தமிழ் கலாசாரமும், சென்னை பல்கலையின் 150 ஆண்டு பாரம்பரியமும்!

சென்னை பல்கலைக்கழகத்தில் டி ஷர்ட், ஜீன்சுக்கு தடை வரும்
துணை வேந்தர் க.திருவாசகம் பேட்டி

சென்னை, அக். 20_2009 (விடுதலை: 21-10-2009): சென்னை பல்கலைக்-கழகத்திலும் மாணவர்-களுக்கு உடை கட்டுப்-பாடு கொண்டு வருவதற்கு ஆலோசனை நடத்தப்-படும் என்று துணை வேந்தர் திருவாசகம் கூறினார்.

திருவாசகம் அளித்த பேட்டி வருமாறு:

தமிழ் கலாசாரத்-தையும், சென்னை பல்கலை-யின் 150 ஆண்டு பாரம்பரியத்தையும் மாணவர்களின் உடை முறைகள் கெடுத்துவிடக் கூடாது. ஒரு தனியார் நிறுவனத்துக்கு அழைப்-பிதழ் கொடுக்க சென்ற பல்கலை மாணவர்கள், அநாகரிகமான முறை-யில் ஆடைகள் அணிந்தி-ருந்ததாக, புகார் வந்தது. மாணவ, மாணவிகள் ஆபாசமாக உடை அணி-வதை தடுக்க வேண்டும். இதற்கு உடை கட்டுப்-பாடு அவசியம். இதுகு-றித்து முடி-வெடுக்க கல்-லூரி முதல்-வர்கள், துறை தலைவர்-கள், மாணவர்-கள் பிரதி-நிதிகள் ஆலோ-சனை கூட்டம் நடத்தப்-படும். உடை கட்டுப்-பாடு கொண்டு வருவ-தால் ஏற்படும் சாதக பாத-கங்கள் குறித்து விவாதிக்-கப்பட்டு முடிவெடுக்கப்-படும்.

பல்கலை.யின் தொலை-தூர கல்வி நிலைய அலுவலகம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், துணை வேந்தரின் வர-வேற்பு அறை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்-படும். ஆஸ்திரேலிய சுவின் பர் பல்கலையுடன் ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. இதன் மூலம் நமது பல்-கலை. மாணவர்கள் அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளலாம். ஏரோ-நாட்டிக்கல் படிப்பை தொடங்க கல்லூரிகள் முன்வந்தால், அங்கீகாரம் அளிக்கப்படும். மாண-வர்கள் வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெறுவ-தற்கும் வசதி செய்து தரப்படும்.

புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரி-விக்க 20ஆம் தேதி முதல், பல்கலைக்கழக நுழைவு வாயிலில் கிரீன் பாக்ஸ் வைக்கப்படும். இதன் சாவி என்னிடம்தான் இருக்கும். இதில் தெரி-விக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவ-டிக்கை எடுக்கப்படும். இதேபோல இ மெயிலில் புகார்கள் மற்றும் ஆலோ-சனைகள் தெரிவிக்க, http://www.mvcgreenboxgmail.com இணையதளம் இன்று முதல் தொடங்கப்-படு-கிறது. சென்னை பல்-கலைக்கழகத்தில் உள்ள பல வகையான படிப்-புகள் மற்றும் கட்டண விவரங்களை அறிந்து கொள்ள டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய தானி-யங்கி இயந்திரம் வைக்கப்-படும். இவ்வாறு திரு-வாசகம் தெரிவித்தார்.

உண்மையிலேயே சென்னை துணைவேந்தரின் “தமிழ் கலாசாரத்-தையும், சென்னை பல்கலை-யின் 150 ஆண்டு பாரம்பரியத்தையும் மாணவர்களின் உடை முறைகள் கெடுத்துவிடக் கூடாது” என்ற முழக்கத்தைக் கேட்டு புல்லரிக்கிறது! முன்பு சிரேயா என்ற நடிகை கருணாநிதி மற்றும் பலரின் முன்பாக அரைகுறை உடையுடன் வந்து, கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு, பரிசும் வாங்கிச் சென்றபோது, எவரும் அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லையே?

கருணாநிதியைப் பற்றி எம்.ஏ பட்டம் துவங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால், அவர் பெயரில் நடத்தப் படும் டிவியில் “மானாட, மயிலாட” கும்மாளங்களில், குத்தாட்ட நடனப் போட்டிகளில் உடைகளைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லையே?

பிறகு எது தமிழ் கலாச்சாரம்? எது சென்னை பலகலையின் பாரம்பரியம்? இன்றைய தமிழ் சமுதாயத்தில் உள்ள ஆபாசங்களை கண்கள் இருந்தும் குருடனாக பார்க்காத மாதிரி செயல்பட்டு, இன்று ஆபாசத்தைப் பற்றி கவலை கொள்கிறார்! சென்னை பல்கலைகழகம் ‘டாக்டர்” பட்டங்களை வாரி இரைத்தபோது, யாரும் கவலைபடவில்லையே? ஆனால், இன்று பலவற்றைப் பற்றி பேசுகிறார்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: