நான் செத்துப் பிழைத்தவன்டா: டி.எம்.சவுந்தரராஜன் பேட்டி!

நான் செத்துப் பிழைத்தவன்டா: டி.எம்.சவுந்தரராஜன் பேட்டி

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27329பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உடல்நிலை சரி இல்லாமல் சேன்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கச்சேரி நடத்துவதற்காக நேற்று அவர் மதுரை வந்தார். அப்போது டி.எம்.சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,   ‘’உடல்நிலை சரி இல்லாமல் கடந்த வாரம் சிகிச்சை பெற்று வந்தேன். மதுரை மீனாட்சி அம்மன், முருகப்பெருமான் அருளாலும் ரசிகர்களின் வேண்டுதலாலும் உடல்நலம் தேறி மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்த வந்துள்ளேன்.

எனது மூத்த மகன் பாலராஜன் எம்.ஜி.ஆர். பாடல்களையும் இளைய மகன் செல்வக்குமார் சிவாஜி பாடல்களையும் கச்சேரிகளில் பாடி புகழ் பெற்று வருகிறார்கள்.

மதுரை காந்தி மியூசியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு மகன்களுடன் இணைந்து இசைக் கச்சேரி நடத்த உள்ளேன். உடல்நலம் குன்றி மறுபிறவி எடுத்து வந்துள்ள நான், எப்படி பாடப்போகிறேன் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

மரணத்தை போன்ற ஒரு நோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். பக்திப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் பாட உள்ளேன். இதில் கிடைக்கும் நிதி ஏழைக்குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

மதுரையில் பிறந்த கலைஞனை மதுரை மக்கள் கைவிட மாட்டார்கள். அந்த வகையில் இது மதுரைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி.

எம்.ஜி.ஆருக்காக `நான் செத்துப் பிழைத்தவன்டா` என்ற பாடலை பாடினேன். அதுபோல் என் வாழ்வில் நடந்துள்ளது. அனைத்து மொழி மக்களும் எனது பாடலை கேட்டு ரசிக்கிறார்கள்.

இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. முருகப்பெருமான் தனக்காக ஒரு அடிமையை உருவாக்கி அவனுக்கு சிறப்பான குரலையும் கொடுத்து என்னை பாட வைத்து வருகிறார். என் இறுதி மூச்சு இருக்கும் வரை ரசிகர்களுக்காக பாடிக்கொண்டே இருப்பேன்’’என்று தெரிவித்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் டி.எம்.எஸ்.

February 20, 2010

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் (87) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரது உடல் நிலை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த டி.எம்.எஸ்., உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகி்ச்சை அளித்தனர். ஞாபக சக்தி குறைந்ததால் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. உடலில் உப்பின் அளவு குறைந்து விட்டதாலும், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாலும் ஞாபக சக்தி குறைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் டி.எம்.எஸ். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

Advertisements

குறிச்சொற்கள்: , ,

ஒரு பதில் to “நான் செத்துப் பிழைத்தவன்டா: டி.எம்.சவுந்தரராஜன் பேட்டி!”

 1. vedaprakash Says:

  தமிழ் தெரிந்த மக்கள் இவரை அறியாமல் இருக்கமுடியாது. அப்படியொரு அதிசயமானப் பாடகர்.

  இதே இவர் அயல்நாட்டில் இருந்திருந்தால் எத்தனையோ தடவை “ஆஸ்கார்”, “கிராமி” விருதுகள் எல்லாம் வாங்கியிருப்பார்.

  ஏன் இன்றுகூட அத்தகைய விருதுகளை அவருக்கு அளிக்கலாம், அதற்கு அவர் தகுதியானவர்தாம்.

  முன்பு ஜகதீஸ் சந்திர போஸ் வானொலியைக் கண்டுபிடித்ததற்கு, மார்கோனிற்கு நோபல் பரிசு கொடுத்தார்களாம்! இவரைப் பராட்டாமல், யார்-யாரோ தமிழகத்தில் பாராட்டப்படுகிறர்களே என்று நினைக்கும்போது , அதுதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

  இப்பொழுதாது, அத்தகைய விருதுகள் இவர்க்குக் கொடுக்கப் பட்டால், நிச்சயமாக அவ்விருதுகள் பெருமைப் படும் என்றால் மிகையாகாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: