தீபாவலியும், தீபாவளியும்: திராவிட நாத்திகர்களுக்கு ஒரு மறுப்புரை

“தீபாவலி” என்று ஏளனம் பேசுகின்றனர் தமிழர்கள்.

பிறகு எதற்கு கொண்டாட்டம் எல்லாம்?

“தீபாவலியையே” ஒட்டு மொத்தமாக தடை செய்து விடலாமே?

கடகளை எல்லாம் மூடிவிடலாமே?

தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஏறகட்டிவிடலாமே?

இதோ தொடர்கிறது – பெரியார் மணியம்மை பலகலைக்கழகத்தின் வேந்தரான தமிழ்
இனமானத் தலை வர் வீரமணி ஆசிரியராக இருந்து வெளிவரும் விடுதலையில
தீபாவளியின் விளக்கம்:

தீபாவளி என்றால் என்ன?
விடுதலை 16-10-2009, ப.2
http://www.viduthalai.com/
புராணம் கூறுவது

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு-போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்   கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்-பன்றி-யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி கர்ப்ப-முற்று நரகாசுரன் என்ற பிள்ளை-யையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றான்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்-தாரான
திராவிட மக்கள் கொண்டாட-வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகை-யின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல்,  வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?
இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று-தானே கருத வேண்டியிருக்கிறது.
பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?
சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடி-யுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்-திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல்
ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும், மிருக உரு-வுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை
உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும்- தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரை-யில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிர-கித்ஜோஷா என்று
சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது.
இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்-கிறார்கள்.
வங்காளத்தில் தேவர்களும், அசுரர்-களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்-பதற்காகவும், சொல்கிறான் என்-பதற்-காகவும் நடுஜாமத்தில் எழுந்து-கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்-களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு-மிராண்-டிகளாக
இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன-நிலை அடைந்தது ஏன்? என்பதை தமி-ழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க-வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

இதற்கான எனது மறுப்புரை:

மரபியல் விஞ்ஞானி (geneticist) ஜே. பி. எஸ். ஹால்டேன் (J. B. S. Haldane, 1892-1964) என்பவருக்கு விஷ்ணுவினுடைய அவதாரங்கள் பரிணாமவியல் சித்தாந்தத்தை (Theory of Evolution) படிப்படியாக எடுத்துக் காட்டுவதாக கூறினார்.

பன்றி அவதாரமானது நரசிம்ஹ-வாமன அவதாரங்களுக்கு முன்பு வருகின்றது. பாதி-மனிதன் பாதி-மிருகம் மற்றும் குள்ள மனிதன் இஅவர்களுக்கு முன்பாக பன்றி பரிணாம வளர்ச்சியில் இருந்தது.  ஹோமோ-செபயின் (Homo sapien) நிலையிலிருந்து ஹோமோ ஹெரக்டஸ் (Homo erectus) நிலையில் வருகின்றது.

பன்றியின் மகத்துவத்தை அறிந்து, கேலன் (Galen) என்ற விஞ்ஞானி பன்றியை அறுத்து, மனித உடலின் தனமையைப் பற்றி விளக்கினார். “காலனும் அலரும் பன்றியும்” (Galen and squealing pig) என்பது அறுவைசிகிச்சை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். மனித உடலை அறுத்து
சோதிக்கத் தடை இருந்தபோது, மனித உடலுக்குப் பதிலாக, பன்றி உடலை அறுத்து ஆராய்ந்தாலே மனிதனைப் பற்றி – மனித உடலியலைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்ற உண்மையினை காலன் அறிந்திருந்தார்.

ஆனால், அவர்களைப் போல அல்லாது, பெரியாருக்கும். வீரமணிக்கும் இப்படித்தான் சிந்திக்கத் தெரியும்போல.

மற்ற மத இலக்கியங்களைப் போல இந்தியமத நூல்கள் அமானுஷ்யங்களை நீக்குவது
(Demythologization), ஒவ்வாதவற்றை முழுவதுமாக நீக்குதல் (expurgation), திருத்திப் பதிப்பித்தல் (editing) முறைகளுக்குட்படுத்தப் படவில்லை.  பல இடங்களில் பலர் எழுதியுள்ளது மக்களிடையே பிரபலமாக உள்ளன.

பூகோள ஆசிரியர் உலகம் ஆரஞ்சு பழம்போல உள்ளது என்று சொல்லி விளக்கியிருப்பது ஞாபகம் இருக்கலாம். இருப்பினும் உலகம் உருணை என்று வாதிக்கலாம். ஆனால், உலகமானது உருணை இல்லை, ஏனேனில், பூமத்திய ரேகைப் பகுதி விட்டமானது, துருவங்களில் உள்ள விட்டத்தை விட அதிகமானது. ஆகவே பூமி ஒரு நீள்வட்ட-உருண்டை (ellipsoid) வடிவமானது. இது இந்தியர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் [சூரிய சித்தாந்தம், ஆரிய படீயம் முதலியவற்றைப் பார்க்கலாம்].

திராவிட-ஆரிய இனமாயைகள், காட்டுக் கதைகளை சரித்திர ஆசிரியர்கள் ஏற்கெனவே பொய் என்று, இனசித்தாந்தங்களை குப்பையில் எறிந்து விட்டனர். இருப்பினும் இன்றும் அதனைப் பிடித்துக் கொண்டு இன்றளவிலும் தமிழகத்தில் வெறுப்பை வளர்த்து வருகின்றனர்.

ஒவ்வொரு இந்து பண்டிகையின்போதும் திட்டமிட்டு அவற்றைப் பற்றி அவதூறு பேசி, தூஷணம் புரிந்து பேசி எழுதி வருவது இந்த திராவிட தலைவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இதை பற்றி விவரமாக என்னுடய பதிவுகளை படங்களுடன் கீழ் கண்ட தளங்களில் காணலாம்:

www.indiainteracts.com
www.suleka.com
www.wordpress.com

இந்துக்களை அவதூறாக பேசியதற்காக கருணாநிதியின் மீது ஏற்கெனவே பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரால் நியமிக்கப் பட்ட எந்த நீதிபதிக்கும் அவ்வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க திராணி இல்லை. பாவம், நீதிதேவதை திராவிட மதுவை / சரக்கைக் குடித்துவிட்டு கண்களை மறைத்துக் கொண்டு
மயங்கிக் கிடக்கிறாள்.

திராவிடர்களுக்கு உடன்பாடில்லை என்றால் எல்லா கடைகளையும் மூடிவிட்டு, தீபாவளியைக் கொண்டாடாமல் இருக்கலாம்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: