மலேசிய இந்துக்களின் பிரச்சினைகள்: மதமாற்றம்!

மலேசிய இந்துக்களின் பிரச்சினைகள்: மதமாற்றம்!

இந்துக்கள் அடக்கி-ஒடுக்கப்படுவது உண்மை: இந்துக்கள் என்று சொன்னலே ஏதோ மதவாதிகள், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தி உண்மையை சொல்லவிடாமல் தடுக்கும் போக்குத் தெரிகிறது. அத்தகைய பிரசாரம் மிக-மிகத் தவறானது, ஏனெனில் மனோதத்துவ ரிதியில் அவ்வாறு இந்துக்களை அடக்கி, ஒடுக்கி, நடுங்கச் செய்வது உலகத்திலேயே நடக்கும், நடக்கின்ற பெரும் குற்றமாகி விடும்.

தமிழர்கள், இந்தியர்கள், தமிழ்-இந்துக்கள், இந்திய-இந்துக்கள், மலேசிய-இந்துக்கள்: இப்படி பகுத்தறிவுவாதிகள், நாத்திகவாதிகள், தமிழைக் காப்பவர்கள், தமிழுக்கு உயிர் கொடுப்போம்..என்றெல்லாம் பேசும் ………..சிந்தாந்திகள், மற்றவர்களைக் குழப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்படும் மலேசிய வம்சாவளியினருக்கு அது நன்றாகவே தெரியும். இருப்பினும் படித்த, கணினி வித்தையறிந்த அல்லது உதவிக் கொண்டு விளையாடும் வலைப்பாதிவாளர்கள் அத்தகைய துர்பிரச்சாரத்தை அதிகமாகவேச் செய்கின்றனர். அவர்கள் தாம் தங்களுடைய மனங்களில் என்வுள்ளது என்று தெரிவிக்கவேண்டும். ஏனெனில், அவர்கள்  இந்தியாவில் இல்லாத பட்சத்தில் பல நாடுகளுக்குச் செல்லும்போது, பலவிதமாக பேசுகிறர்கள், செயல்படுகிறர்கள். இந்தியாவிற்கு வரும்போது “ஒழுங்காக”யிர்ப்பதுபோல காட்சியளிக்கிறார்கள். பெரும்பாலாக, இவர்களுக்கு இந்தியாவினால் தமக்கு என்ன லாபம் என்று திட்டம் போட்டு வருபவர்கள்தாம் ஜாஸ்தி / அதிகம். கணினி மாயம் காட்டி யாதாவது வியாபாரம் செய்யலாம், …………..புடவைகள் விற்கலாம்……………….இத்யாதி………………ஆகவே, இவர்கள் குளு-குளு அறைகளில் உட்கார்ந்து கொண்டு, தங்களின் வேலை நேரங்களுக்கு இடையில் அல்லது, பொழுது போக்கிற்காக “ப்ளாக்குகலிள்” விளையாடுவது வழக்கம். ஆகவே, அவர்கள் தயவு செய்து தங்களது மனங்களை திறந்தால் எல்லொருக்கும் நல்லது.

மலேசிய இந்துக்களின் பிரத்யேகப் பிரச்சினைகள்: மலேசிய இந்துக்களைக் கவனிக்கும்போது, அவர்களின் பிரச்சினைகளை நோக்கும்போது, உண்மையிலேயே அவர்கள் அந்நாட்டு பிரஜைகளாக தங்களது உரிமைகளை பெறுகிறார்களா இல்லையா என்று பார்க்க வேண்டும். அந்தந்த நாட்டுப் பிரச்சினைகளை அந்த நாட்டு சட்ட-திட்டங்களுக்குட்பட்டேதான் நடக்கும். அதனை அடுத்த நாட்டவர் தலையிடமுடியாது.

இந்தியா உதவலாம்: இருப்பினும், இந்தியா ஒரு பழமையானா நாடாகயிருந்து அங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவி அல்லது பரந்த இந்தியா ஒருவேலை சுருங்கி அங்குள்ள மக்கள் அவ்வாறே இருந்து இன்றைய நிலையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, நிச்சயமாக, அம்மக்களைப் பற்றி விசாரிக்கலாம். முடிந்ததை செய்யலாம்.

ஃபிஜி முதல் மலேசியா வரை: பத்தாண்டுகளிக்கு முன்பு, ஃபிஜியில் இந்துக்கள் கொடுமைப் படுத்தப் பட்டர்கள் என்றபோது, ஓரளவிற்கு செய்திகள் வெளிவந்ததும், ஒருகருத்துருவாக்கம் ஏற்பட யாதுவாயிற்று. அதுபோலத்தான், இந்திய வசாவளியினர் பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லை.

அந்நிலையில், மலேசிய இந்துக்களைப் பற்றிய மற்றொரு பிரச்சினை எடுத்துக் கொள்ளப்படுகிறது:

குழந்தைகள் ரகசியமாக மதமாற்றம் செய்யப்படுவதற்குத் தடை

April 23, 2009, 11:01 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=14515

 • மதமாற்றம் பின்நோக்கியதாக இருக்காது
 • நஜிப்பின் நடவடிக்கையை வரவேற்கிறார் வைத்திலிங்கம்

குழந்தைகளை ரகசியமாக மதமாற்றம் செய்வதற்கு தடை: பல்லினங்களைக் கொண்டுள்ள மலேசியாவில், இன உறவுகளைப் பாதித்துள்ள தகராறுகளை தணிக்கும் ஒரு முயற்சியாக, பெற்றோர்கள் தங்களது விதிக்கப்படுமென்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மாதின் ஒப்புதலின்றி,  பிரிந்து சென்ற அவரது கணவர், அவர்களது மூன்று குழந்தைகளையும் இஸ்லாத்துக்கு ரகசியமாக மதமாற்றம் செய்ததால் அந்த மூன்று குழந்தைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை அம்மாது இழக்கக்கூடிய வழக்கை எதிர்நோக்கியது குறித்து மூண்ட கடும் சர்ச்சையின் விளைவாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

பெற்றோர்கள் இருவரின் ஒப்புதலின்றி குழந்தைகள் மதமாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கு சட்டம் மாற்றப்படுமென பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறினார்.

“சவத்தை கைப்பற்றுதல்” உட்பட மதமாற்ற சர்ச்சைகள்: முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசியாவில், அவ்வப்போது நிகழ்வதுண்டு.  இறந்துபோன ஒரு நபரின் சமயம் குறித்த சர்ச்சையில், இஸ்லாமிய அதிகாரிகள், அவரது உறவினர்களுடன் மோதிக் கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கு அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் அவர்  இடம் பெற்றுள்ளார். இம்மாதிரியான மோதல்களால், நாடு இஸ்லாமியமயமாக்கப்பட்டு வருகிறது என்றும்,  சீன, இந்தியர்களின் உரிமைகள் படிப்படியாக வலுவின்றி போவதாயும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ‘இந்த பிரச்னைக்கு தீர்க்கமான முடிவு காணப்பட வேண்டுமென,” நஸ்ரி தெரிவித்தார். “இம்மாதிரியான மேலும் பல சம்பவங்கள் நிகழலாம் என நாங்கள் எதிர்பார்ப்பதால் ஒரு நீண்ட கால தீர்வு குறித்து நாங்கள் முடிவு செய்துள்ளோம்.”

மதமாற்றம் பின்நோக்கியதாக இருக்காது: மலேசியா, இரட்டை அம்ச நீதி முறையைக் கொண்டுள்ளது. சிவில் நீதிமன்றமும் ஷாரியா நீதிமன்றமும் ஏக காலத்தில் செயல்படுகின்றன. குடும்பச் சட்ட வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்போது, தங்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என்று முஸ்லீம் அல்லாதவர்கள் கூறுகின்றனர். மதமாற்றம் பின்நோக்கியதாக இருக்காதென்றும் நஸ்ரி கூறுகிறார். அதாவது, மதமாற்றத்தைப் பயன்படுத்தி, சிவில் நீதிமன்றம் வழங்கியுள்ள ஜீவனாம்சம் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆணையிலிருந்து ஒருவர் தப்பித்துக் கொள்ள முடியாது. “தற்போது, ஒருவர் இஸ்லாத்துக்கு மாறியவுடன் இஸ்லாமியச் சட்டத்திற்கு  உடனடியாக உட்படுகிறார். இதனால், முன்னர் சிவில் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.” சட்டத்துறை அலுவலகம், திருத்தம்செய்யப்பட வேண்டிய சிவில் சட்டங்களை மறுபரிசீலனை செய்யும். ஆனால் இஸ்லாமியச் சட்டத்தில் செய்யப்படவிருக்கும் மாற்றம் குறித்து சமய காவலர்களாக விளங்கும் மாநிலச் சுல்தான்களுடன் முதலில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நஸ்ரி தெரிவித்தார். இவ்வேளையில், விரிவான அடிப்படையிலான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்யப்போவதாக வாக்குறுதிகளை வழங்கி பிரதமர் பொறுபேற்ற நஜிப் ரசாக்கின் இந்த அறிவிப்பை மலேசிய சமயங்கள் சங்கத்தின் தலைவர் ஏ வைத்திலிங்கம் வரவேற்றுள்ளார். பெற்றோரில் ஒருவர், மதம் மாறினாலும் அவரது குழந்தை ஆதியிலிருந்த சமயத்திலேயே இருக்கலாம் என அங்கீகரிக்கப்படுவதால் இது ஒரு நல்ல தொடக்கம் என்று ஏஎப்பியிடம் அவர் தெரிவித்தார். “பல்வேறு இனங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தி, இன உறவுகளை மேலோங்க செய்வதற்கு பிரதமர் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இது ஒரு முன்னோடியாக அமைகிறது. இது குறித்து முஸ்லீல் அல்லாதவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர்,” என்றார் அவர்.

13 பதில்கள் to “மலேசிய இந்துக்களின் பிரச்சினைகள்: மதமாற்றம்!”

 1. IQBAL SELVAN Says:

  No body care about SRI LANKAN HINDUS who are living so close to INDIA. I guess India doesn’t want to involve too much to protect it’s people, I mean PIO living in other countries. Whatever the religion is?

  • vedaprakash Says:

   முதலில் அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டார்களா?

   ஊடகங்கள் “இலங்கைத் தமிழர்கள்”, “முஸ்லிம்கள்” என்று குறிப்பிட்டபோது, யாரும், எந்த பச்சைத் தமிழன், சிவப்புத் தமிழன், கருப்புத்தமிழன்…………முதலியோர் இதென்ன, இத்தகைய பகுப்பு என்ரு கேட்கவில்லையே?

   அப்பொழுது ஏன் ஊடகங்கள் –

   * இலங்கை இந்துக்கள், இலங்கை முஸ்லிம்கள் என்றோ,

   * இந்துத் தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் என்றோ

   * இலங்கை இந்துத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம் தமிழர்கள் என்றோ

   * இந்து இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம் இலங்கைத் தமிழர்கள் என்றோ

   குறிப்பிடவில்லை?

   அப்பொழுது –

   தமிழன்களுக்கு / தமிழச்சிகளுக்கு,
   ஊடக வித்வான்களுக்கு / பண்டிதர்களுக்கு,
   நக்கீரன்களுக்கு,
   ஜகஜால ஜகத்காஸ்பர்களுக்கு,
   கலைஞர்களுக்கு,
   செபாஸ்டியன் சீமான்களுக்குத் தெரியவில்லையோ?

 2. KALIDASAN NAGAPPAN Says:

  WHO IS REAL TAMILAN? REALLY WHERE DO THEY COME FROM? ORIGINAL STATE? TAMILAN HAVE NO MORE TRUST ON INDIA.INDIA KILLS TAMIL PEOPLE IN SRI LANKA

  • vedaprakash Says:

   தமிழன் தமிழகத்தில் இருந்துதான் வருகிறான்/ செல்கிறான். இந்திய-தமிழனுக்குத் தான் முதலில் இந்தியன் என்ற உணர்வு வேண்டும். எப்பொழுதும் தமிழன் என்று பேசிக்கொண்டு பிரிவினை வளர்ப்பதில் என்ன அர்த்தம்?

   இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரைக்கும், பல கேள்விகள் உள்ளன.

   1. தமிழர்கள், முஸ்லிம்கள் என்று ஊடகங்கள் பிரித்துக் காட்டியபோது, அனைவரும் முதலில் இலங்கைக் குடிமக்கள், பிறகு எல்லோரும் தமிழர்கள் என்று ஏன் அவர்கள் குறிப்பிடவில்லை?

   2. இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் ஆகமாட்டார்களா?

   3. தமிழகத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும், புத்தர்களும் “பாய்-பாய்” என்கின்றனர். திராவிடத் தலைவர்கள், மறவர்கள், வீரர்கள் ……………எல்லோரும் போய் கஞ்சிக் குடிக்கின்றனர். அந்த ஒற்றுமை ஏன் இலங்கையில் ஏற்படவில்லை?

   4. இந்திய அல்லது தமிழக பௌத்தர்கள் தமது சகோதர்களான சிங்கள பௌத்தர்களிடம் சொல்லி அமைதியை உண்டாக்கியிருக்கலாமே?

   5. அதேமாதிரி இந்திய அல்லது தமிழக முஸ்லிம்கள் தமது சகோதர்களான சிங்கள முஸ்லிம்களிடம் சொல்லி தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்லியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

   …………………………?

 3. KALIDASAN NAGAPPAN Says:

  india is the real writer, producer and director behind all sri lanka real drama series(war).india doesn’t like tamils(hindu tamils,muslim tamils,kristian tamils and buddhist tamils ) get united. This is very clear picture from previous sri lanka history.india will never, never allowed sri lanka in peace especially tamils.india the murder.

  • vedaprakash Says:

   தமிழகத்திலுள்ள குறிப்பிட்ட தமிழர்கள் அவ்வாறு இருப்பதனால், ஒட்டுமொத்தமாக “இந்தியா” எதிரி என்று கூறுவது சரியில்லை.

   “இந்தியா இந்து தமிழர், முஸ்லிம் தமிழர், கிருத்துவத் தமிழர், பௌத்தத் தமிழர் ஒன்றாக இருப்பத்தை விரும்பவில்லை”யென்ற உமது வாதமும் சரியானதல்ல!

   ஒருவேளை தாங்களே இப்பொழுதுதான், இந்து தமிழர், முஸ்லிம் தமிழர், கிருத்துவத் தமிழர், பௌத்தத் தமிழர் …………..என்றெல்லாம் குறிப்பிடுகிறீர் என்று நினைக்கிறேன்!

   முன்பு எப்பொழுதாவது அவ்வாறு நினைத்தீரா?

   ஊடகங்கள் ஏன் அவ்வாறு நினைக்கவில்லை, எழுதவில்லை?

 4. KALIDASAN NAGAPPAN Says:

  yes. from the begining i do always said and write, whatever religions are tamils are always a tamilan.sorry i dont accept most your comments. please go back to the sri lanka history and analys carefully and you will know india will never let sri lankan live in peace.india the murder

 5. vedaprakash Says:

  இங்குள்ள பிரச்சினை மதம் மாற்றம்.

  1. இன்று உலகளவில் “செக்யூலரிஸம்” என்று பரவலாகப் பேசப் பட்டு வருகின்றது. அந்நிலையில், மதசார்புள்ள நிலையில், இன்றும் பல நாடுகள் இருப்பதால்தான், அங்கெல்லாம், சிறுபான்மை மதத்தவர்கள் பலவழிகளில் கொடுமைப் படுத்தப் படுகின்றனர்.

  2. இந்தியா “செக்யூலரிஸ” நாடு என்று பறைச்சாற்றிக் கொண்டு எவ்வாறு இந்துக்களை, அதாவது, பெரும்பான்மையினரை வதைத்து வாட்டுகிறது என்று எல்லொருக்கும் தெரிந்ததே.

  3. அந்நிலையில் தான் அந்த இந்தியா, இந்திய வம்சாவளியினர் மற்ற நாடுகளில் பாதிக்கப் படும்போது, பாரபட்சம் காட்டுகிறது.

  4. உலகளவில், பிரச்சினைகளை அணுகும்போது, இந்திய வம்சாவளியினர், அந்தந்த நாட்டின் சட்ட-திட்டங்களுக்குட்பட்டுதான் நடக்கவேண்டியுள்ளது. ஏனனில் அது “குடிமகன்” பிரச்சினை!

  5. அந்நிலையில், இந்திய வம்சாவளியினர், இந்தியா எமக்கு உதவி செய்வதில்லையே என்று கூறுவதில், இந்தியா தன்னை “செக்யூலரிஸ” நாடு என்று பிரகடனப் படுத்தியதிலிருந்தே அந்த நிலை ஏற்படுகின்றது.

  6. இன்று கூட “தமிழன்” என்றாலும், “இந்து” என்றாலும், பிரச்சினை வருவதே அதனால்தான்.

  7. “தமிழன்” என்று சொல்லிக்கொண்டு இந்திய “தமிழர்களே” மற்ற இந்தியர்களிடமிருந்து தனியாகவே இருந்து வந்தனர். இப்பொழுதுதான், வேலை நிமித்தமாக பரவி வருகிண்ரனர். இருப்பினும், உள்ளூரில் இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு………….போன்ற “திராவிட” போர்வையிலும், வெளியே “இந்தியன்” என்ற முகமூடியையும் அணைந்து சித்தாந்தம் பேசி நடித்து வருகின்றனர்.

  8. இந்திய குடிமகன் இந்திய சட்ட-திட்டங்களுக்கு உட்பட்டவன். எனவே அவன் ஏன் எங்களை ஆதரிப்பது இல்லை என்று பகைமை பாராட்டுவது, இணைதளங்களில் தூஷிப்பது, திட்டுவது………..எந்த பிரயோஜனமும் இல்லை.

  9. இந்தியரல்லாத இளைஞர்கள் கணினியில் தேர்ந்தவர்களாக இருபதனால், தமது வேலையின் இடையே, மதிய உணவு மற்ற நேரங்களில் தமது சித்தாந்தத் திறமைகளை வெளிப்படுத்துகிறர்கள். இவ்வாறான வேலைகளில் / சேவைகளில் அவர்களுக்கு செலவில்லாமல் கூட இருக்கலாம் ஆனால், இந்தியனுக்கு அத்தகைய நிலையில்லை.

  10. ஆகவே, மதம் மாற்றம் என்ற சிக்கல், பிரச்சினை சாதாரணமானது அல்ல. அது ஒருவரின் / தனது பெற்றோரை, உறவினரை, சமுதாயத்தை ஏன் நாட்டிலிருந்தேப் பிரிக்கக் கூடிய கொடுமையுள்ளது. அது இஸ்லாம் மற்றும் கிருத்துவத்தில் அதிகமாக உள்ளது.

  11. இது பெயரை மாற்றி ஏமற்றும் வேலை அல்ல, கடவுளை மாற்றும் போது, அறிந்தே எல்லாவற்றையும் மாற்றும் நிலையேற்படுகிறது. எல்லா மதங்களும் ஒன்று, எல்லா கடவுளர்களும் ஒன்று, எல்லாமே அன்பை போதிக்கின்றன என்ற சமுத்துவ, சமதர்ம சித்தாந்தங்கள், அறிவுரைகள், பேச்சுகள் எல்லாம் மலையேறி விடுகின்றன. எம்ம்பத்மிம் சம்மதம் இல்லை, எம்மதம் தான் சம்மதம் என்ற பித்து, வெறி ஏறிவிடுகிறது. படித்தவர்-படிக்காதவர், பணம் உள்ளவர்-இல்லாதவர்…… என்பதெல்லாம்…………………..பொய்யாகிவிடுகிறது.

  12. உளவியல் ரீதியில், மதம் மாற்றம் என்பது எத்தகைய போலியான, அபத்தமான விஷயம் / மோசடி என்பதன அறியலாம். இறையியல் ரீதியிலாகக் கூட அது எமாற்றூவேலைதான். ஏனெனில், 20-30-40-50 வருடம் இந்து, அதற்கு மேல் முஸ்லிம் / கிருத்துவன் என்றால், எப்படி கடவுளர்களை “தவணை” மூலம் பங்கிட்டார்கள் என்பதற்கு என்ன விளக்கம் கொடுக்கமுடியும்?

  13. ஆகவே, அறிவு தெரியாத காலத்தில், சிறிவர்-சிறுமிகளையோ, குழந்தைகளையோ மதம் மாற்றுவது என்பது அந்த ஆண்டவனையே / கடவுளையே/ இறைவனையே (அல்லது வேறு எந்த பெயர் சொல்லி அழைத்தாலும்) ஏமாற்றும் வேலையே. எப்படி ஒரே ஆண்டவன் / கடவுள்/ இறைவன் சமூகத்திற்கு சமூகம், நாட்டுக்கு நாடு மாறுகின்றதும் – உருவத்தில்-அருவத்தில்-அருவுருவத்தில்-மாறுவதும் ஏமாற்றுவேலைதான்,

  14, எல்லாம் தெரிந்தே நம்பிக்கையாளர்கள், மற்ற நம்பிக்கையாளர்களை நம்பிக்கை பெயரிலேயே அத்தகைய மாற்றங்கள, ஏமாற்றங்களை, உருமாற்றங்களை செய்து வருகிறார்கள். உண்மைகளை மறைத்து பேசுகிறர்கள், எழுதுகிறர்கள்.

  15, ஆகவே மதம் மாற்றம் என்பது –

  i. மிகக்கொடுமையான ஆண்டவனுக்கு / கடவுளுக்கு/ இறைவனுக்குச் செய்கின்ற துரோகம்;
  ii. பெற்றோர், உறவினர், சமுதாயம், நாட்டிற்குச் செய்யும் வஞ்சம்;
  iii. மாபெரும் தீவிரவாதம்.

 6. பெ.கந்தசாமி, சிரம்பான், மலேசியா Says:

  உண்மையில் யார் தமிழன்? மொழியா, இனமா அல்லது சமயமா? எது தமிழனுக்கு உரியது? கல், மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி, சமயம் என்றெல்லாம் பெருமைப்பேசி என்ன பயன்? ஊருக்கு மட்டுமல்ல உலகத்துக்கே உதவாக்கரை தமிழர்கள்தாம் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம்.

  • vedaprakash Says:

   1. உண்மையில் யார் தமிழன்?

   மாக்ஸ்முல்லர் என்பவன் தான், “ஆரியர்” என்ற இனத்தை கற்பனையில் உருவாக்கினான். அதற்கு எதிராக அம்மாதிரி கற்பனையிலேயே உருவானது “திராவிடர்” இனம். அதற்கு கால்ட்வெல் என்ற கிருத்துவ பாதிரி காரணம்.

   இனம், மொழி என்பன வேறு-வேறு. ஆனால் இரண்டும் ஒன்று என்று குழம்பியிருப்பது திராவிட சித்தாந்திகளின் நிலை.

   இன்றைய நிலையில், இந்திவாவைப் பொறுத்தவரைக்கும் “தமிழன்’ ஒரு இந்தியன்.

   2. மொழியா, இனமா அல்லது சமயமா?

   * தமிழ் மொழியுள்ளது.
   * தமிழ் “இனம்” என்பது மாயை [இல்லையென்றால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றெல்லாம் இனங்கள் இருக்கவேண்டும்].
   * தமிழனது சமயம் இந்து.

   3. எது தமிழனுக்கு உரியது?
   தமிழனுக்குத் தமிழ் உரியது, தமிழ் / திராவிட இனம் இல்லை, அவனுடைய மதம் – இந்து.

   4. தோன்றிய மூத்த மொழி, சமயம் என்றெல்லாம் பெருமைப்பேசி என்ன பயன்?
   * கல், மண் தோன்றாக் காலத்தே முன் ……………எதுவும் இல்லை. இதெல்லாம் தமிழ் பேசும் அரசியல்வாதிகள், மேடை பேச்சாளிகள் சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் பேசுவது.
   * நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம்.என்று பேசுவதில் தவறில்லை.

   5. ஊருக்கு மட்டுமல்ல உலகத்துக்கே உதவாக்கரை தமிழர்கள்தாம் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம்.
   * இல்லை அன்பரே, அப்படி ஒரேயடியாக சோர்ந்து விடவேண்டிய அவசியம் இல்லை.
   * இந்தியாவிற்கு வெளியே – அந்திய பிரஜைகளாக இருக்கும் – இந்திய வம்சாவளியினர், ஒற்றுமையாக “ஒன்று கூட உதவும்” என்றால் எதையும் உபயோகித்துக் கொள்ளலாம்.
   * அது உண்மையாக இருந்தால், அதனைத் தேர்ந்தெடுத்தால், அவர்களுக்கு நல்லது.
   * இந்துக்கள் என்று இணைந்தால் நன்மை அதிகம் [இப்படி சொன்னால், இந்துத்வ-வாதம் என்று நினைக்கவேண்டாம். சட்டப்படி, அந்தந்த நாட்டிலே அவாறுதான் மதிக்கப்படுகின்றனர்].

 7. vedaprakash Says:

  சமூக நல்லிணக்கத்துக்கு சமநீதிதான் அடிப்படை
  மலேசிய தலைவர் விளக்கம்
  http://viduthalai.periyar.org.in/20100117/news10.html

  கோலாலம்பூர், ஜன. 17_ பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் சமமான நீதி கிடைத்தால் மட்டுமே எல்லோரும் இணக்கமாக வாழ்வ-தற்கான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்று சமநீதி உலகிற்கான பன்னாட்டு இயக்கத்தின் தலைவர் சந்திர முஸாபர் கூறினார். மலேசிய தலை-நகர் கோலாலம்பூரில் இந்தியப் பத்திரிகை-யாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போனால்தான் சிறுபான்-மையின மக்கள் அதிருப்-தியை வெளிப்படுத்த நேரிடுவதாகக் கூறினார்.
  அவர் மேலும் கூறிய-தாவது: எல்லா சமூக மக்-களையும் ஒருங்கிணைக்-கும் முயற்சியாகத்தான் ஒரே மலேசியா என்ற முழக்கம் உருவாக்கப்பட்-டுள்ளது.
  மலேசியாவில் மலாய் மக்களுக்கென கல்வி, வேலையில் இடஒதுக்கீடு அளித்த காரணத்தால்-தான் இப்போது இந்த நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட மக்கள் கணிச-மாக எல்லா துறைகளி-லும் முன்னேற முடிந்-துள்ளது. இந்த மக்-களுக்கு எதுவும் கிடைக்-காமல் வெளிநாட்டின-ருக்கே பெரும் பங்கு வாய்ப்புகளும் கிடைத்-திருந்தால், பெரும்-பான்மை மக்கள் கோபம் கொண்டிருப்பார்கள்.
  அதேபோல சிறு-பான்மை மக்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்-பது உறுதி செய்யப்பட வேண்டும். அந்த வகை-யில்தான் மலேசியாவில் தனியார் கல்வி நிறுவ-னங்கள் தொடங்க அனு-மதி அளிக்கப்பட்டது.
  இப்போது எல்லா பிரிவினரும் சம வாய்ப்பு பெறும் சூழ்நிலை உரு-வாகி-யுள்ளது. மலாய் மக்களுக்கு உரிய வாய்ப்-புகள் வந்துவிட்டதால் இனி இட ஒதுக்கீடு தேவைப்படாது. மலேசி-யாவில் உள்ள இந்தியர்-களைப் பொறுத்தவரை, தங்களின் பிரச்சினை-களை பிரதிநிதித்துவப்-படுத்தும் அமைப்பு இப்-போது ஏதும் இல்லை என்ற குறை உள்ளது. இருந்தாலும் இந்த மக்களின் குறைகளையும் தீர்க்க வேண்டியது அர-சின் கடமையாக உள்ளது. இதை உணர்ந்த காரணத்-தால்தான், மலேசிய இந்-தியர்களின் பிரச்சினை-களைக் கவனிக்கும் துணைக் குழுவின் தலை-வர் பொறுப்பை பிரத-மரே ஏற்றுக் கொண்டி-ருக்கிறார்.
  நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் சில சமயங்களில் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். 2008 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக 2007 நவம்பரில் இஸ்-லாங்கோ மாநிலத்தில் இந்துக் கோவில் ஒன்றை இடிக்க ஓர் அதிகாரி அனுமதி தந்துவிட்டார். வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதற்காக அந்தக் கோவில் நிலம் தேவைப்பட்ட நிலையில், இந்துக்களின் எதிர்ப்பு காரணமாக அது நிலு-வையில் இருந்தது. ஒப்-பந்ததாரர் இதை இடிக்க அனுமதி பெற்று, இடிக்கத் தொடங்கினார்.
  அப்போதுதான் இந்துக்களிடம் மனமாற்-றம் ஏற்பட்டது. இந்து-ராப் அமைப்பும் தீவிர-மடைந்தது. ஆளும் கூட்டணிக்கு தேர்தலில் இது பெரும் பின்ன-டைவை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் தவறு-களும் சில சமயங்களில் நல்லிணக்கத்தை பாதிக்-கும் வகையில் அமைந்து-விடுகின்றன.
  அல்லா என்ற வார்த்-தையை கிறித்துவப் பத்-திரிகை பயன்படுத்தியது தொடர்பாக இப்போது மலேசியாவில் பிரச்சினை எழுந்துள்ளது. அந்த வார்த்தையைப் பயன்-படுத்-துவது பற்றி பிரச்-சினை இருக்கக் கூடாது. அது தவறாகப் பயன்-படுத்தக் கூடாது என்-பதுதான் முக்கியமான-தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 8. Brahmallahchrist Says:

  Legally, unless Hindus come out as Hindus assertively, there is no meaning in talking about Tamil, Tamil language etc.

  They would be ditched everywhere.

  They have learnt the lesson in sri Lanka. GThough the elite and rich escaped, the poor and the actual people who faced the battle-field and the government army burnt the reality.

  Others have been just sitting in the AC rooms and pressing the laptop and computer buttons to excel others.

 9. மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம Says:

  […] [3] https://tamilheritage.wordpress.com/2010/01/02/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF… […]

Brahmallahchrist க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: