கோவில் கலசம் பல கோடிக்கு விற்பதாக வதந்தி – மரக்காணம் பகுதியில் பரபரப்பு

கோவில் கலசம் பல கோடிக்கு விற்பதாக வதந்தி – மரக்காணம் பகுதியில் பரபரப்பு
அக்டோபர் 22,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13519

மரக்காணம்:”பல கோடி ரூபாய் மதிப்பில் கோவில் கலசம் விற்பனை’ என்ற வதந்தியால், மரக்காணம் பகுதியிலுள்ள கோவில்களில், மர்ம கும்பல் நோட்டமிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மண்ணுளி பாம்பு பல லட்சத்திற்கு விலை போகும் என்ற புரளியால், மண்ணுளி பாம்புகளைப் பிடித்து பலர் விற்பனை செய்ய முயன்றனர். அவர்களில் பலரை, வனத்துறையினர் கைது செய்தனர்.

இச்செய்தி மறைந்து, தற்போது, கோவில் கலசம் நூறு கோடி ரூபாய்க்கு விற்பனை போகிறது என்ற புரளி எழுந்துள்ளது.குறைந்தது 20 ஆண்டுகள் ஆன கோவில் கலசங்களில், மழைக் காலத்தில் ஏற்படும் இடி, மின்னல்களின் ஒளிச் சக்தி அடைபட்டுக் கிடப்பதாகவும், அந்தச் சக்தி மின்னணுவாக மாறி விடுவதாகவும் வதந்தி கிளம்பியுள்ளது. மின்னணு அடங்கிய கலசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்றும், “டுபாக்கூர்’ பேர்வழிகள், செய்தி பரப்புகின்றனர்.

கலசங்களில் அந்த மின்னணு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய, கலசத்தின் நெல்லை வைத்தால் அது கருகிவிடும் என்றும், எலக்ட்ரானிக் வாட்ச், டார்ச் லைட் எடுத்து சென்றால் செயலிழந்து விடும் என்றும் செய்தி பரவுகிறது.

பரிசோதனையில் “வெற்றி பெறும்’ கலசத்திற்கு, 50 முதல் 100 கோடி ரூபாய் வரை விலை கொடுப்பதாக, சில தரகர்கள் “சரடு விடுகின்றனர்!’இதனால், மரக்காணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களின் கோபுரங்களை இரவு நேரங்களில் மர்ம கும்பல்கள் நோட்டம் விட்டபடி அலைகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: