40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை : மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தகவல்!

40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை : மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தகவல்
ஜனவரி 13,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6261

Front page news and headlines todayபுத்ரஜெயா : மலேசியாவில் 40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை, என அந்நாட்டு பிரதமர் முகமது நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.மலேசிய பிரதமர் ரசாக், மூன்று நாள் பயணமாக அடுத்த வாரம் டில்லி செல்கிறார்.

இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மலேசியாவுக்கு சுற்றுலா விசாவை பயன்படுத்தி, வருகை தந்த 40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை. அவர்களில் பலர் தோட்டங்களிலோ, ஓட்டல்களிலோ வேலை செய்து கொண்டிருக்கலாம். நல்ல வேளையாக அவர்கள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல. பெரும்பாலோர் மீண்டும் தாயகம் திரும்பி இருக்கலாம். சுற்றுலா விசாவில் வந்து காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு எவ்வளவு பேர் வேண்டுமானாலும் சுற்றுலா பயணிகளாக வருவதை வரவேற்கிறோம்.

சென்னை வழியாக வருபவர்களால் தான் பிரச்னை ஏற்படுகிறது: இந்தியாவிலிருந்து டில்லி, மும்பை பெங்களூர் வழியாக வருபவர்களால் எந்த பிரச்னையும் இல்லை. சென்னை வழியாக வருபவர்களால் தான் பிரச்னை ஏற்படுகிறது. இவர்கள் முறையான விசாவில் மலேசியா வருவதில்லை. சுற்றுலா விசாவில் வந்து நீண்ட காலம் தங்கி விடுகின்றனர்.மலேசியா சுதந்திர நாடு. இங்கு முடிவெட்டும் தொழில் செய்யவோ, கோவில் பூசாரியாக பணிபுரியவோ இந்தியர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.தெற்காசியாவில் பொதுவான கரன்சி முறையை பயன்படுத்தும் திட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால், இது குறித்து நாங்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு ரசாக் கூறினார்.

விமர்சனம்:

முடிவெட்டும் தொழில் செய்யவோ, கோவில் பூசாரியாக பணிபுரியவோ இந்தியர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை: இதென்ன, வேடிக்கையாக இருக்கிறதே? ஆனால், முடிவெட்டும் தொழில் செய்வோர்க்குப் பிரச்சினை என்று முன்னர் செய்தி வந்துள்ளது. கோவில்கள் ஏற்கெனவே அங்கு இடிக்கப்படுகின்றன். பிறகு, பூசாரிகள் என்ன செய்வர்? மலேசிய மக்கள் தாம் விளக்கவேண்டும்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: