ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் பூட்டை உடைத்து புகுந்தனர் பக்தர்கள்!

ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் பூட்டை உடைத்து புகுந்தனர் பக்தர்கள்
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14895

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில், பெருமாள் பக்தர்கள் திடீரென நேற்று முற்றுகையிட்டனர். அங்குள்ள சீனிவாச பெருமாள் சன்னிதி பூட்டை உடைத்து, பக்தர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு நிலவியது.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ளது பலஹரி புருஷோத்தம ஜீயர் மடம். இந்த மடத்தின் ஜீயர், லட்சுமணராமானுஜம் ஜீயர். இங்கு சமையல் வேலை பார்ப்பவர் பத்ரி. இவர், மனைவி கோதாராணியுடன் வசிக்கின்றார். மடத்துக்கு கோதாராணி வந்ததில் இருந்து, இங்குள்ள சீனிவாச பெருமாள் சன்னிதி இழுத்து மூடப்பட்டது. இதனால், சீனிவாச பெருமாளை பக்தர்கள் பல ஆண்டாக தரிசிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து ஜீயரின் சீடர்கள், “சீனிவாச பெருமாள் சன்னிதியை திறந்து, பக்தர்கள் வழிபாட்டுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று, கோவிந்த ராமானுஜ தாசா என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இதைத்தொடர்ந்து, ஜீயர் மடத்தில் உள்ள சீனிவாச பெருமாள் சன்னிதியை திறந்துவிட வேண்டும் என்று,கோர்ட் உத்திரவிட்டது. இருந்தபோதிலும், ஸ்ரீரங்கம் போலீஸார் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற முன்வரவில்லை.

இதைத்தொடர்ந்து, பலஹரி புருஷாத்தம ராமானுஜ ஜீயர் மடத்து சீடர்கள், சங்கத் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசா, சீனிவாச பெருமாள் சன்னிதியை திறக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். இதனால், ஸ்ரீரங்கம் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் உள்ள டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் நடந்த கூட்டத்தில், பலஹரி புரு�ஷாத்தம ராமானுஜ ஜீயர் மடத்தில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் சன்னிதி பொதுமக்கள் தரிசனத்துக்காக திறந்துவிடப்படும். பலஹரி மடத்தில் இருந்த பலகோடி மதிப்புள்ள சுவாமி விக்ரகம், கொல்கத்தா திருட்டு கும்பல் வெளிநாட்டுக்கு கடத்தும் முன் அதை கைப்பற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்படுவதாக, உறுதி அளித்ததன் பேரில், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

நேற்று மடத்தில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் சன்னிதியை திறக்க பக்தர்கள் முயன்றதை முன்னிட்டு, போலீஸ் அதிகாரிகள் மடத்தில் குவிந்தனர்.கோவிந்த ராமானுஜ தாசா தலைமையில் பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆடியும் மடத்தை முற்றுகையிட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது. மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டதும், பக்தர்கள் உள்ளே புகுந்தனர். இதன் பிறகு, ஸ்ரீசீனிவாச பெருமாள் சன்னிதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பூஜைகள் நடந்தன. சீடர்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் சீனிவாச பெருமாளை தரிசித்தனர்.

விமர்சனம்:

இதில் பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருக்கிறது:

1. ‘மடத்துக்கு கோதாராணி வந்ததில் இருந்து, இங்குள்ள சீனிவாச பெருமாள் சன்னிதி இழுத்து மூடப்பட்டது. இதனால், சீனிவாச பெருமாளை பக்தர்கள் பல ஆண்டாக தரிசிக்க முடியவில்லை”: யார்  இந்த கோதாரணீ? அவர் வந்ததிலிருந்து, ஏன் கோவில் மூடவேண்டும்?

2. கோர்ட் உத்திரவிட்ட பிறகும்,  ஸ்ரீரங்கம் போலீஸார் கோர்ட் ஏன் உத்தரவை நிறைவேற்ற முன்வரவில்லை..

3. பலஹரி மடத்தில் இருந்த பலகோடி மதிப்புள்ள சுவாமி விக்ரகம், கொல்கத்தா திருட்டு கும்பல் வெளிநாட்டுக்கு கடத்தும் முன் அதை கைப்பற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்படுவதாக, உறுதி அளித்ததன் பேரில், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது: இதன் பின்னணி என்ன?

4. பக்தர்கள் கூடியவுடனே, அதிகாரிகளே முன்வந்து, போலீஸாரிடம் சொல்லி, கட்ய்ஹவைத் திறாக்கச் சொல்லியிருக்கலாமே?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: