தீபாவளி விவாதம் தொடர்கிறது: திராவிட “இந்து-விரோதம்” தொடர்கிறது!

தீபாவளி விவாதம் தொடர்கிறது: திராவிட “இந்து-விரோதம்” தொடர்கிறது!

இந்த தடவை, தீபாவளி மற்றும் “தீபாவலி” அமர்க்களப் படுகிறது!

தீபாவளி முடிந்தாலும், “தீபாவலி” முடியவில்லை, குறையவில்லை!!

தீபாவளி வெடிசத்தங்கள் நின்ற பிறகும், “தீபாவலி சத்தங்கள்” நிற்கவில்லை!!!

இனமானத் தலைவர் பீறிட்டு எழுந்து விட்டார்போலும்.

இன்றய “விடுதலையில்”, வீரமணியின் தலையங்கம் (20-10-2009) பல கேள்விகளுக்கு பதில் இருப்பதுடன், பல கேள்விகளையும் எழுப்புகின்றன.

மிரட்டலா? [விடுதலை, தலையங்கம், 20-10-2009] http://www.viduthalai.com/தன்மானம் உள்ள தமிழா, தீபாவளி கொண்டாடலாமா? ஆரிய திராவிடப் போராட்டத்தை மய்யப்படுத்தி புனையப்பட்ட கதையே தீபாவளி பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா? தீபாவளிப் பண்டிகை அறிவுக்குப் பொருந்துமா? பூமாதேவிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை எப்படி அரக்கனானான்? என்ற வினாக்களை இன்று _ நேற்று அல்ல _ தன்மான இயக்கம் தோற்று விக்கப்பட்ட காலந்தொட்டு 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏடுகளில், இதழ்களில் எழுதப்பட்டும் வருகின்றன. நாடெங்கும் தீபாவளி கண்டனப் பொதுக் கூட்டங்களும் நடத்தப்படுவதுண்டு.

விருதுநகரில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த அடிப்படையில் சிறப்பாக சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டன.

அதில் காணப்படும் வாசகம் வருமாறு:

பொருளாதாரப் பேரழிவு!

சுற்றுச்சூழல் சீர்கேடு!

சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!

ஆரிய ஆபாசப் பண்டிகை!

தீபாவளியைப் புறக்கணிப்போம்!

என்று அந்தச் சுவரொட்டிகளில் கூறப்பட்டு இருந்தது.

இதில் என்ன குற்றம்? என்ன பிழை? ஒரே ஒரு வரியை கால் புள்ளி, அரைப் புள்ளியை மறுக்க முடியுமா?

இவற்றை மறுக்கவியலாத -_ எதிர்த்துக் கருத்துச் சொல்ல வக்கில்லாத சில பேர் இந்து முன்னணி என்ற பெயரால் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனராம். இதற்காகக் காவல்நிலையத்தை முற்றுகை-யிட்டனராம். சுவரொட்டி வெளியிட்டவர்கள்மீதும், அச்சிட்ட அச்சகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளாராம்.

உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு வகையில் இதனை வரவேற்கிறோம். நீதிமன்றத்திலேயே இந்த ஆபாச, மூடத்தன தீபாவளி பண்டிகையைப்பற்றி அக்குவேர் ஆணி வேராகக் கிழித்திட திராவிடர் கழகத்துக்-குக் கிடைத்த அரியதோர் நல்ல சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகிறோம்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான சிந்தனையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரச-மைப்புச் சட்டமே கூறியுள்ளது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்களாக காவல்துறை அதிகாரிகள் இருப்பார்களேயானால், அவர்களும் தெரிந்து கொள்ள வைக்கக் கிடைத்திட்ட கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாகவேகூட இதனை எடுத்துக் கொள்வோம்.

அதே நேரத்தில் இந்து முன்னணியில் உள்ள அப்பாவித் தமிழர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? எதற்காக தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தீபாவளியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்-கின்றனர் என்பது குறித்து திறந்த மனத்தோடு சிந்திக்க வேண்டாமா?

வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்-களிலும் அரக்கர்கள், அரசுர்கள், ராட்சதர்கள் என்ற எழுதப்பட்டவர்கள் எல்லாம் திராவிடர்-களே என்று வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்-பனர்கள் உள்பட) எழுதி இருக்கிறார்களே, அதுபற்றி தெரியுமா? ஏன், ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்-தர்-கூட இதே கருத்தைச் சொல்லியிருப்பதை அறிவார்களா?

இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால் திராவிடர் கழகம் ஏன் தீபாவளிப் பண்டிகையை எதிர்க்கிறது என்பதற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொண்டு இருக்க முடியுமே!

இராமாயணத்தில் சம்புகனை இராமன் வெட்டிக் கொன்றதும், நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா கொன்றதும், சூரபத்மனை சுப்ரமணியன் சம்ஹாரம் செய்ததும் எல்லாம் ஆரியர் ஆரியரல்லாதாரை அழித்தொழித்தது தானே!

காந்தியாரைக் கொலை செய்த கோட்சேக்கு விழா எடுப்பவர்களுக்கு இதெல்லாம் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் ஆறாவது அறிவைக் கொண்டு அவர்களும் சிந்திக்க முற்பட்டால் மனிதர்களாகலாமே!

தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தீபாவளி வாழ்த்-துச் சொல்லாததன் அருமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி, பகுத்தறிவாளர்கள் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முன்பு கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தால், ஒருவேளை திராவிட கண்மணிகள் வன்முறையில் இறங்கி அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்ற பயத்தினால் பதில் சொல்லாமல் இருந்தார்கள், இருந்திருக்கக் கூடும்.

சமீபத்தில் (2006 – 2009) பல கோவில்கள், குருக்கள் தாக்கப் பட்டு, விக்கிரங்கள் உடைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப் பட்டு, அறிவாளால் வெட்டப் படவும் நேர்ந்தது. அத்தகைய அப்பாவி தமிழக இந்து மக்களின் மீது அவிழ்த்து விடப் பட்ட வன்முறையைப் பற்றி முதல்வரோ அல்லது எந்த தலைவரோ கண்டு கொள்ளவில்லை. மாறாக முதல்வரான, கருணாநிதியே இந்துக்கள் “திருடர்கள்” என்றெல்லாம் பேசி, பல வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, நிலுவையிலேயே வைக்கப் பட்டுள்ளன.

“செக்யூலரிஸ நாத்திகம்” அல்லது “இந்து-விரோத நாத்திகம்”, அதிலும் பச்சை “இந்து-விரோதம்” கடை பிடிக்கும் திகவினர் மற்றும் கருப்பு பரிவாரை தமிழ் மக்கள் இப்பொழுது நன்றாகவே அடையாளம் கண்டுகொண்டுள்ளார்கள். ஆகையால், இந்து முன்னணியே இல்லாமல் இருந்தால் கூட அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட இந்துக்கள் நிச்சயமாக ஒருநாள் பொங்கியெழத்தான் செய்வார்கள். அத்தகைய நிலைதான் இப்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது.

திட்டமிட்ட முறையில் வீரமணியும், தனது – ஒரு நிகர பல்கலைகழகத்தின் வேந்தர் – என்றப் பொறுப்பான நிலையையும் மறந்து, அத்தகைய கீழ்த்தரமான கேள்விகளைக் கேட்டு, போஸ்டர்கள் ஒட்டினால், நிச்சயமாக இந்துக்கள் கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள்.

எப்படி கருணாநிதி தான் எல்லொருக்கும் “முதல்வர்” என்பதனை மறந்து “இந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தான் முதல்வர்” என்பது மாதிரி, முற்றிலும் அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறாரோ, அது மாதிரியே காவல்துறையும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது, மறைமுகமாக ஆளும்-அதிகாரத்தை வற்புறுத்ததுவதும் ஜனநாயகம் ஆகாது.

விவேகாநந்தர் பெயர் சொல்லி திரித்துகூறியதை ஏற்கெனவே, எடுத்துக் காட்டப் பட்டது. அவர் மற்றும் அம்பேத்கர் போன்றவர்களே “ஆரிய-திராவிட” இனவாதங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் எடுத்துக் கட்டப் பட்டது. இருப்பினும் அத்தகைய கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக விஷயம் தெரிந்தவர்கள் மதிக்க மாட்டார்கள். நீதிமன்றங்கள் அத்தகைய பொய்களை, கட்டுக் கதைகளை ஏற்று இந்துக்களுக்கு எதிராக செயல் பட்டால், நிச்சயமாக உலகமே கேள்வி கேட்கும். ஒருவேளை நீதிபதிகள் எல்லொருமே அரசியல் ரீதியாக நியமிக்கப் படுவதால், அவர்களும் ஆளும் கட்சிகளுக்கேற்ப தீர்ப்பு கொடுப்பார்கள் என்ற ஆணவத்தில் இருந்தால், ஏனெனில், இந்த தலையங்கம் அந்த தோரணையில் உள்ளது, அது நீதியையும் தமது தகாத “நாத்திக-ஊழலுக்கு” உட்படுத்துவது போல உள்ளது.

“இராமாயணத்தில் சம்புகனை இராமன் வெட்டிக் கொன்றான்” என்ற புளுகை இன்னும் பரப்பிக் கொண்டிருந்தால் யார் நம்புவார்கள். எங்கே, இராமாயணத்தில் எத்தனையாவது அதிகாரத்தில், சுலோகத்தில் உள்ளது என்று எடுத்துக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். இதுவரையிலும் யாரும் எடுத்துக் காணக் காணோம்! இதுதான் அவர்களது நிலை!

எல்லாவற்றிற்கும் மேலாக, “தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லாததன் அருமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி”யதற்கு நன்றி சொல்லவேண்டும்! ஏனெனில், அவர்களே அத்தகைய இந்து-விரோத உண்மையினை / போக்கை சொல்லியிருப்பது நல்லது. ஏற்கெனவே அவர்மீது தொடுக்கப் பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளில் கூட, வாதி இந்த முக்கியமான உண்மையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேதப்ரகாஷ்

20-10-2009

 

 

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

9 பதில்கள் to “தீபாவளி விவாதம் தொடர்கிறது: திராவிட “இந்து-விரோதம்” தொடர்கிறது!”

 1. vedaprakash Says:

  இன்று விடுதலையில் (24-10-2009), இவ்வாறான “வாசகர் கடிதம்” வெளியிடப் பட்டுள்ளது. எழுப்பிய பிரச்சினைக்கு பதில் கொடுத்தும், அவர்களது பொய்யான திரிபுவாதங்களை வெளிப்படுத்தியப் பின்னரும், பொய்மையைத் துணையாக தொடரும் நிலைத்தான் தெரிகிறது:

  வெள்ளை மாளிகையில் தீபாவளியா?

  இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் கொண்டாடி உள்ளார். நாமம் போட்ட கோவில் அர்ச்சகர் அருகில் நின்று வேத மந்திரங்களை ஓதி இருக்கிறார்.

  அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றிலேயே ஜனாதிபதியாக ஜூனியர் புஷ் இருந்த போதுதான் தீபாவளி கொண்டாடப்பட்டது. புஷ்சுக்கோ, ஒபாமாவுக்கோ தீபாவளி கொண்டாடுப்படுவதன் நோக்கம், அதன் அடிப்படை, அதன் கதை பற்றி எதுவும் தெரிந்திருக்காது. தெரியப்-படுத்தாமல் மறைக்கப்பட்டிருக்கலாம்.

  அமெரிக்க ஜனாதிபதிகளே தீபா-வளி கொண்டாடுகின்றனர். நாம் இன்-னும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று இங்கிருப்பவர்கள் நினைக்க மாட்டார்களா?

  அமெரிக்க ஜனாதிபதிகள், இந்திய நாட்டை இந்திய மக்களை, இந்தியப் பண்பாட்டை நினைத்து மதித்து தீபாவளி கொண்டாடி இருக்கலாம். இந்திய மக்கள் என்றால் அது பார்ப்-பனர்களையும், இந்தியப் பண்பாடு என்பது பார்ப்பனப் பண்பாட்டையும் குறிப்பதுதானே?

  கிறித்துவர்கள் தீபாவளி கொண்-டாட வேதங்கள் ஓதி விடுவார்கள். குத்து விளக்கு ஏற்றவிடுவார்கள். ஆனால் இந்தியக் கோவில்களில் கிறித்-து-வர்கள் உள்ளே சென்று வழிபட அனுமதிக்க மாட்டார்கள். கோவில் தீட்டாகிவிடும். ஆகம விதிகள் இடம் கொடுக்காது. கிறித்துவ பாடகர் ஜேசுதாஸ் குருவாயூர் கோவிலுக்கு செல்லவும், சோனியா காந்தி திருச்சி திருவரங்கம் கோவிலுக்குள் செல்லவும் தடை போட்டதும் இந்த இந்துமத அர்ச்-சகர்கள் தானே?

  புஷ்சுக்கும், ஒபாமாவுக்கும் தெரிந்த பண்பாடு இந்த மத அர்ச்சகருக்கு தெரியாமல் போனது ஏன்? பேச நா இரண்டுடையாய் போற்றி என்று அறிஞர் அண்ணா கூறியது சரிதானே? ஆகம விதிகள் என்பது அவன-வன் வசதிப்படி தானே?

  இல்லாத கடவுளுக்கு கற்பனைப் பண்டிகையை ஏற்படுத்தி, அமெ-ரிக்க ஜனாதிபதிகளையே தீபாவளி கொண்டாடச் செய்து விட்டனர். பூணூல் பார்ப்பனர்கள். வெள்ளை மாளிகையிலேயே பார்ப்பனியக் கொடுக்கு நுழைந்து விட்டது. இது சாதாரண விசயமல்ல. எந்தளவுக்கு வலு ஊன்றி உள்ளது என்று சிந்திக்கவேண்டிய விசயம்.

  தந்தை பெரியாரின் மனித நேயக் கருத்துகள் உலகம் முழுவதும் பரவி வரும் இந்நேரத்தில், நம் கொள்கைப் பிரச்சாரங்களில் இன்னும் வேகம் காட்டுவோமாக, தந்தை பெரியாரின் கருத்துகளும் வெள்ளை மாளிகையில் புகுந்து அங்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை அமெரிக்க அதிபர்-கள் கொண்டாடும் நிலையும் சீக்கிரம் வரத்தான் போகிறது.

  – -_ -உடுமலை அரசு

 2. devapriyaji Says:

  Veeramani has followed Varnashrama Dharma brought his Son to party with important post.

  But why UGC permits a man to be a Chancellor of a University and write these fradulant articles against a particular God fearing people

 3. devapriyaji Says:

  Periyarites see Veeramani doing an MK

  K Veeramani
  G Babu JayakumarFirst Published : 17 Oct 2009 03:38:00 AM IST
  CHENNAI: The recent appointment of Dravidar Kazhagam (DK) president K Veeramani’s son, Anburaj, as the headquarters secretary of the organisation has caused anger and resentment among the acolytes of Periyar E V Ramasamy, who feel that the social movement was getting the hues of a political party through dynastic succession.
  “How many agitations has Anburaj participated in over the years and how many meetings has he addressed to take the ideals of Periyar to the common people?” asks writer Tamilarivi Manian and calls him a “novice”.
  Pointing out that there was a parallel between Veeramani and DMK chief Karunanidhi, he says while DMK founder C N Annadurai never promoted his adopted children in politics, his successor Karunanidhi did it by giving party posts and also MP seats to two of his two children – M K Alagiri and Kanimozhi. Veeramani is doing what Periyar never did, he says.
  The DK is not a mutt and Veeramani cannot act like a Shankaracharya, enjoying the right to annoint his successor. In a social movement, unilateral selection of successors is unacceptable, particularly when the very act goes against what Periyar stood for, he points out.
  Viduthalai Rajendran, a long-time member the DK who broke away in 1996 to form the Periyar Dravidar Kazhagam, says Periyar, despite involving his family members in protests and agitations, never anointed any of them as his successor. Even Maniammai, whom Periyar married much later, came into the movement as an ordinary worker and Veeramani was neither related to Periyar nor Maniammai.
  That Veeramani, after inheriting the leadership of the DK from Maniammai, is making a bid to hand over the entire organisation that owns properties and educational institutions all over the State, to his son, who is a failed businessman, has also caused a murmur within the DK, though the activists are reluctant to speak out about it.Veeramani surprised them at the party meet in Thanjavur on October 10 by making the announcement about his son’s appointment unilaterally.
  However, Veeramani has been surprising many old-timers of the DK for more than a decade by giving priority to running the self-financed institutions of a trust he operates in the name of Periyar rather than promoting the rationalistic ideology.
  His penchant to blindly support whoever is in power in Tamil Nadu – be it Jayalalithaa or Karunanidhi – and his placing legal hurdles in the initiative to bring out a collection of writings and speeches of Periyar have already earned the ire of many traditional DK supporters.
  Since he is hell bent on stopping the publication of Periyar’s works, old time followers of Periyar accuse Veeramani of having a dog in a manger attitude.
  But his latest move to suddenly bring in his son, who had so far been living an independent life least concerned about the activities or programmes of the Dravidar Kazhagam, has earned their wrath as they see in it a clear attempt to hand him over the properties and funds of the party.
  But as Tamilarivi Manian puts it: “Dynasty in political parties is curable but in a social movement it is incurable.”
  http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Periyarites+see+Veeramani+doing+an+MK&artid=cS8pNaPoaCs=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

  Friends please visit my site on Truths on Christianity

  http://devapriyaji.wordpress.com/

 4. vedaprakash Says:

  நான் விட்டாலும், ‘விடுதலை” விடுவதாக இல்லை, இதோ, இன்றைய வாதம்:

  ஒற்றைப்பத்தி [vituthalai 29-10-2009]

  ஜாடையா?

  வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஒபாமா தீபாவளி கொண்டாடியிருக்கிறார். உண்மையான ஜனநாயகம் அமெரிக்காவில்தான் நடக்கிறது. கிறித்துவ மதத்-தைச் சார்ந்தவராக இருந்-தாலும் மத வித்தியாசம் பார்க்க-வில்லை அமெரிக்க அதிபர்.

  இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக அரசியல்-வாதிகள் கொண்டாடும்-போது இங்குள்ள தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துச் செய்திகூட வெளியிடாமல், இருப்பது ஏன்? என்று தினமலர் சிண்டைப் பிய்த்துக் கொள்கிறது.

  இப்படி வாயிலும், வயிற்-லும் அடித்துக்கொள்ளும் தினமலர் கூட்டத்தை நோக்கி திருப்பி அடிக்கி-றோம். அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்!

  கிறித்துவரான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பெருந்தன்மை இருக்கிறது. அதே பெருந்தன்மை தின-மலர் கூட்டத்துக்கு உண்டா?

  ஜனவரி முதல் தேதி ஆங்-கில வருடப் பிறப்பன்று கோயில்களுக்குச் சென்று இந்துக்கள் வழிபட்டு வரு-கிறார்கள். அதுகுறித்து காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

  கிறித்துவ ஆண்டு பிறப்-புக்காக இரவு நேரத்தில் கோயிலைத் திறந்து வைப்-பதா? இது ஆகமத்துக்கு விரோதம், விரோதம் என்று கூக்குரல் போட்டாரே _ நினைவிருக்கிறதா?

  இன்னொரு முக்கியமான தகவல் உண்டு. தலாய்லாமா இந்தியா வந்தார். அவர் அனைத்து மதக் கோயில்-களுக்கும் செல்ல விரும்பி-னார். கேரளாவில் புகழ்-பெற்ற செயின்ட் ஜோசப் சர்ச்சில் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்கத் தயார் என்று கூறினார்கள். பாளயம் மசூதி இமாம் தலாய் லாமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராக இருப்-பதாகவும், காலை சிற்றுண்டி அளித்து உபசரிக்க விரும்-புகிறோம் என்றும் அறி-வித்தார்.

  அர்த்தமுள்ள இந்து மதத் தலைவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

  தலாய்லாமா ஹிந்து மதத்தை ஏற்காதவர். அவரது பாரம்பரிய மத ரீதியான ஆடைகளைக் களைந்து-விட்டு, காலணிகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் நுழைய தலாய்லாமாவை அனுமதிக்க-மாட்டோம் என்று சொன்-னார்-களே! (ஆதாரம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 18.12.1992).

  ஒபாமா தீபாவளி கொண்-டாட தயாராகிறார். இந்-துக்களோ தலாய்லாமாவை கோயிலில் உள்ளே நுழை-யக்கூட தடை போடுகிறார்-கள்.

  இரண்டு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு இதில் தெரியவில்லையா?

  ஒபாமாவின் ஜனநாயகத்-தைப் பாராட்டும் தகுதி தினமலர் வகையறாக்-களுக்கு உண்டா?

  முதலமைச்சர் கலைஞர் தீபாவளி வாழ்த்துச் சொல்ல-வில்லையாம் _ அதற்குத்-தான் தினமலர் ஜாடை பேசுகிறது!

  தீபாவளி கொண்டாடாத தீரர்களின் பட்டியலைச் சேர்ந்தவராயிற்றே கலைஞர் _ எப்படி தீபாவளி வாழ்த்து கூறுவார்?

  – மயிலாடன்

 5. devapriyaji Says:

  Why then Kalaignar TV takes advertisements and show special programmes.

  Stalin son produces and released movie for Diwali

 6. devapriyaji Says:

  வீரமணி மகனுக்கு புதிய பதவி:தி.க.விலும் வாரிசு அரசியல்?
  Created On 14-Oct-09 10:59:25 PM
  அரசியல் கட்சிகளில் தலைவர்கள் முதல் வட்டச்செயலாளர் வரையில் வாரிசுகளின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. பெரியார் தோற்றுவித்த சமூக இயக்கமான திராவிடர் கழகத்திலும் வாரிசு அரசியல் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

  திக தலைவராக தற்போது இருக்கும் கி.வீரமணியின் மகன் அன்புராஜுக்கு, தி.க. தலைமைநிலையச் செயலாளர் என்ற புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

  தி.க.வின் அமைப்பு செயல்பாடுகளில் அல்லாமல், அதன் துணை அமிப்புகளான திராவிடன் நலநிதி நிறுவனம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை, பெரியார் படத்தைத் தயாரித்த லிபர்ட்டி நிறுவனம் ஆகியவற்றில் முக்கிய நிர்வாகியாக அன்பு இருந்துள்ளார்.

  இதைத் தவிர, வீரமணியின் பெரும்பாலான சுற்றுப்பயணங்களிலும் அன்புராஜுக்கு முக்கியப் பங்கு உண்டு.

  இந்த நிலையில், தி.க.வின் தலைமைநிலையச் செயலாளராக அன்புராஜை வீரமணி அண்மையில் நியமித்துள்ளார். தி.க.வில் நடைபெறும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள், மாற்றங்களுக்கும் ஊடகங்களுக்கு தகவல் அனுப்பும் பெரியார் திடலில் இருந்து, இது குறித்து உரிய தகவல் வெளியிடப்படவில்லை.

  இந்த நியமனம் வாரிசு அரசியல்தான் என்று பெரியார் தி.க. பொதுச்செயலளர் கோவை ராமகிருஷ்ணன் போன்றோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

  http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10616

 7. devapriyaji Says:

  மகனை வாரிசாக்குகிறார் வீரமணி
  POSTED BY எல்லாளன் SEPTEMBER 9, 2009

  பெரியார் கொள்கைக்கும், ஈழத் தமிழருக்கும் துரோகம் விலகி வந்த தி.க. தோழர்கள் சரமாரி குற்றச்சாட்டு

  கோவையில் வீரமணியின் திராவிடர் கழகத்திலிருந்து, தி.க. மாவட்ட துணைத் தலைவர் சொக்கம்புதூர் ந. தண்டபாணி தலைமையில் தி.க. தோழர்கள் விலகி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் முன்னிலையில் பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தி.க. தலைமை பெரியார் கொள்கையை பரப்பாமல், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறது என்றும், ஏனைய அரசியல் கட்சிகளைப் போலவே மகனை வாரிசாக்க முயலுகிறது என்றும் – விலகி வந்த தோழர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
  ஈழத் தமிழர் இனப் படுகொலை உச்சக் கட்டத்தில் நடந்த நேரத்தில், காங்கிரஸ் – தி.மு.க. வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தவர்தான் தமிழர் தலைவரா என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது என்றும் அவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். பெரியார் கொள்கைக்காக களத்தில் நிற்கும் ஒரே அமைப்பு பெரியார் திராவிடர் கழகம் தான் என்று கூறி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

  கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை இந்த உணர்ச்சிபூர்வமான இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. படிப்பகம் முழுதும் கூட்டம் நிரம்பி படிப்பகத்துக்கு வெளியிலும் ஏராளமானோர் திரண்டு, இந்த இணைப்பைப் பாராட்டி வரவேற்றனர். அதே நிகழ்ச்சியில் சூலூரைச் சார்ந்த சுபாஷ் என்ற தோழரும், துடியலூரைச் சார்ந்த சக்தி என்ற தோழரும் பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

  விலகிய தோழர்கள்:

  சொக்கம்புதூர் ந. தண்டபாணி (கோவை மாவட்ட தி.க. துணை தலைவர்), வழையூர் மு. செல்வம் (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர்), கணபதி சா. கிருட்டிணமூர்த்தி (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி அமைப்பாளர்), அரிபுரம் மதன் (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி இணைச் செயலாளர்), அரிபுரம் பிரேம்குமார் (அரிபுரம் தி.க. கிளைச் செயலாளர்), பழையூர் தி.க. தோழர்கள்: ராஜேஷ், கதிர், மூர்த்தி, சபரி, சாகர். கணபதி தி.க. தோழர்கள்: ராஜேஷ், கணேசன், லட்சுமிகாந்தன், சொக்கம்புதூர் தி.க. தோழர்கள் ந. நித்தியானந்தம், ஆகாஷ் (எ) கைலாஷ், அரிகரன், அருண் குமார், குணா. அரிபுரம் தி.க. தோழர்கள்: பார்த்தீபன், தமிழ்ச்செல்வன், ராஜன் செல்வம், பொன்ராஜ், ஆட்டோ சுரேஷ், பாப்பா நாயக்கன் பாளையம் தி.க. தோழர்கள்: சுந்தர்ராசு, சுகுமார், அறிவழகன், ராஜா, சரவணன், ஆனந்த், ராமசந்திரன், தியாகராஜன், செந்தில், ராசுகமல், அருண்குமார், ரஞ்சித், அண்ணாதுரை, உதயா, அசோக்குமார் ஆகியோர் விலகிய தோழர்கள் ஆவர்.

  திராவிடர் கழகத்திலிருந்து விலகுவது ஏன்? என்பதை விளக்கி, கோவை தி.க. தோழர்கள் சார்பில் சொக்கம்புதூர் ந. தண்டபாணி விடுத்துள்ள அறிக்கை!

  1. தந்தை பெரியாரின் கொள்கைகளை மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப பரப்பவும், வெகு மக்களிடம் கொண்டு செல்லவும் முனையாமல், திராவிடர் கழகத் தலைமை முற்றும் முழுதாய் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகத் தலைமையாக மாறிவிட்டதோடு, அந்நிறுவனங்களின் முழுநேர (லிமிடெட் கம்பெனி) நிர்வாகியாகவும், அதன் வழியாக வரும் வருமானத்திற்கு பங்கம் வராமல் காக்கவுமே செயல்படுகிறது. கி.வீரமணி கல்லூரியாய் இருந்ததை பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்காகத்தான் கவனம் செலுத்துகிறார். அதற்காகவே ஜெயலலிதாவையும், கலைஞரையும் மாறி மாறி ஆதரித்து, ஆளும் கட்சிகளின் நடைபாவாடையாக திராவிடர் கழகத்தை மாற்றிவிட்டார்.

  2. தந்தை பெரியாரே, தனக்கு வாரிசு, ‘தனது எழுத்தும் பேச்சுமான’ கொள்கையே என தெளிவுபடுத்தியதை மறைத்து, பெரியாரின் குடிஅரசு இதழின் எழுத்துக்களை இதுவரை கி.வீரமணி தொகுத்து வெளியிடவில்லை. “பெரியார் திராவிடர் கழகம் வெளியிட முன் வந்தபோது அதற்கு எதிராய் பெரியாரின் எழுத்துக்கு தானே, வாரிசு என்று நீதிமன்றம் சென்று தடை பெற்றது. கி.வீரமணி பெரியாருக்கு செய்யும் துரோகத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

  3. பெரியாரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் தானே வாரிசு எனச் சொல்லும் வீரமணி, இயக்கத்திற்கு உண்மையாய் உழைத்த பலரையும் வெளியேற்றி விட்டு, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை இயக்கத்திற்குள் வராத தனது மகன் வீ. அன்புராஜை, இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார். பெரியார் நாட்டிற்களித்த சொத்தை தனது வீட்டுச் சொத்தாக மாற்றவும் ஆன பணிகள் வேகமாய் நடைபெற்று வருகின்றன.

  4. பெரியாரின் கொள்கை பரப்புதலை விட்டு விலகி நீண்டகாலமாய் பெரியாரின் சொத்தை பாதுகாக்கிறேன் என்ற பெயரால், மற்ற அரசியல் கட்சிகளை போலவே திராவிடர் கழகத் தலைமை செயல்பட்டு வருகிறது. ‘சமூக நீதி’க்காகவும், மனித சமத்துவத்திற்காகவும் மானிட விடுதலைக்காகவும் பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத் தலைமையிலும், அதன் அறக்கட்டளை நிர்வாகத் தலைமையிலும், தனது மகனை வாரிசாக்க முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார் கி.வீரமணி.

  5. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர் தலைவர் என தமக்கு சூட்டிக் கொண்ட பட்டத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், ஈழத்தில் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட முழு முதற் காரணமாய் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வர கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்தில், ஈழத்தில் கொடூரமான இனக் கொலை நடந்து கொண்டிருந்தபோது தமிழர் தலைவர் என சொல்லிக் கொள்ளும் கி.வீரமணி, ‘கலைஞர் டி.வி.’யில் காங்கிரஸ் தி.மு.க. தேர்தல் வெற்றியை கொண்டாடிக் கொண்டு உற்சாகத்தில் மிதந்தபடி இருந்தார்.

  6. இந்தியாவின் முழு பின்னணியோடு ஈழத்தில் சிங்கள இனவெறியரசு, போர் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் தன்னை தாண்டி சென்றுவிடக் கூடாதென மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்டம் தொடங்கி, “கலைஞர் திட்டமிட்டு நடத்திய தமிழர் வரலாற்றில் அழியாத துரோக நாடகத்திற்கு முற்றும் முழுதாய் துணை நின்றதோடு, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான சக்திகளின் போராட்டம் வெகுமக்கள் போராட்டமாக மாறாமல், “கலைஞர் ஈழ மக்களை காப்பார் காப்பார்” என நம்ப வைத்து நாடகமாடி 50 ஆயிரத்துக்கும் மேலான தமிழர் படுகொலைக்கு துணை போன துரோகத் தளபதிதான் இந்த தமிழர் தலைவர்.

  எனவேதான் தி.க. தலைமை தமிழின துரோக தலைமை மனிதநேய துரோக தலைமை என தெரிந்து தெளிந்து அதனிலிருந்து விலகி, பெரியாரின் கொள்கைகளை காக்கவும், பரப்பவும், தமிழினத்தை காக்கவும் உண்மையாய் பாடுபடும், போராடும் தலைமையை ஏற்று பெரியார் திராவிடர் கழகத்தில் இணைகிறோம் – என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
  அம்பலம், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழகம் |

  http://suthumaathukal.blogspot.com/2009/09/blog-post_6014.html

 8. devapriyaji Says:

  Dynastic politics takes hold of DK

  October 16th, 2009
  By Our Correspondent

  Chennai
  Oct. 15: Dravidian political parties in the state like DMK, AIADMK and even the fledgling DMDK, founded by actor Vijayakanth, have often been accused of following dynastic politics.
  Joining the bandwagon now is Dravidar Kazhagam, the social movement founded by Periyar from which the DMK originated, which is the most recent in the state to follow the dynastic path.
  Joining the incumbent Dravidar Kazhagam president Mee.Ki.K. Veeramani is his son V.Anburaj who was recently made DK headquarters secretary.
  Seldom known to attend a DK function, with the exception of the one at which his father was recently felicitated, Anburaj was elevated overnight, much to the disgruntlement of many a DK cadre.
  E. V. Ramasamy alias Thanthai Periyar, a radical thinker, had proclaimed that his books and progressive thoughts were his only heirs.
  Notwithstanding the fact that many from Periyar’s family, including E.V.K. Sampath and his son E.V.K.S. Elangovan who is a former TNCC president, took to politics, the founder of the self-respect movement, who was born to a rich trader in Erode, never declared any of his relatives as heirs to lead DK.
  However, in the DK general body meeting held on October 10, Veeramani elevated his son stating that he was aware of the criticism certain to follow the appointment.
  Disgruntled DK cadres pointed out that Anburaj does not even know many DK leaders.
  Reacting to the criticism, Periyar DK president Kolathur Mani said, “When Maniyammai took over as the trust secretary, the first thing she did was to expel her brother Thiyagarajan, who was a trust member. Also, he was sent away from DK headquarters Periyar Thidal, where he had stayed for years.”
  Senior political commentator Tamilaruvi Maniyan said, “Veeramani has literally converted a radical social movement into a private limited company. How many times did Anburaj speak about Periyar or his ideologies?” he asked, adding that the elevation of his son has exposed the fact that Veeramani was more concerned about protecting the trust property than spreading the party’s ideology.
  Mr Maniyan said that the incumbent DK leadership’s financial interests were exposed when they publicly claimed propriety for Periyar’s works and prevented others from publishing the radical leader’s speeches.

  http://www.deccanchronicle.com/chennai/dynastic-politics-takes-hold-dk-209

 9. பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி – தீபாவளி தமிழர்க்கு உரியதா? குழம்பியுள்ள குழப்பும், பகுத்தறி Says:

  […] [10] https://tamilheritage.wordpress.com/2009/10/20/deepavali-debate-continues-dravidian-ideology/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: