உலக சைவ மாநாடு – சிதம்பரத்தில் பிப்., 5, 6, 7 தேதிகள் 2010.

சிவன் இந்துக் கடவுள் இல்லை, சிந்துசமவெளி முத்திரையில் காணப்படும்
கடவுளுக்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்றெல்லாம்
சென்னை சமஷ்கிருத கல்லூரியில் கடந்த ஜூலை மாதத்தில் ஐராவதம் மஹாதேவன்
தல்மையில் நடத்தப் பட்ட ஒரு கருத்தரங்கத்தில் மைக்கேல் விட்ஸெல் என்ற
ஹார்வர்ட் பல்கலைக்கழக சமஸ்கிருத பேராசியர் பேசினார். பொள்ளாச்சி
மஹாலிங்கம், சங்கரநாராயணன் முதலிய பெரிய வல்லுனர்கள், பேராசியர்கள்
அமைதியாக இருந்தனர்! சமஸ்கிருத கல்லூரி முதல்வர் தான் ஓரளவிற்கு தமது
கருத்தை வெளியிட்டார்.
இப்பொழுது, இந்த மாநாடு நடப்பதால், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் கலந்து
கொண்டு, ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து மேனாட்டவர் இன்றும் தொடர்ந்து
பரப்பி வரும் பொய்மைகளை களைய முன்வர வேண்டும்.

இங்குகூட சாமிகள் பேசுவதிலிருந்து, மாநாடு அரசியல் ஆக்கப்படுமோ என்ற
அச்சம் தோன்றுகிறது. ஏற்கெனவே இதிலுள்ள சில மடாதிபதிகள் சமஸ்கிருத-தமிழ்
அர்ச்சனை விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத்
தொடுத்துள்ளர்:

உலக சைவ மாநாடு ஆலோசனை கூட்டம்
அக்டோபர் 19,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18023

General India news in detail

//
//

பேரூர்: “புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும்,’ என, பேரூர் சாந்தலிங்கர் மடத்தில் நடந்த உலக சைவ மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவானது. அடுத்த ஆண்டு பிப்., 5, 6, 7 தேதிகளில், சிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு நடத்தப்படும் என, உலக சைவ பேரவை அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டம், கோவை பேரூர் சாந்தலிங்கர் மடத்தில் நடந்தது. உலக சைவ பேரவைத் தலைவர் பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் உள்ள, இந்து சமய அமைப்புகள் அனைத்தையும் 12வது உலக சைவ மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். தமிழ்வழிபாடு, தமிழ் நெறிக் கொள்கைகளை ஆதரிக்கும் அனைவரையும் பங்கேற்கச் செய்து, வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் இந்து அமைப்புகளை ஒன்று திரட்ட வேண்டும்.

சைவ சித்தாந்தம், தமிழ் திருமுறைகளை இளைஞர்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவாக என்ன செய்வது என்பது குறித்தும், சைவத்தமிழை பின்பற்ற என்ன செய்யலாம் என்பது குறித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு, சாந்தலிங்க ராமசாமி அடிகள் பேசினார். தொடர்ந்து, ஒவ்வொரு தமிழ் அறிஞர்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சி நடந்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: