தமிழ் அமைப்புகள்: இவற்றால் மொழிக்கு கிடைக்கும் பயன்?

தமிழ் அமைப்புகள் எண்ணிக்கை இந்தியாவில் எவ்வளவு? கண்டுபிடிக்க அரசு தீவிரம்
அக்டோபர் 17,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=17948

General India news in detailராமநாதபுரம்: இந்தியா முழுவதும் உள்ள தமிழக அமைப்புகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ் மொழியின் பெயரில் அமைப்புகள் , சங்கம், நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன.

இந்த அமைப்புகள் தமிழுக்கு செய்யும் தொண்டு என்ன? இவற்றால் மொழிக்கு கிடைக்கும் பயன்? போன்றவற்றை ஆராய முடிவு செய்யப் பட்டுள்ளது. இது போன்ற அமைப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவியும் திட்டமும் தமிழகத்தில் தயாராக உள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலும், இந்தியாவின் பிற மாநிங்களிலும் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகளின் முழுவிபரங்களையும் சேகரிக்க தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மாவட்டம் தோறும் அரசு பதிவு பெற்ற தமிழ் அமைப்புகள், தமிழ் சங்கங்கள், நிறுவனங்களின் தொலைபேசி, மெயில் முகவரி ஆகியவை சேகரிக்கப் பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் மூலமாக இப்பணி நடந்து வருகிறது. மேலும் இது குறித்த தகவலை தமிழ் சார்ந்த அமைப்பினர் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

———————————————————————————————————————————————————————————-

நிச்சயமாக, யாதோ பெரிய கண்டுபிடிப்பில்தான் இறங்கியுள்ளனர்!

அதெப்படி 2009ல் தான் அத்தகைய கண்டுபிடிப்பு நேர்ந்திருக்க வேண்டும் என்பது வியப்பாக உள்ளது. ஒருவேளை “தமிழ்சங்கம்” என்றெல்லாம் வைத்துக் கொண்டால், அரசாங்கம் மானியம் முதலியவை கொடுக்கிறார்களோ என்னவோ?

இந்த அமைப்புகள் தமிழுக்கு செய்யும் தொண்டு என்ன?

இவற்றால் மொழிக்கு கிடைக்கும் பயன்?

இவைப் பற்றியல்லாம் என்ன ஆராய்ச்சி வேண்டி கிடக்கிறது?

திரைப்படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால் அரசு மானியம், வரிவிலக்கு, திரைப்படம் எடுக்கவும் பணம் என்றெல்லாம் இருக்கும்போது, ஏன் தமிழின் மீது மோகம் ஏற்படாது?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: