மலேசிய தமிழக ஆட்சியாளர்களின் சந்திப்பு!

மலேசிய தமிழக ஆட்சியாளர்களின் சந்திப்பு!

© வேதபிரகாஷ்

தமிழகத்தமிழ் பத்திரிக்கைகளின் மௌனம்: மலேசிய பிரதமர் விஜயத்தைப் பற்றி தமிழகப் பத்திரிக்கைகள் மௌனம் சாதிக்கின்றன எனலாம். ஆங்கில பத்திரிக்கைகள் ஓரளவு செய்திகளைக் கொடுத்துள்ளன. மலேசிய பத்திரிக்கைகளோ ரசாக்கின் விஜயத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

மலேசிய மந்திரி வீரமணியை சந்திப்பது!

மலேசிய மந்திரி வீரமணியை சந்திப்பது!

சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த மலேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எச்.இ.ஏ. கோகிலன்பிள்ளை, சிவகடாட்சம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வரவேற்றார். இயக்க வெளியீடுகளை வழங்கினார் தமிழர் தலைவர். (23.1.2010).

பெரியார் அருங்காட்சியகத்தில் மலேசிய பிரமுகர்கள் (23.1.2010)

திராவிட கழக அருங்காட்சியகத்தில் மலேசிய பிரமுகர்கள் (23.1.2010)

தமிழர் தலைவரை மலேசிய நாட்டு அமைச்சர் சந்தித்தார் பெரியார் சமாதியில் / நினைவிடத்தில் மரியாதை!

பெரியார் சமாதியில் மலேசிய அமைச்சர் மரியாதை (23.1.2010)

பெரியார் சமாதியில் மலேசிய அமைச்சர் மரியாதை (23.1.2010)

பெரியார் சமாதியில் மலேசிய அமைச்சர் மரியாதை: சென்னை, ஜன. 24, 2009: சென்னை பெரியார் திட-லுக்கு 23.1.2010 அன்று காலை மலேசியாவினுடைய வெளியுறவுத் துறை இணை அமைச்-சர் ஹெச்.ஈ.ஏ. கோகிலன் பிள்ளை வருகை தந்தார். அவருடன் சிவகடாட்சம் தேவநந்தன், கனகராஜன், ஜகராவ், சர்மா ஆகியோர் வருகை தந்தனர். பெரியார் திடலுக்கு வந்த அமைச்சர் மற்றும் விருந்தினர்களுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பொன்னாடை அணிவித்து அன்போடு வரவேற்று இயக்க நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் மற்றும் பிரமுகர்கள் பெரியார் அருங்காட்சியகம், மற்றும் பெரியார் திடல் வளாகத்தை சுற்றி பார்த்து வியந்து பாராட்டினர்.  நிறைவாக தந்தை பெரியார் நினைவிடம் சென்று அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர். தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தர் வீகெயென் கண்ணப்பன் ஆகியோர் மலேசிய அமைச்சர் கோகிலன் பிள்ளைக்கு பொன்னாடை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வரியியல் வல்லுநர் ச. ராசரத்தினம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல். ராமச்சந்திரன், வழக்கறிஞர் தியாகராசன், ப.சீதாராமன், க. சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆங்கிலப் பத்திரிக்கைகளிலிருந்து பெறும் விஷயங்கள்[1]: மலேசிய பிரதமர் முஹம்மது நஜிப் துன் அப்துல் ரசாக் தமது குழுவோடு தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு விஜயம் செய்யவேண்டும் என்று தமிழக முதன்மந்திரி கருணாநிதி 22-01-2010 வெள்ளி அன்று சந்தித்தபோது கேட்டுக் கொண்டுள்ளார். அதேமாதிரி தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள சாத்தியக்கூறுகளைப் பார்க்க சொன்னார்.

Najib meets with Karunanidhi (left) in Chennai yesterday. — Bernama pic

மலேசியா-தமிழகம் இவற்றிற்கிடையேயுள்ள பழமையான தொடர்பைக் குறிப்பிட்டு, ரசாக்கின் வரவு உறவை பலப்படுத்தும் என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் சுற்றுலா மற்றும் மருத்துவ வசதிகள் சிறப்பாக உள்ளமையால், மலேசிய பல்கலைக்கழகங்கள் இங்குள்ளவற்றுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள முன்வரவேண்டும் என்றும் கூறினார்.

கருணாநிதி மலேசிய ஆட்சியாளர்களுடன் பேச்சு

கருணாநிதி மலேசிய ஆட்சியாளர்களுடன் பேச்சு

முதலமைச்சர் கலைஞர் அவர்கள், சென்னை பார்க் ஷரட்டன் ஓட்டலில் மலேசியப் பிரதமர் ஒய்.ஏ.பி. டத்தோ முகம்மது நஜீப் துன் அப்துல் ரசாக் அவர்களை சந்தித்துப் பேசினார். உடன், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ். சிறீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் உள்ளனர் (சென்னை, 22.1.2010).

ரசாக் தமது மந்திரிகளை அறிமுகப்படுத்தி, இந்தியாவம்சாவளி மக்களை கவனித்துக் கொள்ளத் தனித்தனியாகக் குழுக்கள் உள்ளன என்றார். தமிழ் பள்ளிக்கூடங்கள் அங்கிருப்பதாகவும், அதற்கு நிதி தேவையான அளவிற்கு பகிர்ந்தளிப்பதாகவும் குறிப்பிட்டார். மாநாட்டிற்கு ஒரு குழுமத்தை அனுப்பிவப்பதாக வாக்களித்தார்.

மலேசிய பத்திரிக்கைகள் சொல்வது[2]: சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தனது சென்னை விஜயத்தைப் பற்றி, ரசாக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “எனது பயணம் சென்னையில் முடிந்தது தற்செயலானதல்ல, ஆனால் திட்டமிட்டபடிதான் சென்றேன். ஏனெனில் 85% மலேசிய மக்கள் தமிழகத்திலிருந்துதான் தமது மூலங்களைப் பெற்றுள்ளார்கள். அகையால் மலேசியா வளர்ந்ததற்கு அவர்களுடைய பங்களிப்பை நினைவு கூரவே அங்குசென்றேன்.  நாட்டுவளர்ச்சிற்கு பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் இனவேறுபாடு இல்லாமல் மதிக்கப்படவேண்டும் என்று கலந்துகொண்ட ஒரு விருந்தில் பேசினார். கடந்த 52 வருடங்களில் சென்னைக்கு எந்த மலேசிய பிரதமரும் வந்ததில்லை, நான்தான் முதன்முதலில் வந்துள்ளேன். மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார்.

“கடந்த காலத்தில் மலேசிய அரசாங்கத்தின் மீது மலேசிய இந்தியர்களுக்கு கொஞ்சம் திருப்தியில்லை என்று கூறுவதைக் கேட்கிறேன். ஆனால் அவர்களுக்கு நாங்கள் நிறைய செய்யப்போகிறோம்.” தற்புகழ்சி பேச தான் இந்தியாவிற்கு செல்லவில்லை, ஆனால் இந்திய அரசாங்கம் மற்றும் மக்களை இணைக்கவே சென்றதாகக் கூறினார். .தன்னை தில்லி மற்றும் சென்னையில் அமோகமாக வரவேற்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.  தன்னை வரவேற்க சுவரொட்டிகள், வளைவுகள் முதலியனவற்றைப் பார்த்து, “யார் வைத்திருப்பார்கள் என்று வியந்தேன். இருப்பினும் நான் ஏதோ இங்கு தேர்தலுக்குத்தான் நிற்கிறேன் என்பதுபோலத் தோன்றுகிறது”, என்றார்[3].

தான் அவ்வாறு அங்கு நான்கு நாட்கள் இருந்தபோது, சில இந்தியாவில் இருந்த மலேசியர்கள் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக செய்த அவதூறு பிரச்சாரத்தை யாரும் நம்பவில்லை என்றும் கூறினார். அதுமட்டுமல்ல, தான் கருணாஇதி மற்றும் இந்திய ஹிந்து தேசிய கட்சியைச் சேர்ந்த, இந்திய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சூஸ்மா சுவராஜ் போன்றவர்களைச் சந்தித்தபோதுகூட அவர்கள் அதனை நம்பவில்லை என்று தெரிந்து கொண்டேன். ஆகவே, உனது தோலின் நிறம் என்ன என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை, உனது வீடு மலேசியா என்பதுதான் முக்கியம்” என்றார்.

It’s a deal: Najib witnessing the exchange of documents between Malaysia Film Producers Association deputy president Datin Paduka Suhaimi Baba and Kamal at the MoU signing ceremony in Chennai on Friday. Looking on is International Trade and Industry Minister Datuk Mustapa Mohamed

சினிமா, ஏனிமேஷன் முதலியவற்றிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவங்கள்: ரசாக்கின் முன்னிலையில் வெள்ளியன்று கமல்ஹஸ்ஸன் மற்றும் தடின் படுக சுஹைமி பாபா, மலேசிய சினிமா உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உபத்தலைவர் (Datin Paduka Suhaimi Baba) இடையே நடந்த ஒப்பந்தம் ஆச்சரியமாக உள்ளது[4]. தென்னிந்திய உல்லாச கமிட்டியின் தரப்பில் கமல் ஹஸ்ஸன் 13 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்[5]. இதெல்லாம் சாதாரண மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனனில் இதனால் அரிசி, பருப்பு, சர்க்கரை விலைகள் முறைந்துவிடுமா என்று தமிழர்களுக்கு / இந்தியர்களுக்குப் புரியவில்லை! அதே மாதிரி மலேசிய மக்களுக்கு, குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு இதனால் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா என்று தெரியவில்லை!

ஹோட்டல்களில் கையெத்தான மலேசிய-இந்திய வியாபார ஒப்பந்தங்கள்[6]: இவ்விருநாடுகளிடையே ரூ. 500 பில்லியன் [US$10bil (RM33bil) in 2008] வியாபாரம் உள்ளது. மலேசிய கம்பெனிகள் இந்தியாவிலிருந்து பெர்ம்பாலும் விவசாயப் பொருட்களை வாங்குகின்றன. இந்திய கம்பெனிகள் மலேசியாவிலிருந்து எரிபொருள், பாம் ஆயில் மூலங்கள், மின்னணு பொருட்கள் முதலியவற்றை வாங்கின்றன. மலேசிய-இந்திய கம்பெனிகளுக்குள் வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தான விவரங்களும் கொடுக்கப்படுகின்றன:

Indian Companies Malaysian Companies
FICCI’s Entertainment Committee-South Multimedia Development Corporation of Malaysia (MDec)
An Indian biotechnology company Melaka Biotech Holdings Sdn Bhd has teamed up to kick-start the development and commercialisation of bio-therapeutic medical products.
SapuraCrest Petroleum Bhd,
PLUS Expressways Bhd.
Malaysian Biotechnology Corp
Jet Airways Malaysia Airlines (MAS)/GMR Group partnership
Rocking Pixels Inc, a technology company that has developed motion capture technology for 3D. The Red Snapper (M) Sdn Bhd (TRS)
India’s GMR and MAS MAS Aerospace Engineering (MAE), have a joint venture to set up an MRO (maintenance, repair and overhaul) centre in Hyderabad.

© வேதபிரகாஷ்

24-01-2010


[1] இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா முதலியன.

http://www.deccanherald.com/content/48373/malaysia-may-quit-coffee-club.html

[2] P. Vijian, Najib Visits Chennai To Thank Malaysian Indians For Nation-Building, January 23, 2010 18:48 PM

http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=470615

[3] M. Veerapaandiyan, Najib proud to visit Tamil heartland, Sunday January 24, 2010, for more details, see at:

http://thestar.com.my/news/story.asp?file=/2010/1/24/nation/5535925&sec=nation

[4] http://thestar.com.my/news/story.asp?file=/2010/1/24/nation/5536206&sec=nation

[5] He signed for the FICCI’s Entertainment Committee-South in its arrangement with the Multimedia Development Corporation of Malaysia (MDec) represented by its CEO Datuk Badlisham Ghazali.

[6] B. K. Sidhu, Smallish Perak company aims high in animation business, Saturday January 23, 2010 for more details, see at:

http://biz.thestar.com.my/news/story.asp?file=/2010/1/23/business/5530252&sec=business.

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “மலேசிய தமிழக ஆட்சியாளர்களின் சந்திப்பு!”

 1. vedaprakash Says:

  இந்தியர்கள் நியாயமாக நடத்தப்படுவதாக கருணாநிதி நம்புகிறார், நஜிப்

  January 30, 2010, 5:15 am மலேசியாஇன்று பிரிவு: செய்தி
  http://www.malaysiaindru.com/?p=31742

  நேற்று இரவு மணி 9.00 க்கு பத்துமலைத் திருத்தலத்தில் தைப்பூச விழாவில் முன்பு கொடுத்த வாக்குப்படி வருகையளித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியாவில் “இந்தியர்கள் நியாயமாக நடத்தப்படுவதாக” தமிழ் நாட்டு முதல்வர் கருணாநிதி நம்புவதாக திருத்தலத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.

  மலேசிய இந்தியர்களில் 85 விழுக்காட்டினர் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டிருப்பதால் தாம் அங்கு போக வேண்டியிருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

  அவரது இந்திய பயணம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகப் பிரதமர் நஜிப் கூறினார். இந்தியா ஒரு மகத்தான நாடு என்று வர்ணித்த அவர் இரு நாடுகளுக்கிடையில் இருந்த நீண்ட வரலாற்று தொடர்பை சுட்டிக் காட்டி இரு நாடுகளும் வலுவான பொருளாதார உறவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறினார்.

  மேலும், இந்தியப் பிரதமர் மோகன் சிங் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி அளித்த வரவேற்பால் அகமகிழ்ந்துப் போனதாக நஜிப் தெரிவித்தார். அவர்களை மலேசியாவிற்கு வருகைபுரியுமாறு அழைத்திருப்பதாகவும் இந்தியப் பிரதமர் மோகன் சிங் மலேசியாவிற்கு வரவிருக்கிறார் என்றும் தமிழக முதல்வர் அல்லது அவருடைய மகன் மலேசியாவிர்கு வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் நஜிப் மேலும் கூறினார்.

  பத்துமலைத் திருத்தலத்தில் காணப்படும் மேம்பாடுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் நஜிப், “உங்களைச் சுற்றியுள்ள விளக்குகள் மற்றும் தடுப்பு வேலிகள் எல்லாம் அரசாங்கம் வழங்கியதாகும்”, என்றார்.

  பிரதமர் நஜிப்பின் உரை இந்துக்களை, இந்தியர்களை தம் பக்கம் இழுக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.

  “கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது முதலாவது வருகையின்போது, இந்தியச் சமூகத்தின் மீது எனக்குள்ள மரியாதையின் நிமித்தமாக நான் மீண்டும் தைபூசத்தன்று வருவதாக வாக்குறுதி அளித்தேன்”, என்று நஜிப் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளிடம் கூறினார்.

  தாம் தமது மனைவி ரோஸ்மா மன்சூர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுடன் வருகை புரிந்திருப்பதை நஜிப் சுட்டிக்காட்ட தவறவில்லை. இது இந்தியர்கள் மீது அவரது அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் முயற்சியாகும்.

  நஜிப் அவருடைய அரசாங்கத்தின் ஒரே மலேசியா கோட்பாட்டை வலியுறுத்தியதோடு இந்தியச் சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கிய பங்களிப்புகளைச் சுட்டிக் காட்டினார். அவற்றில் தமிழ்ப்பள்ளி, இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சிகள் மற்றும் பத்துமலை கோயில் மேம்படுத்தப்பட்டதும் அடங்கும் என்றார்.

  பத்துமலைக் கட்டமைப்புகளின் மோசமான நிலையை அவரின் முன்னைய வருகையின்போது கண்டதாகவும் அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக ரிம3.6 மில்லியன் ஒதுக்கீடு செய்யுமாறு அவர் அமைச்சரவையை கேட்டுக்கொண்டதாக கூறினார்.

  இன மற்றும் சமய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர் இஸ்லாம் மற்ற சமயங்களை மதிக்கிறது என்றார். வழிபாட்டுதலங்களுக்குத் தீங்கிழைப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்று அவர் கூறினார்.

  ஒரே மலேசியா தந்தை

  பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகையளித்த பிரதமர் நஜிப்பை மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் என். நடராஜா வரவேற்றார்.

  கோயில் தலைவர் என். நடராஜா தமது உரையில் அரசாங்கம் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். கேபிள் கார் திட்டத்தை தொடங்குவதற்கு உதவுமாறு அவர் பிரதமர் நஜிப்பைக் கேட்டுக்கொண்டார்.

  பத்துமலைக் கோயில் தேவஸ்தான தலைவர் என். என். நடராஜா பிரதமர் நஜிப்பிற்கு “ஒரே மலேசியா தந்தை” என்ற பட்டத்தை அளித்து கௌரவப்படுத்தினார்.

  பத்துமலைத் திருத்தலத்திற்கு பிரதமர் நஜிப்பின் வருகையை முன்னிட்டு போலீசார் பெருமளவில் அங்கு குமிக்கப்பட்டிருந்தனர்.

  பிரதமர் நஜிப்புடன், அவருடைய மனைவி ரோஸ்மா மன்சூர், உள்துறை அமைச்சர் ஹிசாமுடின், மஇகா தலைவர் ச. சாமிவேலு, இதர பல அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஆகியோர் தைப்பூச விழாவில் கலந்துகொண்டனர்.

  முன்னாள் அமைச்சரும் மஇகா தலைவருமான ச. சாமிவேலு பிரதமரை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: