நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

First Published : 16 Mar 2010 02:54:12 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=212223&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

சிதம்பரம், மார்ச் 15: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடத்தை இடிப்பது போன்ற செயல்பாடுகளில் அறநிலையத் துறையினர் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இந்து அறநிலையத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆலய வளாகத்தில் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டு ஓராண்டில் ரூ.17 லட்சம் வசூலானது. ரூ.27 லட்சத்துக்கு பிரசாதக் கடைகள் ஏலம் விடப்பட்டன. பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு புதிய செயல் அலுவலர் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயிலை இந்து அறநிலையத் துறையினர் கையகப்படுத்தியதற்கு தடை கோரி ஆலய பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மார்ச் 15-ந் தேதி நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்பிரமணியம்சுவாமி வாதாடினார். மேலும் தீட்சிதர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாத ஐயர், வெங்கட்ராம ஐயர் ஆகியோரும், சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பில் காலிஸ்கன்சால்வேள், பி.ஆர்.கோவிலன் பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அசோக்தேசாய், மரிய அற்புதம், நெடுமாறன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் பல்வேறு விஷயங்களை ஆராய கால அவகாசம் தேவை. அதனால் இவ்வழக்கை ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், வழக்கு விசாரணை முடியும் வரை அறநிலையத் துறையினர் கோயிலின் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடங்களை இடிப்பதோ, புதிய பணிகளை மேற்கொள்ளவதோ கூடாது. பழுதுநீக்கம் செய்யலாம். அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

ஒரு பதில் to “நடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்”

  1. vedaprakash Says:

    மேலேயிருக்கும், தினமணி செய்திற்கு, அங்கேயிட்ட மறுமொழி:
    http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=212223&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

    “கோயிலின் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடங்களை இடிப்பதோ, புதிய பணிகளை மேற்கொள்ளவதோ கூடாது” – அம்மம், இதென்ன விவகாரம்? எப்பொழுது இத்தகைய நிலை தமிழகத்தில் வந்தது? அதெப்படி தமிழர்களுக்கேத் தெரியாமல் அத்தகைய நிலை வரும்? யார் அந்த ஔரங்கசீப்?. “சிவனடியார்” ஆறுமுகசாமி தரப்பில் காலிஸ்கன்சால்வேள், பி.ஆர்.கோவிலன் பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜரானார்கள். என்னய்யா இந்த பெயர்கள், யார் இவர்கள்? உலக சைவ மாநாடு நடந்து கொண்டிருக்கும்போது, எந்த ஆளை கண்டுக்கக் கூட ஆளை யாரும் இல்லை. ஏதோ சென்னையிலிருந்து வந்த முன்று பேர் இவரது பின்னணியை – குறிப்பாக திக-திமுக-பாமக-மகஇக முதலியோர்தாம் ஆதரவு தருகின்றனரா என்று கேட்டதும் கெட்கவேண்டுமே, இந்த “சிவனடியார்” கெட்ட-கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கத்த ஆரம்பித்து விட்டது. அதிர்ந்து விட்டனர் அந்த மூவரும்! ஆஹா, இங்கேயும் இன்னொரு “நித்யானந்தா” (இது வேறு மாதிரி) இருப்பது அவர்களுக்கு அன்று புரிந்திருக்கும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: