காவல் துறை: சீர்திருத்தம் தேவை

கறுப்பு ஆடுகள்! போலீசில் அதிகரிப்பு: பாயுமா நடவடிக்கை?
அக்டோபர் 16,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=17895

General India news in detail

// <![CDATA[//
// <![CDATA[//

தமிழக போலீசில் அதிகரித்து வரும் குற்றங்கள், பாலியல் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கையை கடுமையாக்கினால் மட்டுமே, காவல் துறையின் கண்ணியம் காப்பாற்றப்படும் என்ற கருத்து, உயர் அதிகாரிகள் மத்தியில் வலுத்துள்ளது.

தமிழக போலீசில் ஏறத்தாழ ஒரு லட்சம் போலீசார் பணியாற்றுகின்றனர். இவர்களில் மிக சொற்ப எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்யும் முறைகேடுகள், ஒழுங்கீன செயல்பாடுகள் ஒட்டுமொத்தமான துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடுகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களிடம் போலீஸ் மீதான நன்மதிப்பும் குறைகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களே இதற்கு சாட்சி. நெல்லையில் போலீஸ் கமிஷனர் ஒருவரே குடிபோதையில் பொதுஇடத்தில் தகராறு செய்து, உயரதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்; மறுநாளே இவர் வேறு பணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.

அடுத்து, கோவையில் நடந்த துணிகர வழிப்பறி சம்பவம். வியாபார விஷயமாக கோவைக்கு வந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 25 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் தனபால் கைது செய்யப்பட்டார்; இவருடன் கூட்டாளிகள் சிலரும் பிடிபட்டனர். இவர்கள் மீதான வழக்கு, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. குற்றங்களை தடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டரே வழிப்பறி வழக்கில் கைதான சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்து, மதுரையில் சிலை திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைதாகி உயரதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இது போன்ற குற்ற முறைகேடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, போலீசார் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன. இரு நாட்களுக்கு முன், திருப்பூர், பல்லடம் போலீஸ் எல்லைக்குள் உள்ள ஒரு வீட்டில் பெண்ணுடன் தனிமையில் இருந்த டி.எஸ்.பி., ஒருவர், அருகில் வசிக்கும் மக்களின் முற்றுகையில் இருந்து தப்பி தலைமறைவானார். அன்றைய தினமே, கோவை நகரிலும் போலீஸ் அத்துமீறல் அரங்கேறியது.
உக்கடம், வின்சென்ட் ரோட்டிலுள்ள வீட்டில் குடிபோதையில் புகுந்து, பெண்களிடம் தகராறு செய்த மூன்று போலீசாரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்; பின்னர் கைது செய்யப்பட்டனர். எஸ்.ஐ., மீது புகார்: கோவை புறநகர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் திருமணமான பெண் எஸ்.ஐ., ஒருவர், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நபருடன் தொடர்பு வைத்து, இரவு ரோந்து பணியின் போது அவரது வீட்டில் தங்குவதை வாடிக்கையாக்கினார். ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், எஸ்.ஐ.,யின் முறைகேடான தொடர்பை அம்பலப்படுத்தும் வகையில், அவரை அவ்வீட்டில் வைத்தே சிறை பிடிக்க திட்டமிட்டனர்.
மேலும், அவரது டூவீலர் மற்றும் ஒயர்லெஸ்சை கைப்பற்றி, உயரதிகாரிகள் வசம் ஒப்படைக்கவும் முடிவு செய்திருந்தனர். அவ்வாறு நடந்தால் பிரச்னை பெரிதாகிவிடும் என, உஷாரடைந்த மாவட்ட போலீஸ் நிர்வாகம், பெண் எஸ்.ஐ., மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஏ.டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுள்ளது. இதே போன்று, கோவை புறநகர் போலீசில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண் போலீசாருடன் வெளியூர் சென்று தங்குவதாக, டி.ஜி.பி.,க்கு, போலீசார் தரப்பில் இருந்தே புகார் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, போலீசில் அதிகரித்து வரும் முறைகேடுகள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. முறைகேடு, ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்ட போலீசாரில் சிலர் மட்டுமே, துறைசார்ந்த நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். மற்றவர்கள், போலீஸ் உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் தஞ்சமடைந்து, நடவடிக்கையில் இருந்து எளிதாக தப்பிவிடுகின்றனர். தவறு செய்யும் போலீசார் மீதான நடவடிக்கை கடுமையாக இருந்தால் மட்டுமே, முறைகேடுகள் முடிவுக்கு வரும்;
போலீஸ் துறையின் கண்ணியம் காப்பாற்றப்பட்டு, மற்றவருக்கும் ஒரு பாடமாக அமையும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசும், டி.ஜி.பி.,அலுவலகமும் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. இது குறித்து, தமிழக போலீசில் பணியாற்றும் கூடுதல் டி.ஜி.பி.,ஒருவர் கூறியதாவது: ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசாரை கொண்ட தமிழக காவல் துறையில் அனைவரும் கட்டுக்கோப்பாக, கண்ணியமாக பணியாற்றிட வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லாதது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி விடுகின்றனர்.
வெளிப்படையான குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களை காட்டிலும், காக்கி சீருடை அணிந்து குற்றம் புரிவோர், மிகவும் கொடிய குற்றவாளிகள் என்பதே கசப்பான உண்மை. இவ்வாறான செயலில் ஈடுபடும் போலீசாரின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க, மாநகர போலீஸ் அளவில் நுண்ணறிவுப் பிரிவு (இன்டலிஜென்ஸ் செக்ஷன்), மாவட்ட போலீஸ் அளவில் தனிப் பிரிவு (ஸ்பெஷல் பிராஞ்ச்) செயல்படுகிறது.

இந்த அமைப்புகள் அளிக்கும் உளவு அறிக்கையின் அடிப்படையில் முறைகேடு போலீசார் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், போலீசாரின் குற்றங்களை பெருமளவு தடுத்துவிட முடியும். உயர்மட்ட பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் மன நிலை, அணுகுமுறைகளை பொறுத்தே, இந்நடவடிக்கை சாத்தியமாகும். இவ்வாறு, ஏ.டி.ஜி.பி.,தெரிவித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: