சிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு

சிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு

12வது சிதம்பரத்தில் உலக சைவ மாநாடு: சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு வெள்ளிக் கிழமைத் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது; 13 நாடுகளில் இருந்து சைவ சான்றோர் 200 பேர் பங்கேற்கின்றனர். தமிழர்கள், சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமயத்தின் தொன்மை, பெருமைகள், உலகில் உள்ள அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக உலக சைவப் பேரவை அமைப்பு, லண்டனில் சிவநந்தியடிகள் என்பவரால் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை உலக சைவப் பேரவை மாநாட்டை, ஒவ்வொரு நாட்டிலும் நடத்தி வருகிறது. லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்ரிக்கா, மொரீசியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறாவது மாநாடு, தமிழகத்தில் தஞ்சை பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக, தமிழகத்தில் சிதம்பரத்தில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி அரங்கில், மாநாடு 5ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள திருமுறை, சைவ சித்தாந்த குழுக்கள், ஆதீனங்கள், சிவநெறி சிந்தனையாளர்கள், அறிஞர்கள் என 1,500 பேர் பங்கேற்கின்றனர்; 13 நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டில், சைவம் பற்றிய சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், திருமுறை இசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

5ம் தேதி மாலயில் பேரணி: சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு பிரம்மாண்ட பேரணியுடன் துவங்கியது. சிதம்பரம் அடுத்த திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது. மாலை சிதம்பரம் கீழ வீதியில் இருந்து ஆதினங்கள், சிவநெறியாளர்கள், திருமுறை, சைவ சிந்தாந்த குழுக்கள், அறிஞர்கள், சிவ தொண்டர்கள், வெளி நாட்டு அறிஞர்கள் என 2000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி துவங்கியது.சிதம்பரம் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமை தாங்கினார். சுந்தரேசம்பிள்ளை திருமுறைகள் ஓதினார். அவரை தொடர்ந்து, 63 நாயன்மார்கள் உருவச் சிலைகள் மற்றும் நாயன்மார்கள் வேடமிட்ட சிறுவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இசை வாத்தியங்கள் முழங்க, மேள தாளத்துடன் பேரணி நடந்தது.பேரூர் இளைய மடாதிபதி மருதாச்சல அடிகள், திருப்பனந்தாள் ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான்,கோவை சின்னவளம்பட்டி சிரவை ஆதினம் குமருகுரு, தருமை ஆதினம் திருநாவுக்கரசு தம்பிரான், பழனி சாது சண்முக அடிகளார், திருப்பனந்தாள் முத்துக்குமாரசாமி தம்பிரான், விழா ஒருங்கிணைப்பாளர் பத்மினி கபாலிமூர்த்தி பேரணியை வழிநடத்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக, அண்ணாமலை பல்கலை மாநாட்டு திடலை அடைந்தது. பின்னர் சாஸ்திரி அரங்கில் மாநாடு துவங்கியது.

06-02-2010 (சனி): முற்பகல் மாநாடு துவங்கி வைக்கப் பட்டது. முக்கியமான சைவப் பெரியோர்களின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.

12-வது உலக சைவப் பேரவை மாநாட்​டில் பேசு​கி​றார் பழனி சாது​சண்​மு​க​அ​டி​க​ளார் ​(வலது கோடி)​.​ உடன் ​(வல​மி​ருந்து)​ பேரூர் சாந்த​லிங்க ராம​சாமி அடி​க

சிதம் ​ப​ரம்,​​ பிப்.​ 6:​ சைவ சம​யம் உல​க​ள​வில் பர​வி​ய​தற்கு முக்​கிய கார​ண​மாக உள்​ள​வர்​கள் இலங்கைத் தமி​ழர்​களே என பழனி சாது சண்​முக அடி​க​ளார் தெரி​வித்​தார்.​சி​தம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக சாஸ்​திரி ஹாலில் 12-வது உலக சைவப் பேரவை மாநாடு வெள்​ளிக்​கி​ழமை தொடங்​கி​யது.​ மாநாட்டு தொடக்க நிகழ்ச்​சி​யாக குன்​றக்​குடி தெய்​வ​சி​கா​மணி பொன்​னம்​பல தேசிக பர​மாச்​சா​ரிய சுவா​மி​கள் மாநாட்டு கொடி​யினை ஏற்​றி​னார்.​ நகர்​மன்​றத் தலைவி ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம் தேசி​யக் கொடியை ஏற்​றி​னார்.​ திரு​முறை பண்​ணிசை அமுது நிகழ்ச்​சி​யு​டன் மாநாடு தொடங்​கி​யது.​பழனி சாது சண்​முக அடி​க​ளார் வர​வேற்று பேசி​யது:​ இலங்​கை​யில் தமி​ழர்​கள் துணி​ம​ணி​கள் உள்​ளிட்ட வாழ்​வா​தா​ரங்​களை இழந்​த​னர்.​ ஆனால் அவர்​க​ளி​ட​மி​ருந்து தமிழ் மற்​றும் சம​யத்​தைப் பிரிக்க முடி​ய​வில்லை.​ அந்​த​ள​வுக்கு அவர்​கள் வாழ்க்கை முறை​யில் தமிழ் மற்​றும் சம​யத்தை கடை​பி​டித்து வாழ்ந்து வந்​த​னர் என தெரி​வித்​தார்.​லண்​டன் மெய்​கண்​டார் ஆதீ​னம் மற்​றும் உலக சைவப் பேர​வைத் தலை​வர் யோகா​னந்த அடி​கள் பேசி​யது:​​ தமி​ழர்​கள் மேலை நாடு​க​ளில் கல்வி,​​ வணி​கம்,​வேலை மற்​றும் தூது​வர்​க​ளாக சென்​றார்​கள்.​ அங்கு தான் கற்​றுக் கொண்ட கல்வி,​​ கலா​சா​ரம்,​​ மதத்​தை​யும் பின்​பற்றி வந்​த​னர்.​ முதல் முத​லாக சைவ சித்​தாந்த அமைப்பு இங்​கி​லாந்​தில் உரு​வாக்​கப்​பட்​டது.​பின்​னர் லண்​ட​னில் சிவ​நந்தி அடி​க​ளா​ரால் உலக சைவப் பேரவை தொடங்​கப்​பட்​டது.​ கொழும்பு, ​​ தென்​ஆப்​பி​ரிகா,​​ மொரி​ஷி​யஸ்,​​ மலே​சியா,​​ இந்​தியா ​(தஞ்​சா​வூர்)​,​​ ஆஸ்​தி​ரே​லியா,​​ சுவிட்​சர்​லாந்து உள்​ளிட்ட நாடு​க​ளில் உலக சைவப் பேரவை மாநா​டு​கள் நடத்​தப்​பட்​டுள்​ளது.​÷இந்​தி​யாவி​லி​ருந்து 24 வயது இளை​ஞர் ஒரு​வர் தென்​ஆப்​பி​ரி​கா​வுக்​கும்,​​ 30 வயது இளை​ஞர் ஒரு​வர் அமெ​ரிக்​கா​வுக்​கும் சென்​ற​னர்.​அங்​கி​ருந்த திரும்பி வரும்​போது ஒரு​வர் மகாத்மா காந்​தி​யா​க​வும்,​​ மற்​றொ​ரு​வர் விவே​கா​னந்​த​ராக திரும்பி வந்​த​னர்.​ அது​போன்று இலங்​கையி​லி​ருந்து 2 பேர் இங்​கி​லாந்து மற்​றும் பிரான்​சுக்கு சென்​ற​னர்.​ அவர்​க​ளில் ஒரு​வர்​தான் சிவ​நந்தி அடி​க​ளார்,​​ மற்​றொ​ரு​வர் யோகா​னந்த அடி​கள் என்​றார்.​த​ரு​ம​பு​ரம் ஆதீ​னம் சண்​முக தேசிக ஞான​சம்​பந்த பர​மாச்​சா​ரிய சுவா​மி​கள் தலைமை வகித்​துப் பேசி​யது:

எல்​லோ​ரும் ஒருங்​கி​ணைந்து ஒரே குர​லாக ஒலித்​தால்​தான் சம​யத்தை வளர்க்க முடி​யும்.​ வெறும் கூட்​டத்தை கூட்​டி​னால் மட்​டும் வளர்க்க முடி​யாது.​ அறி​ஞர்​கள் சொல்​வதை மற்​ற​வர்​கள் பின்​பற்ற வேண்​டும்.​ சைவத் தூணாக இருந்த ஆறு​முக நாவ​ல​ரின் வழியை நாம் பின்​பற்ற வேண்​டும்.​ கிறிஸ்​த​வர்​க​ளின் சூழ்ச்​சி​யில் சிக்கி பணி​யாற்​றிய அவர் அதன் பின்​னர் அதை உதறி விட்டு இந்​தியா வந்து சைவ சம​யத்தை வளர்த்​தார்.​வே ​தம்,​​ ஆக​மம்,​​ புரா​ணம் இவை மூன்​றும் முக்​கி​யம்.​ பேசு​ப​வர்​கள் ஒரு வட்​டம்,​​ அரங்​கம் அமைத்​துக் கொள்ள வேண்​டும்.​ சம​யத்​துக்கு அள​வு​கோல் கிடை​யாது.​ சம​யம் என்​பது பக்​கு​வப்​பட்ட சமை​யல் போன்​றது.​ தற்​போது கல்​வித் துறை​யில் வர​லாறு,​​ பூலோ​கம் யாரும் படிப்​ப​தில்லை.​ மருத்​து​வம்,​​ பொறி​யி​யல்,​​ கணினி ஆகி​ய​வற்​றை​தான் படிக்​கின்​ற​னர்.​ படித்​து​விட்டு வேலைக்கு போய் கண் பார்வை பறி​போய் விடு​கி​றது.​ இடுப்பு வலி வந்து விடு​கி​றது.​ பணம் சம்​பா​திப்​பதை முக்​கி​ய​மாக வைத்து படிப்​ப​தால் இத்​த​கைய இன்​னல்​க​ளில் அடை​கின்​ற​னர்.​ சம​யத்தை பற்றி எத்​தனை ஆண்​டு​கள் படித்​துள்​ளீர்​கள்.​ எனவே சம​யத்தை பற்றி நன்​றாக படிக்க வேண்​டும் என சண்​முக தேசிக ஞான​சம்​பந்​தர் தெரி​வித்​தார்.

தி​ரு​வண்​ணா​மலை துறை​யூர் ஆதீ​னம் கல்​யா​ண​சுந்​தர சிவப்​பி​ர​காச பர​மாச்​சா​ரிய சுவா​மி​கள் தொடக்​க​வு​ரை​யாற்​றி​னார்.​ நிகழ்ச்​சியை டாக்​டர் பத்​மினி கபா​லி​மூர்த்தி தொகுத்து வழங்​கி​னார்.​ மாநாட்​டில் மதுரை ஆதீ​னம் அரு​ண​கிரி ஞான​சம்​பந்​தர்,​​ இலங்கை யாழ்ப்​பா​னம் நல்​லை​யா​தீ​னம் சோம​சுந்​தர தேசிக ஞான​சம்​பந்​தர்,​​ குன்​றக்​குடி பொன்​னம்​பல தேசிக பர​மாச்​சா​ரி​யார்,​​ திருப்​ப​னந்​தாள் ஆதீ​னம் முத்​துக்​கு​மா​ர​சாமி தம்​பி​ரான்,​​ பேரூர் ஆதீ​னம் சாந்த​லிங்க ராம​சாமி அடி​க​ளார்,​​ மரு​தா​சல அடி​க​ளார்,​​ ஊரன் அடி​க​ளார்,​​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக பதி​வா​ளர் எம்.ரத்​தி​ன​ச​பா​பதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

மாநாட்டில் கலந்து கொண்டவன் என்ற முறையில் சொல்வதாவது, மடாதிபதிகள் இப்பொழுதைய நாத்திக ஆட்சியின் பிடியில் கட்டுண்டுள்ளார்கள். இங்கும் “சைவர்கள்”, “சைவம்” என்ற போர்வையில் பல புல்லுருவிகள் இருப்பது (அதாவது சித்தாந்த ரீதியில் இந்துக்களைப் பிரிக்கும் கோஷ்டிகள்) தெரிகின்றது. முதலில், இந்துக்கள் என்ற உணர்ச்சியிலாமல், மடாதிபதிகள் அல்லது அவர்களைச் சேர்ந்த அடியார்கள் பிரிந்து கிடப்பது யாருக்கும் நல்லதல்ல. மதுரையாதீனம், அன்று முகமதியரிடம் “சரண்டர்” ஆகி, இங்கோ “ரஜினிகாந்த்” ஸ்டைலில் கைகளை உயர்த்திக் காட்டி, உடலை ஆட்டி ஆட்டிப் பேசுகிறார். அத்தகைய வீரத்தை அன்று காட்டியிருக்கவேண்டும் (குமர குருபரர் டில்லி சுல்தானிடம் காட்டியது போன்று).

சில மடாதிபதிகள் நேற்று (06-02-2010) மாலை வெளிப்படையாக பேசியுள்ளது ஓரளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. முனைவர் சாமி தியாகராஜன் பேசிய மாதிரி, அத்தகைய உணர்வினைக் கொள்ளாமல், இப்பொழுதுள்ள மடங்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது. ஆறுமுக நாவலரைப் போன்றவர்கள்தாம் நமக்குத் தேவை (அடிக்கடி இலங்கைப் பிரச்சினையை இங்கு நுழைத்து குதர்க்கம் பேசும் தமிழர்களையும் சேர்த்து). சைவத்தால் தமிழில் குறுகிய எண்ணத்துடன் கட்டுண்டுக் கிடக்க முடியாது.

முனைவர் சாமி தியாகராஜன்

முனைவர் சாமி தியாகராஜன்

இன்றைய உலகமயமாக்கல் நிலையில் உலக சைவ மாநாடு நடக்கும் நிலையில், பரந்த நிலையில் இருக்கவேண்டும். அதற்கு மடங்கள் அரசின் பிணைப்புகளினின்று விடுப்பெற்றால்தான், மதம் சிறந்து செழுக்க, செழுமையாக்க, சிறக்க முடியும். வசதியுள்ள மடங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதில்லை. வசதியில்லாத மடங்களோ தங்களது பிரச்சினைகளிலேயே உழன்றுக் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே, அவர்களை குறை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கோவில், கோவில் நிலம், அசையும்-அசைய சொத்துகளை அனுபவிக்கும், கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை முதலில் வெளியேற்ற வேண்டும். அப்பொழுதுதான், இந்துக்கள் தங்களது உரிமைகளை உண்மையாகப் பெற முடியும்

12வது உலக சைவ மாநாடு ஆய்வுக் கோவை

12வது உலக சைவ மாநாடு ஆய்வுக் கோவை

பிற்பகல் ஐந்து அமர்வுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. “ஆய்வுக் கோவை” (இரண்டு தொகுதிகளில்)வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி -1ல் 96 கட்டுரைகள், 2ல் 208 கட்டுரைகள் உள்ளன. 70% அரைத்த மாவையே அரைத்துள்ளன. பேரூர் ஆதீனம் மிக்கச் சிரமுத்துடன் பாடுபட்டு, இந்த மாநாட்டை, மிகவும் செம்மையாக நடத்தியுள்ளார். அவர் கட்டுட்ரைகளை சரிபார்த்து, திருத்தி வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், அடிக்குறிப்புகள் விடுபட்டிருப்பது, சில அருமையான ஆய்விக் கட்டுரைகளின் ஆதாரங்கள் அரிய முடியாமல் போகின்றது. படங்களையும் சேர்த்திருக்கவேண்டும். ஏனெனில், அவை அத்தாட்சிகள். இன்றே பல மறைந்து விட்டன. இனி இருப்பவையும் காணாமல் போய்விட்டால் ஒன்றும் செய்யமுடியாது!

07-02-2010 (ஞாயிறு): மாநாட்டின் 3-ம் நாள் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் தொடங்கி வைத்து பேசியது:​​ “சைவத்தின் பெருமைகளையும்,​​ பண்பாட்டின் பெருமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் சைவப் பேரவை செயல்பட்டு வருகிறது.​​ பண்பாடு,​​ கலாசாரம் மற்றும் வழிபாட்டு முறைகளை நாம் காலத்தால் அழித்து வருகிறோம்.​ அதனைப் பாதுகாக்க இளைஞர்களை சமயத்தில் ஈடுபாடு செய்திட வேண்டும்.​ இளைஞர்கள் சைவத்தின் பெருமைகளையும்,​​ தத்துவங்களையும் தெரிந்து கொள்வதற்கு வழிவகுத்து கொடுக்க வேண்டும்.​ காலம்,​​ நேரம்,​​ அறிவியல் உள்ளிட்ட அனைத்தையும் நாம் வென்றுவிட்டோம்.​ மனித மனங்களின் இடையே உள்ள வேறுபாடுகளை வெல்ல முடியவில்லை.​ நாணயத்துக்கு இருபக்கம் உள்ளது போல் மனித வாழ்க்கையில் ஆன்மிகமும்,​​ உலகியலும் இருபக்கமும் இணைந்து செயல்பட வேண்டும்.​ அதனை இளைஞர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்”.

12-வது உலக சைவப் பேரவை மாநாட்டு நிறைவு விழாவில் தொடக்கவுரையாற்றுகிறார் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் ​(இடமிருந்து 4வது).(இடமிருந்து)​ யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் சோமசுந்தரதேசிக ஞானசம்பந்தர்,சிரவை ஆதீனம் குமரகுருபரஅடிகளார்,​​ திருப்பனந்தாள் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான்,​​ திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாசதேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,​​ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,​​ தூத்துக்குடி செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தர சத்தியஞான தேசிகர்,​​ பழனி சாது சண்முகஅடிகளார்,​​ லண்டன் மெய்கண்டார் ஆதீனம் யோகானந்த அடிகளார்.

மதமாற்றம் ஏன்? தூத்துக்குடி செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தர சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்துப் பேசியது:​ “84 வகையான பிறப்புகளில் மனித பிறப்பு மேன்மையானது.​ ஆனால் மனிதன் மட்டும்தான் அனைத்து கெட்ட நோக்கிலும் செயல்படுகிறான்.​ அதனை நெறிப்படுத்ததான் இந்த மாநாடு.​ மற்ற ஜீவன்களுக்கு சமயம் கிடையாது.​ நமக்கு சமயம் உண்டு.​ மனிதனை நெறிப்படுத்ததான் சமயம் உருவாக்கப்பட்டது.​ பிற ஜீவன்கள் விதிக்கப்பட்ட முறைப்படி வாழ்கின்றன.​ மனிதன் அப்படி அல்ல.​ மனிதனை அறநெறிப்படுத்த மதங்களால் மட்டுமே முடியும்.​ அதுவும் குறிப்பாக சைவ சமயத்தால்தான் முடியும்.​ அறநெறி,​​ ஆன்மிகம்,​​ திருபேறு ​(மோட்சம்)​ ஆகிய மூன்றையும் தரவல்லது சைவ சமயமாகும்.​ இந்தியாவில் பெரியளவில் மதமாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.​ அதற்கு இந்து சமயம் குறித்து பிரசாரங்கள் இல்லாததே காரணம்.​ தற்போதைய பிரசாரம் மக்களை சென்றடையவில்லை.​ மதமாற்றம் சூழ்நிலைகளால் ஏற்படுகிறது.​ அந்த சூழ்நிலைகளை கண்டறிந்து அதனை முறைப்படுத்த ஆதீனங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் கல்யாணசுந்தர சத்தியஞான தேசிகர் தெரிவித்தார்“.

உலக-சைவ-மாநாடு-சிதம்பரம்

உலக-சைவ-மாநாடு-சிதம்பரம்

டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.​ சென்னை பல்கலைக்கழக கோபாலகிருஷ்ணன்,​​ லண்டனைச் சேர்ந்த முனைவர் கணேசலிங்கம்,​​ திருவாவடுதுறை ஆதீனப்புலவர் குறிஞ்சிதபாதம்,​​ முனைவர் கா.அரங்கசாமி,​​ தென்காசி கணபதிராமன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.​ இசைத்தமிழ் என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி வெளியிட்டார்.​ முதல்பிரதியை சுந்தரமூர்த்தி தம்பிரான் பெற்றுக் கொண்டார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “சிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு”

 1. vedaprakash Says:

  சைவ சமய கோட்பாட்டின் மூலம் தீவிரவாதத்தை முறியடிக்க முடியும் : செங்கோல் ஆதீனம் பேச்சு
  http://www.dinamalar.com/district_main.asp?ncat=Cuddalore#303793

  சிதம்பரம் : “சைவ சமய கோட்பாட் டின் மூலமாக தீவிரவாதத்தை முறியடிக்க முடியும்’ என, செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தர சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.
  சிதம்பரத்தில் நடந்த உலக சைவ மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிறப்புகளில் 84 வகை உள்ளது. அதில் மேன்மையான பிறப்பு, மனித பிறப்பு. மனிதனை தவிர மற்ற பிறவிகள் அனைத்தும் கெட்ட நோக்கங்கள் இல்லாமல் செயல்படுகின்றன. எனவே, மனிதனை நெறிப்படுத்த இங்கு நடத்தப்படும் உலக சைவ மாநாடு பயனுள்ளதாக அமையும். உலகில் உள்ள ஜீவன்கள் அத்தனைக்கும் சமயம் கிடையாது. மனிதனுக்கு மட்டும் தான் சமயம் உண்டு. மனிதனை நெறிபடுத்தும் ஒரே சமயம் சைவ சமயம் மட்டுமே.

  மனிதனை தவிர பிற ஜீவன்கள் விதிக்கப்பட்ட முறைப்படி வாழ்கின்றன. அதனால்தான் மனிதனை அறநெறிப்படுத்த வேண்டியுள்ளது. சைவ, சித்தாந்தத் தால் மட்டுமே அது முடியும். இந்து மதத்தில் தான் அதிக மதமாற்றம் நடக்கிறது. இந்து சமயங்கள் பற்றி மக்களிடம் பிரசாரம் இல்லாததே இதற்கு காரணம். மத மாற்றத்திற்கு சூழ்நிலையும் ஒரு காரணமாக அமைகிறது.

  அந்த சூழ்நிலையை கண்டறிந்து முறைப்படுத் துவதன் மூலம் மதமாற் றத்தை தடுக்க முடியும். ஆதீனங்கள், மடாதிபதிகள் மூலமாக இந்த பணியை செய்ய முடியும். தீவிரவாதம், பயங்கரவாதம் அதிகமாக உள்ளது. பிற மதங் கள் கூறும் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் கட்டுப்படுத்தப் படுவதில்லை. இந்து சமயத் தின் சைவ சமய கோட் பாடு மூலம் தீவிரவாதத்தை கண்டிப்பாக முறியடிக்க முடியும். இவ்வாறு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.

  சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் பேசியதாவது: சைவத்தின் பெருமைகளையும், பண்பாட்டையும் மக்கள் பின்பற்றவும், பாதுகாக்கவும் திருமுறைகளை பாதுகாக்க வேண்டிய பணி நமக்கு உள்ளது. யோகானந்தர் இந்த பணியை செய்து வருகிறார். திருமடங்களின் பங்கும் அதிகம். சமயத்தின் வழிபாட்டு நெறிமுறைகள் அழிந்து கொண்டிருக்கிறது.

  இளைஞர்கள் தடம் மாறியும், தடுமாறியும் வருகின்றனர். அவர்களுக்கு சைவ சமயத்தின் தத்துவங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். சமய நெறிமுறைகள், சமய ஆகமங்கள், திருமுறைகளை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியருக்கு இந்த பணி பயனுள்ளதாக அமையும்.
  காலம், நேரம், விஞ்ஞானம் என அனைத்தையும் நாம் வென்றுவிட்டோம். மனிதர்களின் வேறுபாடுகளை வெல்ல முடியவில்லை. மனித வாழ்க் கைக்கு உளவியலும், ஆன்மிகமும் மிக அவசியம். சம அளவில் இரண் டும் வேண்டும். ஒன்று சரியில்லை என்றாலும் ரயில் பாதை போன்று தடம் மாறிவிடும். இவ்வாறு குமரகுருபர அடிகளார் பேசினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: