:DIPR School Education MinisterThangam Thennarasu showing the recently discovered Chola period artefacts found near Thiruindalur to Chief Minister M.Karunanidhi in Chennai on Thursday. Deputy Chief Minister M.K.Stalin, Union Minister A.Raja, Agriculture Minister Veerapandi S.Arumugam and Information Minister Parithi Ellamvazhuthi are in the picture.
Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: